Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label 03 காமத்துப்பால். Show all posts
Showing posts with label 03 காமத்துப்பால். Show all posts

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்

 

குறள் 1267
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரின்
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
புலப்படுதல் - தெரிதல்; வெளிப்படுதல்.

புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

கொல்(லு)-தல் - kol-   3 v. tr. [K. M. kol.]1. To kill, slay, murder; வதைத்தல் கொன்றன்னவின்னா செயினும் (குறள், 109). 2. To destroy,ruin; அழித்தல் கொன்றான்காண் புரமூன்றும் (திருவாச. 12, 16). 3. To fell, cut down; வெட்டுதல் மரங்கொஃ றச்சர் (சிலப். 5, 29). 4. To reap, asthe heads of grain; கதிரறுத்தல். நெற்கதிரைக்கொன்று களத்திற் குவித்து (தொல். பொ 76, உரை).5. To afflict, tease; துன்பப் படுத்துதல் நின்னலங் காட்டி யெம்மைக் கொன்றாயென (சீவக. 642).6. To neutralize metallic properties by oxidation; இரசமுதலியவற்றின் விஷத்தன்மையைக் கெடுத்தல்  

புலப்பேன்கொல் – ஊடி வெறுப்பேனோ?

புல்லுவேன்  - புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

கொல்லோ- கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

கொல்(லு)-தல் - kol-   3 v. tr. [K. M. kol.]1. To kill, slay, murder; வதைத்தல் கொன்றன்னவின்னா செயினும் (குறள், 109). 2. To destroy,ruin; அழித்தல் கொன்றான்காண் புரமூன்றும் (திருவாச. 12, 16). 3. To fell, cut down; வெட்டுதல் மரங்கொஃ றச்சர் (சிலப். 5, 29). 4. To reap, asthe heads of grain; கதிரறுத்தல். நெற்கதிரைக்கொன்று களத்திற் குவித்து (தொல். பொ 76, உரை).5. To afflict, tease; துன்பப் படுத்துதல் நின்னலங் காட்டி யெம்மைக் கொன்றாயென (சீவக. 642).6. To neutralize metallic properties by oxidation; இரசமுதலியவற்றின் விஷத்தன்மையைக் கெடுத்தல்  

கலப்பேன் - கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்.

கொல் -  இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

கேளிர் - தோழர்; உறவினர்.

வரின் - வரும்/ வந்தால்

முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்து சென்றுள்ளான். பிரிந்து சென்ற கணவன் வந்தால் தன்னிலை என்ன என்று கவலைப்படுகிறாள் தலைவி. அது என்ன பொல்லாத கவலை?

கண்களே முகத்திற்கு ஒளி. கண்களே முகத்திற்கு அழகு சேர்க்கின்றன. தலைவிக்கு தலைவனே வாழ்வின் ஒளி. தலைவியின் அகத்திற்கு அழுகு சேர்ப்பது அவள் தலைவனின் மீது கொண்ட காதல். 

தலைவியின் கண்ணைப்போன்ற தலைவன் திரும்பி வந்தால், ஏன் என்னை பிரிந்து சென்றீர்? ஏன் இத்தனை நாட்கள் ஆகியது என்னிடம் திரும்பி வர? ஏன் என்னைப் பற்றி நினைக்காமல் எனக்கு ஒரு தூதுக்கூடச் சொல்லி அனுப்பாமல் இருந்தீர் என்று தலைவருடன் ஊடல் செய்வதா? அல்லது (பிரிவை தாங்க முடியாத மனதை அடக்கமுடியாத என் நெஞ்சு விரும்பும் படியும் அவர் விரும்பும் படியும்) அவரை தழுவி கூடிப் புணர்வதா? இல்லை இவ்விரண்டும் கலந்த ஊடலையும் கூடலையும் சேர்த்தே செய்வதா? இதுவே தலைவியின் குழப்பமும் கவலையும் ஆகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கண் அன்ன கேளிர் வரின் - கண்போற்சிறந்த கேளிர் வருவராயின், புலப்பேன் கொல் - அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ; புல்லுவேன் கொல் - அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ; கலப்பேன்கொல் - அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்? (புலவியும் புல்லலும் ஒரு பொழுதின்கண் விரவாமையின், 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையுஞ் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேன்கொல்' என்பதற்கு 'ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ'? என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
கண்போற் சிறந்தகேளிர் வருவாராயின், அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக் கடவேனோ: அன்றி என்னாற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ: அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக் கடவேனோ: யாதுசெய்யக் கடவேன்?.

மு.வரதராசனார் உரை
என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?.

சாலமன் பாப்பையா உரை
கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ

 

குறள் 1260
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்] 

பொருள்
நிணம் - கொழுப்பு; ஊன்; ஊனீர்.

தீயில் - தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

இட்டு - தொடங்கி; காரணமாக; ஓர்அசை; சிறுமை

அன்ன -  அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

இட்டன்ன - இட்டார்போல

நெஞ்சினார்க்கு - நெஞ்சில் உள்ளவர்க்கு

உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்
உண்டோ - இருக்கிறதா ?

புணர்ந்து - புணர்தல் - பொருந்துதல்; கலவிசெய்தல்; அளவளாவுதல்; மேற்கொள்ளுதல்; ஏற்புடையதாதல்; விளங்குதல்; எழுத்துமுதலியனசந்தித்தல்; உடலிற்படுதல்; கூடியதாதல்; தலைவனும்தலைவியும்கூடுதலாகியகுறிஞ்சிஉரிப்பொருள்

ஊடி - ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல்

நிற்பேம் - நில்லுதல் - நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.

எனல் - என்று சொல்லல் ; அது போல் இருத்தல்

முழுப்பொருள்
இக்காலத்தில் பசு’வில் பாலில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பே நெய் என கருதப்படுகிறது. ஆனால் பொதுவாக ஊனில் இருந்து கொழுப்பு எடுக்கப்படுகிறது. அக்கொழுப்பை ஊன் நெய் என்பர். தேங்காய், நிலக்கடலை(மள்ளாட்டை), எள் போன்றவற்றின் ஊனில் இருந்தும் கொழுப்பு அதாவது எண்ணெய் எடுக்கப்படுகிறது. சரி, குறளுக்கு செல்லலாம்.

தீயின் பசி எல்லையற்றது. தீ எத்தகைய அழுக்கினையும்(மாசு)  அழித்துவிடும். ஊன் நெய்யை தீயில் இட்டால், நெய்யை உண்டு தீ மேலும் வளரும். அதுப்போல என்னுடைய நெஞ்சிற்கு இனியவரானவர் கூட விரும்பி நான் ஊட விரும்பினால் அங்கு என் ஊடல் நிற்க முடியுமா என்ன? தலைவன் முன் பிணங்கிப் பிரியமுடியுமா என்ன? அங்கு நான் நெய்போல் உருகி ஊடலை விட்டொழிந்து கூடிப் புணர்வேன். நிறையழியும். இன்பம் பெருகும் என்று தலைவி கூறுகிறாள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு - நிணத்தைத் தீயின்கண்ணே யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ - அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ? ஆகாது. (புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று', என்பதாம்.).

