Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label 01 அறத்துப்பால். Show all posts
Showing posts with label 01 அறத்துப்பால். Show all posts

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

குறள் 349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]

பொருள்
பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

அற்ற - அல்லாத

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணே - இடத்தே

பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

அறுக்கும் - அறுத்தல் -  அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்த

மற்றும் - மேலும்; மீண்டும்

நிலையாமை - நிலைத்துநில்லாமை; உறுதியின்மை, உறுதியற்றதன்மை; அழிந்துபடும்தன்மை.
 
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

காணப்படும் - பிறர்க்குத் தெரியவருகிறது; உணரலாம்

முழுப்பொருள்
பிறப்பு இறப்பு பிறப்பு இறப்பு என்று நீடுக்கொண்டே இருப்பது ஒரு சுழற்சி. பிறந்தவன் இறப்பான் - அதுவே நிலையாமையின் தன்மை. இத்தகைய நிலையில்லா வாழ்க்கைச் சுழற்சியில் இருந்து விடுபெற ஒருவர் பற்றற்று இருத்தல் வேண்டும். ஆசைகள் முற்றும் அற்று இருத்தலே நிலையில்லா வாழ்க்கையில் சுழற்சையை அறுத்து பிறப்பில்லாமால் ஆக்கும். இல்லையேல், ஆசையுடன் இருந்தால் மீண்டும் பிறந்து இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டியதுதான்.

அறநெறிப்பாடலில் வீட்டினையுறுவான் இயல்புபற்றி கூறும் பாடலில், “பற்றின்மை ஓட்டுவானுய்ந்துபோவான்” என்பார், முனைப்பாடியார். மெய்யாகவே ஒருவன் பற்றின்மையைப் பற்றுவனாயின் அவன் வீட்டுப்பேற்றினை அடைவான் என்பதே இதன் பொருள். சைவ ஞானிகள், சிவபெருமானை பிறப்பறுக்கும் பேராளனாக உருவகம் செய்திருக்கிறார்கள். திருவாசகத்தின்கண் வரும் சிவபுராணத்தில் சிவபெருமானை ‘பிறப்பறுக்கும் பிஞ்சகன்” என்றும், “மாயப் பிறப்பறுக்கு மன்னன்”, “பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்” என்றும் மாணிக்கவாசகர் கூறுவார்.

“பற்றவா வேரொடும் பகையறப் பிறவிபோய்
முற்றவா லுணர்வமேன் முடுகினார்” (கம்ப.தாடகை.3)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - ஒருவன் இருவகைப்பற்றும் அற்ற பொழுதே அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் - அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும். (காரணமாகிய பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார். ' அற்றது பற்றெனில், உற்றது வீடு' (திருவாய் 1-2-5)என்பதூஉம் அது பற்றி வந்தது. இவை இரண்டு பாட்டானும்அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்: அதனை விடாதபோது நிலையாமை காணப்படும். இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது.

மு.வரதராசனார் உரை
இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.

சாலமன் பாப்பையா உரை
ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
துறவும் சன்னியாசமும்
கீதையில் யோகம், துறவு, சன்னியாசம், தியாகம், வேள்வி ஆகிய யாவும் ஏறத்தாழ ஒரே கருத்திலேயே உபயோகிக்கப்படுவதை நாம் இங்குக் கவனிக்க வேண்டும். துறவு, சன்னியாசம் என்பன தாடியும் சடையும் வளர்த்துக் கொண்டு காட்டுக்குப் புறப்படுவதல்ல. துறவு என்பது வாழ்வைத் துறப்பதல்ல. உண்மையில் வாழ்வைத் துறந்தாலாகாது என்பதை வற்புறுத்த எழுந்ததே பகவத்கீதை. எது உண்மையான துறவு என்பதைக் கீதை தெளிவாகக் கூறுகின்றது. செய்யும் செயலின் பலனில் நாம் கொள்ளும் பற்றையோ ஆசையையோ துறப்பதே துறவு. அதுவே உண்மைச் சன்னியாசம், உண்மையான தியாகமும் அதுவேயாகும். ஆசைகளை ஞானமாகிய அக்கினியினால் எரிப்பதே வேள்வி. வேதங்களிலே பேசப்படும் வேள்விக்கும் இக்கருத்துப் பொருந்தும். மிருகங்களை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதுதான் வேள்வியென்றோ யாகமென்றோ கொள்ளாது நமது ஆசைகளாகிய விலங்குகளை ஞானமெனப்படும் அக்கினியிலே இட்டு எரிப்பதே வேள்வியும் யாகமும் எனக் கொள்வதே பொருத்தமாகும். 

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

குறள் 348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]

பொருள்
தலைப்பட்டார் - தலைப்படுதல் - talai-p-paṭu-   v. id. +.tr. 1. To unite, be in communion with; ஒன்றுகூடுதல் சிவனைத் தலைப்பட்டுச் சென்றொடுங்கும்ஊழியிறுதி (திருக்கோ. 25, உரை). 2. To meet,cross; எதிர்ப்படுதல் ஓர் வேட்டுவன் றலைப்பட்டானே (சீவக. 1230). 3. [T. talapaḍu.] To under-take, enter upon; மேற்கொள்ளுதல் ஏவல் தலைப்படவிரும்பும் (சேதுபு. துரா 2). 4. To obtain, attain;பெறுதல். சிலரதன் செவ்வி தலைப்படுவார் (குறள்,1289).--intr. 1. To advance; to improve incircumstances; முன்னேறுதல் 2. To be noble,exalted; தலைமையாதல். தலைப்படு சால்பினுக்குந்தளரேன் (திருக்கோ. 25). 3. To enter, asa character on the stage; புகுதல் கூரிய பல்லினையுடையாள் தலைப்பட்டாள் (பு. வெ 10, பொதுவி. 5,உரை). 4. To follow; வழிப்படுதல் தம்மிற்றலைப்பட்டார் பாலே தலைப்பட்டு (திருக்களிற்றுப்.2). 5. To commence; தொடங்குதல் அந்தக்காரியத்தைச் செய்யத் தலைப்பட்டான்.

தீரத் - முற்ற; மிக

துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.; உலகியல் பற்றுகளைத் துறந்து அறநெறி வாழ்பவர்

துறந்தார் - பற்றுவிட்டமுனிவர்

மயங்கி - மயங்குதல் - மருளுதல்; தன்னைமறத்தல்; வெறிகொள்ளுதல்; மாறுபடுதல்; நிலையழிதல்; வருந்துதல்; தாக்கப்படுதல்; ஐயுறுதல்; தயங்குதல்; கலத்தல்; போலுதல்; நெருங்குதல்; கைகலத்தல்; அறிவுகெடுதல்; கலக்கமுறுதல்; உணர்ச்சியிழத்தல்.

வலைப்பட்டார் - வலைப்படுதல் - வலையில்அகப்படுதல்; சூழ்ச்சிக்குட்படுதல்.

மற்றையவர் - மற்றவர்கள்; பிற மக்கள்

முழுப்பொருள்
வீடுபேற்றினை அடைய முற்பட்டு துறவறம் பூண்டவர்கள் தனது ஆசைகளை பற்றுகளை விருப்பு வெறுப்புகளை முற்றும் துறந்தார் என்றால் அவர்கள் வீடுபேற்றினை அடைவார்கள். (துறவறத்தில் கூறியுள்ள மற்றவற்றையும் பின்பற்றினால் வீடுபேறு கிட்டும்). 

ஆனால் துறவறம் பூண்டுவிட்டு ஆசைகளைத் துறக்கவில்லையென்றால் (அது ஒருரே ஒரு ஆசையாக இருந்தாலும்) அவர் வீடுபேற்றினை அடைய மாட்டார். ஏனெனில் அந்த ஆசை என்னும் மயக்க வலையிலேயே அகப்பட்டு சிக்கித்தவிப்பார். 

முன்னர் வேறு ஒரு குறளில் "குறள் 208 தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று" தீவினையின் எச்சம் தனது காலடியிலேயே தங்கிவிடும். நேரம் பார்த்து வஞ்சித்துவிடும் என்று படித்து இருந்தோம்.

அதுப்போல் ஒரே ஒரு ஆசையாக இருந்தாலும், அவ்வாசை நம்முள் எங்கேயோ தங்கி நேரம் பார்த்து நம்மை வஞ்சனை செய்து கவிழ்த்துவிடும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”இறப்பெனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்
மறப்பெனும் அதனின்மேற் கேடு மற்றுண்டோ
துறப்பெனத் தெப்பமே துணைசெ யாவிடின்
பிறப்பெனும் பெருங்கடல் பிழைக்க லாகுமோ” (கம்ப.மந்திரப்.21)

பரிமேலழகர் உரை
தீரத் துறந்தார் தலைப்பட்டார் - முற்றத் துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார், மற்றையவர் மயங்கி வலைப்பட்டார் - அங்ஙனம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டார். (முற்றத் துறத்தலாவது, பொருள்களையும் இருவகை உடம்பினையும் உவர்த்துப் பற்றற விடுதல். அங்ஙனம் துறவாமையாவது, அவற்றுள் யாதானும் ஒன்றின்கண் சிறிதாயினும் பற்றுச் செய்தல். துணிவுபற்றித் தலைப்பட்டார் என்றும், பொய்ந்நெறி கண்டே பிறப்பு வலையுள் அகப்படுதலின், 'மயங்கி' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
பற்றறத் துறந்தார் முத்தியைத் தலைப்பட்டார்: அல்லாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையிலே யகப்பட்டார். இது மறுமைப் பயன் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்

குறள் 347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]

பொருள்
பற்றி - பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

விடாஅ - விடா - விடாமல் - நீங்காமல்

இடும்பைகள்இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

பற்றினைப் - பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

பற்றி - பற்றுதல் - பிடித்தல்; பயனறுதல்; ஊன்றிப்பிடித்தல்; ஏற்றுக்கொள்ளுதல்; மனத்துக்கொள்ளுதல்; தொடுதல்; உணர்தல்; தொடர்தல்; நிறம்பிடித்தல்; தீமுதலியனமூளுதல்; தகுதியாதல்; ஒட்டுதல்; பொருந்துதல்; போதியதாதல்; உறைத்தல்; உண்டாதல்; பொறுத்தல்.

