Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label W - ஜெயமோகன். Show all posts
Showing posts with label W - ஜெயமோகன். Show all posts

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

குறள் 448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இடித்தல் - முழங்குதல்; இடியிடித்தல்; நோதல் தாக்கிப்படுதல்; மோதுதல் கோபித்தல் தூளாக்குதல்; தகர்த்தல் நசுக்குதல் தாக்குதல் முட்டுதல் கழறிச்சொல்லுதல்; கொல்லுதல் தோண்டுதல் கெடுத்தல்

இடிப்பாரை - தம்மை தக்க சமயத்தில் கண்டித்துச் சொல்லித் 

இல்லாத - தம்மைச் சூழ வைத்திராத, இல்லை

ஏமருதல் - திகைத்தல்; களிப்புறுதல்; காக்கப்படுதல்.

ஏமரா - காவலற்ற

மன்னன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

கெடுப்பார் - கெடுப்பவர்கள்

இலானும் - இல்லை என்றாலும்

கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

முழுப்பொருள்
ஒருவருக்கு அல்லது ஒரு மன்னருக்கு பெரியோர்கள் சான்றோர்கள் துணை மிக மிக அவசியம். இன்றியமையாதது. ஏனெனில் ஒரு மன்னரை சரியான பாதையில் வழிநடத்த வல்லவர்கள் அறிவிலும் அனுபவத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கும் பெரியோர்களே. சரியான பாதையில் வழிநடத்துவது மட்டும் அல்லாது இக்கட்டான் அல்லது இடர்பாடுகள் துன்பங்கள் சூழ்ந்துள்ள பொழுது நம்மை அதில் இருந்து வெளியே கொண்டுவர துணைப்புரிபவர்கள் அவர்கள் மட்டுமே. நாம் தவறு செய்தாலும் நம்மை கோபித்துக்கொண்டு ஒரு தட்டு தட்டி நம்மை நசுக்கி நம்மை முன்னே செலுத்துவர். சோம்பல், மறதிப் போன்ற பல தீய பழக்கங்களில் நாம் இருந்தால் நம்மை கண்டித்து நல்வழிப்படுத்துவர்.

ஒருவனை இடித்து நல்வழிப்படுத்தும் அத்தகைய பெரியோர் உடன் இல்லையென்றால் அவன் காவலற்ற ஒருவன்/மன்னவன். அத்தகைய காவலற்ற மன்னவனுக்கு கேடுகள், பகை இல்லையென்றாலும் அல்லது வேறு யாரும் துன்பம் கொடுக்காவிட்டாலும் அவனே/அம்மன்னவனே அழிந்துவிடுவான்/கெடுவான். ஏனெனில் தீயவற்றை பிறர் தான் செய்யவேண்டும் என்றில்லை தனக்கு தானே செய்துக்கொள்ளலாம் ஒருவர். மேலும் அவா, வெகுளி/சினம், மயக்கம் போன்றவை ஒருவனை தன்வசப்படுத்தி கெடுத்துவிடும்.

கம்பர் நிந்தனைப் படலத்தில், “
”கடிக்கும்வா ளரவும் கேட்கும் மந்திரம் களிக்கின் றோயை
அடுக்கும்ஈ தடாதென் றான்ற வேதுவோ டறிவு காட்டி
இடிக்குநர் இல்லை நீயே யெண்ணிய தெண்ணி யுன்னை
முடிக்கின்ற போது முன்னின் முடிவன்றி முடிவதுண்டோ” (கம்ப நிந்தனை 59) என்று கூறுகிறார்

கம்பர் கும்பகருணன்  படத்தில்,
உளைவன வெனினும் மெய்ம்மை யுணர்ந்தவர் முற்றும் ஓர்ந்தார்
விளைவன சொன்ன போதும் கொள்கிலை விடுதல் கண்டாய்
கிளைதரு சுற்றம் வெற்றி கேண்மைநம் கல்வி செல்வம்
களைவரு தானை யோடும் கழிவது காண்டி யென்றான்” (கம்ப. கும்பகருணன் 33) என்று கூறுகிறார்

மேலும்: அஷோக் உரை

ஒருபோதும் விமர்சனம் செய்யும் உரிமையை, இடித்துரைக்கும் தகைமையை எழுத்தாளன் விட்டுவிடலாகாது. அரசியல்வாதிகளின் மிரட்டல்களாலோ பாமரர்களின் கும்பல்தாக்குதல்களாலோ அவன் விமர்சனங்களை தவிர்ப்பான் என்றால் இலக்கியத்தை இழப்பான். வளையவேகூடாது என்று நான் சொல்ல வரவில்லை. எழுதுவதே எழுத்தாளனுக்கு முக்கியம், அதன்பொருட்டு அவன் வாழ்ந்தாகவேண்டும். ஆனால் தன் பணி என்ன என்பதைப்பற்றிய தெளிவு அவனிடம் இருக்கவேண்டும்.

இதன் மறுபக்கமாக ஒன்றைச் சொல்லவேண்டும். பாமரத்தனம் மீதான எழுத்தாளனின் ஒவ்வாமை என்பது ஒரு போதும் மக்கள் மீதான ஒவ்வாமை அல்ல. எளியோர் மீதான ஏளனம் அல்ல.  உயர்வுமனப்பான்மையோ திமிரோ அல்ல. பாமரரை விமர்சிக்கும்போதுகூட அது காழ்ப்போ கசப்போ அல்ல. அது இன்னும் மேலான அறிவுத்தளத்தில், ஆன்மிகத்தளத்தில் நின்றுகொண்டு செய்யப்படும் ஒருவகை இடித்துரைத்தலோ அறிவுறுத்தலோ மட்டுமே.

எழுத்தாளன் சமூகத்தில் ஒருவனாகவே இருக்கிறான். மக்களில் ஒரு துளிதான் அவனும். அந்த தன்னுணர்வு அவனுக்கு இருக்கும். தன் மக்கள் இன்னும் மேலான நிலையை அடையவேண்டும் என்னும் ஆதங்கமும் கனவுமே அவனை அவ்வண்ணம் ஒவ்வாமைகொள்ளவும் இடித்துரைக்கவும் செய்கிறது. மக்கள் மீதான ஒடுக்குமுறையும் சுரண்டலும் அநீதியும் அவனை கொதிக்கச் செய்கின்றன. அதன் விளைவாகவே அவன் தீவிரம்கொண்டு எழுதுகிறான்.

மக்களை வெறுப்பவனால் இலக்கியம் படைக்கமுடியாது. ஏனென்றால் இலக்கியத்துக்குத் தேவை நுண்மை. நுண்மைகள் எல்லாம் கூர்ந்த அவதானிப்பால்தான் அமையும். கூர்ந்த அவதானிப்பு பெரும் ஈடுபாட்டில் இருந்து எழுவது. மக்களை பெருவிருப்புடன் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பவனால்தான் அவர்களை இலக்கியத்திற்குள் கொண்டு வர முடியும்.

பாமரர்கள் என்னும்போது எளியோர், வறியோர், அடையாளமற்றோரைக் குறிப்பிடவில்லை. பாமரத்தனம் என்பது செல்வந்தர்கள், செல்வாக்கானவர்கள், புகழ்பெற்றவர்களிடமும் நிறைந்துள்ளது. அறிவுக்கு , நுட்பங்களுக்கு, முழுமைநோக்குக்கு எதிரான அன்றாடப்பார்வை, உலகியல்பார்வை , தன்னலப்பார்வை மட்டுமே கொண்டவர்களையே பாமரர்கள் என்கிறோம். பாமரர்களின் மேல் எழுத்தாளன் வைக்கும் விமர்சனத்தை மக்கள்மேல் வைக்கும் விமர்சனமாக திரிப்பவன் ஏமாற்றுக்காரனாகிய அரசியல்வாதிதான்.

மக்கள் அனைவரும் பாமரர்கள் அல்ல. பிள்ளைகளைப் பெற்று உளம் கனிந்த அன்னை, நிலத்தை நுண்ணிதின் அறிந்த விவசாயி எல்லாம் பாமரர்கள் அல்ல. அவர்களைப்பற்றித்தான் எழுத்தாளன் எழுதுகிறான். ஏழாம் உலகம் நாவலின் ராமப்பன் ஓர் அரிய மனிதர். சான்றோன் என்ற பேருக்கு தகுதியானவர். அவரை எழுதுவது எழுத்தாளனின் கடமை. கெத்தேல் சாகிப், பாமரர் அல்ல. அத்தனை எத்தனை நூறு மானுடரை நான் எழுத்தில் காட்டியிருப்பேன். எளிமையான மக்கள் திரளில் இருந்து வருபவர்கள்தான் அவர்கள். அவர்கள் மக்கள் என்று நாம் சொல்லும் பெருந்திரளின் அறிவுத்திறன், அறம், கருணை, ஆன்மிகம் ஆகியவற்றின் உதாரணங்கள்.
.........
.........
மக்களில் உள்ள குறைகளை, சரிவுகளை சுட்டிக்காட்டுவதும் அதே பெரும் அன்பினால்தான். அந்த அன்பே அவர்களைப்பற்றி எழுதும் கலைஞனாக என்னை வைத்திருக்கிறது
-- ஜெ
பரிமேலழகர் உரை
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன், கெடுப்பார்இலானும் கெடும் - பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும்.
('இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கெடுப்பார் உளராவர் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.).

மணக்குடவர் உரை
கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் தான் வேண்டியவாறொழுகிக் கெடும். இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது.

மு.வரதராசனார் உரை
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை
தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.

Thirukkural - Management - Mentoring
Kural 448 is very strong on the relevance of a mentor who can monitor the other person's performance. Valluvar resorts to yet another simile here. If a king does not have someone who can mentor or monitor the king's activities, especially when the king goes wrong, the king will ruin himself soon. That act is similar to self-destruction. Even if there is no enemy to destroy the king, the king will destroy himself.

A King unguarded by trenchant counsel
Needs no foes to come to grief.

Every person must have someone to monitor, control and direct him. If there is no external control, there is a possibility for derailing, as it is human tendency to choose the path of least resistance.

English Meaning - As I taught a kid - Rajesh
When  one (an individual / king) does not have a support system system of people (parents, family, friends, teachers, mentors, ministers, scholars, experts, specialists, advisors etc) who would inform us, caution us, (if required) get angry with us and scold us) about upcoming danger or current danger and advise, then the individual/king would get destroyed/destructed even if he doesn't have a betrayer with him.

Our mentors might scold us when we do wrong. But, if we don't have mentors in our lives, then no one can save us. Even if a betrayer is not with us, our own internal devils which were silent, will betray us and lead to destruction

Questions that I ask to the kid
What happens when you do not have mentors who can scold us?

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

குறள் 396
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
[பொருட்பால், அரசியல், கல்வி]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
தொட்டல் - தீண்டல்; உண்டல்; கட்டுதல்; தோண்டல்.

அனைத்து- அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம்

அனைய - அத்தன்மையான; ஒத்த.

ஊறும் - உறுகை - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்

தொட்டனைத்தூறும் – தோண்டத்தோண்ட நீர்சுரக்கும்

மணற் - மணல் - பொடியாயுள்ளபிதிர்மண்; மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று

கேணி - கிணறு; சிறுகுளம்; அகழி; தொட்டில்.

மாந்தர்க்குக் மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்

கற்றல் - கற்கை - படித்தல்.

கற்றனைத்து - அவர்கள் கற்றுக்கொள்ளும் அனைத்தும்

ஊறும்உறுகை - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

முழுப்பொருள்
ஒரு கிணற்றில் தோண்ட தோண்ட நீர் சுறக்கும். ஆனால் எவ்வளவு தோண்டுகிறோமொ அவ்வளவு நீர்தான் சுறக்கும். நம் முயற்சியின் அளவிற்கு தான் பலனும் இருக்கும். அதுப்போல ஒரு மனிதருக்கு அவர் கற்க கற்க அவரது அறிவு பெருகும். மக்கள் அவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவே அறிவும் வளரும். ஆங்கிலத்தில் இதனை தொடர்க்கல்வி / “continuous learning"என்றுக்கூறுவார்கள். 

ஒரு நூலில் இருந்து ஒரு ஆசிரியரிடம் இருந்து கற்கும் பொழுது நாம் எவ்வளவு உழைப்பையும் முயற்சியையும் போடுகிறோமோ அந்த அளவிற்கு நமது கற்கும் திறனும் மிகும் அறிவும் மிகும். இல்லையென்றால் நுனிப்புல்லை மேய்ந்ததுப் போன்று ஆகிவிடும். 

அதுமட்டுமின்றி நாம் கற்கும் முன்பு கூட நமது உழைப்பு அவசியம் தேவை, அப்பொழுது தான் நாம் ஆசிரியரிடம் இருந்தோ அல்லது பிறருடன் இருந்தோ கற்கும் பொழுது கசடற கற்க முடியும். ஒரு வகுப்பிற்கு செல்லும் பொழுது படிக்கபோகிற பாடத்தைப் பற்றி வாசித்து உணராமல் கற்பதை விட வாசித்து விட்டு செல்லும் பொழுது நாம் கற்கும் அளவே வேறு மாதிரி இருக்கும். அப்பொழுது அறிவோம் நம் உண்மை அறிவே மிகும் என்று. ஆதாவது நாம் வகுப்பிற்கு முன் என்ன கற்றோமோ அதை தான் வகுப்பிற்குப்பினும் கற்று இருப்போம் ஆனால் வகுப்பிற்குபின் அது ஆழமாக வேரூண்றி இருக்கும். அதுவே கற்காமல் வகுப்பிற்கு சென்றால் நாம் கற்பது மிக குறைவாகவே இருக்கும். 

மேலும் எல்லா பொதுக்கல்வியும் சராசரி அறிவையே அளிக்கின்றன. தற்கல்வி மட்டுமே தனியான தனக்கான ஞானத்தை அளிக்கிறது. தற்கல்வி என்பது பொதுக்கல்விக்கு மேலதிகமாகவே கற்கப்படும். கற்கப்படவேண்டும். ஒருவரின் பள்ளிப்படிப்பு பட்டப்படிப்பு படிப்பது பொதுக்கல்வி. ஓர் குருவிடமிருந்து அல்லது நீங்களே முயன்று பலவற்றை கற்றுக்கொள்வது தற்கல்வி. பொதுக்கல்வி பெற்று அதன் மேல் கூடுதல் தேடல்கொண்டுதான் நாம் தற்கல்வியைச் சென்றடைகிறோம்.

