குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
இறைவனின்மேல் சித்தத்தை வைத்து இறைவனின் மெய்ப்புகழை அறிந்தவர்களை, பொதுவாக அறியாமையால் நாம் நல்வினை தீவினை என வகுத்துக்கொள்ளும் கர்ம பலன்கள் சேராது. மயக்கமற்ற, உறுதியான நல்வினை, தீவினை பற்றிய தெளிவும் ஏற்படும் என்பதுதான் இக்குறளின் உள்ளுரை கருத்து.
நல்வினை தீவினை ஆகிய இரு வினைகள் என்ற வேற்றுமை/பேதம் மனதில் தோன்றினால், அதனால் மனதில் இன்பம் துன்பம் என்று மனதிலும் பேதம் தோன்றும். அதுவே இறைப் பொருளின் ஏக, அனேக நிலையை தெளிவுற்றவர்கள், இரண்டையுமே சமநோக்கில் கொள்வார் என்பது பெறப்பட்ட பொருள்.
கீதையில், (இறைவன் சித்தமோ?), மோக்ஷ ஸந்யாஸ யோகத்தின் முப்பத்தி ஒன்றாது சுலோகத்தின் பொருளைப் படித்தால், வியக்கத்தக்க விளக்கம் கிடைக்கும். கிருஷ்ணன், அர்சுனனுக்குச் சொன்னது: (சுவாமி சித்பவானந்தர் உரை).
‘பார்த்தா, தர்மத்தையும் அதர்மத்தையும், தகுந்த காரியத்தினையும் (நல்வினை), தகாத காரியத்தினையும் (தீவினை) தாறுமாறாக எந்த புத்தி அறிகிறதோ அதுவே ராஜஸமானது (இருள் அறிவு – ஜகத்ரட்சகனின் உரை).
இதற்கு தரப்பட்டிருக்கிற விளக்கம்:: அசைகின்ற நீரில் உருவம் உள்ளபடி தெரிவதில்லை. நல்வினைகளும் தீவினகளும் கூட திரிவுபட்டே தெரியும். முந்தைய குறளில் சொன்னது போல, வேண்டுதல் வேண்டாமை என்கிற நிலையை அடைந்த இறைப்பொருளை அடைந்தவர்களுக்கு, இந்த அசைவுபட்ட நிலை இருக்காது. அப்போது எது உண்மையாகவே நல்வினை அல்லது தீவினை என்கிற மயக்கமற்ற அறிவு/மனம் ஏற்படும்.
மேலும் - இலங்கை ஜெயராஜ்
மனிதனுக்கு இயற்கையாக மூன்று குணங்களை கூறுவார். அதில் இயல்பான குணங்கள் காமம், கோபம். இவ்விரண்டால் மயக்கம் வரும். ஒன்றை இன்னோன்றாக நினைத்துக்கொள்ளுதல்.
விசுவாமித்திரர் தசரதநிடம் போய் ராமனை காட்டுக்கு யாகம் காக்க தா என்று கேட்கிறார். கம்பர் அதை இப்படி சொல்கிறார்
தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு
இடையூறா. தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என.
நிருதர் இடை விலக்கா வண்ணம்.
‘’செருமுகத்துக் காத்தி’’ என. ‘நின் சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி’ என. உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின். உளையச் சொன்னான்.
நான் காட்டுக்குள் வேள்வி செய்கிறேன். தவம் செய்கிறவர்களுக்கு தடையான காமம், வெகுளி(கோபம்) போல், இரண்டு அசூரர்கள்/அரக்கர்கள் வந்து என் வேள்வியை தடுகிறார்கள். ஒன்று சுபாகு இன்னொன்று மாரீசன். இருவரும் இரத்தத்தையும் மாமிசத்தையும் கொட்டி யாகத்தை குழப்பிவிடுகிறார்கள். அதை காப்பாற்றுவதர்காக ராமனை தா என்று அச்செய்தியை சொல்கிறார் விசுவாமித்திரர் தசரதநிடம். ஒரு அசுரன் முதலில் கொல்லப்படுகிறான். இன்னொரு அசுரன் பின்பு கொல்லப்படுகிறான். கோபத்தை அடக்கலாம். ஆனால் காமத்தை அடக்க பல காலம் ஆகும் என்பதை மறைமுகமா கூறுகிறார்.
