Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்


குறள் 728
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்
[பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பல்லவை - பலபொருள்; இழிவானபொருள்; இழிவு.

கற்றும் - கற்கை , படித்தல், நூல்கள் பயின்று

பயம் - அச்சம்; அச்சச்சுவை; வாவி; அமுதம்; பால்; நீர்; பலன்; வினைப்பயன்; பழம்; இன்பம்; அரசிறை; தன்மை.

இலரே - இல்லாதவர்கள்; மக்கள் இல்லை 

நல் - நல்ல; வறுமை; நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான.

அவை மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

நன்கு - அழகு; மிகுதி; நல்லது; நலம்; நிலைபேறு; நன்னிமித்தம்; மகிழ்ச்சி; மிகவும்; இதம்.

செலச் - செறிவாக, மனம் உணரும் அளவிற்கு
சொல்லுவார் - உரைப்பவர், சொல்லுபவர், விளுக்குபவர்

சொல்லாதார் - சொல்லாதவர்கள்

முழுப்பொருள் 
பலநூல்கள் கற்றும் நல்லவர்களும் அறிஞர்களும் சான்றோர்களும் கூடியுள்ள அவைதனில் தான் செறிவாக தெளிவுடன் உரைக்கத் தெரியாதவர்கள் பலநூல் வாசித்தும் பயனில்லை. அவர்களாலும் பயனில்லை. 

ஏன் பயனில்லை? 
ஏனெனில் நூல்களை தெளிவாக கற்றிருந்தால் அவையில் உரைக்க தன்னம்பிக்கை இருக்கும். நூல்களை கசடற கற்காத பொழுது நூல்களை கூறுபவற்றை உணராத பொழுதே தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். அல்லது தன்னம்பிக்கை இருப்பினும் நூல்களை சரிவர கற்கவில்லை என்றால் அவையில் நன்றாக உரைக்கமுடியாமல் சான்றோர்களின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் சிறுமைபடுவர். ஆதலால் சரியாக அவையில் நன்றாக பேச முடியாததற்கு காரணம் நூல்களை சரிவர கற்காதது, தான் கற்றவற்றில் உறுதியாக இல்லாதது. ஆதலால் பல நூல்களை வெறுமென வாசித்து (வாசிப்பதால்) ஒரு பயனுமில்லை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல்லவையுள் நன்கு செலச் சொல்லாதார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல சொற்பொருள்களைத் தம் அச்சத்தான் அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே - பல நூல்களைக் கற்றாராயினும் உலகிற்குப் பயன்படுதல் இலர். (அறிவார் முன் சொல்லாமையின் கல்வியுண்மை அறிவாரில்லை என்பதாம். இனிப் 'பயமிலர்' என்பதற்கு, 'கல்விப் பயனுடையரல்லர்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
பலநூல்களைக் கற்றாலும் ஒருபயனில்லாதவரே: நல்லவையின்கண் நன்றாக அவர்க்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார். இஃது அவையஞ்சுவார் கற்றகல்வி பிறர்க்குப் பயன்படாதென்றது.

மு.வரதராசனார் உரை
நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.

சாலமன் பாப்பையா உரை
நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.

Thirukkural - Management - Public Speaking - Fear of speaking 
Similar to Kural 727, Kural 728 also houses a simile. Though a person has read a lot, is considered learned but fearful and cannot put across his ideas and thoughts impressively in the assembly of learned and wise people, his knowledge is similar to a person who has fear in the middle of a battlefield. Therefore, a learned person’s responsibility is to connect fearlessly with his listeners and inspire them to action.

They are useless however learned
Who cannot impress the wise.

English Meaning - As I taught a kid - Rajesh
A person can read and learn hundreds and hundreds of books, magazines, materials.  However, great learning might serve no purpose when one shy's away (due to fear) from speaking compellingly / convincingly / confidently to a good learned audience. 

Some of the reasons why one has fear of public speaking is 1) Not learnt the subject deeply 2) Not prepared and practiced 3) Not having courage 4)  Not having practice of talking to a learned audience 5) Learning without clarifying doubts.

Questions that I ask to the kid
A learned person is not able to speak in front of a learned audience. Explain more.

No comments:

Post a Comment