மணல் கேணியில், தோண்டிய பின், சிறிது காலத்தில்  மண் சரிந்து உள்ளே விழும். நீர் கலங்கும். உள்ளே விழுந்த மண்ணை தோண்டி எடுத்து வெளியே போட வேண்டும்.  அப்போதுதான், அதில் உள்ள நீரை பயன் படுத்த முடியும்.

அது போல,  ஒரு தரம் கல்வி கற்று விட்டால் அப்படியே விட்டு விட முடியாது. மறதி வரும். மற்ற விஷயங்கள் வந்து குழப்பும். மேலும் மேலும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் கல்வியின் பயன் இருக்கும். எப்போதோ , பள்ளியில், கல்லூரியில் படித்தோம், அதுவே போதும் என்று இருந்து விடக் கூடாது. படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

'தூறும்' என்பது ஒரே சொல் தான். இதன் பொருள் 'ஆழமாகுதல்' என்பதாகும். கிணறு முதலானவற்றை ஆழப்படுத்தும் செயலான 'தூர்வாருதல்' என்னும் சொல்லாடல் இன்றும் நம்மிடையே உள்ளது அல்லவா?. தூறிய பகுதியே 'துறை' ஆகும். இது ஆற்றுத் துறை, படித்துறை முதலான அனைத்து நீர்த்துறைகளையும் குறிக்கும். ஆழமாகுதல் என்ற பொருளில் கொண்டால் இப்பாடலின் பொருள் இவ்வாறு வரும். ' தோண்டிய அளவே மணற்கேணி ஆழமாகும். அதைப் போல கற்ற அளவே மாந்தர்க்கு அறிவு ஆழமாகும்'.

நிலத்தில் தோண்டப்படும் கிணறுக்கும் ஆற்று மணலில் தோண்டப்படும் கிணறுக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று உள்ளது. மணல்கிணறு மிக விரைவாக மூடிக்கொண்டு விடும். அதை அடிக்கடி தோண்டிக்கொண்டே இருந்தால் தான் ஆழமாகவே இருக்கும். அத்துடன் நிலக்கேணியைப் போலன்றி மணற்கேணியைத் தோண்டுவதும் எளிதே ஆகும். அதனால் தான் வள்ளுவர் நிலக்கேணியைக் கூறாமல் மணற்கேணியை அறிவுக்கு ஒப்பாகக் கூறுகிறார். இந்த மணற்கேணியைப் போலத்தான் நமது அறிவும். கல்வி கற்பது என்பது எளிதான செயலே ஆகும். ஆனால் காலத்தின் தேவைக்கேற்ப நல்ல நூல்களைக் கற்றுக் கொண்டிருந்தால் தான் நமது அறிவு மூடிக்கொள்ளாது இல்லையேல் மணற்கேணி போல அறிவு மூடிக்கொள்ள நாம் 'மூடனாகி' விடுவோம். அத்துடன் நாம் கற்கின்ற அளவே நமது அறிவின் ஆழமும் இருக்கும். இக்காலத்துச் சொல்லாடலான ' உனக்கு மண்டையில் என்ன களிமண்ணா இருக்கிறது?' என்பது எதைக் குறிக்கிறது? நிச்சயம் மூடிப்போன அறிவினைத் தான்.

”ஆழமாகத் தோண்டத் தோண்டா ஊறும் நீர்ப்போல” என ஆழத்தை மட்டும் சொல்ல முனைந்திருந்தால் வள்ளுவர் கேணி என்றோ கிணறு என்றோ சொல்லியிருப்பார். ஏனெனில் மணற்கேணியை அதிக நீர்வேண்டி ஆழமாகத் தோண்ட முற்பட்டால் பக்காவட்டிலுள்ள மணல் சரிந்து விழுந்துக்கொண்டே இருக்கும். பக்கவாட்டில் அகலமாக அகழ்ந்துவிட்டு பின் ஆழமாக தோண்டினால் தான் மண்சரியாமல் இருக்கும். மணற்கேணியைப் பொறுத்தவரை ஆழத்திற்கும் அகலத்திற்குமான விகிதம் மணலைப் பொறுத்து சரியாகப் பேணப்படுதல் நன்று. கேணி அல்லது கிணற்றைப் போல செங்குத்து வடிவம் கொண்டதல்ல மணற்கேணி. அது ஒரு அரை நீள்கோள வடிவத்தை தானே அமைத்துக்கொள்ளும். ஊறிய நீரை குவளைக்கொண்டு முகக்கையி சிறிது மண் சரியும். மீண்டும் தோண்டிவிட்டு முகக்க வேண்டும். அந்தச் சிறிய ஊற்றிலிருந்து எத்தனைக் குடங்கள் வேண்டுமானாலும் வடிகட்டப்பட்ட, தூய்மையான, கசடு இல்லாத நீரைப் பெற முடியும். தனி ஒருவரே எந்தப் கருவியுமின்றி கைகளாலேயே இதை தோண்டிவிடமுடியும் என்பது இதன் சிறப்பு. 

“கற்றனைத் தூறும் அறிவு” என்பதோடு பொருத்திப் பாருங்கள். கற்றறிதல் ஆழமானதாக மட்டுமின்றி அகலமானதாகவும் இருக்க வேண்டும் என்பதே வள்ளுவரின் ஆசைப்போலும். அதனாலேயே ஆழமான, செங்குத்தான, பலருடைய உழைப்பின் பயனான கேணியை விடுத்து இந்த எளிய மணற்கேணியைத் தெரிவுசெய்தார் போலும். “கசடறக் கற்க” இது ஒரு வழி போலும். நம் பட்டறிவிலிருந்தே இதற்கான எடுத்துக்காட்டுகளைப் பெற முடியும். பெரிய கண்டுப்பிடிப்பாளர் என அறியப்பட்ட எடிசனும், அவர் வளர்த்த பூனையும் அதன் குட்டிகளும், அவர் கதவில் போட்டுவைத்த மூன்று துளைகளும் செங்குத்து அறிவின் சான்றுகள். தாய்ப்பூனை வந்துசெல்ல ஒரு துளையும், இரண்டு குட்டிகள் வந்து செல்ல இரண்டு துளைகளும் என மூன்று துளைகளை அமைத்த அறிவாளர் அவர். அறிவு அகலமானதாகவும் இருத்தல் வேண்டும். 

மணற்கேணியின் பக்காவாட்டிலும், ஆழத்திலும் தோண்டாடும் அளவிற்கு நீர்நிறையும். அதுப்போல ஆழமாகவும், விரிவாகவும் கற்குந்தோறும் அறிவு நிறையும். 


அது போல, படித்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு தர வேண்டும். அப்படி கொடுக்க கொடுக்க மேலும் மேலும் அறிவு வளரும். கற்றது எனக்கு மட்டும் தான் என்று வைத்துக் கொண்டு இருந்தால், நாளடைவில் மணல் உள்ளே விழுந்து அந்த கேணி மூடிக் கொள்ளும். மூடிக் கொள்ளா விட்டாலும்,  தேங்கிய நீர் கெட்டுப் போய் விடும். படித்ததை பகிர வேண்டும்.



எல்லோரும் ஞானத்துடன் தான் பிறக்கிறோம். ஆனால் மணல் என்னும் அழுக்கின் தோண்டி எடுத்து நீக்க வேண்டும். அப்பொழுது அறிவு/ஞானம் வரும்.







நினைவில் கொள்க ”கண்டதைப் படித்தால் பண்டிதனாவான்” என்பது பழமொழி.

ஆனால். சிலர் இப்படியும் கூறுவர்: “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. அதுபோலப் படிப்பு வெற்றிக்கு வழி வகுக்காது.” “எத்தனையோ பேர் படிக்காமல் பெரிய ஆளாகி இருக்கிறார்கள். நம் காமராஜர் இல்லையா? ஆறாம் வகுப்புவரை மட்டுமே படித்த அவர் நாடு போற்றும் நல்ல முதல்வராக இல்லையா?” “பள்ளியில் கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டு வகுப்பில் கடைசியாக வந்தவர்கள் முதல் மதிப்பெண் எடுத்தவர்களை விட அதிகமாக முன்னேறியதில்லையா?. இதற்கு பதில்: சில விஷயங்களை நாம் இங்குப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில், விதி விலக்காக உள்ளவர்களை நாம் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்களிடம் வேறு ஏதாவது ஒரு சிறப்புத் திறமை இருந்திருக்கும். அது நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.உதாரணமாக காமராஜர் பள்ளிகளில் அறிமுகம் செய்த மத்திய உணவுத் திட்டமும் இலவசக் கல்வித் திட்டமும் நெ.து.சுந்தரவடிவேல் என்னும் அரசாங்க கல்வி ஆலோசகர் மற்றும் பொதுகல்வி இயக்குனரால் வடிவமைக்கப் பெற்றது. அவர் பல நூல்களை கற்றவர் பல நாடுகள் சென்று அந்த அனுபவங்கள் மூலம் இந்த திட்டத்தை வடிவமைத்தார். 

மேலும் அறிவு என்பது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மட்டும் பெறுவது அல்ல. அவை வாழ்க்கை பாடமாகவும் அமையக்கூடும். புத்தகங்களைப் படிப்பது பல மனிதர்களின் அனுபவத்தை படிப்பதற்கு சமம். மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள் இவற்றிடம் இருந்தும் கற்கலாம். ஸ்ரீ தத்தாத்ரேயர் தனக்கு “21 குரு” என்றார். அதில் பூமி, ஆகாயம், புறா, மீன், யானை போன்றவையும் அடக்கம்!.

அறிவு வளர மேலும் மேலும் படிக்க வேண்டும். படித்ததை மறக்காமல் இருக்க, அதன் படி நடக்க, மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்.

கம்பராமயணத்தில் (கம்ப்.நகரப்.8) 
“நூல்வரைத் தொடர்ந்து பயத்தொடும் பழகி 
நுணங்கிய நுவலரும் உணர்வே” கம்பர் கூறுவது, கற்றனைத்தூறும் அறிவு என்பதையே!

‘தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு” என்ற வரியை கற்கும்தோறும் அறிவு,தோண்டும்தோறும் ஊற்று என்று புரிந்துகொள்ளலாம். ஆனால் வள்ளுவர் மணற்கேணி என்கிறார். தோண்டுவதை நிறுத்தினால் விரைவிலேயே தூர்ந்து இல்லாமலாகி விடும் ஊற்று அது என எண்ணும்போது மேலதிகப் பொருள் சாத்தியமாகிறது.

இவ்வரி வருகிறது “நமது வெற்றிடங்களை அடையாளம் கண்டு மீண்டும் மீண்டும் நம்மை நிரப்பிக் கொள்ளும்போதே உண்மையில் கல்வி நிகழ்கிறது. ”

இன்றைய முதலீட்டிய உலகில் பிற அனைத்து துறைகளிலும் சுதந்திரம், தனித்துவம், வணங்காமை, தன்முனைப்பு ஆகியவை ஒருவகைப் பண்புகளாகவே நிலைகொள்கின்றன. கற்றுக்கொள்ளும் இடத்தில் மட்டும் உரிய இடத்தில் வணங்குதலும் உரிய முறையில் பணிதலும் அங்கே அவசியமானவை என்று தோன்றுகிறது. நாம் நமது வணக்கத்தின் மூலம், பணிதலின் மூலம் நாம் நம்து எல்லையைக் காணமுடியும். நமது பலவீனங்களையும் குறை பாடுகளையும் அளந்து அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அதன்பின்னரே நம்மை நாமே உடைத்து மறுவார்ப்பு செய்ய முடியும்.

நமது வெற்றிடங்களை அடையாளம் கண்டு மீண்டும் மீண்டும் நம்மை நிரப்பிக் கொள்ளும்போதே உண்மையில் கல்வி நிகழ்கிறது. அதனூடாகவே வெளியிலிருந்து வரும் சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் நம்முள் இடமளிக்க முடியும். அவற்றை நம்முள் நாமே வளர்த்து எடுக்க முடியும் அதனூடாக நாம் வளர்ந்து நாம் பணிந்தவர்களையும் வணங்கியவர்களையும் உண்மையிலேயே நிகரெனக்காணும் இடத்தை அடைய முடியும். கடந்து செல்லவும் கூடும்

ஆனால் நம்மைச்சுற்றி எழுதப்படும் கவிதைகளில் மிகப்பெரும்பாலானவை மிகமிக எளிமையான அன்றாட உணர்வுகளால் ஆனவை. உறவும் பிரிவுமென, அறிதலும் மயக்குமென இங்கே நடந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை திரும்ப நமக்கே சொல்பவை. அறிந்தவற்றை அவற்றில் கண்டுகொண்டு, ஆம் நானுமறிவேன் என்று சொல்வதையே இங்கே எளிய கவிதைவாசகர் கவிதையனுபவமென அடைந்துகொண்டிருக்கிறார்கள். உச்சங்கள் என எழும் கணங்களை அடையும் கவிதைகள் அரிதாகிக்கொண்டிருக்கின்றன. மெய்மைநாட்டத்தையும் மெய்மையைத் துறத்தலையும், அறிதலையும் அறிதலின்மையில் அமைதலையும் முன்வைக்கும் ’சற்றே ஆழ்ந்த’ கவிதைகளை எப்போதோதான் வாசிக்க இயல்கிறது.

ஏனென்றால் வாசகர் அறிவை அல்ல, கவிஞனிடமிருந்து தங்கள் அறிதலுக்கொரு சான்றை விரும்புகிறார்கள். அறிந்ததை அறிவதென்பது அறிவல்ல, பலசமயம் அது அறிந்தவற்றைக் கொண்டு கவசங்கள் செய்து அறிதலை தடுத்துக்கொள்ளும் முயற்சிதான். எந்த இலக்கியப்படைப்பும் நாம் சற்றுமறியாத ஒன்றைச் சொல்லப்போவதில்லை. நாம் அறிந்த துளியை பெருக்கி மலையென நிற்கச்செய்வதே இலக்கியத்தின் வழி. நம் புறம் அறிந்தவற்றில் இருந்து நம்மை நம் அகமறிந்தவற்றை நோக்கி படைப்புகள் கொண்டுசெல்கின்றன. அவற்றை உணரும் கூருணர்வு கொண்ட வாசகர் சிலரே எச்சூழலிலும் இருக்க இயலும். ஆகவே பெருவாரியானவர்கள் விரும்புவது ஒருபோதும் கவிதையென ஆவதில்லை. கவிதை ஒரு சூழலின் பொதுரசனையின் எல்லைக்கு நீடுதொலைவு முன்னால் சென்றுகொண்டிருக்கும் வழிகாட்டி விண்மீன்.