மணக்குடவர் உரை
தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ?.

மு.வரதராசனார் உரை
கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?.

சாலமன் பாப்பையா உரை
கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?.

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்

 

குறள் 1259
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்] 

பொருள்
புலப்படுதல் - தெரிதல்; வெளிப்படுதல்.

புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.

புலப்பல் - பிரிந்து சென்றார் திரும்புகையில் பிணங்கி இருப்போம்

எனச் - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

சென்றேன் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

புல்லினேன் -  புல்லுதல் - ழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

நெஞ்சம் - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

கலத்தல்  - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்.

உறுவது - Thatwhich happens; சம்பவிப்பது. , வரற்பாலது; 2. That whichaccrues; gain; இலாபம் உறுவதும் . . . பேதைகளோர்கிலரே (திருநூற். 13). 3. That which resembles; ஒப்பது. இமையவர்களுலக முறுவதுவே(சீவக. 1780). 4. That which is proper; தகுவது.உறுவதாவது . . . குடக்கூத்தனுக் காட்செய்வதே (திவ்.திருவாய். 4, 10, 10). 
உறுவது - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.

கண்டு காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

முழுப்பொருள்
தலைவனின் பிரிவின் பொழுது தலைவி நானோ வருந்திக்கொண்டு இருந்தேன். பிரிந்து சென்ற தலைவன் திரும்பிவந்தான். வந்த உடன் தலைவனுடன் ஊட வேண்டும் என்றே அவரிடம் சென்றேன். ஆனால் அடக்கமில்லா என் நெஞ்சமோ அவருடன் கலக்கவேண்டும் என்று விழைந்தது. ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாமல் அவரை தழுவி புணர்ந்தேன். நிறை அழிந்தது. இன்பம் அடைந்தேன் என்று தலைவி கூறுகிறாள்.

கலித்தொகைப் பாடல் வரிகள் “புலப்பென்யான் என்பேன்மன் அந்நிலையே அவர்க்காணிற் கலப்பென்” (67:8-9) என்று குறள் கருத்தையே கூறுவதிலிருந்து, சங்ககாலப் புலவர்கள் மற்ற புலவர்களது, கருத்துக்களை மேற்கோள்களாக தமது படைப்புகளில் பயன்படுத்தியதையே காட்டுகிறது. இதில் யார் முன்னவர், யார் பின்னவர் என்கிற ஆராய்ச்சி தேவையில்லை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது' என்று புல்லினேன் (வாயாமை - புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.).

மணக்குடவர் உரை
புலப்பலெனச் சென்ற யான் முயங்கினேன்: நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு. இஃது கூடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது

மு.வரதராசனார் உரை
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.

சாலமன் பாப்பையா உரை
அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்

 

குறள் 1257
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்] 

பொருள்
நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

ஒன்றோ -  part. id. + ஒ&sup5;. 1. Not only,but also; connective between nouns and some-times verbs; எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன் (சீவக. 1682).

அறிதல் -  உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அலம் - துன்பம்; தேள் விருச்சிகராசி; அமைவு போதும் திருப்தி கலப்பை நீர்
அறியலம் - அறியவில்லை

காமத்தான் - காமம் -  ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்

பேணியார் -  என்னால் விரும்பப்படுபவர்

பெட்பக் - s. desire, lust, ஆசை; peṭpa   adv. பெள்-. Much, exceedingly; மிக. பெட்ப நகுகின்றது (சீவக. 1662). peṭpa   adv. பெள்-. Much, exceedingly; மிக. பெட்ப நகுகின்றது (சீவக. 1662).

பெட்பு - பெருமை; விருப்பம்; அன்பு; தன்மை; பேணுகை; பாதுகாப்பு.

செயின் - செய்தால்

செய்தல்  - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

முழுப்பொருள்
நாணம் என்றால் வெட்கம். ஒருவித கூச்சம் என்று பொருள். நாணம் என்பது பெண்கள் கொள்ளவேண்டிய (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய) நாற்பண்புகளில் ஒன்று. தான் திருமணம் செய்துக்கொள்ளப்போகிற ஆணிடம் திருமணத்திற்கு  முன்பு தனது நிறையை(கற்பை) காப்பாற்றிக்கொள்ள நாணத்தை பயன்படுத்துவர். 

நான் விரும்பிய என் காதலருடன் கூடி இருக்கும் ஒரு பொழுதில் நான் உள்ளுர விரும்பியதையே என் காதலரும் செய்தார். அப்பொழுது நாணமென ஒன்று உண்டெனவோ அல்லது நிறையென ஒன்றை இழந்தேன் என்பதையே  நான் அறியவில்லை/உணரவில்லை என்று கூறுகிறாள் காதலி/தலைவி. காதலனும் காதலியும் கலவி விழைந்தார்கள். ஆதலால் நாணத்தையும் நிறையினையும் மறந்தார்கள் அவர்கள். 

ஆசை மலர தன்னையும் நாணத்தையும் மறந்து கலவி நிகழ நிறை இழந்து காதல் வென்றது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணியார் காமத்தாற் பெட்பசெயின் - நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என ஒன்றோ அறியலம் - நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம். ('பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். 'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.).

மணக்குடவர் உரை
நாணென்பதொன்று அறியார் மகளிர், காமம் காரணமாக விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின். அவர் விரும்புமாறு செய்வாராயின் நாணமுண்டாகா தென்றவாறு.

மு.வரதராசனார் உரை
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.

சாலமன் பாப்பையா உரை
என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா


குறள் 1250
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]


பொருள்
துன்னுதல் - பொருந்துதல்; மேவுதல்; அணுகுதல்; செறிதல்; செய்தல்; அடைதல்; ஆராய்தல்; தைத்தல்; உழுதல்.

துன்னாத் - நம்மை அன்புடன் அணுகாதவர்

துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.

துறந்தாரை  துறந்தார் - துறந்தவர்கள்

நெஞ்சத்துநெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

உடையேமா - உடைதல் - கொண்டது, உடைதல், இருக்கும், கொள்வோமாயின்

இன்னும் - இவ்வளவுகாலம்சென்றும்; மறுபடியும் மேலும் அன்றியும்

இழத்தும் - இழ-த்தல் - iḻa-   12 v. tr. [M. iḻa.] 1. Tolose, forfeit; தவற விடுதல் (நாலடி. 9.) 2. Tolose by death; சாகக்கொடுத்தல். மக்க ளிழந்த விடும்பையினும் (உத்தரரா. திக்குவி. 138).  