விடாஅதவர்க்கு - விடாதவருக்கு; நீங்காதவருக்கு

முழுப்பொருள்
செல்வத்தின் மீது, உறவுகள் மீது, கொள்கைகள் மீது, வீடு வசதி வாய்ப்புகள் மீது, நிலத்தின் மீது, பொன் நகைகள் மீது, ஆடம்பரத்தின் மீது, கேளிக்கைகள் மீது, (இன்னும் பல ஆசைகள்) கொள்ளும் பற்றுகளை, ஆசைகளை விட்டு ஒருவர் குறிப்பாக துறவறத்தில் இருக்கும் ஒருவர் நீங்கவில்லையென்றால் அவரை துன்பம் நீங்காது பற்றிக்கொள்ளும். 

துன்பத்தின் ஊற்றுக்கண் ஆசைகளே என்று பொதுவாக கூறலாம். துறவறத்தில் பொருளியலுக்கு இடமில்லை லௌகீகத்துக்கும் இடமில்லை. ஆனால் துறவறத்தில் இருந்துக்கொண்டு ஆசைகளை பற்றிக்கொண்டால் உடல் இங்கேயேயும் உயிர் வேறெங்கேயும் இருப்பது போல் ஆகும். அதனால் ஒருவருக்கு வேதனையே. மேலும் ஆசையோடு இருத்தல் துறவறத்தில் முன்னேற, வீடுபேறு பெற மிகப்பெரிய தடையாக இருக்கும். முன்னே செல்லாமல் தேங்கி நிற்பதும் துன்பத்தை தரும்.

“பற்றி விடா “ என்பது பற்றிக்கொண்டு விடாமலிருப்பதையும், “பற்றிவிடா” என்பது, “பற்றுவதில்லை” என்பதையும் குறிப்பதைக் கருத்தில் கொண்டு இக்குறளைப் படிக்கவும்.

சம்பந்தரின் ஆருர் தேவாரம் பற்றுகளை  
”பெரிய இன்பத்
துறவியார்க் கல்லது துன்பம்நீங் காதென” (சம்பந்தர்.ஆரூர்.5)

“தந்தைதாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர தாரமென்னும் 
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கில்லெனப் பற்றினாயே”  (சம்பந்தர்.ஆரூர்.9)
என்று குடும்பத்து உறவுகளையே பற்று என்கிறது. உலக வாழ்வியலில் உறவுகள் மற்று வாழ்க்கை வசதிகள் இவற்றைத் துறப்பதே உண்மையான பற்றறுத்த துறவு நிலையாம்.

மேலும்: அஷோக் உரை

இங்கு சூழ்ந்துள்ள பொருட்களே நாம் அறியக்கூடிய மெய்மை. அப்பொருட்களுடன் நாம் கொண்டுள்ள உறவு துயரற்றதாகுதலே விடுதலை. நோய், பசி, மிடிமை எனும் மூன்றையும் வெல்லுதல் மட்டுமே மீட்பு என நாங்கள் நம்புகிறோம்” என்றார் வஹ்னர்.


“எதையும் மிச்சமில்லாமல் விட்டுச்செல்வதற்கு பெயர் தவம். அது முனிவராலேயே இயலும்” என்றார் இளைய யாதவர். “பிறர் தங்கள் விழைவுகளையும் கனவுகளையும் விட்டுச்செல்கிறார்கள். ஏக்கங்களையும் வஞ்சங்களையும் நிலைநாட்டிச் செல்கிறார்கள்.” யுதிஷ்டிரர் “நான் எதிலிருந்தும் விடுபட்டவனல்ல. என் துயரெல்லாம் என் பற்றுகளால் உருவாவதே. பற்றறுக்க என்னிடம் சொல்லவேண்டியதில்லை. என் குடிகளை, நிலத்தை, இளையோரை, அரசியரை, மைந்தரை உளம்துறந்துவிட்டு நான் அடைவதொன்றுமில்லை” என்றார். “எங்கு பற்றிருக்கிறதோ அங்கே துயருள்ளது. எதில் பற்று மிகுகிறதோ அதிலேயே மிகுதுயரும் எழுகிறது. துயரென்பது பற்றின் மறுவடிவம் மட்டுமே” என்றார் இளைய யாதவர்.

பரிமேலழகர் உரை
பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு - இருவகைப் பற்றினையும் இறுகப்பற்றி விடாதாரை, இடும்பைகள் பற்றி விடாஅ - பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா. (இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல், விடாதவர்க்கு என்பது வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பொருள்களைப் பற்றி விடாதவரைத் துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும். இது பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது.

மு.வரதராசனார் உரை
யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.

சாலமன் பாப்பையா உரை
ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே

குறள் 338
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு
[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை]

பொருள்
குடம்பை - கூடு; முட்டை; ஏரி; உடல்

தனித்தல் - ஒன்றியாதல்; நிகரற்றிருத்தல்; உதவியற்றிருத்தல்.

தனி - ஒற்றை; தனிமை; ஒப்பின்மை; உரிமை; கலப்பின்மை; உதவியின்மை; சீட்டாட்டத்தில்ஒருவனேஎல்லாச்சீட்டையும்பிடிக்கை; தேர்நெம்புந்தடி

தனித்து - தனியாக 

ஒழிதல் - அழிதல்; சாதல்; நீங்கல்; தவிர்தல்; விடுதல்; வெறுமையாதல்; எஞ்சுதல்; தங்குதல்; ஓய்தல்.
ஒழிய - தவிர;  நீங்க; கெட.
ஒழிய 1. unless (emphatic) [post. + conditional] [2. inf. of ஒழி `cease']

புள் - பறவைப்பொது:வண்டு; கணந்துட்பறவை; பறவைநிமித்தம்; அவிட்டநாள்; கைவளை; மதுபானம்; கிட்டிப்புள்.

பறந்து - பறத்தல் - பறவை, பஞ்சுமுதலியனவானத்தில்பறத்தல்; வேகமாகஓடுதல்; விரைவுபடுத்தல்; அமைதியற்றுவருந்துதல்; சிதறியொழிதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை
அற்றேல் - அப்படியானால்.
அற்றே - அப்படியானால்

பறந்தற்றே - பறந்து செல்வது போலாம் (கூட்டின் தேவை முடிந்து அதை உடைத்துக்கொண்டு)

உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி.

உடம்பொடு - உடம்புடன் ;உடலுடன்

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு.

உயிரிடை - உயிர் இடத்தில

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
இந்த உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு என்பது எதைப்போன்றதுத் தெரியுமா? 

ஒரு பறவை முட்டையில் இருந்து உருவானாலும் அதனுள் வளர்ந்தாலும் முட்டையின் பாதுகாப்பைப் பெற்றிருந்தாலும் முட்டையுடன் அதனுள்ளே வாழ்நாள் முழுவதும் தங்கிவிடாது. முட்டையின் ஒட்டிற்கு காலம் முழுவதும் நன்றிகொண்டு அடிமையாக இருக்காது. முட்டையில் இருக்கும் பறவை ஏற்றகாலம் வந்த உடன் முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிடும். முட்டை ஓடு தனித்து நிற்கும். அதுப்போலவே உடலுக்குள் இருக்கும் உயிரும் ஒரு தருணத்தில் உடலைவிட்டு பிரிந்து சென்றுவிடும். உடல் தனித்துவிடப்பட்டு இருக்கும். உடலுக்கும் உயிருக்கும் இருக்கும் உறவு நிலையில்லாதது.

சரி, இதையேன் திருவள்ளுவர் கூறவேண்டும்? முன்பே இவ்வுலகம் நிலையாமை என்னும் பெருமைகொண்டு உள்ளது என்று கூறிவிட்டாரே. பின்பு யேன் மறுபடியும் கூறவேண்டும்?
ஏனெனில், நம்மில் சிலர் நினைக்கக்கூடும், நான் என் உடலை நன்கு பேணுகிறேன். என் எண்ணங்களை நன்கு பேணுகிறேன், ஆதலால் எனக்கு ஒன்றும் ஆகாது. என் உயிர் எனக்கு விசுவாசமாக இருக்கும் என்று நினைக்கலாம். அப்படியெல்லாம் நினைக்காதே என்று கூறுகிறார் திருவள்ளுவர். முட்டை பறவையை வளர்க்க ஒரு கூடாக இருப்பது அதன் கடமை. அதுப்போலவே, இவ்வுடல் உன்னுள் வாழ அனுமதிப்பது உன் உடம்பின் கடமை. அதனை பேணுவதும் உனது கடமை, பேணவில்லையென்றால அதன் பலனை நீ அனுபவிப்பாய். உடம்பை பேணியதற்காக தனியாக ஒரு பலன் கிடையாது. இறப்பு நிச்சயம்.

“ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்பு கூட்டிலிருந்துயிர் ஓட்டம் பிடிக்குமுன்” என்று சென்ற நூற்றாண்டின் இசைப்பாடலாசிரியர் பாபநாசம் சிவன் அவர்களும் இக்குறளின் கருத்தையொட்டிப் பாடியிருக்கிறார்.

