Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

குறள் 440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்
[பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்]

பொருள்
காதல - தான் விழைந்தவைகளுள்

காதல் - அன்பு; காமவிச்சை; விரகம், பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

அறியாமை - அறியாத்தன்மை; மடமை

உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல் சேர்த்தல் நடத்துதல் அமிழ்த்தல் நுகர்தல் கொடுத்தல் அனுப்புதல் குறிப்பித்தல் அறிவித்தல் ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்

பின் -  பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

உய்க்கிற்பின் - நடத்திக்கொள்பவர்களிடம்

ஏதில் - ētil  - s. Strangeness, foreignness, not being one's own (people, &c.), அன்னியம். 2. Vicinity, neighborhood, proximity, nearness, அயல். (probably from ஏது, cause and இல்், neg.) (p.)

ஏதில -  எண்ணம் நிறைவேறாது

ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர்.

நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை.

முழுப்பொருள்
ஒரு அரசர் (அல்லது ஒருவர்) தனது ஆசைகளை விரகங்களை இச்சைகளை விழைபவராக இருக்கலாம். அது மனித இயல்பு. ஆனால் அவை நமக்கு ஒரு விதத்தில் பலவீனமே. ஆதலால் நமக்கு பலவீகமாக அமையக்கூடிய ஆசைகளை இச்சைகளை நாம் விழைந்தாலும் அவற்றைப் பிறர் குறிப்பாக எதிரிகள் (நண்பர்கள் கூட ஏனெனில் அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பகையாக மாறக்கூடும்) அறியாவண்ணம் நுகரமுடிந்தால் அத்தகைய அரசனை (அத்தகைய ஒருவனை) வெல்லக்கூடிய ஆயுதத்தை உடைய பகைவர் யாரும் இருக்க முடியாது.

விரகங்களை இச்சைகளை வைத்துக்கொள்ளுதல் தவறு தானே. அதையேன் வள்ளுவர் கண்டிக்கவில்லை? ஏனெனில், தனது இச்சைகளை பற்றிய அறிதலால் ஏற்படக்கூடிய வீழ்ச்சியை அறிந்தும், தன்னையும் தன் நாட்டையும் தன் குடும்பத்தையும் வீழ்த்தக்கூடிய இச்சைகளை எல்லோரும் அறியும் வண்ணம் செய்தல் பெரும் குற்றாமாகும். அதை அடிக்கோடிடவே திருவள்ளுவர் இக்குறளை கூறியுள்ளார். 

ஒப்புமை
கீ.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சிப் பதிப்பிலே, 

“வேந்தர்தாம் விழைப வெல்லாம் வெளிப்படார் மறைத்தல்கண்டாய்
நாந்தக உழவர் ஏறே நன்பொருளாவ தென்றான்” (சீவக.2910)

பெருங்கதையிலிருந்து கீழ்காணும் வரிகள் மேற்கோளாகக் காட்டுகிறார். 

“......உட்காதொழுகின் 
பகைவர் எண்ணம் பயமில் வென்னும் 
நீதிப்பெருமை நூல் ஓதியும் ஓராய்” (பெருங் 2.1:24.6). இவை ஒரு ஆள்பவரைப்பார்த்து இடித்துரைகும் வீச்சிலிருப்பதை புரிந்துகொள்ளலாம். இதைத்தான் வள்ளுவரும் சொன்னதாகக் கொள்ளலாமா?



மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் - தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின், ஏதிலார் நூல் ஏதில் - பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம். (அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம், வெகுளி, உவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின், இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.).

மணக்குடவர் உரை
காதலிக்கப்பட்ட யாவற்றின்மேலுஞ் செல்லுங் காதலைப் பிறரறியாமற் செலுத்துவனாயின் பகைவர் இவனைக் கொல்லுமாறு சிந்திக்கும் சிந்தனை இவன் மாட்டுச் செல்லாது, அயலாம். நூலென்பது அவர்கற்ற கல்வி.

மு.வரதராசனார் உரை
தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை
தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

குறள் 439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை
[பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்]

பொருள்
வியத்தல் - செருக்குறுதல்; அதிசயப்படல்; நன்குமதித்தல்; பாராட்டுதல்; கொடுத்தல்; கடத்தல்.

வியவற்க - வியந்து தற்பெருமையில் தருக்கு கொள்ளற்க

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

தன்னை -தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.

நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக்கண்டதலைவிதனதுஆசைப்பாடுகூறும்புறத்துறை.

நயவற்க - அதேபோல விழைந்து செல்லவேண்டாம்

நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.

பயவா - பயக்காத, தாராத, பிறருக்கு பயன் தரக்கூடிய தன்மைய இல்லாத

வினை- தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள்
எக்காலத்திலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எவ்வளவு வளர்ந்தாலும் எவ்வளவு பெரிய இடர் அல்லது பின்னடைவில் இருந்து மீண்டு வந்தாலும் எவ்வளவு பெருமையும் புகழும் பெற்றாலும் எவ்வளவு செல்வத்தை ஈட்டினாலும் தன்னை தானே வியந்துக்கொள்ளாதே. எப்பேர்பட்ட உயர்ச்சியிலும் எக்காலத்திலும் என்றும் அகங்காரம் கொள்ளாதே. ஏனெனில் செருக்கு கொள்ளுதல் குற்றமாகும். செருக்கு கொண்டால் நம் கண்ணும் அறிவும் பார்க்கவேண்டியவற்றை பார்க்காமல் தவறு செய்யலாம், நம் காதுகள் பெரியோரின் சொற்களை மனம் கொடுத்து கேட்காமல் அவர்களின் சினத்திற்கு ஆளாகலாம், நம் வாய் தீய பணிவற்றச் சொற்களைப் பேசலாம். இவையாவும் துன்பமே விளைவிக்கும். ஏனெனில் அதற்கு வேர் செருக்கு/அகங்காரம். அதனை கொள்ளாதே.


அதுப்போல் நன்மை பயக்காதா அறம் அல்லாத செயல்களை ஒரு பொழுதும் விரும்பாதே. அதை செய்வோரையும் சிறப்பிக்காதே பாராட்டாதே நட்புபாடாதே. ஏனெனில் அவை காலத்தை விரயம் செய்யும் செயல்கள். மேலும் நன்மை பயக்காமல் தீயனவற்றை பயக்கும். அத்தகைய செயல்களை செய்தால் அவை தவறான முன்மாதிரியாக மாறிவிடும். உன்னைப்பார்த்து பலர் செய்வர். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”தன்னை வியந்தான் விரைந்து கெடும்” (குறள் 474)

“எம்மை அறிந்திலீர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாங் கொள்வது கோளன்று தம்மை
அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்” (நாலடி 165)

“கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாரட்டப் பாடெய்தும் தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தில் தணியாத
பித்தன்என் றெள்ளப் படும்” (நாலடி 340)


பரிமேலழகர் உரை
எஞ்ஞான்றும் தன்னை வியவற்க - தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நன்கு மதியாது ஒழிக, நன்றி பயவா வினை நயவற்க - தனக்கு நன்மை பயவா வினைகளை மனத்தால் விரும்பாது ஒழிக.
(தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமை யானும் , அறனும் பொருளும் இகழப்படுதலானும், எஞ்ஞான்றும் வியவற்க என்றும் கருதியது முடித்தே விடுவல் என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின், அவற்றால் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார். இதனான், மத மானங்களின் தீமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எல்லா நாளுந் தன்னைப் பெரியனாக நினைத்து வியவாதொழிக; வியந்தா னாயினும் அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யாதொழிக. செய்யிற் கெடு மென்றவாறாயிற்று.

மு.வரதராசனார் உரை
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

சாலமன் பாப்பையா உரை
எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்

குறள் 438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று
[பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்]

பொருள்
பற்று  - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

இவறன்மை - கடும்பற்றுள்ளம்; அசட்டை ஆசை

எற்றுள்ளும் - எவற்றுள்ளும்

எண்ணப்படுவது - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

முழுப்பொருள்
எச்சைக்கையால் காக்கயைக் கூட விரட்டாத கருமித்தனம் பற்றி கேள்விப்படுகிறோம். அதாவது எச்சையில் கையில் இருக்கிற சோறுப் பருக்கை கூட கீழே விழுந்து பிற உயிர்கள் உண்டு பயனற்றுவிடக்கூடாது என்னும் சுயநலத்தன்மை கருமித்தனம்.  அக்கருத்தை ஒட்டியே இக்குறள் சொல்லும் பொருளும்.