கவின் - அழகு

முழுப்பொருள்
ஏ நெஞ்சமே! நம்மை விரும்பாமல் நம்மை விட்டு பிரிந்து (நம்மை துறந்து) சென்ற தலைவர் நம்மிடம் வந்து இன்னும் சேரவில்லை. நம்மிடம் வந்த அன்பு செலுத்தாமல் கூடாமல் இருக்கிறார். அதனால் நான் வாடிக்கொண்டு இருக்கிறேன். எனது உறுப்புகளும் நலன் இழந்துவிட்டன. அத்தகையவரை நீ இன்னும் நெஞ்சில் வைத்து சொந்தம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறாய். இப்படிச்செய்வதால் துன்பத்தால் மேலும் வாடி உன் அழகை மேலும் இழப்பாய். இவ்வாறு நெஞ்சிடம் கூறுகிறாள் தலைவி.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(அவரை மறந்து ஆற்றல் வேண்டும் என்பதுபடச் சொல்லியது.) துன்னாத துறந்தாரை நெஞ்சத்து உடையேமா - நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்பேம். ('குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்' (குறுந்.கடவுள்வாழ்த்து) என்புழிப்போல் 'நெஞ்சு' என்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது. 'அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும். நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன பொய்க்கவினே அன்றி நின்ற நிறையும் இழப்பேம்' என்பதாம்.).

மணக்குடவர் உரை
மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின் முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்; ஆதலான் மறத்தலே கருமம். ஈண்டு நெஞ்சென்றது மனத்துடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

சாலமன் பாப்பையா உரை
நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ

 

குறள் 1249
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
உள்ளம் மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

உள்ளத்தார்  - மனதில் உள்ளவர்

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

காதலவர் - காதல் கொண்டவராக, மனம் விரும்புவராக

ஆக - ஆகுதல்  - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

உள்ளி - உள்ளு-தல் - uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை )

நீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஈ); முன்னிலைஒருமைப்பெயர்.

யார் - யாவர்

உழை - இடம்; பக்கம்; யாழின்ஒருநரம்பு; மான்; பசு; பூவிதழ்; ஏழனுருபு; உவர்மண்; விடியற்காலம்; கதிரவன்மனைவியருள்ஒருத்தி; வாணாசுரன்மகள்; இடைச்சுரம்.

யாருழைச் -  யார்மாட்டு 

செறித்தல் - சேர்த்தல்; இறுக்குதல்; அடைதல்; அடக்குதல்; வைத்தல்; திணித்தல்; பதித்தல்; அணியாகஇடுதல்; அடைவித்தல்; ஏற்காதபொருளைச்செய்யுளிற்புகவிட்டுஉரைகூறுதல்; கொல்லுதல்; அழித்தல்; மூழ்குதல்; திரட்டுதல்; நெரித்தல்; மூடுதல்.

சேறி - தேடிச் செல்கிறாய்

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

முழுப்பொருள்
ஏ நெஞ்சே! நாம் காதலித்த நம் தலைவர் நம் உள்ளத்திலேயே இருக்கிறார். அப்படி உன் உள்ளத்திலேயே அவர் குடிக்கொண்டு இருக்க, நீ யாரை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறாய் (பேதை) நெஞ்சே??? என்று தலைவி நெஞ்சே கேட்கிறாள். 

தலைவி தலைவனின் பிரிவால் வாடுகிறாள். அப்பொழுது அவன் பிரிந்து சென்றுவிட்டான் என்பதை மறக்கும் அளவிற்கு பேதையாகிவிட்டாலாம்? அதனால் தான் தன் நெஞ்சிற்குள்ளேயே தலைவன் வாழ்வதாக கற்பனை செய்துக்கொண்டு இருக்கிறாள். அது பேதைத்தனம் என தெரிந்தப்பின்பு தன் நெஞ்சின் பேதமைதனத்தை (இக்குறளாக) சொல்லிக்கொள்கிறாள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து? ('உள்ளம்' என்புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்றவரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை.

மணக்குடவர் உரை
என்னெஞ்சே! நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருப்பாராக, நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய். இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?.

சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?.

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்

 

குறள் 1248
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
பரிந்து பரி-தல் - pari-   4 v. intr. 1. cf. spṛh. Tocovet; பற்றுவைத்தல் பண்டம் பகர்வான் பரியான்(பு. வெ 12, ஒழிபு 2). 2. To be affectionate;காதல்கொள்ளுதல். பாண பரிந்துரைக்க வேண்டுமோ (ஐந். ஐம். 23). 3. To sympathise; இரங்குதல் பாழாய்ப் பரிய விளிவதுகொல் (பு. வெ 3,8). 4. To plead, intercede; சார்பாகப் பேசுதல் நீ அவனுக்காகப் பரியவேண்டாம். 5. Tobe troubled, distressed; to suffer; வருந்துதல் பழவினைப் பயனீ பரியல் (மணி. 12, 50). 6. Topart, separate; பிரிதல் (W.) 7. To besundered; அறுதல் பரிந்த மாலை (சீவக. 1349).8. To break off; முறிதல் வெண்குடை கால்பரிந்துலறவும் (புறநா. 229). 9. To be destroyed; toperish; அழிதல் பழவினை பரியு மன்றே (சீவக.1429). 10. [K. pari.] To run; ஓடுதல் மாவே. . . பரிதலின் (புறநா. 97). 11. To go out; toescape; வெளிப்படுதல் பரிச்சின்ன ஞானம் பரிய(சிவப்பிர. சிவஞா. நெஞ்சு 81).--tr. 1. To fear;அஞ்சுதல். வடுப்பரியு நாணுடையான் (குறள், 502). 2.cf. pṛ. To guard with difficulty; வருந்திக் காத்தல்  

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்..

நல்கார் - விரும்பாதவர் 

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

ஏங்கி - ஏங்குதல் - ஒலித்தல்; அழுதல்; இரங்குதல்; திகைத்தல்; மனம்வாடுதல்; அஞ்சுதல்; கவலைப்படுதல்:இளைத்தல்.

பிரிதல் - விட்டுவிலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; முறுக்கவிழ்தல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.

பிரிந்தவர் - விட்டு விலகிச்சென்றவர்

பின்  - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

செல்வாய் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்து சென்று இருக்கிறான். பிரிவின் துன்பத்தால் தலைவி வாடுகிறாள். அப்பொழுது தலைவி நெஞ்சத்திடம் கூறுகிறாள் “ஏ நெஞ்சே, நாம் விரும்பிய நம் காதலர் நம்மை ஒருகாலத்தில் விரும்பியவர். ஆனால் நம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். உண்மையில் நம்மீது விருப்பம் இருந்தால் இந்நேரம் வந்திருப்பார் அவர். ஆனால் கொடியவர் அவர் நம்மை விரும்பவில்லையே, நம்மிடம் வந்து அன்புக்காட்டவில்லையே என்று வருந்திக்கொண்டு இருக்கும் பொழுது பிரிந்து சென்ற அவர் மீது ஏக்கம் கொண்டு செல்கிறாயே? நீ என்ன பேதையா நெஞ்சே? 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஆந்தை குறுங்கலி கொள்ளநம் மாடவர்
காய்ந்து கதிர்தெறூஉங் கானங் கடந்தார்பின்
ஏந்தல் இளமுலை ஈரெயிற்றாய் என்னெஞ்சு
நீந்தும் நெடுவிடைச் சென்று” (கைந்நிலை 21)

