Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts sorted by relevance for query குறள் 1. Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query குறள் 1. Sort by date Show all posts

திருக்குறள் (முதல் நிலை கற்றல்) - நிறைவு


நான் எடுத்த ”நாளும் ஒரு திருக்குறள்” [ http://DailyProjectThirukkural.blogspot.com/ ] என்னும் செயலை/குறிக்கோளை நேற்று 14 அக்டோபர் 2020 இரவு முடித்தேன். இச்செயலை 11 டிசம்பர் 2013 அன்று துவங்கினேன். சரியாகச் சொன்னால் 2500 நாட்கள்.  இதில் சுமார் பாதி நாட்கள் தான் 1330 குறள்களுக்கு எடுத்து இருக்க வேண்டும். ஆனால் நடுவில் பல நாட்கள் சோம்பேறித் தனம் என்று நினைக்கையில் வெட்கமாகவே உள்ளது. ஏனெனில் “குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் என்றென்பதே வள்ளுவன் வாக்கு. அதாவது தான் படித்தும் அதனை பிறர்க்கு எடுத்துரைத்த போதிலும் தான் அதை பின்பற்றவில்லை என்றால் அவனைப்போன்று பேதை வேறு யாரும் இல்லை. நான் சோம்பலை கடந்து இச்செயலை குறைந்தது 2000 நாட்களிக்குள்ளாவது முடித்து இருக்க வேண்டும் (2000?ஏனெனில் நடுவில் இரு ஆண்டுகள் MBA படிக்கச் சென்றுவிட்டேன்). ஆனால், கடந்த 2.5 வருடங்களாக நாளும் உரை எழுதி முடித்துள்ளேன் என்பது ஆறுதல்.

1330 குறள்களை கற்றுள்ளேன். இதில் கண்டிப்பாக சில குறள்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உதாரணமாக நான் எழுதிய முதல் குறள் “எண்ணித் துணிக கருமம்”. அக்குறளை ஒரு சங்கல்பமாகவே சொல்லிக்கொண்டு இச்செயலை துவங்கினேன். பல மாதங்கள் குறள்களை கற்று உரை எழுதாத காலங்களிலும், உரை எழுத வேண்டாம் வெறும் கற்றால் போதும் என்ற நினைப்புகள் வந்த காலங்களிலும் நான் சொல்லிக்கொண்டது “குறள் 467 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.”. அக்குறளே என்னை இச்செயலை முடிக்க முக்கியமான காரணம்.

இதுப்போல் பல குறள்கள் உள்ளன. அவற்றை பற்றி என்னால் இன்று எழுத முடியாது. எல்லா குறள்களையும் மறுபடியும் ஒரு தடவை வாசித்துவிட்டு ஒவ்வொரு அதிகாரத்திலும் சிலவற்றை தேர்ந்தெடுக்கவேண்டும். (அவற்றை Favorites என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும்). 

(குறிப்பு: ஒரு குறளுக்கு சராசரியாக 30 நிமிடம் ஆகும். சில குறள்கள் பெரிய கட்டுரை வடிவில் சென்றால் ஒரு குறளுக்கு 45நிமிடங்கள் ஆகும். அரிதாக ஒரு குறளுக்கு 1 மணிநேரம் ஆகியதுண்டு)

திருக்குறள் அறத்தை வலியுறுத்தியே எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதற்கென்று பொருளையும் இன்பத்தையும் நிராகரிக்கவில்லை. பொருளின் நிலையாமையை கூறினாலும் பொருளின் அவசியத்தையும் தெளிவாகவே எடுத்துரைத்துள்ளது. உறவுகளில் இன்பம் எவ்வளவு அவசியம் என்பதையும் எடுத்துரைத்துள்ளது.

திருக்குறள் என்பது ஒருவன் இல்வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மிக நன்றாக தெளிவாக கூறியுள்ளது. ஆனால் இந்த லௌகீக வாழ்க்கையை தாண்டி வீடுபேறு அடைவதற்கான துறவு வாழ்க்கையையும் மிக தெளிவாக வகுத்துள்ளது. துறவியலில் கூறப்பட்டது துறவு வாழ்க்கைக்கு என்று மட்டும் அல்ல இல்வாழ்க்கைக்கும் மிக மிக பயனுள்ளதாக இருக்கும் (எனக்கு இருக்கிறது) என்பதில் சந்தேகமில்லை. 

வாணிப நிர்வாக மேலாண்மை கல்லூரிகளில் சொல்லித்தரப்படும் சில முக்கியமான தலைமை பண்புகளையும்(Leadership skills) திட்டமிடல் (Planning Skills, SWOT Analysis etc) செயல்முறை (Execution Skills, Risk Management analysis etc) பாடங்களையும் மிக தெளிவாக பொருட்பாலில் கூறப்பட்டுள்ளதை காணலாம்.

அடுத்து காமத்துப்பால். காமத்துப்பாலில் காதலிக்கும் காதலனுக்கும் இடையே உள்ள அன்பை அவர்கள் காதலிக்கும் நாட்களை மிக அழகாக கூறியுள்ளார் திருவள்ளுவர். ஆனால் பல குறள்கள் மிக சிறந்த மனோதத்துவங்கள் என்பதில் சந்தேகமில்லை. அதனை பிரிவு என்று கடந்து செல்லக்கூடும். பிரிவு தரும் துன்பம் என்று பார்க்காமல் துன்பம் என்று பார்த்தால் அது வாழ்வில் பலவற்றிற்கும் பொருந்தும் என்பது புரியும். எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு என்பதும் புரியும். 

பரிந்துரைகள்

திருக்குறளை நான் இப்படி பரிந்துரைப்பேன்

1) முக்கியாமான ஒரு 300-400 குறள்களை குழந்தைகள் 12 வயதிற்குள்ளாகவே மனனம் செய்யவேண்டும். முடிந்தால் அவர்களுக்கு எளிமையாக அர்த்தம் சொல்லித் தர வேண்டும்.

ஆயினும் எல்லா வயதினரும் இதனை படிக்கலாம் என்பதை நான் தனியாக கூறவேண்டியது இல்லை.

2)  12 முதல் - 15 வயது வரை அறத்துப்பாலை நன்கு சொல்லித்தர வேண்டும். மறுபடியும் 20-22 வயது வரை மறுபடியும் வாசிக்க வேண்டும். அதன்பிறகு அடிக்கடி (தினமும் ஒரு குறள்) வாசிப்பது இன்னும் சிறப்பு

3) 12 முதல் - 15 வயது வரை பொருட்பாலை நன்கு சொல்லித்தர வேண்டும். நேரத்தின் மதிப்பை, திட்டமிடலின் அவசியத்தை, வினைத்திட்பம், விடாமுயற்சி, ஊக்கம், சோம்பலின்மை, மறதியின்மை என்று பலதரபட்ட நிர்வாக திரண்களை மாணவர்களுக்கு இளமையிலேயே கற்பித்து அவர்கள் பின்பற்றச்செய்ய வேண்டும்.

ஏனெனில் பிள்ளைகள் பெரியவர்களாக உருவாவது அந்த பருவத்தில் தான். Formative years ஆன 14 வயது வரை பிள்ளைகள் கற்பதே அவர்கள் வாழ்நாள் முழுக்க பயனுள்ளதாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஆதலால் இளமையில் தான் திருக்குறளை முக்கியமாக சொல்லித்தர வேண்டும். 

4) பின்பு ஒருவர் அலுவகத்தில் வேலைக்கு சேர்ந்தப்பின்பு 21-25 வயது வரை பொருட்பாலையும் அறத்துப்பாலையும் மீண்டும் நன்கு படிக்க வேண்டும். அது அவர்களின் மிக உற்சாகமான 20-30 வயது காலக்கட்டங்களை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள அறிவுரைகளை கொடுக்கும். 

5) 20-25 வயது வரையில், மறுபடியும் கல்யாணம் ஆகும் முன்பும் ஆனப்பிறகும் காமத்துப்பாலை படித்தல்வேண்டும். உறவு ஆழமாக அமைய மிக பயனுள்ளதாக அமையும். பொதுவாக கடந்துச்செல்லும் நுண்ணிய உணர்வுகளை நாம் அலட்சியம் செய்யக்கூடாது என்பதை அறியலாம்.

6) திருக்குறளை எப்படி படிக்க வேண்டும் என்பதற்கு கீழ்காணும் பரிந்துரைகளை காணவும்

-- திருக்குறளை எப்படி மனனம், ஸ்வாத்யாயம் (அதன் அத்தனை பொருட்களையும் தானாக கற்றறிதல்), தியானம் செய்து கற்க வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் விவரித்துள்ளார். அதற்கு ஜெயமோகனின் ”மனப்பாடம் (சுட்டியை தட்டவும்)”, ”குறள் என்னும் தியானநூல்”, ”குறள்;இருகடிதங்கள்”, “குறள் – கவிதையும், நீதியும்”, “இந்திய சிந்தனை மரபில் குறள் 1”,   ”இந்திய சிந்தனை மரபில் குறள் 2”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 3”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 4”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 5” கட்டுரைகளை வாசிக்கவும். 

பி.கு: ஸ்வாத்யாயம் - சுவாத்தியாயம் - அத்தியயனம் - தானாகக்கற்றகல்வி;  Studying without the help of ateacher; voluntary study; 

-- திருக்குறளை எப்படி ஒரு கவிதையாக வாசிக்க வேண்டும் என்பதை பற்றி மூன்று நாட்கள் உரையாற்றியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். அதற்கான YouTube சுட்டிகள் இதோ - குறளினிது (சுட்டியை தட்டவும்)

-- எழுத்தாளர் ஜெயமோகன் மேற்சொன்ன இரண்டு சுட்டிகளிலும் ஆபத்வாக்கியம் பற்றிப் பேசியிருப்பார். திருக்குறள்களை மனனம் செய்தால் அவை கண்டிப்பாக ஆப்த்வாக்கியமாக தோன்றும். சில காலம் ஆகும். உதாரணமாக எனக்கு சில வார்த்தைகள் 1) அருமை - அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் 2) அரும்பயன் - அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 3) பொருள் - பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு 4) எண்ணித் துணிக 5) எண்ணிய எண்ணியாங்கு எய்துப 6) இன்பம் விழையான் 7) விழைதகையான் வேண்டி இருப்பர் 8) முதலிலார்க்கு ஊதிய மில்லை 9) தன்னுயிர் தான்அறப் பெற்றானை 10) யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

-- திருக்குறளை எனது தளமான (இத்தளத்தில்) http://DailyProjectThirukkural.blogspot.com/  ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள பலத்தரப்பட்ட பொருளை கற்று படிக்க மிக ஏதுவாக இருக்கும். அகராதியில் ஒவ்வொரு சொல்லும் அர்த்தம் தேடி படிப்பதைக்காட்டிலும் இங்கு ஒரே இடத்தில் அகராதியில் உள்ள எல்லா பொருளும் உள்ளன. ஆதலால் வேகமாகவும் ஆழமாகவும் படிக்கலாம்

-- திருக்குறள் தான் வேதவாக்கு என்று எல்லாம் சொல்லமாட்டேன். பலதரப்பட்ட புத்தகங்களை வாசித்து அவற்றுடன் திருக்குளை தொடர்பு படுத்தி, திருக்குறளை மற்றவற்றுடன் தொடர்பு படுத்தி பார்த்தால் நம் மனதில் திருக்குறள் நன்றாக பதியும். பொதுவாக விஸ்தாரமான வாசிப்பும் ஆழமான புரிதலும் நுண்ணிய கல்வியிற்கு அவசியம்.

