குறள் 717
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)
கற்று - கற்றுக்கொள்ளுதல் - பயிலுதல்
அறிதல் - உணர்தல் , நினைத்தல் , மதித்தல்
அறிந்தார் - கற்றவர்கள்,
கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி.
விளங்கும் - விளங்கு - viḷaṅku n. Lesser galangal.See சிற்றரத்தை, 1. (மலை.)
விளங்குதாரணத்ததாகுதல் viḷaṅku-tāraṇattatākutal, n. விளங்கு- + உதாரணம் + ஆகு-+. Being furnished with appropriate illustrations, one of ten nūl-aḻaku, q.v.; நூலழகு பத்தனுள் மேற்கோள் எளிதாக விளங்குவது. (நன். 13.)
விளங்கு-தல் - viḷaṅku- 5 v. [T. veḷuṅgu,K. beḷagu, M. viḷaṅṅuga.] intr. 1. Toshine; பிரகாசித்தல். பகல்விளங்குதியாற் பல்கதிர்விரித்தே (புறநா. 8). 2. To become renowned,illustrious; பிரசித்தமாதல். அவன் பெயர் எங்கும்
கசடு - குற்றம்; அழுக்கு; மாசு; தழும்பு; ஐயம்திரிபுகளாகியகுற்றங்கள்; வடு; அடிமண்டி; குறைவு.
அறச் - அறவே, அற்ற, அல்லாத, இல்லாமல்
சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.
தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.
வல்லார் - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர்.
அகத்து - அகம் - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.
முழுப்பொருள்
கற்றோர் சான்றோர் கூடிய அவையில் கசடற (குற்றங்கள், குறைகள்) அல்லாமால் சரியான சொற்களில் தெளிவாக பேசும் பொழுது பல நூல்களை நுணுகி கற்று அறிந்து உணர்ந்தோரின் ஆழ்ந்த நுண்ணறிவு புலப்படும்.
ஔவையாரின் மூதுரைப் பாடலை மீண்டும் நினைவு கூறுவோம். இப்பாடல் கற்றோரையும், கல்லாதவரையும் யார் விரும்புவர் என்பதைச் சொல்லும் பாடல்.
நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
கசடு அறச் சொல் தெரிதல் வல்லாரகத்து - வழுப்படாமல் சொற்களை ஆராய்தல் வல்லார் அவைக்கண் சொல்லின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் - பல நூல்களையும் கற்று அவற்றின் ஆய பயனை அறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும். ('சொல்லின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஆண்டே சொல்லுக என்பதாம்.).
மணக்குடவர் உரை
நூல்களைக்கற்று அதன்பயனும் அறிந்துள்ளாரது கல்வி விளங்காநிற்கும்; குற்றமறச் சொற்களைச் சொல்லவல்லார் முன்னர்ச் சொல்லின். இது கல்வியின் விழுப்பம் கற்றார்க்கல்லது பிறர்க்கு அறிதலரிதென்றது.
மு.வரதராசனார் உரை
குற்றமறச்சொற்களை ஆராயவதில் வல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.
சாலமன் பாப்பையா உரை
சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்.
English Meaning - As I taught a kid - Rajesh
"A knowledgeable person's knowledge will be evident in the choice of words, which is appropriate and devoid of confusions/errors/possible-misinterpretations, providing clarity to the listeners in the hall. From those words, one can understand that the speaker has deeply read and analyzed many books to gain such a profound knowledge.
This thirukkural emphasis, reading and analyzing books, knowing the audience, choosing the right words, not providing room for misinterpretations and providing clarity to the audience. "
Questions that I ask to the kid
What can you infer by listening to a speaker?
No comments:
Post a Comment