தன் செல்வத்தின் மீது அதீத பற்றுக்கொண்டு அச்செல்வத்தை தேவையானவற்றுக்கூட செலவு செய்யாமல் அச்செல்வத்தை பாதுக்காப்பது மற்ற எல்லாகுற்றங்களை காட்டிலும் செய்யக்கூடாத ஒன்று. ஏனெனில் அது ஒரு கொடுங்குற்றமாகும். இங்கே தேவையானவைக்கூட செலவு செய்யாது இருத்தலுக்கு உதாரணமாக சொன்னால் தந்தை தாயின் உடல் நலத்திற்கு உணவிற்கு இருப்பிடத்திற்கு, தன் சொந்தபந்தங்களின் நியாயமான தேவைகளான கல்வி, மருத்துவம், உணவு போன்ற அடிப்படை தேவைகளுக்கு கூட செலவு செய்யாது இருத்தல் போன்றவற்றை கூறலாம். இன்னும் பல உதாரணங்களை கூறலாம்

கருமித்தனம் குணங்களை அழிக்கும் தீது என்பதை கம்பராமாயண, தாடகை வதப்படலப் பாடலொன்றும் தெரிவிக்கிறது.
உளப்பரும் பிணிப்பறா உலோபம் ஒன்றுமே 
அளப்பருங் குணங்களை அழிக்கு மாறுபோல்” (கம்ப.தாடகை 43)

உட்டெறு வெம்பகை யாவது லோபம்
விட்டிட” (கம்ப.வேள்வி.32)

நடுக்குறச் செய்யும் செல்வத்தின் பிணைப்பாகிய கருமித்தனம் ஒன்றே ஒருவருக்கு மதிப்பிடமுடியாத குணநலன்களயும் அழிக்கக்கூடிய தீமை என்கிறார் கம்பரும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பற்றுள்ளம் என்னும் இவறன்மை -பொருளை விடத்தகும் இடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளம் ஆகிய உலோபத்தினது தன்மை, எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - குற்றத் தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்று , மிக்கது.
(இவறலது தன்மையாவது : குணங்கள் எல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு ஒழிந்தன அதுமாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவதொன்று அன்று' என்றார். 'எவற்றுள்ளும்' என்பது இடைக்குறைந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கூடின பொருளை விடாமையாகிய உலோபம் யாதொன்றினுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று. இஃது உலோபம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் ஒரு பொருளாக மதிக்கப்படா தென்றது.

மு.வரதராசனார் உரை
பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.

சாலமன் பாப்பையா உரை
செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

குறள் 430
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
[பொருட்பால், அரசியல், அறிவுடைமை]

பொருள்
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

உடையார் - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.

எல்லாம் - முழுதும்

உடையார் - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

இலார் - இல்லை என்றால்; இல்லாதவர் 

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

உடையர் உடையார் - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.

எல்லாம் - முழுதும்

எனும் - என்கின்ற; சிறிதும்.

இலர் - இல்லை ;  who are not

முழுப்பொருள்
அறிவுடையவர்கள் இடத்தில் செல்வம் ஏதும் இல்லையென்றாலும் துன்பங்கள் பலவற்றை சந்தித்துக்கொண்டு இருந்தாலும் அவர்கள் எல்லாம் உடையவர்களே. ஏனெனில் இடர்பாடுகளில் இருந்து எப்படி மீளவேண்டும் என்ன செய்யவேண்டும் என்று அறிந்தவர்கள் அறிவுடையவர்கள். அதன்படி செயலாற்றி எல்லாவற்றையும் பின்னாட்களில் பெற்றுவிடுவார்கள். அதுமட்டும் இன்றி அறிவு இருப்பதனால் இவர்களுக்கு பெருமையும் புகழும் உண்டு. சான்றோரின் மதிப்பும் உண்டு. அதனால் தான் அறிவுடையார் எல்லாம் உடையார் என்று திருவள்ளுவர் கூறினார். 

ஆனால் எல்லா செல்வத்தையும் பெற்று இருந்தும் அறிவு இல்லாதவர்கள் ஏதும் இல்லாதவர்களே ஏனெனில் ஒரு துன்பமும் இடரும் வந்தாலும் அதில் இருந்து மீளத்தெரியாது இவர்களுக்கு. அதுமட்டும் இன்றி இவர்கள் அறிவில்லாதவர்கள் ஆதலால் இவர்களிடம் இருந்து செல்வத்தை களவு செய்வதும் எளிது. இவர்களும் செல்வத்தை கட்டி காத்து வளர்க்காமல் வீண் செய்வர். இத்தகையவர்களுக்கு பெருமையும் புகழும் இல்லை. அதனால் அறிவில்லாதவர்கள் பிற செல்லவங்கள் எல்லாம் இருந்தும் ஏதும் அற்றவர்களே.