-- திருக்குறள் ஒரு செவ்வியநூல். ஒரு செவ்வியல்நூலை வாழ்நாள் முழுக்க பயிலலாம். குறள் அதற்கு அப்பால் சூத்திரமும் கூட. அது பயிலப்படவேண்டிய நூல் மட்டுமல்ல, பிற நூல்களை பயில்வதற்குரிய அடித்தளத்தை அமைக்கும் நூலும்கூட. (- எழுத்தாளர் ஜெயமோகன் - குறள்- கடிதம்)

-- ஒரு முழுமையான பார்வை வேண்டும் என்றால் எல்லா திருக்குறள்களையும் கற்றல் அவசியம். சில குறள்கள் முழுமையானவையாக இருக்கும். உதாரணமாக “எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”. ஆனால் “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்” என்ற குறளை மட்டும் படித்துவிட்டு இமயமலை ஏறச்சென்று வானிலை சரியில்லை என்று அறிந்தப்பின்பும் இமயமலை ஏறத் தொடர்ந்தால் உயிர் தான் போகும். அதற்குத்தான் “நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்” என்ற குறளையும் படித்து இருக்க வேண்டும். அதேப்போல் “பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.” என்பதை மட்டும் படித்துவிட்டு பொருளை நிராகரித்தால் துன்பமே எஞ்சும். அதற்கு தான் “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்” என்பதையும் உணர்ந்து பொருளை ஈட்ட வேண்டும். அப்படிச் செய்தால் தான் அறம் பொருள் இன்பம் சமநிலையில் இருக்கும். 

ஒரு சமச்சீரான அணுகுமுறைக்கு திருக்குறளை முழுமையாக கற்றல் மிக பயனுள்ளதாக இருக்கும். 

-- ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் கற்பதாக இருந்தால் நீங்கள் உங்களுக்கு உகந்த வழியில் கற்கவும் அதாவது, 1,2,3,4,5,6, என்ற குறள் வரிசையில் கற்கலாம், அல்லது 1,2,3,4,5 என்ற அதிகாரவரிசையில் உள்ள முதல் குறள் அல்லது ஏதாவது ஒரு குறள், அல்லது அதிகார வரிசையும் இன்று குறள் வரிசையும் இன்றி ஏதாவது ஒரு குறளையும் கற்கலாம். ஒவ்வொரு முறையும் ஒரு நல்லது உண்டு. அது அவரவர் தேவைகளைக்கும் வயதுக்கும் ஏற்ப மாறுபடும். 

நான் எப்படிச் செய்தேன் என்றால், (1) வரிசையாக ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு குறள் என்று முறையில் சென்றேன், பிறகு முதல் அதிகாரத்தில் இருந்து மறுபடியும். இதில் உள்ள நல்லது என்னவென்றால் திருக்குறளில் உள்ள ஒரு முழுமையான நோக்கு கிடைத்துவிடும். தேவையற்ற முரணான எண்ணங்களை மனதில் சுமக்கவேண்டாம். சிலசமயம் தவறான முன்முடிவுகளை தவரிக்கலாம். (2) முதல் தடவை ஒரு அதிகாரத்தை வாசிக்கும் பொழுது அவ்வாதிகாரத்தில் உள்ள எல்லா குறள்களையும் ஒருதடவை வாசித்துவிட்டு அதற்கான சாலமன் பாப்பையா போன்றவர்களின் எளிய உரைகளையும் வாசிக்கலாம். இது அவ்வதிகாரத்தின் முழு சாராம்சத்தையும் கொடுத்துவிடும். (3) ஒவ்வொரு தடவை ஒரு அதிகாரத்தை வாசிக்கும் பொழுதும் அவ்வதிகாரத்தில் உள்ள முந்திய 2-3 குறள்களை மனனம் செய்வது அல்லது அதன் அர்த்தங்களை ஆழ்ந்து வாசித்து மனதில் நன்கு பதியவைப்பது நன்று. ஏனெனில் நாம் ஒரு தடவை வாசிப்பதால் கல்லில் பதிவதுப்போன்று அர்த்தம் (எல்லோருக்கும்) பதிந்துவிடாது. மறுபடியும் மறுபடியும் படிக்க படிக்க தான் நம் மனதில் நன்றாக பதியும். அது நமது செயலிலும் தென்ப்படும்.

-- பிறருக்கு கற்பித்தல். நாம் திருக்குறளுக்கு கற்பிக்கும் பொழுது பல நன்மைகள் உண்டு (1) நாம் பிறருக்கு ஒன்றை கற்றுக்கொடுக்கிறோம். நாம் கற்றது வீணாகவில்லை (2) நாம் பிறருக்கு கற்றுத்தரும் பொழுது நாம் ஏற்கனவே படித்ததை மீண்டும் படிக்கிறோம். அதனால் அக்குறள் மனதில் பதிய அதிக வாய்ப்பு உண்டு. அதன் அர்த்தம் கண்டிப்பாய் மனதில் நன்றாக பதியும் (3) நாம் பிறருக்கு சொல்லித்தருவதால் (பிறருக்கு ஓதுவதால் நாம் கூறியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற மன உறுதி நமக்கு பிறக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் நாம் முன்னேறுவோம்). ”குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்” என்பதை நினைவில் கொள்க (4) நாம் தவறாக கற்றிருந்தால் அதை கண்டுக்கொண்டு திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. நமது புரிதலை ஆழப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு (5) பிறருக்கு கற்றுத்தரும் பொழுது / பிறருடன் கற்கும் பொழுது அங்கே ஒரு உரையாடல் நிகழ்கிறது. அது பெரும்பாலும் ஒரு நல்ல தருக்கத்தை உருவாக்கும். அத்தருக்கத்தில் நாம் மிகுந்த பயனடைவோம். வாழ்வோடு தொடர்புடைய உதாரணங்கள் வெளிவரும். ஆழ்ந்த புரிந்தல் உண்டாகும். அர்த்தம் மனதில் பதியும் (6) மற்ற குறள்களுடனும் மற்ற புத்தகங்களில் உள்ள உதாரணங்களுடனும் தொடர்பு படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. இப்படி நுனிப்புல்லில் இருந்து வெளிவந்து வாசிப்பு செம்மை அடைய முடியும். 

-- குழந்தைகளுக்கு கற்பித்தல் - குழந்தைகளுக்கு கற்பிக்கும் பொழுது குறிப்பாக அவர்களை மனனம் செய்ய பழக்கும் பொழுது 1) நமக்கு நன்றாக மனனம் ஆகும். 2) நமக்கு அது ஆபத்வாக்கியங்களை உருவாக்கிக்கொடுக்கும். 3) சில வார்த்தைகள் நமக்கு நன்கு மனதில் பதியும். 4) பல அதிகாரங்களை தொடர்பு படுத்திப் பார்க்க நல்ல ஒரு வாய்ப்பும் கூட. 5) மேலும் அடுத்த தலைமுறைக்கு நல்லவற்றை கற்றுக்கொடுக்கிறோம் அதுவும் சின்ன வயதிலேயே. 

நன்றிகள்

திருக்குறள் கற்றல் செயலை செய்தற்கு சிலருக்கு நன்றிகள் தெரிவிக்க வேண்டும். 

இறைவனுக்கு நன்றி

இச்செயல் எனக்கு அமைந்தது என் பேறு அல்லது நல்லூழ் என்பேன். இதனை வரமாக கருந்துகிறேன். ஆதலால்  இச்செயலை முடிக்க அருள்புரிந்த இறைவனின் மலர்பாதங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனக்கு கீழ்க்காணும் இத்தனை சந்தர்ப்பங்களையும் சாத்தியங்களையும் வினைத்திட்பத்தையும் கொடுத்தது இறைவன் தான். இச்செயலை துவங்கியப்பின்பு பல மாதங்கள் திருக்குறள் கற்காமல் இருந்தாலும் என்னை மறுபடியும் அதில் செலுத்தி என்னை இச்செயலை முடிக்க துணையாக இருந்த இறைவனுக்கு மறுபடியும் நன்றி.

(இதில் வரிசை முறை என்று ஏதுமில்லை)

-- பேராசிரியர் திரு. ஒளவை நடராஜன்

நான் 2008-2011 ஆண்டுகளில் டெல்லியில் இருக்கும் பொழுது இவர்கள் பொதிகை தொலைக்காட்சியில் காலை வேலைகளில் திருக்குறளுக்கு அர்த்தம் உரைப்பர். ஒவ்வொரு குறளுக்கும் 20 நிமிடங்களுக்கு உரை கூறுவார்கள். என்னடா இது 2 வரில உரைகள் மலைப்போல் குவிந்துள்ளன. இவர் 20 நிமிடம் சொல்கிறாரே என்று தோன்றும். ஆனால் அவரை தொடர்ந்து கேட்கையில் எப்படி திருக்குறளை உள்வாங்க வேண்டும். எப்படி வெவ்வேறு கண்ணோட்டங்களில் அணுகி பொருள்க்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.நன்றி ஐயா.

-- எழுத்தாளர் ஜெயமோகன்

இச்செயலை துவக்க காலத்தில் புரியாமல்தான் செய்துக்கொண்டு இருந்தேன். அங்கே வெட்டி இங்கே வெட்டி எல்லாவற்றையும் கலந்து என்னமோ ஏதோவென்று செய்துக்கொண்டு இருந்தேன். அப்படியான காலகட்டங்களில் தான், ஒரு கடிதத்திற்கு பதிலாக எப்படி மனனம், ஸ்வாத்யாயம்(அதன் அத்தனை பொருட்களையும் தானாக கற்றறிதல்), தியானம் முறையில் எப்படி திருக்குறளை கற்றால் பயன் இருக்கும் என்று ஒரு சிறிய கட்டுரை எழுதி இருந்தார். அதன்படி நான் எனது கற்றல் முறையை மாற்றிக்கொண்டேன். அது எனக்கு மிக மிக பயனுள்ளதாக அமைந்தது. இல்லையேல் எனது வலைத்தளம் திருக்குறளுக்கான பத்தாயிரத்தி சொச்ச உரையாக அமைந்திருக்கும். நானும் ஆழமாக கற்று இருக்க மாட்டேன். நான் சிந்தித்து திருக்குறளை கற்றேன் என்றால் அதற்கு ஜெயமோகனே ஒளிவிளக்கு ஏற்றிவைத்தார். அதனை நோக்கியே சென்றேன். 
பி.கு: ஸ்வாத்யாயம் - சுவாத்தியாயம் - அத்தியயனம் - தானாகக்கற்றகல்வி;  Studying without the help of ateacher; voluntary study; 

-- சொற்பொழிவாளர் தமிழ்க்கடல் திரு.நெல்லைக்கண்ணன்

2009, 2013 ஆண்டுகளில் ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் வந்த ”தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” என்ற போட்டித் தொடர் நிகழ்ச்சியில் திருக்குறளின் எல்லா சுவைகளையும் பல போட்டியாளர்கள் கொடுத்தார்கள். இவர் அருமையான நெறியாளராக நடுவராக இருந்தார். மேலும் மற்ற இலக்கிய தலைப்புகளிலும் மிக நன்றாக அதன் சுவையை எடுத்து உரைத்தார். இவரின் சில பேச்சுகளில் எனக்கு சில மாறுபட்ட கருத்துக்கள் இருப்பினும், இவர் எனது தமிழ் ஆர்வத்தை ஒரு படி மேலே உயர்த்தினார், எனது வாசிப்பு தேடலை ஒரு படி மேலே உயர்த்தினார் என்பதில் ஐயமில்லை.  அதனால் தான் நாம் பாடத்திட்டங்களுக்கும் வேலைக்கும் வெளியே மற்றவற்றை குறிப்பாக தமிழ் இலக்கியங்களை படிக்க வேண்டும் என்ற செயலில் இறங்கினேன். நன்றி ஐயா

-- எனது பாட்டி சரஸ்வதி சுப்ரமணியம்

என்னை எப்பொழுதும் ஊக்கிவிக்கும் எனது பாட்டி. இது என்ன வேண்டாத வேலை என்றெல்லாம் கூறமாட்டார். நல்லது. திருக்குறளில் வாழ்க்கைக்கான எல்லாம் இருக்கு. இதை படித்தால் எல்லாத்தையும் படிச்ச மாதிரி. படி என்று என்னை ஊக்கபடுத்தினார். படிச்சு அதுமாதிரி நடந்துக்களையே என்று சிலர் நையாண்டி செய்வர் அல்லது குத்திக்காண்பிப்பர். அப்படி எல்லாம் நையாண்டி செய்யமாட்டார் பாட்டி. எல்லாவற்றையும் ஒரே அடியாக மாற்றுவது கடினம் என்ற தாத்பர்யத்தை உணர்ந்தவர். எல்லாவற்றையும் பின்பற்ற முடியவில்லை என்றாலும், சிலவற்றை பின்பற்றுகிறாயே, அதுவே முன்னேற்றம் தான். ஒரு படி மேலே சென்று இருக்கிறாய். நல்லவிஷயம் தான். அப்படியே தொடர்ந்தால் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளலாம். உன்னால் முடியும் என்று கூறுவார். நான் இப்பொழுது எனது மருமகள் (ஆதாவது தங்கையின் மகள்) ப்ரத்ன்யாவிற்கு திருக்குறளை மனனம் செய்ய பயிற்சிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன் (ஒருவருடத்தில் இதுவரையில் 90 திருக்குறள்கள்) . இதனைப்பார்க்கும் எனதுப்பாட்டி, எனக்கு இப்படி ஒரு மாமா இல்லையே என்று ஆதங்க படுகிறாள். நாம் நல்லது தான் செய்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுக்கிறாள். ஆதலால் பாட்டிக்கும் நன்றி. 

