Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

 

குறள் 719
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]

பொருள்
புல் - தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு; கபிலநிறம்; புணர்ச்சி; சிவல்; புலி.

புல்லியர் - pulliyr   s. A tribe of low people as புலையர்; [ex புல்.] (p.)

அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

பொச்சாப்பு - மறதி; பொல்லாங்கு; குற்றம்; உறுதியின்றி மனம் நெகிழ்ந்திருக்கை

பொச்சாந்தும் - பொச்சா-த்தல் - poccā-   12 v. tr. 1. Toforget; மறத்தல். புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க (குறள், 719). 2. To deride, ridicule; இகழ்தல். கொடையளிக்கட் பொச்சாவார் (ஆசாரக். 67)

சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்

சொல்லற்க - சொல்லாதே 

நல் - நல்ல; வறுமை.

அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

நன்கு - அழகு; மிகுதி; நல்லது; நலம்; நிலைபேறு; நன்னிமித்தம்; மகிழ்ச்சி; மிகவும்; இதம்.

செலச்சொல்லித் - செலுத்தல்
செலுத்தல் - செல்¹(லு)-தல்
-> To be effective; to have influence;பயனுறுதல். செல்வர்வாய்ச் சொற்செல்லும் (நாலடி,115).
-> To last, endure, exist; நிலைத்திருத்தல்.செல்லாதவ் விலங்கை வேந்தர்க் கரசென (கம்பரா.இந்திரசித். 56)
எண்பொருளவாகச் செலச்சொல்லி -> Communicating your thoughts in language easy to be understood; சொல்ல வேண்டிய சிந்தனைகளை / கற்றவற்றை எளிமையாக மனதில் புரிந்துக்கொள்ளும் வகையில் சொல்லுதல்
செலச் - செறிவாக, மனம் உணரும் அளவிற்கு
சொல்லுவார் - உரைப்பவர், சொல்லுபவர், விளுக்குபவர்

முழுப்பொருள்
நூல்கள் பல கற்ற சான்றோர்கள் பெரியோர்கள் கூடிய அவையில் நன்றாக கசடற செறிவாக உரைக்கக்கூடியவர்கள் நல்ல பேச்சாளர்கள். அவர்கள் கற்றோர்கள். அவர்கள் பல நூல்களை நுணுகி கற்று உணர்ந்தவர்கள். அவர்களின் சிறப்பு அவர்கள் அவையில் பேசியதில் தெரியும். அத்தகைய கற்றோர்கள் அறிவில்லாத கீழோர்கள் உள்ள அவையில் மறந்தும்கூட பேசமாட்டார்கள். 

கீழோர் / அறிவற்றோர் அவையில் கற்றார்ப்போல் பேசுவதில் பயன் என்ன? கீழோர் அவையில் பேசியதனால் நாம் கற்றவர்கள் ஆகிவிட மாட்டோம். 

ஆதலால் எப்படி பேசுகிறோம் என்பதைப் போல எந்த அவையில்பேசுகிறோம் என்பதும் பேசுகிறவரின் சிறப்பை பறைசாற்றும். 

ஏன் கீழோர் அவையில் பேசமாட்டார்கள்?
1. கீழோர்கள் நாம் பேசுபவற்றை உள்வாங்க மாட்டார்கள். நேரம் வீணாகும். ஆற்றல் வீணாகும்
2. கீழோர்கள் செறிவன பேசுக்களை கேட்கும் திறனற்றவர்கள்.
3. கீழோர்கள் வெட்டி விவாதம் செய்து கற்றோரை கீழ் இறக்குவர். 
4. கீழோர்கள் கற்றோரை மதிக்க மாட்டார்கள். அவமதிப்பார்கள். 
5. கீழோர் அவையில் பேசியதனால் நாம் கற்றவர்கள் ஆகிவிட மாட்டோம். கற்றோர் அவையில் பேசினால் தான் நாம் கற்றோர். 

ஆதலால் புல்லறிவாளர்களிடம் (அறிவில்லாதவர்களிடம்) பேசாதே.