“ஒருசிறை இருந்து போன உள்ளத்தோ டூடு வாரும்” (கம்ப.ஊர்தேடு.180)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது) என் நெஞ்சு - என் நெஞ்சே; அவர் பிரிந்து நல்கார் என்று - அவர் இவ்வாற்றாமையை அறியாமையின் நொந்து வந்து தலையளி செய்யாராயினார் என்று கருதி; பிரிந்தவர்பின் ஏங்கிச் செல்வாய் பேதை- அறிவித்தற் பொருட்டு நம்மைப் பிரிந்து போயவர்பின் ஏங்கிச் செல்லலுற்ற நீ யாதும் அறியாய் (ஆற்றாமை கண்டு வைத்தும் நல்காது போயினாரைக் காணா வழிச்சென்று அறிவித்த துணையானே நல்க வருவர் என்று கருதினமையின் 'பேதை' என்றாள்.).

மணக்குடவர் உரை
என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றிலரென்று இரங்கி நம்மைவிட்டுப்போனவர் பின்னே போகாநின்றாய், பேதையா யிருந்தாய். இது தலைமகள் தலைமகனிருந்த தேயத்தை நினைத்துக்கவன்ற நெஞ்சிற்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.

சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே!.

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

 

குறள் 1240
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]

பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணின் - கண்ணின் அளவு சிறிதான

பசப்போ - பசப்பு -  பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்

பருவரல் - துன்பம்; பொழுது

எய்தின்றே - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்

ஒள் - ஒள்ளொளி - மிகுந்தஒளி; oḷ   adj. bright, பிரகாசமான; 2. good, excellent, நல்ல; 3. beautiful, அழ குள்ள; 4. knowing, அறிவுள்ள. In combination the ன் may change into ட் or ண் see ஒட்பம் ஒண்மை etc.

நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம்.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

செய்தது - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

கண்டு காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

முழுப்பொருள்
தலைவனும் தலைவியும் தழுவிக்கொண்டு இருக்கும்பொழுது ஏற்பட்ட இடைவெளியில் குளிர்க்காற்று உட்புகுந்துவிட்டது. அச்சிறுப்பிரிவை பொறுக்கமுடியாமல் தலைவியின் ஒளிபொருந்திய நெற்றி ஒளியிழந்தது. ஏனெனில் அச்சிறுப்பிரிவானாலும் கூட அவை பசலைநோய்/காதல்நோய் உற்றது. நெற்றி ஒளி இழந்ததை கண்டு தலைவியின் கண்களும் பசலைநோய் உற்று துன்பற்றது என்று தலைவி கூறுகிறாள். இணைந்திருந்த பொழுது ஏற்பட்ட சிறுபிரிவிற்கே தலைவியின் ஒவ்வொரு உறுப்புகளும் வாடின. தலைவன் இப்பொழுது பிரிந்து வேறெங்கோ சென்று உள்ளான். அப்படி இருக்கையில் தலைவியின் உறுப்புகள் எத்தனை துன்பம்கொள்கின்றனவோ?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது; ஒண்ணுதல் செய்தது கண்டு. தனக்கு அயலாய ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு. ('அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன்', எனத் தன் வன்மையும் அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம், ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும் , யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.).

மணக்குடவர் உரை
ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று.

மு.வரதராசனார் உரை
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

சாலமன் பாப்பையா உரை
குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!.

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

 

குறள் 1239
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]

பொருள்
முயக்கம் - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம்.
இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு.

முயக்கிடைத்  -  தழுவுகையில் ஊடாக

தண் - குளிர்ச்சி; அருள்.

வளி - காற்று; சுழல்காற்று; உடல்வாதம்; அண்டவாதநோய்; சிறியகாலவளவுவகை.

போழ - போழ்-தல் - pōl-   4 v. intr. [K. pōḻ.] 1.To be cleft, split; to gape; பிளவுபடுதல். (திவ்.இயற். திருவிருத். 87.) 2. To be disunited; பிரிவுபடுதல். (W.)--tr. 1. To split, cleave open;பிளத்தல். கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரனறுப்ப(பதிற்றுப். 19, 2). 2. To pass through, crossover; ஊடுருவிச் செல்லுதல். கடற்குட்டம் போழ்வர்கலவர் (நான்மணி. 18). 3. To dispel; to destroy;அழித்தல். நீடிருள் போழு நிலைமைத்து (சீவக. 2118).

பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்

உற்ற -  adj. part. devoted, trusty true. உற்ற சிநேகிதன், a trustworthy friend. உற்றமனிதன், a trustworthy person. உற்ற விசேஷம், உற்றசெய்தி, true report; உற்ற, rel. part. Uncommonly de voted, trusty.

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்

பெரு - பெருமை
பெரு - பெரிய- பெரிதான; மூத்த; இன்றியமையாத.

மழைக் - மழை - மேகத்தினின்றுபொழியும்நீர்; நீருண்டமேகம்; காண்க:மழைக்கால்; நீர்; கருமை; குளிர்ச்சி; மிகுதி.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
தலைவனும் தலைவியும் கூடியிருந்த சமயங்களில், இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு (முயங்கி) இருந்தனர். அப்படி முயங்கி இருக்கையில் நடுவே ஒரு கணம் அவர்களுக்கு நடுவே ஒரு இடைவெளி விழ அதில் குளிர்க்காற்று உட்புகுந்து இருவரையும் சற்று பிரித்ததாம். இன்பம் சுவைக்கும் பொழுது அறிவு மயங்கிய அந்நிலையில் அந்த பிரிவை விரும்பாத பேதை தலைவியின் பெருமை வாய்ந்த குளுமையான கண்கள் பசலைநோய் உற்றன. அதாவது முயங்குதுலக்கு இடையே உள்ள சிறு பிளவையும் விரும்பாதவள் தலைவி. அச்சிறு பிரிவிற்கே காதல் நோய் வந்தது. அப்படி இருக்கையில், தலைவனை பிரிந்து இவ்வளவு காலம் வாடும் தலைவியும் அவளது கண்களும் என்னவாயினவோ?