சும்மா கூடு மரத்தில் கிடக்க, அதிலிருந்து தொலைவிலே பறந்து போய்விடும் பறவைகள் போல மக்கள் ஒருவரையும் கேளாமலே வந்து சுற்றங்களாய் ஒரு குடும்பத்தில் பிறந்து, பின்பு தம் உடம்பை உறவினரிடம் கிடக்கும்படி நீக்கி விட்டு, பேசாமலே இறந்து போய் விடுவார்கள் என்னும் கருத்தைக்கூறும் நாலடியார் பாடல் கீழே.
கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் – வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து. (நாலடி 30)

பழந்தமிழ்ப் பாடல்களில் குடம்பை என்ற சொல் கூடு என்ற பொருளிலேயே வழங்கிவந்திருக்கிறது, பரிமேலழகர் காலத்துக்கு முந்தைய பிங்கலந்த நிகண்டு மட்டுமே குடம்பைக்கு முட்டை என்ற பொருளக்கூறுவதாகவும் தெரிகிறது. இதற்கும் காரணம், குடம் போன்ற உருவில் உயிர்தாங்கும் பை என்பதனால் இருக்கலாமோ? இன்றும் கர்ப்பக்குடம், அல்லது கர்ப்பப்பை என்ற சொற்கள் வழங்கி வருவதை அறிவோம். அகநானூற்றுப்பாடலொன்று உயிர் உடலை விட்டுப்பிரிவதை பறவை கூட்டிலிருந்து பிரிவதாக உருவகம் செய்துள்ளது.
“.........................பராரை
அலங்கல் அஞ்சினைக் குடம்பைப் புள்ளெனப்
புலம்பெயர் மருங்கிற் புள்எழுந் தாங்கு
மெய்யிவண் ஒழியப் போகி, அவர் 
செய்வினை மருங்கிற் செலீஇயர் இன்உயிரே. – (அகம் 113:23-7)

கூடு என்ற சொல் உடலென, பல சங்க இலக்கியங்களில் வழங்கி வந்திருக்கிறது.

“உடம்பொடுயிரிடை நட்பறி யாதார்” (திருமந் 2148)

”இங்கோர் பார்ப்பெனப்
பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப்
பூணு மாறு அறி யேன்புலன் போற்றியே” (திருவா.48)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்று - முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து; உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு. ('தனித்துஒழிய' என்றதனான் முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும்ஒன்றாய்ப் பிறந்து வேறாம் துணையும் அதற்கு ஆதாரமாய்நிற்றல் அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று; அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமல் போகலின், புள்உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுள் பிறப்பன பிறவும்உளவேனும், புள்ளையே கூறினார், பறந்து போதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவே யாகலின். 'நட்பு'என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப்போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய்நித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின் , வினைவயத்தால்கூடியதல்லது நட்பில என்பது அறிக. இனி, 'குடம்பை' என்பதற்குக்கூடு என்று உரைப்பாரும் உளர்; அது புள்ளுடன்தோன்றாமையானும், அதன் கண் அது மீண்டு புகுதல்உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.).

மணக்குடவர் உரை
கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.

மு.வரதராசனார் உரை
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

குறள் 336
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நெருநல் - nerunal   s. yesterday, நேற்று; 2. adv. lately, recently, சற்றுமுன்

உளன் - வாழ்ந்த, இருந்த 

ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.

இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல்.

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை

உடைத்து - உடைதல், இருக்கும், உண்டு

இவ் - இந்த 

உலகு உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
நேற்று உயிருடன் இருந்த ஒருவர் இன்று உயிருடன் இல்லை என்கிற பெருமையை புகழை கொண்டது இவ்வுலகம். அதாவது இவ்வாழ்வும் உயிரும் நிலையில்லாதது. நிலையாமையை தன் இயற்கை விதி என கொண்டது இவ்வுலகு. அதுவே இவ்வுலகிற்கு பெருமை.

இது எப்படிப் பெருமையாகும்? இவ்வுலகத்தின் பார்வையில் யாரும் உயர்ந்தவர் அல்லர் சிறியோர் அல்லர். ஒருவர் எவ்வளவு நற்காரியங்கள் செய்தாலும் அவருக்கு இறப்பு வராது என்று அர்த்தம் ஆகாது. எல்லோருக்கும் இறப்பு நிச்சயம். நிலையான வாழ்வு இல்லை என்பதை எந்த ஒரு சார்பும் இல்லாமல் நடுவுநிலைமையுடன் பேணுகிறது இவ்வுலகம். அதனால் தான், அந்த நடுவுநிலைமையால் தான், தான் கொண்ட அறத்தில் இருந்து சிறிதும் விலகாததனால் தான் இவ்வுலகதிற்கு அந்தப் பெருமை சொந்தம்.

நேற்று வரை வாழ்ந்த ஒருவன் இன்று இல்லாமல் ஒழிகிறான், இறந்து படுகிறான்! இதை மனிதர்களைத் தினமும் காணவைத்து, “இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா”, என்றுக் கேட்டு, யாருமில்லை என்பதை உணர்த்துகிற உலகம் பெருமைமிக்க ஒன்றுதானே!

சரி, உலகத்தின் பெருமையை ஏன் திருவள்ளுவர் கூறுகிறார்? எனக்கு சாவு வராது என்று நினைக்காதே. உனக்கும் வரும். ஆதலால் உன் நேரத்தை வீண் செய்யாமல் நல்ல செயல்களில் ஈடுப்படுத்துக்கொள். அறங்களை செய். பிறரை துன்புறுத்தாதே என்று சொல்லாமல் சொல்கிறார் திருவள்ளுவர்.

”பிறந்தார் பெயருந் தன்மை பிறரால் அறிதற் கெளிதோ” (கம்ப.நகர்நீங்கு 36)

கம்பர் இராமகாதையில், நகர் நீங்கு படலத்தில் (இந்திரசித்து 10), “பொன்றுதல் ஒருகாலத்தும் தவிருமோ பொதுமைத்தன்றோ! இன்றுளார் நாளை மாள்வார்” என்று சொல்லுகிறார். திருவாய்மொழி (1.2:2) , “மின்னின் நிலையில மன்னுயிர் யாக்கைகள்”  என்கிறது. அப்பர் திருக்காட்டுப்பள்ளி (9) பதிகத்தில், 
“இன்றுளார் நாளையில்லை எனும்பொருள் 
ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்” என்கிறார். எல்லாமே நிலையாமையைக் குறித்துக் கூறப்பட்டக் கருத்துக்கள்தாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒருவன் நெருதல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து; - ஒருவன் நெருநல் உளனாயினான் , அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து, இவ்வுலகு - இவ்வுலகம். '(ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

சாலமன் பாப்பையா உரை
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

English Meaning - As I taught a kid - Rajesh
Those who were yesterday has gone today. No one can escape that. The world has transience as its reputation. Why does Thiruvalluvar say that? He could have said that to mean that, don't think you would live very long or not die and waste your time. Do your dharma. Do productive things that would help others. Do not hurt others or kill others. 

Questions that I ask to the kid
What reputation does this world have? Why does Thiruvalluvar say that?
A person who lived yesterday is not there today. Explain more.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

குறள் 335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை]

பொருள்
நாச் - nā   n. prob. நால்-. 1. Tongue; நாக்கு யாகாவா ராயினு நாகாக்க (குறள், 127). 2. Word;வார்த்தை. நம்பிநாவினு ளுலகமெல்லா நடக்கும்(சீவக. 316). 3. Middle, centre; நடு (திவா.)4. Index of a balance; துலைநா துலைநா வன்ன

செற்று - செற்று-தல் - ceṟṟu-   5 v. tr. 1. To kill;கொல்லுதல். (பிங். MSS.) 2. To destroy; அழித்தல் 3. To cut, chisel; செதுக்குதல் (ஈடு, 9, 9,1.) 4. To set, as a jewel; பதித்தல் மணி செற்றுபுகுயிற்றி (கம்பரா. கையடை 5).--intr. 1. Togather in crowds; செறிதல் பெருங்களிறுகள்செற்றிவந்து சேர்ந்தன (சீவக. 277, உரை). 2. Tosink deep; அழுந்துதல் உரத்தினுகிர் செற்றும்வகைகுத்தி (கம்பரா. மகுட. 8).  

விக்குள் - vikkuḷ   n. id. [K. bikkul.]Hiccup; விக்கல்.

மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

வாராமுன் - வருவதற்கு முன்பாக

நல் - நல்ல; வறுமை; nal   நல்ல, adj. (நன்மை) good, fair; 2. abundant, much, மிகுந்த; 3. auspicious. (In combin, ல் is changed into ற் before க, ச, த, ப & may be changed into ன் before ம & ந, sometimes also before க & ச).

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

நல்வினை - அறச்செயல்; முற்பிறப்பிற்செய்தபுண்ணியச்செயல்.

மேற் - மேற் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

சென்று - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

செய்யப் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்

முழுப்பொருள்
ஒருவரின் நாக்கு அடைத்து விக்கல் வந்து இறக்கும் முன்னெ அவர் நல்வினையான அறம்/அறங்கள் முன்னெடுத்து செய்ய வேண்டும். ஏனெனில் இவ்வாழ்வு, இவ்வாழ்வில் உயிர் என்பது நிலையில்லாதது. ஒருவர் எந்நேரத்திலும் இறக்கக் கூடும். யாரும் இன்னும் 10 ஆண்டு காலம் அல்லது 20 ஆண்டு காலம் அல்லது 10 மாதம் 5 மாதம் உயிருடன் இருப்பேன் என்று சொல்லமுடியாது. எப்படிப் பிறப்பை முடிவு செய்யமுடியாதோ அதுப்போல் இறப்பையும் முடிவு செய்யமுடியாது. ஆதலால் இறப்பிற்கு முன்னே நல்லது செய். ஆதலால் இப்பொழுதே அறம் செய். நாளை செய்யலாம் என்று தள்ளிப்போடாதே.