கல்லாத மூடரிடம் பேசக்கூடாததைப் பழமொழிப் பாடலொன்று, கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத தில்லை ஒருவற்குஎன்கிறது. நாலடியார் பாடலொன்றும், கைஞானம் கொண்டொழுகும் காரறிவாளர்முன் சொல்ஞானம் சோர விடல் என்கிறது. கைஞானம் என்பது சிறுமை காட்டும் அறிவு என்பதாகும்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்லுதற்குரியார்; புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - அவையறியாத புல்லர் இருந்த அவைக்கண் அவற்றை மறந்தும் சொல்லாதொழிக. (சொல்லின், தம் அவையறியாமையை நோக்கி நல்லவையும், பொருளறியாமையால் புல்லவைதானும் இகழ்தலின், இரண்டு அவைக்கும் ஆகார் என்பது கருதிப் 'பொச்சாந்தும் சொல்லற்க' என்றார்.).

மணக்குடவர் உரை
புல்லியவரிருந்த அவையின்கண் மறந்துஞ் சொல்லா தொழிக: நல்லவரிருந்த அவையின்கண் நல்லதனை இசையச் சொல்லவல்லார்.

மு.வரதராசனார் உரை
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை
நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா.

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

 

குறள் 717
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கற்று - கற்றுக்கொள்ளுதல் - பயிலுதல்

அறிதல் - உணர்தல் , நினைத்தல் , மதித்தல்
அறிந்தார் - கற்றவர்கள்,

கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி.

விளங்கும்விளங்கு - viḷaṅku   n. Lesser galangal.See சிற்றரத்தை, 1. (மலை.)
விளங்குதாரணத்ததாகுதல் viḷaṅku-tāraṇattatākutal, n. விளங்கு- + உதாரணம் + ஆகு-+. Being furnished with appropriate illustrations, one of ten nūl-aḻaku, q.v.; நூலழகு பத்தனுள் மேற்கோள் எளிதாக விளங்குவது. (நன். 13.)

விளங்கு-தல் - viḷaṅku-   5 v. [T. veḷuṅgu,K. beḷagu, M. viḷaṅṅuga.] intr. 1. Toshine; பிரகாசித்தல். பகல்விளங்குதியாற் பல்கதிர்விரித்தே (புறநா. 8). 2. To become renowned,illustrious; பிரசித்தமாதல். அவன் பெயர் எங்கும்

கசடு - குற்றம்; அழுக்கு; மாசு; தழும்பு; ஐயம்திரிபுகளாகியகுற்றங்கள்; வடு; அடிமண்டி; குறைவு.

அறச் -  அறவே, அற்ற, அல்லாத, இல்லாமல்

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.

வல்லார் - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர்.

அகத்து அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

முழுப்பொருள்
கற்றோர் சான்றோர் கூடிய அவையில் கசடற (குற்றங்கள், குறைகள்) அல்லாமால் சரியான சொற்களில் தெளிவாக பேசும் பொழுது பல நூல்களை நுணுகி கற்று அறிந்து உணர்ந்தோரின் ஆழ்ந்த நுண்ணறிவு புலப்படும்.  

ஔவையாரின் மூதுரைப் பாடலை மீண்டும் நினைவு கூறுவோம். இப்பாடல் கற்றோரையும், கல்லாதவரையும் யார் விரும்புவர் என்பதைச் சொல்லும் பாடல்.

நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கசடு அறச் சொல் தெரிதல் வல்லாரகத்து - வழுப்படாமல் சொற்களை ஆராய்தல் வல்லார் அவைக்கண் சொல்லின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் - பல நூல்களையும் கற்று அவற்றின் ஆய பயனை அறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும். ('சொல்லின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஆண்டே சொல்லுக என்பதாம்.).

மணக்குடவர் உரை
நூல்களைக்கற்று அதன்பயனும் அறிந்துள்ளாரது கல்வி விளங்காநிற்கும்; குற்றமறச் சொற்களைச் சொல்லவல்லார் முன்னர்ச் சொல்லின். இது கல்வியின் விழுப்பம் கற்றார்க்கல்லது பிறர்க்கு அறிதலரிதென்றது.

மு.வரதராசனார் உரை
குற்றமறச்சொற்களை ஆராயவதில் வல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.

சாலமன் பாப்பையா உரை
சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்.

English Meaning - As I taught a kid - Rajesh
"A knowledgeable person's knowledge will be evident in the choice of words, which is appropriate and devoid of confusions/errors/possible-misinterpretations, providing clarity to the listeners in the hall. From those words, one can understand that the speaker has deeply read and analyzed many books to gain such a profound knowledge.

This thirukkural emphasis, reading and analyzing books, knowing the audience, choosing the right words, not providing room for misinterpretations and providing clarity to the audience. "

Questions that I ask to the kid
What can you infer by listening to a speaker?

