Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

குறள் 1014
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை
[பொருட்பால், குடியியல், நாணுடைமை]

பொருள்
அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.

அன்றோ - அதுவல்லவா 

நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.
நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று

உடைமை - சொத்து (சொந்தம்), உரிமை, மதிப்பு, செல்வம்

சான்றோர்க்கு சான்றோர் - அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன், சூரியன்

அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

இன்றேல் - இல்லை என்றால்

பிணி - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை

அன்றோஅதுவல்லவா 

பீடு - பெருமை; வலிமை; தரிசுநிலம்; தாழ்வு; துன்பம்; குறைவு; ஒப்பு; குழைவு.

நடை - காலாற்செல்லுகை; பயணம்; அடிவைக்குங்கதி; வாசல்; இடைகழி; ஒழுக்கம்; வழக்கம்; நீண்டநாள்; நடைகூடம்; இயல்பு; அடி; கூத்து; தொழில்; செல்வம்; ஒழுக்கநூல்; நித்தியபூசை; கோயில்; கோள்முதலியவற்றின்கதி; கப்பல்ஏறும்வழி; மொழியின்போக்கு; வாசிப்பின்நோட்டம்; தடவை.

முழுப்பொருள்
நாணுடைமை எனில் பழி பாவங்களுக்கு அஞ்சி வெட்கப்படுதல் என்பதாகும். நீதிநெறியையும் அறத்தையும் பற்றி பணிவுடன் இருத்தல் ஆகும்.

கற்றுணர்ந்த செயலாற்றிய சான்றோர்க்கு நாணுடைமை அணிகலனாக அமையும். அவர்களுக்கு இன்னும் அழகு சேர்க்கும். ஆனால் அந்த நாணுடைமையில்லையெனில் அவர்களிடம் கர்வத்தின் வெளிப்பாடாக இருக்கும் (பெரிய) நடை / போக்கு / செல்வம் / தொழில் எல்லாம் ஒரு நோயாகவே இவ்வுலகம் கருதும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சான்றோர்க்கு நாண் உடைமை அணியன்றோ - சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வாபரணம் இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம். (அழகு செய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு அருமையின் 'பிணி' என்றும் கூறினார். ஓகார இடைச்சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சான்றோர்க்கு நாணுடைமையாவது அழகன்றோ? அஃதில்லையாயின் பெரிய நடை நோயன்றோ? இது சான்றோர்க்கழகாவது நாணுடைமை யென்றது.

மு.வரதராசனார் உரை
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.

சாலமன் பாப்பையா உரை
நாணம்‌ இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்‌லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்

குறள் 1004
எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]

பொருள்
எச்சம் - எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலேவரும்குறை:குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில்பிண்டம்என்னும்எட்டுவகைஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபுமுற்றுஎச்சங்கள்கொண்டுமுடியும்பெயர்வினைகள்; பெயரெச்சவினையெச்சங்கள்.

என்று -எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

எண்ணும்  - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

கொல்லோ - கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

ஒருவர் - ஓராள்; ஒருவன்;  அல்லதுஒருத்தியைச்சிறப்புப்பற்றிப்பன்மையில்வழங்கும்பெயர், மரியாதைப்பன்மை.

ஒருவரால் - ஒருவர் - ஒருவரினால் 

நச்சு - ஆசை; 'விரும்பப்படும்பொருள்; தொந்தரவு; அலப்பல்; தாமதம்; சிறிய.

நச்சுதல் - விரும்புதல்; அலப்புதல்; தொந்தரவுசெய்தல்.

நச்சப் படாதவன்  - விரும்பப்படாதவன் 

முழுப்பொருள்
தனது என்று நினைத்து எதனையும் (பொருள், கல்வி, உணவு, செல்வம்) பிறர்க்கு வழங்காதவன், பகிராதவனை இவ்வுலக மக்கள் விரும்பமாட்டார்கள். இப்படி பிறரால் விரும்பப்படாதவன் தான் இறந்த பிறகு தனது புகழ் என்று எதுவும் எஞ்சியிருக்காது என்று எண்ணுவான் (வருந்துவான்). ஏனெனில் பிறர்க்கு உதவாதவனுக்கு புகழென ஏதுமில்லை.

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் - தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ? (ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின்,அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லைஎன்பார், 'என் எண்ணுங்கொல்லோ' என்றார். ஓகாரம் - அசை. இவைமூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன், தனக்குப் பின்பு நிற்பதென்று யாதினை எண்ணுமோ?. இது புகழில்லையா மென்றது.

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

குறள் 994
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

பொருள்
நயனொடு - நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.

புரிந்த - புரிதல் - puri-   4 v. tr. 1. To desire;விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261).2. To meditate upon; தியானித்தல். இறைவன். . . புகழ் புரிந்தார் (குறள், 5). 3. To do, make;செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி,323). 4. To create; படைத்தல். எவ்வுலகும் புரிவானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65). 5. Tobring forth, produce; ஈனுதல். பொன்போறார்கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109). 6. To give;கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள்(உபதேசகா. சிவவிரத. 257). 7. To experience, suffer; அனுபவித்தல். புண்டரிகை போலுமிவ ளின்னல்புரிகின்றாள் (கம்பரா. சூளா. 1). 8. To gaze at,watch intently; உற்றுப்பார்த்தல். பயத்தாலே புரிந்துபார்க்கிறபோது (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 174).9. To investigate, examine; விசாரணை செய்தல்.அறம் புரிந்தன்ன செங்கோ னாட்டத்து (புறநா. 35).10. To say, tell; சொல்லுதல். அந்தணாளர் புரியு மருமறை (தேவா. 865, 5). 11. To exercise, perform;நடத்துதல். அரசு புரிந்தான். 12. To accept; மேற்கொள்ளுதல். போக்குவரவு புரிய (சி. போ.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

உடையார் -  உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை

பாராட்டும் - பாராட்டு  - புகழ்ச்சி; அன்புசெய்தல்; விரித்துரைக்கை; பகட்டுச்செயல்; கொண்டாடுதல்.

பாராட்டுதல் - புகழ்தல்; அன்புகாட்டுதல்; பெருமிதம்உரைத்தல்; கொண்டாடுதல்; பலகாலம்சொல்லுதல்; விரித்துரைத்தல்; மனத்தில்வைத்தல்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
நீதியையும் அறத்தையும் மிக விரும்பிப் பிறர்க்கு பயனுள்ளவற்றை செய்யும் பண்பினை உடையவரை இவ்வுலகம் என்றும் பாராட்டும். 

உதாரணமாக சமூக ஆர்வலர்களை /சேவகர்களை இங்கே கூறலாம். ஒரு பக்கம் நீதியையும் அறத்தையும் போற்றுவார்கள். மறுபக்கம் களத்தில் இறங்கி எளியோர்க்கு உதவுவர். 

எனக்கு தெரிந்தே நண்பர்கள் சிலர் நீதியையும் அறத்தையும் போற்றுவதுமட்டும் அல்லாது பலருக்கு கல்வி, உணவு, பொருளுதவி ஆகிய தளங்களில் அன்றாடம் உதவுகின்றனர். இவர்கள் பெரும் செல்வந்தர்கள் அல்ல. நேரம் இல்லை பணம் இல்லை குடும்ப வேலை என்றெல்லாம் நொண்டி சாக்கு சொல்வதில்லை. எல்லோருக்கும் 24 மணிநேரம் தான். இவர்கள் உணவு போன்ற உதவிகளை தனியாகவும் கல்வி போன்ற தளங்களில் ஒரு குழுவாக பலருடன் ஒருங்கிணைந்து உதவுகிறார்கள். அந்த பண்பே இவர்களை போற்றுதலுக்கு உரியவராய் ஆக்குகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு - நீதியையும் அறத்தையும் விரும்புதலால் பிறர்க்கும் தமக்கும் பயன்படுதல் உடையாரது பண்பினை; உலகு பாராட்டும் - உலகத்தார் கொண்டாடா நிற்பர். ('புரிந்த' என்னும் பெயரெச்சம் ஈண்டுக் காரணப் பொருட்டு. நயனொடு நன்றி புரிதலும் பயனுடைமையும் பண்பு காரணமாக வந்தமையின், அதனைப் 'பாராட்டும்' என்றார்.).

மணக்குடவர் உரை
நீதியையும் அறத்தையும் விரும்புதலாற் பிறர்க்குந் தமக்கும் பயன்படுதலுடையாரது பண்பினை உலகத்தார் கொண்டாடா நிற்பர்.

மு.வரதராசனார் உரை
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

சாலமன் பாப்பையா உரை
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி

குறள் 986
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சால்பிற்குக் - சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி.

கட்டளை - அளவு; செங்கலச்சு; உருவங்கள்வார்க்கும்கருவி; ஒன்றைப்போலஅமைக்கும்உரு; உவமை; துலாம்; நிறையறிகருவி; துலாராசி; விதி; முறை; தரம்; கோயில்தருமம்; உரைகல்; ஒழுங்கு; எல்லை; குதிரைக்குப்பூட்டும்கடிவாளம்முதலியன; ஆணை; கட்டுப்பாடு; சமயமூலதத்துவம்உணர்த்தும்நூல்

யாது - எது;  எதுவென்றால்; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

தோல்வி - வெற்றியின்மை

துலை - நிறைகோல்; காண்க:துலாதானம்; துலாராசி; கிணற்றிலிருந்துஇறைக்கும்நீர்தங்குமிடம்; ஏற்றமரம்; மடைமுகம்; நூறுபலம்கொண்டநிறை; ஒப்பு; வெகுதூரம்; தூரப்பிரதேசம்; தோட்டம்.

அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))

கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கொளல் - கொள்ள வேண்டும்  ; அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

முழுப்பொருள்
ஒருவருடைய மேன்மையின் எல்லையை (அல்லது அளவை) எவ்வாறு அறிந்துகொள்ளலாம் என்றால் தனக்கு ஒப்பில்லாதவரிடம் (ஈடு இணையில்லாதவரிடம்) தோல்வியுற்றால் அந்த தோல்வியை  கண்ணியமாக ஏற்றுக்கொள்வதாகும்.

பொதுவாக தோல்வியை ஏற்றுக்கொள்வதென்பது மிக கடினம். தம்மில் பெரியயோரிடம் உயர்ந்தோரிடம் வலிமையானவரிடம் தோல்வி அடைந்தால் அதனை ஒரு படிப்பினையாக ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பும். ஆனால் தனக்கு ஒப்பிலாதவரிடம் தோற்றால் மனம் எளிதில் ஏற்றுக்கொள்ளாது.

மேன்மையானவர் வெற்றி தோல்வியை சமநிலையுடன் ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பும். இதனை விளையாட்டுகளில் பல நேரங்களில் காணலாம். கத்துக்குட்டி எனப்படும் மிக சிறிய புதிய அணியிடம் ஜாம்பவான்கள் எல்லாம் தோற்றுப்போய் இருக்கிறார்கள். அன்றையநாள் வெற்றிபெற்றவர் தோல்வியுற்றவரை விட நன்றாக ஆடினார். வெற்றிபெற்றவர் அது சிலவற்றை நன்றாக செய்தார். தோல்வியுற்றவர் எதோ ஒரு தவறை அறிந்தோ அறியாமலோ செய்தார். அவ்வளவே. அத்தோல்வி வாழ்வின் இறுதி அல்ல. அதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறுவதே சான்றாண்மை உடையவர்கள் செய்வது.

இது விளையாட்டுக்கு மட்டும் அல்ல விளையாட்டு, இசை, போர், வாழ்வு என்று அனைத்திற்கும் பொருந்தும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சால்பிற்குக் கட்டளை யாது எனின் - சால்பாகிய பொன்னின் அளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின்; தோல்வி துலை அல்லார்கண்ணும் கொளல் - அது தம்மின் உயர்ந்தார் மாட்டுக் கொள்ளும் தோல்வியை இழிந்தார் மாட்டும் கோடல். (துலை - ஒப்பு. எச்ச உம்மையான் இருதிறத்தார் கண்ணும் வேண்டுதல் பெற்றாம். கொள்ளுதல் - வெல்லும் ஆற்றலுடையராயிருந்தே ஏற்றுக் கொள்ளுதல். இழிந்தாரை வெல்லுதல் கருதித் தம்மோடு ஒப்பித்துக் கொள்ளாது, தோல்வியான் அவரினும் உயர்வராயின், அதனால் சால்பளவு அறியப்படும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
சால்பாகிய பொன்னினளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாதெனின், அது தம்மினுயர்ந்தார் மாட்டுக் கொள்ளுந் தோல்வியை இழிந்தார் மாட்டுங் கோடல்.

மு.வரதராசனார் உரை
சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை
சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
What is the yardstick for magnanimity/scholarliness? If one loses to a person or a thing who cannot be compared with him in terms of success, experience, wealth, knowledge etc, yet gracefully accepts the loss. In away a sportsmanship. 

Normally, accepting failure is difficult. But if one has the grace and humility to accept the failure, one can learn from the failure and move on. Also, one has to understand that it is humanly impossible to win every single time. It may not be his day or his session or his match. Perhaps the other person had a better plan and executed very well. Perhaps, the other person is more knowledgeable. On the contrary people with ego/arrogance, find it difficult to accept failures and end up stagnated or dwell. 

Questions that I ask to the kid
What is the yardstick for magnanimity/scholarliness? 
How accepting failures helps?
How to accept failures to a person less experience than you?
Why it is advised not to not accept losses/failure? 

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

குறள் 974
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு
[பொருட்பால், குடியியல், பெருமை]

பொருள் 
ஒருமை - ஒரேதன்மை; ஒற்றுமை; தனிமை; ஒப்பற்றதன்மை; மனமொருமிக்கை; ஒருமையெண்; மெய்ம்மை; ஒருபிறப்பு; இறையுணர்வு; வீடுபேறு.

மகளிரே - மகளிர் - பெண்டிர்

போல - ஓர்உவமவுருபு

பெருமையும்பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.

தன்னைத் - தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை.

ஒழுகின்ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

முழுப்பொருள் 
தன் கணவரை மட்டும் நினைத்து உடலாலும் உள்ளதாலும் கணவரிடம் மட்டும் உறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு கற்பு என்னும் சிறப்பு உண்டு. அவ்வொழுக்கத்தில் இருந்த தவறினால் அவர்களுடைய சிறப்பும் விலகிவிடும். அதுபோல் ஒவ்வொருவரும் தன்னை அறநெறிகளில் இருந்து வழுவாது நடந்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஒருவர் வாழ்வை ஒழுகினால் அவருக்கு பெருமை என்னும் மாட்சிமை உண்டு. ஒருதடவை தவறினாலும் அந்த மாட்சிமை விலகிவிடும். மறுபடியும் சேராது.

சீதையின் தூய்மையை அனுமன் கண்டு வியப்பதை கம்பர் காட்சிப்படலத்தில் மிகவும் அழகாகக் கூறுகிறார், படிக்கும் வகையிலேயே பொருள் விளங்கும் சிறப்போடு! அப்பாடல்.

தருமமே காத்ததோ? சனகன் நல் வினைக்
கருமமே காத்ததோ? கற்பின் காவலோ?
அருமையே! அருமையே! யார் இது ஆற்றுவார்?
ஒருமையே, எம்மனோர்க்கு, உரைக்கற்பாலதோ? (கம்ப.காட்சி.75)

நாலடியார் பாடலொன்றும், தம்மை ஒழுக்க நிலையில் நிறுத்தித் தற்காத்துக்கொள்வோரைப் பற்றி இவ்வாறு கூறுகிறது.

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான். (நாலடி 248)


சிறந்த நிலையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வோனும், முன் நிலையையுங் குலையச் செய்து தன்னைக் கீழ்நிலைக்கண் தாழ்த்திக் கொள்வோனும், தான் முன் நிறுத்திக்கொண்ட சி றந்த நிலையினும் மேன்மேல் உயர்ந்த நிலையில் தன்னை மேம்படுத்தி நிலை செய்து தன்னை அனைவரினும் தலைமையுடையோனாகச் செய்து கொள்வோனும், தானேயாவன்.

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
ஒருமை மகளிரே போல - கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத்தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போல; பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு - பெருமைக்குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டு ஒழுகுவானாயின் அவன்கண் உண்டாம். (பொருளின் தொழில், உவமையினும் வந்தது. கற்புண்டாதல் தோன்ற நின்றமையின், உம்மை எச்ச உம்மை. ஒழுகுதல் - மனம் மொழி மெய்களை ஒடுக்கி, ஒப்புரவு முதலிய செய்து போதல். இதனால், அஃது உளதாமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத் தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போலப் பெருமைக் குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக் கொண்டொழுகுவானாயின் அவன்கண் உண்டாம்.

மு.வரதராசனார் உரை
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.