எனக்கு இன்னொரு அர்த்தமும் தோன்றுகிறது. விக்கல் என்பது தினமும் வருவது அன்று. அதுப்போல் நல்ல எண்ணங்களும் சிலசமயம் தான் வரும். அது உடனே வேறு ஒரு காரணத்தால் நசுக்கப்படவோ அல்லது பின்பு செய்துக்கொள்ளலாம் என்றோ மாறக்கூடும். அதற்கு வாய்ப்புகள் உண்டு. அதாவது காலமும் சூழலும் நிலையில்லாதது. அதுமட்டும் இன்றி நமது மனமும் மாறக்கூடும். நம்மது எண்ணங்களும் நிலையில்லாதது. ஆதலால் தற்பொழுது இருக்கும் காலத்திலும் சூழலிலும் தன்னால் இயன்ற (அல்லது அதற்கு சற்று மீறியாவது) அளவு அறத்தை/நல்வினையை ஒருவர் முனைப்புடன் எடுத்து செய்துமுடிக்கவேண்டும். நல்லவற்றைத் தள்ளிப்போடக்கூடாது. 

வளையாபதிப் பாடலொன்று: 
இளமையும் நிலையாவாம் இன்பமும் நின்றவல்ல 
வளமையும் அஃதே போல் வைகலும் துன்பவெள்ளம் 
உளவென நினையாதே செல்கதிக் கென்றும் என்றும் 
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்து கொண்மின்” 
என்கிறது. படிக்கவும் பொருள் விளங்கிக்கொள்ளவும் எளிதானது. 

பக்தி இலக்கியங்களும் இறைவனை நினைந்து அவன் பதம் அடைய வலியுறுத்துகின்றன நிலையாமையைச் சொல்லி. சம்பந்தர் தேவாரம்,

கனைகொள் இருமல் சூலைநோய் .....
எய்திவந்து நலியாமுன்… கோவலூர் 
வீரட்டானம் சேர்துமே…” என்கிறது. (சம்பந்தர்.கோவலூர் 4)

சுந்தரர் தம்முடைய புறம்பயம் (3) தேவாரத்தில், 
புறந்திரைந்து நரம்பெழுந்து நரைத்துநீ யுரையால் தளர்ந்து 
அறம்புரிந்து நினைப்ப தாண்மை அரிதுகாண்” என்பார்.

வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று
எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணை யான் திரு வேங்கடம்” (திருவாய் 3.3:10)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - உரையாடா வண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை மேற்சென்று செய்யப்படும் - வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும். (மேல் நோக்கி வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும் ஆகாமையானும் 'வாராமுன்' என்றும், அதுதான் இன்னபொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல் மண்டுதல். நல்வினை செய்யும் ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.).

மணக்குடவர் உரை
நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே, நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும். இஃது உயிரானது கழிவதன்முன்னே நல்வினையைச் செய்யவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்

குறள் 330
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

உடம்பின் - உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி.

நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

யார் - யாவர்

நீக்கியார் - போக்குகியவர் 

என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;

செயிர் - குற்றம்; கோபம்; போர்; வருத்துகை; நோய்.

உடம்பின் - உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி

செல்லாத்  - செல்லா-தல் - cel-l-ā-   v. intr. செல்² + ஆ-.1. To be paid or discharged, as loan; கடன்தொகை செலுத்தப்படுதல். 2. To be dead andgone; இறந்துபோதல். அவர் செல்லானார். Loc.  

தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.

யவர் - அவர் 

முழுப்பொருள்
நோய்/நோய்கள் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறவியில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தவர்கள் கூறுவர். 

குறள் 320 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் என்று முன்னரே கூறியிருந்தார் திருவள்ளுவர். நாம் பிறருக்கு செய்யும் துன்பம் நமக்கு நோயாக வரும் என்பதே அக்குறளின் கருத்து. 

பிற உயிர்களை கொல்லுதல் அவ்வுயிர்களுக்குச் செய்யப்படும் மிகப் பெரிய துன்பமாகும். கொலை செய்தால் இம்மையிலும் நோயாக வரும் மறுமையிலும் ஊழ்வினைப்பயனாக நோயென வரும். ஆதலால் எச்சரிக்கிறேன் உன்னை, பிற உயிர்களை கொல்லாதே என்று கண்டிப்பாக அறிவுறுத்துகிறார். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”அக்கேபோல் அங்கை யொழிய விரலுழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால்
அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்” (நாலடி 123)

பரிமேலழகர் உரை
செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர் என்று சொல்லுவர் வினை விளைவுகளை அறிந்தோர். (செல்லா வாழ்க்கை தீ வாழ்க்கை எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், அக்கே போல் அங்கை யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழுநோய் எழுபவே (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது. அருள் உடைமை முதல் கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும்; அஃது அறிந்து அடக்கிக்கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.).

மணக்குடவர் உரை
முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை. இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்

குறள் 329
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
கொலை - உயிர்வதை, உயிரைஉடம்பினின்றுநீக்கல்.

வினை -தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

வினையர் - தொழிலை செய்பவர் 

ஆகிய - ஆக்கம் ; உருவாகிய, ākiya   rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு  

மாக்கள் - மனிதர்கள்; பகுத்தறிவிலார்; குழந்தைகள்; விலங்குகள்.

புலைவினையர் - pulai-viṉaiyar   n. id. +.Abominable, vile persons; men of execrabledeeds; இழிதொழிலாளர்.

புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.

தெரிவு - அறிவு; தெரிந்தெடுக்கை; தெரிந்தெடுக்கப்பட்டது; தோற்றம்; அறியப்பட்டது.

தெரிவார் - அறிந்தவர்கள்

அகத்து -  அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

முழுப்பொருள்
பிற உயிர்களை கொலைச் செய்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள் பகுத்தறியும் திறனில்லாத மாக்கள் எனப்படுவர். அவர் அத்தொழிலில் இழிவையும் அதனால் வரும் பாவத்தையும் அறியாதவர்கள். ஆனால் கொலைச்செயலை இழிவானவர்கள் செய்யும் இழிச்செயல் என்றே நூல்கள்பல கற்றுணர்ந்துத் தெளிவான அறிவுடைய சான்றோர்கள் கருதுவார்கள். ஆதலால் கொலை தொழிலில் ஈடுபட்டு உள்ளவனே, அந்த இழிச்செயலை செய்யாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர்.   

மாக்கள் என்ற சொல்லுக்கு விலங்குகள் என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது சரியான பொருளென்று எனக்குப் படவில்லை. கீழே "மக்கள் - மாக்கள் - மாக்காள் - மாக்கட்கு!" என்ற சிறு கட்டுரையை வாசித்தால் ஏன் என்று விளங்கும். 

இக்குறளில் மாக்கள் என்றால் பகுத்தறியும் தன்மையற்றவர்கள் என்ற பொருளே பொருந்தும். ஏனெனில் கொலை செய்வது ஒருவர் என்றாலும் அதனை ஊனையோ அல்லது தோலையோ பயன்படுத்துவது வேறொருவர் ஆதலால் பயனடைந்தவருக்குத்தான் பாவம் என்று நினைத்துக்கொள்வர்கொலை செய்கின்றவர். பிற உயிர்களை கொலைசெய்வதனால் வரும் பயனை வேறொருவர் பெற்றாலும் அதனை வசதியாக செய்துக்கொடுப்பவர்க்கும் பாவம் உண்டு. ஒருவர் ஒரு உயிரை கொலைசெய்து உண்ணவேண்டும் என்றால், அவர் புலாலை உண்ணவே மாட்டார். ஆதலால் இந்த மாமிச உணவுச் சங்கிலியில் பயனாளர்களுக்கு பாவம் உள்ளதுப்போல அதனை உற்பத்திச் /வணிகம் செய்வோருக்கும் பாவத்தில் பங்கு உண்டு. இதனைப் பகுத்து அறியாதவரை மாக்கள் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

கொலைசெய்வோர் வைக்கும் வாதம் என்னவெனில், நான் வெறுமென கொலை தானே செய்தேன். ஆனால் ஊனை உண்டவர்களும் தோலை ஆடையாக காலணியாக அணிந்துக்கொள்வோரும் தானே இறுதியாக பயன் அடைந்தார்கள். அவர்கள் இல்லையெல் நான் இல்லை என்று. திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் "குறள் 256 தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்". மாமிச உணவை உண்ணுவதற்காக இவ்வுலகில் மக்கள் இல்லையென்றால் மாமிச உணவை விற்பதற்கும் இவ்வுலகில் மக்கள் இருக்க மாட்டார்கள். ஆதலால் எங்களை ஏன் இழிவானவர்களாக கருதுகிறீர்கள்?  
அதற்கான பதில் 
1) திருவள்ளுவர் அங்கே(குறள் 256) ஊனை உண்ணுவோர் இல்லையெனில் விலைப்பொருளாக விற்போர் இருக்க மாட்டார்கள் என்று தான் சொன்னாரே தவிர மாமிசத்தை விற்போருக்கு இழிவு இல்லை என்று சொல்லவில்லை. மேலும் உண்ணுவோர் இருந்தாலும் அவர்களுக்கு ஆசையிருந்தாலும் விற்போர் இல்லையெனில் உண்ணுவோர்க்கு ஏது ஊன்? 
(இந்த வாதம் குறிப்பாக தமிழ்நாட்டில் மதுபானங்கள்/சாராயம் விற்கும் தொழிலதிபர்களுக்கும் பொருந்தும் ஏனெனில் மக்கள் குறைக்க தொடங்கினால் நாங்கள் உற்பத்தியை குறைத்துவிடுவோம் என்று கூறும் இவர்கள். உற்பத்தி செய்யவில்லையென்றால் மக்கள் குடிக்கமாட்டார்கள் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்)

2) திருவள்ளுவர் அங்கு உணவு/தோல் தொடர் சங்கிலியில் நேரடிப் பயனாளர்களை சாடினார். இங்கு மறைமுக பயனாளர்களை சாடுகிறார். (என்ன சொல்கிறீர்கள்?)  பிறர் உயிர்களை கொலைசெய்பவன் பொழுதுபோக்கிற்காகவா கொலை செய்கிறான்? இல்லையே. அவன் ஊனையும் தோலையும் விற்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட அளவு இலாபத்திற்காக அதில் இருந்து வரும் மாத சம்பளத்திற்காக தான் செய்கிறான். ஊரில் வேறுத் தொழில் இல்லையா என்ன? ஆதலால் கொலைச்செய்து தொழில்புரிவன் ஒருவிதத்தில் பயனாளன். ஆதலால் அவனுக்கும் கொலை செய்தலில் சரிசமமான பங்கு உண்டு. அவனுக்கு மட்டும் இன்றி இந்தத் தொடர் சங்கிலியில் இடையில் வாங்கி விற்கும் இடைத்தரகர்களுக்கும் இதில் பங்கு உண்டு என்பதையும் நாம் விளங்கிக்கொள்ளலாம். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கொலை வினையர் ஆகிய மாக்கள் - கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர், புன்மை தெரிவார் அகத்துப் புலைவினையர் - அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர். (கொலை வினையர் என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள் பொல்லாமையை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர். இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்.
மு.வரதராசனார் உரை
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

சாலமன் பாப்பையா உரை
கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.

