Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

குறள் 327
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு..

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

நீப்பு - துறவு; பிரிவு.

நீப்பினும் - நீத்தல் - nī-   11 v. tr. 1. To separatefrom; பிரிதல் மணந்தினி நீயே னென்ற தெவன்கொல் (ஐங்குறு. 22). 2. To renounce, as theworld; துறத்தல் ஒழுக்கத்து நீத்தார் பெருமை(குறள், 21). 3. To put away, reject; தள்ளுதல் (W.) 4. To put to disgrace; இழித்தல் பிள்ளையேயாயினு நீத்துரையார் (ஆசாரக். 69). 5. Todespise, loathe; வெறுத்தல் ஊரேது வல்லதேதென்றா னீத்து (திருவால. 13, 15). 6. To abandon,leave; விடுதல் உயிர்நீப்பர் (குறள், 969).--intr.To be removed; நீங்குதல் மயிர்நீப்பின் வாழாக்கவரிமா (குறள், 969).  

அற்க - வேண்டாம்

செய்யற்க - செய்யாதே ; செய்ய வேண்டாம்

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.
பிறிது - வேறானது; மற்றது

இன் - இனிமை; இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

நீக்கும் - நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள்
பிற உயிர்களை (நீயோ அல்லது வேறு யாரோ உனக்காக) கொன்று அல்லது பிற உயிர்களை கொல்லக்கூடிய செயல்களை செய்து தான் உன் உயிரை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று வந்தாலும் பிற உயிர்களை கொல்லாதே. பிற உயிர்களை விட உன் உயிர் விலை உயர்ந்தது என்று இல்லை. எல்லா உயிரும் சமமே. ஆதலால் அவரவர்க்கு அவர் உயிர் இன்னுயிர். கொலை செய்தலை விட உயிர் நீத்தல் மேல். கொலை செய்யாமல் உயிர் நீத்தால் கொலை செய்யாத ஒரு பாவமும் பழியும் குறையும்.

ஆனால் உன்னை ஒருவன் கொலை செய்ய வந்தாலோ அல்லது ஒரு மாடு உன்னை முட்ட வந்தாலோ இது பொருந்தாது. இது துறவறத்தில் இருக்கும் துறவிகளுக்குத்தான் முக்கியமாக பொருந்தும். ஆனால் பொதுவாக பிற உயிர்களை கொல்லாது இருப்பது எல்லோருக்கும் பொருந்தும்.

இதே கருத்தை புலால் மறுத்தல் அதிகாரத்தில் (குறள் எண் 259) “அவி சொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று” என்று வள்ளுவரே சொல்லியிருப்பதை நினைவு கூறவேண்டும்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தன் உயிர் நீப்பினும் - அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பின் நீங்கிப் போமாயினும்: தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க - தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின் நீக்கும் தொழிலைச் செய்யற்க. ('தன்னை அது கொல்லினும் தான் அதனைக் கொல்லற்க' என்றது, பாவம் கொலையுண்டவழித் தேய்தலும், கொன்ற வழி வளர்தலும் நோக்கி. இனி 'தன் உயிர் நீப்பினும்' என்றதற்குச் 'சாந்தியாகச் செய்யாதவழித் தன்னுயிர் போமாயினும்' என்று உரைப்பாரும் உளர். பிறர் செய்தலும் ஆகாமையின் அஃது உரையன்மை அறிக.).

மணக்குடவர் உரை
தன்னுயிர் நீங்கினும் செய்யாதொழிக. தான் பிறிதொன்றி னுடைய இனிய வுயிரை விடுக்குந் தொழிலினை. உயிர்க்குக் கேடுவருங் காலத்து நோய்க்கு மருந்தாகக் கொல்லுதல் குற்றமன்று என்பார்க்கு இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை
தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.

English Meaning - As I taught a kid - Rajesh
For an individual, is there anything more precious and vital than his own life? No. Yet, even if one were to sacrifice one’s own life or even if one has to save his own life, do not commit the act of taking another life. Every life is equally valuable. No life is lesser than other. That is why Thiruvalluvar carefully uses the word இன்னுயிர். Also, we can understand that sacrificing one's own life is better than killing another life. At least one can stay away from the sin of killing another life. 

