Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்

குறள் 1082
நோக்கினாள்  நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள் 
நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்கினாள் -  பார்த்தாள், கவனித்தாள், விரும்பினாள்

நோக்கு - கண்; பார்வை; அழகு; கருத்து; அறிவு; பெருமை; விருப்பம்; கதி; விநோதக்கூத்துக்களுள்ஒன்று; ஒருவகைச்செய்யுளுறுப்பு; ஓர்உவமவுருபு.

எதிர் - வருங்காலம்; எதிரிடை; முன்; முன்னுள்ளது; முரண்; கைம்மாறு; இலக்கு; போர்.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.
 
தாக்கு - அடி; போர்; படை; வேகம்; பாதிக்கை; சாதனை; குறுந்தடி; இடம்; பெருக்கல்; நெல்வயல்; பற்று; வளமை; ஆணை; நிலவறை; மிகுசுமை; எதிர்க்கை; எதிரெழுகை.

தாக்குதல் - எதிர்த்தல்; மோதுதல்; முட்டுதல்; பாய்தல்; தீண்டுதல்; அடித்தல்; வெட்டுதல்; பற்றியிருத்தல்; எண்கூட்டிப்பெருக்கல்; குடித்தல்; சரிக்கட்டுதல்; உறைத்தல்; கடுமையாதல்; பழிவாங்குதல்; தலையிட்டுக்கொள்ளுதல்; பலித்தல்; பெருகுதல்; பாரமாதல்; நெளித்துப்போதல்.

அணங்கு - தீண்டிவருத்தும்தெய்வப்பெண்; தெய்வப்பெண் பத்திரகாளி தேவர்க்காடும்கூத்து; அழகு விருப்பம் மயக்கநோய்; அச்சம் வருத்தம் கொலை கொல்லிப்பாவை பெண் வடிவு

தானை - படை; ஆயுதப்பொது; ஆடை; மேடைத் திரைச்சீலை; முசுண்டி என்னும் ஆயுதம்.

கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை.

அன்னது - அன்ன - அத்தன்மையானவை; ஓர் அஃறிணைப் பன்மைக்குறிப்பு வினைமுற்று; ஓர்உவமஉருபு.

உடைத்து - உடைதல் - இருக்கும்


முழுப்பொருள்:
நான் அவளை நோக்கி பார்க்கும் பார்வைக்கு எதிராக அவள் வீசும் பார்வையானது, தான் ஒருத்தி மட்டுமே தீண்டி தாக்கும் சக்தி உடைய ஒரு தெய்வம், துணைக்கு ஒரு படையும் கொண்டு தாக்குவதற்கு ஒப்பானது.

பெண்ணின் பார்வைக்கு உரிய வலிமையை, மிக அருமையாக எடுத்து உரைக்கிறது இக்குறள். வீழ்ந்தவர்கள் அல்லது வீழ்த்தப்பட்டவர்கள் அதிகம் உண்டானதால் தான் என்னவோ, பெண்ணின் கண்கள் ஆயுதங்களுக்கு ஒப்பாக அடிக்கடி கூறப்படுகிறது (வேல் போன்ற விழிகள் ) .

ஒப்புமை
”நோக்குங்கால் நோக்கின் அணங்காக்கும்” (கலி.131.5)
“அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” (கம்ப.மிதிலைக்காட்சி 35)
“நோக்கிய நோக்கெனும்’ (கம்ப.மிதிலைக்காட்சி 36)

“தாக்கணங் காவ தெவன்கொல் அன்னாய்” (ஐங்குறு 23)
“தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டு” (சிலப்.14:160)
“மூப்புடை முதுமைய தாக்கணங்குடைய” (மணி 3:57)
“தாக்கணங் கனையவள் தனத்தில் தைத்தவே” (கம்ப.மிதிலைக்காட்சி.36)

பரிமேலழகர் உரை
(மானுட மாதராதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினானாய வருத்தம் கூறியது.) நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் - இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள் என் நோக்கிற்கு எதிர் நோக்குதல்; தாக்கு அணங்கு தானைக்கொண்டன்னது உடைத்து - தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு தாக்குதற்குத் தானையையும் கொண்டு வந்தாற் போலும் தன்மையை உடைத்து. (மேலும், 'அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்றமையான், இகரச்சுட்டு வருவிக்கப்பட்டது. எதிர் நோக்குதல்என்றமையின், அது குறிப்பு நோக்காயிற்று. வனப்பால் வருந்துதல் மேலும் குறிப்பு நோக்கால் வருந்துதல் கூறியவாறு. 'நோக்கினாள்' என்பதற்கு 'என்னால் நோக்கப்பட்டாள்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
இவ்வழகினையுடையவள் எனது நோக்கின் எதிர் நோக்குதல், தானே வருத்தவல்ல தெய்வம் அஞ்சாமல்வரும் தானையைக் கொண்டு வந்தது போலும். தானைக்கு உவமை நோக்கம். இது மெய்கண்டு வருந்துவான் கண் கண்டதனால் வருத்த மிக்கது கூறியது.

மு.வரதராசனார் உரை
நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.

என்னை தாக்கிவிட்டாய்....!!! (நன்றி: கவிப்புயல் இனியவன்)
நான் பார்த்த நொடியில்
பெண்ணே நீ என்னை
பார்த்தாயே - செத்து
பிழைத்தேனடி -நான் .....!!!

உன்
கண் கண்ணாக இருந்தால்
தப்பி இருப்பேன் - பார்வையோ
அணுமின் கதிர்போல் திரட்டி
என்னை தாக்கிவிட்டாய்....!!!

அன்பே உன் கண் என்ன ..?
சேனைப்படையா ...?
அத்தனையும் கொண்டு என்னை
தாக்கி விட்டாய் .....!!!

மலரினும் மெல்லிது காமம்

குறள் 1289 
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் 
செவ்வி தலைப்படு வார்.
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
மலர் பூ; தாமரை; ஒருபேரெண்; ஆயுதம்முதலியவற்றின்மேற்குமிழ்; வெண்பாவின்இறுதிச்சீர்வாய்பாடுகளுள்ஒன்று; மும்மலமுடையவர்.

இனும் -  இன்னும்

மலரினும் - மலரை விட.

மெல்லிது - மென்மைவாய்ந்தபொருள்; ஒல்லி.

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை, காதல் (புணர்ச்சி).

சிலர் - சிலபேர், மிக சிலர் மட்டுமே.

அதன் - அதனுடைய, It's   It's   It's  

செவ்வை - நேர்மை; மிகுதி; வழிமுதலியவற்றின்செப்பம்; சரியானநிலை
செவ்வை - cevvai   n. id. 1. [M. cevva.]Correctness, fitness, accuracy, straightness;நேர்மை. தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி(சிலப். வழக். 68). 2. Abundance; மிகுதி செவ்வையாய்க் கொடுத்தான். 3. Evenness, smoothness வழி முதலியவற்றின் செப்பம் அந்தவழி செவ்வையாகஉள்ளது. 4. Sound condition, as of mind, body,etc.; சரியான நிலை அவனுக்குத் தேகம் செவ்வையில்லை.  
செவ்வை - cevvai   s. evenness, straightness, correctness, uprightness, செம்மை; 2. cleanness, pureness, சுத்தம்.

செவ் - cev   adj. from. செவ்வை (used only before words beginning with வ or a vowel, before vowels வ் is doubled), same as செம் which see.

செவ்வி - நலனையும் பயனையும் அறிந்து; காலம்; ஏற்றசமயம்; காட்சி; அரும்பு; பக்குவம்; புதுமை; அழகு; சுவை; மணம்; தன்மை; தகுதி; சித்திரைநாள்.

தலைப்படுதல் - ஒன்றுகூடுதல்; எதிர்ப்படுதல்; மேற்கொள்ளுதல்; பெறுதல்; முன்னேறுதல்; தலைமையாதல்; புகுதல்; வழிப்படுதல்; தொடங்குதல்.

தலைப்படுவார் - செயல்படுவார்கள்.

ஒப்புமை
”ஐதே காமம்” (குறுந்:217:6)

எழுத்தாளர் திரு ஜெயமோகன் வலைபக்கத்தில் இருந்து (சுட்டியை சொடுக்கவும்)
காமத்தைக் குறித்து சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் ஒரு குறள்

மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படுவார்

மிக மென்மையான அகம் சார்ந்த விஷயம் காமம் என்பது. இயல்பிலேயே அப்படியா அல்லது மனிதன் தன் பண்பாட்டு வளர்ச்சிப்போக்கில் அப்படி உருவாக்கிக்கொண்டானா என்பதை உணர்வது கடினம் . ஆனால் அதைக்குறித்து போகிறபோக்கில் எதையும் சொல்லிவிடமுடியாதென்றே எண்ணுகிறேன். கோட்பாடுகள் வந்து போய்க்கொண்டே இருக்கும். அது என்றென்றும் அதற்கான நுண்ணிய மர்மத்துடன் தான் நீடிக்கும்.

காமம் என்றல்ல வாழ்க்கையின் எந்த ஒரு விஷயத்தையும் அதன் உச்சம் அதீதம் நோக்கிக் கொண்டுசெல்ல இயற்கை அனுமதிப்பதில்லை. இயற்கை எல்லாவற்றையும் அதற்கு இணையான எதிர் ஆற்றலால் சமப்படுத்தியே வைத்துள்ளது. அதீதமாக எது சென்றாலும் அந்த எதிர் ஆற்றலும் அதே அளவுக்கு அதீதமாகும். அது அழிவை உருவாக்கும்.

காமம் மனிதனுக்கு அளிக்கப்பட்ட இன்பம். அவனுடைய படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண். அவனை உயிர்த்துடிப்புடன் அது வைத்திருக்கிறது. ஆனால் அதன்பொருட்டு அவன் உறவுகளை இழந்தானென்றால், நுண்ணுணர்வுகளை இழந்தானென்றால், அறவுணர்ச்சியை இழந்தானென்றால், ஆரோக்கியத்தை அழித்துக்கொண்டானென்றால் காலப்போக்கில் காமத்தையும் இழந்துவிடுவான்.

ஆகவே காமத்தைப்பற்றி மட்டுமல்ல எல்லாவற்றைப் பற்றியும் நான் சொல்வதும் குறளின் உவமையே ‘அகலாது அணுகாது தீக்காய்தல்’

ஜெ

வெண்முரசு - நூல் ஒன்று – முதற்கனல் - 18`இல் இருந்து (ஜெயமோகன்) (சுட்டியை சொடுக்கவும்)
கங்கை சுழித்துச் சீறிவிலகும் ஒரு பாறையின்மேல் கட்டப்பட்ட குடிலில் அவளுடன் சந்தனு தங்கினான். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு உறுப்பாலும் காமத்தை அறிந்தான். குருகுலத்தவனே, நீருள்நீர் போல சேர்வதே உயர்காமம். நீரில் உள்ளன காமத்தின் விதிகள். நீரில் நிகழ்வன காமத்தின் எல்லைகள். மழைக்கால நதியும் கோடைகாலநதியும் பெண்ணே. குளிர்கால உறைவும் வெம்மை கரந்த வசந்தமும் பெண்ணே. மலர்சூடிச்செல்லும் ஓட்டமும் உள்ளொழுக்குகள் காலைக்கவ்வி இழுக்கும் சுழிப்பும் அவளே. அவளை முடிவில்லாத அலைகளையே புரளும் ஏடுகளெனக் கொண்ட நூலாக அறிந்துகொண்டிருந்தான்.

