குறள் 1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்
[காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்]
பொருள்
முழுப்பொருள்
[காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்]
பொருள்
யாமும் - யாம் - தன்மைப்பன்மைப்பெயர்
உளேம் - இருக்கிறேன் ; உயிர்வாழ்கிறேன்
கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.
கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.
அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.
நெஞ்சத்து - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு
எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.
நெஞ்சத்து - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு
ஓ - பதினோராம்உயிரெழுத்து; வினாவெழுத்து; விளரிஎன்னும்இசையின்எழுத்து; நீக்கம்; ஒழிவு; சென்றுதங்குகை; மதகுநீர்தாங்கும்பலகை; உயர்வுஇழிவுசிறப்புக்குறிப்பு; மகிழ்ச்சிக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; தெரிதல்குறிப்பு; நினைவுக்குறிப்பு; கொன்றை; பிரமன்; ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை; பிரிநிலை, ஐயம், அசைநிலைஇவற்றைக்காட்டும்ஓர்இடைச்சொல்.
ஒ - பத்தாம்உயிரெழுத்து; ஒவ்வுஎன்பதன்பகுதி; ஐம்பறவைகளுள்மயிலைக்குறிக்கும்எழுத்து
ஓஒ! - அதிசயக்குறிப்பு, வியப்புக்குறிப்பு
உளரே - உடையவர்
அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.
”எந்நெஞ்சத்தில் எப்பொழுதும் என் அன்புகுரியவர் இனியவர் என் தலைவர் உள்ளார். அதுப்போல் அவர் நெஞ்சத்தில் நான் இருக்கிறேனா? ”என்று தலைவி தோழியிடம் புலம்புகிறாள். ஏனெனில், அப்படி அவர் நெஞ்சத்தில் தான் இருந்தால், பிரிந்து சென்ற தலைவன் தன்னை காண வருவானா தன்னுடன் வந்து சேருவானா என்பதே தலைவியின் உள்ளார்ந்த ஏக்கம்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”அளியளோ அளியள்என் நெஞ்சமர்ந்தோளே” (குறந் 56:5)
“நெஞ்சமர் தகுவி” (அகநா 259:12)
“பெரிய மகிழும் துறைவன்எம்
சிறிய நெஞ்சத் தகல்வறி யானே” (நற் 388:9-10)
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) எம் நெஞ்சத்து அவர் ஓ உளரே - எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழும் உளரேயாய் இராநின்றார்; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் - அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளமாதுமோ, ஆகேமோ? (ஓகார இடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்தி நின்றது. 'உளமாயும், வினை முடியாமையின் வாராராயினாரோ, அது முடிந்தும் இலமாகலின் வாராராயினாரோ?' என்பது கருத்து.).
மணக்குடவர் உரை
அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல்லோ: எம்முடைய நெஞ்சின்கண் எப்பொழுதும் அவர் உளராகா நின்றார். ஓஒ என்பது மிகுதிப்பொருளின்கண் வந்ததாதலான், எப்பொழுதும் என்னும் பொருளதாயிற்று.
மு.வரதராசனார் உரை
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ?.
சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?.
No comments:
Post a Comment