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே” (நற் 3:12)

“நெய்தல் உண்கண் பைதல் கூர” (நற் 113:7)

“கண்ணுந் தோளுந் தண்ணுறுங் கதுப்பும்
பழநலம் இழந்து பசலை பாய” (நற் 219:1-2)

“பசலை யார்ந்தன குவளையங் கண்ணே” (குறுந் 13:5)

“பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே” (ஐங்குறு 16)
”உண்கண் பசப்ப தெவன் கொல் அன்னாய்” (ஐங்குறு 21)
”ஏதி லார்க்குப் பசந்தவென் கண்ணே (ஐங்குறு 34)
”கயலெனக் கருதிய உண்கண்
பயலைக் கொல்கா ஆகுதல் பெறினே” (ஐங்குறு 36)
”நயந்தோ ருண்கண் பயந்துபனி மல்க” (ஐங்குறு 37)
”பசப்பணிந் தனவான் மகிழ்நவென் கண்ணே” (ஐங்குறு 45)
”என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே” (ஐங்குறு 169)
”பல்லிதழ் உண்கண் பசத்தல்மற் றெவனோ” (ஐங்குறு 170)
”பயந்தன மாதோநீ நயந்தோள் கண்ணே” (ஐங்குறு 264)
”பனிமலர் நெடுங்கண் பசலை பாய்” (ஐங்குறு 477)
”கொன்றைப் பூவிற் பசந்த உண்கண்” (ஐங்குறு 500)

“பல்லிதழ் மலருண்கண் பசப்ப” (கலித் 45:11)
“பொன்னெனப் பசந்தகண்” (கலித் 77:12)
“பைதல வாகிப் பசக்குவ மன்னோஎன்
நெய்தல் மலரன்ன கண்” (கலி 142:22-3)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) முயக்கிடைத் தண் வளி போழ - அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்ற - அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக் கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன? (தண்மை - ஈண்டு மென்மைமேல் நின்றது. 'போழ' என்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை - குளிர்ச்சி).

மணக்குடவர் உரை
யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன. இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன.

மு.வரதராசனார் உரை
தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

சாலமன் பாப்பையா உரை
(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?.

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

 

குறள் 1237
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]

பொருள்
பாடு - உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வருத்தம்; படுக்கைநிலை; விழுகை; தூக்கம்; சாவு; கேடு; குறைவு; பூசுகை; மறைவு; நீசராசி; இடம்; பக்கம்; அருகு; ஏழாம்வேற்றுமையுருபு.

பெறுதியோ - பெறுதி -peṟuti   n. பெறு-. 1. Gain,profit; இலாபம். பெறுதி விரும்பினை யாகுவை (மணி.25, 115). 2. That which is sought to be got orreached; goal; அடையத்தகும் பொருள். மறைகளினிறுதி யறுதியிடவரிய பெறுதியை (திருப்பு. 928). 3.See பெறுமதி.

பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்

நெஞ்சே - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

கொடிய - koṭiya   pollaata பொல்லாத harmful, cruel  

கொடியார்க்கு கொடியார் - கொடுமையானவர் ; பொல்லாதவர் 

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

வாடு-தல் - vāṭu-   5 v. intr. [T. vāḍu, K.bāḍu, M. vāḍuga.] 1. To wither, fade, dry up;உலர்தல். பொதியொடு பீள்வாட (நாலடி, 269). 2.To be emaciated; to become weak; மெலிதல்.எந்தோள் வாட (கலித். 68). 3. To pine away,grieve; மனமழிதல். வாடினேன் வாடி வருந்தினேன்(திவ். பெரியதி. 1, 1, 1). 4. To turn pale; பொலிவழிதல். குழலியென் வாடிப் புலம்புவதே (திருக்கோ. 14). 5. To be defeated; தோல்வியடைதல்.வாடாவஞ்சி தலைமலைந்து (பு. வெ. 3, 1, கொளு). 6.To perish; கெடுதல். காரிகை பெற்றதன் கவின்வாட(கலித். 124). 7. To be removed; நீங்குதல். சூலமும் . . . கரத்தினில் வாடாதிருத்தி (கல்லா. 87, 29).8. To diminish, decrease; குறைதல். வாட்டருஞ்சீர்க்கண்ணகி நல்லாளுக்கு (சிலப். 9, 40). 9. To fallshort in weight; நிறைகுறைதல். Loc.

வாடு - vāṭu   n. வாடு-. Faded flower;வாடற் பூ. ஈங்கைவா டுதிர்புக (கலித். 31).

தோட் - தோள் - புயம்; கை; தொளை

பூசல்  - போர்; பேரொலி; பலரறிகை; கூப்பீடு; வருத்தம்; ஒப்பனை.

உரைத்து - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்

முழுப்பொருள்
ஓ நெஞ்சே! நான் தலைவனின் பிரிவால் வாடுகிறேன். என்னை பிரிந்து சென்ற அந்த கொடியாரிடம் பிரிவால் என் மெல்லிய தோள் வாடி உள்ளது என்று என் வருத்தத்தை பேரொலியாக உரைப்பாயோ? அப்படி உரைப்பதனால் நீ அழகும் பெருமையும் அடைவாயோ? அதாவது நீ கூறிவிட்டால் அவர் வந்துவிடுவாரா என்ன? வருபவர் என்றால் இந்நேரம் வந்திருப்பார் அல்லவா? நீ சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன? என்று தலைவி நெஞ்சை கேட்கிறாள்.

அதனால் தான் கேட்கிறேன் நெஞ்சே, என் மெல்லிய தோள் தலைவனின் பிரிவால் வாடிஉள்ளது என்று கூறினால் நீ என்ன பெருமை பெறுவாய் என்று?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(அவ்வியற்பழிப்புப் பொறாது தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) நெஞ்சே - நெஞ்சே; கொடியார்க்கு என் வாடு தோள் பூசல் உரைத்து - இவள் கொடியார் என்கின்றவர்க்கு நீ சென்று என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி; பாடு பெறுதியோ - ஒரு மேம்பாடு எய்தவல்லையோ? வல்லையாயின் அதனை ஒப்பதில்லை. ('கொடியார்க்கு' என்பது கொடியர் அல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'வாடு தோள்' என்பது அவை தாமே வாடாநின்றன என்பது தோன்ற நின்றது. பூசல்: ஆகுபெயர். அஃது அவள் தோள் நோக்கி இயற்பழித்தல் மேலும், அதனால் தனக்கு ஆற்றாமை மிகன் மேலும் நின்றது. 'நின்னுரை கேட்டலும் அவர் வருவர்; இவையெல்லாம் நீங்கும்; நீங்க எனக்குக் காலத்தினாற்செய்த நன்றியாமாகலின், அதன் பயனெல்லாம் எய்துதி' என்னும் கருத்தால் 'பாடு பெறுதியோ'? என்றாள்.).

மணக்குடவர் உரை:
நெஞ்சே! இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ?. இது நீ அவர்பாற் போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

  

குறள் 1230
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்
[காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்]

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.

மாலையாளரை - என் காதலரை

உள்ளி - உள்ளு-தல் - uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை )

மருள் - மயக்கம்; திரிபுணர்ச்சி; வியப்பு; உன்மத்தம்; கள்; குறிஞ்சியாழ்த்திறம்எட்டனுள்ஒன்று; பண்வகை; எச்சம்எட்டனுள்பிறவிமுதல்அறிவின்றிமயங்கியிருக்கும்நிலை; சிறுசெடிவகை; புதர்; பேய்; ஆவேசம்; புல்லுரு.

மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.