Questions that I ask to the kid
What should we not do even if we have to save our life?
When is our own sacrifice of life better?

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

குறள் 316
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்
[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]

பொருள்
இன்னாது - தீது; துன்பு
இன்னாத - இன்னாதா-தல் - துன்புறுதல்


இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

எனத் - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

உணர்ந்தவை - உணர்-தல் - uṇar-   4 v. [K. oṇar, M.uṇar.] tr. 1. To be conscious of; to know,make out, understand; அறிதல் முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3, 25). 2. To think, reflect,consider, contemplate; கருதுதல் (திவா.) 3. Toexamine, test, observe, scrutinize; ஆராய்தல் உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885). 4. Toexperience, as a sensation; அனுபவித்தல் ஐந்தினையு மொன்றொன்றாப் பார்த்துணர்வது (சி. போ 11,1, 1). 5. To realize, conceive, imagine; பாவித்தல் அண்டனை யான்மாவி லாய்ந்துணர (சி. போ 9, 2, 3).  

துன்னுதல் - பொருந்துதல்; மேவுதல்; அணுகுதல்; செறிதல்; செய்தல்; அடைதல்; ஆராய்தல்; தைத்தல்; உழுதல்.

துன்னாமை - மேவாது ; செய்யாது 

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
இது துன்பம்,  கீழ்மை, இச்செயலை செய்தால் பிறர் துன்பப்படுவர் என்று நீ உணர்ந்தாயென்றால் அந்த துன்பத்தை /செயலை பிறருக்கு  செய்யாதே. ஆதலால் ஒரு செயலை செய்யும் முன்  துன்பம்  விளைவிக்குமா என்று ஆராயவேண்டும். அவ்வாறு ஆராய்ந்தால் தான் ஒருவரால் அவ்வினை பயன் துன்பமா அல்லது இன்பமா என்று உணர முடியும். துன்பம் என்றால் பிறருக்கு செய்யாதே.

ஒப்புமை
பழமொழி (266) நானூறு இதை அழகான வரிகளில், 
வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு 
நினைத்துப் பிறர்பனிப்பச் செய்யாமை வேண்டும்” என்று சொல்கிறது.

”தன்னுயிர் தான்பரிந் தோம்பு மாறுபோல்
மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்” (சீவக.3107)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்னா எனத் தான் உணர்ந்தவை - இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை, பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும். (இன்பதுன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.).

மணக்குடவர் உரை
தான் இன்னாதன இவையென்று அறிந்தவற்றைப் பிறற்குச் செய்தலை மேவாமை வேண்டும். இஃது இன்னா செய்யாமை வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

குறள் 305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்
[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தன்னைத் - தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

காக்கின் - காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்.

சினம் - கோபம்; நெருப்பு; போர்; வெம்மை.

காக்க - காத்தல், பாதுகாத்தல், தடுத்தல்

காவாக்கால்கட்டுப்படுத்தாவிட்டால்

தன்னையே -  தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.

கொல்லும் - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

சினம்கோபம்; நெருப்பு; போர்; வெம்மை.

முழுப்பொருள்
தன்னை காத்துக்கொள்ள வேண்டும் என்றால் ஒருவன் அவனுடைய சினத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அப்படி ஒருவர் தன்னுடைய சினத்தை கட்டுப்படுத்தவில்லையென்றால் அச்சினம் அவரையே வதைக்கும் / துன்பப்படுத்தும். ஏன் எனில் சினம் என்பது நெருப்பு. அது நம்முள் வெம்மையினை உமிழ்ந்துக்கொண்டே இருக்கும். அது நமது மன நலத்தை சீர் குலைக்கும் மகிழ்ச்சி சென்றுவிடும். நமது உடலுக்கும் கேடு விளைவிக்கும். கோபம் நம்மை ஒரு பதற்ற நிலையில் வைக்கும். அந்த நெருப்பு தனிவதும் கடினம். மேலும் கோபம் நம் முடிவு எடுக்கும் ஆற்றலை குலைத்து விடும். நாம் விளைவுகளை எண்ணாது தவறான முடிவுகளை எடுப்போம்.