நீரின் மாயத்தை சொல்லிவிடும் சூதன் எங்குள்ளான்? மெருகேறிய மென்பரப்புகள், மின்னும் வளைவுகள், உயிரின் அலைப்பரப்புகள், ஆழம்குவிந்த சுழிகள், ஒசிந்த குழைவுகள், நுரைத்ததும்பல்கள், பாசிமணக்கும் பாறைப்பரப்புகள், துள்ளிச்சிரிக்கும் வெள்ளிமீன்கள், கண்களாக மட்டுமே தெரியும் ஆழத்தின் மாபெரும் மீன்கள்.. அவள் அவனை முழுமையாக தன்னுள் இழுத்துக்கொண்டாள். சந்தனுவின் மைந்தனே, நீராடிமுடிக்கத்தக்க நதியும் காமத்தால் தாண்டிச்செல்லத்தக்க பெண்ணும் பிரம்மன் அறியாதவை. உன் அடையாத காமத்தால் அவன் அடைந்த காமத்தை ஆயிரம்முறை பெரிதாக நீ அறியமாட்டாயா என்ன?

முழுப்பொருள்
மலர் என்றென்பது எல்லாவற்றினும் மென்மையானதாக கருதப்படுவது. ஆனால் அதை விட மென்மையானது காமம் என்கிறார் திருவள்ளுவர். காமத்தின் சிறப்பை உணர்த்துவதற்காகவே மலரை உவமையாக்குகிறார் திருவள்ளுவர். மிக மென்மையான அகம் சார்ந்த விஷயம் காமம் என்பது.

அத்தகைய காமம் விளைவிக்கும் பயன் எல்லோரும் அடைவதில்லையாம். காமத்தின் உச்சத்தை அடைபவர்களுக்கே அது கிட்டும். அப்படி காமத்தின் சிறப்பை மென்மையை அருமையை நுட்பத்தை அறிந்து செயல்படுபவர்கள் மிக சிலரே என்கிறார் திருவள்ளுவர்.

காமத்தின் உச்சத்தையும் பயனையும் அடைய வேண்டுமானால் குறிப்பும், வேட்கையும், நுகர்சியும், இன்பமும் ஒரு காலத்தின்கண்ணே ஒத்து (ஒரே நேரத்தில் ஒன்றாக) நுகரவேண்டும் இருவரும். அதற்கு ஏற்ற இடனும் காலமும் உபகரணங்களும் பெற்றுக் கூடி நுகர வேண்டும் என்றென்கிறார் திருவள்ளுவர். 

அத்தகைய காமத்தில் ஒருவர் சிறிது வேறுபட்டாலும் அதனுடைய பயனை அடைய அவர்கள் மாட்டார்கள். ஆகவே (பெரும்பாலும்) கணவன் துணைவியின் குறிப்பு அறிந்து புணர்ச்சியில் செயல்பட வேண்டும். அதாவாது தனது வேட்கையை காண்பித்து இன்பமுற்று துணைவியை பாதியில் விட்டுவிட கூடினால் காமத்தில் பயனை அவர்கள் பெற மாட்டார்கள். ஆகவே குறிப்பு கண்டு கூடலில் ஈடுபட வேண்டும். அதனை வேட்கையுடன் செயல் பட வேண்டும். உள்ளத்தின் உணர்வுகளைத்  தூண்டி(அகம் சார்ந்த விஷயம் காமம் என்று முன்பே கூறி குறிப்பிட்டிருந்த்தேன்) உச்சத்தை அடைய வேண்டும். மலரை நுகர்வதுப்போல மென்மையாக நுகர வேண்டும். அப்படி இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறிப்பு கண்டு ஒரு காலத்தின் கண் ஒத்து நுகர்ந்தால் (இருவரும் உச்சத்தை அடைந்தால்) அவர்கள் காமத்தின் பயனை அடைவர். அப்படி நுகர்வதே காமத்தின் உச்சம்.

காமத்தின் பயனாக ஊடல் தீரும் என்கிறார் திருவள்ளுவர். 

அதுமட்டும் இன்றி காமம் மனிதனுக்கு அளிக்கப்பட்ட இன்பம். அவனுடைய படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண். அவனை உயிர்த்துடிப்புடன் அது வைத்திருக்கிறது. ஆனால் அதன்பொருட்டு அவன் உறவுகளை இழந்தானென்றால், நுண்ணுணர்வுகளை இழந்தானென்றால், அறவுணர்ச்சியை இழந்தானென்றால், ஆரோக்கியத்தை அழித்துக்கொண்டானென்றால் காலப்போக்கில் காமத்தையும் இழந்துவிடுவான்.

குறிப்பு: இது கற்பியல் தொகுதியில் வரும் அதிகாரம் ஆகும். ஆதலால் ஒழுக்கத்தை முன் வைப்பதாக இருக்கிறது.

கவிஞர் இசை
மலரினும் மெல்லியது காமம். சிலரே அதன் அருமையும் நுட்பமும் அறிவர்.

‘மலரினும் மெல்லிது . . .’ அவ்வளவு நுட்பமானது என்பதாலேயே அது லாவகமாக ஒளிந்துகொள்கிறது. “ஒளிந்திருந்து மணம் வீசும் மலர் . . .” இந்த மணம் எங்கிருந்து வருகிறதென்று தெரியாமல் காட்டிற்குள் தேடியலைவது ஒரு அலாதியான அனுபவம் இல்லையா? 

வெளிப்படையானது எவ்வளவு பெரிதாயினும் அது அளவில் சிறியதே. ஒளிந்திருப்பது எவ்வளவு சிறிதாயினும் அது பெரிதினும் பெரிதே. 

‘மலரினும் மெல்லியது’ என்று உணர்ந்துகொண்ட மனம் பெண்களை நடுரோட்டில் கையைப் பிடித்து இழுக்காது.கட்டிவைத்து பெல்ட்டால் அடிக்காது. ஆபாசப் படம் எடுத்து மிரட்டாது. ஆசிட் வீசி எரிக்காது. சின்னஞ்சிறு குழந்தைகளை நாயைப்போலக் குதறி வைக்காது.

தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு ஷண்முகசுந்தரர் கூறிய விளக்கம்
புணர்ச்சி என்பது மிகவும் புனிதமானது. அதனால் தான் அது கோவிலின் கோபுரங்களில் கோலம் கொண்டு உள்ளது. 

காமம் என்பது வேருமென இரண்டு உடல்கள் சேர்வது அல்ல. துணையின் உடைய உள்ளத்தைத் தொட்டு உணர்வுகளை தூண்டி உச்சத்தை தொடுவது தான் உண்மையான காமம். ஆனால் ஒரு புள்ளி விபரம் சொல்கிறது காமத்தில் உச்சத்தை தொட்டவர்களின் சதவிகிதம் மிகவும் குறைவு. அதுவும் பெண்களின் சதவிகிதம் மிக மிக குறைவு என்று சொல்கிறது. 

காமம் என்பது மலரைவிட மென்மையானது. அதனுடைய சிறப்பை அறிந்தவர்கள் மிகவும் சிலரே என்கிறார் திருவள்ளுவர்

நன்றி: திரு ஷண்முகசுந்தரர் [Star Vijay தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு] (சுட்டியை சொடுக்கவும்)

In the episode of Koffee with Karan -4 ShowLink (Time 29:12 to 29:28 Splicd Link)
Karan: One thing men should know about women but dont? (பெண்களைப் பற்றி ஆண்கள் தெரிந்திருக்க வேண்டியது ஆனால் தெரியாது)
Vidya: That women like it, need it and want it as much as they do (பெண்கள் அதனை விரும்புவார்கள், அவர்களுக்கு அது தேவை, அவர்களுக்கு அது வேண்டும் - ஆண்களுக்கு எப்படியோ அதே அளவிற்கு)

குறட் கருத்து (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)

உலகெங்கும் ஆண்களும் பெண்களும் வாழ்கின்றார்
உண்மையில் வாழ்கின்றாரா
சிலர் மட்டும் வாழ்கின்றார் பலர் வாழவில்லையாம்
சிறப்பான செய்தி ஒன்றை
மலர் கொண்டு சொல்கிறார் மனம் கொண்ட வள்ளுவர்
மனத்திலே கொள்ள வேண்டும்
பலர் வாழ்வின் உண்மையைப் பளிச்செனச் சொல்கிறார்
பாடமாய்க் கொள்ள வேண்டும்

உடல் என்ற ஒன்றினை உணர்வோடு உள்ளதாய்
உணர்ந்தார்கள் வாழுகின்றார்
உளம் கொண்ட மங்கையர் உடல் வேண்டி நிற்பதை
உணராதார் வீழுகின்றார்
கடல் போன்ற காமத்தின் ஒரு துளி காணாதார்
கடல் போல அதிகம் உள்ளார்
கண்டவர் மிகச் சிலர் மிகச் சிலர் அவர் மட்டும்
காதலால் வெல்லுகின்றார்

ஒப்புமை:
ஐதே காமம் (குறுந்தொகை 217:6)

கவிதைகள்
முதல் முதலாக காமத்தை
அறிவியல் வகுப்புகளில்
எதிர்கொண்ட தருணம்
நினைவில் இருக்கிறது.
உடல் உறுப்புகள்,திரவங்கள்
பற்றிய தகவல்கள்,
வரைபடங்கள்...
பிறகு உளவியலும் பரிணாமவியலும் அளித்த விளக்கங்கள்.
பிராய்டு
டார்வின்...
மதங்களும் தத்துவங்களும் அளித்த வரையறைகள் ஏலவே கனக்க உண்டு.
ஒவ்வொன்றைப் படிக்கும்போதும்
நான் என் சன்னலைத் திறந்து
வெளியே பார்ப்பேன்.
சாத்தியமானால் ஒரு நடை செல்வேன்.
மரங்களையும்
மலர்களையும் காண்பேன்.
நூலகங்களுக்குச் சென்று
காவியங்களையும்
கவிதைகளையும் வாசிப்பேன்.
ஓவியங்களைப் பார்ப்பேன்.
இசை கேட்பேன்.
உயர்ந்த இடம் ஒன்றில் அமர்ந்துகொண்டு
திருவிழா ஒன்றைக் காண்பேன்.
எனக்கு நானே அப்போது சொல்லிக்கொள்வேன்.
காமம் உருவாக்கியதே 
இவை எல்லாம்.
என் பாடப்புத்தகங்கள்
சிறிய பார்வை கொண்டவை.
குறைந்த காட்சிகளைக் காட்டுபவை.
மானுடர் காமம் 
என்னைப்போல்
மலை மேல் நின்றுகொண்டு
எல்லாம் காண்பது.
மலரினுள் ஒளிந்துகொண்டு
கடவுளரையும்  உருவாக்குவது.
-- போகன் சங்கர்

பரிமேலழகர் உரை
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. காமம் மலரினும் மெல்லியது - காம இன்பம் மலரினும் மெல்லியதாயிருக்கும்; அதன் செவ்வி தலைப்படுவார் சிலர் - அங்ஙனம் மெல்லியதாதலை யறிந்து அதன் செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர். 