கேணி என்றால் தண்ணீர் சுரக்கும் கிணறு. கேணி என்பது பெருங்கிணறு எனலாம். பொதுவாக ஆழமாகத் தோண்டப்பட்டு நிலையானக் கட்டுமானத்தால் நிறுத்தப்பட்டிருக்கும். பழங்காலத்தில் கேணிகள் வட்டாமாக இருந்தன. செங்கற்களால் ஆன வட்டாமன கேணிகளை சிந்துவெளியில் இருப்பதாக அகழ்வாராய்ச்சியில் கண்டுப்பிடிக்கபட்டுள்ளன. கேணி நல்ல உறுதியான மண்வாகு அமைந்த நிலங்களில் சாத்தியப்படும். 




ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க (குறுந்தொகை 399)
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் (நற்றினை 92)
தண் கேணிக் தகை முற்றத்து (பட்டினப்பாலை)
நெடுங் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி (பெரும்பாணாற்றுப்படை)

மணற்பாங்கான இடங்களில் “சுடுமண் உறைக் கேணி” அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கீழடி, காஞ்சிபுரம், கொடுமணல், கங்கைகொண்ட சோழபுரம், அரிக்கமேடு, புகார், மட்டக்களப்பில் வந்தாறுமூலை என ஏராளமான உறை கேணிகள் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. மணற்பாங்கான இடங்களில் செங்கற்கட்டுமானத்தைவிட சுடுமண் உறைகளை எளிதாக அமைத்துவிட முடியும்.


உறைக் கிணற்றுப் புறச்சேரி (பட்டினப்பாலை)
இவையிரண்டும் நிலை நீர்வாழ் இடங்கள். செங்குத்தான, ஆழமான அமைப்பைக் கொண்டவை. பலரின் உழைப்பும், பொருட்செலவும் கொண்டவை. சில வேளைகளில் உப்பு நீரே கிடைக்கும். நீண்டகாலம் பயனளிக்கும். நீரின்றிப் போனாலோ பாழ்பட்டுப் போனாலோ கைவிடப்பட வேண்டியவை.


மேலே படத்தில் காணப்படும் கூவல் என்றொரு தோண்டப்படும் நீர்நிலையும் சங்க இலக்கியங்களிலே காணக்கிடைக்கிறது. பாலைநிலங்களைக் கடந்துபோவோர், அங்கேயே வாழும் நிலையிலிருப்போர் குடிநீருக்காக மண்ணில் அகழும் சிறு நீர்நிலை இது. பாலைநிலங்களில் தோண்டப்பட்டிருக்கும் கூவல் ஒன்றில் நீர் செம்மண் நிறத்தில், கலங்கி இருந்ததென்று புறப்பாட்டொன்று தெரிவிக்கிறது.

பூவல் படுவில் கூவல் தோண்டிய
செங் கண் சில் நீர் பெய்த சீறில் (புறம் 319)

வெயில் காயும் பரல் கற்களையுடைய பள்ளத்தில் கணிச்சி (குந்தலம்) கொண்டு குழிபறித்த கூவல் ஒன்று இருந்ததை நற்றிணைப் பாடலொன்று அறியத்தருகிறது.

வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்க்கில், 
கணிச்சியில் குழித்த கூவல் (நற்றினை 240)

கூவலில் நீரை அப்படியே அருந்த இயலாது. அதை வடிகட்டி பின்னரே குடிக்க முடியும். இந்த இரண்டு அன்றி மூன்றாவதாக ஒரு அமைப்பு உண்டு. அது மணற்கேணி. கருப்போருள் உரை செய்கையில் இறையனார் களவியலுரையும், நச்சினார்க்கினியர் உரையும் நெய்தலுக்கான நீர் வரைய்றையில் “மணற்கிணறு” எனக் குறிக்கின்றன. ஆனால், நெய்தலின் மண்வாகு, சுடுமண் உறையின்றி கிணறு அமைக்கபட்டால் குறுகிய காலத்திற்குள் தூர்ந்துவிடும் தன்மையுடையதாய் இருக்கும். இவை வள்ளுவர் சொல்லும் மணற்கேணியாக இருக்க முடியாது.

பூம்புகாரில் கடலோரத்தில் வானகிரியில் உறைகிணறு ஒன்றும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. “கடற்கரை மணலில் குடிநீருக்காக தோண்டப்படுகின்ற கிணறுகள் மண் சரிந்து தூர்ந்து போகாமல் இருக்க கட்ட மண் வளையங்கள் கொண்டு உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன”. கொற்கை, நந்தன் மேடு, அரிக்க மேடு ஆகிய பகுதிகளில் உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனில், வள்ளுவர் சொல்லும் “மணற்கேணி” ஒடும் நீர்வாழிடமான ஆற்றின் கரையோரங்களில் கைகளால் தோண்டப்படும் சிறு குழிகளாகும். ஊற்றுநீர் எடுத்துப் பயன்படுத்துவதே ஏராளமான ஊர்களில் குடிநீருக்கான வழிமுறையாக இருந்தது. புழக்கடைப் பயன்பாட்டிற்கு ஆற்று நீரையோ, குளத்து நீரையோ, கிணற்று நீரையோ எடுத்துக் கொள்வார்கள். ஊற்றுநீரே குடிநீர்.

பழையாற்றங்கரையில் நீண்டகாலமாக மணற்கேணி தோண்டி நீரெடுத்துவந்தது சிலருக்கு நினைவில் இருக்கலாம். அது ஒரு காட்டாறு. எப்பொழுதும் நீர் ஓடிக்கொண்டேயிருக்கும். கோடையிலும் கூட. ஓடும் நீரிலிருந்து இரண்டு முதல் நான்கடிகள் தள்ளி மணலில் கையால் சிறு குழி ஒன்றைத் தோண்டுவார்கள். விளிம்பு மணலை கையால் தட்டித் தட்டி பலப்படுத்திக் கொள்வார்கள். பழையாற்றில் நீர் ஓடிக்கொண்டிருப்பதால் கையால் தோண்டிய அந்தச் சிறுகுழியில் நீர் ஊறிவிடும். ஆற்றின் மட்டத்திற்கு மேலாக நீர் ஊறாது. சிறு குவளை கொண்டு முகந்து குடங்களில் ஊற்றிக்கொள்வார்கள. ஆற்றின் நீர் கலங்கலாக இருந்தாலும் ஊற்று நீர் தெள்ளிய மணலால் வடிகட்டப்பட்டு தூய்மையானதாய் இருக்கும். வேகமாக நீர் நிறைக்க வேண்டுமெனில் என்ன செய்வது? “குழியை ஆழப்படுத்துவோம்” என்று சிலர் நினைக்கலாம். ஆனால் வள்ளுவர் அப்படி நினைக்கவில்லை.



”ஆழமாகத் தோண்டத் தோண்டா ஊறும் நீர்ப்போல” என ஆழத்தை மட்டும் சொல்ல முனைந்திருந்தால் வள்ளுவர் கேணி என்றோ கிணறு என்றோ சொல்லியிருப்பார். ஏனெனில் மணற்கேணியை அதிக நீர்வேண்டி ஆழமாகத் தோண்ட முற்பட்டால் பக்காவட்டிலுள்ள மணல் சரிந்து விழுந்துக்கொண்டே இருக்கும். பக்கவாட்டில் அகலமாக அகழ்ந்துவிட்டு பின் ஆழமாக தோண்டினால் தான் மண்சரியாமல் இருக்கும். மணற்கேணியைப் பொறுத்தவரை ஆழத்திற்கும் அகலத்திற்குமான விகிதம் மணலைப் பொறுத்து சரியாகப் பேணப்படுதல் நன்று. கேணி அல்லது கிணற்றைப் போல செங்குத்து வடிவம் கொண்டதல்ல மணற்கேணி. அது ஒரு அரை நீள்கோள வடிவத்தை தானே அமைத்துக்கொள்ளும். ஊறிய நீரை குவளைக்கொண்டு முகக்கையி சிறிது மண் சரியும். மீண்டும் தோண்டிவிட்டு முகக்க வேண்டும். அந்தச் சிறிய ஊற்றிலிருந்து எத்தனைக் குடங்கள் வேண்டுமானாலும் வடிகட்டப்பட்ட, தூய்மையான, கசடு இல்லாத நீரைப் பெற முடியும். தனி ஒருவரே எந்தப் கருவியுமின்றி கைகளாலேயே இதை தோண்டிவிடமுடியும் என்பது இதன் சிறப்பு. 

இதை அப்படியே “கற்றனைத் தூறும் அறிவு” என்பதோடு பொருத்திப் பாருங்கள். கற்றறிதல் ஆழமானதாக மட்டுமின்றி அகலமானதாகவும் இருக்க வேண்டும் என்பதே வள்ளுவரின் ஆசைப்போலும். அதனாலேயே ஆழமான, செங்குத்தான, பலருடைய உழைப்பின் பயனான கேணியை விடுத்து இந்த எளிய மணற்கேணியைத் தெரிவுசெய்தார் போலும். “கசடறக் கற்க” இது ஒரு வழி போலும். நம் பட்டறிவிலிருந்தே இதற்கான எடுத்துக்காட்டுகளைப் பெற முடியும். பெரிய கண்டுப்பிடிப்பாளர் என அறியப்பட்ட எடிசனும், அவர் வளர்த்த பூனையும் அதன் குட்டிகளும், அவர் கதவில் போட்டுவைத்த மூன்று துளைகளும் செங்குத்து அறிவின் சான்றுகள். தாய்ப்பூனை வந்துசெல்ல ஒரு துளையும், இரண்டு குட்டிகள் வந்து செல்ல இரண்டு துளைகளும் என மூன்று துளைகளை அமைத்த அறிவாளர் அவர். அறிவு அகலமானதாகவும் இருத்தல் வேண்டும். 

மணற்கேணியின் பக்காவாட்டிலும், ஆழத்திலும் தோண்டாடும் அளவிற்கு நீர்நிறையும். அதுப்போல ஆழமாகவும், விரிவாகவும் கற்குந்தோறும் அறிவு நிறையும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும்.
(ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக' என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மேல் 'உண்மை அறிவே மிகும்' (குறள் .373) என்றதனோடு மலையாமை அறிக.).

மணக்குடவர் உரை
அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம். இஃது அறிவுண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

சாலமன் பாப்பையா உரை
மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

Thirukkural - Management - Learning
Valluvar is profusely known for resorting to similes to help his readers understand the meaning of his writings. He is great, as his work, in employing them. The process of learning is referred to the process of digging a spring in sandy soil to get water. The more or deeper we dig in sandy soil, the much water we get. Similarly, the more and deeper we learn the better and the sharper will be our wisdom. That is Valluvar's wisdom in Kural 396. The fountain of knowledge keeps flowing as the fountain of water keeps flowing.

A well dug in sand yields water as dug- 
So learning wisdom.

The more we know about Thirukkural, the more there is to know. Cardinal Newman said, “Every new reader finds a new meaning in a new reading.” That concept is true with reference to Thirukkural. Every time we read, we become new readers and we find a new meaning in our reading. When we delve deep into Thirukkural, we will evolve as complete people.

English Meaning - As I taught a kid - Rajesh
When we dig a sand-well, we get/gain water. Similarly when we learn, we gain knowledge.  If you do not dig the well, sand will come in and you will not get the water. Similarly, if you do not study or revise you will not gain any knowledge.
Learning process is equated to digging in sand-well because 
1) Learning process is not accumulation of knowledge as mountain. Rather learning process is like digging information, understanding it and using it. 
2) When one digs a sand well, we get both sand particles as well as water. One has to filter out the sand and consume only the water. Similarly, when one learns, we are bound to have mixed understanding. So, one has to analyze and learn without mistakes.
3) The water we gain from a sand well is a just a fraction of water in ocean. Similarly the knowledge we can learn in this world is only a fraction. So, one must not feel egoistic about learning or gaining knowledge. Rather one must be humble enough to learning continuously 
4) In sand-well, after taking water, if one stops taking water, after some time, the sand slowly gets into the well again. Thereby the well is now plugged with sand. Similarly, if one stops learning, his/her knowledge gets stagnated or outdated. So, one must always be a learning. Continuously learning is the best
5) In sand well, if we take water and give it to others, there is still water in the well. So is knowledge. If one is sharing knowledge with others, one does not loose knowledge. So, one must always share knowledge with others. 

Questions that I ask to the kid
What is knowledge?
How should gain knowledge?
Is knowledge a regular activity? Will knowledge be permanent in your brain? If not why? How can you keep your knowledge fresh?

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

குறள் 379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி

கால் - நாலில்ஒன்று; தமிழில் நாலிலொன்றைக் குறிக்கும்'வ' என்னும் பின்ன எண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

நல்லவை - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை.

நல்லவாக் - விளைவாய இன்பங்களை நல்லவை

காண்பவர் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி

கால் - நாலில்ஒன்று; தமிழில் நாலிலொன்றைக் குறிக்கும்'வ' என்னும் பின்ன எண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

அல்லல் -  துன்பம்

அல்லற்படுவது - துன்பப்படுவது 

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

முழுப்பொருள் 
ஒருவர்க்கு வாழ்வில் நல்லது, இனியது நடக்கும் பொழுதெல்லாம் வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் நல்லவற்றையெல்லாம் நன்கு அனுபவிக்கும் ஒருவர் தீயது நடக்கும் பொழுதும் நல்லவை நடக்காத பொழுதும் இவை யாவும் விதி என நினைப்பது ஏனோ?

விதி என்ன தீமை மட்டும் தருவதா என்ன. இல்லையே. விதி இன்பமும் தரவல்லது. ஆனால் இன்பம் வரும் பொழுதெல்லாம் விதிக்கு நன்றித்தெரிவிக்காமல் தனது செயலுக்கும் உழைப்பிற்கும் கிரீடம் சுட்டிக்கொண்டு (அதாவது அகங்காரம் கொண்டு) இருப்பாது ஏனோ?