மக்கள் - மாக்கள் - மாக்காள் - மாக்கட்கு! (தகவல் மட்டுமே)
"மாக்கள்" என்னும் சொல் பழந்தமிழில் பரவலாக வழங்கி இப்பொழுது வழக்கு வீழ்ந்துவிட்டது. மேற்போக்காக காண்கையில் இது "ஆ" என்பதற்குரிய பன்மை வடிவமான "ஆக்கள்" என்பது போன்று விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல்லான "மா" என்பதற்குரிய பன்மை வடிவம் போலத் தோன்றும். ஆனால் உண்மை அதுவன்று.

தொல்காப்பியத்தின் மூன்றாம் இயலான பொருளதிகாரத்தின் மரபியலில் சில சூத்திரங்கள் உயிர்களை ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் ஈறாக வகைப்படுத்திக் காட்டுதலை அறிஞர் பலரும் அறிவர். இச்சூத்திரங்களுள் ஐந்தறிவுடையன பற்றிய இளம்பூரணர் உரையில்,

"மாவும் புள்ளும் ஐயறிவினவே
 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே"

என்றுள்ளது. ஆனால் பேராசிரியரின் உரையில்,

"மாவும் மாக்களும் ஐயறிவினவே
 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே"

என அமைந்துள்ளது.

இவ்விருவர் பாடங்களுள் தொல்காப்பியரின் எண்ணப் போக்கிற்கு ஏற்புடையது யாதென்பது ஆராய்ச்சிக்குரியது.

உயிர்க்கூட்டத்தில் பறவையினத்திற்குரிய சிறப்பிடத்தை நன்குணர்ந்த தொல்காப்பியர், கருப்பொருள்களை வரிசைப்படுத்தும் பொழுது அதற்கு உரிய இடத்தினை அளிக்கத் தவறினாரல்லர்.

தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அன்னவை பிறவும் கருவென மொழிப - 20 - அகத்திணையியல்

என்பது அவர் திருவாக்கு. மாவையும் விலங்கையும் வெவ்வேறாக ஓதிய ஆசிரியர், தொடர்ந்து,

"எந்நில மருங்கின் பூவும் புள்ளும்
 அந்நில மருங்கின் வாரா வாயினும்
 வந்த நிலத்தின் பயத்த வாகும்"

எனச் சிறப்பு விதியும் வகுத்தார்.

இங்ஙனம் பறவையினத்திற்கு உரிய இடம் வகுத்த ஆசிரியர், உயிர்களை அவற்றின் அறிவிற்கு ஏற்ப வகைப்படுத்தும் பொழுது அவற்றைப் புறக்கணித்திருக்க வாய்ப்பு இல்லை. மேலும் "மா" என்பதனுள் புள்ளை அடக்கிக் கூறினார் என்பதும் அவர் கருத்திற்கு இசைந்ததன்று. எனவே, இளம்பூரணர் கொண்ட பாடமே சரியானது என்று முடிவு செய்தல் தவறாகாது.

மக்கள் என்பார் விலங்குகளினும் மேலானோர் என்பதும், அங்ஙனம் மேன்மையுறுதற்கு அடிப்படையாக அமைவது அவர்க்கு ஐந்தறிவிற்கும் மேலான மனவுணர்வு அமைந்திருத்தலே என்பதுமே தொல்காப்பியர் கருத்து. ஒன்றிரண்டு உறுப்புகள் குறைவாகவுடையோரை எப்பெயரால் அமைப்பது என்பது பற்றி ஆசிரியர் கருதினாரல்லர். அப்படிக் கருதியிருப்பின், சொல்லதிகாரத்தில்,

"உயர்திணையென்மனார் மக்கட்சுட்டே அஃறிணையென்மனார் அவரல் பிறவே"

என்று விளக்கிய இடத்திலேயே மாக்கள் பற்றியும் விளக்கியிருப்பார்.

ஆண் தன்மை மிகுந்த பெண்ணையும்
பெண் தன்மை மிகுந்த ஆணையும்
எவ்வாறு வழங்குதல் வேண்டும் என விளக்கிக் கூறிய இலக்கண ஆசிரியர்கள், "மாக்கள்" என்பார் விலங்கொடு சேர்ந்து எண்ணத்தக்கார் என விதி வகுக்காமை நோக்கத்தக்கது. பகுத்தறிவு இல்லாரை விலங்கொடு சேர்ந்து எண்ணவேண்டும் என்ற கருத்து, பேராசிரியர் காலத்தில் நிலவியதன் விளைவாகவே இப்பாட வேறுபாடு தோன்றியது என்று கருதலாம்! இவ்விடைக் காலக்கருத்தை தொல்காப்பியர் மீது திணித்தலை ஏற்க இயலாது.

நச்சினார்க்கினியர் பேரறிவாளர்.

தொல்காப்பியத்திற்கும் சங்க இலங்கியங்களுள்,
பத்துப்பாட்டு
கலித்தொகை
ஆகியவற்றுக்கும்
சீவகசிந்தாமணிக்கும்
உரை வகுத்த பெருமைக்குரியவர்.

அவருடைய உரைகளை நோக்கும் பொழுது அவர், "மாக்கள்" என்ற சொல்லுக்கு "மனவுணர்ச்சியில்லாதோர்" என்ற பேராசிரியரின் கருத்தினை முழுமையாக ஏற்றுக் கொண்டவர் என்பது புலப்படுகின்றது.

அவர் உரையின் சில பகுதிகள் வருமாறு:-

"தவம் செய் மாக்கள் தம்முடம்பு இடாது அதன் பயம் எய்திய அளவை மான" - மிக்க தவத்தைச் செய்கின்ற மாக்கள் தம்முடைய தவம் செய்த உடம்பைப் போகடாதேயிருந்து அத்தவத்தாற் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப. மக்களென்னாது மாக்களென்றார். வீடுபேறு குறியாது செல்வத்தைக் குறித்தலின்.

பொருநராற்றுப்படை (91-92).

"பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்" உரை:- அறிவில்லா தோருடைய வாழ்நாளை இத்துணையென்று அளந்தறியும் பொய்யாத காட்சியை உடையார். (மாக்கள் பொழுதளந்து அறியும் பொய்யாக் காண்கையர் எனச் சொற்களை இடம் மாற்றித் தம் விருப்பத்திற்கு இணங்கப் பொருள் தந்துள்ளார்). முல்லைப்பாட்டு (55).

"மாக்கள்" என்ற சொல் ஐந்தறிவுடையார்க்கே உரியது என்பதே நச்சினார்க்கினியரின் உறுதியான கோட்பாடகத் தெரிகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில்,
முழுவலிமாக்கள்
இரியல் மாக்கள்
மதனழி மாக்கள்
ஆகிய தொடர்களுக்கு விளக்கமளிக்கையில்,
முறையே நிரம்பிய மெய்வலியை உடைய மாக்கள்
கெடுதலை உடைய மாக்கள்
வலியழிந்த மாக்கள்
என்றே எழுதிச் செல்கின்றார்.

(நெடுநல். 32; பெரும். 432; மலைபடு 280).

மனிதர் அல்லது மாந்தர் என்று விளக்க இடமிருந்தும் அதனைத் தவிர்த்து "மாக்கள்" என்ற சொல்லையே உரையிலும் பயன்படுத்துகின்றார் மருதன் இளநாகனார்.

இடைக்காலத்து உரையாசிர்களாம் பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகியோரின் கருத்தினை, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பேராசிரியர் சிலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர் டாக்டர் உ.வே.சாமிநாதய்யராவார்.

பத்துப்பாட்டை, நச்சினார்க்கினியர் உரையுடன் வெளியிட்டு உதவிய ஐயரவர்கள் ஓர் அடிக்குறிப்பில் குறிப்பிட்டது வருமாறு:-

"ஐயறிவு - ஐம்பொறியுணர்வு; மாக்கள்
 மனனுணர்வின்றி ஐம்பொறியுணர்வையே
 உடைய விலங்கு போல்வார்;

இதனை,

"மாவும் மாக்களும் ஐயறிவினவே"

"மக்கள் தாமே ஆறறிவுயிரே"

என்னும் தொல்காப்பிய மரபியற் சூத்திரங்களானும் உணர்க! (பட்டினப்பாலை 217ம் அடிக்குரிய உரை)

இதனால், பேராசிரியரின் பாடத்தையே ஐயர் அவர்கள் ஏற்றுக்கொண்டமை புலப்படுகின்றது. அங்ஙனமே, "மாக்கள்" என்ற சொல்லுக்குப் பேராசிரியர் கொண்ட பொருளையே தாமும் மேற்கொண்டமையும் தெரிகின்றது.