மாயும் - மாய்தல் - மறைதல்; அழிதல்; சாதல்; ஒளிமழுங்குதல்; கவலைமிகுதியால்வருந்துதல; அறப்பாடுபடுதல்; மறத்தல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

மாய்தல் - மறைதல்; அழிதல்; சாதல்; ஒளிமழுங்குதல்; கவலைமிகுதியால்வருந்துதல; அறப்பாடுபடுதல்; மறத்தல்.

மாயா - மறையாத, அழியாத, சாகாத

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

முழுப்பொருள்
தலைவி கூறுகிறாள் - “தலைவன் பிரிந்து சென்ற பொழுதே மாய்ந்திருக்க வேண்டிய என் உயிர் இன்னும் அழியாமல் இருக்கிறது. ஏனெனில் அவர் மறுபடியும் என்னிடம் வந்து சேர்வார் என்ற நம்பிக்கையில். ஆனால் பொருளே முக்கியமென கருதி சென்ற எனது கணவரோ (எனக்கு மாலையிட்டவர்) இன்னும் வந்து சேரவில்லை. இந்த மயக்கும் மாலை பொழுதோ தினமும் அவரை நினைவுப்படுத்துகிறது. அந்நினைவுகள் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்கிறது.”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) மாயா என் உயிர் -காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என் உயிர்; பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் - இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது. ('குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார், காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால் பயனில்லை', என்பதாம்.).

மணக்குடவர் உரை
பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து மயங்கின மாலைப்பொழுதிலே எனது சாகமாட்டாத உயிர் மெலியாநின்றது. இது மாலையாலடர்ப்புண்ட தலைமகள் தலைமகன் அன்பும் அறனும் இலனென்று நினைத்துத் தன்னுள்ளே சொல்லியது.

மு.வரதராசனார் உரை
(பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

 

குறள் 1229
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து
[காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்]

பொருள்
பதி - நகரம்; பதிகை; நாற்று; உறைவிடம்; வீடு; கோயில்; குறிசொல்லும்இடம்; ஊர்; பூமி; குதிரை; தலைவன்; கணவன்; அரசன்; மூத்தோன்; குரு; கடவுள்.

மருண்டு - மருளுதல் - மயங்குதல்; வெருவுதல்; வியத்தல்; ஒப்பாதல்.

பைதல் - இளையது; சிறுவன்; குளிர்; துன்பம்

உழக்கும் -  uḻa-   4 v. intr. 1. To suffer;to experience sorrow, pain, trouble or fatigue;வருந்துதல். அருந்துத லின்றி யலைகட லுழந்தோன்(மணி. 16, 74). 2. To be accomplished, asin an art; பழகுதல் (சீவக. 597.) 3. To try,make an effort; பிரயாசப்படுதல் செயற்றலைநின்றுழப்பவர்கள் (தணிகைப்பு. நாட்டு 130).--tr. Toconquer; வெல்லுதல் பாடகச் சீறடி பரற்பகையுழவா (சிலப். 10, 52). 

மதி - சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுரம்; ஒருமுன்னிலையசைச்சொல்; ஒருபடர்க்கையசைச்சொல்; யானை.

மருண்டு- மருளுதல் - மயங்குதல்; வெருவுதல்; வியத்தல்; ஒப்பாதல்.

மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.

படர் - செல்லுகை; ஒழுக்கம்; வருத்தம்; நோய்; நினைவு; பகை; மேடு; துகிற்கொடி; படைவீரர்; எமதூதர்; ஏவல்செய்வோர்; இழிமக்கள்; தேமல்; தூறு; வழி; தறுகண்மை.

தரும் தருதல் - கொடை,  v. noun. Giving, &c. See தா, v.

போழ்து - பொழுது, காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன்

முழுப்பொருள்
நிலவு மயங்கும் பொழுது மாலையில் ஒளி குன்றுகிறது. நிலவு மயங்கிய மாலைப்பொழுது எனக்கு தலைவனின் நினைவுகளை தருகிறது. அதனால் என்ன? அந்நினைவுகள் தலைவன் மீது எனக்கு மயக்கத்தை தந்து என்னை காமநோயில் / பசலை நோயில் வாட்டுகிறது. பிரிந்துள்ள பொழுது எவ்வாறு மாலை தன் வேதனையை கூட்டுகிறது என்று தலைவிக் கூறுகிறாள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) (இதற்கு முன்னெல்லாம் யானே மயங்கி நோயுழந்தேன்) மதி மருண்டு மாலை படர்தரும் போழ்து - இனிக் கண்டாரும் மதி மருளும் வகை மாலை வரும்பொழுது; பதி மருண்டு பைதல் உழக்கும் - இப்பதியெல்லாம் மயங்கி நோயுழக்கும். ('மதி மருள' என்பது 'மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாளாகலின் 'மாலை படர்தரும் போழ்து' என்றாள். 'யான் இறந்து படுவல்' என்பதாம். 'மாலை மயங்கி வரும் போழ்து என் மதி நிலை கலங்கி நோயும் உழக்கும்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
என்மதி நிலைகலங்க மயக்கத்தை யுடைத்தாகிய மாலைக்காலம் வரும்பொழுது இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும். மதி - மானம்.

மு.வரதராசனார் உரை
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

சாலமன் பாப்பையா உரை
இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

 

குறள் 1228
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை
[காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்]

பொருள்
அழல் - நெருப்பு; தீக்கொழுந்து; எரிவு வெப்பம் கோபம் நஞ்சு உறைப்பு கார்த்திகைமீன்; கேட்டை செவ்வாய் கள்ளி எருக்கஞ்செடி; கொடிவேலிச்செடி; நரகம்

போலும் -  pōlum   part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.)

மாலைக்குத் - மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.

தூது - இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராச தூதர் தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூது மொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி.

ஆகி - ஆகுதல் - ஆதல், ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

ஆயன் - இடையன்; āyaṉ   n. ஆய்³. [M. āyan.] Man ofthe cowherd caste, herdsman; இடையன் ஆயர்வேட்டுவ ராடூஉத் திணைப்பெயர் (தொல். பொ 21). ; 2. A name of Kristna, as a herdsman--the ninth incar nation of Vishnu, கிருஷ்ணன். (p.)

குழல் - கூந்தல்; மயிர்க்குழற்சி; ஐம்பாலுள்சுருக்கிமுடிக்கப்படுவது; மயிர்; துளையுடையபொருள்; இசைக்குழல்; குழலிசை; துப்பாக்கி; உட்டுளை; ஒருவகைக்கழுத்தணி; ஒருமீன்வகை

போலும்  - pōlum   part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.)

கொல்லும் - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.

முழுப்பொருள்
”தலைவனின் பிரிவால் வாடுகிறேன் நான். அப்படி இருக்கையில் நெருப்புப்போல் என்னை சுடுகிறது இந்த மாலை வேளை. மாலை வேளைகளில் தூதுவனைப்போல் வரும் இடையனின் (கிருஷ்ணனின்) குழலிசைக்கூட என்னை கொல்லும் ஆயுதமாக ஒலிக்கிறதே.”  என்று வருந்துகிறாள் தலைவி.