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்

 

குறள் 716
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]

பொருள்
ஆற்றின்  - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

நிலைதளர்ந்தல் - நிலைகுலை-தல் - nilai-kulai-   v. intr. id. +.1. To be ruined in circumstances; நிலைமைதவறுதல். 2. To swerve from the path of virtue;நெறிவழுவுதல். 3. To be discouraged; to loseself-command; to be disconcerted, perplexed;தயங்குதல். 4. To lose hold; to be unstrung நிலைமை தளர்தல் வச்சிரமுட்டிதன் னிலைகுலைந்துவிழுதலின் (கம்பரா. முதற்போர். 55). 5. To berouted, as an army; சிதறுண்ணுதல்.  

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை
அற்றே - அத்தமையானது, அப்படியானால்

வியன் - வானம்; பெருமை; சிறப்பு; வியப்பு; அகலம்; எண்ணின்ஒற்றை.

புலம் - வயல்; இடம்; திக்கு; மேட்டுநிலம்; பொறி; பொறியுணர்வு; அறிவு; கூர்மதி; துப்பு; நூல்; வேதம்.

ஏற்று - (வி)எழும்பு; உணர்த்து; பாரமேற்று; உள்ளேற்று; கற்பி; புகழ்.

உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

உணர்வார்ப் - உணர்ந்து (அதன் படி நடப்பவர்)

முன்னர் - முன்பு; முற்காலத்தில்.

இழுக்கு -  குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு

முழுப்பொருள்
பலதுறைகளில் இருந்து பலதரப்பட்ட நூல்களைக் கேட்டு உணரும் கூர்மதி உடைய பலர் கூடியுள்ள அவையில் ஒருவர் தவறாக பேசினால் அது குற்றாமாகும். அதனால் அவர் சொல்லால் சிறுமைப்படுத்தபடுவார். அது மேலான நெறியிலிருந்து நிலைதவறி சிதறி விழுவதைப் போல ஆகும்.

ஒழுக்க நிலைப்பாட்டில் நின்றவரின் மாண்பு அது பிறழ்ந்தபோது தாழுதல் எவ்வளவு இழிவாகுமோ, அந்த அளவுக்கு இழிவு என்று சொல்லி, அவையறியாப் பேசுதலின் இழிவை வலிமையாகச் சொல்லுகிறார் வள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆற்றின் நிலை தளர்ந்தற்று - வீடு எய்தற்பொருட்டு நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தாலொக்கும்; வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - அகன்ற நூற்பொருள்களை உட்கொண்டு அவற்றின் மெய்ம்மையை உணரவல்லார் அவைக்கண் வல்லானொருவன் சொல் இழுக்குப்படுதல். (நிலை தளர்ந்து வீழ்தல் 'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும்' (குறள்¢.24) காத்தொழுகியான்,பின் இழுக்கிக் கூடா ஒழுக்கத்தினால் பயன் இழத்தலே அன்றி இகழவும்படும் என்பதாம். இதனான் அதன்கண் இழுக்கியவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒரு நெறியின்கண் நின்றார் அந்நிலைமை குலைந்தாற் போல இகழப்படும், அகன்ற கல்வியைக் கேட்டறியவல்லார் முன்னர்த் தப்புதல். இது தப்புதல் வாராமற் சொல்லல் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை
பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்.

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

 

குறள் 709
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்
[பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்]

பொருள் 
பகைமையும் பகைமை - எதிர்ப்பு

கேண்மையும் - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

உரைக்கும் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்

கண்ணின் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

வகைமை - வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

உணர்வார்ப் - உணர்ந்து (அதன் படி நடப்பவர்)

பெறின் பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள் 
ஒருவர் பகையுணர்வுடன் இருக்கிறாரா பேசுகிறாரா அல்லாது நட்புணர்வுடன் இருக்கிறாரா பேசுகிறாரா என்பதை ஒருவருடைய கண்கள் உரைக்கும். மனதில் இருப்பதை உரைக்கும் அவ்வலிமை கண்களுக்கு உண்டு. ஆதலால் கண்களின் இயல்பறிந்து அகமொழியின் கூறுபாடு தன்மை அறிந்து கண்களின் வேறுபாடறிந்து ஒருவரால் உணர முடியும். அவ்வாறு கண்களின் குறிப்பறிய உணரக்கூடியவரைப் பெற்றால் ஒரு அரசருக்கு மிக ஏதுவாக இருக்கும் ஏனெனில் கண் கண்டு குறிப்பறிதல் நுண்ணியார்க்கு அல்லது பிறர்க்கு அரிது அன்று. 