ஐயரவர்கள் தாமே உரை வகுத்துவெளியிட்ட குறுந்தொகையில் பல செய்யுட்களில் மாக்கள் என்னும் சொல் இடம்பெறுகின்றது (6, 89,145,146,203,263,265,309). இவற்றுள், 6,89,145 ஆகிய செய்யுட்களின் உரையில் ஐயரவர்கள் பழைய உரையாசிரியர்களையொட்டிய விளக்கத்தையே கூறியுள்ளார்.

இந்நூலின் 145ம் செய்யுளில் வரும், "துயில்கண் மாக்களொடு" என்ற பகுதிக்கு, "துயிலுதல் பொருந்திய கண்களையுடைய அறிவற்ற மக்களோடு" என்று உரை வகுத்து, "மாக்களென்றது இங்கே தோழியை; தன் ஆற்றாமை அறியும் வன்மையில்லாமை பற்றி இங்ஙனம் கூறினாள்",என்று விளக்கமும் அளித்துள்ளார்.

ஐயரவர்கள், குறிப்பிட்ட சில இடங்களில் இப்படிச் சிறப்பு விளக்கங்கள் கொடுத்தாலும், ஏனைய இடங்களில் மாக்கள் என்பதற்கு "மனிதர்" என்றே பொருள் எழுதினார். மக்கள் என்றோ மனிதர் என்றோ எழுத மனமின்றி, மாக்கள் என்றே எழுதிய நச்சினார்க்கினியரிமிடருந்து இவ்வகையில் ஐயரவர்கள் வேறுபடுகிறார்.

இதனால் அறிவதாவது,

மாக்கள் என்ற சொல் பொதுவாக மக்கள் என்ற பொருளிலேயே சான்றோரால் ஆளப்பட்டுள்ளது.

இது மக்கள் என்பதன் நீட்டல் விகாரமாகக் கொள்ளத்தக்கது.

பல நிலைகளையும் சார்ந்த மக்கள் குழுவினர் இச்சொல்லால் குறிக்கப்பட்டனர்.

தொல்காப்பியர் "மாக்கள்" என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இடைக்காலத்தில் ஒரு கருத்துக் குழுவினர் "மாக்களும்" என்ற சொல்லை, "புள்ளும்" என்ற சொல்லின் இடத்தில் புகுத்தினர் என்று கொள்ளலாம்.

சங்க நூல்களில் "மக்கள்" என்ற பொருளில் "மாக்கள்" என்ற வடிவம் 48 முறைகளும், மக்களைக் கொண்டது என்ற பொருளில் "மாக்கட்கு" என்ற வடிவம் இரு முறைகளும், மக்களை என்னும் விளிப்பொருள்பட "மாக்காள்" என்ற வடிவம் ஒரு முறையும் இடம் பெறுதலைக் காண்கிறோம்.

இக்கட்டுரையில் வற்புறுத்தப்பட்டவற்றை அறிஞர் உலகம் ஆய்ந்து ஏற்குமாக.

அ.தட்சிணாமூர்த்தி

நன்றி: தமிழ்மணி (தினமணி)

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்

குறள் 328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

ஆகும்  - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

பெரிது - பெரியது; மிகவும்.

எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும்.

சான்றோர்க்கு - அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

கொன்று கொல் கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

ஆகும்  - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

ஆக்கம்  - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.
கடை - (வி)குடை; சிலுப்பு; தயிர்கடை; பருப்புமுதலியனகடை; மரம்முதலியனகடை; தீக்கடை.

முழுப்பொருள்
ஒருவர் ஒரு உயிரைக்  கொலைச்  செய்து அதனால் மிகப் பெரிய நன்மையும் இன்பமும், செல்வமும் பெறுவார் என்றாலும் அப்பயனை சான்றோர் பெரிதாக கருத மாட்டார் கீழ்மையாகவே கருதுவார் ஏனெனில் அது கொலை செய்து (ஒரு பாவச்செயலினால்) வந்தது. கொலை செய்வது பிறர் உயிர்களுக்கு துன்பம் செய்வது. இன்னா செய்யாமை சொன்ன திருவள்ளுவர் பிறர் உயிர்களை கொலை செய்வதை பாவமெனவே கருதுவார். 

இது குறிப்பாக துறவறத்தில் இருப்போருக்கு பொருந்தும். ஏனேனில், இல்லறத்தில் இருப்போருக்கு வேண்டுமெனில் செல்வமும் இன்பமும் தேவையான ஒன்றாக இருக்கும். இல்லறத்தோர்க்கு துறப்பது அவசியம் இல்லை. துறப்பதை ஒரு பகுதியாக கடைபிடித்து அதன் பயனை அறுவடை செய்வர். அதில் தவறில்லை. 

ஆனால் துறவறத்தில் இருப்போர் பொருட்செல்வத்தை பெரிது என கருதக்கூடாது. நிலையில்லா செல்வம் துறப்பதற்கான ஒன்று. வீடுபேறு என்னும் செல்வம்/நன்மையே அவர்களுக்கு மேலான இலக்கு. கொலை செய்தல் கீழ்மையாகும். ஆதலால் துறவறத்தில் இருந்துக்கொண்டுக் கொலை செய்தால் வீடுபேறுக் கிட்டாது. 

அதனால் தான் வேள்விகள் செய்து தேவர்களை மகிழ்வித்து செல்வம் பெறலாம். ஆனால் அது இல்லறத்தாருக்கு இன்பம் தரும். ஆனால் துறவத்தார் பிற உயிர்களை வேள்வியின் பொருட்டு செய்தாலும் அவர் வீடுபேற்றினை அடைய முடியாது. மீண்டும் பிறவியெடுத்து இப்பிறவிப் பெருங்கடலில் நீந்தவேண்டுயிருக்கும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“....... நன்குணர்ந்தார்
என்பெறினுங் கொல்லார் இயைந்து” (சிறுபஞ்ச.47)

பரிமேலழகர் உரை
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம் பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும், சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை - துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை. (இன்பம் மிகும் செல்வமாவது, தாமும் தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும். பின்னும் பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் 'கடை' எனப்பட்டது. துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்குக் ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கியவாறாயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும் ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது. இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது.

மு.வரதராசனார் உரை
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

சாலமன் பாப்பையா உரை
வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

குறள் 320
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்
[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

எல்லாம் - முழுதும்.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

செய்தார் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

மேலவாம் - மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

செய்யார் - செய்யமாட்டார்கள் 

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

வேண்டுபவர்- விருப்பபடுவர், வேண்டுகின்றவர் 

முழுப்பொருள்
ஒருவருக்கு வரும் நோய்/துன்பம் எல்லாம் எதனால் வருகிறது தெரியுமா? அது அவர் செய்த குற்றங்களினால், பிறருக்கு செய்த துன்பத்தினால் வருவன. ஏனெனில், உயிராகிய (ஆன்மாவாகிய) நிலத்திலே வினையென்னும் வித்தை நட்டால் அவ்வினை தான் முளைக்கும், வேறென்ன முளைக்க முடியும்? ஆதலால் தனக்குத் துன்பத்தை/நோயினை வேண்டாதவர்கள்/விரும்பாதவர்கள் பிறருக்கு துன்பத்தையும் குற்றங்களையும் செய்யக்கூடாது. 

மூன்றுவகை துன்பங்களை பிறருக்கு கொடுப்பர் : 1) தனது தேவைக்காக கொடுப்பது 2) பகையின் காரணமாக கொடுப்பது 3) மனசோர்வினால் கொடுப்பது. இவை எவற்றையும் பிறருக்கு செய்யாதே. 

ஆதலால் நீ ஒருவருக்கும் துன்பம் செய்யாமல் இருக்கவேண்டும். யாரும் உனக்குப் பகை என்று தோன்றமாட்டார்கள். உனக்கு எந்தத் துன்பமும் வாராது. நீ யாரையும் கெடுக்காதே; உன்னை யாரும் கெடுக்க நினைக்க மாட்டார்கள். நல்லது செய்ய இயலவில்லை என்றாலும் தீயது செய்வதைத் தவிர்க்கவும். 

கீழ்க்கானும் குறளோடும் ஒப்பிட்டு இனைத்துப் பார்க்கலாம்


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் - இன்னாதன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம், நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார். ('உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளைவும் 'அதுவே', (சீவக. முத்தி 164) ஆகலின், நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்' என்றார். இது சொற்பொருள் பின்வருநிலை. இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இக்காலத்து நுகர்கின்ற துன்பமெல்லாம் முற்காலத்துப் பிறர்க்குத் துன்பம் செய்தார் மாட்டே யுளவாம்: ஆதலால் இக்காலத்துப் பிறர்க்கு துன்பத்தைச் செய்யார் வருங்காலத்துத் தமக்குத் துன்பம் வாராமையை வேண்டுபவர்.

மு.வரதராசனார் உரை
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

சாலமன் பாப்பையா உரை
செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.
அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?.

Thirukkural - Management
Even if someone hurts you, harms you, or damages you, you in turn do a good deed, a pleasant act, and a beneficial act to him. The intention of doing that is not to insult, humiliate, or make him feel ashamed of what he did but to show him that you are a person of humility. Responding positively to an insulting act is to satisfy your own self and make the other person know that you are a humble and wise person.

You need to be proactive to protect yourself from destruction. That is, if you do not want to be hurt or troubled by others, you will not hurt or trouble others assures Kural 320. The troubles you give to others will revisit you with more troubles. So stop troubling others.

Hurt comes to the hurtful; hence it is That those don’t hurt who do not want to be hurt. 

Natural justice is you get back what you give. The sayings ‘As above so below,’ ‘As within so without, and ‘If you sow wind, you will reap wind,’ are closely related to this thought. If you prefer to be at peace with yourself, you prefer to be at peace with others.