மருத்துவ ரீதியில் பார்த்தல், இதயம், மூளை, தசைகள்  உட்பட உடலின் பல பாகங்களை கோபம் தாக்கும்.  2011 ஆண்டு ஆய்வின் படி கோபம் டெஸ்டோடீரோன் (testoterone) சுரப்பு அதிகரிக்க, கார்டிசோல் (cortisol ) அமிலம் குறைய காரணமாய் அமையும். கோபத்தினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய துடிப்பு அதிகரிக்கும், அரிப்பு உண்டாகும் (tingling sensation), தசை பதைப்பு (muscle  tension) அதிகமாகும். இவையெல்லாம் ஒருவரை அழிக்கும் நோய்கள்.

இல்லறத்திற்கான பொருள் :
கோபத்தை முடிந்த அளவு கட்டுப்படுத்தினால் பின்னாட்களில் பல நன்மைகள் விளையும். காலம் ஒன்று போல் எப்பொழுதும் இருக்காது. இன்று உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது (அல்லது பிறருக்கு இல்லை அல்லது பிறர் பலகீனமாக இருக்கிறார்) என்பதற்காக பிறரை தாக்காதே. அவரிடம் கோபப்படாதே. ஏனெனில் பிறர் பலசாலி ஆகும் பொழுது அவன் உன் மீது பாயக்கூடும். 

ராமன் கிஷ்கிந்தையில் சுக்ரீவனுக்கு ஆட்சியை கொடுத்துவிட்டு பல புத்திமதிகளை (/உயர் தர்மங்களை) கூறுகிறான். அப்பொழுது ராமன் தான் செய்த தவறை வருந்தி ஒரு செய்தியை கூறுகிறான் "மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்; என்றல் சங்கையின்றி உணர்தி வாலி செய்கையால் சாலும்; இன்னும் அங்கவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல் எங்களில் காண்டி அன்றே! இதனின் வேறு உறுதி உண்டோ?". ஒரு மங்கையர்க்கு செய்த தீதால் எவ்வளவு பெரிய துன்பங்கள் எல்லோருக்கும் வந்தது என்பது உட்பொருள். மேலும் "சிறியர் என்றிகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்றிங் நெறியிகந்து யானோர் தீமை இழைத்தலான் உணர்ச்சி நீண்டு குறியதாம் மேனி யாய கூனியால் குவவுத் தோளாய் வெறியன எய்தி நொய்தின் வெந்துயர்க் கடலின் வீழ்ந்தேன்". பிறரை சின்னவன் என்று நினைத்து துன்பம் செய்யாதே. ஏனெனில் சிறியர் என நினைத்து நான்(நான்) ஒரு மங்கைக்கு செய்த துன்பத்தால் வந்த துன்பங்கள் அதிகம். அவள் பதிலுக்கு கொடுத்த துன்பம் நான் செய்த துன்பத்தை விட பல மடங்கு. ஆதலால் இப்படி பண்ணாதே என்கிறார் ராமன். 

கோபத்தை கடந்துவிட்டீர்கள் என்றால் நிம்மதி. இல்லையென்றால் நமக்கு நிம்மதி இருக்கவே இருக்காது. பிறருக்கு இரக்கப்பட்டு நீ கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும். முதலில் நீ உனக்கு இரக்கப்படு என்கிறார் திருவள்ளுவர். ஏனெனில் இக்கோபம் பிறரை தண்டிப்பதை விட உன்னை எதோ ஒரு நேரத்தில் தண்டித்துவிடும். 

ஔவையார் கூறுகிறார் "ஆறுவது சினம்". கோபம் வந்தால் ஆறப்பொடு. அதாவது கோபம் வந்த அதற்கு உடனே வினையாற்றாமல் ஒருவாரம் தள்ளிப்போடு. ஒரு வாரத்தில் மனம் சமநிலையை பெற்றுவிடும். நன்கு யோசித்து முடிவெடுப்பாய். 

துறவறத்திற்கான பொருள்:
துறவறத்தை ஒருவர் மேற்கொள்கிறார். அவர் வேண்டுவது வீடுபேறு. அவர் வேண்டுவது ஒரு சக்தி. அதை அவர் பலம் தவம் ஆற்றிப் பெறுகிறார். ஆனால் அப்படிப்பட்ட ஒரு துறவிக்கு கோபம் வந்தால் சாபம் கொடுக்கிறார். அது நிறைவேறுகிறது. விச்வாமித்ரர் பல தடவை தவம் செய்கிறார். பல தடவை கோபம் வந்து சாபம் கொடுகிறார். ஆதலால் அவர் தன் பலத்தை இழக்கிறார். ஆதலால் அவர் மறுபடியும் தவமும் செய்து அவர் ஆற்றலை நிறுவுகிறார். 

துறவறத்தில் சக்தி அடைய தன்னை வருத்தி விரதங்கள் பல இருந்து தவம் செய்ய வேண்டும். துறவியின் கோபத்தினால் இரண்டு தீமைகள் 1) சாபம் பலிக்கும் 2) ஆற்றல் குறையும். இதனால் துறவிக்கு பலனில்லை. மேலும் தீவினை செய்ததனால் அதற்கான வினைபயன் உன்னை வந்து சூழும். துறவு நிலையில் இருந்து மீண்டும் மனித நிலைக்கு வந்துவிடுவாய். ஆதலால் மனிதர்களுக்கு வரும் உலகியல் துன்பம் வரும். ஆதலால் கோபத்தை விட்டுவிடு என்கிறார் திருவள்ளுவர். 

கொல்வது என்றால் அழிவது மட்டும் பொருள் அல்ல. கடுமையாக துன்புறுத்தும், வதைக்கும் என்றும் பொருள் உண்டு. 

காத்தல் என்ற சொல்லுக்கு எதிர்பார்த்தால் என்ற பொருளும் உண்டு. பிறர் சினம் கொள்ள கூடாது என்று எதிர்பார்த்தால் தானும் சினம் கொள்ள கூடாது என்ற பொருளையும் நாம் கொள்ளலாம்.

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு’வில் பன்னிரு படைக்களத்தில் (அத்தியாதம் 50) அசிசுபாலனின் நிலையைப் பற்றி இப்படி கூறுகிறார்

”அந்த ஒருகணம் மயங்கி பிறிதொரு கணம் எழும் எனில் இறப்பே என உணர்ந்த உச்சப் புள்ளியில் விழித்தெழுந்து கொடுங்கனவில் இருந்து என தன்னைக் கிழித்தெடுத்து தன்னிலையை திரட்டிக் கொண்டான். அதை சினமென வஞ்சமென ஆக்கி மேலும்மேலும் வெறி கொள்ளச்செய்து உருவடையச்செய்தான். சினம் போல் திரட்டிக்கொள்ள எளிதானது பிறிதொன்றுமில்லை. நெடுநேரம் அச்சினமாகவே தன் அனைத்திருப்பையும் மாற்றினான். சினம் ஓர் எண்ணமாக, பின்பு ஒரு பொருண்மையாக, பின்பு பற்றி எரியும் வலியாக, பின்பு எரிதலின் பேருவகையாக மாறி எரிந்து எரிந்து அணைந்து சாம்பலாகிப் பறந்து ஒழிந்து மீண்டும் அதே வெறுமை.”


எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு’வில் பன்னிரு படைக்களத்தில்  இப்படி ஒரு வருகிறது.

சிசுபாலனின் உள்ளம் எங்கு செயல்படுகிறது என இங்கிருந்து நாம் எண்ணி முடிவெடுக்க முடியாது என்றே நானும் உணர்கிறேன். இளைய யாதவனுக்கெதிரான சினமே அவனை இயக்குகிறது என்பது நாம் அறிந்தது. அதற்கான ஊற்றுமுகம் என்ன என்று அவனே அறிந்திருக்கமாட்டான்.

“அவருள் எரிவது எது?” கர்ணன் “ஆழமான புண்கள் உடலில் இருந்து அனைத்து ஆற்றலையும் எடுத்துக்கொள்கின்றன என்பர் மருத்துவர்” என்றான். ஜயத்ரதன் நோக்க “வெளியே இருந்து உருவாகும் புண்களை உடல் நலப்படுத்திக்கொள்ளும், அதுவே உருவாக்கிக்கொள்ளும் புண்களே அதை கொல்பவை என்பார்கள்” என்று அவன் தொடர்ந்தான்.


சில கவிதைகள்
பெருமையும் கோபமும்
நேரம் தவறிக் கூவும் சேவல்கள் ! 
உங்கள் கல்லறை அழகுறுவது 
கல்லாலும் மரத்தாலும் அல்ல! 
சுயத்தைப் புதைப்பதாலேயே
- ஒரு சூஃபி கவிதை, மஸ்னவி

பொறுமை என்பது 
இன்பத்தின் திறவுகோல் ! 
அறிவின் கையும் காலும் 
அதுதான் !
இறைத்தூதர்களின் 
பலமும் ஒளியும் 
அதுதான் ! 
காற்றடித்தால் மலையாடுமா? 
அடிக்கும் காற்றுக்கெல்லாம் ஆடினால் 
அது வைக்கோல் !
- ஒரு சூஃபி கவிதை, மஸ்னவி


பரிமேலழகர் உரை
தன்னைத்தான் காக்கின் சினம் காக்க - தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச்சினம் வராமல் காக்க, காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின், அச்சினம் தன்னையே கெடுக்கும் கடுந்துன்பங்களை எய்துவிக்கும். ('வேண்டிய வேண்டியாங்கு எய்தல்' (குறள் 265) பயத்ததாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதலின் 'தன்னையே கொல்லும்' என்றார். 'கொல்லச் சுரப்பதாங் கீழ்' (நாலடி 279) என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.).

மணக்குடவர் உரை
ஒருவன் தன்னைத் தான் காக்கவேண்டுவனாயின், சினந்தோன்றாமற் காக்க; காவானாயின் சினம் தன்னையே கொல்லும், இஃது உயிர்க்கேடு வருமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.

சாலமன் பாப்பையா உரை
தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.

Thirukkural - Management - Managing Anger
There is a need to protect ourselves from anger. If you want to protect yourself from pain, suffering, disaster, and disappointment, contain your anger, guides Kural 305. If you do not contain your anger, your anger will contain you  As a result, you will lose health, harmony, and happiness.

Keep wrath at buy if you would guard yourself;
Unchecked it kills.

There is no midway to certain actions in Me. Either you act or you do not act. But if you do not 
act, you will be acted upon.

Similarly, either you control your anger or you will be controlled by your anger.

English Meaning - As I taught a kid - Rajesh
If one has to protect/save himself, then one should control his/her anger. controlling anger saves time which can be used on productive stuffs, reduces distractions, saves time, makes us stronger mentally, keeps us in harmony. Also controlling anger is essential to attain moksha

If one doesn't control his/her anger then that anger will give pain and kill him/her. Hatred/anger is a like a prison, it kills the equilibrium of happiness and harms us. Anger keeps one in a panic or anxious state. One would take decisions without thinking about consequences. Also medically speaking, anger triggers hormones responsible for stress, muscle tension which leads to diseases such as blood pressure, diabetes, etc

Questions that I ask to the kid
If you have to save/protect yourself, what should you do? What happens if one doesn't do that?

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

குறள் 297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
[அறத்துப்பால், துறவறவியல், வாய்மை]

பொருள்
பொய்யாமை - பொய்பேசாமை; நடுவுநிலைமை

பொய்யாமை - பொய்பேசாமை; நடுவுநிலைமை

பொய்-த்தல் - poy-   11 v. பொய். intr. 1.To fail, as a prediction or omen; to deceivehope, as clouds; தவறுதல். விண்ணின்று பொய்ப்பின் (குறள், 13). 2. To prove false; தம் செயலினின்று பின்வாங்குதல். பொய்த்தோர் வில்லிகள்போவாராம் (கம்பரா. சூளா. 41). 3. To go to ruin;கெடுதல். பொருளென்னும் பொய்யா விளக்கம்(குறள், 753).--tr. 1. To lie, utter falsehood;to make false pretences; பொய்யாகப் பேசுதல்.தன்னெஞ் சறிவது பொய்யற்க (குறள், 293). 2. Todeceive, cheat; வஞ்சித்தல். நின்றோடிப் பொய்த்தல் (நாலடி, 111).

பொய்யா - என்றும் தவறாத; என்றும் அணையாத

ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

பிற  - மற்றவை; ஓர்அசைச்சொல்.

செய்யாமை - செய்யாதிருத்தல்

செய்யாமை  - செய்யாதிருத்தல்

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
”பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்”

பொய் உரைக்காதிருப்பதை (உண்மையை மட்டும் பேசுவது) ஒருவர் ஒருபொழுதும் தவறாது பின்பற்றுபவர் ஆயின் அதுவே அறம்.

பொய்யாமை என்பது நற்பண்பு. ஆனால் அதனை ஒரு அறமாகவே திருவள்ளுவர் கூறுகிறார். 

எல்லா அறத்தையும் பின்பற்றி ஒருவர் பொய் உரைப்பார் ஆயின் அவருக்கு அவர் செய்த அறப்பயன்கள் கிட்டாது.


பிற செய்யாமை செய்யாமை” “
அறம் அல்லாதவற்றை செய்யக்கூடாது

”நன்று"
அப்படி பொய் சொல்லாது இருக்கும் அறத்தை ஆற்றி, அறம் அல்லாதவற்றை செய்யாது இருந்தால் அதுவே நன்மை பயக்கும். அறத்திற்கான பயனை ஒருவர் அனுபவிப்பார். 

நம்மில் பலர் பொய் சொல்வதே இல்லை என்கிறோம். ஆனால் அது உண்மையா? பெரும்பாலும் இல்லை. 1) நாம் மற்றவர்களிடம் பேசும் பொழுது அன்று நான் ஊரில் இல்லை அல்லது தொலைக்காட்சிப் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தால் வேறு வேலையாக இருக்கிறேன் என்று சிறு சிறு பொய்கள் சொல்கிறோம் 2) நான் ஒரு வீட்டிற்கு குடிப்புகுந்தேன். அந்த வீட்டில் குளிர்காலத்திற்கான அறையை சூடு செய்யும் வசதி சரியாக வேலை செய்யவில்லை. நீங்கள் ஏன் சொல்லவில்லை என்று என்னிடம் பேசியவரிடம் கேட்டேன். அவர் சொன்ன பதில், எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கு என்று தெரியாது என்றார். அதன் பிறகு பல நேரங்களில் கூறுவார் நான் பொய்யே சொல்ல மாட்டேன். பொய் சொன்னால் எனக்கு தூக்கம் வராது. ஒரு பொய் சொன்னால் நான் பாவமன்னிப்பு கேட்டாலே ஒழிய எனக்கு தூக்கமே வராது என்பார்.  ஒரு வருடம் கழித்து நான் அவ்வீட்டை விட்டு வெளியேரும் பொழுது அவரிடம் கேட்டேன், நீங்கள் இப்பிரச்சனையை சரி செய்து தரவில்லை. குறைந்தது வருவரிடமாவது இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்று சொல்லிவிடுங்கள் என்று. அவர் சொன்னார், வருபவர் கேட்டால் நான் சொல்லிகிறேன். நான் சொன்னேன், நீங்கள் இப்படி மறைப்பது பொய்க்கு சமானம் என்று. அதற்கு அவர், ”அது எப்படி பொய்? நான் எல்லாவற்றையும் சொன்னால் யாரும் இவ்வீட்டிற்கு வரமாட்டார்கள்” என்றார். நான் கூறினேன், தெரிந்தே சொல்லாமல் இருப்பது மட்டும் பொய் அல்ல. தெரிந்து மறைப்பது பொய் தான். நீங்கள் பிரச்சனையை சரி செய்யுங்கள் அல்லது உண்மையை சொல்லிவிடுங்கள். பிறகு அவர் சரி என்று பிரச்சனையை சரி செய்தார். 

நாம் சொல்லும் சிறு சிறு பொய்களும் பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்கலாம். ஆனால் அது நமது பிள்ளைகளுக்குத் தவறான முன்னுதாரணமாக இருக்கும். இது போன்ற சின்ன சின்ன பொய்களே பெரிய பொய்கள் சொல்ல பழக்கத்தை கொடுக்கும்.  நம்மை பார்த்து நமது பிள்ளைகள் பொய் சொன்னால் அதற்கு நாம் தான் பொறுப்பு. அப்படி அவர்கள் சொன்னால் நமக்கு அறப்பயன் கிட்டாது. “குறள் 63 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்” என்பதை நினைவில் கொள்க. நமது பிள்ளைகளுக்கு நாம் எல்லாவிதத்திலும் நல்ல ஒரு முன் மாதிரியாக (role model) இருக்க வேண்டும். பொய் சொல்வதை காட்டிலும் உண்மை சொல்லித் தண்டனையை அனுபவிப்பதே சாலச் சிறந்தது.