நாலடியார் பாடலொன்று இவ்வாறு செல்கிறது.

ஆற்றும் துணையும் , அறிவினை உள்அடக்கி 
ஊற்றம் உரையார் உணர்வு உடையார், ஊற்றம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார்
குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு. (நாலடி 196)

இப்பாடலின் கருத்து இக்குறளின் கருத்தினை ஒட்டி வருவது. பேரறிவு கொண்டோர் ஒரு செயலைச் செய்து முடிக்கும் வரை அச்செயலை செய்து முடிக்கும் வழிமுறைகளை வெளிப்படுத்தார். எவருக்கும் தெரியாத வகையில் உள்ளத்தே வைத்து செயல் முடிப்பார். மேலும், பிறர் கொண்ட முயற்சிகளை அவரவருடைய முகம், கண் ஆகியவற்றின் அசைவுகளால் , ஆராய்ந்து அறியவல்ல நல்லறிவு உடையாரது குறிப்புக்குப் பணிந்து நடப்போர் உலகத்தவர். 

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”திருத்திய பளிக்கு வேதித் தெள்ளிய வேல்கள் என்னக்
கருத்தியல் புரைக்கும் உண்கண்” (கம்ப.ஊர்தேடு.107)

“வண்டுளர் அலங்கலாய் வஞ்சர் வாண்முகம்
கண்டதோர் பொழுதினில் தெரியும் கைதவம்
உண்டெனின் அஃதவர்க் கொளிக்க வொண்ணுமோ
விண்டவர் நம்புகல் மருவி வீழ்வரோ” (கம்ப.விபீடணன்.90)

பரிமேலழகர் உரை
கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் - வேந்தர் தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்- அவர்க்கு மனத்துக் கிடந்த பகைமையையும் ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலராயினும், அவர் கண்களே சொல்லும். (இறுதிக்கண் 'கண்' ஆகுபெயர். நோக்கு வேறுபாடாவன: வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல்: அவற்றை அவ்வக்குறிகளான் அறிதல்.).

மணக்குடவர் உரை
ஒருவனோடுள்ள பகைமையையும் நட்பையும் கண்கள் சொல்லும்; கண்ணினது வேறுபாட்டையறிவாரைப் பெறின். இது கண் கண்டு குறிப்பறிதல் நுண்ணியார்க்கல்லது பிறர்க்கரிதென்றது.

மு.வரதராசனார் உரை
கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும்.

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்

 

குறள் 710
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற
[பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்]

பொருள் 
நுண்ணியம் - நுண்மை - கூர்மை; நுட்பம்; மிகுதி; வேலைத்திறம்; அறிவுநுட்பம்; பொருள்நுட்பம்; சிற்றுண்டி; கமுக்கம்.
நுண்ணறிவு - நுண்ணியபுத்தி.

என்பார்  - என்று கூறுவார்

அளக்கும்  - அளத்தல் - அளவிடுதல்; வரையறுத்தல் பிரமாணம்கொண்டுஅறிதல்; கொடுத்தல் கலத்தல் எட்டுதல்:கருதுதல்; அளவளாவுதல் வீண்பேச்சுப்பேசுதல்.

கோல் - கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.

கால் - ஒருவினையெச்சவிகுதி
காணுங்கால் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்; பார்த்தல்

கண்  - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அல்லது - தீவினை; தவிர

இல்லை  - இல்லை, உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்

முழுப்பொருள் 
கூறிய அறிவை வேலைத்திறனை உடைவன் என்று கூறிக்கொள்பவரின் (கருதுபவரின்) முறையை ஆராய்ந்தால் அவர் பிறரை அளப்பதை (ஆராய்வதை) கண்டால் அதில் (பிறரின்-)கண்ணை தவிர வேறு ஏதும் இல்லை என்பது புலப்படும். கண்ணின் குறிப்பறிய நுண்ணிய அறிவும் திறமையும் பயிற்சியும் தேவை. 

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு (மகாபாரத்தில்) நாவல் தொடரில் பல இடங்களில் பல முக்கிய கதாபாத்திரங்கள் மற்றவர்களுடன் கண்களில் உரையாடுவத்ம் அதேப்போல் மற்றவர்களின் மனதை கண்களின் குறிப்புகளில் உணர்வதை காணலாம்.