-- பள்ளிகாலத்துத் நண்பன் S.ராஜேஷ்

2010 ஆண்டுகளில் இவனது Google Talk / Chat இன் தன்னிலை செய்தி (status message) "எண்ணித் துணிக கருமம்”, “சிறுக்கோட்டுப் பெரும் பழம்” என்று தான் இருக்கும். அவை என்னை ஈர்த்தன. அதனை கேட்டு அறிந்தேன். எனது தமிழ் ஆர்வத்தை ஆழமாக ஆக்கியது. அன்றில் இருந்து இன்று வரை நான் ஒரு முக்கியமான செயலில் ஈடுபட்டாலோ அல்லது நெடுநாட்கள் எடுக்கும் பெரிய செயல்களில் ஈடுட்பட்டாலோ நான் மனதில் சங்கல்பமாய் சொல்லிக்கொள்வது “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு”. நன்றி டா.

-- நண்பர் நாகமணி

இந்த செயலை துவங்கிய காலக்கட்டங்களில், இது நல்ல முயற்சி பாஸ், நல்லா பண்ணுங்க என்று ஊக்கப்படுத்தினார். நீங்களும் சேர்ந்துக்கொள்ளுங்களேன் என்று அழைத்தபொழுது, அவரும் வந்து சில பல குறள்களுக்கு உரை பதிவு செய்துள்ளார். அவ்வப்பொழுது சில மைல்கல்களை தாண்டும் பொழுது, செம பாஸ் என்று கூறுவார். சினிமா, கிரிக்கேட், அரசியல் என்பத்தை தாண்டி சற்று இலக்கியத்தை பற்றியும் இவரிடம் பேச முடியும். நன்றி பாஸ்.

-- திரு.அசோகன் சுப்பிரமணியம்

இச்செயலை துவங்கிய காலங்களில் திருக்குறள்களுக்கு பொருள் அறிந்துக்கொள்ளும் முனைப்பில் பல வலைத்தளங்களை மேய்வதுண்டு. 99% சதவிகித உரைகள் ஏற்கனவே உள்ள உரைகளை தொகுத்து வலையேற்றபட்டு இருக்கும். அதற்கு மேலே ஒரு துளி உழைப்பைக்கூட செய்து இருக்கமாட்டார்கள். ஒரு சில வலைப்புகள் சில குறள்களுக்கு மட்டும் கட்டுரை வடிவில் திருக்குறளை விவரித்து நன்றாக எழுதியிருப்பார்கள். அது பயனுள்ளதாகவும் இருந்தது. அப்படித் தேடிக்கொண்டு இருக்கையில், தற்செயலாக திரு அசோகன் சுப்பிரமணியன் அவர்களின் வலைத்தளத்தை கண்டடைந்தேன். அவரும் நான் மேற்கொண்ட பாதையில் முன்னரே பல காலமாக பயணித்துக்கொண்டு இருந்தார். ஆதலால் நாம் சரியான பாதையில் சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்ற நம்பிக்கை பிறந்தது. அவர் விளக்கம் அளிப்பதுடன் நிறுத்திவிடாமல் திருக்குறளை இன்று புழங்கும் வார்த்தைகளை வைத்து மறு ஆக்கம் செய்து இருப்பார். பாராட்டப்பட வேண்டிய முயற்சி. பல குறள்களுக்கு மற்றவர்கள் வேறுவிதமாக(தவறாகவோ அல்லது குழப்பமாகவோ) உரை எழுதி இருந்தாலும் அவர் அவருக்கு தோன்றியதை அவருக்கு சரி எனப்பட்டதை தெளிவாக எழுதியிருந்தார். அந்த இயல்பு எனக்கும் ஒரு மனத்திட்பத்தை கொடுத்தது. அதனால் எனக்கு சரியென பட்டதையே நானும் உரையாக எழுதினேன். திரு.அஷோக் அவர்களிடம் இருந்து சில குறள்களுக்கு வேறுபட்டு இருக்கிறேன். அவரின் உரை எனக்கு மிக மிக பயனுள்ளதாக அமைந்தது. திருக்குறளின் உரையை ஆங்கிலத்திலும் விரிவாக எழுதியது இவ்வுலகிற்கு கிடைத்த பேறு எனவே சொல்லுவேன். அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கம்.

பெருமை

குறள் 505 
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல்

இச்செயலை முடித்தது எனக்கு பெருமையே அளிக்கிறது. ஆயினும் நான் திருக்குறளை ஒரு முறை கற்று உள்ளேன். அதன் படி நடக்க, பெருமை பயக்கும் பல செயல்களை செய்ய நான் ஏறவேண்டிய சிகரங்கள் பல இருக்கிறது. அப்பெருமை எனக்கு வாய்க்க நான் செயல்களை செய்ய இறைவன் துணைப்புரியட்டும். 

குறள் 978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

இச்செயலை செய்து முடித்தது என்னளவில் ஒரு பெரிய காரியம் ஆயினும் அதனை தாண்டியும் பல காரியங்கள் உள்ளன. ஆதலால் நான் சரிசெய்யவேண்டிய என்னுடைய குறைப்பாடுகளை எண்ணியும் நான் அடையவேண்டிய சால்புகளை வேண்டியும் பணிவு கொள்கிறேன். 

அடுத்து?

திருக்குறள் கற்றல் பணி தொடரும்

எனது அடுத்த செயல்களுக்கான எண்ணங்கள்

திருக்குறள்

எழுதிய எல்லா குறள்களையும் மறுவாசிப்பு செய்து தேவையெனில் சீரமைப்பு செய்ய வேண்டும். 1. துவக்க காலங்களில் சில குறள்களுக்கு ஒவ்வொரு வார்த்தைக்கும் அகராதியில் இருந்து பொருளை எடுக்கவில்லை. அவற்றை பூர்த்தி செய்யவேண்டும் 2. எழுதிய உரைகளை தேவையெனில் பொருட்பிழைகளை களையவோ அல்லது சுருக்கவோ  அல்லது நீட்டவோ வேண்டும். 3. சொற்ப்பிழைகள், எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள், வலிமிகும் வலிமிகா இடங்கள் பிழைகள் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டும்.

1. திருக்குறள் - ஒவ்வொரு அதிகாரத்திலும் முக்கியாமான 2-4 குறள்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

2. திருக்குறள் - தலைமை பண்புகளை பறைச்சாற்றும் குறள்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

3. திருக்குறள் - அதிகார வாரியாக கட்டுரைகள் - இது ஒரு பெரும் பணி

4. திருக்குறள் - ஆத்மார்த்தமான உறவுகளுக்கு காமத்துப்பால் சொல்லும் சில முக்கியமான மனோத்தத்துவங்கள்

5. திருக்குறள் - ஆபத் வாக்கியங்கள்

மற்றவை

மூதுரை - ஔவையார்
கொன்றை வேந்தன் - ஔவையார்
நல்வழி - ஔவையார்
புதிய ஆத்திசூடி - பாரதியார்
நாலடியார்
புறநானூறு

எண்ணங்கள் நிறைவேற வேண்டும்.

சமர்ப்பணம்

இச்செயலை பாதிக்கடந்து (665 குறள்கள்) இருக்கும் பொழுது தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன் ஐயா அவர்களுக்கு சமர்ப்பித்து இருந்தேன். 

இப்பொழுது மீதமுள்ள பாதிச்செயலை (665 குறள்கள்) எனது தனிப்பெருந்துணை பாட்டி சரஸ்வதி சுப்ரமணியத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.

இச்செயலை மொத்தமாக எனது குழந்தை உமையாள் மற்றும் எனது தங்கை தம்பியின் பிள்ளைகளான ப்ரத்ன்யா, தன்யா, சேந்தன் ஆகியோருக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்கள் திருக்குறளையும் மற்ற நூல்களையும் கலைகளையும் கற்று அவற்றை உறுதுணையாகக்கொண்டு வாழ்வை நன்கு அமைத்துக்கொண்டு வீடுபேறு அடையவேண்டுகிறேன். இறைவன் துணைநிற்கட்டும்.

அன்புடன்
ராஜேஷ் (எ) பாலசுப்ரமணியன்

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்

குறள் 253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் 
உடல்சுவை உண்டார் மனம் 
[அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
படை - paṭai   n. படு²-. [K. paḍe.] 1.Army; சேனை (பிங்.) படையியங் கரவம் (தொல்.பொ. 58). 2. Forces for the defence of akingdom, of six kinds, viz., mūla-p-paṭai,kūli-p-paṭai, nāṭṭu-p-paṭai, kāṭṭu-p-paṭai,tuṇai-p-paṭai, pakai-p-paṭai;பகைப்படை என்ற அறவகைச்சேனை. (குறள், 762, உரை ) 3. Mob, rabble, crowd; திரள் Colloq.4. Relations and attendants; பரிவாரம் அவன்படைகளுக்கு யார் போட்டுமுடியும்? 5. Weapons,arms of any kind; ஆயுதம் தொழுதகை யுள்ளும்படையொடுங்கும் (குறள், 828). 6. Instrument,implement, tool; கருவி 7. Means, agency;சாதனம். செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள்,555). 8. (Jaina.) Traid of excellent things.See இரத்தினத்திரயம் படை மூன்றும் (சீவக. 2813).9. A sledge-like weapon, used in war; முசுண்டி (பிங்.) 10. Ploughshare; கலப்பை (பிங்.) படையுழ வெழுந்த பொன்னும் (கம்பரா. நாட்டு 7). 11.Saddle; குதிரைக்கலனை. பசும்படை தரீஇ (பெரும்பாண். 492). 12. Covering and tra  

கொண்டார் - உடையவர்

நெஞ்சம் - neñcam   n. id. [M. neñca.]1. See நெஞ்சு தாமுடைய நெஞ்சந் துணையல்வழி(குறள், 1299). 2. Love; அன்பு நெஞ்சத் தகநகநட்பது நட்பு (குறள், 786).

போல் - pōl   part. போல்-. [T. pōlu, K.pōl, M. pōluga, Tu. hōlu.] 1. A particle ofcomparison; ஓர் உவமவுருபு. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்து (குறள், 118). 2. An expletive; ஓர் அசைச்சொல். (திருக்கோ. 222.)

