Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்

குறள் 423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
[பொருட்பால், அரசியல், அறிவுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

எப்பொருள் - எந்த ஒரு பொருளையும் , கருத்தையும், தத்துவத்தையும், செயலையும், அறிவையும், கொள்கையையும் , பயனையும், தலைமையும்

யார் -yār   interrog. pron. யா². [T.yavam, K. yāru.] Who; யாவர்.
யார் - yār   interrog. pron. யா². [T.yavam, K. yāru.] Who; யாவர்.

வாய்க் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

கேட்பினும் - கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்

அப்பொருள் - அந்த பொருளை  (செயலை, தத்துவத்தை ... )

மெய் -- mey   n. [K. mey.] 1. Truth, reality;உண்மை. மெய்யுணர் வில்லாதவர்க்கு (குறள், 354).2. Soul; ஆன்மா. காட்டாகி நின்றானைக் கண்ணறியாமெய்யென்ன (சி. போ. 6, 2, 4). 3. Consciousness; உணர்ச்சி. மெய்ம்மறந்துபட்ட (புறநா. 25).4. Body, used euphemistically; உடம்பு. முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும் (குறள், 619). 5.Breast; மார்பு. முழுமெயு முறீஇ (சிலப். 5, 226). 6.(Gram.) Consonant; ஒற்றெழுத்து. பதினெண்ணெழுத்து மெய்யென மொழிப (தொல். எழுத். 9).

மெய் - mey   s. truth, sincerity, சத்தியம்; 2. the body, உடம்பு; 3. a consonant, மெய்யெழுத்து.

மெய் - மெய்ஞ்ஞானம், மெய்ஞானம், true wisdom.
மெய் - மெய்நலம், மெய்ந்நலம், strength, வலி.

மெய்ப்பொருள் - உண்மை, உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று

காண்பது - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

முழுப்பொருள்
எந்த ஒரு விஷயத்தையும் செயலையும் தத்துவத்தையும் கருத்தையும் (நன்குமதிக்கப்படுபவை ஆயினும்) கடவுளையும், தலைமையையும் யார் கூறினாலும் அதனை அப்படியே உண்மை என்று எடுத்துக்கொள்ள கூடாது. அதனை யார் கூறினாலும், அது தானோ அல்லது உலகம் அதிகம் மதிக்கக்கூடியவர் கூறினாலும் அதனை அப்படியே உண்மை என எடுத்துக்கொள்ள கூடாது. அதனை ஆராய்ந்து தனக்குள்ளோ அல்லது பிறருடனோ அல்லது ஆசிரியருடனோ அல்லது குருவுடனோ தர்க்கம் செய்து உண்மை எதுவென்று ஆராயவேண்டும். அவ்வாறு ஆராயத்தக்கவல்லதே அறிவாகும்.

நக்கீரனின் புலமையும், அறிவும், உண்மையும் சிவபெருமானின் கருத்தையே கேள்விகேட்க வைத்தன. அவர் கடவுளர்களின் முழுமுதலாயவர் என்றவரே கொண்டிருந்தாலும். “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதே மெய்” என்னும் கூற்றும் இதனாலேயே வந்தது.

சற்று ஆன்மீகமா பார்த்தால்:
மேலும் மெய் என்றால் வலிமை(strength), ஆன்மா (soul), ஞானம் (wisdom) என்ற பொருளும் உண்டு. ”உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே” என்று கூறுகிறார் பாரதியார். நாம் மெய்ப்பொருளை ஆன்மா என்று உணர்ந்தால், இந்த லௌகீக உலகில்/கர்ம உலகில் உள்ள மற்ற உண்மைகளை காணாமல் போக வாய்ப்பு உண்டு (i.e.,When we start interpreting for absolute truth like Annma then in practical/karmic worlds relative truths are missed). எல்லாம் அவனுள் ஒடுங்கிய நிலை என்று உணர்ந்தால் மெய்ப்பொருள் என்னவென்று புரியும்.

பொற்கொல்லன் சொல்லைக்கேட்டு ஆராயாமல் உத்தரவிட்ட பாண்டியன் அறிவாண்மை மிக்கவனாயினும், ஒரு சிலமணித்துளிகளில், தவறியதால், கோவலன் மாண்டது, கண்ணகி மதுரையை எரித்ததும் நாமறிவோம்.