நாம் மேலும் கவனிக்க வேண்டிய ஒரு சொல் ”பொய்யாமை ஆற்றின் அறம்”. திருவள்ளுவர் “செய்யின் அறம்” என்று கூறவில்லை. ஏனெனில் ஆற்றின் என்பது ஆறு என்ற வேர்சொல்லில் இருந்து வருவது. தன்னலமின்றி, பிறர்க்கென, பிற உயிர்களுக்கெனச் செய்வதை, அதையும் வலிந்து செய்யாமல் தன்னியல்போடு ஒன்றைச் செய்தலை “ஆற்றுதல்” என்று கூறலாம். 

நம்மிடம் யாரேனும் பொருள், பணம் என்று ஏதேனும் உதவி கேட்டால் பொய்யாமை பற்றிநின்று நாம் எல்லாவற்றையும் இழந்துவிடக் கூடுமே என்று இல்லறத்தில் இருப்போர் அஞ்சக்கூடும். ஆனால் அங்கு பொய் சொல்லி தட்டிக்கழிப்பதைவிட, தன்னால் முடிந்த உதவியை செய்தோ அல்லது உண்மையை சொல்லி கெட்டப்பேர் வாங்கலாம். ஏனெனில் வைத்துக்கொண்டே இல்லை என்று சொன்னால் அது மற்றவருக்கு தெரியாமல் போகாது. அது கண்டிப்பாக தெரியும். அது தெரியும் பொழுது நமக்கு கெட்டப்பெயர் தான் கிட்டும். மேலும் நமது நெஞ்சே நம்மை சுடும்.

மேலும், பிற செய்யாமை என்கிறார். செய்ய கூடாதவற்றை கண்டிப்பாக செய்யாதே. அறம் அல்லாதவற்றை ஒருவர் செய்வார் ஆயின் அவர் அறத்தில் இருந்து வழுவுகிறார் என்று அர்த்தம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - ஒருவன் பொய்யாமையையே, பொய்யாமையையே செய்ய வல்லவனாயின், பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று - அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று (அடுக்கு இரண்டனுள் முதலது இடைவிடாமை மேற்று, ஏனையது துணிவின் மேற்று. 'பல அறங்களையும் மேற்கொண்டு செய்தற்கு அருமையால் சில தவறின் குற்றப்படுதலின், அவை எல்லாவற்றின் பயனையும் தானே தரவற்றாய இதனையே மேற்கொண்டு தவறாமல் செய்தல் நன்று 'என்பார், 'செய்யாமை செய்யாமை நன்று' என்றார்.இதனை இவ்வாறு அன்றிப் 'பொய்யாமையைப் பொய்யாமல் செய்யின் பிற அறம் செய்கை நன்று',எனப் பொழிப்பாக்கி, 'பொய் கூறின் பிறவறம் செய்கை நன்றாகாது' என்பது, அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாரும் உளர். பிற அறங்களெல்லாம் தரும் பயனைத் தானே தரும் ஆற்றலுடைத்து என மறுமைப்பயனது மிகுதி இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின் பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம்.

மு.வரதராசனார் உரை
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்

குறள் 286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]

பொருள்
அளவின் - அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

தருக்கம் - நியாயவாதம்; மேம்பாடு; வாக்குவாதம்; நியாயவாதநூல்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நின்று - எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பட வரும் ஒர் இடைச்சொல்.