நன்று - naṉṟu   n. நன்-மை. 1. That whichis good, goodness; நல்லது அங்கிது நன்றிது நன்றெனு மாயை யடங்கிடு மாகாதே (திருவாச. 49, 8).(சூடா.) 2. Excellence; சிறப்பு 3. Greatness,largeness; பெரிது (தொல். சொல் 343.) 4. Virtue,merit; அறம் நட்டார் குறை முடியார் நன்றாற்றார்(குறள், 908). 5. Happiness, felicity; இன்பம் நன்றாகு மாக்கம் பெரிதெனினும் (குறள், 328).6. Good deed; நல்வினை சான்றோர் செய்த நன்றுண்டாயின் (புறநா. 34). 7. Benefit; உபகாரம் தக்கார்க்கு நன்றாற்றார் (நாலடி, 327). 8. Prosperity; வாழ்வினாக்கம். நன்றாங்கா னல்லவாக் காண்பவர் (குறள், 379). 9. Heaven; சுவர்க்கம் வாள்வாய் நன்றாயினு மஃதெறியாது விடாதே காண் (கலித்.149). 10. Expr. signifying approval; அங்கீகாரக்குறிப்பு. நன்றப்பொருளே வலித்தேன் (சீவக. 1932).

ஊக்காது - ஆட்டுதல்; நெகிழ்த்துதல்; தப்புதல்; ஆர்வமூட்டுதல்; முயலுதல்; கற்பித்தல்; நினைத்தல்; ஏறுதல்; நோக்குதல்.

ஊக்காது

ஒன்றன் - ஒன்று - oṉṟu   n. [T. oṇḍu, K. ondu, M.onnu, Tu. onji.] 1. The number one; க என்னும் எண் (திவ். திருச்சந். 7.) 2. A person ofconsequence, a person worthy of regard; மதிப்புக்குரிய பொருள் ஒறுத்தாரை யொன்றாக வையாரே(குறள், 155). 3. Attaining salvation; வீடுபேறு (திவா.) 4. Union; ஒற்றுமை வேந்தர் வேந்த னிதயமு மொன்றாய்நின்ற வியற்சையை (பாரத. சூதுபோர்.7). 5. Truth; வாய்மை ஒன்றுரைத்து (கம்பரா.கிளை. 24). 6. Semen; இந்திரியம் இரண்டடக்கார்ஒன்று பலகாலமும் விட்டிடார் (திருவேங். சத. 74). 7.Euphemism for urination; சிறுநீர் ஒன்றுக்குப்போய்வா. Colloq. 8. (Gram.) Singular numberof the impersonal class; அஃறிணை யொருமைப்பால். (நன். 263.) 9. That which is imcomparable; ஒப்பற்றது. -- conj. Or; else; விகற்பப்பொருளைக்காட்டும் இடைச்சொல் ஒன்று தீவினையைவீடு, ஒன்று அதன்பயனை நுகர் 

உடல் - uṭal   n. prob. உடன் [T. oḍalu, K.oḍal, M. Tu. uḍal.] 1. Body; உடம்பு (பிங்.) 2.Consonant; மெய்யெழுத்து உடன்மேலுயிர்வந்து(நன். 204). 3. Birth; பிறவி தோலி னுடையாலுந்தீரா துடல் (சைவச. பொது 403). 4. Means, instrument; சாதனம் பசுவதனுஸந்தானத்துக் குடலாமே (ஈடு, 1, 2, 8). 5. Gold; பொன் (திவா.) 6.The wherewithal, money; பொருள் விளக்கேற்றற்குடலில னாப (பதினொ. திருத்தொண். 54). 7. Mainbody of a cloth, excluding the border spaces;ஆடையின் கரையொழிந்த பகுதி உடல் அரக்கு Colloq. 8. Texture of a cloth as judged by thewarp and woof; ஆடையினிழை. Colloq.

சுவை - ஐம் புலன் களுள் நாவின் உணர்வு, உருசி; இன்பம்; இரசம்; இனிமை; கவிதையின் இரசம்; சித்திரை நாள்.

உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

உண்டார் - உண்டவர்

மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

முழுப்பொருள்
போர்களத்தில் படைகொண்டவர்கள் பிற உயிர்கள் மீது இரக்கம் அற்றவர்கள். பிற உயிர்களை (எதிரி உயிர்களை) வெட்டி வீழ்த்துவது அவர்களுக்கு ஒரு வெற்றிச் சுவை. அவ்வெற்றியில் கள்வெறியும் உன்மத்தமும் அடைவர். அதில் அவர்கள் வாழ்நாளெல்லாம் திளைப்பர். அவ்வளவு ஏன், தன்மீது வாளின் வெட்டுகள் பட்டாலும், குண்டுகள் சீண்டினாலும், அதன் தழும்புகளை வீர அடையாளங்களாகவே பார்ப்பார்கள். அதற்காக மகிழ்ச்சி அடைவர். எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருப்பார்கள்

அதைப்போன்றவர்களே பிற உயிர்களின் (விலங்குகளின்) ஊணை/மாமிசத்தை உண்ணுபவர்கள். அவர்களுடைய மனமும் இரக்கமும் குற்ற உணர்ச்சியும் கருணையும் அற்றதாகவே இருக்கும்.



ஊனுண்ணுவார் மனம் நல்லதை நினையாததையத் திரிகடுகப்பாடல்,(74 “கொலைநின்று தின்றொழுகு வானும்பெரியவர் புல்லுங்கால் தான்புல்லும் பேதையும் – இல்லெனக்கொன்று ஈகென் பவனை நகுவானும் இம்மூவர் யாதும் கடைப்பிடியா தார்.” என்று சொல்லி, கொலைநின்று தின்றொழுகுதலை அறநெறி நில்லாரின் முதற்குற்றமாகக் கூறுகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
படை கொண்டார் நெஞ்சம் போல் - கொலைக் கருவியை தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவதல்லது அருளை நோக்காதவாறு போல, ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது - பிறி்தோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவது அல்லது அருளை நோக்காது. (சுவைபட உண்டல், காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்டல். இதனான் ஊன் தின்றார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஆயுதம் கையிற்கொண்டவர் நெஞ்சுபோல் நன்மையை நினையாது: ஒன்றினுடலைச் சுவைபடவுண்டார் மனம்.

மு.வரதராசனார் உரை
ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

சாலமன் பாப்பையா உரை
கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.

English Meaning - As I taught a kid - Rajesh
The heart of one who has eaten and relished flesh, is like the heart of one leading an army: it cannot be compassionate; it is merciless. The person heading the army relishes killing the opponents, doesn't worry about the loss of lives of his own soldiers being killed during the battle. They wear such deaths as a badge of honor because they do not have any guilt. Similarly, people who eat and relish flesh of other creatures are not compassionate.

Questions that I ask to the kid
How do you describe the heart of one who has eaten and relished flesh, is like?

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்

குறள் 132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் 
தேரினும் அஃதே துணை
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]

பொருள்
பரிதல் - பற்றுவைத்தல்; காதல்கொள்ளுதல்; இரங்குதல்; சார்பாகப்பேசுதல்; வருந்துதல்; பிரிதல்; அறுதல்; முறிதல்; அழிதல்; ஓடுதல்; வெளிப்படுதல்; அஞ்சுதல்; வருந்திக்காத்தல்; பகுத்தறிதல்; அறிதல்; அறுத்தல்; அழித்தல்; நீங்குதல்; கடத்தல்; உதிர்த்தல்; வாங்கிக்கொள்ளுதல்.

பரிந்து - முழு மனதுடன் அன்புடன் ஏற்று செய்தல்

ஓம்பிக் - ஓம்புதல் - ōmpu-   5 v. [T. ōmu, K. ōvū,M. ōmbu.] tr. 1. To protect, guard, defend,save; பாதுகாத்தல் குடிபுறங் காத்தோம்பி (குறள்,549). 2. To preserve; to keep in mind; to cherish, nourish; பேணுதல் ஈற்றியாமை தன்பார்ப்போம்பவும் (பொருந. 186). 3. To remove, separate; to keep off; to ward off; தீதுவாராமற்காத்தல். 4. To dispel; பரிகரித்தல் எனைத்துங்குறுகுத லோம்பல் (குறள், 820). 5. To maintain,support; to cause to increase; to bring up;வளர்த்தல். கற்றாங் கெரியோம்பி (தேவா. 1, 1). 6.To consider, discriminate; சீர்தூக்குதல் ஓம்பாவீகையும் (பு. வெ 9, 1). 7. To concentrate themind; மனத்தையொருக்குதல். தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை (குறள், 132). 8. To clutch or grasp tightly, as a miser; இவறுதல் பெற்றேமென் றோம்புத றேற்றாதவர் (குறள், 626).


காக்க - காத்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.

ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

தெரிந்து - தெரிந்து வினையாடல் - அமைச்சர் முதலாயினார் செய்யவல்ல செயல்களை ஆராய்ந்து அவற்றின் கண்ணே அவரை ஆளும் திறம்.
ஓம்பித் - ஓம்புதல்

தேர் - tēr   n. prob. தேர்²-. 1. [T. Tu. tēru,K. M. tēr.] Car, chariot; இரதம் கடலோடாகால்வ னெடுந்தேர் (குறள், 496). 2. A vehicle.See கொல்லாவண்டி 3. Boy's small car; சிறுதேர் புதல்வனைத் தேர்வழங்கு தெருவிற் றமியோற்கண்டே (அகநா. 16). 4. The 4th nakṣatra. Seeஉரோகிணி. (சூடா.) 5. Mirage; கானல் யானையிலங்குதேர்க் கோடு நெடுமலை (கலித். 24).

தேர் - tēr   தேரு, II. v. t. examine, investigate, ஆராய்; 2. discriminate, know, அறி; 3. consider, deliberate, யோசி; 4. say, tell, சொல்லு; v. i. be well versed or proficient in, பயில்.

தேரினும் - தேர்ச்சியுடன் பயின்றாலும்

அஃதே  - அஃதாவது
துணை - துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).


முழுப்பொருள்
ஒழுக்கம் என்பது உலகம் ஓம்பிய நெறி. மனிதர்களுக்கு உயர்ச்சி தரும் நெறி, நன்னடத்தை என்பது நாம் அறிவோம்.  ஒருவனுக்கு நல்லொழுக்கம் என்பது விதைக்கு பாய்ச்சும் நல்ல பசுமையான நீரைப் போன்றது ஆகும். நீரின் தன்மை விதைக்குள் சென்று வளர்ந்து நல்ல மரமாக வளரும். அதுப்போல் நல்ல குணங்கள் பழக்கவழக்கங்கள் நன்னடத்தைகள் ஒருவருள் வளர்ந்து உயர்ச்சி தரும். அறம் தனை நிலைநாட்ட உதவும். துன்பமான நேரங்களிலும் தவறான பாதையில் செல்வது தவறு என்று நம்மை அதில் இருந்து விலக்கி நல்வழியில் செலுத்தும் நல் ஒழுக்கம்.  இறுதியில் பல தடைகள் வந்தாலும் இன்பமே பயக்கும்.

அத்தகைய நன்னடத்தையை பின்பற்ற வகுக்கபட்ட நெறிகளை ஒருவர் பல நூல்களில் (உதாரணமாக திருக்குறள், ஆத்திச்சூடி, திருவாசகம், திருமந்திரம், நாலடியார், பெரியபுராணம், திருவருட்பா, திருமுறை, தேவாரம்) இருந்து ஆழமாக கற்றுக்கொள்ளலாம். ஆனால் தெரிந்து கொள்வதனால் மட்டும் என்ன பயன்? ஒன்றுமில்லை. நாம் கற்ற அறங்களை ஒழுக்கங்களை முழு மனதுடன் பரிவுடன் ஏற்று நன்மை தீமைகளை பகுத்தறிந்து முடிவு எடுத்து, அவ்வொழுக்கத்தை காதலித்து, அதற்காக தன்னை வருத்திக் காத்தால் தான், ஒழுக்கம் நமக்கு அரணாக இருக்கும்.