நாலடியார் (251) பாடலொன்று இதையே, 
“நுண்ணுணர்வின்மை வறுமை அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்” என்கிறது. 

பழமொழிப் பாடலொன்று (271),  இவ்வாறு கூறுகிறது.
 “அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்ட(து) எவனாம் – பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
அணியெல்லாம் ஆடையின் பின்”
இதன் கருத்து, “ஆடையில்லானை அணிகள் அழகுறச் செய்யாமை போல அறிவில்லானைச் செல்வம் பெருமையுறச் செய்யாது என்பதாம்”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறிவுடையார் எல்லாம் உடையார் - அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும் எல்லாம் உடையராவர், அறிவிலார் என் உடையரேனும் இலர் - அறிவிலாதார் எல்லாம் உடையராயினும் ஒன்றும் இலராவர்.
(செல்வங்கள் எல்லாம் அறிவாற் படைக்கவும் காக்கவும் படுதலின், அஃது உடையாரை 'எல்லாம் உடையார்' என்றும், அவை எல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமல் காத்தற்கும் தெய்வத்தான் அழிந்துழிப் படைத்தற்கும் கருவியுடையர் அன்மையின், அஃது இல்லாதாரை, 'என்னுடயரேனும் இலர்' என்றும் கூறினார். 'என்னும்' என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான், அவரது உடைமையும் ஏனையாரது இன்மையும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
அறிவினை யுடையார் யாதொன்றும் இல்லாராயினும் எல்லாமுடையர்: அறிவிலார் எல்லாப் பொருளும் உடையாராயினும் ஒரு பொருளும் இலர். இஃது அறிவுடைமை வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.

Thirukkural - Management - Knowledge
Even if a person possesses all the material things but not knowledge, he does not possess anything. Even if a person does not possess any material thing but possesses knowledge, he possesses everything, defends Kural 430.

Those who have wisdom have all:
Fools with all have nothing.

Knowledge is more important  than worldly possessions. So, possess what is worth possessing, that is knowledge.

Kural 430 is in line with the thoughts of Kural 400. A learned person has all the possessions. A  person who has not learned does not possess anything, even if he possesses all the other material possessions.

இருவகை அறிவு (இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்)
அறிவில் இரண்டு வகை உண்டு. மனிதன் தன் வாழ்க்கையை இனிதாக்குவதற்கு உலகிலுள்ள பொருள்களை எவ்வளவு விதமாகப் பயன்படுத்தலாமென்பதை அறிவது ஒருவகை அறிவு. இந்த வாழ்க்கையும் இந்த உலகமுமே எதற்காக என்பதை அறிவதே இரண்டாவது வகை.  இந்த இரண்டாவது வகை அறிவின் விரிவே தத்துவ ஞானம் எனப்படுவது. முதலாவது அறிவுக்கு உலகிலுள்ள பொருள்களும் உலகின் பகுதிகளும் விஷயமாக, இரண்டாவது வகை அறிவு, உலகம் முழுவதையுமே தனக்கு விஷயமாக்கி, இந்த உலகம் எதிலிருந்து, எங்ஙனம், எதற்காக உற்பத்தியானது என்பதை ஆராய்கின்றது. ஆகவே, இந்த இரண்டாவது வகையே அடிப்படையாவது. இந்த அடிப்படை அறிவை நமக்குத் தருவன என்ற காரணத்தால்தான், அறிவு நூல் என்ற கருத்தையுடைய பெயர் வேதங்களுக்கு ஏற்படலாயிற்று.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

குறள் 429
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்
[பொருட்பால், அரசியல், அறிவுடைமை]

பொருள்
எதிர் - வருங்காலம்; எதிரிடை; முன்; முன்னுள்ளது; முரண்; கைம்மாறு; இலக்கு; போர்.

அதா - அன்று   conj. See அதான்று (தொல். எழுத். 258, உரை ), atā   adv. cf. அந்தா. There; அங்கே.Tinn.

எதிரதாக் - வரப்போகும் துன்பங்களை எதிர்பார்த்து

காக்கும் - காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

அறிவினார்க்கு - அறிவுடையோர்களுக்கு 

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

அதிர - அதிர்தல் - முழங்கல்; கலங்கல் நடுங்கல் தளர்தல் குமுறுதல் எதிரொலித்தல்

வருவதோர் - வருகின்றது ஒரு

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

முழுப்பொருள்
வருங்காலத்தில் நமக்கு தேவைகள் என்ன, நமக்கு வரக்கூடிய சோதனைகள் துன்பங்கள் என்ன , துன்பங்களில் இருந்தும் காத்துக்கொள்ளும் வழிகள் என்ன என்று அறிந்தோர்க்கு அதன் படி செயலாற்றுவோருக்கு அவரை கலங்கவைக்கும் துன்பம் என ஏதும் இல்லை. ஏனெனில் அத்துன்பம் வருவதற்கு முன்பே அதனை வரவிடாமல் செய்வார் இல்லையேல் அதனை சமாளிக்க என்ன செய்யவேண்டும் என்று அறிந்து அதன் படி செயலாற்றுவார்.  வரும் முன் காப்பது நன்று என்று உணர்ந்து நடக்கின்றவர்கள் அறிவுடையவர்கள்.

வரப்போவதை முன்பே அறிந்து காத்துகுக் கொள்ளவல்ல அறிவுடையவர்களுக்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றுமில்லை

லௌகீக வாழ்க்கையில் ஒரு உதாரணமாக இதனை கூறலாம். ஒருவர் வருங்காலத்தில் வீட்டில், வருமானத்தில் ஒரு நஷ்டத்தை சந்தித்தாலோ அல்லது ஒருவருக்கு உடலில் நோய் வந்தாலோ அதனை சமாளிக்க தேவையான பணத்தை ஒரு தனி அவசரகால கணக்கில் சேமித்து வைப்பார். அதுப்போல் ஒருவர் தான் வேலைசெய்யும் தொழில்நுட்பம் எப்பொழுது வேண்டுமானாலும் வேறு ஒரு தொழில்நுட்பத்தால் மாறலாம். ஆதலால் அதற்காக அவர் எப்பொழுதும் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டே இருப்பார். ஒரு வணிகத்தில் வரும்காலங்களில் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் (ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும்) புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய தனது இலாபத்தில் இருந்து தனியே செமித்து வைப்பார். அப்படி இல்லையேல் அவர் வணிகத்தை வளர்க்கமுடியாமல் தேங்கியோ அல்லது நாளடைவில் நஷ்டத்தை சந்திக்கவோ நேரிடும். ஒரு வீட்டில், வேலையில் இருந்து ஒய்வு பெற்ற உடன் வாழ தேவையான் முதலீடுகளை செய்து வைக்கவேண்டும். காசு இருக்கும் பொழுது ஊர் சுற்றி பணத்தை விரயம் செய்தால் பின்னாட்களில் துன்பங்கள் வரும் பொழுது மிகவும் கலங்க நேரிடும்.

இக்குறளை நாம் சுற்றுசூழலுக்கும் பொருத்திப்பார்த்தால் நன்று.
Sustainability creates and maintains the conditions under which humans and nature can exist in productive harmony


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு - வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு, அதிர வருவது ஓர் நோய் இல்லை - அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை.
('நோய்' என வருகின்றமையின், வாளா 'எதிரதா' என்றார். இதனான் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. காத்தல் - அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பம்இன்மை இதனான் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
துன்பம் வருவதற்கு முன்பே வருமென்று நினைத்துக் காக்கும் அறிவையுடையார்க்கு நடுங்க வருவதொரு துன்பம் இல்லை. இது முன்னை வினையால் வருந் துன்பமும் முற்பட்டுக் காக்கின் கடிதாக வாராதென்றது.

மு.வரதராசனார் உரை
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.

Thirukkural - Management - Knowledge
What are the advantages for a person with adequate knowledge? For a knowledgeable person, there is  no anxiety, fear, stress, apprehension, and disease as he can guard himself from future misfortunes, challenges, or problems,  afhrms Kural 429. Lack of knowledge is the cause for all our troubles that include: fear, anxiety, distress, and disease.

To the rise with foresight 
There are no shocks.