“உள்பொருள் இதுவென உணர்தல் ஞானமாம்” என்று சீவக சிந்தாமணியும் (2845), “நீயும் கண்டு நுமரொடும் எண்ணி அறிவறிந்தளவல் வேண்டும்” என்று நற்றிணைப்பாடல் (32:5-6) வலியுறுத்துவதும் இதைத்தான்.

வள்ளுவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்பவர்களின் பக்திநெறியை மறுப்பதற்கு இக்குறள் ஒரு தக்க கருவி என்பதில் ஐயமில்லை. பக்தி நெறியாளரின் மனப்பான்மையை வள்ளுவர் அறவே விரும்பமாட்டார் என்பதும் குறட்கருத்திலிருந்து தெளிவாகும். வள்ளுவரை உண்மையாக ஆய்பவர்தாம், வள்ளுவர் வழியில் நிற்பவர். வள்ளுவரைக் குறுகிய எல்லைக்குள் அடிப்பவர், வள்ளுவருக்கு இழிவு கற்பிப்பவர்களே என்பதிலும் ஐயமில்லை. இக்குறளை அளவுகோலாகக் கொண்டு, தேவையானால் வள்ளுவருடைய முடிவுகளிலிருந்து வேறுபடுவதற்கும் முடிவினை மாற்றுவதற்கும்  தந்திருக்கிறார் திருவள்ளுவர். தாம் மட்டும் சிந்தித்தால் போதும் என்ற மருள் நோக்கம் வள்ளுவர் நோக்கமாக இருக்க முடியாது. பிறரையும் தம்மைப் போலவே சீரிய முறையில் சிந்திக்கத்'தூண்டுவது வள்ளுவர் கருத்து.

மேலும்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு (குறள் 355)


மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகன்’இன் வெண்முரசு - பண்ணிரு படைக்களம் 78 இல் இப்படி சில வரிகள் வருகிறது.
 “கற்பிப்பது நன்று, மைந்தா. நாம் ஐயமறக் கற்பதற்கு அதுவே வழி” என்றார் பீஷ்மர்

“நீ என்ன கற்கிறாய் இப்போது?” என சுவடிகளை கட்டிவைத்தபடி தேவயானி கேட்டாள். “நாளும் கல்விதான். எதுவும் என்னுள் நுழைவதில்லை” என்றாள் சர்மிஷ்டை. “கற்றவற்றைப்பற்றி உன் கருத்தை உருவாக்கிக்கொள், உன்னுள் முளைத்தவையே உன்னில் வளரமுடியும்” என்றாள் தேவயானி.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
பிரமாண சாத்திரம்
(மேலே குறிப்பிட்டதற்கு இயைய, உலகு, உயிர், இறைவன் ஆகியவை உண்மையா? பொய்யா? என்பதைச் சரியாக நிர்ணயிக்க வேண்டுமாயின், இவற்றைப்பற்றிய அறிவு நமக்கு எங்ஙனம் ஏற்படுகின்றது என்பதை முதலில் ஆராய வேண்டும். இவற்றைப்பற்றிய அறிவை நமக்குத் தரும் வாயில்கள் எவை? எவ்வெவ் வழிகளால் நாம் ஒரு பொருளைப்பற்றிய அறிவைப் பெறுகின்றோம்? அறிவைத் தரும் வழிகளை அளவைகள் அல்லது பிரமாணங்கள் எனக் குறிப்பிடுவதே மரபு என முன் குறிப்பிட்டுள்ளோம். இப்பிரமாணங்களின் மூலம் நமக்குக் கிடைக்கும் அறிவு சரியானதா அல்லது பிழையானதா என்பதை அறிவது எங்ஙனம்?