English Meaning - As I taught a kid - Rajesh
An illness is caused by himself and not by others. It is because those illness comes from the fact that the person did bad to others and created difficulties for them. Those difficulties take different forms and comes back to us in the form of illness. So, those who one want to be free from illness, one should not do bad to others. 
Also remember, if you don't like yourself that itself is an mental illness. We have already learnt that (த்ன்னைத்தான் காதலானாயின்) if you want to love yourself never every think or do bad things to others
Also, (நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்) discipline is seed for goodness and greatness. Bad discipline would always give difficulties and pain in life

Questions that I ask to the kid
Who is responsible for an illness / difficulties?

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

குறள் 319
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்
[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]

பொருள் 
பிறர்க்கு - iṟar   n. id. Outsiders, strangers;அன்னியர்

இன்னா  - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

முற்பகல் - பகற்பொழுதின்முற்பகுதி; முன்னாள்; முற்காலம்.

செய்யின் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

தமக்கு  - அவருக்கு, தனக்கு  

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

பிற்பகல் - பகற்பொழுதின்பின்பகுதி; பகலின் பின்பகுதி.

தாமே - தானாக 

வரும் - வரும் ; வந்து சேரும் 

முழுப்பொருள்
பிறருக்கு / பிறர் உயிர்களுக்கு நாம் ஒரு தீங்கினை(துன்பத்தினை) காலையில் இழைத்தால் நமக்கு ஒரு தீங்கு மாலையில் தானாக தேடி வரும். ஆதலால் பிறருக்கு தீங்கு செய்யாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

நாம் பிறருக்கு ஒரு தீங்குச் செய்து இருப்போம். அவர் நமக்கு அத்தீங்கை (அல்லது வேறொருத் தீங்கை) பதிலுக்குச் செய்வார் என்றில்லை (அவர் அறச்செல்வராக அல்லது பொறுமைவாய்ந்தவராக இருந்தால் பதிலுக்கு செய்யமாட்டார். அல்லது பதிலுக்கு அவர் நமக்கு செய்யக்கூடும் (செய்யும் வலிமை வாய்ந்தவர்) என்று நாம் அறிந்திருந்தால் நாமே அவருக்கு செய்யமாட்டோம்). நமக்கு வேறொருத் தீங்கு இயற்கையின் மூலமாகவோ அல்லது வேறொருவரின் மூலமாகவோ தானே வந்து சேரும். அதனால்தான் "தாமே  வரும்" என்று கூறினார் திருவள்ளுவர். 

மேலும் "குறள் 293 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்" என்ற குறளையும் இக்குறளுடன் பொருத்திப்பார்களாம். 

பிறருக்கு தீமை செய்வது என்றில்லை. பிறருக்காக அறத்தைப் பேசவேண்டிய இடத்தில அமைதியாக இருத்தலும் அது பிறருக்கு இழைக்கப்படும் தீமை. அது மனதில் விதையாக விழுந்து பின்பு மனசாட்சி கேள்விக்கேட்டு நம்மை கொல்லும். 

இங்கே நான் எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் சிறுகதைகள் தொகுதியில் இருந்து  பெருவலி [பெருவலி - 1, பெருவலி - 2] என்கிற  சிறுகதையில்  இருந்து நான் பெற்றுக் கொண்ட பாடத்தை ஒரு துணுக்காக அப்படியே கத்திரி போட்டு இங்கு சேர்த்துள்ளேன்.
[பெருவலி சிறுகதையில் இருந்து]’கபோதி, உனக்கெதுக்குடா முதுகெலும்பு ?. நீ நின்னு எரிஞ்சிருக்க வேண்டிய எடங்களிலே எல்லாம் குளுந்து கல்லா நின்ன கோழை தானேடா? அன்னிக்கு உன் வாயிலே எழுந்த சாபத்தையெல்லாம் துப்பாம உள்ளுக்குள்ள சேத்து வச்சிட்டே. எல்லாம் படிஞ்சு உன் முதுகெலும்பு உளுத்துப்போச்சு. உப்பு பட்ட இரும்பு மாதிரி துருப்பிடிச்சு தொங்கி போச்சு. இந்தா, என் முதுகெலும்பு ஒண்ணை ஒண்ணு கவ்விண்டிருக்கிற நூறு தேளு மாதிரி இருக்கு. நூறு கொடுக்கு. நூறு வெஷம்… என் மேலேயா தூக்கி வச்சிருக்கே இந்த பொற்கிரீடத்த? வெளையாடுறியா? கேலி பண்றியா? நான் பட்ட சிறுமைக்குமேலே இன்னும் சிறுமைப்பட்டு கூசி புழுவா மலமா இங்க நிக்கணும்னு நெனைக்கறியா?

[ராஜேஷ்]  நாம் அறச்சீற்றத்துடன் இருந்து இருக்க வேண்டிய சூழ்நிலைகளில் அறம் அற்று நமக்குள் அடக்கிக்கொண்டவையே, நம் மனசாட்சியாக நம்முள் இறங்கி வலியாக உருவெடுத்து, சிலகாலம் கழித்து நோயாக (புற்றுநோய்)  தாக்கி இருக்கிறது. அதுவே ஊழ். இக்குறள் "குறள் 380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்" என்ற குறளுடனும் பொருத்திப்பார்களாம்

இட்டார்க்கு இட்ட பயன் என்ற சொலவடை உண்டு.  பிறர்க்கின்னா செய்தலைத் தீமையென்பதை கலித்தொகைப் (62:8) பாடல் வரி, “பிறர்கின்னா செய்வது நன்றாமோ மற்று” காட்டுகிறது. அறநெறிச் சாரப்பாடல் (94) வரியும், “பிறர்க்கின்னா செய்தலிற் பேதைமை இல்லை” என்கிறது.

பழமொழி நானூற்றுப் (130) பாடல், “முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் கண்டுவிடும்” என்ற வரிகள், சிலப்பதிகாரத்தில் (21:3-4) வரும், “முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூஉம் பெற்றியக் காண்” என்ற வரிகளை ஒத்திருப்பதைப் பார்க்கலாம். அவ்வையாரின் கொன்றை வேந்தனில் வரும் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்ற வரிகளும், “வினை விதைத்தவன் வினையறுப்பான், தினை விதைத்தவன் தினையறுப்பான்” என்னும் பழமொழியும் சொல்லும் கருத்தும், இக்குறளின் கருத்து. சிலப்பதிகாரத்தின் மையக்கருத்தாகச் சொல்லப்படும் மூன்று வரிகளில், “உழ்வினை உறுத்துவந்து ஊட்டும்” என்பதும் இக்கருத்தைச் சொல்வதுதான்.

வள்ளலார் பெருமான் இப்பிறப்பில் தான் நிந்தையுறும் நோய்காட்பட்டதை எண்ணி வருந்திப் பாடுகையில், திருவொற்றியூரின் எழுத்தறியும் பெருமானாம் சிவபிரானைக் குறித்துப்பாடுவது இக்குறளின் கருத்து கவிகளின் மனதில் ஆழமாகப் பதிந்து இந்திய ஒழுக்கவியலின் ஒரு முக்கிய காரணியாக இருந்து வந்திருப்பதைக் காட்டுகிறது. அப்பாடல்:
சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை 
முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்காள் ஆக்காதே 
நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ 
எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
        (திருவருட்பா: 16:எழுத்தறியும் பெருமாள் மாலை, 723)


“முற்பகல் செய்வினை பிற்பகல் உறுநரின்
செற்றொருவரைச் செய்த தீமைகள்” (பெருங் 1.56:259)

“இம்மை யேவரும் திண்ணமே” (சுந்தரர்.புறம்பயம் 4)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் - துறந்தவர் பிறர்க்கு இன்னாதனவற்றை ஒரு பகலது முற்கூற்றின்கண் செய்வராயின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் - தமக்கு இன்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும். ('முற்பகல்', 'பிற்பகல்' என்பன பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. தவம் அழிதலின், அங்ஙனம் கடிதினும் எளிதினும் வரும். அதனால், அவை செய்யற்க என்பதாம். இனி 'தானே வரும்' என்பது பாடமாயின் அச்செயல் தானே தமக்கு இன்னாதனவாய் வரும் என உபசார வழக்காக்கி, ஆக்கம் வருவித்து உரைக்க.).

மணக்குடவர் உரை
பிறர்க்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின், தாமே பிற்பொழுது தமக்கு இன்னாதனவாய் வரும்: மற்றொருவன் செய்யாமல். இன்னாதன செய்ததனால் வருங் குற்றமென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.
அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?.

Thirukkural - Management - Relationship
The thought ‘Nature never forgives’ is in line with Kural 319. The exact translation of the Kural is that any harm or trouble you create to someone in the morning will 
revisit you in the evening.

Morning and evening need not be taken literally. They can refer to adulthood and old age.

The hurt you cause in the forenoon self-propelled
Will overtake yell in the afternoon.

The belief that you are the result of whatever you have attracted or whatever you have done is in line with this Kural. Whatever you do comes back to you. If you sow seeds of weed, you cannot expect fruit-bearing trees and vice versa. Though the Kural is used often to refer to negative actions, the Kural can also be used to refer to positive actions. We know that events in life boomerang. There is no exception as both positive and negative actions boomerang. We have  the ability to attract positive and healthy relationships. Keep doing all good things to your relationships and you will keep getting all positive relationships.

தன்னுயிர்ககு இன்னாமை தானறிவான் என்கொலோ

குறள் 318
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்
[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]

பொருள்
தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு..

உயிர்க்கு - உயிர் காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

இன்னாமை - இனியவாகாமை; துன்பம், துயரம் தீமை

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

அறிவான் - அறிந்து அதன் படி நடப்பவன் / ஒழுகுபவன்
அறிவான் - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

என்கொலோ - என்ன அது ?
கொல் - A particle implying doubt; frequently interrogative or connected with inter rogative forms--as in காணார்கொல், will they not see--ஐயக்கிளவி

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு

உயிர்க்கு - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

மன்னுயிர் - நிலைபெற்றஉயிர்; விலங்குச்சாதி; மானிடச்சாதி; ஆன்மா.