ஏன் குழலிசை கொல்லும் கருவியாக ஒலிக்கிறது? முன்பு தலைவருடன் கூடி இருந்த நாட்களில் குழலிசை மதுரமாய் இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது தலைவனை பிரிவில் இருக்கும் பொழுது அக்குழலிசை அவருடன் கூடி இருந்த நாட்களின் நினைவுகளை மறுபடியும் எடுத்துவருவதால் அவை மேலும் அவளை வாட்டுகிறது. ஆதலால் குழலிசை கொல்லும் ஆயுதமாக கருதப்படுகிறது என்று நான் நினைக்கிறேன்.

குழலிசையும், மாலை நேரமும் சேர்த்து வருத்துதலை நற்றிணை, அகநாகனூறு, கலித்தொகை போன்ற இலக்கியங்கள் கூறுகின்றன.

“கொடுங்கோற் கோவலர் குழலோ டொன்றி
ஐதுவந்த் திசைக்கும் அருளில் மாலை” (நற்றிணை: 69:8-9)

“கல்லாக் கோவலர் ஊதும்
வல்வாய் சிறுகுழல் வருந்தாக் காலே” (அகநானூறு:74:16-17)

”ஆபெயர் கோவலர் ஆம்பலொ டளைஇப்
பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப
ஆருயிர் அணங்கும் தெள்ளிசை
மாரி மாலையும் தமியள் கேட்டே” (அகநானூறு 214:12-5)

“பல்லான் கோவலர் கல்லாது ஊதும்
சிறுவெதிர்ந் தீங்குழல் புலம்புகொள் தெள் விளி” (அகநானூறு 399:11-2)

“அணிமாலைக் கேள்வற் றரூஉமார் ஆயர்
மணிமாலை ஊதும் குழல்” (கலித் 101:34-5)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) ஆயன் குழல் - முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும்படை-அது வந்து என்னை கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று. (பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது'? என்பதாம்.).

மணக்குடவர் உரை
நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங்குழலோ?. இப்பொழுது வருத்துதலின் படை என்றாள்.

மு.வரதராசனார் உரை
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

சாலமன் பாப்பையா உரை
முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்

 

குறள் 1220
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம்

நனவினால் - விழித்திருக்கையில் 

நம் - எல்லாம் என்னும் சொல் உயர்திணையாயின் அஃது உருபேற்கும் போது கொள்ளுஞ் சாரியை; வணக்கம்

நீத்தார் - முனிவர்; துறவியர்.

என்பர் - என்பார்கள்

கனவினான் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம்,

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

காணார்- காணாது - காணாமல்

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

இவ் - இந்த

ஊரவர் - ஊர் மக்கள், ஊரார்

முழுப்பொருள் 
பிரிந்து சென்றுள்ள தலைவன் காலைப்பொழுதுகளில் என்னுடன் இருப்பதில்லை. காலை பொழுதுகளை மட்டும் கண்டுவிட்டு என் தலைவன் என்னை துறந்துவிட்டார் என்று இவ்வூர் மக்கள் அவரை ஏசுகின்றனர். ஆனால் கனவுகளில் அவர் என்னுடன் வந்து சேர்ந்துவிடுகிறார். கனவுகளில் நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை இவ்வூர் மக்கள் காண்பதில்லை என்று தலைவி கூறுகிறாள்.

அதாவது தலைவன் பிரிந்து சென்றுள்ளான் என்ற ஏக்கம் அவளுக்கு இருப்பினும் இவ்வூர் மக்கள் அவரை ஏசுவதை அவள் விரும்பவில்லை. இரவில் என்னுடன் இருக்கிறார் அது எனக்கு மகிழ்ச்சி. அவர் என்னுடன் வந்து சேர்ந்துவிட்டால் காலைவேலைகளில் இவ்வூர்மக்களின் ஏசுகளை பொசுக்க முடியும். அதாவது தன் வருத்தத்தை ஊர்மக்களின் பிரச்சனையாக கூறுகிறாள் தலைவி. உண்மையில் அது அவளுடைய ஆதங்கம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) இவ்வூரவர் நனவினான் நம் நீத்தார் என்பார் - மகளிர் நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம் காதலரைக் கொடுமை கூறாநிற்பார்; கனவினான் காணார்கொல் - அவர் கனவின்கண் நீங்காது வருதல் கண்டறியாரோ? ('என்னொடு தன்னிடை வேற்றுமை இன்றாயின், யான் கண்டது தானும் கண்டமையும், அது காணாது அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாளேயாம்' என்னும் கருத்தால், 'இவ்வூரவர்' என்றாள்.).

மணக்குடவர் உரை
இவ்வூரார் நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறாநிற்பர்: அவர் அவரைக் கனவின்கண் காணார்களோ?. இஃது இவ்வேறுபாடு அலராயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?.

சாலமன் பாப்பையா உரை
என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?.

நனவினால் நல்காரை நோவர் கனவினால்

 

குறள் 1219
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம்

நனவினால் - விழித்திருக்கையில் 

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்.

நல்காரை - விரும்பாதவர் 

நோதல் - பூடுமுதலியவற்றிற்குவரும்கேடு; துன்புறுதல்; நோயுறல்; வருந்துதல்; வறுமைப்படுதல்; பதனழிதல்; எழுத்துமுதலியவற்றின்மழுங்கல்; சாயம்சிதறுகை; வறுமை; வெறுத்தல்.

நோவு - நோய்; துன்பம்; மகப்பேற்றுவலி; வலி; இரக்கம்.

நோவர் - நோந்துக்கொள்வர்

கனவினான் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம்,

காதலர்க்  -  கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

காணாதவர் - காணாது - காணாமல்

முழுப்பொருள் 
காலைப்பொழுதுகளில் விழித்திருக்கும் பொழுது தன்னை விரும்பாத, தன்னிடம் வந்து அன்பாக இல்லாத தலைவனை வெறுப்பார்கள் சில கன்னியர்கள். அவர்கள் அறியாமையை என்னவென்று சொல்வது? அறியாமையா? ஆம். இவர்கள் கனவில் வரும் தலைவனிடம் இருந்து அன்பை பெறாதவர்களாக அவ்வின்பத்தை அறியாதவர்களாக தான் இருப்பார்கள் என்று தலைவி கூறுகிறாள். 

ஏன் அப்படிக் கூறுகிறாள் தலைவி? பிரிந்து சென்றுள்ள தலைவன் நனவுகளில் வரவில்லை. அதனால் அவர் என்னை விரும்பவில்லை என்றாகிவிடுமா? கனவுகளில் வருகிறாரே. அவ்வின்பம் இப்பொழுது போதும் என்று நினைக்கிறாள் அவள். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கனவினான் காதலர்க் காணாதவர் - தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் - தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவர் நிற்பர். (இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலருளராய அவரைக் கனவிற் கண்டறிவாராயின், நம் காதலர் கனவின்கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் என்பதாம்.).