இங்கே திருவள்ளுவர் தெரிந்து என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். அவ்வார்த்தைக்கு வெறுமென தெரிந்துக்கொள்ளுதல் என்ற அளவில் மட்டுமே பொருளை அகராதியில் காண்கிறோம். [ஒருவேளை அறிந்து என்று போட்டு இருந்தால் வேறு அர்த்தம் வரும். ஏன் என்றால் அறிந்து என்ற சொல்லுக்கு பயிலுதல் என்ற பொருளும் உண்டு. அதனால் தான் "61 - பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற" என்று மற்றொரு குறளில் அழகாக கூறியிருப்பார்].

மேலும்: அஷோக் உரை

“இளையோனே, நெறியென்றால் என்னவென்று எண்ணுகின்றாய்? நன்றென நாம் உணரும் ஒன்றின் பொருட்டு எப்போது வேண்டுமானாலும் சுருட்டி வைத்துக் கொள்ளத்தக்க பட்டாடையா அது?” என்றார். “அது மணிமுடியல்ல, காலணி. முள்ளும் கல்லும் நிறைந்த பாதையில்தான் காலில் இருந்தாக வேண்டும்.”

பரிமேலழகர் உரை
ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க - ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க, தெரிந்து ஓம்பித்தேரினும் துணை அஃதே - அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, இவற்றுள் இருமைக்கும். துணையாவது யாது? எனது மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான். ('பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க: எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாமலாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால். இஃது ஒழுக்கங் காக்கவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை
எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.

பொருள்: பரிந்து ஓம்பி ஒழுக்கம் காக்க - (ஒருவன்) வருந்திப் பேணி ஒழுக்கத்தைக் காக்கக் கடவன் ; தெரிந்து ஓம்பி தேரினும் அஃதே துணை - (தனக்குத்) துணையானவற்றை யயல்லாம்) அறிந்து பேணி ஆராயினும் ஒழுக்கமே (தனக்குத் ) துணை (யாகலான்).

கருத்து: ஒருவனுக்கு நல்லொழுக்கமே ‘பொன்றுங்கால் பொன்றாத் துணை’.

Thirukkural - Management - Personality Development - Self Discipline
Even if a person learns from all  the scriptures and excels in the demonstration of his knowledge of them, only self-discipline remains as supreme in his life, confirms Kural 132.

Guard your conduct with care; studies won't give
A surer aid.

There are many educated failures. Education alone is not adequate to have a balanced personality. Therefore, there is a need to put in special efforts to cultivate self-discipline. The process of learning to be self-disciplined may be demanding but the outcomes of that will be more fruitful. There are examples of people who achieved excellence just because of self-discipline.


இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
தெய்வங்கள் மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றன. மனிதன் ஒழுக்கந்தவறினால் தெய்வத்தின் சீற்றத்துக்கு ஆளாவான். வேறு யாரிடமிருந்து மறைத்தாலும் தெய்வங்களிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. ஒழுக்கத்துக்குத் தெய்வம் வருணன். வருணன் மனிதனுடைய செயல்களை எவ்வளவு தூரம் கவனிக்கின்றான் என்பதை உணர்த்துவதற்காகப் போலும் சூரியனையே வருணனுடைய கண்ணாக வேதத்திலே பல இடங்களில் கூறப்பட்டுள்ளது

சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

குறள் 230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை
[அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]

பொருள்
சாதலின் - சாதல் - cātal   n. சா-. Death; இறப்பு சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தினாகும்(சீவக. 269).  ; iṟappu   n. id. 1. Transgression,trespass; அதிக்கிரமம் பொறுத்த லிறப்பினை யென்றும் (குறள், 152). 2. Going, passage, passing;போக்கு. (பிங்.) 3. Death; மரணம் (திருவாச. 5,12.) 4. Excess, abundance; மிகுதி (பிங்.) 5.That which is superior; உயர்ந்தபொருள். ஒப்பிறப்பில் வெங்கையுடையோய் (வெங்கைக்க. 75). 6.Heavenly bliss, emancipation; மோக்ஷம். இறுகலிறப்பென்னும் ஞானிக்கும் (திவ். திருவாய். 4, 1, 10).7. [M. iṟa.] Inside or under part of a slopingroof, eaves; வீட்டிறப்பு இறப்பிற் றுயின்று (திருக்கோ. 328). 8. (Gram.) past tense; இறந்தகாலம் இறப்பி னெதிர்வி னிகழ்வின் (தொல். சொல் 202).

இன்னாது - iṉṉātu   n. இன்னா-மை. 1.Evil; தீது பிறப்பின்னா தென்றுணரும் (நாலடி. 173).2. Pain; துன்பு (ஈடு.)  

இன்னாதது - துன்பமானது வேறு

இல்லை - இல்லை

இனிது - iṉitu   இனி-மை. n. 1. Thatwhich is sweet, pleasing, agreeable; இன்பந்தருவது. இனிதுறுகிளவியும் (தொல். பொ 303). 2. Thatwhich is good; நன்மையானது.--adv. Sweetly,favourably; நன்றாக புலியூர்ப் புக்கினி தருளினன்(திருவாச. 2, 145).  

அதூஉம் - அதுவே

ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

இயை - அழகு; புகழ் இசைப்பு வாழை
கடை - kaṭai   n. 1. [T. M. kaḍa, K. Tu.kaḍe.] End, termination, conclusion; முடிவு (பிங்.) 2. Place; இடம் (திவா.) 3. Limit,boundary; எல்லை கடையழிய நீண்டகன்ற கண்ணாளை (பரிபா. 11, 46). 4. Shop, bazaar, market;அங்காடி. (பிங்.) 5. Inferiority, baseness, meanness, lowness, least, lowest, worst; கீழ்மை நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்கு (திருவாச. 1,60). 6. Degraded person, man of low caste;தாழ்ந்தோன். கல்லாத சொல்லுங் கடையெல்லாம்(நாலடி, 255). 7. Entrance, gate, outer gate-way; வாயில் கடைகழிந்து (அகநா. 66). 8. Clasp,fastening of a neck ornament; பூண்கடைப்புணர்வு (திவா.) 9. Handle, hilt; காம்பு கடைகுடை யெஃகும் (மலைபடு. 490).--adj. Succeeding,following; பின் கடைக்கால் (பழ. 239).--part.1. (Gram.) Sign of the locative; ஏழனுருபு. (நன்.302.) 2. Verbal prefix; ஓர் உபசருக்கம் கடைகெட்ட(திருப்பு. 831). 3. Termination of a verbalparticiple; ஒரு வினையெச்ச விகுதி ஈத லியையாக்கடை (குறள், 230).

இயையாக்கடை - செய்யமுடியாமல் போகும்போது

முழுப்பொருள்
மரணம் என்பது கொடுமையானது ஆகும். அதற்கு அஞ்சுகிறான் மனிதன். மரணம் பற்றிய சிந்தனையே பல நேரங்களில் உவப்பானது கிடையாது. மரணத்தின் நினைப்பு அவனுக்கு துன்பத்தை தரும்.

பிறருக்கு கொடுப்பதே அறம். அதுவே இல்லற வாழ்வின் கடமையாகும். ஆனால் அத்தகைய நேரங்களில் ஒருவரால் பிறருக்கு கொடுக்க முடியவில்லை என்றால் அக்கணமே இறந்து விடுதல் போன்று இனிமையானது வேறு ஏதும் இல்லை. ஏனெனில் நம்மால் பிறருக்கு உதவ முடியவில்லையே என்று வரும் காலங்களில் பலமுறை வருந்துவதை (இறப்பதை) விட ஒரு முறை சாதலே இனிது ஆகும். பிறருக்கு உதவ முடியாத தேகம் வாழ்தலை விட இறத்தல் இனிது. 

மகாபாரதப்போரில் கர்ணன், ஒரு சில விநாடிகள் தன்னை அண்டி, தானம் யாசிக்கும் கண்ணனுக்கு கொடுக்கவொன்றுமில்லையே என்று வருந்தினாலும், தன்னுடைய புண்ணியங்களின் பலன்களை கொடுப்பதால், தன்னுடைய உயிரையே இழக்க நேரிடுமென்று அறிந்தும் உவகையோடு கொடுக்கிற காட்சி உண்டு. அது இத்தகைய ஈகையை காட்டும் சித்திரம். தருமம் தலையைக் காக்கும், அது நீங்கினால் தலையை எடுக்கும் என்பதையும் உணர்த்தும் சித்திரம்.

சாதல் என்ன துன்பமா? பிறந்து முடிதல் இயற்கையெனினும், மீண்டும் சேரமுடியாத பிரிவு துன்பமே. “சாதல் அன்ன பிரிவு” என்கிறது அகநானூற்றுப் பாடல், (339:14). கலித்தொகைப் பாடல் (43:26.7), “இன்மையுரைத்தார்க் கதுநிறைக்கா லாற்றாக்கால் தன்மெய் துறப்பான் மலை” என்கிறது, ஈகையை தன் உயிரினும் மேலாக நினைப்பாரை.

நாலடியார் பாடல் பசியால் வாடிவருபவருக்கு, உள்ளிருந்தும், ஒன்றுமே ஈயாதான், இருப்பதைவிட இறந்து வானுலகுக்கு விருந்தாவதே  நன்று என்கிறது. இருந்து-வுக்கு எதுகையாக விருந்து இருந்தாலும், ஈயாத கருமிகள் எப்படி வானுலகிற்கு விருந்தாவர்? வேண்டுமானால் நரகத்திற்கு விருந்தாகலாம்.

உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்(கு)
உள்ளூர் இருந்தும்ஒன் றாற்றாதான் – உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தினன் ஆதலே நன்று (நாலடி 288)

“தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால்
ஈண்டு வந்துனை யிரந்தவர்க் கிருநிதி யவளை
வேண்டி யீதியோ வெள்குதி யோவிம்மல் நோயால்
மாண்டு போதியோ மறுத்தியோ வெங்ஙனம் வாழ்தி” (கம்ப.மந்தரை 72)

மேலும்: அஷோக் உரை



குறளின் அடிப்படை அறங்களாக முன்வைக்கப்படுபவை கொல்லாமை, ஈகை, பொறையுடைமை போன்றவையே. அவையும்கூட மிக மென்மையாக மனசாட்சியை நோக்கிப் பேசப்படும் தொனியிலேயே வலியுறுத்தப்படுகின்றன.
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதுவும்
ஈதல் இயையா கடை
சாதலைவிட கொடியது இல்லை, ஆனால் கொடைக்கு முடியாத நிலைவந்தால் அதுவும் இனிதே’ என்ற குறள் உண்மையில் மிகக் கடுமையானது. இரப்பவர்களுக்கும் அறவோருக்கும் கொடுப்பதே இல்லறத்தார் கடமை என்று வகுக்கிறது சமண மரபு. அப்படிக் கொடுக்க முடியாதபோது சாவதே மேல் என்று ஆணையிட வரும் குறள் அந்நிலையில் மரணமும் இனியதாகிவிடும் என்றே கூறியமைகிறது.

பரிமேலழகர் உரை
சாதலின் இன்னாதது இல்லை - ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை, அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது - அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது. (பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சாதலின் மிக்க துன்பமில்லை. அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து. இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது.