இதை ஒட்டி ஒரு கருத்தை நான் இப்படிச் சொல்வேன், நம்மில்ல பலர் இறைவன் இருக்கும் கோயில்களுக்கு சென்று அல்லது வீட்டில் இறைவனை வணங்கும் பொழுது இறைவனிடம் இல்லாதை நினைத்து வருந்துகிறோம், இல்லாததை வேண்டி நிற்கிறோம் அதற்காக மன்றாடுகிறோம். ஆனால் இருப்பவற்றுக்கு இறைவன் கொடுத்தவற்றுக்கு நன்றி தெரிவிப்பதில்லை. அது ஏனோ? துன்பம் வரும் பொழுது மட்டும் இறைவனின் நினைப்பு வருவது ஏனோ? 

முற்றுக்கருத்தையும் கம்பராமாயண தைலமாட்டுப்படலப் பாடலொன்று கூறுகிறது. “இன்பம்வந் துறுமெனின் இனிய தாயிடைத் துன்பம்வந் துறுமெனின் துறக்க லாகுமோ?”

மேலும்: அஷோக் உரை

இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள் என்ற உங்கள் சொல்லை நான் தலைக்கொண்டவன்.

இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை என்றது உங்கள் மெய்வேதம்.
-

ஒப்புமை
“சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே ஆகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத்தென்னை பிரிவு” (நாலடி 110)

“சாதலும் பிறத்தல் தானும் தம்வினைப் பயத்தின் ஆகும்
ஆதலும் அழிவும் எல்லாம் அவைபொருட் கியல்பு கண்டாய்
நோதலும் பரிவும் எல்லாம் நுண்ணுனர் வின்மை யன்றே
பேதைநீ பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளி யென்றான்” (சீவக 269)

“முடியுநாள் தானே வந்து முற்றினான் துன்பமுந்நீர்
படியுமாம் சிறியோர் தன்மை நினக்கிது பழியிற்றாமால்” (கம்ப.மாயாசீதைப் 65)

“இன்பம்வந் துறுமெனின் இனிய தாயிடைத்
துன்பம்வந் துறுமெனின் துறக்க லாகுமோ” (கம்ப.தைலமாட்டு.29)

பரிமேலழகர் உரை
நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் - நல்வினை விளையுங்கால், அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது, இவை நல்ல என்று இயைந்து அனுபவிப்பார், அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன் - ஏனைத் தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறு அனுபவியாது, துடைக்கும் திறன் நாடி அல்லல் உழப்பது என் கருதி? (தாமே முன் செய்து கொண்டமையானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால, அவற்றுள் ஒன்றிற்கு இயைந்து அனுபவித்து, ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் இன்பத்துன்பங்கட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நன்மை வருங்காலத்து நன்றாகக் காண்பவர் தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு?. இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?.

சாலமன் பாப்பையா உரை
நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?.

English Meaning - As I taught a kid - Rajesh
When good things happens to one person, he(or she) enjoys all the good stuffs (without giving credit to other factors, other people). Whereas whenever some bad thing happens to him and he suffers, he blames it upon fate or someone else? Whenever good things he gives credit to his hardwork, talent, intelligence and one doesn't even thank God for it. But when something bad happens, he blames on fate and goes to God and question why God gave sufferings to him. Why this double standards? Why is he suffering thinking about suffering and bad times?

So, one should accept both good and bad equally. One should be grateful for all the factors in his favor during good times, stay ground and be humble. When one goes through bad times, one should learn from the mistakes and continue do his work and take help of others. 

Also, taking all the credit for good results is a ego because one alone cannot be a reason for good results. There are many other factors. Also taking blame for all the failures is a bigger ego because failures can happen for things not under our control (taking blame means that one is so egoistic that he could have done beyond the limitations).

Questions that I ask to the kid
Is it correct to suffer when going through difficulties/failures or a bad phase in life? Why? How can you overcome? That means, how would you treat good phases of life?

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

குறள் 562 
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்
[பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை ]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கடிது - கடுமையானது; விரைவாய்; மிக.
ஓச்சி - ஓச்சுதல்
எறிதல்; பாய்ச்சுதல்; செலுத்துதல்; வீசுதல்; உயர்த்துதல்; ஓட்டுதல்:தூண்டிவிடுதல்.
மெல்ல - மெதுவாக
எறிக - எறிதல் - உதைத்தல்; வீசுதல்; வெட்டுதல்; முறித்தல்; அறுத்தல்; பறித்தல்; அழித்தல்; ஓட்டுதல்; குத்தல்; அடித்தல்.
நெடிது - நீண்டது; தாமதம்
ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

நீங்காமை - nīngkāmai   neg. v. noun. That which is inseparable, பிரியாமை. 2. Unchange ableness, continuance, நித்தியமாயிருக்கை.
வேண்டுபவர் - விரும்புபவர், வேண்டுகின்றவர்

முழுப்பொருள்
ஒரு நாட்டில் தவறுகள் குற்றங்கள் நடக்கும். அதற்கு தண்டனைகள் கொடுக்கப்படும். ஒரு அரசர் அல்லது அரசாங்கம் குற்றங்களை சகித்துக்கொள்ள கூடாது. கடுமையாக அதனை எதிர்க்கொள்ளவேண்டும். கையோங்க வேண்டும். ஆனால் அதனை அமல் படுத்தும் பொழுது மென்மையாக தான் இருக்க வேண்டும். செயலூட்டப்படும் தண்டனை குரூரமாய் இருக்க கூடாது. தண்டனை சற்று மென்மையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் மக்கள் அரசின் மீது மதிப்பு வைத்து பலநாட்கள் விதிகளை கடைப்பிடிப்பார்கள். விதிகளை பலநாட்கள் மக்கள் கடைபிடிக்கவேண்டும் என்றால் அரசாங்கம் மக்கள் விதிகளை மீறும்பொழுது கடுமையாகவும் கையோங்க வேண்டும் அதே சமயம் மென்மையான தண்டனையை கொடுக்க வேண்டும். கடுமையான அறமற்ற தண்டனைகளை கொடுக்கக்கூடாது.

இது குடும்பத்திலும் பொருந்தும். பிள்ளைகள் மீது அன்பும் வேண்டும், கண்டிப்பும் வேண்டும். ஆனால் பெற்றோரின் கண்டிப்பு அளவு மீறக்கூடாது. இல்லை என்றால் பிள்ளைகள் பெற்றோர்களை வெறுப்பார்கள்.

இன்னா செய்யாமை (பிறர உயிர்களுக்கு துன்பம் செய்யாதே) என்று கூறிய வள்ளுவர், குற்றங்கள் புரியும் நபர்களை தண்டிக்கும் இடத்தில் இருக்கும் மன்னர்களுக்கும் இன்னா செய்யாமை என்று கூறியிருந்தார். ஆனால் தண்டனைகள் அவசியமானது அதனால் தான் அதன் அளவை இக்குறளில் கூறியுள்ளார் திருவள்ளுவர்.

இது தண்டனைகள் என்று மட்டும் இல்லை, ஒரு நாடு மக்களிடம் வசூலிக்கும் வரி போன்றவற்றுக்கும் பொருந்தும். 

கீழுள்ள உதாரணத்தை படிக்கவும்

உதாரணம்:
ஜெயமோகன் விளக்குவது: என்னுடைய உறவில் (என்னைவிட 8 வயது இளைய) ஒரு பையன் கங்கா என்று இருந்தான். அவனுடைய அப்பா தன்னுடைய மகன் மீது பெரும் பிரியம் கொண்டவர். பேரன்பு கொண்டவர். கங்காவின் சிறுவயதில் ஒரு விதமான பொறுப்பின்மை இருந்தது. பொறுப்பின்மை என்றால் ஒரு இடத்தில் நிலைத்துநிற்க முடியாத தன்மை பிள்ளைகளுக்கு இருக்கும். ஐந்து ஆறு நாட்களுக்குப்பிறகு வேறு ஒரு உறவுகாரர் வீட்டுக்கு பிள்ளைகள் சென்றுவிடுவார்கள். பையன் இங்கு இருக்கிறான் என்று பாடசாலையில் இருந்து கடிதம் வரும். கங்காவின் தந்தை சென்று கூட்டிக்கொண்டு வருவார்.  அப்புறம் கொஞ்ச நாள் கழித்து மதுரை என்று பல இடங்களில் இருப்பான்.  ஒரு தடவை பைசா எடுத்துவிட்டு செல்கிறான் கங்கா. ஒரு கட்டத்தில் கங்காவின் அப்பா சொல்கிறார், மிரட்டுகிறார். ஒரு கட்டத்தில் பையனை தரதரவென்று குட்டிக்கொண்டு  பூனா (Pune) செல்லும் ரயிலில் சென்றுவிடுகிறார். பூனா பக்கம் சென்று உட்கார் என்று சொல்லி வந்துவிடுகிறார். பைசா(காசு) எதுவும் கொடுக்கவில்லை.  லெட்டர் (கடிதம்) மட்டும் எழுதி வைத்து இருக்கிறார். நீ பொழச்சுக்கோ (பிழைத்துக்கொள்). பிச்சை எடுத்து பொழச்சாத்தா உனக்கு புத்தி வரும். இங்க இருந்தா நீ ஒரு ஊதாரி கெட்டுப்போய்விடுவாய். வந்துவிடுகிறார். இறங்கிய உடன் பையன் எங்கே என்றால் பூனா பக்கம் விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்கிறார். கங்கா அம்மா நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுகிறார். பெரிய ஒரு நாடகத்தருணம் அக்காலத்தில் அது.  பையன் வரவே இல்லை. ஆனால் கங்கா 8 வருடம் கழித்து திரும்ப வருகிறான். பட்டறை, டீ கடை என்று பல இடங்களில் வேலைப் பார்த்து பெரியாளாகி வருகிறான். அவன் வரும் பொழுது அவன் அப்பா உயிரோடு இல்லை. மெலிஞ்சி, ஒடுஞ்சி நொந்து ஏது ஒரு வகையில் இறந்து விடுகிறார். கங்கா அம்மா சொல்கிறார் கொள்ளிப்போட ஆள் இல்லாமல் தர்ம கொள்ளித்தான் பொட்டோம் (ஏன் என்றால் அவருக்கு வேறு ஆண்ப்பிள்ளை இல்லை). நீ என்ன பன்னு ஒரு சாஸ்திர சடங்கு பன்னி அவர்க்கு காரியம்/கருமம் செய்துவிடு என்று கங்காவிடம் கூறுகிறார்.  “நான் பன்ன மாட்டேன். அந்த ஆளுக்கும் எனக்கும் சம்மந்தம் கிடையாது” என்று கூறுகிறான். ஒரு ஐந்து பேர் (பெரியவர்கள். ஜெயமோகன் அப்பா உட்பட) கூடி பேசுகிறார்கள். உபதேசம் செய்கிறார்கள். நீ பன்னவில்லை என்றால் உனது அப்பா நரகத்துக்கு சென்றுவிடுவார். என்ன இருந்தாலும் உன்மேல உள்ள அன்பால தான் அவர் அதை செய்தார். நீ இன்னிக்கி உருப்பட்டு இருக்கிறாய். இல்லை என்றால் உருப்பட்டு இருக்க மாட்டாய். நல்லது தான் செய்து இருக்கிறார். குரூரமாய் செய்து இருக்கிறார். ஆனால் சரியாக தான் செய்து இருக்கிறார். நீ அவருக்கு காரியம் செய் என்று உபதேசம் கூறுகிறார்கள். பன்னவே மாட்டேன் என்று கங்கா கூறிவிடுகிறான். நான் பட்ட கஷ்டம் உங்களுக்கு சொல்லி புரியவைக்க முடியாது. எங்க அப்பா என்ன விட்டுட்டு போய்ட்டார்னு நான் பதறிப்போய் இருந்தேன். அந்த தருணம்/moment சொல்லி புரிய வைக்க முடியாது.  ஒரு போதும் இந்த ஆளுக்காக ஒரு துளி கண்ணீர் விட மாட்டேன். ஒரு பிடி தண்ணீர் விட மாட்டேன் என்று முடிவு செய்தேன்.

ஜெயமோகன் சொல்கிறார் எனக்கு அக்காலத்தில் மிக பதட்டம் கொடுத்த சம்பவம் இது. பின்னாளில் இதை ஜெயகாந்தனிடம் சொல்கிறேன்.  அவர் உடனே கூறுகிறார் கடிதோச்சி மெல்ல எறிக.  வேகமாக ஓங்கு மெல்ல அடி. அது தான் அரசன் செய்யவேண்டியது. தந்தை செய்யவேண்டியது அது தான். கடிதோச்சி என்றால் கொன்னு பொட்ருவேன் டா நு ஓங்கு வது வேர ஆனால் படும் பொழுது மெல்லத்தான் பட வேண்டும். ஒரு நவின ஜனநாயக அரசு அப்படித்தான் மக்களிடம் நடந்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் நீ செய்வது அறம் அல்ல.

காணொளி சுட்டி  https://youtu.be/lsl8i0CltJ0?t=3286 (54:46) (நேரடியாக 54:46 க்கு செல்ல சுட்டியை தட்டவும்)



மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கடிது ஒச்சி - அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி, மெல்ல எறிக - செய்யுங்கால் அளவிறவாமல் செய்க, ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர் - ஆக்கம் தம்கண் நெடுங்காலம் நிற்றலை வேண்டுவார்.
(கடிது ஓச்சல், குற்றஞ் செய்வார் அதனை அஞ்சுதற் பொருட்டும், மெல்ல எறிதல் யாவரும் வெருவாமைப் பொருட்டுமாம். தொடங்கின அளவில் குறைதல் பற்றி மென்மை கூறப்பட்டது. 'ஓச்சுதல்', 'எறிதல்' என்பன இரண்டும் உவமைபற்றி வந்தன.
இவை இரண்டு பாட்டானும் குடிகள் வெருவந்த செய்யாமையது இயல்பு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கடிதாகச் செய்வாரைப் போன்று மெல்லிதாகச் செய்க, நெடிதாக வருகின்ற ஆக்கம் நீங்காமையை வேண்டுவார். இது குற்றத்திற்குத் தக்க தண்டத்தைக் குறையச் செய்யவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.