மணக்குடவர் உரை
நனவின்கண் வந்து காதலரை நோவாநிற்பர், கனவின்கண் அவரைக் காணாதவர்: காண்பாராயின், நோவார். இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை
இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.

நனவினால் நல்காக் கொடியார் கனவினால்

 

குறள் 1217
நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம்

நனவினால் - விழித்திருக்கையில் 

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்.

நல்காக் - விரும்பாத

கொடிய - koṭiya   pollaata பொல்லாத harmful, cruel  

கொடியார் - கொடுமையானவர் ; பொல்லாதவர் 

கனவினான் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம்,

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

எம்மைப் - எப்பிறப்பு; எம்தலைவன்; எவ்வுலகு.

பீழிப்பது - பீழித்தல் - வருத்துதல்.

முழுப்பொருள் 
தலைவன் தலைவியை பிரிந்து சென்றுள்ள பொழுது தலைவி காமநோயால் துன்பப்படுகிறாள். அப்பொழுது அவள் கூறுகிறாள்,  காலை பொழுதுகளில் விழித்திருக்கையில் என்னை பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வராமல் இருக்கின்றார். ஏனெனில் அவர் என்னை விரும்பவில்லை. விரும்பி இருந்தால் வந்திருப்பார் அல்லவா. ஆதலால் அவர் கொடியர் ஆனார். நனவினில் தான் அப்படி என்றால் இரவு கனவுகளில் தலைவன் வந்துவிடுகிறார்.  கனவில் தலைவன் வருவதால் எனது துன்பமே மிகுகிறது. நான் வருந்துகிறேன். ஏனெனில் தலைவனின் நினைவகள் என் உறக்கத்தை கெடுகிறது. அதனால் நானும் வாடுகிறேன். நனவில் வராதவர் கனவில் வந்து என்னை வருத்துவது ஏன்?

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”நனவெனப் புல்லுங்காற் காணாளாய்க் கண்டது
கனவென வுணர்ந்துபின் கையற்றுக் கலங்குமே” (கலி 126:6-7)

பரிமேலழகர் உரை
(விழித்துழிக் காணளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது.) நனவினான் நல்காக் கொடியார் - ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாத கொடியவர்; கனவின்கண் வந்து எம்மைப் பீழிப்பது என் - நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி? (பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கிக் 'கொடியார்' என்றும் கனவில் தோள்மேலராய் விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது என்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள். 'நனவின் இல்லது கனவினும் இல்லை' என்பர், 'அது கண்டிலம்', என்பதாம்.).

மணக்குடவர் உரை
நனவின்கண் அருளாத கொடுமையையுடையார் கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு?. இது விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது.

மு.வரதராசனார் உரை
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?.

சாலமன் பாப்பையா உரை
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?.

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்

 

குறள் 1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து
[காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்]

பொருள்
விளியும் - விளிதல் - இறத்தல்; அழிதல்; குறைதல்; கழிதல்; ஓய்தல்; சினத்தல்; நாணமடைதல்; அவமானமடைதல்; வருத்தப்படல்; மறிதல்; சொல்லுதல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

வேறு -  பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

அல்லம் - அல்ல -  இல்லை

என்பார் - என்று கூறுவார்

அளி - அன்பு; அருள் ஆசை வரவேற்பு எளிமை குளிர்ச்சி கொடை காய் வண்டு தேன் வண்டுகொல்லி கருந்தேனீ; மாட்டுக்காடி; தேள் கிராதி மரவுரிமரம்.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்ற - āṟṟa   adv. ஆற்று¹-. 1. Greatly,exceedingly; மிக அவனறி வாற்ற வறியு மாகலின்(தொல். பொ 147). 2. Entirely; முற்ற (குறள், 367.)  

நினைந்து - நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.

முழுப்பொருள் 
என் தலைவன் நம் இருவர் உயிரும் வேறு வேறு அல்ல என்றார். இருவரும் இரு உடலானாலும் ஓர் உயிர், இனிமை பயக்கும் இன்னுயிர் என்று கூடி இருந்த நாட்களில் கூறினார். ஆனால் பிரிந்து சென்று விட்டார். இப்பொழுதோ சற்றும் அன்பு இல்லாமல் இருக்கிறார். என்னிடம் வந்து சேராமல் இருக்கிறார். (எனக்கு ஒரு சேதி கூட அனுப்பாமல் கருணையற்று இருக்கிறார். என்னை நினைக்கிறாரா என்றுக்கூட எனக்கு தெரியவில்லை.) இப்படி அன்பில்லாதவரை பற்றி நான் இங்கு நினைத்துக்கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கையில் என் உயிர் அழிகிறது என்று தலைவி கூறுகிறாள்.

காதற்தலைவி வேறல்லம் என்று கருதுமியற்கையை கலித்தொகைப் பாடலொன்றும் கூறுவதைக் காணலாம். 
“பண்டு நாம் 
வேறல்லம் என்பதொன் றுண்டால் அவனொடு 
மாறுண்டோ நெஞ்சே நமக்கு” (கலி.62:17-9)

வில்லக விரலினார் என்பார் பாடிய குறுந்தொகைப் பாடலொன்று, ஓருயிர்-ஈருடல் பற்றி அழகாகச் சொல்கிறது. “குளத்தில் ஆம்பல் அரும்பியுள்ளது. அழகான நிறத்தைக் கொண்ட அந்தக் கொழுத்த அரும்புகளை வண்டுகள் ஊதித் திறந்து மலரவைக்கின்றன. அப்படிப்பட்ட குளிர்ச்சியான நீர்த்துறைகளைக் கொண்டவன் என் காதலன். அவனோடு வாழும்போது, நாங்கள் ஈருடல், ஓருயிர் ஆனோம். அவனோடு இணையும்போது, வில்லை அழுத்திப் பிடிக்கும் விரல்களைப் போல் ஒருவரோடு ஒருவர் இறுகப் பொருந்தி, ஒரே உடலாகவும் மாறிவிடுகிறோம்” அப்பாடலானது:

“பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழுமுகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின், இருமருங்கினமே, கிடப்பின்,
வில்லக விரலின் பொருந்தி, அவன்
நல் அகம் சேரின், ஒருமருங்கினமே”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது) வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து: என் இன்னுயிர் விளியும்-எனது இனிய உயிர் கழியாநின்றது. (அளியின்மை - பின் வருவாராகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டு நின்றுழித் தூது விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று; அவரன்பின்மைக்கு' என எதிர்அழிந்து கூறியவாறு).

மணக்குடவர் உரை
நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர் அருளின்மையை மிகவும் நினைந்து எனது உயிர் அழியா நின்றது. இது தலைமகன் நினையானென்று தெரிந்து தலைமகள் தோழிக்குக் கூறியது.

மு.வரதராசனார் உரை
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.

சாலமன் பாப்பையா உரை
நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.