மு.வரதராசனார் உரை
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து

குறள் 867
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]

பொருள் 
கொடுத்தும் - koṭu-   11 v. tr. [K. koḍu,M. koṭu.] 1. To give, grant, supply; ஈதல் கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க்கு (குறள், 1005).2. To bring forth; பெற்றெடுத்தல். பார்வதியேழுலகுங் கொடுத்தாள் (பிரமோத். 9, 61). 3.To divide, distribute, as a sum of money;பங்கிடுதல். இந்தத் தொகையைப் பத்துப்பேருக்குக்கொடு. 4. To sell; விற்றல் தில்லை முன்றிற்கொடுக்கோ வளை (திருக்கோ. 63). 5. To allow,permit; உடன்படுதல் மலரன்றி மிதிப்பக் கொடான்(திருக்கோ. 303). 6. To lose by death, asgiving to Yama; சாகக்கொடுத்தல். நீ பயந்தகோட்டானைத் தானே கொடு (தனிப்பா. i, 35, 68).7. To abuse roundly; திட்டுதல் நன்றாய்க் கொடுத்தாளா? வேணும், வேணும் 8. To belabour,thrash; அடித்தல் --aux. An auxiliary verb, asin சொல்லிக்கொடு, முடித்துக்கொடு; ஒரு துணைவினை

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

வேண்டும் -  vēṇṭum   imp. v. + dat. veeNum வேணும் want; should, need 
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்

மன்ற -  maṉṟa   perh. மன்னு-. adv. 1.Clearly; தெளிவாக. (தொல். சொல். 267.) 2.Certainly; நிச்சயமாக. சென்று நின்றோர்க்குந்தோன்று மன்ற (புறநா. 114). 3. Abundantly,plentifully; மிக. மன்ற வவுணர் வருத்திட (கந்தபு.தேவ. போற். 6).--part. An expletive; ஓர் அசைச்சொல். (யாழ். அக.); maṉṟa   s. certainty, தேற்றம்; 2. abundance, மிகுதி.; ஓர்அசைச்சொல்; உறுதியாக; தெளிவாக; மிக

அடுத்து - அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல்.
ஊர்வது - ūr-   4 v. [M. ūr.] intr. 1. Tomove slowly; to creep, as an infant; to crawl,as a snake; நகர்தல் நந்தூரும் புனனாட்டின் (பாரத.கிருட்டிண. 11). 2. To spread, circulate, as blood;to extend over a surface, as spots on the skin;பரவுதல். இவக்காணென் மேனி பசப்பூர் வது (குறள்,1185). 3. To flow, as juice from the sugar-cane; வடிதல் கரும்பூர்ந்த சாறுபோல் (நாலடி, 34).4. To come to close quarters; அடர்தல் வெஞ்சமமூர்ந்தம ருழக்கி (சிலப். 27, 27, அரும்.). 5. To beunloosed, relaxed; கழலுதல் அவிர்தொடி யிறையூர(கலித். 100). 6. To itch; தினவுறுதல். உடம்பெல்லாம் ஊருகின்றது.--tr. 1. To mount; ஏறுதல் பாசடும்பு பரியவூர் பிழிபு . . . வந்தன்று . . . தேர்(ஐங்குறு. 101). 2. To ride, as a horse; to drive,as a vehicle; ஏறிநடத்துதல். சிவிகை பொறுத்தானோடூர்ந்தானிடை (குறள், 37).

இருந்து - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

மாண்(ணு)-தல் - māṇ-   7 v. intr. 1. Tobecome excellent, glorious; மாட்சிமைப்படுதல்.மாண்டார் வினைத்திட்பம் (குறள், 665). 2. To begood, worthy; நன்றாதல். மாண்டற் கரிதாம் பயன்(குறள், 177). 3. To be full, abundant; நிறைதல்.மாணாப் பிறப்பு (குறள், 1002). 4. To be great; மிகுதல். மாணப் பெரிது (குறள், 124).

மாணாத - பொருந்தாத ; மாட்சியற்ற 

செய்வான் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

முழுப்பொருள்
பகை என்றென்பது மனதில் மகிழ்ச்சியையும் முகத்தில் சிரிப்பையும் அழித்துவிடும். பகை ஒருவனுக்கு கெடுதலையே செய்யும் என்று தான் அறிந்துணர்ந்தோம். ஆனால் அப்பகையையும் சிலரிடம் விலை கொடுத்தாவது பெறலாம் என்கிறார் திருவள்ளுவர். முரணாக உள்ளதா? முரண் ஒன்றுமில்லை. அதற்கு காரணம் இருக்கிறது. 

நம்முடன் சேர்ந்து இருப்பவர்கள் மனம் ஒத்து இல்லாமல் மாட்சியற்ற (அறம் அற்ற தீய) செயல்களை செய்பவர்களானால் அவர்கள் நமக்கு இழுக்கையும் கேட்டையும் சேர்ப்பார்கள். அது நிகழ்காலத்திலும் தொலை நோக்கிலும் நமக்கு கேடே. அவர்கள் நம்முடன் இருக்கும் பொழுது நமக்கு நிம்மதியே இருக்காது. நம்முடன் இருந்தால் அவர்கள் மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டே இருப்பார்கள். ஆதலால் அவர்களிடம் இருந்து விலகுவதே தீர்வாக அமையும். வைத்துக்கொண்டு மனதில் புழுங்குவதை காட்டிலும் வெட்டிவிட்டு இருப்பது அதிக நிம்மதி தானே. 

ஆனால் சேர்ந்து இருப்போரை எப்படி கழற்றிவிடுவது? அதற்கு பகையை தவிர வேறு வழி உண்டா என்ன? பகை உறவை முறிக்கும் தன்மை வாய்ந்தது. ஆதலால் மாட்சியற்றவற்றை செய்பவர்களிடம் பகையை விலைகொடுத்தாவது வாங்கிக்கொள்ள வேண்டும் என்றென்கிறார் திருவள்ளுவர்.

இதற்கு விலை என்றால் அது பல வேறு விதங்களில் இருக்கும். ஒரு நாடும் மற்றொரு நாடும் அருகருகே சேர்ந்து இருந்தாலும் மனதளவில் ஒற்றுமை இல்லை என்றால் அவர்கள் நமக்கு இடையூறே. அவர்களை பகையாக கொண்டால் போர் புரிய நேரிடும். போர் என்பது உயிர்கள், நேரம், செல்வம் என்று பலவற்றை விலையாக கேட்கும். 

அதுவே சில சமயம் உறவுகளாக இருந்தால் நம்முடன் இருந்துகொண்டே நமக்கு கஷ்டம் கொடுப்பர். அவர்களிடம் பகை கொண்டால் நம்முடன் இருக்கும் மற்ற உறவினர்கள்/நண்பர்கள் நமக்கு வந்து "தண்ணி அடித்து தண்ணி விலகாது" என்றோ அல்லது "ஆயிரம் இருந்தாலும் நாம் எல்லாம் ஒரு உறவு/நட்பு" என்றோ அறிவுரை கூறுவர்.  பல தடவை இவர்களின் அழுத்தத்தை சந்திப்பதும் அதற்கு விடை/மறுப்பு அளிப்பதும் ஒருவித விலையே. அதை ஒரு சில நிமிடங்கள் அல்லது சில மணிநேரங்கள் கொடுத்தே/சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் இவர்களுக்காக/வெளியுலகிற்காக நாம் மனம் ஒற்றாதவரிடம் உறவாடிக்கொண்டு இருந்தால் நமக்கு காலம் முழுவதும் கொடைச்சலே. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை - வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன செய்வான் பகைமையை; கொடுத்தும் கொளல் மன்ற வேண்டும் - சில பொருள் அழியக் கொடுத்தாயினும் கோடல் ஒரு தலையாக வேண்டும். (ஏலாதன - மெலியனாய் வைத்துத் துணிதலும், வலியனாய் வைத்துத் துணிதலும் முதலாயின, அப்பொழுது அதனால் சில பொருள் அழியினும், பின் பல பொருள் எய்தற்கு ஐயம் இன்மையின், 'கொளல் வேண்டும் மன்ற' என்றார். இவை ஆறு பாட்டானும் அது சிறப்பு வகையாற் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகையை உற்றிருந்தும் மாட்சியையில்லாதன செய்யுமவன் பகையினைத் துணிந்து ஒன்றனைக் கொடுத்தும் கொள்ளல் வேண்டும். மாணாதசெய்தலாவது பகைக்காவன செய்யாது பிறிது செயல். இஃது இவன் பகைசெய்யமாட்டானாதலால் அப்பகை கோடலாமென்றது.

மு.வரதராசனார் உரை
தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்.

001 கடவுள் வாழ்த்து

பால் - அறத்துப்பால்
இயல் - பாயிரவியல்
அதிகாரம் - கடவுள் வாழ்த்து

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

குறள் 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

குறள் 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

குறள் 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு


குறள் 8


குறள் 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

பதிவு வரிசை

கற்க கசடற - உயர் வள்ளுவம் - இலங்கை ஜெயராஜ் அவர்களின் விரிவுரை 
அறிமுகம் - முன்னுரை 
https://www.youtube.com/watch?v=5bReMsrkh1c

உரைப்பாயிரம் - 1
https://www.youtube.com/watch?v=pCSw_Isgpdg

உரைப்பாயிரம் - 2
https://www.youtube.com/watch?v=O1Bllb7A5Gk

உரைப்பாயிரம் - 3 & கடவுள் வாழ்த்து - 1
https://www.youtube.com/watch?v=x0z7aUy_R3M

கடவுள் வாழ்த்து - 2
https://www.youtube.com/watch?v=QNpwDedoyG0

கடவுள் வாழ்த்து - 3
https://www.youtube.com/watch?v=RoG4Qk2KZcA

கடவுள் வாழ்த்து - 4
https://www.youtube.com/watch?v=g-16oUnsGkk

கடவுள் வாழ்த்து - 5
https://www.youtube.com/watch?v=ZMsEnyhvLpE

கடவுள் வாழ்த்து - 6
https://www.youtube.com/watch?v=2lxbGQYQN-0

கடவுள் வாழ்த்து - 7


கடவுள் வாழ்த்து - 8


கடவுள் வாழ்த்து - 9


கடவுள் வாழ்த்து - 10

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

குறள் 90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மோப்பக் - மணம்; மூக்கு.
குழையும் - குழை-தல் - kuḻai-   4 v. intr. [K. koḻe, M.kuḻayu.] 1. To become soft, mashy, pulpy, aswell-cooked; இளகுபதமாதல். குழையச் சமைத்தபருப்பு (திவ். பெரியாழ். 3, 1, 3, வ்யா.). 2. Tomelt, become tender, as the mind; மனமிளகுதல் தொண்டரினங் குழையாத்தொழும் (பதினொ. பட்டினத்.திருவே. 28). 3. cf. kuth. To be overboiled, asrice; சோறு அளிதல். 4. cf. kuš. To be in closeintimacy, to be hand in glove with; நெருங்கி உறவாடுதல் குழைந்து பரிமாறுகிறார்கள். 5. cf. kuṭ. Tobe bent, as a bow; வளைதல் திண்சிலைகுழைய (சூளா.அரசியற். 319). 6. To fade, languish, becomespoilt, as flowers or twigs; வாடுதல் மோப்பக்குழையு மனிச்சம் (குறள், 90). 7. To wave, as aflag, to sway to and fro; துவளூதல். குழைந்த நுண்ணிடை (கம்பரா. சித்திர. 9). 8. To be tired, to beweighed down; தளர்தல் கோதைசூழ் கொம்பிற்குழைந்து (பு. வெ 12, பெண்பாற். 14). 9. To betroubled; வருந்துதல் மகளிர் குழைகின்ற குழைவை(கம்பரா. பிரமாத். 31).  

அனிச்சம் - மோந்தால் வாடும் பூவகை

முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

திரிந்து - திரிதல் - அலைதல்; எழுத்துமாறுதல்; பால்தன்மைகெடுதல்; கெடுதல்; சுழலல்; வேறுபடல்; சலித்தல்; மயங்குதல்; கைவிடுதல்; திருகுறுதல்; போதல்; திரும்புதல்.