விளக்கம் 
(தொட்ட துணையானே மனச் செவ்வி அழிவதாய மலர் எல்லாவற்றினும் மெல்லியது என்பது விளக்கலின், உம்மை சிறப்பின்கண் வந்தது. குறிப்பும், வேட்கையும், நுகர்சியும், இன்பமும் ஒரு காலத்தின்கண்ணே ஒத்து நுகர்தற்குரியார் இருவர், அதற்கு ஏற்ற இடனும் காலமும் உபகரணங்களும் பெற்றுக் கூடி நுகர வேண்டுதலின், 'அதன் செவ்வி தலைப்படுவார் சிலர்' என்றும், அவற்றுள் யாதானும் ஒன்றனாற் சிறிது வேறுபடினும் வாடுதலின், 'மலரினும் மெல்லியது' என்றும் கூறினான். 'குறிப்பு ஒவ்வாமையின் யான் அது பெறுகின்றிலேன்' என்பதாம். தலைமகள் ஊடல் தீர்வது பயன்.)

மணக்குடவர் உரை
எல்லாவற்றினும் மெல்லிதாகிய பூவினும் மெல்லிதாயிருக்கும் காமம்: அதனது செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர். இது தலைமகன் புணர்ச்சிக் குறிப்புக்கண்டு பின் ஊடிக்கொள்ளலாம்: இப்பொழுது ஊடுவையாயின் இக்காமஞ் செவ்வி தப்புமென்று புணர்ச்சி வேட்கையால் தலைமகள் நெஞ்சொடு கூறியது.
சாலமன் பாப்பையா உரை
காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே.

ஒரு திரைப்பாடல் 
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
திரைப்படம்: நாடோடி மன்னன்

கொஞ்சிப்பேசும் கிளியே! -நல்
இன்பம் தரும் ஜோதியே!
மானே! மலரினும் மெல்லியது காதலே!
மகிழ்வோம் நாமே! புதுமை வாழ்விலே!

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். (குறள்)

`மலரைவிடக் காமம் மென்மையானது. அந்த உண்மையை அறிந்து காமத்தின் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலர்தான்.’

காமத்தை இந்தக் குறளைவிட நுட்பமாகச் சொல்லிவிட முடியாது.

பூக்கள் அரும்பாக, மொட்டாக இருக்கும் காலத்தைவிட அவை மலர்ந்திருக்கும் காலத்தில் விவரிக்க இயலா மென்மையுடன் இருக்கும். அதன் மென்மைக்கு அது மட்டுமே உவமை. காமம் இதையும்விட மென்மையானதோர் உணர்வு. தன் மகரந்தப் படுக்கையில் மயங்கிக்கிடக்கிற வண்டு, மூச்சு விடுவதற்காகத் தன் இதழ்களைத் தளர்வாக மூடிக்கொள்கிற மாலை நேரத்து தாமரைபோல, தன் சிறகை படபடத்து தாமரையின் இதழ்களைக் கிழிக்காத வண்டைப்போல, ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் காயப்படுத்தாத உணர்வே காமம்.

காமத்தைப்போலச் சரிசமமான பகிர்தல் வேறொன்றில்லை. `ஒருவர் மட்டுமே கொடுத்து ஒருவர் மட்டுமே பெற்று’ என்கிற ஓரவஞ்சனையெல்லாம் காமத்துக்குத் தெரியாது. உடல்கூறுபடி ஆணையும் பெண்ணையும் இயற்கையே அப்படித்தான் படைத்திருக்கிறது. நான், தான், ஆண் இவற்றையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு நம்மை நாம் அவதானித்தாலே இது புரிந்துவிடும்.

விண்கற்கள் விழுந்து; கடல் நீர் நிலத்துக்குள் புகுந்து; சூரியன் சுருங்கி; மாயன் காலண்டர் முடியும்போது என்று அறிவியலில் ஆரம்பித்து ஆன்மிகம் வரைக்கும் `உலகம் இப்போ அழிஞ்சுடும், அப்போ அழிஞ்சுடும்’ என்று ஆரூடம் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இப்படியெல்லாம் உலகம் அழியுமா என்பது தெரியவில்லை. ஆனால், மனிதன் மனதில் காமம் குறைய ஆரம்பித்தால், ஜனித்தலும் குறைந்து ஒரு காலகட்டத்தில் மனித இனம் நிச்சயம் அழிந்துவிடும்.

மனதுக்குப் பிடித்த காமத்தை அடையவே மனிதர்கள் உழைக்கிறார்கள்; ஜெயிக்கிறார்கள்; விதவிதமாய் உடுத்துகிறார்கள்; ஒன்றுமே செய்ய இயலாதபோது பிழைத்துக்கிடக்கவாவது பிரயத்தனப்படுகிறார்கள்.

பலரும் எட்ட முடியாத உயரங்களை எட்டுகிற ஒரு சிலரின் வாழ்க்கையை உற்று நோக்கினால், காதலும் காமமும் பொங்கிப் பிரவாகிக்கிற துணையொன்று அவர்களின் தோளோடு தோளாக ஒட்டி நின்றுகொண்டிருப்பது தெரியும்.

இங்கு காமம் என்றாலே அது பேசக்கூடாத விஷயம் போலவே நடந்துகொள்கிறார்கள். காதல் என்றால், `ஆஹா... அது எவ்ளோ புனிதமான உறவு’ என்று கொண்டாடுகிறார்கள். அவர்கள் வழிக்கே செல்வோம். `நீங்கள் கொண்டாடுகிற காதலை மட்டும்தான் உங்கள் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும். `உவ்வேக்’ என்கிற காமத்தை அனுபவிக்கவே கூடாது’ என்றால், ஒத்துக்கொள்வார்களா? முடியாதல்லவா... வாய் வார்த்தைகளால் தன்னை வெறுக்கிறவர்களைக்கூட அன்பு குழைத்த ஒரு முத்தத்துக்காக ஏங்க வைப்பது இது.

''சீக்கிரம் ஆத்துக்கு வந்திடுங்கோ. ஆம்பளைகளை நம்ப முடியாதுன்னு சொன்னாங்க!'' - சாந்தா தனஞ்ஜெயன்
கற்பு போலவே காமமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதுதான். ஆணுக்கு அது உடலிலிருந்து மனம் நோக்கிப் பாய்கிற உணர்வு. பெண்ணுக்கோ மனம் நிறைந்து வழிந்த பிறகே அவள் உடலுக்கான சாவிகளை உணர்வுகள் தேட ஆரம்பிக்கும். யதேச்சையாகக் கண்ணில்பட்ட அல்லது கண்ணில்பட வைத்த கிளிவேஜிலேயே தொபுக்கடீர் என்று விழுந்துவிடலாம் ஆணின் காமம். மனதுக்குள் நுழையாத ஆண் எத்தனை இன்ச் காட்டினாலும் `போங்கடா நீங்களும் உங்க............’ என்று கடந்துவிடும் பெண்ணின் காமம். அதனால்தான், காலங்காலமாக `காதல் வலைவிரித்து’ அதாவது, பெண்களை நம்ப வைத்து காமம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் சில ஆண்கள்.

காதலில் தோல்வியுற்றவர்களை இரக்கத்துடன் பார்க்கிற நம் சமூகம், காமத்தில் தோற்றவர்களை அவ்வளவு ஈர மனதுடன் அணுகுவதில்லை. தன் நம்பிக்கை பொய்த்துப்போய் நிற்கிற அவர்களுக்கு, நியாயப்படி நம்பிக்கை வார்த்தைகள் சொல்ல வேண்டிய சமூகம்தான் அவர்களுடைய ஒழுக்கத்தின் மீது கற்களை வீசிக்கொண்டிருக்கும். இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? காதலைவிட காமம் அப்பாவி. `இத்தனை மணிக்கு மேல் போன் செய்யாதே, வீட்டுப் பக்கம் வரவே வராதே’ என்று தனக்கான பாதுகாப்பில் காதல் படு உஷார். காமமோ, தன்னுடைய இணை காமத்தை `அவன் இருக்கான் எனக்கு/ அவ இருக்கா எனக்கு’ எனப் பரிபூரணமாக நம்பி தன்னையே ஒப்புவிக்கும்.


எழுத்தாளர் லதா என்பவர் கழிவறை இருக்கை என்ற ஒரு கட்டுரை தொகுப்பு புத்தகத்தை எழுதியுள்ளார். பொதுவாக கலவி (sex) பற்றியும், பெண்ணியம் பற்றியும் ஒரு புத்தகம். பொதுவெளியில் உடலுறவு/கலவி பற்றிப் பேசாத சமூகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு நல்ல நூல். அதில் இருந்து சில பத்திகள் கீழே (அத்தியாயம் - 7 இல் இருந்து)

காதலின் உச்சமாகக் காமம் அமைதல் வேண்டும். காதல் முதலில் தோன்றிப் பின்னர் அதுவே காமமாக மலர்தல் வேண்டும். ஆயினும், நம் சமுதாயத்தில், காமம் முதலில் நடைபெறுகிறது. நம்முடைய திருமண முறையும் இதையே பரிந்துரைக்கிறது. பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் திருமணங்களில், காமம், காதலுக்கு முன்னரே நடைபெறுகிறது. சில நேரங்களில் காதலே மலராமல் கூடப் போகிறது. ‘காதல் திருமணங்கள்’ என்று கருதப்படும் உறவுகளில், உடற்கவர்ச்சியே காதல் என்று கருதப்படுகிறது. காமம் குறித்த கல்வியை, அறிவோட்டத்தை ஒடுக்கியதன் மூலம், நாம் காதல் என்னும் உறவின் அர்த்தத்தையே கேவலப்படுத்திவிட்டோம்.

காமம் என்பது உடலுடன் மட்டுமே தொடர்பு கொண்டது என்னும் நம்பிக்கையில், உடலுறவில் ஈடுபடும் போதெல்லாம், மக்கள் பொதுவாக, தான் உறவுகொள்பவரிடம், மனரீதியாகவும், இதயபூர்வமாகவும் தொடர்பு கொள்வதில்லை. இந்த நிலையில், காமம் என்பது வெறும் உடலைத் திருப்தி படுத்தக்கூடிய, உடல் சார்ந்த செயலாகவே ஆகிறது. இந்த அற்பக் காரணத்தை வைத்துக்கொண்டு, அந்த உறவு எத்தனைக் காலம் நீடிக்கும்? அடுத்த ஓர் உடல் ஒருவரைக் கவரும்வரை? அடுத்தவரோடு உடலுறவு கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை? 

நம் இணையருடன் தேவையான மனரீதியான தொடர்பு, நெருக்கம் ஏற்படாத இடத்தில் அவரும் இன்பம் அடைவது குறித்து  நாம் கவலைப்படுவதில்லை. அந்த உடலுக்கு, அதைச் சார்ந்த உணர்வுகளுக்கு நாம் மரியாதை தருவது இல்லை. மனம் ஒன்றுபட்டு இருவர் உடலுறவில் ஈடுபடும்போது, அது எந்த அளவிற்கு உள்ளும் புறமும் இன்புறும் என்று நாம் அறிவதில்லை. அடுத்தவரின் மகிழ்ச்சியைப் பற்றி நாம் கவலைப்பட்டாலும், அவர் எதனால் மகிழ்வடைவார் என்று உணராதவராய் உள்ளோம். எல்லாவற்றுக்கும் மேலாய், நம் நரம்புகளில் ஏறிய உணர்வு அழுத்தத்தை விடுவிப்பதற்கான அவசர நிலையில் உள்ளோம்.

புணர்ச்சிக்கு முன்னர் உறவுகொள்ளப்போகும் நபரைத் தயார் செய்யும் ‘முன் விளையாட்டு’ எனப்படும் வகையை அறிந்தவராகவே ஒருவர் இருந்தாலும், அந்தச் செயலை எந்திரகதியில் செய்துவிட்டு அதனால் அந்தப்பெண் கிளர்ச்சி அடைவாள் என்று எண்ணுகின்றனர்.  ஒருவரது காதல், மோகம், மற்றும் உறவுகொள்ளப்போகும் பெண்ணின் உடலின் மீதான மரியாதை ஆகியவற்றை  ‘முன் விளையாட்டு’ தூண்டும் என்பதை அறியாது இருக்கின்றனர். நாம் சோகமாகவோ அல்லது துக்கத்திலோ இருக்கும்போது, வேறொருவர், நம் கரங்களைப் பற்றுவதாலோ, அல்லது தோள்களில் ஆதரவாக அணைப்பதாலோ, நூறு வார்த்தைகளாலும் விளக்க முடியாத அளவிற்கான மன அமைதியை அடைகிறோம். சொற்கள் வெறும் சொற்களே; தொடுதல் நமக்குள் ஒரு மின்னலையைக் கடத்த வல்லது. எல்லா மனநிலையையும் பொய்யாக ஏற்படுத்த முடியாது என்று நாம் அறிதல் வேண்டும். மறைக்கப்பட இயலாத சில உண்மைகள் எப்போதும் உள்ளன.

(அத்தியாயம் 8)
காமம் காதலின் உச்சத்தின் வெளிப்பாடாக இருந்தால்தான் அது  காமத்திற்கு அழகும் கூட.  காமம் என்பது கரைபுரண்டோடும் காதலின் விளைவு; அதுவே காதலின் உச்சகட்ட வெளிப்பாடு. எடுத்துக்காட்டாக, ஒரு தாய், தான் கருவுற்றதிலிருந்தே தன் குழந்தையை நேசிக்கத் தொடங்கிவிடுகிறாள். சில நேரங்களில் அவள் தன் அன்பை மிக மென்மையாகவும், சில நேரங்களில் அழுத்தமான முறையில் முத்தங்களின் மூலமாகவும் தழுவுவதன் மூலமாகவும் வெளிப்படுத்துகிறாள். இந்த மெல்லிய அல்லது அழுத்தமான முனைவு, அவளுள்ளத்தில் அன்பு ஓடும் ஆழத்தைப் பொறுத்தது. காமம் என்பதும், இதயத்துள் கரைகடந்தோடும் காதலின் வெளிப்பாடே; இந்த வேகம், நாம் ஒரு குறிப்பிட்ட கணத்தில் எவ்வாறு உணர்கிறோமோ, அப்போக்கிலேயே வெளிப்படுகிறது. அந்த வேகம் அதிகரிக்கும்போது (நாம் அனைவரும் உடலியல் ரீதியாகத் தொடர்புடையவராக இருப்பதால், இது இயல்பாகவே, சாத்தியப்படுகிறது), அது காமத்தில் வந்து முடிகிறது. இதன் காரணமாகவே, பாலுறவு கொள்ளும் செயலைக் “காதல் புரிகிறோம்” (Love Making) என்கிறோம், மாற்றாக “காமம் புரிகிறோம்”  (Lust Making) என்று சொல்வதில்லை. காதல் தன் நிலையிலிருந்து திரிந்து, உடல்சார்ந்து காமமாக வளர்கிறது என்ற இந்தக் காரணத்தினாலேயே, இதைக் ‘காதல் மலரும் நிலை” என்கிறோம்.

(அத்தியாயம் 9)
திருமணம் என்பது நம் வசதிக்காக, நம் சமுதாயத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முறை. அந்த உறவு வெற்றியடைய நாம் முயன்றுகொண்டே இருத்தல் வேண்டும். 
இரண்டு இதயங்களுக்கிடையே ஆழமான நேசம் இருக்கும் போது, உடலுறவைவிட, ஓர் அழுத்தமான தழுவலோ அல்லது அன்பார்ந்த முத்தமோ பெருத்த உற்சாகத்தைத் தருவதாக அமையும் என்பது நம்மில் எத்தனைபேர் உணர்ந்துள்ளோம்? இரண்டு இதயங்கள் சேராதபோது, அங்கே எத்தகைய செயலும் இன்பத்தைத் தராது.

(அத்தியாயம் 19)
உண்மை எதுவாகினும், பெண்ணின் பிறப்புறுப்பு துவாரமானது, ஆண்கள் தத்தம் விந்துவைக் கழிக்க அமரும் ‘கழிவறை இருக்கை’ ஆகவே உபயோகப்படுத்தப் படுகிறது.

இணையர்கள் தங்களுக்கிடையேயான பாலுறவில் நிறைவைப் பெற, சில யுக்திகளை கையாளலாம்: 
1. ​பெண்கள் தங்கள் மனத்தடையை மெல்ல மெல்ல அகற்றி, தங்கள் விருப்பு, வெறுப்புகள் குறித்து, வெளிப்படையாகப் பேசுதல் வேண்டும்.  
2. ​அத்தகைய நிலையில், பெண்கள் தங்கள் மனத்தடையை அகற்றி வரும்வரை, ஆண்கள் பொறுமையைக் காத்தல் அவசியம்.
3. ​இருவரின் ஒருமித்த ஈடுபாடே இன்பத்தை அடையச் செய்யும் என்பதை உணர்தல் வேண்டும். அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுதலும் அவசியம். 
4. ​இருவரும், தங்களுக்கிடையே விருப்பு வெறுப்புகளைக் குறித்துப் பகிர்ந்து கொள்வதில் பொறுமையையும், விழைவையும் காட்டுதல் அவசியம். 

காமம் என்பது பகிர்ந்து கொள்ளும் செயலே அன்றி   அது பெண்களிடமிருந்து பறிக்கப்பட வேண்டிய பொருள் இல்லை என்பதை ஆண்கள் உணர்தல் அவசியம்.  இதை உணர்ந்தால் மட்டுமே அவன் பெண்ணைக் கவர இயலும்; இல்லையெனில், விரைவில், அவள், தனக்குத் தலைவலி என்று தொடங்கி, உடலுறவிலிருந்து விலக விழையும் மனப்பான்மையைக் காண நேரிடும். காலம் கடக்கும்போது, பெண் தன்னுடைய வயதை ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு, உடலுறவைத் தவிர்ப்பாள். அவள், தான் தன் இளமையைக் கடந்துவிட்டதாகவும், சக்தியற்று இருப்பதாகவும் கூறத்தொடங்குவாள். இது அந்த ஆணுக்கு இதயத்தை நொறுக்கும் விளைவை ஏற்படுத்தும்.


பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

குறள்  475 
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் 
சால மிகுத்துப் பெயின்
[பொருட்பால், அரசியல், வலியறிதல்]

பொருள் 
பீலி - மயில்தோகை; மயில்; சிற்றாலவட்டம்; வெண்குடை; பொன்; மகளிரிடும்கால்விரலணி; சிறுசின்னம்; வாத்தியப்பொது; பெருஞ்சவளம்; மலை; மதில்; நத்தைஓடு; பனங்குருத்து; நீர்பாய்தொட்டி; பந்தயமுறி. 

சாகாடு - வண்டி; வணடியுருளை; உரோகிணிநாள்
அச்சு -  வண்டியின் அச்சாணி ; அடையாளம்; உயிரெழுத்து வண்டியச்சு; எந்திரவச்சு; கட்டளைக்கருவி; உடம்பு வலிமை அச்சம் துன்பம்

பண்டம்
பொருள்; பாண்டம்முதலியன; தின்பண்டம்; பயன்; பொன்; நிதி; ஆடுமாடுகள்; வயிறு; உடல்; உண்மை; பழம்.

சால - மிகவும் 
மிகுத்துப் - மிகு-த்தல் - miku-   11 v. tr. Caus. ofமிகு¹-. [K. migisu.] 1. To augment, makelarge; அதிகப்படுத்துதல். சால மிகுத்துப் பெயின்(குறள், 475). 2. To excel, surpass; விஞ்சுதல்.3. To increase; பெருக்குதல். 4. To regard withpride; பெருமையாகக் கருதுதல். இவ்வாறு செய்தேமென்று தன்னை மிகுத்ததுவும் (புறநா. 77, உரை). 5.See மிகுத்து-.

பெயின் - பெய்தல் - மேல்நின்றுபொழிதல்; வார்த்தல்; இடுதல்; எறிந்துபோடுதல்; இடைச்செருகுதல்; கொடுத்தல்; அமைத்தல்; பரப்புதல்; புகலிடுதல்; எழுதுதல்; அணிதல்; பயன்படுத்தல்; கட்டுதல்; சிறுநீர்முதலியனஒழுகவிடுதல்; தூவுதல்; பங்கிடுதல்; செறித்தல்.

முழுப்பொருள்
மயிலிறகு என்பது மிகவும் எடை குறைவான பொருள் தான். இது என்ன செய்து விட போகின்றது என்று, அதை வண்டியின் மேல் அளவுக்கு அதிகமாக ஏற்றினால், வண்டியின் அச்சாணி முறிந்து விடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதனால் மயிலிறகு என்பதனால் அதனை குறைத்து இடைப்போடக்கூடாது. 

இனிமையான ஒன்று தானே அல்லது சுலபான ஒன்று தானே, என்று நாம் எதிலும்  அளவுக்கு அதிகமாக லயித்து விட கூடாது. அது நம்மை வீழ்த்தும் அளவிற்கு வலிமையானதாக மாறக் கூடும், என்பதற்கு ஒப்புமையாக இக்குறளை கருதலாம் .

இதனை உடல் ஆரோக்கியம், உறவுகள் என்று பலவற்றிற்கு பொருத்தி பார்க்கலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன் நல்ல ஒரு தொழில்நுட்பம். ஆனால் அதில் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் செலவு செய்தால் நாம் வாழ்வில் பெரும் பகுதியை வீண் அடிக்கிறோம். அது நமது வேலையை, உறவை பாதிக்கும் ஏனெனில் நமக்கு கவனச்சிதறல், தூக்கமின்மை, மனச்சோர்வு, (Facebook / Instagram இருப்பதை கண்டு பிறருடன் தொடர்ந்து ஓப்பிட்டுப்பார்ததால்) மனநிறைவின்மை போன்ற பல பிரச்சனைகள் வரக்கூடும். 

உதாரணமாக 1) சொன்னால் புற்றுநோய் (Cancer) போன்ற நோய்கள் ஒரு பெரிய கதிர்வீச்சால் வருவதைக்காட்டிலும் ஒரு சிறிய அளவு கதிர்வீச்சினை பல ஆண்டுகாலம் உடம்பில் பெற்றதால் வர வாய்ப்புகள் அதிகம். ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டபின்பு அந்த அணுகுண்டு தாக்குதலால் புற்றுநோய் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவே. ஆனால் பல இடங்களில் மெல்லிய கதிர்வீச்சுகளால் புற்றுநோய் பெற்றவர்கள் மிக அதிகம். இது கதிர்வீச்சு என்று அல்ல ஒரு சிறிய கெட்டப் பழக்கம் பல ஆண்டுகாலம் செய்தால் அதனுடைய தீவினை நம்மை அழிக்கும். 