குற்றங்கடிதல் அதிகாரத்தில், அரசன் தன் குற்றங்களை முதலில் கடியவேண்டும். பின்பே மற்றவர்களின் குற்றங்களை கடிய அவனுக்கு உரிமையிருக்கிறது. அவ்வதிகாரத்தில் இறுதியாக சொல்கிறார் எல்லா குற்றங்களையும் கடிந்துவிட முடியாது. ஆனால் பிறருக்கு தெரியாதவண்ணம் பார்த்துக்க்கொள். காமம், கோபம் உயிர்குணங்கள். அது எளிதில் அழித்துவிட முடியாது. அதை ரகசியமாக வைத்துக்கொள் ஏனெனில், இவை உன்னிடம் இல்லையென்றால் பலகீனங்கள் இருந்தால் எதிரிகள் உன்னை வந்து தாக்குவர்.
திருமுருகாற்றுப்படை (193)
பலவுடன் கழிந்த உண்டியர், இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர், யாவதும்
கற்றோர் அறியா அறிவினர், கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர், காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர், இடும்பை
திருமுருகாற்றுப்படையில் காமத்தையும் கடுஞ்சினத்தையும் நீக்கியவர் அல்ல கடிந்தவர் என்றே கூறப்பட்டுள்ளது.
காமம், கோபம் உயிர்குணம். இவற்றிற்கு அடிப்படை மயக்கம். காமம் என்றால் அந்த நிமிடத்தில் ஒன்றும் தெரியாது. அதேப்போல் கோபம். பின்னால் நினைத்தால் "ஐயோ இதற்க்காகவா இவ்வளவு பாடுபட்டோம் என்று தோன்றும்". அப்படியென்றால் முன்னே என்ன நடந்தது? நீ பைத்தியமாய் இருந்திருக்கிறாய். அது மயக்கம். அந்த மயக்கம் தான் உன்னுடைய இந்த நிலைக்கு காரணம். இந்த மயக்கத்தின் காரணமாக தான் நல்வினை தீவினை செய்கிறாய்.
மயக்கம் ஏன் வருகிறது? எப்படி வருகிறது என்று நமக்கு தெரிவதில்லை. மயக்கம் என்னும் இச்சை யின் தன்மை தெரியவில்லை. ஆகவே அது இருளாகும். இருளுக்குள் சென்றால் எல்லாம் அடைப்பட்டு போகும்.
நல்வினை நல்லது தானே? நல்வினை செய்தாலும் நீ பிறந்து தான் ஆகா வேண்டும். தீவினையால் பிறவி உண்டாவது போல நல்வினையாலும் பிறவி உண்டாகும். எந்த ஒரு செயலுக்கும் சமமான ஒரு எதிர்வினை உண்டு. உதாரணமாக நீ இப்பொழுது கொடுத்தால் பின்பு (அல்லது மறுபிறவியில்) உனக்கு வேறொருவர் கொடுப்பர். நன்மைக்கு நன்மை பெறுவதற்கு இன்னொரு பிறவி ஏற்படும். அதனால் தான் இருவினையும் சேராமல் என்று சொல்கிறார் திருவள்ளுவர்.
திருவாசகம் சிவபுராணத்தில்
அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி,
புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்
கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காஅட்டி,
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!
"அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி" என்று கூறப்பட்டுள்ளது. "புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி," - அதாவது இன்னொரு பிறவி.
இறைமை குணம் இல்லாதவன் (உதாரணமாக தன்னுடைய அரசியல் கட்சி தலைவன்) காப்பாற்றுவான் என்று புகழுபவனிடம் பொருள் வந்து சேராது.
பரிமேலழகர் உரை
இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
மு.வரதராசனார் உரை
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
சாலமன் பாப்பையா உரை
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
[அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து]
பொருள்
இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம்
சேர் - திரட்சி; வைக்கோற்புரியாலமைந்தநெற்குதிர்; களஞ்சியம்; மாட்டின்இரண்டுமுன்னங்கால்களையும்சேர்த்துக்கட்டுந்தளை; ஓர்ஏர்மாடு; நிறுத்தலளவை; ஒருமுகத்தலளவை; சேங்கொட்டைமரம்.
