குறள் 1274
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]
பொருள்
முகை - அரும்பு; மொட்டு; குகை; கூட்டம்; மிடா
மொக்கு - பூமொட்டு; சீலைகளில் செய்யும் மொட்டு வேலைப்பாடு; தரையிலிடும் பூக்கோலம்; குத்துவிளக்கின் தகழி; மரக்கணு; காண்க:மொக்கை.
உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.
உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.
நாற்றம் - மணம்; மூக்கால்அறியும்புலனறிவு; தீநாற்றம்; கள்; தொடர்பு; தோற்றம்.
போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்
பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயது முதல் ஏழுவயதுவரையுள்ள பருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.
நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு.
மொக்கு - பூமொட்டு; சீலைகளில் செய்யும் மொட்டு வேலைப்பாடு; தரையிலிடும் பூக்கோலம்; குத்துவிளக்கின் தகழி; மரக்கணு; காண்க:மொக்கை.
உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.
உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.
ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை
உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்புவினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக் குறிக்கும்சொல்; ஊன்றுகோல்
முழுப்பொருள்
மலர் மொட்டுக்குள், எவ்வாறு மனம் பொதிந்து (இன்னும் வெளிப்படாமல்) உள்ளதோ, அதே போன்று பாவையின் புன்முறுவலில் (காதலனை நோக்கி), ஏதோ ஒரு புலப்படாது ஒன்று ஒளிந்து உள்ளது.
மொட்டாக இருக்கும் பொழுது நாம் முகர்ந்தால் மலரின் வாசம் பெரும்பாலும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் மிக சிறிய அளவிலேயே. அதுபோலத்தான் பாவையின் புன்முறுவலில் உள்ள அன்பினை நாம் முழுவதுமாக அறிந்துக்கொள்ள முடியாது. காதல் மலர மலர அதனை அறியலாம்.
ஒப்புமை
”முள்நுனை தோன்றாமை முறுவல்கொண் டடக்கித்தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள்” (கலித் 142:7-8)
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல் - முகையது முகிழ்ப்பினுளதாய்ப்புறத்துப் புலனாகாத நாற்றம் போல; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - நின் பேதை என்னோடு நகக் கருதும் நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்பு உண்டு. (முகிழ்ப்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல். நகை - புணர்ச்சி இன்பத்தான் நிகழ்வது.).
மணக்குடவர் உரை
மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போலப் பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோ ரின்பம் உண்டு. இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகைசெய்து சேட்படுத்திய போது இவள் குறிப்பு நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
மு.வரதராசனார் உரை
அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.
சாலமன் பாப்பையா உரை
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.
No comments:
Post a Comment