பிரமாணத்துக்கு எது பிரமாணம்?
எவ்வித அறிவும் நிகழ்வதற்கு நான்கு அம்சங்கள் தேவை. இவை நான்கும் இன்றியமையாதவை. முதலாவது, அறிவு நிகழ்வதற்கு நிலைக்களனான அறிபவன் தேவை. இவனை வடமொழியாளர் பிரமாதா என்பர். இரண்டாவது, அறியப்படும் பொருள். இது பிரமேயம் எனப்படும். மூன்றாவது, அறிவு வரும் வழி. இதுவே மேலே குறிப்பிடப்பட்ட பிரமாணமாகும். நான்காவது அறிவு. இது பிரமிதி எனப்படும். பிரமாதா, பிரமேயம், பிரமாணம், பிரமிதி. அதாவது முறையே அறிபவன், அறிபொருள், அறிவு வரும் வழி, அறிவு ஆகிய நான்கனுள்ளும் அறிவைப் பெறும் வழியாகிய பிரமாணத்துக்கு முதன்மை கொடுத்தனர் நையாயிகர். பிரமாணம் சரியானதானால்தான் அப்பிரமாணத்தைக் கொண்டு நாம் பெறும் பிரமிதியும் சரியானது ஆகும் என்பது அவர்களுடைய கட்சி. நையாயிகரது இக்கொள்கை பாரட்டத்தகுந்தது. பிரமாணத்துக்கு முழு முதன்மையும் கொடுத்து, அதனை விடிவாக ஆராய்ந்த காரணத்தால் நையாயிகருடைய மதத்தைப் பிரமாண சாத்திரம் என வழங்கும் ஒரு மரபும் ஏற்படுவதாயிற்று. 

என் மூதாதையான மரு அன்னையின் சிறுமுலைக்காம்பில் சொட்டிநின்ற பால்துளி ஒன்றைக் கண்டு இளங்கன்று ஒன்று வாழ்த்துவதை ஒருநாள் கேட்டார். ‘பரம்பொருள் பள்ளிகொள்ள முடிவிலியென விரிந்தவளே, என் பசிக்கென துளிவடிவில் ஊறும் உன் பெருங்கனிவுக்கு அப்பால் பொருள் என ஒன்று கொண்டிருக்கிறாயா?’ அவர் இங்கு நிகழும் பெருங்களியாட்டில் தன்னை நிறைத்துக்கொண்டார்.

பொருளென்று அங்கிருந்தும் அறிவென்று இங்கிருந்தும் சந்திக்கும் புள்ளியிலேயே அனைத்தும் நிலைகொள்கின்றன. நிகர்விசைகொண்ட இரு களிறுகளால் இழுக்கப்படும் வடத்தின் மையம் அது.

அறியப்படும் இவையனைத்தும் அறிவென்பதனால் அறியப்படுவதனால் அறிவு உருவாகவில்லை என்றே பொருள். அறிவன்றி இங்கு பிறிதேதுமில்லை. அறிவுக்குள் அறிவென்று அமைந்தவையே அனைத்தும். தனித்தன்மைகள் அறிதலினால் எழுகின்றன. அறிதலுக்கு அப்பால் பெரும்பொதுமையின் அமைதலும் அறிவே.

அறியப்படாமையும் அறியவொண்ணாமையும் அறிவுகடந்தமையும் அறிவே. அறிவிலமர்ந்தவர் அறிவென அதையே கொள்வர். அறிபொருள் அறிவோன் அறிவு எனும் மும்மையழிந்த நிலையில் அது நிலைகொள்கிறது.

சுழற்சிக்கு நடுவே மையம் அசைவின்மை கொண்டிருக்கிறது. ஆழம் அலையின்மையால் இறுகியிருக்கிறது. அப்பாலிருப்பவனே அனைத்தையும் அறிபவனாகிறான். செயல்களுக்குள் செயலற்றிருப்பவனே செயலாற்ற வல்லவன்.


பரிமேலழகர் உரை
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு.
(குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு, பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்திநின்றது. மெய்யாதல், நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.).

மணக்குடவர் உரை
யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்லக் கேட்பினும் அப்பொருளினது உண்மையை யாராய்வது அறிவாவது. இது யாவர் சிலர் நட்டோராயினும் பகைவராயினும் அவர் கூறக் கேட்டவற்றில் தெள்ளியராய் ஆராய்ந்து துணித லறிவென்றது.

மு.வரதராசனார் உரை
எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா உரை
எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

Thirukkural - Management - Knowledge
One of the special ways to acquire knowledge is to assess the validity of the information shared by someone. Information should not be accepted as it is shared or at the surface level. A thorough analysis is needed to validate the validity of the information obtained. If we start accepting all information just like that, we will be confused at the validity of that  information. Check the validity of the information obtained by applying that to your personal and professional life, suggests Kural 423.

Wisdom grasps the truth
Of whatever and by whomever said.

English Meaning - As I taught a kid - Rajesh
Any information you gain from others or through any source do not assume it is correct.You should research and analyze to find its true meaning.

Questions that I ask to the kid
What you should do to get true knowledge?


No comments:

Post a Comment