‘கோபம்’ மனிதனிடமிருக்கும் எதிர்மறைக் குணங்களில் மிகவும் மோசமானது; அழிவுத் தன்மைமிக்கது. அரண்மனைக் கோபங்களால் சாம்ராஜ்ஜியப் போர்கள் நடைபெற்றதாகச் சரித்திரம் கூறுகிறது. கட்டுக்கடங்காத கோபங்களால் வன்முறைகளும், கொலைவெறிகளும் தாண்டவமாடுகின்றன. பெற்றோர் கோபங்களில் பிள்ளைகள் நலம் கெடுகிறது; உறவு சிதைகிறது. ஆசிரியர்களின் கோபங்களில் மாணவ நெஞ்சங்கள் கருகிப் போகின்றன. அர்த்தமற்ற அநாகரீகமான காட்டுமிராண்டித்தனமான கோபத்தின் உக்கிரமும் உஷ்ணமும் தாங்காமல் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்! பிரிந்த உயிர்கள் ஏராளம்!


10 வயது மாணவன் சென்னையில் ஆசிரியர் கோபத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டான். அவன் தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதத்தில், “நான் மறுபிறவியில் இதே குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன். ஆனால் இதே பள்ளியில் படிக்க விரும்பவில்லை” என்ற செய்தி சிந்திக்கத்தக்கது.

2007 ஜனவரி மாதம் ஒரு நாளில் திருநெல்வேலியில் ‘சுடலி’ என்ற 9 வயது சிறுமி வகுப்பில் கவனமாக இல்லை என்று ‘மிஸ்’ அவளை நோக்கி சினங்கொண்டு எறிந்த டம்ளர் ‘மிஸ்’ ஆகாமல் சிறுமியின் கண்களைப் பதம் பார்த்தது. பார்வை நிரந்தரமாகப் பறிபோனது. 2007 அக்டோபரில் அகமதாபாத்தில் 10 நிமிடம் தாமதமாக வந்தான் 11 வயது மாணவன் மிலான் தாணா. அவனுக்கு ஐந்து முறை பள்ளி மைதானத்தைச் சுற்றி வருமாறு அவமானகரமான தண்டனை வழங்கப்பட்டது. இரண்டாவது சுற்றிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்து போனான்.

2009 மார்ச் 24ஆம் தேதி மணப்பாறையிலுள்ள ஒரு தனியார் பள்ளி அருகிலுள்ள குளத்தில் 5 வயது மாணவி ஸ்ரீரோகிணி உடல் மிதந்தது. காவல்துறை புலனாய்வு செய்தது. வகுப்பறையில் மூன்று நாட்களுக்கு முன்பு ஸ்ரீரோகிணி தலையில் பிரம்பால் ஓங்கி வன்மத்துடன் ஆசிரியை அடித்திருக்கிறார். அடித்ததும் சிறுமி அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறாள். ஆசிரியைக்கு அச்சம் ஏற்பட்டு மயங்கிக் கிடந்த சிறுமியை பீரோவில் திணித்து வைத்துப் பூட்டி வைத்திருக்கிறார். அதன் பின் ஊழியர்கள் உதவியுடன் இறந்துவிட்ட குழந்தையைக் கொண்டுபோய் குளத்தில் போட்டுவிட்டு ஒன்றும் நடக்காதது போல் இருந்திருக்கிறார்.

2009 ஏப்ரல் 17ல் டில்லி மாநகராட்சியில் பள்ளி ஒன்றில் 11 வயதுச் சிறுமி ஷானுகான் ஆங்கில வார்த்தை ஒன்றைச் சரியாக வாசிக்கவில்லை என்பதற்காக ஆசிரியையால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறாள். அவளது முதுகில் செங்கற்களைச் சுமக்க வைத்து கடும் வெயிலில் நிற்க வைத்துள்ளனர். சில நிமிடங்களில் ஷானு மயங்கிச் சரிந்துவிட்டாள். அதன்பின் அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது அவளது மூக்கிலிருந்து இரத்தம் கொட்டத் துவங்கியுள்ளது. மருத்துவமனையில் சேர்த்த மறுநாளில் ஷானுவின் உயிர் பிரிந்துவிட்டது.


சமீபத்தில் 13 வயது கிராமப்புற மாணவனை அவனது தந்தை சிகிச்சைக்கு அழைத்து வந்தார். “வகுப்பு நேரங்களில் அடிக்கடி இவனுக்கு வலிப்பு வந்துவிடுகிறது” என்றும் அதன்பிறகு ஓரிருநாள் உடல் வலியும், கடும் தலைவலியும் நீடிப்பதாகக் கூறினார். ஆங்கில மருத்துவ நரம்பியல் நிபுணரின் ஆலோசனைப்படி மூளையை ஸ்கேன் செய்து பார்த்து, தொடர்ச்சியாக அவரது பரிந்துரைப்படி மருந்து மாத்திரைகள் கொடுத்து வருவதாகவும் கூறினார். ஆயினும் எந்த முன்னேற்றமும் இல்லாமல்…. மீண்டும் மீண்டும் வகுப்பறையில் வலிப்பு வந்துவிடுகிறது என்று வருத்தத்துடன் கூறினார்.

அப்பாவை சிறிது நேரம் வரவேற்பறையில் அமரச் சொல்லிவிட்டு, பையனிடம் நட்போடும் கனிவோடும் வகுப்புச் சூழ்நிலைகள் குறித்து விசாரித்து அறிந்தோம். முதன் முறையாக வலிப்பு வந்த நாளை நினைவு படுத்துமாறு கேட்டோம். அன்று கிராமத்திலிருந்து நகர்நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து இடைவழியில் ஒரு பிரச்சனை காரணமாக 15 நிமிடம் நிற்க நேர்ந்துவிட்டது. அதனால் அவன் சற்று தாமதமாக பள்ளியை அடைந்தான். வாசலில் உடற்கல்வி ஆசிரியர் கோபம் கொப்பளிக்க கையில் பிரம்போடு அவனைக் கடுமையாக உபசரித்திருக்கிறார். 


மனதிலும் உடம்பிலும் பட்ட காயங்களின் ரணத்தோடு வகுப்பறையில் இருந்த போது மற்றொரு தாக்குதலை அவன் எதிர்கொள்ள நேர்ந்தது. மாதாந்திர தேர்வுத்தாள் திருத்தப்பட்டு அவற்றை வழங்கிய ஓர் ஆசிரியர் மதிப்பெண் குறைவுக்காக அவனை விசேஷமாகக் கவனித்திருக்கிறார். அந்தப் பாடவேளையில் அடுத்த சில நிமிடங்களில் உடல் நடுங்கி, கண்கள் இருண்டுபோய், தன்னிலை இழந்து முதன் முறையாக வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவன் பள்ளியில் கண்டிக்கப்படும் போதும் தண்டிக்கப்படும் போதும் வலிப்பு வருவது வாடிக்கையாகி விட்டது. அந்தச் சிறுவனுக்கு உரிய மனநல ஆலோசனையும் மலர் மருந்துகள் மற்றும் ஹோமியோபதி சிகிச்சையும் அளிக்கப்பட்டபின் சில மாத காலத்தில் வலிப்பிலிருந்து நலமடைந்தான்.

ஐ.நா. சபையின் குழந்தை உரிமை உடன்படிக்கையில் இந்திய அரசும் கையொப்பம் இட்டுள்ளது. குழந்தைகளைக் கடும் சொற்களாலும் உடல் ரீதியிலும் தண்டிக்க யாருக்கும் உரிமை கிடையாது. இத்தகைய குழந்தை உரிமை மீறல் அனுமதிக்க முடியாத வன்முறை. 1989 ஐ.நா, குழந்தை உரிமை உடன்படிக்கையின் முக்கிய அம்சம், “குழந்தைகளை முறைப்படுத்துவதில் உடல்ரீதியான தண்டனை உபயோகிக்கக்கூடாது…” என்பதுதான். ஆனால் பெரும்பாலான வகுப்பறைகளைக் கோபமும் எரிச்சலும் கோலோச்சுகிறது.

வாழ்க்கையை வாழும் கலையை, வாழ்வியல் பண்புகளைக் கற்றுத்தர வேண்டிய வகுப்பறைகள் சித்ரவதை முகாம்களாய் மாறிவிட்டன. அன்பையும் பண்பையும் அறிவையும் ஊட்ட வேண்டிய ஆசிரியர்களில் ஒரு பகுதியினர்களிடம் கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் காவல் துறையினர் போல மாறிவிட்டனர்.

விவேகானந்தர் மனிதனை உருவாக்கும் கல்வியை வலியுறுத்தினார் (Man Making Education). மகாத்மா காந்தி அவர்கள் உடல், உள்ளம், ஆன்மா மலர்ச்சிக்கு உறுதுணையாகக் கல்வி அமைய வேண்டும் என்று விரும்பினார். மாற்றுக் கல்விக்கான குரல்கள் வலிமையடைந்துவரும் நேரம் இது. மனப்பாட முறை தேர்வுகளை மையப்படுத்திய, வாழ்க்கைக்கு உதவாத கல்வித்திட்டம் இந்தியாவைத் தவிர உலகில் வேறெங்குமில்லை. ‘மதிப்பெண்களை’ வைத்து மாணவனை மதிப்பிடுகிற அபத்தமான, ஆபத்தான கல்வித் திட்டத்தால் கோடிக்கணக்கான இளம் உள்ளங்களின் இயற்கையான பரிணாம மலர்ச்சியும், சுயதிறன்களின் வளர்ச்சியும் மறுக்கப்படுகிறது.



ஒரு பக்கம் பாடத்திட்டமும் மறுபக்கம் பெற்றோர் ஆசிரியரின் அணுகுமுறையும் நம் குழந்தைகளின் நிகழ்காலத்தை பேரச்சம்மிக்கதாய் மாற்றியுள்ளது. பள்ளிப் பிள்ளைகள் இயல்பான மனநிலையோடும் உற்சாகத்தோடும் கல்விகற்க இயலவில்லை. மாறாக எண்ணற்ற பயந்தாங்கொள்ளிகளும், தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களும் தற்கொலை எண்ணம் கொண்டவர்களுமாக மாறுகிறார்கள்; அல்லது வன்முறையாளர்களாய், அராஜகப் பேர்வழிகளாய் பரிணமிக்கின்றனர். இது இன்றைய நமது குடும்ப, சமூக, கல்விச் சூழலின் எதிர்மறை விளைவு.

கோபத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் கொட்டித் தீர்க்கும் இயல்புக்கு ‘CHERRY PLUM’, மாணவர்களை எப்போதும் கடுமையாக விமர்சித்துக்கொண்டும், குறை கூறிக் கொண்டும் வகுப்பறைறை வசையறையாக மாற்றும் இயல்புக்கு ‘HOLLY’ ‘WILLOW’, பொறுமையற்ற தன்மையும், பரபரப்பும், மாணவர்களை வேகப்படுத்தும் மனநிலைக்கு ‘IMPATIENCE’ , நல்லதோ கெட்டதோ தான் சொல்வதைக் கேட்டுத்தான் தீரவேண்டும் என்று வகுப்பறையை தனது அதிகாரக்கூடமாக மாற்றும் ஹிட்லர் மனநிலைக்கு ‘VINE’ போன்ற பாச் மலர் மருந்துகள் பயன்படும். இத்தகைய குணங்கள் ஆசிரியப் பணிபுரிவோரின் ஆளுமையில் படிந்த கறைகள்.


இன்றைய காலத்தில் மிகைச் செயல்பாடு (Hyperactive) கொண்ட சிறுவர்களின் எண்ணிக்கை பெருகி வருவது கவலைக்குரியது. இவர்களால் மனம் ஒன்றிக் கல்வியில் ஈடுபடமுடியாது. இப் பிரச்சனையை Attention Deficit Hyperactive Disorder (ADHD) என்று மருத்துவத் துறையில் குறிப்பிடுகிறார்கள்.

சில குழந்தைகளுக்கு Dyslexia என்ற கற்றல் குறைபாடு பிரச்சனை உள்ளது. இவர்களுக்கு கரும்பலகையில் வரையப்படும் நேர்கோடுகள் வளைந்து நெளிந்து தெரியும். எழுத்துக்களும், எண்களும் தலைகீழாகத் தெரியும். கண்ணாடியில் பார்ப்பது போல் எழுத்தின் அமைப்பு மாறுபட்டுத் தெரியும். சமீபத்தில் மும்பையில் ஒரு டிஸ்லெக்ஷியா குழந்தையை ஆசிரியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதால் மரணமடைந்து விட்டதாக செய்தி வெளிவந்தது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் இத்தகைய குழந்தைகளை அடையாளம் கண்டு மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவது அவசியம். 

ஆங்கில மருத்துவத்தில் மன வளர்ச்சிக் குறைபாடுகளுக்கோ (Mental Retardation) ADHD, AUTISM, DYSLEXIA போன்ற நவீனகால குழந்தை உளவியல் சிக்கல்களுக்கோ சிறப்பான சிகிச்சைகள் உருவாகவில்லை. இதனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் இத்தகைய பிரச்சனைக் குழந்தைகளின் எண்ணிக்கை பெருகியுள்ளன. மாற்று மருத்துவங்களில் குறிப்பாக ஹோமியோபதி மற்றும் மலர் மருத்துவத்தில் இப்பிரச்சனைகளுக்கு சிறப்பான பலனளிக்கும் பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் உள்ளன. இத்தகைய குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும், சமூகமும் ஆதரவோடும் அரவணைப்போடும் கையாள்வது அவசியம். இத்தகைய குழந்தைகளிடம்கூட ஆசிரியர் கோபத்துடன் வழக்கமான அணுகுமுறைகளுடன் நடந்து கொள்வது ஆபத்தில் முடியும்.

இன்றைய கல்வித் திட்டத்தில் உடனடியாக பெரும் மாற்றம் ஏற்படப் போவதில்லை என்றாலும் கற்பிக்கும் அணுகுமுறையில் வகுப்பறைச் சூழ்நிலையில் அன்பும் நட்பும் கலந்த நேரிய (Positive) அணுகுமுறையை ஆசிரியப் பெருமக்கள் கடைப்பிடித்தால் மாணவர்களின் மனநலமும் உடல் நலமும் சிதையாமல் ஆரோக்கியமாக அமையும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Whenever any mistake or crime happens, a king/government can raise the sceptre swift and stern but it has to land softy if they wish never to loose what they possess. 