மனைவி நல வேட்பு நாள்





இக்குறளை படிக்கும் பொழுது வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மன்றத்தில் நடைப்பெறும் “மனைவி நல வேட்பு நாள்” தான் என் ஞாபகத்திற்கு வருகிறது. கண்களின் வலிமையை இன்று நான் மேலும் அறிகிறேன். 

மனைவி நல வேட்பு நாள் நிகழ்வு - வேதாத்திரி மகரிஷி (மேற்காணும் யூட்யுப் தொடர்பில் காணலாம்)

மனைவி நல வேட்பு நாள் பொதுவாக வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனைவி அன்னை லோகாம்பாள் அவர்களின் பிறந்தநாளான ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று நடைப்பெறும். பொதுவாக கணவனின் ஆயுளை கூட்டும் விதமாக வரலட்சுமி விரதம், சுமங்கலிப் பூழை, காராடியான் நோன்பு என்று பல நிகழ்வுகள் உண்டு. ஆனால் மனைவிகளுக்கு? அதற்கு பதிலாகவே மனைவி நல வேட்பு நாள் துவங்கிற்று. கணவன் மனைவி உறவு இன்பமாய் அமையவேண்டுமென்பதே நோக்கமாகும். இது மனைவிகளை கணவன்களும் கணவன்களை மனைவிகளும் உளமார பாராட்ட நன்றி கூற தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க ஒரு வாய்ப்பாக ஒவ்வொரு ஆண்டும் அமையும். 

மனைவி நல வேட்பு நாளில் தம்பதியினர் கண்களின் மூலமாகவே அருட்காப்பு, காந்த அலை பரிமாற்றம், சங்கல்பம் செய்துகொள்வார்கள். மனைவிகளின் வலது கை மீது கணவர்கள் கையை வைத்து, வாழ்த்துகளைத் தெரிவித்து கனி மற்றும் மலர்களைப் பரிமாறி தங்களது அன்பை வெளிப்படுத்துவர். 

முதலாவதாக தம்பதிகளில் கணவன்மார்கள் தங்களது மனைவிக்கு காப்பு கயிற்றையும், பின்னர் மனைவிமார்கள் தங்களது கணவருக்கு காப்பு கயிற்றை கட்டுவர். 

இதையடுத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு கணவன், மனைவி இருவரும் தங்களது திருமணம் முடிந்த நாளில் இருந்து இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தனர். தம்பதியர் நேருக்கு நேர் அமர்ந்து, தங்கள் கைகளை சேர்த்து வைத்துக் கொண்டால் காந்த பரிமாற்றம் நடக்கும். 

தம்பதிகள் இருவரும் நேருக்கு நேர் உட்கார்ந்துக்கொண்டு துரியத்தில் தியானம் செய்வர். பின்பு, தங்கள் கண்களை திறந்ததுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்கள கண்களை பார்த்துக்கொள்வர். தங்கள் மனதில் உள்ளதை கண்களின் வழியாக பரிமாறிக்கொள்வர். ஒருவர் செய்த நன்மைக்கு நன்றி சொல்வர் பாரட்டுவர், தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கோருவர். அதேப்போல் மற்றவர் செய்த தவறுகளை மன்னிப்பர். 

இறுதியில் கணவன் மனைவிக்கு ஒரு பூவினை தருவார். பதிலுக்கு மனைவி ஒரு பழத்தினை கணவனுக்கு தருவார். இறுதியில் வாழ்க வளமுடன் என்று கூறி நிறைவு செய்வர். மொத்தமாக சுமார் 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் ஆகலாம்.

திருமணம் நடந்த நாள் முதல் கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் செய்தவற்றை நினைத்துப் பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும் என்பது இந்த விழாவின் சிறப்பம்சம். இந்த மனைவி நல வேட்பு விழா மூலம் வாழ்க்கை துணையாக இருக்கும் மனைவியை கணவன்மார்கள் பெருமை படுத்தும் விதமாக அமையும்.

கணவன் - மனைவி உறவு பற்றி வேதாத்திரி மகரிஷி
மனித மனம் ஒரு வியப்பானது. ஒரு பொருளை விரும்பினால், அதனை அடையாத முன்னம் அதனிடம் பல நன்மைகளையும், மேன்மைகளையும் கற்பித்துக் கொண்டு இன்புறுவது, அதை அடைந்த பின்னர் அதில் குறைகளை கற்பித்துக் கொண்டு சோர்வடைவது. இது விரிந்த நோக்கம் இல்லாதவர்களிடம் இயல்பாக இருக்கும். இந்த குறைக்கு நீங்கள் ஆளாக வேண்டாம். நல்லதையும் உயர்வையும் பாராட்டுங்கள். குறைகளை நுட்பமான முறையில் எடுத்து விளக்கவும், நிறைவு செய்யவும் முயலுங்கள். வாழ்வு வளம் பெரும்.

கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும் சிறப்புக் காணுமிடத்தும், உயர்வைக் கண்டும் பாராட்ட வேண்டியது அவசியம். இது அன்பையும், நட்பையும் பெருக்கும், உறுதிப்படுத்தும். இதனால் எப்போதுமே பாராட்டிக் கொண்டு இருக்க வேண்டுமென்பதல்ல. அப்படிச் செய்தால் அது முகத்துதியாக மதிப்புக் குறையும்.
.
ஒரு சில குடும்பத்தில் கணவனோ, மனைவியோ பலரால் பாராட்டப் படுபவராயும், புகழப் படுபவராயும் இருக்கலாம். ஊர் பாராட்டுவதைப் போல், தன் வாழ்க்கைத் துணைவரும் பாராட்ட வேண்டும் என எதிர்பார்பார்கள்.. இங்கு மிக நுணுக்கமான உண்மை அடங்கி இருக்கிறது. வாழ்க்கைத் துணைவரை ஊர் புகழும் போது அந்தப் புகழ்ச்சியில் தான் மகிழ்வுற்றுத் திளைத்திருப்பார்கள். அது அவருக்கு உரிய சொத்தாகி விடுகிறது. ஆதலால் தானும் புகழ வேண்டுமென்பது அர்த்தமற்றதாகி விடுகிறது. இந்த உண்மையை உணராதவர்கள், தன் வாழ்க்கைத் துணைவர் புகழவில்லையே என்று ஏக்கமும், வருத்தமும் அடைவார்கள். இது தேவையற்ற எண்ணம். ஊர் புகழும் போது மனைவியோ, கணவனோ புகழவில்லையே என்ற குறை எவரும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. அலட்சியம் செய்ததாக எடுத்துக் கொள்வதும் நல்லதல்ல.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


"குடும்ப உறுப்பினர் அனைவருக்குள்ளும்
உறுதியான, நெருக்கமான, உண்மையான
இனிய நட்பு நிலவ வேண்டும்".

"வாழ்க வளமுடன் என்று சொல்லும் போது
பிறர் உள்ளத்திலே நமது கருத்து நல்லதொரு
இனிய நட்புறவை வளர்க்கிறது".

"பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமையும்
பொறுத்தலும் மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்".

"நிறைவாக அமைதியோடு வெற்றி கண்டு வாழ
நிலஉலகில் மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்
குறைகாணும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல
குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்
உறைவிடமும் உணவும் பால்உறவும் மதிப்போடு
உழைத்துப்பெற்றளவு முறையோடு துய்க்க வேண்டும்
மறைபொருளாம் மெய்ப்பொருளை அறிய அருட்குருவை
மதித்துத் தவம் அறம் கற்று வாழ வேண்டும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் - யாம் நுண்ணறிவு உடையேம் என்றிருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்குங் கோலாவது; காணுங்கால் கண் அல்லது பிற இல்லை -ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை. (அறிவின் உண்மை அஃதுடையார்மேல் ஏற்றப்பட்டது. இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முதலாகப் பிறர் கருத்தளக்கும் அளவைகள் பல. அவையெல்லாம் முன் அறிந்த வழி அவரான் மறைக்கப்படும்; நோக்கம் மனத்தோடு கலத்தலான் ஆண்டு மறைக்கப்படாது என்பது பற்றி அதனையே பிரித்துக் கூறினார். இனி 'அலைக்குங்கோல்' என்று பாடம் ஓதி, 'நுண்ணியம்' என்று இருக்கும் அமைச்சரை அரசரலைக்குங் கோலாவது கண் என உரைத்து, தன் வெகுளி நோக்கால் அவர் வெகுடற்குறிப்பு அறிக என்பது கருத்தாக்குவாரும்உளர். இவை இரண்டு பாட்டானும் நுண்கருவி நோக்கு என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
யாம் நுண்ணிய அறிவையுடையே மென்றிருக்கும் அமைச்சர் பிறரை அளக்குங் கோலாவது ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை.

மு.வரதராசனார் உரை
யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை.