Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

குறள் 430
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
[பொருட்பால், அரசியல், அறிவுடைமை]

பொருள்
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

உடையார் - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.

எல்லாம் - முழுதும்

உடையார் - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

இலார் - இல்லை என்றால்; இல்லாதவர் 

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

உடையர் உடையார் - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.

எல்லாம் - முழுதும்

எனும் - என்கின்ற; சிறிதும்.

இலர் - இல்லை ;  who are not

முழுப்பொருள்
அறிவுடையவர்கள் இடத்தில் செல்வம் ஏதும் இல்லையென்றாலும் துன்பங்கள் பலவற்றை சந்தித்துக்கொண்டு இருந்தாலும் அவர்கள் எல்லாம் உடையவர்களே. ஏனெனில் இடர்பாடுகளில் இருந்து எப்படி மீளவேண்டும் என்ன செய்யவேண்டும் என்று அறிந்தவர்கள் அறிவுடையவர்கள். அதன்படி செயலாற்றி எல்லாவற்றையும் பின்னாட்களில் பெற்றுவிடுவார்கள். அதுமட்டும் இன்றி அறிவு இருப்பதனால் இவர்களுக்கு பெருமையும் புகழும் உண்டு. சான்றோரின் மதிப்பும் உண்டு. அதனால் தான் அறிவுடையார் எல்லாம் உடையார் என்று திருவள்ளுவர் கூறினார். 

ஆனால் எல்லா செல்வத்தையும் பெற்று இருந்தும் அறிவு இல்லாதவர்கள் ஏதும் இல்லாதவர்களே ஏனெனில் ஒரு துன்பமும் இடரும் வந்தாலும் அதில் இருந்து மீளத்தெரியாது இவர்களுக்கு. அதுமட்டும் இன்றி இவர்கள் அறிவில்லாதவர்கள் ஆதலால் இவர்களிடம் இருந்து செல்வத்தை களவு செய்வதும் எளிது. இவர்களும் செல்வத்தை கட்டி காத்து வளர்க்காமல் வீண் செய்வர். இத்தகையவர்களுக்கு பெருமையும் புகழும் இல்லை. அதனால் அறிவில்லாதவர்கள் பிற செல்லவங்கள் எல்லாம் இருந்தும் ஏதும் அற்றவர்களே.

நாலடியார் (251) பாடலொன்று இதையே, 
“நுண்ணுணர்வின்மை வறுமை அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்” என்கிறது. 

பழமொழிப் பாடலொன்று (271),  இவ்வாறு கூறுகிறது.
 “அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்ட(து) எவனாம் – பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
அணியெல்லாம் ஆடையின் பின்”
இதன் கருத்து, “ஆடையில்லானை அணிகள் அழகுறச் செய்யாமை போல அறிவில்லானைச் செல்வம் பெருமையுறச் செய்யாது என்பதாம்”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறிவுடையார் எல்லாம் உடையார் - அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும் எல்லாம் உடையராவர், அறிவிலார் என் உடையரேனும் இலர் - அறிவிலாதார் எல்லாம் உடையராயினும் ஒன்றும் இலராவர்.
(செல்வங்கள் எல்லாம் அறிவாற் படைக்கவும் காக்கவும் படுதலின், அஃது உடையாரை 'எல்லாம் உடையார்' என்றும், அவை எல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமல் காத்தற்கும் தெய்வத்தான் அழிந்துழிப் படைத்தற்கும் கருவியுடையர் அன்மையின், அஃது இல்லாதாரை, 'என்னுடயரேனும் இலர்' என்றும் கூறினார். 'என்னும்' என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான், அவரது உடைமையும் ஏனையாரது இன்மையும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
அறிவினை யுடையார் யாதொன்றும் இல்லாராயினும் எல்லாமுடையர்: அறிவிலார் எல்லாப் பொருளும் உடையாராயினும் ஒரு பொருளும் இலர். இஃது அறிவுடைமை வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.

Thirukkural - Management - Knowledge
Even if a person possesses all the material things but not knowledge, he does not possess anything. Even if a person does not possess any material thing but possesses knowledge, he possesses everything, defends Kural 430.

Those who have wisdom have all:
Fools with all have nothing.

Knowledge is more important  than worldly possessions. So, possess what is worth possessing, that is knowledge.

Kural 430 is in line with the thoughts of Kural 400. A learned person has all the possessions. A  person who has not learned does not possess anything, even if he possesses all the other material possessions.

இருவகை அறிவு (இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்)
அறிவில் இரண்டு வகை உண்டு. மனிதன் தன் வாழ்க்கையை இனிதாக்குவதற்கு உலகிலுள்ள பொருள்களை எவ்வளவு விதமாகப் பயன்படுத்தலாமென்பதை அறிவது ஒருவகை அறிவு. இந்த வாழ்க்கையும் இந்த உலகமுமே எதற்காக என்பதை அறிவதே இரண்டாவது வகை.  இந்த இரண்டாவது வகை அறிவின் விரிவே தத்துவ ஞானம் எனப்படுவது. முதலாவது அறிவுக்கு உலகிலுள்ள பொருள்களும் உலகின் பகுதிகளும் விஷயமாக, இரண்டாவது வகை அறிவு, உலகம் முழுவதையுமே தனக்கு விஷயமாக்கி, இந்த உலகம் எதிலிருந்து, எங்ஙனம், எதற்காக உற்பத்தியானது என்பதை ஆராய்கின்றது. ஆகவே, இந்த இரண்டாவது வகையே அடிப்படையாவது. இந்த அடிப்படை அறிவை நமக்குத் தருவன என்ற காரணத்தால்தான், அறிவு நூல் என்ற கருத்தையுடைய பெயர் வேதங்களுக்கு ஏற்படலாயிற்று.

No comments:

Post a Comment