உதாரணமாக 2) நீங்களும் உங்கள் நண்பர் ஒருவரும் எப்பொழுதும் கேலியும் கிண்டலுமாகப் பேசிக் கொள்வது வழக்கம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு நாள் அப்படி ஏதோ ஒன்று சொல்லி அவரைக் கிண்டல் செய்கிறீர்கள். அவருக்கு உடனே சர்ரென்று கோபம் வந்து விடுகிறது. உங்களைக் கன்னா பின்னாவென்று திட்டி விடுகிறார். 

நீங்கள் யோசிக்கிறீர்கள், “நாம் எப்போதும் இப்படித் தானே பேசிக் கொள்வோம்? இன்று என்ன ஆயிற்று? அதுவும் இன்று நாம் ஒன்றும் பெரியதாகவே சொல்லவில்லையே? இதைவிட மோசமாகச் சில நாள் பேசிருக்கிறோமே?” அன்று அது அளவை மீறிப் போய் விட்டது. அன்று பேசியது மட்டும் காரணமல்ல. 

இதுநாள் வரை பேசியதெல்லாம் சேர்ந்து அவர் மனதைக் காயப்படுத்தி விட்டது!இதுநாள் வரை நட்பை வளர்ப்பதற்கு உபயோகமாக இருந்த அந்தக் கிண்டல் இன்று நட்பை முறிக்கும் அளவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது. அந்த அளவு எப்போது மீறுகிறது அல்லது மீறப்படுகிறது என்பது நாம் உன்னிப்பாகக் கவனிக்காவிட்டால் தெரியாது.

அந்த நிலையை அல்லது எல்லையை நாம் ஒரு விளிம்பு என்றோ, வரையரை என்றோ, உடையுநிலை (Breaking point) என்றோ குறிப்பிடலாம்.

இது கணவன் மனைவி உறவு, சகோதரர்கள் உறவு என்று எல்லாவற்றிலும் பொருந்தும். நாம் மற்றொருவரை தொடர்ந்து மட்டம் தட்டினாலோ அல்லது குறைக் கண்டுபிடித்துக்கொண்டு சதா சர்வகாலமும் சொல்லிக்கொண்டு இருந்தாலோ அது அக்கறையின்பால் இருப்பினும் அது பிறருக்கு எரிச்சலை உண்டாக்கும். ஒரு கட்டத்தில் எதிராளி கத்துவார். உறவில் விரிசல் விழும்.

அலுவகத்தில், நம்மை நமது மேலாளரோ அல்லது குழுத் தலைவரோ நம்மை நுண் மேலாண்மை செய்தால் (micro-management) நமக்கு எரிச்சல் வரும். ஏனெனில் அளவுக்கு மிஞ்சிய எதுவும் நல்லதுக்கு அல்ல. அது ஆக்கத்திற்கு வழி வகுக்காது. கண்டிப்பாக செயலூக்கம் /effective/ productive-ஆக இருக்காது. நாம் எல்லோரும் அதுப்போல் சிலரை பல இடங்களில் காணலாம். 

கடந்த குறளுக்கு மேற்கோளாகக் காட்டப்பட்ட பழமொழி நானூறுபாடலின் முழுவடிவம் இங்கே! முதல் இரண்டு வரிகள் சென்ற குறளுக்குப் பொருந்தியதைப்போல, இறுதி இரண்டு அடிகள் இக்குறளுக்குப் பொருந்தி வருகின்றன.
ஒன்னார் அட நின்ற போழ்தின், ஒரு மகன்
தன்னை எனைத்தும் வியவற்க! துன்னினார்
நன்மை இலராய்விடினும், நனி பலர் ஆம்
பன்மையின் பாடு உடையது இல்.

சூழ்ந்த பகைவர் வீரத்தில் நன்றிலாராயினும், அவர்கள் பலராயிருப்பதைவிட வலிமையொன்றும் இல்லை என்று சொல்லும் இப்பாடலின் வரிகள், இக்குறளின் கருத்தை ஒட்டியதே.

அல்லது பரிமேலழகர் கூறுவது போல். பகைவரின் வலிமை குறித்து குறைவாக இடை போட கூடாது என்பதற்கு ஒப்புமையாகவும் கருதலாம்.

எதிரி நாட்டுப்படையினர் தனி நபர் பலத்தில் குறைவாக இருப்பினும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தால், அந்த எண்ணிக்கையே மிகுந்த பலத்தை தரும். அதனால் தான் என்னவோ உலக நாடுகள் இந்தியா, சீனா போன்ற நாடுகளை தேவையில்லாமல் பகைத்துக்கொள்வதில்லை. இன்று வளர்ந்துவரும் நாடு என்றாலும், தங்களின் மக்கள் தொகை பலத்தாலும் மன உந்துதலாம் காலப்போக்கில் மிக விரைவாக இன்னும் சில காலத்தில் வளர்ந்த நாடுகளுக்கு இனையாக இந்தியா சீனா ஆகிய நாடுகள் வளர்ந்துவிட வாய்ப்புகள் பிரகாசாமக உள்ளன எனலாம்.

பரிமேலழகர் உரை 
பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - பீலியேற்றிய சகடமும் அச்சு முரியும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின். (உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயு மன்றிப் பீலியது நொய்மைச் சிறப்பும் தோன்ற நின்றது. 'இறும்' என்னுஞ் சினைவினை முதல்மேல் நின்றது. 'எளியர்' என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியும் , என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். இதனை 'நுவலா நுவற்சி' என்பாரும், 'ஒட்டு' என்பாரும்உளர். ஒருவன் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனால் மாற்றான் வலியும் அவன் துணை வலியும் அறியா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

இக்குறளின் பொருளை ஒற்று வரும் வேறு சில பலமொழிகள் 
1. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு .
2. சிறு துளி பேரு வெள்ளம்.

மணக்குடவர் உரை
பீலி யேற்றிய சகடமும் அச்சுமுறியும்; அப்பீலியை மிகவும் அளவின்றியேற்றின். இஃது அரண் மிகுதல் நன்றென்றிருப்பார்க்குப் பகைமிகின் அரண் நில்லாதென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

சாலமன் பாப்பையா உரை
மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

Thirukkural - Management - Managing Stress - Stress Tolerance
Everyone has a limited capacity to withstand  stressful events. That capacity is called the threshold limit. Even a  small amount of pressure beyond the withstanding capacity of a person will break him. Valluvar compares, in Kural 475, stress in people to the weight bearing capacity a vehicle.

A peacock’s feather can break  the axle-tree
Of an over-loaded  cart.

If a vehicle is loaded just with peacock feathers, any excess weight will break the axle of that vehicle. So, even small things in repeated doses create stress and break the person. Stress is the result of accumulation  of little things over a long period. Those little things will becomea big thing one day and will break you. Lead a life of balance or moderation.

Anything excess, both positive and negative, is dangerous.







கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

குறள் 279
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன 
வினைபடு பாலால் கொளல்.
[அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கணை - திரட்சி; அம்பு; அம்பின்அலகு; பூரநாள்; வளைதடி, காம்பு; மூங்கில்; சிவிகையின்வளைந்தகொம்பு; கரும்பு; திப்பிலி; ஒலி; ஒருநோய்

கணை - தோற்றத்தில் / வடிவில் நேராக இருக்கும் அம்பு.

கொடிது  - கொடியது. தீங்கு விளைவிப்பது, கொடுமையானது

யாழ் - பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டியாழ் என்னும் நால்வகை நரம்புக்கருவி; மிதுனராசி; அசுவினிநாள்; திருவாதிரைநாள்; பண்; ஆந்தை.

கோடு -  வளைவு; நடுநிலைநீங்குகை; யானையின்தந்தம்; விலங்குகளின்கொம்பு; ஊதுகொம்பு; நீர்வீசுங்கொம்பு; மரக்கொம்பு; யாழ்த்தண்டு; 'கெ', 'கே'முதலிவற்றின்தலைப்பிலுள்ளகொம்புக்குறியீடு; பிறைமதி; சங்கு; குலை; மயிர்முடி; மலையுச்சி; மலை; மேட்டுநிலம்; வரி; ஆட்டம்முதலியவற்றிற்குவகுத்தஇடம்; நீர்க்கரை; குளம்; காலவட்டம்; வரம்பு; ஆடைக்கரை; முனை; பக்கம்; அரணிருக்கை; கொடுமை; நீதிமன்றம்

யாழ்கோடு - யாழ் என்னும் இசைக் கருவி. இதன் கழுத்து வளைந்தது.

செவ்வை - நேர்மை; மிகுதி; வழிமுதலியவற்றின்செப்பம்; சரியானநிலை
செவ்வை - cevvai   n. id. 1. [M. cevva.]Correctness, fitness, accuracy, straightness;நேர்மை. தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி(சிலப். வழக். 68). 2. Abundance; மிகுதி செவ்வையாய்க் கொடுத்தான். 3. Evenness, smoothness வழி முதலியவற்றின் செப்பம் அந்தவழி செவ்வையாகஉள்ளது. 4. Sound condition, as of mind, body,etc.; சரியான நிலை அவனுக்குத் தேகம் செவ்வையில்லை.  
செவ்வை - cevvai   s. evenness, straightness, correctness, uprightness, செம்மை; 2. cleanness, pureness, சுத்தம்.

செவ் - cev   adj. from. செவ்வை (used only before words beginning with வ or a vowel, before vowels வ் is doubled), same as செம் which see.

செவ்விது - நேரானது; நன்று.
செவ்விது - இனிமையானது.

ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.
அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

ஆங்கன்ன - ஆதலால்.

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

படு - கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை.

படு - (வி)படுத்துக்கொள்; விழு.

பால் - குழவி, குட்டிமுதலியவற்றை ஊட்டத்தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான நீர்மப்பொருள்; பிணத்தை அடக்கம் பண்ணின மறுநாள் அவ்விடத்திற் பாலும் நவதானியமும் சேர்த்துத் தெளிக்கும் சடங்கு; மரம் முதலியவற்றிலிருந்து வடியும் நீர்மப்பொருள்; வெண்மை; சாறு; பகுதி; அம்மை முதலியவற்றிலிருந்து கசியும்சீழ்; பிரித்துக்கொடுக்கை; பாதி; பக்கம்; வரிசை; குலம்; திக்கு; குடம்; குணம்; உரிமை; இயல்பு; ஊழ்; தகுதி; ஐம்பாற்பிரிவு; ஒருமை பன்மை என்ற இருவகைப் பாகுபாடு; அகத்திணைபுறத்திணை என்ற பாகுபாடு; இடையர்குறும்பர்களின்வகை.

ஆல் -  அகற்சட்டி; மரவகை; நீர் வெள்ளம் கார்த்திகை நஞ்சு ஆமெனல்; வியப்பு இரக்கம் தேற்றம் இவற்றைக் குறிக்கும் இடைச்சொல்; ஓர்அசைநிலை; மூன்றாம்வேற்றுமையுருபு; தொழிற்பெயர்விகுதி; எதிர்மறை வியங்கோள்விகுதி; எதிர்கால வினையெச்சவிகுதி.

படுபாலால் - செய்யும் பாங்கால் (செய்யும் செயலில் இருந்து).

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

முழுப்பொருள்
வடிவில் அம்பு நேராக இருப்பினும் செயலால் அம்பு தீங்கு விளைவிப்பது, கொடியது. கழுத்தில் வளைந்தது யாழ் இருப்பினும் அது தரும் நாதம் இனிமையானது. 

ஆகவே ஒருவரது செயல் அவருடைய செயலின்வடிவத்தாலும் புறத்தோற்றத்தாலும் கூற இயலாது. ஆகவே ஒருவரை புறத்தோற்றத்தாலும் அல்லது அவர் வகிக்கும் பதவியாலும் எடைப் போடக்கூடாது. 