It is true that for the crime and mistakes that happens in a country, punishments need to be given. A king should not ignore the crime that is happening. He has to swiftly and sternly handle it. For e.g. as a metaphor, he can raise the hands but has to land softly. Because if the punishments are too harsh and unfair, then people will not respect it. It will not have good long term effect

It applies even in families, when kids make mistakes we can raise our hands, but we should not beat them strongly. Because over time people will loose the respect on parents and alienate from the parents. 

It is not just w.r.t punishments. It can be even w.r.t. taxes. If people are heavily taxed, they might go bankrupt, then people will not respect it and would start evading the taxes. 

In families for e.g. a father had huge love and affection on a 8yr old son. But the son was disobedient. He steals money once. Father takes the son in a train to a far way place and drops him there without giving away any details of his home. The son suffers a lot because he is orphaned in that place. He begs and survives. Over years the father repents his mistake for giving such a harsh punishment to his son. He dies. After many years the son returns to his family. But, when his mother and other relatives ask him to do the a post-funeral rites for his father. He declines. People around him try to convince that though the punishment is harsh, yet he did it because of love and to bring a discipline. But son declines saying that only he knows what kind of pain and suffering he went through all these years. So he will not do even an ounce of ritual for his father. 

Questions that I ask to the kid
How should a king punish for crime? Explain more w.r.t families. 

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

குறள் 299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
[அறத்துப்பால், துறவறவியல், வாய்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எல்லா - எல்லாம் - முழுதும், அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்., அறிவொழுக்கங்களால்நிறைந்த பெரியோர்

விளக்கும் - விளக்கு - ஒளிதருங்கருவி; ஒளிப்பிழம்பு; ஒளிபெறச்செய்கை; 

விளக்கு - ஒளிதருங்கருவி; ஒளிப்பிழம்பு; ஒளிபெறச்செய்கை; 

அல்ல -  இல்லை, அன்று  

சான்றோர்க்குப் - அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர், அறிவொழுக்கங்களால்நிறைந்த பெரியோர்

பொய்-த்தல் - poy-   11 v. பொய். intr. 1.To fail, as a prediction or omen; to deceivehope, as clouds; தவறுதல். விண்ணின்று பொய்ப்பின் (குறள், 13). 2. To prove false; தம் செயலினின்று பின்வாங்குதல். பொய்த்தோர் வில்லிகள்போவாராம் (கம்பரா. சூளா. 41). 3. To go to ruin;கெடுதல். பொருளென்னும் பொய்யா விளக்கம்(குறள், 753).--tr. 1. To lie, utter falsehood;to make false pretences; பொய்யாகப் பேசுதல்.தன்னெஞ் சறிவது பொய்யற்க (குறள், 293). 2. Todeceive, cheat; வஞ்சித்தல். நின்றோடிப் பொய்த்தல் (நாலடி, 111).

பொய்யாமை - பொய்பேசாமை; நடுவுநிலைமை.

பொய்யா - என்றும் தவறாத; என்றும் அணையாத

விளக்கே - விளக்கு - ஒளிதருங்கருவி; ஒளிப்பிழம்பு; ஒளிபெறச்செய்கை; சோதிநாள், தீபம்

விளக்கு - ஒளிதருங்கருவி; ஒளிப்பிழம்பு; ஒளிபெறச்செய்கை; சோதிநாள், தீபம்

முழுப்பொருள்
இயற்கையில் சூரியன் சந்திரன் அக்நி மட்டுமே ஒளிகள். மற்ற எல்லா ஒளிகளும் செயற்கையான ஒளிகள் தான். இவையாவும் விளக்கு எனக்கு கருதலாம் ஏனெனில் இவை இருளை போக்குகின்றன. ஆனால் இவ்விளக்குகள் யாவும் புறவயமாகவே மட்டுமே இருளை போக்குகின்றன. ஒரு மனிதனின் அகத்தில் இவை இருளைப் போக்காது. ஆதலால் அறிவு ஒழுக்கங்களில் நிறைந்த பெரியார்கள் சான்றோராகள் இவ்விளக்குகளை மெய்யான விளக்கென கருத மாட்டார்கள். 

அப்படியானால் எது மெய்யான விளக்கு? மெய்யான விளக்கென்பது பொய்யாவிளக்கு. வாய்மை (பொய் சொல்லாது இருத்தல்) என்பதே அகத்தில் ஒருபொழுதும் அணையாத விளக்கு (புறத்தில் இருக்கும் அணையா விளக்கு அல்ல). வாய்மை ஒரு விளக்காக ஒருவனுக்கு வழிகாட்டும். வாய்மையை அகத்தில் உள்ள இருளை போக்கும். வெளிச்சத்தை தரும். அகத்தில் இருள் நீங்குவதால் ஒருவன் மேன்மை அடைகிறான். ஆதலால் பெரியார் அவனை போற்றுவர். 

நான்மணிக்கடிகை  இரண்டுபாடல்களில் பொய்யைப்பற்றி பாடுகிறது. “ஒருவனைப் பொய் சிதைக்கும், பொன் போலும் மேனியை” என்றும், “புகழ்செய்யும் பொய்யா விளக்கு” (நான்மணி 22) என்றும் சொல்வதில் பொய் ஒருவரது உருவை அழிக்கும் என்றும் பொய்யாமையோ புகழைத்தரும் என்றும் கூறுகிறார். சுந்தரரும் தம் தேவாரத்தில், “பொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்றெரியும் விளக்கேயொத்த தேவர்பிரான்” (சுந்தரர்.கழிப்பாலை 9) என்பார்.

மேலும்: அஷோக் உரை

"Above all, do not lie to yourself." — Fyodor Dostoyevsky

எழுத்தாளர் ஜெயமோகன் மொழிபெயர்த்த எமர்சனின் இயற்கையை அறிதல் புத்தகத்தில் செயல் பற்றி சில வார்த்தைகள்  (ஆத்மா என்ற கட்டுரையில் இருந்து) 
பருப்பிர பஞ்சம் எங்கிருந்து வந்தது? எங்கு போகிறது? பிரக்ஞை பின்வாங்கும் தருணங்களில் நமக்கு பற்பல உண்மைகள் வெளிப்படுகின்றன. மனித ஆத்மாவின் முன்பாக உன்னதமான உண்மை வெளிப்படையாக உள்ளது என நாம் அறிகிறோம். பிரமிப்பூட்டும் பிரபஞ்ச சாரம்; அது ஞானமோ அன்போ அழகோ வல்லமையோ அல்ல, மாறாக அனைத்துமேதான், ஒவ்வொன்றும்தான். அதற்காகவே எல்லாப் பொருட்களும் இருக்கின்றன; அதன்மூலமே எல்லா பொருட்களும் இருக்கின்றன; அது ஆத்மாவால் உருவாக்கப்படுவது; இயற்கையின் பின்னால் இருப்பது; இயற்கையெங்கும் இருப்பது; எல்லாமாக இருப்பது. ஆத்மா இருந்துகொண்டிருக்கிறது. அது நம்முள் காலமும் இடமும் இல்லாத இன்மையிலிருந்தபடி இயங்குவதில்லை. மாறாக நம் வழியாக ஆன்மீகமாக இயங்குகிறது. ஆகவே ஆத்மாவே அனைத்திற்கும் மேலான பேரிருப்பு. 

அது இயற்கையை நம்மைச் சுற்றி கட்டி எழுப்பியிருக்கிறது என்று கூற முடியாது. மாறாக அது இயற்கையை நம் வழியாக முன்வைக்கிறது; கிளைகள் வழியாக மரம் இலைகளையும் தளிர்களை மலர்களையும் முன்வைப்பதுபோல, மண்ணிலிருந்து தாவரங்கள் உருவாவதுபோல. ஆகவே மனிதன் இறைவனின் மார்பில் உறைகிறான். அவன் வற்றாத ஊற்றுகளால் ஊட்டப்படுகிறான். தன் தேவைக்கேற்ப குறையாத வலிமையைப் பெற்றுக்கொள்கிறான். மனிதனின் சாத்தியங்களை யார் எல்லை வகுக்க முடியும்? மேலான அந்தக் காற்றை நாம் ஒருமுறை சுவாசித்தோமென்றால், நீதி உண்மை ஆகியவற்றின் முழுமையான இயல்பை ஒருமுறை உணர்ந்துவிட்டோமென்றால் நாம் அறிவோம்; மனிதன் தன்னைப் படைத்த சக்தியின் மனதை முழுமையாகவே நானும் பெற முடியும் என்று. அவனே எல்லைகளுக்குட்பட்டு வந்த படைப்புசக்தி என்று. இந்த பார்வை ஞானம், சக்தி ஆகியவற்றின் ஊற்றுக்கண்கள் உள்ளன என்று எனக்குச் சொல்லப்படுகிறது.

    'முடிவின்மையின் மாளிகையைத் திறக்கும் 
    தங்கச்சாவி'

தன்  மீது உண்மையின் மகத்தான சான்றை கொண்டுள்ளது. காரணம் அது என்னுடைய ஆத்மாவை தூய்மைப்படுத்திக் கொள்வதன் மூலம் என் உலகை நானே உருவாக்கிக்கொள்வதற்குத் தேவையான உயிர்த்துடிப்பை எனக்கு வழங்குகிறது. 

மனித உடலில் உள்ள அதே ஆத்மசாரத்தின் நீட்சியே இவ்வுலகம். அது கடவுளின் சற்று குறைவுபட்ட உடல். நமது அபோதத்தில் கடவுளின் பிம்பம் விழும் விதம் அது. ஆனால் அது நமது உடலிலிருந்து ஒரு முக்கியமான விதத்தில் மாறுபடுகிறது. மனித உடலைப்போல அது மனித இச்சைக்கு உட்பட்டதல்ல. அதன் மகத்தான ஒழுங்கு நம்மை மீறிய ஒன்று. ஆகவே அது நம்மைப் பொறுத்தவரை புனிதமான பிரபஞ்ச மனத்தின் வெளிப்பாடுதான். நாம் நமது விலைகளை ஒப்பிட்டு அளந்துகொள்வதற்கான நிலையான மதிப்பு அது. நாம் சீரழியும்தோறும் நமக்கும் நமது வீட்டுக்கும் இடையேயான முரண்பாடு வெளிப்படையாக ஆகிறது. நம் இயற்கையிலிருந்து விலகும்தோறும் கடவுளிடமிருந்தும் அந்நியப்படுகிறோம். நாம் பறவைகளின் குரலை கேட்காமலாகிறோம். நாயும் நரியும் மானும் நம்மிடமிருந்து விலகி ஓடுகின்றன. சோளம், ஆப்பிள், உருளைக்கிழங்கு என்று ஒரு சில தாவரங்களின் உபயோகம் தவிர பிற தாவரங்களைப்பற்றி நமக்கு எதுவும் தெரியாமலாகிறது. ஒவ்வொரு துளியிலும் சாயலிலும் மகத்துவம் ததும்பும் நிலக்காட்சி கடவுளின் முகமன்றி வேறென்ன? எனினும் நாம் நமக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவில் எப்போதும் உள்ள முரண்பாட்டை உணரலாம். விவசாயிகள் மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்தால்  நம்மால் ஓர் இயற்கைக் காட்சியை ரசிக்க முடியாமல் போகிறது. பிற மனிதர்களின் பார்வையிலிருந்து முற்றாக விலகும்வரை கவிஞன் இயற்கையைக் கண்டு தான் அடையும் பரவசத்தில் ஏதோ வெட்கத்திற்குரிய விஷயம் இருப்பதுபோல உணர்கிறான். 

எழுத்தாளர் ஜெயமோகன் மொழிபெயர்த்த எமர்சனின் இயற்கையை அறிதல் புத்தகத்தில் செயல் பற்றி சில வார்த்தைகள்  (சாத்தியக்கூறுகள் என்ற கட்டுரையில் இருந்து) 
உங்கள் உலகை நீங்களே கட்டி எழுப்புங்கள். உங்கள் மனம் என்ற தூய இருப்புடன் உங்கள் வாழ்வை எந்த அளவு நீங்கள் இசைவு கொள்ளச் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு மகத்தான சாத்தியங்கள் உங்கள் முன் விரியும். 
ஆத்மா பெருகி விரியும் அளவுக்கு அதற்கு சேவை செய்யும் பொருட்டு பொருட்களிலும் புரட்சிகரமாக விரிவு நிகழும். அதற்கிணையான வேகத்தில் பாம்புகள், சிலந்திகள் பூச்சிகள், மனநோய் விடுதிகள், சிறைகள், எதிரிகள் முதலிய உவப்பற்ற விஷயங்கள் மறையும். அவை தற்காலிகமானவையே. இயற்கையால் நீங்கள் காணும் மௌனங்களும், தீமைகளும் சூரியனால் உலர்த்தப்படும். காற்றால் ஊதியகற்றப்படும். தெற்கிலிருந்து வேனில் வரும்போது பனிப்படுகைகள் உருவாகிவிடுகின்றன. பூமியின் முகம் அதை வரவேற்கும் பொருட்டு பசுமை கொள்கிறது. முன்னேறிவரும் ஆன்மீக ஒளியில் அதன் பாதைகள் முழுக்க அணியலங்காரங்கள் நிறைகின்றன. அது செல்லுமிடமெல்லாம் அழகைச் சுமந்து செல்கிறது. அதை புகழும் பாடல்களைக் கொண்டு செல்கிறது. அது அழகிய முகங்களை வரையும். இனிய இதயங்களையும் விவேகம் மிக்க உரையாடல்களையும் தீரமிக்க செயல்களையும் தன் பாதை யெங்கும் உருவாக்கிறது. அங்கு தீமை எங்குமே தென்படாது. இயற்கையின் மீதான மனிதனின் அரசாட்சி வெறும் கவனிப்பேன் மூலம் வருவதல்ல. இன்று அந்த அரசு அவன் கனவுக்கும் அப்பால் கடவுளிடம் உள்ளது. அவன் அதில், குருடன் படிப்படியாக முழுப்பார்வையை அடையும் வியப்புக்கு ஈடான வியப்புடனும் பரவசத்துடனும் தான் நுழைய முடியும். 

பரிமேலழகர் உரை
எல்லா விளக்கும் விளக்கு அல்ல - புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா, சான்றோர்க்கு விளக்கு பொய்யா விளக்கே - துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமை ஆகிய விளக்கே. (உலகத்தார் விளக்காவன: ஞாயிறு,திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாத இருள் போகலின் 'பொய்யா விளக்கே விளக்கு' என்றார். அவ்விருளாவது அறியாமை. 'பொய்யாத விளக்கு' என்பது குறைந்து நின்றது. பொய் கூறாமையாகிய விளக்கு என்றவாறு. இனி இதற்குக் 'கல்வி முதலியவற்றான் வரும் விளக்கம் அல்ல: அமைந்தார்க்கு விளக்கமாவது பொய்யாமையான் வரும் விளக்கமே', என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
சான்றோர்க்கு எல்லாவறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளியல்ல: பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாகும். இது பொய்யாவிளக்குச் சான்றோர்க்கு இன்றியமையாதென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.


Thirukkural - Management - Truthfulness
External lights, lights that dispel external darkness, are not considered lights though they are very much needed. For wise people only truthfulness that dispels mental darkness is considered a true light. Kural 299 brings to light that the best light is the light of truthfulness.


All lights are not lights: to the wise 
The only light is truth.

One of the purposes of knowledge is to dispel darkness. Truth and falsehood cannot go together. Truth dispels darkness. The light of truth is the supreme light among all. In addition to these, wise people admire and appreciate the quality of truthfulness.

English Meaning - As I taught a kid - Rajesh
All the lights are not lamps. Scholars consider Honesty as the only real lamp that doesn't fade. 

In nature, Sun, Moon and fire provide natural lights. Other lights are artificial. But these lights lighten up only the external environment.  These lights cannot remove the darkness inside the heart.  Moreover these lights cannot be there 24 hours in a day. 

Hence, scholars consider the real lamp which doesn't fade is Honesty. Honesty doesn't fade inside heart. Hence, honesty guides a person. Honesty removes darkness in the heart and gives lights. When darkness is removed, one gets better. Hence, scholars appreciate honest people

Questions that I ask to the kid
What is real light?

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

குறள் 298
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
[அறத்துப்பால், துறவறவியல், வாய்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்.

தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.

நீரால் - நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

அமையும் - அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.

வாய்மையால்  - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி.

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

காணப்படும் - அறியப்படும் 

முழுப்பொருள்

ஒருவன் புறத்தால் தூய்மையாக வேண்டுமெனில் அவன் நல்ல சுத்தமான நீரில் நீராடினால் போதும். அவன் புறத்தே உள்ள அழுக்குகள் மாசுகள் எல்லாம் நீங்கி தூய்மையாகிவிடுவான். அதைக் காணுவோர் அறிய முடியும். அதுவே ஒருவனுடைய மனம் தூய்மையாக இருக்கிறதா என்பதை எப்படி கண்டறியவேண்டுமானல் ஒருவருடைய சிந்தனைகளில் சொற்களில் செயல்களில் வாய்மை இருக்கிறதா என்று கண்டாலே போதும். ஏனெனில் உள்ளத்திற்கும் சிந்தனைகளுக்கும் சொல்லிற்கும் செயலிற்கும் நேரடி தொடர்பு உண்டு. உள்ளம் நம்மை வழிநடத்தும் விசை. ஆதலால் உள்ளதை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வாய்மையை பின்பற்ற வேண்டும். 

குறள் 0278

என்பதை முன்பே பார்த்தோம்

நீர் எப்படிப் புறத்தை தூய்மை செய்கிறதோ அதுப்போல வாய்மை உள்ளத்தை தூய்மை செய்யும். அதனால் தான் என்னவோ மஹாத்மா காந்தி அவர்கள் எனது சத்திய சோதனை என்ற தன்வரலாற்றை எழுதினாற்போலும். (The Story of My Experiments with Truth - Mahathma Gandhi)



மேலும்: அஷோக் உரை


வாழ்க்கையில் தூய்மையை கைக்கொள்வது என்பதை அம்பேத்கர் முதலில் சொல்கிறார். அவரது நூலில் ஓர் அற்புதமான தலைகீழாக்கம் உள்ளது. தொன்றுதொட்டே இங்கு தூய்மையை ‘மனம்- வாக்கு- காயம்’ ஆகியவற்றில் உள்ள தூய்மை என்று சொல்லியிருக்கிறார்கள். மனதிலும் சொல்லிலும் உடலிலும் தூயவனாக இருத்தல். ஆனால் அம்பேத்கர் தலைகீழாக்கி, உடலில் சொல்லி மனதில் என்ற வரிசையில் அதைச் சொல்கிறார்

வேதாந்த மரபுக்கும் பௌத்ததுக்கும் இடையே உள்ள வேறுபாடே இங்குள்ளது. வேதாந்தத்தின்படி ஒருவன் மனதை தூயவனாக வைத்துக்கொள்வதே முதலில் தேவையானது. மனம் தூய்மையானால் சொல் தூய்மையாகிறது. சொல் தூய்மை என்றால் அவன் உடல் தூய்மை அடைகிறது. ஏனென்றால் வேதாந்த நோக்கில் மனதின் பருவடிவமே உடல். மனம் என்பது ஆன்மாவின் ஒரு தோற்றம். ஆகவே அதுவே உண்மையானது, உடல் அதன் மாயப்பிம்பம் மட்டுமே.

பௌத்தத்தில் அது நேர்தலைகீழ். உடலே தொடக்கப்புள்ளி. தொடங்கவேண்டிய இடம் அதுதான். ‘இதம்’ – இது- என்ற சொல்லில் இருந்துதான் சிந்தனை ஆரம்பிக்கிறது. அப்படி முதன்முதலாக ஆரம்பிக்கவேண்டிய இது என்ற புள்ளி வேதாந்தத்தில் மனம் தான். பௌத்ததில் அது என் உடல்

வேதாந்தத்தின்படி நான் என நாம் அறியும் முதல் சுயம் என்பது நம் அகம்தான். மாறாக பௌத்ததில் நம் உடல்தான் நாம் அறியும் முதல் சுயயதார்த்தம். பௌத்ததின்படி நம் உடல் பொய் அல்ல. மாயை அல்ல. வெறும் தோற்றம் அல்ல. இதுவே உண்மையின் முதல் படி. இதைத் தொட்டு, இது என்ன என்று கேட்டபடித்தான் நாம் ஆரம்பிக்கவேண்டும். ஆகவேதான் உடல்தூய்மையை முதலில் வைக்கிறார் அம்பேத்கர்.

உடல்தூய்மையில் இருந்து சொல்தூய்மை. அதிலிருந்து உளத்தூய்மை. குறள் ஒன்றில் இந்த இணைப்பு சொல்லப்பட்டுள்ளது. ‘உடல் தூய்மை நீராலமையும் அகத்தூய்மை வாய்மையாற் காணப்படும்’ இதில் மூன்றுமே வந்துவிடுகிறது. உடலை நீரால் தூய்மைசெய்வதுபோல உள்ளத்தை வாய்மையால் தூய்மை செய்துவிடலாம் என்கிறார் வள்ளுவர்

இந்த பகுதியில் அம்பேத்கரின் மொழியில் வரும் அழகிய ஓர் கவிதையைச் சுட்ட விரும்புகிறேன். பௌத்த ஒழுக்க நெறிகளின்படி பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, பாலியல்நெறிபிறழாமை, தீநெறிசெல்லாமை என்னும் ஐந்து மாசுகளை கழுவிக்கொள்ளுதலே அகத்தூய்மை.

அவற்றை அடைந்தவன் நான்கு நல்லியல்புகளை அடைகிறான்.

அவன் உடலை உடலாக உணர்கிறான்.
உணர்வுகளை உணர்வுகளாக உணர்கிறான்.
மனதை மனதாக உணர்கிறான்.
கருத்துக்களை கருத்துக்களாக உணர்கிறான்.

ஒரு மந்திரம்போல இச்சொற்களைச் சொன்னபடி நான் அலைந்த நாட்கள் உண்டு. மிக எளிய வரிகள். ஆனால் எண்ணும்தோறும் விரிபவை. அம்பேத்கர் சொல்லும் வரிசையில் பார்த்தால் உடலை உடலாக உணர்வதிலிருந்தே எல்லாம் ஆரம்பிக்கிறது.

நாம் சாதாரணமாக ஒருபோதும் நம் உடலை உடலாக உணர்வதில்லை. நம் உடலை நாம் எப்போதுமே நாமாக உணர்கிறோம். நான் என்னும்போது எப்போதும் நம் உடல் நம் அகக்கண் முன் வருகிறது. அதிலும் இளமையில் நம் உடலே நாம் என்றிருக்கிறோம். நம் உடல் சார்ந்த தன்னுணர்விலிருந்து வெளிவருவதென்பதே அறிதலின் பாதையில் முதல் சவால்

பௌத்தத்தை பொறுத்தவரை இந்த உடல் நானல்ல என்று உணரும் வேதாந்தம் அதற்கு ஏற்புடையதல்ல. இந்த உடல் மட்டுமே நான் என்று உணரும் உலகாயதமும் ஏற்புடையதல்ல. உடலை உடல் மட்டுமாக உணர்தலே பௌத்தம் ஆணையிடும் முதல் அறிதல்.

ழாக் லக்கான் என்ற பிரெஞ்சு உளவியலாளர் பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர். நவஃப்ராய்டியர் என அவரைச் சொல்கிறார்கள். ஃபிராய்டியச் சிந்தனைகளை குறியீட்டு அளவில் மறுவிளக்கம் கொடுத்தவர் அவர். அவரது புகழ்பெற்ற கோட்பாடு ஒன்றுண்டு. சிறுகுழந்தை தன் பதினெட்டுமாதம்வரை தான் என்னும் உணர்வே இல்லாமலிருக்கிறது. பதினெட்டாவது மாதத்தில்தான் அதற்கு தான் என்னும் உணர்வு உருவாகிறது.

பதினெட்டு மாதம் கழிந்து கண்ணாடியில் தன்னைப்பார்க்கும் குழந்தை அது தான் என அறியும் நிகழ்வே சுயம் உருவாகும் கணம் என்கிறார் லகான். இதை கண்ணாடிப்பருவம் என்கிறார். ஆம், அது சரி என்றே தோன்றுகிறது. கைக்குழந்தையிடம் பாப்பா எங்கே என்று கேட்டால் தன் வயிற்றைத்தொட்டு ‘இங்கே’ என்கிறது. பசியும் அதன் நிறைவும்தான் தான் என நினைக்கிறது அது. தன் உடல் வழியாகவே தன்னை அது அறிகிறது.

உடலை தான் என்று அறியும் புள்ளி அது. நம் உலகியல் சுயத்தின் தொடக்கம். நம் சமூக ஆளுமையின் பிறப்புக்கணம். ஆனால் அதற்கடுத்த ஒரு கணம் உண்டு. உடலை உடலாக மட்டுமே அறியும் கணம். உடல் உடலன்றி வேறல்ல என்று அறியும் கணம். அது நம் ஆன்மீக சுயத்தின் தொடக்கம். நம் அந்தரங்க ஆளுமையின் பிறப்புக்கணம்.

நான்கடவுள் படத்தில் மாங்காண்டிச்சாமியாக நடித்த கிருஷ்ணமூர்த்தி பாகவதர் உங்கள் நினைவுக்கு வரக்கூடும். பிறவியிலேயே கையும் இல்லை, காலும் இல்லை. இந்தக்குழந்தை சாகட்டும் என அம்மா நினைத்தாள். தாதி காட்டிய குழந்தையை ஒரு கணம் பார்த்தவள் பிறகு திரும்பியே பார்க்காமல் தட்டி எறிந்தாள்.ஓர் அத்தை அதை எனக்குக் கொடுத்துவிடு என்று சொல்லி வாங்கி வளர்த்தாள்.

அத்தை அந்தக்குழந்தையை ஒரு செப்புபோல வைத்திருந்தாள். திரியில் பால்நனைத்து அதற்கு ஊட்டினாள். அவளுக்கு இசைஞானம் இருந்தது. ஆகவே குழந்தைக்கும் முறைப்படி சங்கீதம் சொல்லிக்கொடுத்தாள். கைகால்கள் இல்லாத வெற்று உடல் மட்டுமான கிருஷ்ண மூர்த்திக்கு இசைகற்பிக்க பலர் தயாராகவில்லை ‘இதுக்கெல்லாம் சங்கீதம் வராது ‘ என்றார்கள். ஆனால் தேடல்கொண்டிருந்தால் குரு எப்படியும் கிடைப்பார். கிருஷ்ணமூர்த்தி இசைகற்றுத்தேர்ந்தார். கிருஷ்ணமூர்த்தி பாகவதர் ஆல் இந்தியா ரேடியோவின் முதல்நிலைப்பாடகரானார்.

அபாரமான கணீர்க்குரல் அவருக்கு.அவர் பாடிக்கேட்கையில் மெல்லமெல்ல அவர் விஸ்வரூபம் எடுப்பதைக் காணமுடியும். நான் பாலாவிடம் சொன்னேன் ’சரிதான், வளையாத மூங்கிலில் ராகம் வளைந்து ஓடுதேன்னு பாட்டு இருக்கு. உடைஞ்ச மூங்கிலிலே வர்ர ராகம் உடைஞ்சிருக்குமா என்ன?’

பாகவதர் பாலாவிடம் சொன்னார் ‘ ரொம்பநாளைக்கு என்னை ஒரு முழு மனுஷனா என்னால நினைச்சுக்கிட முடியல்லை. நாலுபேரை பார்த்துப்பேசமுடியலை. அப்பதான் ஒருநாள் ஒரு வர்ணத்தை முழுசா ஆலாபனைபண்ணி முடிச்சேன். அப்ப தெரிஞ்சுது, நான் முழுசானவன்னுட்டு. இப்ப ஒரு கொறையும் இல்ல இப்ப..’ தன் உடலை கண்ணால் காட்டி ‘. இது இல்ல நான்….இது என்ன, வெந்துபோற கட்டை’ என்றார்

ஆம், உடலை உடலாக உணரும் கணம். ஞானத்தின் முதல் பொன்வாசல் திறக்கும் கணம். அம்பேத்கர் சொல்லும் கணம் அதுவே.