சேர் - cēr சேரு, II. v. i. & t. approach, draw near, arrive at, சிட்டு; 2. be near, அடுத்திரு; 3. side with one, joint one, unite, associate with, collect, come together, கூடு; 4. belong to, அடு; 5. resemble, be alike, ஒ.
வினையும் - வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.
இருவினை - நல்வினை தீவினைகள் என்பதை பற்றிய அசைநீரறிவு (கீதையை ஒட்டிய விளக்கம்)
சேர்தல் - cēr- 4 v. [T. cēru, K. Tu. sēru,M. cēruka.] intr. 1. To become united,incorporated; to join together; ஒன்றுகூடுதல் செம்பொன் செய்சுருளுந் தெய்வக்குழைகளுஞ் சேர்ந்துமின்ன (கம்பரா. பூக்கொய். 5). 2. To becomemixed, blended; கலத்தல் நீரும் பாலுஞ் சேரும்.3. To have connection, as with a society oran institution; சம்பந்தப்படுதல். சங்கத்தில் அவன்சேர்ந்தவன். 4. To be in close friendship orunion; நட்பாதல். அவனோடு சேர்ந்துகொண்டான்.5. To fit, suit; to be adapted to, as the tenonto the mortise; இயைதல் 6. To be incident,co-existent; to appertain, as a quality; உரித்தாதல். இந்த நிலம் அவனுக்குச் சேர்ந்தது. 7. Tobe collected, to become aggregated; சேகரிக்கப்படுதல். நெய்க்கு வேண்டிய வெண்ணெய் சேர்ந்துவிட்டது. 8. To be well-rounded, plump; திரளுதல் மால்வரை யொழுகிய வாழை . . . என . . சேர்ந்து (சிறுபாண். 20, உரை). 9. To be full,replete; செறிதல் அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை(குறள், 243). 10. To lie down; கிடத்தல் மீக்கோள
சேரா - சேராமல் - சேராது
இறைவன் - தலைவன்; கடவுள் சிவன் திருமால் அரசன் பிரமன் குரு மூத்தோன் கணவன் சிவனார்வேம்பு
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.
சேர் - - cēr சேரு, II. v. i. & t. approach, draw near, arrive at, சிட்டு; 2. be near, அடுத்திரு; 3. side with one, joint one, unite, associate with, collect, come together, கூடு; 4. belong to, அடு; 5. resemble, be alike, ஒ.
புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.
புரிந்தார் - புரிதல் - விரும்புதல்; தியானித்தல்; செய்தல்; படைத்தல்; ஈனுதல்; கொடுத்தல்; நுகர்தல்; உற்றுப்பார்த்தல்; விசாரணைசெய்தல்; சொல்லுதல்; நடத்துதல்; மேற்கொள்ளுதல்; முறுக்குக்கொள்ளுதல்; திரும்புதல்; மிகுதல்; அசைதல்; விளங்குதல்; பொருள்விளங்குதல்.
மாட்டு அகன்றுகிடப்பினும் அணுகியநிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற்கொண்டு கூட்டிய சொல்முடிவு கொள்ளும்முறை; அடி; சொல்.
māṭṭu v. defect. used only in the future and negat.; (மாட்டுவேன் மாட்டுவாய் etc.), I can, I shall be able to do it.
மாட்டு - v. noun. A beat, a stroke, as நல்லமாட்டு, good blows. 2. Referring.

இரு - இரண்டு

முழுப்பொருள்
சித்தத்தை சிவன்பால் வைப்பீர் – அத்துணையும் அவனே என்று. சித்தம் தெளிவுறும் என்பர் சித்தர்களெல்லாம்.இறைவனின்மேல் சித்தத்தை வைத்து இறைவனின் மெய்ப்புகழை அறிந்தவர்களை, பொதுவாக அறியாமையால் நாம் நல்வினை தீவினை என வகுத்துக்கொள்ளும் கர்ம பலன்கள் சேராது. மயக்கமற்ற, உறுதியான நல்வினை, தீவினை பற்றிய தெளிவும் ஏற்படும் என்பதுதான் இக்குறளின் உள்ளுரை கருத்து.
நல்வினை தீவினை ஆகிய இரு வினைகள் என்ற வேற்றுமை/பேதம் மனதில் தோன்றினால், அதனால் மனதில் இன்பம் துன்பம் என்று மனதிலும் பேதம் தோன்றும். அதுவே இறைப் பொருளின் ஏக, அனேக நிலையை தெளிவுற்றவர்கள், இரண்டையுமே சமநோக்கில் கொள்வார் என்பது பெறப்பட்ட பொருள்.
கீதையில், (இறைவன் சித்தமோ?), மோக்ஷ ஸந்யாஸ யோகத்தின் முப்பத்தி ஒன்றாது சுலோகத்தின் பொருளைப் படித்தால், வியக்கத்தக்க விளக்கம் கிடைக்கும். கிருஷ்ணன், அர்சுனனுக்குச் சொன்னது: (சுவாமி சித்பவானந்தர் உரை).
‘பார்த்தா, தர்மத்தையும் அதர்மத்தையும், தகுந்த காரியத்தினையும் (நல்வினை), தகாத காரியத்தினையும் (தீவினை) தாறுமாறாக எந்த புத்தி அறிகிறதோ அதுவே ராஜஸமானது (இருள் அறிவு – ஜகத்ரட்சகனின் உரை).
இதற்கு தரப்பட்டிருக்கிற விளக்கம்:: அசைகின்ற நீரில் உருவம் உள்ளபடி தெரிவதில்லை. நல்வினைகளும் தீவினகளும் கூட திரிவுபட்டே தெரியும். முந்தைய குறளில் சொன்னது போல, வேண்டுதல் வேண்டாமை என்கிற நிலையை அடைந்த இறைப்பொருளை அடைந்தவர்களுக்கு, இந்த அசைவுபட்ட நிலை இருக்காது. அப்போது எது உண்மையாகவே நல்வினை அல்லது தீவினை என்கிற மயக்கமற்ற அறிவு/மனம் ஏற்படும்.
மேலும் - இலங்கை ஜெயராஜ்
மனிதனுக்கு இயற்கையாக மூன்று குணங்களை கூறுவார். அதில் இயல்பான குணங்கள் காமம், கோபம். இவ்விரண்டால் மயக்கம் வரும். ஒன்றை இன்னோன்றாக நினைத்துக்கொள்ளுதல்.
விசுவாமித்திரர் தசரதநிடம் போய் ராமனை காட்டுக்கு யாகம் காக்க தா என்று கேட்கிறார். கம்பர் அதை இப்படி சொல்கிறார்
தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு
இடையூறா. தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என.
நிருதர் இடை விலக்கா வண்ணம்.
‘’செருமுகத்துக் காத்தி’’ என. ‘நின் சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி’ என. உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின். உளையச் சொன்னான்.
நான் காட்டுக்குள் வேள்வி செய்கிறேன். தவம் செய்கிறவர்களுக்கு தடையான காமம், வெகுளி(கோபம்) போல், இரண்டு அசூரர்கள்/அரக்கர்கள் வந்து என் வேள்வியை தடுகிறார்கள். ஒன்று சுபாகு இன்னொன்று மாரீசன். இருவரும் இரத்தத்தையும் மாமிசத்தையும் கொட்டி யாகத்தை குழப்பிவிடுகிறார்கள். அதை காப்பாற்றுவதர்காக ராமனை தா என்று அச்செய்தியை சொல்கிறார் விசுவாமித்திரர் தசரதநிடம். ஒரு அசுரன் முதலில் கொல்லப்படுகிறான். இன்னொரு அசுரன் பின்பு கொல்லப்படுகிறான். கோபத்தை அடக்கலாம். ஆனால் காமத்தை அடக்க பல காலம் ஆகும் என்பதை மறைமுகமா கூறுகிறார்.