ஒருவரை அவர் செய்யும் செயல் கொண்டே  (செயலை உண்மையாக எவ்வாறு செய்கிறார் என்று ஆராய்ந்து) அறிய வேண்டும். அதுவே அறமாகும். அவ்வாறு ஒருவர் ஒழுக்கசீலரா இல்லையா என்று அறிய வேண்டும்.

சிலர் சொல்லுவர், நான் அம்பை போல் நேர் ஆக இருப்பேன் என்று. அதற்கென்று அம்பைப் போன்று வார்த்தையால் குத்தவது நியாயமா ? இல்லை. ஒருவர் அம்பைப் போன்று இருப்பதைக் காட்டிலும் ஒரு கொடியைப் போன்று வளைந்துகொடுத்து பிறரை அன்பால் தழுவி வாழ்வதே சிறந்தது.
 
ஆக மொத்தம் நாம் ஒரு உதாரணத்தை மனதில் எடுத்துக்கொண்டால்  அதன் புறத் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதன் செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.

பரிமேலழகர் உரை
கணை கொடிது யாழ் கோடு செவ்விது - அம்பு வடிவால் செவ்விதாயினும், செயலால் கொடிது: யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலால் செவ்விது; ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல் - அவ்வகையே தவம் செய்வோரையும் கொடியர் செவ்வியர் என்பது வடிவால் கொள்ளாது அவர் செயல்பட கூற்றானே அறிந்து கொள்க. 
விளக்கம்
(கணைக்குச் செயல் கொலை, யாழுக்குச் செயல் இசையால் இன்பம் பயத்தல். அவ்வகையே செயல் பாவமாயின் கொடியர் எனவும், அறமாயின் செவ்வியர் எனவுங் கொள்க என்பதாம். இதனால் அவரை அறிவும் ஆறு கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
செவ்விய கணை கொடுமையைச் செய்யும்; கோடியயாழ் செவ்வையைச் செய்யும்; அதுபோல யாவரையும் வடிவுகண்டறியாது; அவரவர் செய்யும் வினையின் பகுதியாலே யறிந்துகொள்க.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: கணை கொடிது -அம்பு (உருவத்தால் நேரியதாயினும் செயலால்) கொடியது. யாழ்கோடு செவ்விது - யாழின் கோடு (உருவத்தால் கோடிய தாயினும் செயலால்) நேரியது ; ஆங்கு அன்ன - அவ்வாறு போல, வினை படு பாலால் கொள்ளல் -(ஒவ்வொருவரையும் அவரவர்) வினைகள் படும் பகுதியால் கொள்க.

அகலம்: கொள்ளல் என்பது ளகர வொற்றுக் கெட்டு நின்றது. நேரியது‡ நல்லது. கோடு-கொம்பு. அஃதாவது, யாழின் நரம்பின் குச்சுகள் செருகப் பட்டிருக்கும் தலைப் பாகம்.

கருத்து: தீய வினையுடையாரைத் தீய ரென்றும், தூய வினையுடையாரைத் தூய ரென்றும் அவரவர் வினைகளை நோக்கி ஒவ்வொருரையுங் கொள்க.

English Meaning - As I taught a kid - Rajesh
An arrow may be straight representing straight-forwardness /honesty/ blunt-speech. But an arrow would hurt any living organism. Whereas a curved musical instrument link Yaazh/lyre might appear bent/crooked. But musical instrument Yaazh plays sweet music for everyone. So, one should not value something/someone by his or her appearance. Rather one should value a person by his/her impact or work. Instead of being an arrow. One can be even like a climber plant climbing on trees

Questions that I ask to the kid
An arrow is straight? Can we desire to be like that? If not why?

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல்

குறள் 1274
முகைமொக்குள்  உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
முகை - அரும்பு; மொட்டு; குகை; கூட்டம்; மிடா

மொக்கு - பூமொட்டு; சீலைகளில் செய்யும் மொட்டு வேலைப்பாடு; தரையிலிடும் பூக்கோலம்; குத்துவிளக்கின் தகழி; மரக்கணு; காண்க:மொக்கை.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.

நாற்றம் - மணம்; மூக்கால்அறியும்புலனறிவு; தீநாற்றம்; கள்; தொடர்பு; தோற்றம்.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயது முதல் ஏழுவயதுவரையுள்ள பருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு.

மொக்கு - பூமொட்டு; சீலைகளில் செய்யும் மொட்டு வேலைப்பாடு; தரையிலிடும் பூக்கோலம்; குத்துவிளக்கின் தகழி; மரக்கணு; காண்க:மொக்கை.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை

உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்புவினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக் குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

முழுப்பொருள்
மலர் மொட்டுக்குள், எவ்வாறு மனம் பொதிந்து (இன்னும் வெளிப்படாமல்) உள்ளதோ, அதே போன்று பாவையின் புன்முறுவலில் (காதலனை நோக்கி), ஏதோ ஒரு புலப்படாது ஒன்று ஒளிந்து உள்ளது. 

மொட்டாக இருக்கும் பொழுது நாம் முகர்ந்தால் மலரின் வாசம் பெரும்பாலும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் மிக சிறிய அளவிலேயே. அதுபோலத்தான் பாவையின் புன்முறுவலில் உள்ள அன்பினை நாம் முழுவதுமாக அறிந்துக்கொள்ள முடியாது. காதல் மலர மலர அதனை அறியலாம். 

ஒப்புமை
”முள்நுனை தோன்றாமை முறுவல்கொண் டடக்கித்தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள்” (கலித் 142:7-8)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல் - முகையது முகிழ்ப்பினுளதாய்ப்புறத்துப் புலனாகாத நாற்றம் போல; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - நின் பேதை என்னோடு நகக் கருதும் நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்பு உண்டு. (முகிழ்ப்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல். நகை - புணர்ச்சி இன்பத்தான் நிகழ்வது.).

மணக்குடவர் உரை
மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போலப் பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோ ரின்பம் உண்டு. இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகைசெய்து சேட்படுத்திய போது இவள் குறிப்பு நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.

சாலமன் பாப்பையா உரை
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

குறள் 60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
[அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்]

பொருள்
மங்கலம் - திருமணம்; ஆக்கம்; பொலிவு; நற்செயல்; நன்மை; தாலி; தருமம்; சிறப்பு; வாழ்த்து; காண்க:மங்கலவழக்கு; எண்வகைமங்கலம்; சேகரிப்பு; தகனபலி; சிலஊர்ப்பெயர்களின்பின்இணைக்கப்படும்துணைச்சொல்.

என்ப - என்பது யாததெனின், என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

மனை - வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய்.

மாட்சி - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு.

மனைமாட்சி - இல்லமானது பெருமையும் வளங்களும் நிரம்பபெற்றதாம். 

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அதன் - அதனுடைய, It's   It's   It's  

மற்றதன் - அதுமட்டுமல்லாமல் அத்தகு குடும்பத்தின்

நன் - நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.
 
கலம் - உண்கலம்; பாண்டம்; குப்பி; கப்பல்; இரேவதி; அணிகலன்; யாழ்; கலப்பை; ஆயுதம்; ஓலைப்பாத்திரம்; ஒருமுகத்தலளவை; பந்தி; வில்லங்கம்.

நன்கலம் - நல்ல அணிகலன்

நன் நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

மக்கட்பேறு - குழந்தைச்செல்வம்

மக்கள் - மானுடவர்க்கம், மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடு மனவறிவுடைய உயிர்கள்; பிள்ளைகள்.

பேறு - பெறுகை; அடையத்தக்கது; இலாபம்; நன்கொடை; பயன்; தகுதி; பதினாறுவகைப்பட்டசெல்வம்; நல்லூழ்; நிலத்தின்அனுபோகவகை; இரை; படைப்பு; முடிவு.

நன்மக்கட்பேறு -> நல்ல குழந்தைகள்

முழுப்பொருள்
நற்குண நற்செய்கைகள் கொண்ட தம்பதியர்கள் ஒரு குடும்பம் (மனைவி) ஒரு அழகான நல்ல குடும்பம் (மனைவி) என்று சொல்லுவார்கள். 

நாம் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்க்கும் பொழுது தாம்பத்தியத்தின் சிறந்த அறுவடை இதுவே என்று தோன்றும்

அத்தகைய நல்ல குடும்பத்திற்கு அதனினும் சிறப்பு நல்ல அணிகலன் (அழகிய அணிகலன்) எனப்படும் நல்ல மக்களைப் (குழந்தைகளை) பெற்றெடுத்து நல்ல பிள்ளைகளாக வளர்ப்பது. வெறும் பிள்ளைகள் பெற்றெடுப்பது அணிகலன் ஆகிவிடாது. எனவே நன்மக்கட்பேறு என்று சுட்டி நல்ல பிள்ளைகளாகவும் வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

இந்த குறள் வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தை சேர்ந்தது. ஆதலால் ஒரு துணைவன் / துணைவிக்கான இலக்கணமாக பார்க்கிறேன். ஒரு நல்ல வாழ்க்கை துணைவன் /துணைவியின் இலக்கணம் பெற்ற குழந்தைகளை நன்றாக வளர்த்து சான்றோரகளாக வளர்ப்பதே. அப்படி குழந்தைகள் அவர்களுக்கு அழகிய அணிகலன் போல. ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக இருந்தும், குழந்தைகளை நன்றாக வளக்கவில்லை என்றால் அவர்கள் வீதிகளில் தலைகுனிந்துத் தானே நடப்பார்கள் ? அது மட்டுமல்லால் பாரம்பர்யம் நன்றாக தழைக்க வேண்டும் அல்லவா ?

குழந்தைகள் ஒரு வரம் என்றால் மக்கட்பேறு என்றே முடித்திருக்கலாம் அல்லவா ? பிறக்கும் குழந்தைகள் எல்லாம் நல்ல பிள்ளைகளாக வளருவதாக இல்லையே. 

மக்களைப் பெறுதல் இன்பம், நன்மக்களைப் பெறுதல் பேரின்பம். “தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்” என்ற வள்ளுவத்துக்குப் பொருள் பல கூறலாமாயினும் தகுதியுடையாரை அவரது மக்கட் பேற்றாலும் அறியலாம் என்பதொரு பொருளும் உண்டு. எனவே, தகுதியுடையாரை அவரது நன்மக்கட்பேற்றால் அறியலாம்.

சற்று வேதனையுடனே இந்த உதாரணத்தை சொல்கிறேன்:
(பொதுவாக எல்லாவற்றிக்கும் உதாரணம் கூறுவது இல்லை. இருப்பினும் இந்த குறள் குழந்தைகளே வரம் என்ற தோனியில் புரிந்துக்கொள்ள படியமையால். எனது புரிதலை சொல்வதற்காக இந்த உதாரணம். முரண் படுபவர்கள் கருத்தகளை பதிவு தயவு செய்தி பதிவு செய்க)

காந்தி. காந்திக்கு நான்கு பிள்ளைகள். ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ். 