உடலை உடலாக மட்டும் உணரும்போது உணர்வுகளை உணர்வுகளாக மட்டுமே உணர முடியும். நாம் உணர்வுகளை எண்ணங்களாக உணர்கிறோம். உணர்வுகளை தரிசனங்களாக கருதிக்கொள்கிறோம். எழுத்தாளனாகிய எனக்கு இது இன்றுவரை மிகப்பெரிய சவால். பலசமயம் ஒரு சிந்தனையை அல்லது கருத்தை முன்வைத்துப்பேசியபின்னர் நானே உணர்வேன். இது என் எண்ணமல்ல, என் கருத்தும் அல்ல. இது என் உணர்வு மட்டுமே என்று. நண்பர்களே, நாம் பேசிக்கொண்டிருப்பவற்றில் பெரும்பாலானவை நம் உணர்வுகள் மட்டுமே.

வாழ்க்கையை பின்நோக்கிப்பார்த்தோமென்றால் நமது பெரும்பாலான கருத்துக்களை நாம் வெறும் உணர்ச்சிகரமான எதிர்வினைகளாகவே அடைந்திருக்கிறோம் என்பது தெரியும். அவை கருத்துக்களாக மாறுவேடமிட்ட உணர்ச்சிகள் என்பதை உணர்வோம். அப்படியே நம் வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்களை தாண்டி வந்திருப்போம்

அன்பு என்பதும், பாசம் என்பதும், பற்று என்பதும்கூட உணர்ச்சிகளே. அவ்வுணர்ச்சிகள் எவ்வளவு மேலானவை என்றாலும் அவை உணர்ச்சிகளே என்பதை உணராதவரை அவை நமக்குச் சுமைகள்தான். ஏனென்றால் எல்லா உணர்ச்சிகளும் அவ்வுணர்ச்சியின் காரணிகளோடு, அவ்வுணர்ச்சியை உருவாக்கிய சூழலுடன் தொடர்பு கொண்டவை. எல்லா உணர்ச்சிகளும் விளைவுகள் தான். உணர்ச்சிகளுக்கு தானாக நிலைகொள்ளும் தன்மை இருப்பதில்லை. உணர்ச்சிகளுக்கு தன்னளவில் முழுமை இல்லை.

ஆகவே உணர்ச்சிகரமான எந்தக் கருத்தும் தற்காலிகமானதும் சமநிலையற்றதும்தான். உணர்ச்சிகரமான எந்தக்கருத்தும் முழுமையற்றதுதான்.பௌத்தம் அதன் எந்நிலையிலும் அறிவார்ந்தசமநிலையையே இலக்காக்குகிறது. ஆகவேதான் செவ்வியல் பௌத்தத்தில் பக்திக்கு இடமே இல்லை. நெகிழ்ச்சிக்கும் கொந்தளிப்புக்கும் இடமில்லை. தன்னைமறந்த களியாட்டங்களுக்கு இடமில்லை. அம்பேத்கர் பௌத்தத்தை அவரது மதமாகத் தேர்வுசெய்தமைக்குக் காரணமே இந்த அறிவார்ந்த தன்மைதான்.

மனதை மனமாக உணர்தலென்பது இன்னும் நுட்பமானது. மனம் என்பது ஓர் எதிர்வினை. ஒரு பிரதிபலிப்பு. அது என் இருப்பு அல்ல. அது அலைதான். நாம் கடலைக்காணவே முடியாது, அலைகளையே நாம் காணமுடியும். ஆனால் அலை என்பதல்ல கடல். பௌத்த தியானமுறையில் மனதை அலையழித்து அதை உண்மையாக அறிதலுக்கான விரிவான வழிமுறைகள் பேசப்பட்டுள்ளன.

நீங்கள் அனைவரும் மனம் என்றால் என்ன என்று அறிவீர்கள். ஆனால் அதன் பேருருவத்தை நாம் சாதாரணமாக அறியமுடியாது. அதற்கு ஒரு தருணம் தேவை. கிருஷ்ணமூர்த்தி பாகவதர் தன் உடலை அறிந்த தருணம்போன்றதே அதுவும். ஒரு பெரிய அவமானம், ஒரு பெரிய இழப்பு, ஒருபெரிய தவிப்பு உங்களை வந்தடையும்போது தெரியும் மனம் என்றால் என்ன என்று. உங்களுக்குள் கோடிக்கணக்கான பிசாசுக்கள் குடியிருப்பது தெரியும். .

என்னுடைய இருபத்திநான்கு வயதில் என் அம்மா தற்கொலைசெய்துகொண்டாள். நான் வருவதற்குள் அம்மாவை எரித்துவிட்டர்கள். அங்கிருந்தே நான் கிளம்பிச்சென்றேன். திருவனந்தபுரம் சென்று ஒரு விடுதியில் தங்கினேன். மனம் என்றால் என்ன என்று நான் அறிந்தது அன்றுதான். எண்ணங்கள் எண்ணங்கள். திரும்பத்திரும்ப ஒரே விஷயம் வெவ்வேறு சொற்களில். கட்டிடங்கள் பேருந்துகள் ஆட்கள் ஒலிகள் வானம் பூமி எல்லாமே அம்மாவின் மரணமாக இருந்தன.

தூக்கமில்லாமல் தவித்தேன். சொற்கள் அர்த்தமிழந்து பறந்த மனம். கொதிக்கும் இஸ்திரிப்பெட்டியை மண்டைக்குள் மூளை என வைத்தது போல. படுக்க முடியவில்லை. அமர முடியவில்லை. ஓடிக்கொண்டே இல்லை என்றால் பைத்தியமாகிவிடுவேன் என உணர்ந்தேன். பேருந்து மாற்றி சென்றுகொண்டே இருந்தேன். கடைசியில் மானந்தவாடி. அங்கிருந்து மேலும் சென்று தலைக்காவேரி வழியாக மைசூர். அப்பயணத்தில் ஒரு கணத்தில் நான் திரும்பி என் மனதை நானே பார்த்தேன்

என்ன இது என்று துணுக்குற்றேன். என்னை பின்தொடர்ந்துவந்த பிசாசுக்கள் தயங்கி நின்றன. நான் அவற்றை நோக்கி நடந்தேன், அவை கரைந்து நிழலுருக்களாக மாறி மறைந்தன. என் மனம் என்பது நானல்ல என உணர்ந்தேன். எனக்குள் ஆழத்தில் இருந்த ஓர் அசைவின்மை இந்த கொந்தளிப்புகளை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான் நான் இவற்றைப்பார்க்கமுடிகிறது. ஆம், இவை அலைகள்தான்,. கடல் அல்ல. ஆத்மானந்தரின் வரியாக அந்த அறிதலை தொகுத்துக்கொண்டேன். ‘Waves are nothing but water, so is the sea’

மனதை உணர்ந்த அந்தக்கணத்தில் நான் ஒரு விடுதலையை அடைந்தேன். அங்கிருந்து திரும்பி காசர்கோடுக்குச் சென்றேன். அப்போது எனக்குள் ஒரு விடியல் நிகழந்திருந்தது. அம்பேத்கரின் சொற்கள் இங்கே சுட்டுவது அதையே. மனதை மனமாக உணர்வது.

அடுத்து அவர் சொல்வது கருத்துக்களை கருத்துக்களாக காண்பது. அதன் உடனடிப்பொருளை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. கருத்து என்றால் சொல்லப்படும், எழுதப்படும் ஓர் எண்ணம் என்ற பொருளில் தான் நாம் புழங்குகிறோம். அந்த அர்த்தமல்ல இங்கே உள்ளது. மனதுக்கும் ஆழத்தில், மனதுக்கு அடுத்தபடியாக கருத்து கூறப்படுகிறது என்பதை கவனிக்கவும். ஆகவே இந்தகக்ருத்து என்பது நாம் சொல்லும், பேசும் கருத்து அல்ல. பௌத்த மெய்ப்பொருளில் அச்சொல்லுக்கு ஆழமான அர்த்தம் உண்டு.

பௌத்தமெய்ப்பொருளின்படி இங்கிருப்பவை தர்மத்தின் பல முகங்களே. நீர் என்பது நீரின் தர்மம்தான். ஆனால் நாம் நீர் என நாமறிவது அந்த தர்மம் நம்மில் ஏற்படுத்தும் ஒரு கருத்தைத்தான். நீர் என்பது நாம் நம் உடலின் இயல்பால் மூளையின் இயல்பால் அறியும் ஒரு கருத்து. இப்படிச் சொல்லலாம். தர்மத்தை நம் பிரக்ஞை அறியும்போது உருவாவதே கருத்து.

நான் என்பது ஒரு கருத்து. பிரபஞ்சம் என்பது ஒரு கருத்து. அறிதல் என்பது இன்னொரு கருத்து. கருத்து என்பது தர்மத்தில் இருந்து நான் பெற்றுக்கொள்வது. தர்மம் என்னில் கொள்ளும் பிரதிபலிப்பு அது. என்னளவே சுருக்கப்பட்ட தர்மம் அது. என்னுடைய அந்தக்கருத்தை நான் தர்மம் என்று உணர்வதுதான் பொய். அதை களைந்து கருத்தைக் கருத்தாக மட்டுமே அறிவதுதான் பௌத்தம் சொல்லும் நான்காவது தெளிவு.

நம் கையிலிருக்கும் கண்ணாடித்துண்டால் நாம் வெளியுலகை பிரதிபலித்துக்கொண்டால் கிடைக்கும் பிம்பங்களைப்போன்றவை நம்மிடமிருக்கும் கருத்துக்கள். நம்முடைய கோணம் மாறும்தோறும் மாறிக்கொண்டே இருப்பவை அவை. நம் கண்ணாடித்துண்டின் அழுக்கையும் வண்ணத்தையும் கலந்துகொண்டவை. ஆனால் அந்த பிம்பங்களையே நாம் நம் உள்ளாகவும் புறமாகவும் அறிகிறோம்

அந்தக்கருத்தை கருத்தாக மட்டுமே அறிதலே அறிதலின் தூயநிலை என்கிறார் அம்பேத்கர். அக்கருத்துக்களை நாம் எப்போதும் பிரபஞ்சம் என நினைக்கிறோம். ஒளியை, காலத்தை, வெளியை எல்லாம் கருத்துக்கள் எனலாம். அவற்றை கருத்துக்களாக மட்டுமே அறிகையிலேயே அவற்றைத்தாண்டிச்சென்று அக்கருத்துக்களின் மெய்ப்பொருளாகிய மகாதர்மத்தை அறியமுடியும்.

ஆம் ஐவகை சுத்திகரிப்புகள் வழியாக நாம் அடைவது இந்த நான்கு மெய்யறிதல்களைத்தான். களிம்பைக் கழுவினால் கண்ணாடி தெளிந்துவருவதுபோல அழுக்கு கழுவப்படும்போது இந்த தெளிவு கைகூடுகிறது என்கிறார் அம்பேத்கர்.

உடல்,சொல்,மனம் என்ற மூன்றிலும் தூய்மை என்பதன் நீட்சியாக இந்த நான்கு நிலைகள் சொல்லப்படுகின்றன. உடல் தூய்மையடையும்போது அதை உடலாக உணரமுடிகிறது. சொல் தூய்மைடையும்போது உணர்ச்சிகளை உணர்ச்சிகளாக அணுக முடிகிறது. மனம் தூய்மையடையும்போது மனதை தூய்மையாக அணுகமுடிகிறது. இம்மூன்றும் தூய்மையடையும்போது கருத்துக்களாலான இப்ப்பிரபஞ்சத்தை கருத்துக்களாக அறியமுடிகிறது.

முதல் நிலையில் இதுவே தர்மம் என்கிறார் அம்பேத்கர். ஒரு செயல் உலகியல் தளத்தில் தர்மம் சார்ந்ததா அல்லவா என்பதற்கான அளவுகோல் இதுவே. அது நம் உடலையும் உணர்வுகளையும் மனதையும் கருத்துலகையும் தூயநிலையில் பார்க்க உதவுகிறதா என்றுதான். அவ்வாறு பார்க்க உதவுவதே அறச்செயல்,


ஒப்புமை
”வாய்மையே தூய்மையாக .. பூசனை ஈச னார்க்கு” (அப்பர்.பொது 4)

“வாய்மை யென்னுமீ தன்றி வையகம்
தூய்மை யென்னுமொன் றுண்மை சொல்லுமோ” (கம்ப.கிளைகண்டு 115)

பரிமேலழகர் உரை
புறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே உண்டாம்: அகம் தூய்மை வாய்மையான் காணப்படும். - அதுபோல, மனம் தூய்தாந் தன்மை வாய்மையான் உண்டாம். "(காணப்படுவது உளதாகலின் , 'உண்டாம்' என்று உரைக்கப்பட்டது. உடம்பு தூய்தாதல்: வாலாமை நீங்குதல்: மனம் தூய்தாதல் மெய்யுணர்தல். புறம் தூய்மைக்கு நீரல்லது காரணம் இல்லாதாற் போல, அகம் தூய்மைக்கு வாய்மையல்லது காரணம் இல்லை என்பதாம். இதனானே, துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டும்" என்பதூஉம் பெற்றாம்.).

மணக்குடவர் உரை
உடம்பு தூயதாதல் நீரினாலே யமைந்து விடும்: மனத்தின் தூய்மை மெய்சொல்லுதலினாலே யறியப்படும்.

மு.வரதராசனார் உரை
புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.

Thirukkural - Management - Truthfulness
External cleanliness can happen with washing and cleaning the body with water. That is not long lasting as we become dirty soon. Again, we can clean ourselves by the same process. On the contrary, internal purity can happen only with truthfulness. When a person's thoughts are pure, his expressions are pure. Kural 298 affirms that a person reflects his thoughts through his truthfulness. Truthfulness is a mirror that reflects a person's internal purity.

Water ensures external purity
And truthfulness shows the internal

Your words are the reflections of your truthfulness. Be clean internally so that you can be clean in your words and deeds.

English Meaning - As I taught a kid - Rajesh
If one wants to externally cleanse himself/herself, then, one can take a bath in clean water. Clean water cleanses one externally. Whereas one's internal purity can be seen in one's integrity/honesty (in thoughts, words and actions). One's heart/conscience is the driving force for one's honesty, thoughts, words, actions. Hence, one should keep his heart pure and be honest.

Questions that I ask to the kid
How can you know about external purity? So, how will you know internal purity?