நோக்கக் - நோக்குதல் -  பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

குழையும் குழை-தல் - kuḻai-   4 v. intr. [K. koḻe, M.kuḻayu.] 1. To become soft, mashy, pulpy, aswell-cooked; இளகுபதமாதல். குழையச் சமைத்தபருப்பு (திவ். பெரியாழ். 3, 1, 3, வ்யா.). 2. Tomelt, become tender, as the mind; மனமிளகுதல் தொண்டரினங் குழையாத்தொழும் (பதினொ. பட்டினத்.திருவே. 28). 3. cf. kuth. To be overboiled, asrice; சோறு அளிதல். 4. cf. kuš. To be in closeintimacy, to be hand in glove with; நெருங்கி உறவாடுதல் குழைந்து பரிமாறுகிறார்கள். 5. cf. kuṭ. Tobe bent, as a bow; வளைதல் திண்சிலைகுழைய (சூளா.அரசியற். 319). 6. To fade, languish, becomespoilt, as flowers or twigs; வாடுதல் மோப்பக்குழையு மனிச்சம் (குறள், 90). 7. To wave, as aflag, to sway to and fro; துவளூதல். குழைந்த நுண்ணிடை (கம்பரா. சித்திர. 9). 8. To be tired, to beweighed down; தளர்தல் கோதைசூழ் கொம்பிற்குழைந்து (பு. வெ 12, பெண்பாற். 14). 9. To betroubled; வருந்துதல் மகளிர் குழைகின்ற குழைவை(கம்பரா. பிரமாத். 31).  

விருந்து -  viruntu   n. [T. vindu, M.virunnu.] 1. Feast, banquet; அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211). 2. Guest; அதிதி.விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறநா.266). 3. Newcomer; புதியவன். விருந்தா யடைகுறுவார் விண் (பு. வெ. 3, 12). 4. Newness, freshness; புதுமை. விருந்து புனலயர (பரிபா. 6, 40).5. (Pros.) Poetic composition in a new style;நூலுக்குரிய எண்வகை வனப்புக்களு ளொன்று.(தொல். பொ. 551.)

முழுப்பொருள்
தொடக்கூட வேண்டாம் முகர்ந்தாலே அனிச்சம் மலர் வாடிவிடும். அவ்வளவு மென்மையானது அனிச்சம். அதுப்போல வரும் விருந்தினர்களிடம் முகம் சலித்தோ அல்லது வேறுபட்டோ இன்முகம் காண்பிக்காமல் வரவேற்றாலோ அல்லது விருந்தளித்தாலோ அல்லது பிரியம் இல்லாமல் பார்த்தாலோ முகம் சலித்த நொடியே வந்த விருந்தினர்களுக்கு வருத்தத்தை  தந்துவிடும். விருந்தினர் வாடிவிடுவார். முகமே சலிக்க கூடாது என்றால் நம் சொல் நம் நடவடிக்கைகள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

ஆதலால் விருந்தை லேசாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு மென்மையான மலரை கையாளுவது போன்று பக்குவமாய் கையாளவேண்டும். வரும் விருந்தினர் எக்காரணத்திற்காகவும் வருந்தக்கூடாது. 

சிலர் அனிச்சம் பூவை விருந்தினருடன் ஒப்பிட்டு கூறுகின்றனர். அனிச்சம் பூ போன்று மென்மையான குணம் கொண்டவர்களுக்கு விருந்தளிக்க வேண்டும். விருந்தினர் மென்மையாவர்களாக இருக்க வேண்டும். குறைகள் சொல்ல கூடாது என்று கூறுகின்றனர். திருவள்ளுவர் இக்குறளில் அப்படி கூறவில்லை. ஏனெனில் "குறள் 580 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்" என்ற குறளில் விருந்தினர்களுக்கான இலக்கணத்தை வரையறை செய்துள்ளார் திருவள்ளுவர். இக்குறள் முழுக்க முழுக்க விருந்து அளிப்பவர்களுக்கான குறள். 

அனிச்சமலர் மிகவும் மென்மையானது. இலக்கியங்களில் பெண்களின் மென்மையோடு ஒப்பிட்டு பேசப்பட்ட ஒரு மலர். இதை மார்பணியும் மாலையாகத் (தார்) தொடுத்து அணிந்துகொண்டதையும், கண்ணியாக (வளையமாக) கைகளிலும், கழுத்திலும் அணிந்துகொண்டதையும் “அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம் புரிநெகிழ் முல்லை நறவோடு அமைந்த தெரிமலர் கண்ணியும் தாரும் நயந்தார்” (கலித்.மரு. 26:1-3) என்னும் கலித்தொகை பாடல் வரி தெரிவிக்கிறது.

அனிச்சத்தின் மென்மை பற்றி “அனிச்சத்தம் போது போலத் தொடுப்பவே குழைந்து மாழ்கி” என்று (சீவக.2939) கூறுகிறது
முகம் திரிந்து நோக்குதல் பற்றி “அகன்நக வாரா முகன் அழி பரிசில்” என்று புறநானூறு (207:4) கூறுகிறது.

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் குறிப்பாக (main-ஆக) அவரது துணைவியார் கணவதி அம்மாள் பற்றி கி.ரா.இணைநலம் (எஸ்.பி.சாந்தி எழுதியது) நூலில் இருந்து சில பகுதிகள்
கணவதி அம்மாள் (கி.ராவின் மணைவி): கவிஞர் நாவன்னா காமராஜ்னு ஒருத்தர். அய்யாவுக்கு வேண்டியவர். காதி போர்டு இருந்தவர். அவர் ஒரு தடவை கன்னியாகுமரியிலிருந்து ஒரு முப்பது பேருடன் பாதயாத்திரை சென்று திரும்பி வந்துகிட்டிருப்பதாவும், இடைசெவல் வழியா வாரதாகவும், இரவு சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்யும்படியும் சேதி சொல்லி அனுப்பிவிட்டார். கேப்பைக்களியும், கருவாட்டுக் குழம்பும் போதும் என்று செய்ய வேண்டிய சமையல் அயிட்டத்தையும் அவரே சொல்லிவிட்டார். 
“முப்பது பேர்னா சும்மாவ. இரண்டு நாள் முன்னாடிதான், மத்தளம்பாறை வீட்டில் இருந்து வெள்ளைக் கேழ்வரகு ஒரு பத்து கிலோ போல கொடுத்து விட்டிருந்தாங்க.அதை அரைச்சி வெச்சிருந்தேன். எங்க ஊர்ல “பெத்த பூச்சி”ன்னு ஒரு பெரிய அம்மா கேப்பக் களி கிண்டுவதில் ரொம்ப திறமைசாலி. அவங்கள கூப்பிட்டு கேப்பைக்களி பண்ணி, கருவாட்டுக் குழம்பு தயார் பண்ணோம், தோசை ஊற்றி, அதையும் தயாரா வைச்சிருந்தோம். பிறகு பத்துமோ, பத்தாதோன்று உப்புமாவும் கிண்டி எல்லாருக்கும் வயிறார பசியாற்றினோம்.

வீட்டுக்கும் வர்ரவங்க யாரா இருந்தாலும், சாப்பிடற நேரத்துக்கு வந்துட்டாங்கன்னா, அவங்களுக்கும் பசியாத்தினாத்தான் எங்களுக்கு நிம்மதியா சோறு இறங்கும்.

அவர்கள் பேசி முடித்தவுடன் நானும்(எஸ்.பி.சாந்தி) நினைத்துப் பார்க்கிறேன். அய்யா பாண்டிச்சேரியில் மாறிய அத்தனை வீடுகளுக்கும் போயிருக்கிறேன். நான் அவர்கள் வீட்டில் ஒரு வேளையாவது உண்ணாமல் வந்ததில்லை. அதோடு, பல சமயங்களில் யாராவது கூடுதல் நண்பர்கள் வந்திருப்பார்கள்.

நான் ஒரு முறை சென்றபோது, திரு மாசிலாமணி, Ex.MLA, ஜெயங்கொண்டம் அவர்கள் குழந்தைகளுடன் பெண்ணின் திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். நல்ல வெய்யில் நேரம்.

சிறிது நேர உரையாடலுக்குப் பின் விருந்து உபச்சாரம் ஆரம்பித்து விடுகிறது. என்ன, பருப்பும் நெய்யும், வடையும், பாயாசமும் இல்லை. புளிக்குழம்பு,கீரைக்கூட்டு, வெண்டைக்காய் வறுவல், முட்டை என சாதாரண சாப்பாடுதான். ரொம்ப திருப்தியான சாப்பாடும்மா என்கிறார் விருந்தினர்.

அய்யா உடனே, “இங்கு வர்ரவங்க எல்லாருமே சாப்பாடு ருசியா இருக்குன்னு சொல்றாங்க. இது சாதாரண சாப்பாடுதானே” என்கிறார். சாப்படு என்பதின் ருசி சாப்பாட்டில் மட்டும் இல்லை. கூட இருக்கும் மனிதர்களின் கபடமில்லாத மனம், அவர்களின் இனிய உபசரிப்பு, பரிமாறும் விதம், உறுத்தல் இல்லாத, கலப்படமில்லாத எளிய பேச்சு,  இப்படி நிறைய்ய.

(19 செப் 2006 அன்று எடுத்த ‘அவள் விகடன்’ பேட்டியில் இருந்து ஒரு கேள்வி): இன்றும் உங்கள் மனைவியிடம் நீங்கள் வியந்து ரசிக்கும் விஷயம் எது?
கி.ரா: கவிஞர் நா.காமராசன் அவர்கள் தனது “படை பட்டாள”த்துடன் ஒரு நடைப்பயணம் வந்தார் (சுமார் 30 பேர் இருக்கலாம்). “ராத்திரி நாங்கள் இடைசேவல் தங்கல். எங்களுக்கு கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும் போதும் வேற எந்த விருந்தும் வேண்டாம் என்று துண்டுச்சீட்டு கொடுத்தனுப்பி இருந்தார்.

என் நண்பர் மத்தளம் பாறை ராமசாமி அவர்கள் அவருடைய தோட்டத்தில் விளைந்த வெள்ளைக் கேப்பை (ராகி) கொடுத்துனுப்பியிருந்தார். அன்றுதான் அதை மாவு அரைத்து வைத்திருந்தோம். ராமேஸ்வரம் பால் நெத்திலிக் கருவாடு வீட்டில் இருப்பு இருந்தது. ஒரு சிரமும் இல்லை; முப்பது பேருக்கு அளவில் களி கிண்டுவது தான் சிரமம். சொந்தக்காரப் பெண்கள் வந்து உதவினார்கள். காணுமோ காணாதோ என்று அரிசியைக் கொஞ்சம் நனைய வைத்து ஆட்டி ஒரு திடீர் உப்புமா செய்தாள். பிறகுதான் தெரிந்தது இதும் சரிதான் என்று. நடந்து வந்த பசி அவர்களுக்கு. கேப்பைக் களியும் கருவாட்டுக் கொழம்புக்கும் ஒரே கொண்டாட்டம்; உப்புமாவும் போன மூலை தெரியவில்லை. ஒரு தார் கதலிப்பழமும் சேர்ந்து கைகொடுத்தது.




அண்மயில் கவிஞர் விக்ரமாதித்யன் - இன் அ-விருந்தோம்பல் என்ற கவிதை ஒன்றை வாசித்தேன். 