ஹரிலால் - காந்தி லண்டனில் பாரிஸ்டர் படிப்பை முடித்து இந்தியாவை திரும்புவதுவரை காந்தியின் இல்லத்தில் காந்தியை அறியாமல் ஹரிலால் வளந்தார். காந்தியின் அண்ணனின் கண்கானிப்பில் ஹரிலால் வளந்தார். தந்தை தாயுடன் வளராதலால் அவர் அந்த நகரப்புர இளைஞர்கள் போல ஊதாரியாக (தாசிகளுடன் தொடர்பு, மது) வளந்தார். ஹரிலால் தனியாக வளர்வதற்கு சூழ்நிலை காரணம் என்றாலும், அதை யார் அறிவார் ? மூத்தப்பையன் அயோக்கியன்.

ஆனால் மற்ற மூன்று பிள்ளைகள் மணிலால், ராம்தாஸ், தேவதாஸ் மிக மிக உத்தமர்கள் சான்றோர்கள். இன்றும் அவர் அவர் அவர்களின் சொந்த காலில் நல்ல இடங்களில் காந்தியின் பெயர் இன்றி தங்களுக்கு என்று பெயர் உள்ளவர்கள்.  அந்த மூன்று குழந்தைகளும் காந்தியின் நேரடி வளர்ப்பில் எந்த சலுகையும் இன்றி வளந்தவர்கள்.

அப்படி இருந்தாலும் காந்தி இன்றும் (வரலாறு சற்றும் தெரியாத) மக்களால் ஈவு இரக்கம் இன்றி வசைப்பாட படுகிறார். ஏன் ? ஒரு குழந்தை உருப்படி இல்லை. அவ்வளவு தான். ஆக காந்தியும் கஸ்தூடிபாயும் அவர்கள் அணிகலனை இழந்தார்கள். அதுமட்டுமின்றி ஒரு குழந்தை நன்றாக வளரவில்லை என்றால் நல்ல பெற்றோர்களின் நிம்மதில்லாமல் இருப்பர். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த கரும்புள்ளி நீங்காது. :(

ஆகவே தான் திருவள்ளுவர் சொல்கிறார் நல்ல மக்களாக வளர்க்கவேண்டும் என்று இலக்கணமாக வாழ்க்கைத் துணைநலன் அதிகாரத்திலும் வரைகிறார். ஆகவே அதிகாரத்தின் கடைசியில் வைத்து அடுத்த அதிகாரத்தில் அதற்கான விரிவான இலக்கணத்தை வரைகிறார்.

பி.கு: (காந்தியின் மேல் எனக்கு அபாரமான மரியாதை உண்டு. ஒரு அணு அளவும் அவர்மேல் மதிப்புக் குறையில்லை. அதற்கு காரணம்: இன்றைய காந்தி - ஜெயமோகன்)

ஒப்புமை
”ஒண்சுடர்ப் பாண்டிற் செஞ்சுடர் போல
மனைக்குவிளக் காயினள் மன்ற....
புறவணி நாடன் புதல்வன் தாயே” (ஐங் 405)

“கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய
புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்
நன்ன ராட்டி” (அகநா. 184:1-3)

“மனைக்கு விளக்கம் மடவாள் மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர்” (நான்மணி 101)

பரிமேலழகர் உரை
மங்கலம் என்ப மனை மாட்சி-ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு-அவை தமக்கு நல்ல அணிகலன் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை.
விளக்கம்
('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலன் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.)

சாலமன் பாப்பையா உரை
ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: மனைமாட்சி மங்கலம் ‡ மனையாளது நற் குண நற் செயல்கள் மங்கல நாணாம். நல் மக்கட் பேறு அதன் நன் கலம் ‡ நல்ல மக்களைப் பெறுதல் அம் மங்கல நாணின் நன் கலமாம்.

அகலம்: மங்கல நாண் பெண்ணின் கழுத்திற்கு அழகு செய்வது போல நன் மக்கட் பேறு மனையாளுக்கு அழுகு செய்யும் என்ற வாறு. மங்கலம், மனை என்பன ஆகு பெயர்கள், அவை முறையே மங்கல நாணுக்கும் மனையாளுக்கும் ஆயினமையால். நன் கலம் ‡ தாலி. மங்கல நாண் ‡ தாலிக் கொடி. ‘என்ப’, ‘மற்று’ அசைகள். ‘மனைக்கு விளக்க மடவார் ; மடவார், தமக்குத் தகைசால் புதல்வர்’ என்றனர் நான்மணிக்கடிகையார். பேறு என்பது விகுதி புணர்ந்து கெட்டு முதனிலை திரிந்த தொழிற்பெயர். அஃதாவது, ‘பெறு’ என்னும் முதனிலையோடு ‘தல்’ என்னும் விகுதி புணர்ந்து கெட்டுப் ‘பெறு’ என்னும் முதனிலை ‘பேறு’ எனத் திரிந்து நின்றது.

கருத்து: மனையாளது நற்குண நற்செயல்கள் குடும்பத்திற்கு அழகு; நல்ல மக்களைப் பெறுதல் மனையாளுக்கு அழகு.

Thirukkural - Management - Married Life
It is a boon or blessing for every husband to get a virtuous wife. But greater than that blessing is to have benevolent children as in Kural 60.

A good wife s called a boon to a house
And good children its jewels.

When a wife, crown of the family, is virtuous, the family becomes prosperous.

In a virtuous and prosperous family, the kids will be priceless. The kids, further, add value to a 
family as jewels add value to a crown.

Therefore, a virtuous father, pleasant mother, and polite kids make a family prosperous.

சொல்வணக்கம் ஒன்னார்கண்

குறள் 827
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
[பொருட்பால், நட்பியல், கூடா நட்பு]

பொருள் 
சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

வணக்கம் - வணக்கு; சிறப்பித்தல்; கீழ்ப்படிதல், வணங்குதல், நுடங்குதல்; அடங்குதல்; ஏவற்றொழில்செய்தல்; வழிபடுதல்; சூழ்ந்துகொள்ளுதல்.

ஒன்னார் - பகைவர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கொள்ளற்க - கொள்ளாதீர் 

வில் - அம்பெய்தற்குரியகருவி; வில்லின்நாண்; காண்க:விற்கிடை; வானவில்; மூலநாள்; ஒளி.

வணக்கம் - வணக்கு; சிறப்பித்தல்; கீழ்ப்படிதல், வணங்குதல், நுடங்குதல்; அடங்குதல்; ஏவற்றொழில்செய்தல்; வழிபடுதல்; சூழ்ந்துகொள்ளுதல்

தீங்கு - தீமை; குற்றம்; துன்பம்.

குறித்தமை - குறித்து - kuṟittu   adv. id. With the intention of; towards; நோக்கி  

யான் - தன்மையொருமைப் பெயர்

சொல்வணக்கம் : சொற்களின் மூலம் வணக்கம் தெரிவிப்பது 
ஒன்னார் - பகைவர் 
கொள்ளற்க - கொள்ளாதீர் 

விளக்கம் :
வில்லின் வளைந்து (அதாவது வளைக்கப்பட்டு), இருக்கும் நிலை, வணக்கம் தெரிவிப்பது போல் இருந்தாலும், அது அம்பு எய்து தீமை விளைவிக்கவே. அதை போன்று, நம் பகைவர், நம்மிடம் சொல்லும் வணக்கமானது, தீமைக்காகவே எனக்  கருத வேண்டும். அச்சொற்களை ஏற்றுக்  கொள்ள கூடாது.

அம்பினை வைத்து வேறு ஒரு குறளில் இப்படி வருகிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

பரிமேலழகர் உரை
வில்வணக்கம் தீங்கு குறித்தமையான் - வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தமையால்; ஒன்னார் கண் சொல் வணக்கம் கொள்ளற்க - பகைவர் மாட்டுப் பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் தமக்கு நன்மை செய்தலைக் குறித்தது என்று கருதற்க. '(தம் வணக்கம் அன்று என்பது தோன்றச் 'சொல்வணக்கம்' என்றும் வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல் ஒப்புமைபற்றி அதன் குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார். வில்லினது குறிப்பு அவனினாய வில்வணக்கத்தின்மேல் நிற்றலான். ஒன்னாரது குறிப்பும் அவரினாய சொல்வணக்கத்தின் மேலதாயிற்று. இதுவும் தீங்கு குறித்த வணக்கம் என்றே கொண்டு அஞ்சிக் காக்க என்பதாம். இவை மூன்று பாட்டானும் 'அவரைச் சொல்லால் தௌ¤யற்க' என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வில்லினது வணக்கம் தீமையைக் குறித்தமை ஏதுவாகத் தாழச்சொல்லுஞ் சொல்லைப் பகைவார்மாட்டு நன்று சொன்னாரென்று கொள்ளாதொழிக. இது தாழச்சொல்லினும் தேறப்படா ரென்றது.

மு.வரதராசனார் உரை
வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை
வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.


உரனென்னும் தோட்டியான்

குறள் 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
உரனென்னும் -> உரன் + என்னும்.
உரன் -> திண்மை ((மன உறுதி) - Vigor / Density / Strength / Determination),  பற்றுக்கோடு வெற்றி வலி ஊக்கம், உள்ளமிகுதி மார்பு அறிவு

என்னும் -> என்கிற, யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

தோட்டி - ஆணை; காவல்; கதவு; மனைவாயில்; காண்க:தோணாமுகம்; கட்டழகு; செங்காந்தள்மலர்; நெல்லிமரம்; அங்குசம்; கொக்கி; வெட்டியான்; குப்பைமுதலியனவாருவோன், துப்புரவாளன்.

தோட்டியான் -> அங்குசத்தால் (அங்குசம் : யானையை அடக்க கூடிய கருவி) ->. கருவியாகிய.

 
(அடக்கும்) அங்குசம்

ஓரைந்தும் -> ஓர் ஐந்தும்; மெய், வாய்,கண், மூக்கு, செவி என்ற யானைப் போன்ற ஐம்புலன்கள்.

காத்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.  

காப்பான் -> எண்ணங்கள் செல்லாமல் காவல் காப்பான்.

வரன் - சிறந்தவன்; கடவுள்; பிரமன்; தமையன்; மணமகன்; கணவன்; சீவன்முத்தருள்பிரமவரர்எனப்படும்வகையினன்.

வரனென்னும் -> வரன் + என்னும்.

வைப்பு - வைக்கை; பாதுகாப்புநிதி; புதையல்; இடம்; நிலப்பகுதி; ஊர்; உலகம்; செயற்கையானது; செயற்கைச்சரக்கு; வைப்பாட்டி; கலிப்பாவகையின்இறுதியுறுப்பு.
வைப்பிற்கோர் -> வையத்தில் + பிறக்க + ஓர்

வரனென்னும் வைப்பிற்கோர் 
பேரின்பப் பெருவீடு; வரமாகிய வீடுபேறு; எல்லா நிலத்திலும் மிக்கது (சிறப்பானது).  அத்தகைய வையத்தில் பிறக்க தக்க

வித்து -> வித்து (விதை) ஆவான். (ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகன் அல்ல). வித்து என்றது, பூமியில் பிறவாது, மீண்டும் மோட்சமாகிய வீட்டிலே முளைப்பதால்
வித்து - மரஞ்செடிகொடிகள்முளைக்கக்காரணமாயிருக்கும்விதை; விந்து; மரபுவழி; வழித்தோன்றல்; சாதனம்; காரணம்.

முழுப்பொருள்
உலகம் மேம்பட உயிர்களின் மனம் மேம்பட வேண்டும். உயிர்களின் மனம்மேம்பட அறிவுமேம்படல் அவசியம். இத்தகு மேம்பட்ட அறிவுத்திண்மை புலனடக்கத்தால் சாத்தியம். ஐப்புலன்களின் உணர்வுகள் அடக்க முடியாதவை. யானையைப் போல் மலையானவை. 