நில்-தல் - [நிற்றல்]   3 v. intr. [K.nil.] 1. To stand; கால்கள் ஊன்ற உடல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றான் (நாலடி, 29). 2. To stop, halt,tarry; மேற்செல்லாதிருத்தல். நில்லடா சிறிது நில்லடா (கம்பரா. நாகபாச. 73). 3. To be steadfast;to persevere, persist in a course of conduct;உறுதியாயிருத்தல். வீடு பெறநில் (ஆத்திசூ.). 4. Tostay, abide, continue; தங்குதல் குற்றியலிகர நிற்றல் வேண்டும் (தொல். எழுத். 34). 5. To cease; tobe discontinued, stopped or suspended; ஒழிதல் வேலை நின்றுவிட்டது. 6. To be subdued;அடங்குதல். சாயவென் கிளவிபோற் செவ்வழியாழிசைநிற்ப (கலித். 143, 38). 7. To remain; tobe left, as matter in a boil, as disease in thesystem; to be due, as a debt; எஞ்சுதல் நின்றதிற் பதினையாண்டு (திவ். திருமாலை 3). 8.To wait, delay; தாமதித்தல் தெய்வம் நின்றுகேட்கும்.  -

நிற்றல் - niṟṟl   v. noun. A standing, நிலை; [ex நில்.] (p.)

ஒழுகல்  - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்.

ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றாது - செய்யாது இருத்தல் 

ஆற்றார் - செய்யாது இருப்பவர் 

களவின் - களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

கன்று - விலங்கின்கன்று; மரக்கன்று, இளமரம்; சிறுமை; கைவளையல்.

இய - இயைவு - iyaivu   n. இயை¹-. Union, joining together; சேர்க்கை


2கன்றிய -  கன்றுதல் - முதிர்தல்; அடிபடுதல்; சினக்குறிப்புக்கொள்ளுதல்; வெயிலாற்கருகுதல்; மனமுருகுதல்; வருந்துதல், நோதல்; வாடுதல்; பதனழிதல்.

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

காதலவர் - காதல் கொண்டவராக, மனம் விரும்புவராக

முழுப்பொருள்
"நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை அற்று" என்று கல்லாமையில் கூறியுள்ளார் திருவள்ளுவர். நுண்மையாக அறிந்து ஆராய்வதே அறிவு. தன்னைக்குள்ளேயும் பிறர்க்குள்ளேயும் தருக்கத்தின் மூலம் நுணுகி ஆராய வேண்டும். அப்படி அறிந்தால் தான் மேம்பாடு அடைய முடியும். நியாயத்தை கண்டுஅடைய முடியும். இந்த நியாயமே தருக்க அளவு என்று இக்குறளில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

சமயத்தில் 10 அளவைகள் உண்டு (wiki  யில் படிக்கலாம்)
1) காண்டல் (காட்சி)
2) கருதல்
3) உவமம்
4) ஆகமம் (நூல்)
5) ஆண்டைய அருத்தாபத்தி (பொருட்பேறு)
6) இயல்பு
7) ஐதிகம் (உலகுரை)
8) அபாவம் (இன்மை)
9) மீட்சி
10) ஒழிவறிவு எய்தி உண்டாம் நெறி (உள்ள நெறி)

ஆதலால் அளவைகள் துணைக்கொண்டு நுணுகி ஆராய்ந்து பெற்ற தருக்க அளவினை அறிந்தே துறவின் கண் ஒருவர் செல்லலாம். ஆதலால் அந்த தரும்ம நியாயத்தின் கண் நின்று ஒருவர் நடத்தல் வேண்டும். ஆனால் அவ்வாறு ஆற்றாதவர் களவின் கண் அதாவது வஞ்சம், திருட்டு, கள்ளவொழுக்கம் ஆகியவற்றை விரும்பி அவற்றை பின்பற்றுபவராக இருப்பார் அல்லது அவரால் துறவை பின்பற்ற முடியாமல் துறவின் பயனை அடையமாட்டார். 

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் - உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழுகமாட்டார், களவின்கண் கன்றிய காதலவர் - களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையார். (உயிர் முதலியவற்றை அளத்தலாவது, காட்சி முதலாகச் சொல்லப்பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு உற்ற விளைவுகளையும் அவற்றான் அது நாற்கதியுள் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோகஞானங்களையும், அவற்றான் அஃது எய்தும் வீட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப. அதற்கு ஏற்ப ஒழுகுதலாவது, அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல்.).

மணக்குடவர் உரை
களவின்கண்ணே மிக்க ஆசையையுடையவர் நேரின்கணின்று ஒழுகுதலைச் செய்யமாட்டார். இது நேர் செய்ய மாட்டாரென்றது.

மு.வரதராசனார் உரை
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.