அ-விருந்தோம்பல் 

முதலில் ஆள் 
ஊரில் இருக்க வேண்டும் 
அப்புறம் அவர் 
வசதியாக இருக்கவேண்டும் 
பிறகு அவரே 
வரவேற்கிற மனநிலையில் இருக்கவேண்டும் 
எல்லாமே கூடிவந்தால் நல்லது 

இடவசதி 
இருக்கவேண்டும் 
பணவசதி 
இருக்கவேண்டும்

நேரம் 
இருக்கவேண்டும் 
விளையாட்டில்லை 
விருந்துபசரிப்பு 

வேலைப்பளு 
இருக்கக்கூடாது 
மனைவி 
கோபித்துக்கொள்ளக்கூடாது
உணவுப்பழக்கம் 
ஒத்துப்போகவேண்டும் 
எவ்வளவு இருக்கிறது 
ஒருவனை வா என்று சொல்ல 
கடன் வாங்கவாவது
முடிய வேண்டும் 
கைமாற்றாவது 
கிடைக்கவேண்டும் 

தன்னைப் பேணிக்கொள்வதே பெரிய காரியம் 
இன்னும் இருக்கிறது வீடு குடும்பம் பிள்ளைகள் 
விருந்தினர் வருகையை எப்படிக் கொண்டாட 
அவரவர்க்கும் 
ஆயிரத்தெட்டு பிரச்னைகள் 
எதற்குத் தேடிப்போய்ப் பார்த்து 
இடைஞ்சல் பண்ணுவானேன் 
இருட்டோ வெளிச்சமோ 
இருக்கும் இடத்திலேயே இருக்கலாம்
--விக்ரமாதித்யன் 


பரிமேலழகர் உரை
அனிச்சம் மோப்பக் குழையும் - அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது; விருந்து முகம் திரிந்து நோக்கக்குழையும் - விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர். (அனிச்சம் ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எல்லா மலரினும் மெல்லிதாகிய அனிச்சப்பூ மோந்தாலல்லது வாடாது: விருந்தினரை முகந்திரிந்து நோக்க அவர் வாடுவர். இது முகம்நோக்கி யினிமை கூறவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

சாலமன் பாப்பையா உரை
தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
வந்த விருந்தினர் வருந்தும்படி நடவாதீர்.

English Meaning - As I taught a kid - Rajesh
The Anicham (Scarlet pimpernel) flower when smelled will wilt / flop /droop. That sensitive it is. Similarly, when our face expressions aren't pleasant with our guests, the entire hospitality is spoiled despite massive arrangements made. Our guests will get hurt. Thiruvalluvar doesn't even mention our voice tone or body language etc because all these will have its reflection in face. Also, face is the mirror of heart. Hence, hospitality should be from heart. It shouldn't namesake. 

Questions that I ask to the kid
How sensitively we should handle hospitality? Explain with an easy metaphor.

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து

 

குறள் 607
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்
[பொருட்பால், அரசியல், மடியின்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இடி - தாக்குகை; மா சிற்றுண்டி பொடி இடியேறு பேரொலிகழறுஞ்சொல்; குத்துநோவு; அக்கினி உறுதிச்சொல் ஆட்டுக்கடா

இடித்தல் - முழங்குதல்; இடியிடித்தல்; நோதல் தாக்கிப்படுதல்; மோதுதல் கோபித்தல் தூளாக்குதல்; தகர்த்தல் நசுக்குதல் தாக்குதல் முட்டுதல் கழறிச்சொல்லுதல்; கொல்லுதல் தோண்டுதல் கெடுத்தல்

புரிந்து - புரிதல் - puri-   4 v. tr. 1. To desire;விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261).2. To meditate upon; தியானித்தல். இறைவன். . . புகழ் புரிந்தார் (குறள், 5). 3. To do, make;செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி,323). 4. To create; படைத்தல். எவ்வுலகும் புரிவானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65). 5. Tobring forth, produce; ஈனுதல். பொன்போறார்கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109). 6. To give;கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள்(உபதேசகா. சிவவிரத. 257). 7. To experience, suffer; அனுபவித்தல். புண்டரிகை போலுமிவ ளின்னல்புரிகின்றாள் (கம்பரா. சூளா. 1). 8. To gaze at,watch intently; உற்றுப்பார்த்தல். பயத்தாலே புரிந்துபார்க்கிறபோது (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 174).9. To investigate, examine; விசாரணை செய்தல்.அறம் புரிந்தன்ன செங்கோ னாட்டத்து (புறநா. 35).10. To say, tell; சொல்லுதல். அந்தணாளர் புரியு மருமறை (தேவா. 865, 5). 11. To exercise, perform;நடத்துதல். அரசு புரிந்தான். 12. To accept; மேற்கொள்ளுதல். போக்குவரவு புரிய (சி. போ.

எள்ளும் -எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்.

கேட்பர் -  செவிக்கொடுப்பர்

மடி மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.

புரிந்துபுரிதல் - puri-   4 v. tr. 1. To desire;விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261).2. To meditate upon; தியானித்தல். இறைவன். . . புகழ் புரிந்தார் (குறள், 5). 3. To do, make;செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி,323). 4. To create; படைத்தல். எவ்வுலகும் புரிவானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65). 5. Tobring forth, produce; ஈனுதல். பொன்போறார்கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109). 6. To give;கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள்(உபதேசகா. சிவவிரத. 257). 7. To experience, suffer; அனுபவித்தல். புண்டரிகை போலுமிவ ளின்னல்புரிகின்றாள் (கம்பரா. சூளா. 1). 8. To gaze at,watch intently; உற்றுப்பார்த்தல். பயத்தாலே புரிந்துபார்க்கிறபோது (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 174).9. To investigate, examine; விசாரணை செய்தல்.அறம் புரிந்தன்ன செங்கோ னாட்டத்து (புறநா. 35).10. To say, tell; சொல்லுதல். அந்தணாளர் புரியு மருமறை (தேவா. 865, 5). 11. To exercise, perform;நடத்துதல். அரசு புரிந்தான். 12. To accept; மேற்கொள்ளுதல். போக்குவரவு புரிய (சி. போ.

மாண்டற்கு - மாண்(ணு)-தல் - māṇ-   7 v. intr. 1. Tobecome excellent, glorious; மாட்சிமைப்படுதல்.மாண்டார் வினைத்திட்பம் (குறள், 665). 2. To begood, worthy; நன்றாதல். மாண்டற் கரிதாம் பயன்(குறள், 177). 3. To be full, abundant; நிறைதல்.மாணாப் பிறப்பு (குறள், 1002). 4. To be great; மிகுதல். மாணப் பெரிது (குறள், 124).

மாண்டல் - மாட்சிமைப்படுதல்; இறத்தல்.

மாண்ட  -மாண்(ணு)-தல் - மாட்சிமைப்படுதல், மிகுதல், நன்றாதல்

உஞற்று - ஊக்கம்; முயற்சி; இழுக்கு; வழக்கு.

இலவர் - இல்லாதவர்

முழுப்பொருள்
சோம்பலினால் தான் செய்யவேண்டிய செயல்களை செய்ய ஒருவன் மறந்து நல்ல ஊக்கத்தைக்கொண்ட முயற்சியினையும் இல்லாதவரைக் உறவினர்கள் கோபித்து பேசுவர் பெரியோர்களும் சமூகமும் இகழ்ந்து பேசும். 

சோம்பல் உடையவரை கண்டு அவருடன் இருக்கும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இடித்து உரைப்பர்.  கோபிப்பர். தாக்கிப்பேசுவர். அதுவே ஒருவர்க்கு வாழுவும் தரும் முதல் எச்சரிக்கை மணி. (அதனை கூறும் உற்றார்களையும் நண்பர்களையும் பெற்றதற்கு ஒருவர் கடமைப்பட்டிருக்கவேண்டும் என்றே நான் சொல்லுவேன்). அம்மணியினை கேட்டு ஒருவர் சுதாகரித்துக்கொண்டு சோம்பலை கொன்று முனைப்புடன் செயலாற்ற வேண்டும். இல்லையேல் அவர் அவருடைய புகழை பெருமையை இழப்பார். சோம்பித்திரியும் அவரை இவ்வுலகம் விரைவில் இழித்து பேசும். அத்தகைய இழிச்சொல்லையும் தன் வாழ்நாளிலேயே கேட்கவேண்டும். ஆதலால் அத்தகைய அவநிலைக்கு ஆளாகாதே. சோம்பலை கொன்று விடு என்று கூறாமல் கூறுகிறார் திருவள்ளுவர்.

ஒருவர் தனது கடமைகளை (அதாவது அவருடைய அறம்) ஆற்றவில்லையென்றால் அவர் பொருள் ஈட்டுவது கடினமாகிவிடும். பொருள் இல்லையேல் இல்லறம் (அரசாங்கமும்) நடத்தவும் முடியாது. பொருள் இல்லையேல் இன்பமும் இல்லை. ஆதலால் அறம் பொருள் இன்பத்தில் ஒன்றின் சமநிலை குறைந்தாலும் ஒருவருக்கு அவதிப்படுவார். அவரால் வீடுபேறு அடையமுடியாது.

இதனை ஒட்டிய ஒரு உதாரணம். ஒரு இசைக்கலைஞர் ஒருநாள் பயிற்சி செய்யவில்லையென்றால் மறுநாள் அது அவருக்கு நன்றாக தெரிந்துவிடும். இரண்டு நாட்கள் பயிற்சி செய்யவில்லையென்றால் அவருடன் இருக்குப்பவர்களுக்கு (மற்ற இசைக்கலைஞர்கள்) தெரிந்துவிடும். (மற்ற இசைக்கலைஞர்கள் தனியாக எச்சரிப்பார்கள்). மூன்று நாட்கள் பயிற்சி செய்யவில்லையென்றால் கூட்டத்தில் இருக்கும் இசை பயிற்சி இல்லாத பொதுமக்களுக்குக்  கூட தெரிந்துவிடும் (பொது மக்களும் இழித்துப் பேசுவர்). சோம்பலின் விளைவு அப்படி இருக்கும். ஆதலால் சோம்பலை கொன்று விடு.

குறிப்பு: 
என்னை பொருத்த வரையில் திருவள்ளுவர் ”உரைத்து” என்று கூட சொல்லி இருக்கலாம். ஆனால் அதற்கு பெயர் இலவச பாடம் (free advice) ஆகிவிடும். அது யாருக்கும் பிடிக்காது. அதனை பொதுவாக தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டார் அல்லது உதாசீனம் செய்வார்கள். சொல்லவந்துட்டான் பாரு என்றே மனதில் எழும். அதுவே ஒரு நண்பரோ உறவினரோ இடித்து உரைத்தால் அது என்னை பொருத்த அளவில் அது ஒரு ஆசீர்வாதம்/ blessing. ஏனெனில் அத்தகைய அவமானங்கள் ஒருவித தன்முனைப்பை கொடுக்க வல்லது. ஆனால் ஆணவத்தில் அதையும் நிராகரித்தால் அவர்களை காப்பாற்றுதல் மிக கடினம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மடி புரிந்து மாண்ட உஞற்று இலவர் - மடியை விரும்புதலான் மாண்ட முயற்சி இல்லாதார்; இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் - தம் நட்டார்முன் கழறுதலை மிகச் செய்து அதனால் பயன் காணாமையின், பின் இகழ்ந்து சொல்லும் சொல்லைக் கேட்பர்.
('இடி' என்னும் முதல்நிலைத் தொழிற் பெயரான்', 'நட்டார்' என்பது பெற்றாம். அவர் இகழ்ச்சி சொல்லவே, பிறர் இகழ்ச்சி சொல்லாமையே முடிந்தது. அவற்றிற்கெல்லாம் மாறு சொல்லும் ஆற்றல் இன்மையின் 'கேட்பர்' என்றார்.) .

மணக்குடவர் உரை
கழறுதலைச் செய்து பிறர் இகழ்ந்து சொல்லுஞ் சொல்லைக் கேட்பர், மடியைச் செய்து மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்.

மு.வரதராசனார் உரை
சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை
சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.

English Meaning - As I taught a kid - Rajesh
When a person is lazy or avoids his important duties/tasks/dharma and refrains from striving hard then, his family/extended-family/society will rebuke/scold him and also ridicule/mock/taunt him. 

Remember, when one is rebuking, one has to recognize it as the first serious alarm from the society, get conscious and take corrective action. Or else, if they continue in laziness, then they will lose their fame.

Questions that I ask to the kid
Who will be rebuked and ridiculed? Why?
How should one take if he is rebuked and ridiculed for a valid reason?