குறள் 256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

[அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்]
பொருள்
தின்(னு)-தல் - tiṉ- 8 v. tr. [T. tinu, K.tin, M. tinnuka.] 1. To eat, feed; உண்ணுதல் இரும்பே ரொக்கலொடு தின்மென (புறநா. 150). 2.To chew; மெல்லுதல் உண்ணுஞ்சோறும் பருகுநீருந் தின்னும்வெற்றிலையும் (திவ். திருவாய். 6, 7, 1).3. To bite, gnash, as one's teeth; கடித்தல் தின்றுவாயை விழிவழித் தீயுக (கம்பரா. ஒற்றுக். 49).4. To eat away as white ants to consume
பொருட்டு - காரணம்; மதிப்பிற்குரியது; நிமித்தமாக
தினற்பொருட்டால் - உண்ணுவதை பொருட்டு ;உண்ணுவதற்காக
கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.
கொல்லாது - வதைக்காது; அழிக்காது ; வெட்டாது ; துன்பப்படுத்தாது
உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று
எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.
யாரும் - எவரும்
விலைப் - விற்பனைத்தொகை; விற்கை; மதிப்பு.
பொருட்டால் - பொருட்டு - காரணம்; மதிப்பிற்குரியது; நிமித்தமாக
ஊன் - தசை, இறைச்சி; கொழுப்பு; உடம்பு.
தருதல் - கொடை.
தருவார் - கொடுப்பார்
இல் - இல்லை; இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.
முழுப்பொருள்
மாமிச உணவை உண்ணுவதற்காக இவ்வுலகில் மக்கள் இல்லையென்றால் மாமிச உணவை விற்பதற்கும் இவ்வுலகில் மக்கள் இருக்க மாட்டார்கள். ஆதலால் உயிரினங்களை கொலை செய்வதும் தவிர்க்கப்படும்.
மாமிச உணவு உண்பதற்காக பிறர் உயிர்களை கொல்லாதே என்கிறோம். ஆனால் மாமிச உணவு உண்பவர்கள் கூறும் காரணம் : கொலையை நான் செய்வது இல்லை. விற்பனையாளர்கள் கொலை செய்கிறார்கள். நான் வெறுமென வாங்கி உண்கிறேன் என்பர். காரணம் தான் பிழைக்கு அடிப்படையையே தவிர. காரியம் இல்லை. காரியம் கொலை செய்தல் ஆனால் காரணம் மாமிச உணவு உண்ணுதல். ஆதலால் விலங்குகளை கொலை செய்பவனுக்கு பாவம் இல்லை அதனை உண்பவன் உனக்கே பாவம்.
"கொன்னால் பாவம் தின்னா போச்சு" என்கிற பசப்பு வார்த்தைகள் பொருந்தாது.
தமிழ் திரைப்படம் மகாநதியில் ஒரு காட்சி வரும். கதாநாயகன் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் கதாபாத்திரத்தின் மகளை மிக இளவயதில் பாலியல் வன்கொடுமை / பலாத்காரம் செய்தவரை பழிவாங்க செல்வார். அப்பொழுது அந்த நபர் கூறுவார் தனது உதவியாளர் தான் உன் மகளை எனக்கு விற்பனை செய்தார் (வசனம்: "இதெல்லாம் supply பண்றது தனுஷ். நீ வேணும்னா அவனை பழி வாங்கிக்கோ" என்பார்). நான் வெறுமென அனுபவித்தேன் என்று. அதற்கு கதாநாயகன் (நடிகர் கமல்) கூறுவார் - அவன் வெறும் supplier (விற்பனையாளன்) நீ தான் டா demand (என்று) (வசனம் "தனுஷ் கசாப் கடை வெச்சு இருக்கிறவன் நீ தான் பிள்ளை கறி வேணும் என்று கேக்கிறவன். அவன் supplier நீ தான் டா demand"). இக்குறள் ஊன் உண்ணுதலுக்கு மட்டும் அல்ல இது போல் வன்கொடுமை தொழிலுக்கும் பொருந்தும். அதேப்போல அத்திரைப்படத்தின் காட்சி ஊன் உண்ணுதலுக்கும் பொருந்தும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
தினற்பொருட்டால் உலகு கொல்லாது எனின் - பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின், விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும் இல் - பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ('உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது. பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், 'தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை' என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.).
மணக்குடவர் உரை
தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின், விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லை. இது கொன்று தின்னாது விலைக்குக்கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை யென்றார்க்கு அதனாலுங் கொலைப்பாவம் வருமென்று கூறிற்று.
மு.வரதராசனார் உரை
புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.
சாலமன் பாப்பையா உரை
தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.

(மகாநதி திரைப்பட காட்சி : இதெல்லாம் supply பண்றது தனுஷ். நீ வேணும்னா அவனை பழி வாங்கிக்கோ)
(மகாநதி திரைப்பட காட்சி :தனுஷ் கசாப் கடை வெச்சு இருக்கிறவன் நீ தான் பிள்ளை கறி வேணும் என்று கேக்கிறவன். அவன் supplier நீ தான் டா demand )
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
தினற்பொருட்டால் உலகு கொல்லாது எனின் - பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின், விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும் இல் - பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ('உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது. பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், 'தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை' என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.).
மணக்குடவர் உரை
தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின், விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லை. இது கொன்று தின்னாது விலைக்குக்கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை யென்றார்க்கு அதனாலுங் கொலைப்பாவம் வருமென்று கூறிற்று.
மு.வரதராசனார் உரை
புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.
சாலமன் பாப்பையா உரை
தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.
No comments:
Post a Comment