இத்தகு ஐம்புல உணர்வுகளை அறிவுத்திண்மையெனும் (அறிவு, மன உறுதி) தோட்டியால் (என்னும் கருவியால்) காப்பவனே இவ்வுலகின் விதை போன்றவன் என்கிறார். 

அங்குசம் என்னும் சிறு ஆயுதமே ஒரு பெரிய யானையை அடக்க வல்லது என்பதை நாம் உணர வேண்டும்.  ஆனால் ஒரு தேர்ந்த பாகனால் மட்டுமே அங்குசத்தை சரியாக பயன்படுத்தமுடியும். ஒரு தேர்ந்த பாகன் என்பவன் பல பயிற்சிகளை கற்று (மறக்காமல்) உள்ளவன். ஆதலால் அறிவு மற்றும் மன உறுதியால் (மன பயிற்சிகளாலும்) ஐம்புலன்களை அடக்கலாம். 

துறவெனும் நிலந்தனில் துளிர்விடத் தகுந்த ஒர் முதிர்ந்த நல் வித்தாக அவன் விளங்குவனாம்.
அதாவது, தாய் ஈண்டு பிறந்து இறந்தவன் எல்லாம் மகன் அல்ல. மோட்சம் அல்லது பேரின்ப பெருவீட்டில் துளிர் விட தகுதியான முதிர்ந்த விதையானவனே மகன். 

இரவு ஒரு யானை. யானை எத்தனை அற்புதமான மிருகம். மிருகங்களில் அதற்கு இணையாக ஏதுமில்லை. கன்னங்கரிய பேருடல். அதன் எல்லா அசைவுகளும் அழகே. அது ஒரு மாபெரும் குழந்தை. ஆனால் அந்த மகத்துவத்திற்குள் மதம் ஒளிந்திருக்கிறது நண்பர்களே. மிருகங்களிலேயே யானையைப் பழக்குவதுதான் மிக மிக எளிதானது. ஆனால் ஒருபோதும் முழுமையாக பழக்கிவிடமுடியாத மிருகமும் யானைதான்.

யானைமேல் இருக்கும் மனிதன் உணரும் அகங்காரம் ஒன்றுண்டு. அவன் தன்னை ஒரு மகாராஜாவாக, சிம்மாசனம் மேல் அமர்ந்தவனாக உணர்கிறான். அவனறிவதில்லை அவன் மகத்தான அறியமுடியாமை ஒன்றின் மீது அமர்ந்திருக்கிறான் என்று. நம் முன்னோர் அதை உணர்ந்திருந்தார்கள். யானை மறப்பதேயில்லை என்று சாஸ்திரம் சொல்கிறது. யானை மன்னிப்பதேயில்லை என்கிறது. யானைப்பகை என்று அது குறிக்கப்பட்டிருக்கிறது.

இரவு ஒரு யானை. சாமரக்காதுகள் அசைய, கொம்புகள் ஊசலாட, பொதிகள் போல் காலெடுத்து வைத்து மெல்ல நடந்து வரும் யானை. கஜராஜவிராஜிதம் என்று காளிதாசன் சொன்னான். பேரழகியின் நடை யானையின் நடை போன்றது. ராத்ரி தேவியின் நடையல்லவா அது? யானை இதோ நம் வாசலில் வந்து நிற்கிறது. கன்னங்கருமையாக. பேரழகாக. வாருங்கள் அதன் வெண்தந்தங்களைப் பற்றிக்கொள்வோம். அதனிடம் காலெடு யானை என்று சொல்வோம்.ஏறியமர்ந்தால் இந்த உலகையே வென்றவர்களாவோம். ஆனாலும் அது யானை. அறியப்படமுடியாதது. ஏனென்றால் அது காடு. ஊருக்குள் இறங்கிவந்த காடல்லவா யானை? புதர்களின் இருளும் மலைப்பாறைகளின் கம்பீரமும் காட்டருவிகளின் ஓசையும் மலைச்சுனைகளின் குளிரும் கலந்தது யானை…

நூல் ஒன்பது – வெய்யோன் – 41 (நன்றி: ஜெயமோகன்)

முன்புலரியிலேயே கர்ணனின் அரண்மனைமுற்றத்தில் தேரிலிருந்து இறங்கி காலடிகள் ஓசையிட விரைந்து காவலரை பதறி எழச்செய்து “எங்கே? மூத்தவர் எங்கே?” என்றான் சுஜாதன். அவர்கள் மறுமொழி சொல்வதற்குள்ளாகவே கூடத்தில் ஓடி, படிகளில் காலடி ஒலிக்க மேலேறி இடைநாழியில் விரைந்தபடி “மூத்தவரே!” என்று கூவினான். கர்ணனின் துயிலறை வாயிலில் நின்ற காவலன் திகைத்தெழுந்து நோக்க “எங்கே மூத்தவர்? சித்தமாகிவிட்டாரா?” என்றான்.

கதவைத் திறந்த சிவதர் “கூச்சலிடாதீர்கள் அரசே, அரசர் அணிபுனைகிறார்” என்றார். “அணிபுனைவதற்கு நாங்கள் என்ன பெண்கொள்ளவா செல்கிறோம்? வேட்டைக்கு! சிவதரே, நாங்கள் வேட்டைக்கு செல்கிறோம்!” என்றான். “இதற்குமுன் வேட்டைக்கு சென்றதே இல்லையா?” என்றார் சிவதர். “பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் மூத்தவருடன் இப்போதுதான் நான் செல்லப்போகிறேன்” என்றான் சுஜாதன். கைகளைத் தூக்கி வில்லம்புபோல காட்டி “இம்முறை நானே தன்னந்தனியாக மதகளிறு ஒன்றை எதிர்கொள்ளப்போகிறேன்” என்றான்.

புன்னகையுடன் “நன்று” என்று சொன்ன சிவதர் “அதற்கு எளிய வழியொன்று உள்ளது” என்றார். “என்ன?” என்றான் சுஜாதன். “யானைக்குப் பிடிக்காத மணங்களை உடலில் பூசிக்கொள்வதுதான். தங்கள் உடலில் இருக்கும் இந்த யவனப்பூஞ்சாந்து காட்டில் உள்ள அத்தனை யானைகளையும் மிரண்டு இருளுக்குள் ஓடச்செய்துவிடும்” என்றார். சுஜாதன் உரக்க நகைத்து “ஆம், அதை நானும் எண்ணினேன். யானையை நான் எதிர்கொள்ள வேண்டும்… யானை என்னை எதிர்கொள்ளக்கூடாதல்லவா!” என்றான்.

உள்ளிருந்து கர்ணன் வெளிவந்து “என்ன, புலரியிலேயே பேரோசை எழுப்புகிறாய்?” என்றான். அவன் அருகே ஓடிச்சென்று ஆடை நுனியைப்பிடித்து ஆட்டி “வேட்டைக்கு! மூத்தவரே வேட்டைக்கு!” என்றான் சுஜாதன். “ஆம், வேட்டைக்குத்தான்” என்றபடி கர்ணன் “சென்று வருகிறேன் சிவதரே” என்றான். சிவதர் “படைக்கலங்கள் தேரில் உள்ளன” என்றார். “ஆம்” என்றபடி கர்ணன் நடக்க சுஜாதன் அவனுக்குப்பின்னால் ஓடிவந்து “நான் மூன்று விற்களையும் பன்னிரு அம்பறாத்தூணிகளையும் என் தேரில் வைத்திருக்கிறேன்” என்றான். “என்ன செய்யப்போகிறாய்? காய்கனிகளை அடித்து விளையாடப்போகிறாயா?” என்றான் கர்ணன்.

“மூத்தவரே” என்றபடி சுஜாதன் அருகே வந்து அவன் கைகளைப் பற்றி தன் தோளில் வைத்தபடி “நான் இம்முறை உண்மையிலேயே களிறு ஒன்றை எதிர்கொள்வேன்” என்றான். “நாம் களிறுகளை கொல்லச் செல்லவில்லை இளையோனே” என்றான் கர்ணன். “அவை வேளாண்குடிகளுக்குள் இறங்காமல் உள்காடுகளுக்குள் துரத்திச் செல்கிறோம். அவற்றின் நினைவில் சில எல்லைகளை நாம் வகுத்து அளிக்கிறோம். அங்கு வந்தால் வேட்டையாடப்படுவோம் என்பதை அவை தங்கள் குழந்தைகளுக்கு சொல்லும். அந்நினைவே காட்டுக்கும் விளைநிலத்திற்குமான எல்லையாக அமையும்” என்றான்.

“நரிகளுக்கும் ஓநாய்களுக்கும் அந்நினைவு நெஞ்சில் பதியாதா?” என்றான் சுஜாதன். “பதியும். ஆனால் அவற்றை மீறுவதைப்பற்றியே அவை எண்ணிக்கொண்டிருக்கும். யானைகள் நெறிகளுக்குள் வாழ்பவை.” அவன் கையை அசைத்து “ஏன்?” என்றான் சுஜாதன். “ஏனெனில் அவை மிகப்பெரிய உடல் கொண்டவை. ஒளிந்து கொள்ள முடியாதவை. அவற்றின் மேல் தெய்வங்கள் அமர்ந்துள்ளன.”

From Ashok's Blog: Good Explanation 

ஒப்புமை
“மறுமைக்கு வித்து” (நாலடி 183)

“மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்க்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்” (நாலடி 59)

“தொண்டர் அஞ்சு களிறு மடக்கி” (சம்பந்தர்.கேதாரம் 1)

“முழுக்கி யெழுவன மும்மத வேழம்
அடக்க அறிவெனும் தோட்டியை வைத்தேன்” (திருமந் 2034)

பரிமேலழகர் உரை
உரன் என்னும் தோட்டியான் ஒர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலங்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம். 
விளக்கம் 
(இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந் நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.) 

மணக்குடவர் உரை
அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.

சாலமன் பாப்பையா உரை
மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான். 

English Meaning - As I taught a kid - Rajesh
For the world to become a better place, every living being (especially human being) has to be become a better person. Hence, everyone's heart and mind have to become better. This can be achieved by developing mental vigor / strength and determination. This mental strength has to be used as a weapon against the 5 senses which mischievously fail us against our path to success / glory. This mental strength might seem like a small weapon (taming stick). But remember, an elephant is can be controlled using a small weapon. Similarly mental strength can be used to control the 5 senses. But, even to control a weapon, the elephant guard has to learn on how to use the small weapon against the huge elephant. Similarly, one has to learn how to use the mind (by meditation, perseverance etc) against the 5 senses.  If one does so, he or she can overcome the 5 sense and achieve success or attain Moksha in the life. Such a person is a like a healthy seed in this world.

But why is elephant used as a metaphor here? because elephant is like ignorance / illusion. Similarly our 5 senses are as big as elephant. our ignorance and illusion are also big. We all have ego in us because of this illusion and ignorance. So, we have to control that. But why elephant, not fox or lion - Because a fox cannot be controlled. It is always breaks the rules. But elephant can be trained to not cross borders. 

Similarly our mind can also be trained and practised. this can be achieved by controlling our 5 senses which can be done with the help of meditation.


Questions that I ask to the kid
Who is a good seed to the world? 
How can one become a good seed to the world?
What comes to your mind when you see a elephant mahot controlling a elephant using a small stick?