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
திருவள்ளுவர் நம்மைப் பார்த்து இப்படிக் கேட்டிக்கிறார்:: உனக்கு ஒரு துன்பம் வந்த பொழுது நீ துடித்தாய். பிறர் உனக்கு கெடுதல் செய்தாலோ அல்லது வஞ்சம் இழைத்தாலோ நீ வருந்தினாய். முன்னர் நூல்கள் மூலம் பிறருக்கு துன்பம் செய்யக்கூடாது என்று படித்திருக்கிறாய்/அறிந்திருப்பாய் (நன்கு கற்று இருந்தால் உணர்ந்தும் இருந்திருக்க வேண்டும்), இப்பொழுது அனுபவத்தின் மூலமும் துன்பத்தால் வரும் இன்னல்களை நேரடியாகவே உணர்ந்துவிட்டாய், பின்னர் ஏன் நீ பிறருக்கு / பிறர் உயிர்களுக்கு துன்பத்தை செய்கிறாய்?  உனக்கு இது பாவமாக தெரியவில்லையா? 

மேற்சொன்னவாறு நம்மை உசாவிய வள்ளுவர் இன்னொன்றை சொல்லவில்லை ஆனால் நாம் உணரலாம். தெரிந்தே செய்த தவறு என்றென்பதால் இது பாவமாகும் ஆதலால் இதற்கு பரிகாரமும் இல்லை.

பழமொழி நானூற்றுப்பாடல் ஒன்று இக்குறள் கருத்தை வழிமொழிவதை கீழுள்ள பாடலில் காணலாம்.
வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு
நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்
புனம்பொன் அவிர்சுணங்கி பூங்கொம்பர் அன்னாய்!
தனக்கின்னா இன்ன பிறர்க்கு’. (பழமொழி 266)

பாரதவெண்பாப் பாடலொன்று இக்கருத்தை கேள்வியாகக் கேட்காமல், அறமென்று வலியுறுத்துகிறது.
“இறப்ப நுமக்கடுத்த எவ்வநோய் யாவும்
பிறர்க்குமஃதாமென்று கொண்மின் – உறக்கருதி
எவ்வாறுமக்குறுதி யெண்ணுதீர்நீ ரெல்லார்க்கும்
அவ்வாறே யெண்ணல் அறம்”.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் - பிறர் செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்: மன் உயிர்க்கு இன்னா செயல்என் கொல் - நிலைபேறுடைய பிற உயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தான்? (இவ்வாறே இவை பிற உயிர்க்கும் இன்னா என்பது அனுமானத்தான் அறிந்து வைத்துச் செய்கின்ற இப்பாவம் கழுவப்படாமையின்,'இன்னாதான் யான் வருந்தப் பின்னே வந்து வருத்தும்' என்பது ஆகமத்தானும் அறிந்து ஒழியற்பாலன என்பது தோன்றத் 'தான்' என்றும் அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம் மயக்கம் என்பது தோன்ற 'என்கொலோ' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் பொதுவகையான் விலக்கப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னுயிர்க்கு உற்ற இன்னாமையை உயிரில்லாப் பொருள்கள் போல அறியாது கிடத்தலன்றித் தான் அறியுமவன், பின்னைப் பிறவுயிர்க்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதினைக் கருதியோ?.

மு.வரதராசனார் உரை
தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

குறள் 310
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

இறந்தார் - மிகுந்தோர் (சினத்தில் என்று சொல்லாமல் உணர்த்தப்படுகிறது)

இறந்தார் -  செத்தவர் 

அனையர் -  They are like. அன்னர்--அன்னார். Such persons

சினத்தைத் -  கோபம்; நெருப்பு; போர்; வெம்மை

துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.

துறந்தார் - துறந்தவர்கள்

துறந்தார் - துறவினர்கள்  

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்)

முழுப்பொருள்
அளவுக்கு அதிகமான சினத்தை கொண்டவர் என்றால் அவர் உயிரோடு இருந்தாலும் அவர் இறந்தவருக்கே ஒப்பாவார். இறந்த ஒரு உடல் பிணம் எனப்படும். பிணம் துர்நாற்றம் வீசும். கிருமிகளைதந்து அவ்விடத்தை அசுத்தமாக்கும். அதனால் அருகில் இருப்போரும் நோய்வாய்ப்படுவர். அதுவே அளவுக்கு அதிகமான சினத்தை கொண்டவர் அடையும் கீழ்மையாகும். 

அதுவே ஒருவர் கோபத்தை துறந்தார் என்றால் அவர் துறவறம் மேற்கொள்ள இல்லறத்தையும் மற்ற எல்லாவற்றையும் துறந்த துறந்தவர்களுக்கு ஒப்பானவர். துறந்தவர்கள் அழியும் உடலைப் பெற்றவர்களாயினும், நித்தியமாம் வீடுபேறினைப் பெறத்தக்கவர்களான துறவு நிலையிலுள்ளவர்கள். அதுவே சினத்தை தவிர்த்தவர் அடையும் உயர்ச்சியாகும். 

மேலும்: அஷோக் உரை

அருகே ரீங்கரித்து வந்தமர்ந்த குளவி “அதனினும் விடுதலை அச்சத்தின்பொருட்டு சேர்த்துவைத்த நஞ்சை துறப்பது” என்றது. திரும்பி அருகே வால்விடைக்க கைதூக்கி நடந்துசென்ற சிறிய தேளை நோக்கி சிரித்து “உன் கொடுக்கு விடைப்பு கொள்ளவேண்டியதில்லை, நண்பா. அந்நஞ்சை உதறிவிடு. அதன்பின் எஞ்சுவதென்னவோ அதுவே நீ” என்றது. சிலந்தி “ஆம், நஞ்சிலாத கொடுக்கு இன்னொரு காலென்றும் ஆகக்கூடும்” என்றது.

“ஆம், நஞ்சுக்கு இனி தேவை ஏதுமில்லை. நான் எவரையும் கொல்லவேண்டியதில்லை, எவரும் என்னை கொல்லவும்போவதில்லை. ஆனால் என் உடல் அமைந்திருப்பதே என் கொடுக்குமுனை நஞ்சை ஏந்திச்செல்லவும் விசையுடன் செலுத்தவும் உதவும் வடிவில்தான். நஞ்சில்லையேல் என் உடல்வடிவும் பொருளிழந்துவிடுகிறது” என்றது தேள். “ஆகவே இல்லா நஞ்சை நடிக்கிறேன். எனக்கு வேறுவழியில்லை.” சிலந்தி திகைப்புடன் நோக்க “வலையில்லாமல் வெறும்வெளியை நெய்துபார். அது பேருவகை அளிக்கும் பின்னற்கலை” என்றது பூச்சி.

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு-இமைக்கணம்-19 இல் ஒரு வரி இப்படி வருகிறது

பிறவியால் அடைந்த நஞ்சை மானுடர் எளிதில் விலக்க இயலாது. வாழ்வு அதை பெருக்கும். துறவும் தவமுமே அதை கடக்க உதவுபவை.” விதுரர் “அந்நஞ்சு கீழ்நிலையினருக்குரிய தளையா?” என்றார். இளைய யாதவர் “கீழ்நிலையினருக்கு தாழ்வுணர்ச்சியின் நஞ்சு. அதைவிடக் கொடிய நஞ்சு உயர்நிலையினருக்கு, மேட்டிமையின் நஞ்சு” என்றார்.

“கீழ்நிலையினர் வஞ்சம் பெருக்கிக்கொள்கிறார்கள். அது வஞ்சமென அவர்களுக்கு தெரியுமென்பதனால் அதை கடக்கலுமாகும். மேல்நிலையினர் அளியை பெருக்கிக்கொள்கிறார்கள். அந்த ஆணவம் அழுகி நாறும்போதும் நறுமணமென்றே அவர்களுக்கு தெரியும்” என்றார் இளைய யாதவர். “பிறவிநோயென உடனிருக்கும் இந்நஞ்சைக் கொல்லாமல் எவருக்கும் விடுதலை இல்லை, விதுரரே.” விதுரர் “ஆம்” என பெருமூச்சுவிட்டார்.

“ஓராயிரம் முறை ஒளிக்கப்பட்ட ஒன்று பெருவல்லமைகொண்ட படைக்கலமாகிறது” என்றார் இளைய யாதவர்.



பரிமேலழகர் உரை
இறந்தார் இறந்தார் அனையர் - சினத்தின் கண்ணே மிக்கார் உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பர், சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை - சினத்தைத் துறந்தார் சாதல் தன்மையராயினும், அதனை ஒழிந்தார் அளவினர். (மிக்க சினத்தை உடையார்க்கு ஞானம் எய்துதற்கு உரிய உயிர் நின்றதாயினும் , கலக்கத்தான் அஃது எய்தாமை ஒருதலையாகலின் அவரை வீடு பெற்றாரோடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அவ்விருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சினத்தை மிகுந்தார் செத்தாரோடு ஒப்பர், அதனை யொழிந்தார் எல்லாப் பொருளையுந் துறந்தாரோடு ஒப்பர், இது வெகுளாதார் பெரியரென்றது.

மு.வரதராசனார் உரை
சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

சாலமன் பாப்பையா உரை
பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who has hatred or more anger is considered as a dead person. Because a dead body decays, smells bad, spreads harmful germs. No healthy person would like to be with such a dead body. Similarly, a person who has anger and hatred spreads negativity, hatred to others. He/She thinks about destruction only. He is a harm to the society.

However, a person who gives up hatred/anger is like a sage. Because Hatred and anger is a prison and is a distraction too. Giving up hatred is a liberation. One can do greater things in liberation. 

Questions that I ask to the kid
1) An angry bird / a person with angry is known as ? A person who controls anger is known as? How giving hatred is beneficial?
2) Why is an angry bird known as a dead person?