குற்றங்கடிதல் அதிகாரத்தில், அரசன் தன் குற்றங்களை முதலில் கடியவேண்டும். பின்பே மற்றவர்களின் குற்றங்களை கடிய அவனுக்கு உரிமையிருக்கிறது. அவ்வதிகாரத்தில் இறுதியாக சொல்கிறார் எல்லா குற்றங்களையும் கடிந்துவிட முடியாது. ஆனால் பிறருக்கு தெரியாதவண்ணம் பார்த்துக்க்கொள். காமம், கோபம் உயிர்குணங்கள். அது எளிதில் அழித்துவிட முடியாது. அதை ரகசியமாக வைத்துக்கொள் ஏனெனில், இவை உன்னிடம் இல்லையென்றால் பலகீனங்கள் இருந்தால் எதிரிகள் உன்னை வந்து தாக்குவர்.
திருமுருகாற்றுப்படை (193)
பலவுடன் கழிந்த உண்டியர், இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர், யாவதும்
கற்றோர் அறியா அறிவினர், கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர், காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர், இடும்பை
காமம், கோபம் உயிர்குணம். இவற்றிற்கு அடிப்படை மயக்கம். காமம் என்றால் அந்த நிமிடத்தில் ஒன்றும் தெரியாது. அதேப்போல் கோபம். பின்னால் நினைத்தால் "ஐயோ இதற்க்காகவா இவ்வளவு பாடுபட்டோம் என்று தோன்றும்". அப்படியென்றால் முன்னே என்ன நடந்தது? நீ பைத்தியமாய் இருந்திருக்கிறாய். அது மயக்கம். அந்த மயக்கம் தான் உன்னுடைய இந்த நிலைக்கு காரணம். இந்த மயக்கத்தின் காரணமாக தான் நல்வினை தீவினை செய்கிறாய்.
மயக்கம் ஏன் வருகிறது? எப்படி வருகிறது என்று நமக்கு தெரிவதில்லை. மயக்கம் என்னும் இச்சை யின் தன்மை தெரியவில்லை. ஆகவே அது இருளாகும். இருளுக்குள் சென்றால் எல்லாம் அடைப்பட்டு போகும்.
நல்வினை நல்லது தானே? நல்வினை செய்தாலும் நீ பிறந்து தான் ஆகா வேண்டும். தீவினையால் பிறவி உண்டாவது போல நல்வினையாலும் பிறவி உண்டாகும். எந்த ஒரு செயலுக்கும் சமமான ஒரு எதிர்வினை உண்டு. உதாரணமாக நீ இப்பொழுது கொடுத்தால் பின்பு (அல்லது மறுபிறவியில்) உனக்கு வேறொருவர் கொடுப்பர். நன்மைக்கு நன்மை பெறுவதற்கு இன்னொரு பிறவி ஏற்படும். அதனால் தான் இருவினையும் சேராமல் என்று சொல்கிறார் திருவள்ளுவர்.
திருவாசகம் சிவபுராணத்தில்
அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி,
புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்
கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காஅட்டி,
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!
"அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி" என்று கூறப்பட்டுள்ளது. "புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி," - அதாவது இன்னொரு பிறவி.
இறைமை குணம் இல்லாதவன் (உதாரணமாக தன்னுடைய அரசியல் கட்சி தலைவன்) காப்பாற்றுவான் என்று புகழுபவனிடம் பொருள் வந்து சேராது.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
“இருள்புரி வினைகள் சேரா விறைவன தறத்தை எய்தின்” (யசோதர 309)
“பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந் தார்க்கருள் செய்யும்” (அப்பர்.திருவாரூர் 10)
“இருமை வினையுமில ஏத்துமவை” (பரிபாடல் 13:48)
“............பெருமான்
ஆயபுகழ் ஏத்துமடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே” (சம்பந்தர்.மாகறல்.9)
”பூமிமேல் புகழ்தக்க பொருளே” என்பது அப்பர் வாக்கு.
இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
மு.வரதராசனார் உரை
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
சாலமன் பாப்பையா உரை
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
இறை தத்துவம் உணர்ந்தோர்க்கு இன்னல் இல்லை.
No comments:
Post a Comment