Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label வெகுளாமை. Show all posts
Showing posts with label வெகுளாமை. Show all posts

சினத்தைப் பொருளென்று கொண்டவன்

குறள் 307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]

பொருள்

சினத்தைப் - சினம் - கோபம்; நெருப்பு; போர்; வெம்மை.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

என்று - eṉṟu   என்-. part. 1. That, usedas a relative part. when it ends a quotationand connects it with the following part of thesentence; என்றுசொல்லி. 2. In special orelliptical constructions, in which it is used as aconnective part. (a) between verbs, as in நரைவரு மென்றெண்ணி (நாலடி, 11): (b) between anoun and a pronoun, as in பாரியென் றொருவனுளன்: (c) between an int. and a verb, as in திடீரென்றுவந்தான்: (d) between an imitative soundand a verb, as in ஒல்லென் றொலித்தது: (e) between an abstract noun and a verb, as in பச்சென்று பசந்தது: (f) between words defining thingsenumerated, as in நிலனென்று, நீரென்று; வினைபெயர் குறிப்பு இசை பண்பு எண் என்ற பொருள்பற்றிவரும் இடைச் சொல் (தொல். சொல், 261, உரை: நன் 424.) 3. An expletive; ஒரு சொல்லசை. கலியாணத்துக்கென்று பணம் வைத்திருக்கிறேன்.  

கொண்டவன் - உடையவன்

கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

நிலத்து - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

அறைந்தான் - அறைதல் - அடித்தல்; மோதுதல் சொல்லுதல் கடாவுதல் ஒலித்தல் பறைமுதலியனகொட்டுதல்; மண்ணெறிந்துகட்டுதல்.

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

பிழையாதற்று - பிழையாகி போகுதல்

முழுப்பொருள்
பொருள் என்ற சொல்லுக்கு தலைமை(ப் பண்பு) என்ற பொருள் உண்டு. சினம் என்பற்கு கோபம், வெம்மை என்று அர்த்தம். சினத்தை/கோபத்தை தன்னுடைய பண்பாக உடையவனுக்கு கேடே பயனாய் கிடைக்கும் என்கிறார் திருவள்ளுவர். ஏனெனில் எத்தகையதையும் தாங்கும் (பொறுமை உடைய) நிலத்தை ஓங்கி அடித்தால் அடித்தவரின் கைக்குத் தான் வலிக்கும். நிலத்திற்கு வலிக்காது. அதுப்போல சினம் கொண்டவருக்கு தான் வலி/கேடு. சினம் வலிமை அல்ல அது கேடு ஆகும்.

சினம் கொள்ளாமல் (அகழ்வாரை தாங்கும்) நிலம் போல் பொறுமையாக இருத்தல் வேண்டும் என்பதை சுட்டவே நிலத்தை இங்கே சுட்டுகிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
“கதம் எனும் பொருண்மையிலர்” (கம்ப.மராமர.10)

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு’வில் பன்னிரு படைக்களத்தில் (அத்தியாதம் 50) அசிசுபாலனின் நிலையைப் பற்றி இப்படி கூறுகிறார்

”அந்த ஒருகணம் மயங்கி பிறிதொரு கணம் எழும் எனில் இறப்பே என உணர்ந்த உச்சப் புள்ளியில் விழித்தெழுந்து கொடுங்கனவில் இருந்து என தன்னைக் கிழித்தெடுத்து தன்னிலையை திரட்டிக் கொண்டான். அதை சினமென வஞ்சமென ஆக்கி மேலும்மேலும் வெறி கொள்ளச்செய்து உருவடையச்செய்தான். சினம் போல் திரட்டிக்கொள்ள எளிதானது பிறிதொன்றுமில்லை. நெடுநேரம் அச்சினமாகவே தன் அனைத்திருப்பையும் மாற்றினான். சினம் ஓர் எண்ணமாக, பின்பு ஒரு பொருண்மையாக, பின்பு பற்றி எரியும் வலியாக, பின்பு எரிதலின் பேருவகையாக மாறி எரிந்து எரிந்து அணைந்து சாம்பலாகிப் பறந்து ஒழிந்து மீண்டும் அதே வெறுமை.”

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு-இமைக்கணம்-19 இல் ஒரு வரி இப்படி வருகிறது

பிறவியால் அடைந்த நஞ்சை மானுடர் எளிதில் விலக்க இயலாது. வாழ்வு அதை பெருக்கும். துறவும் தவமுமே அதை கடக்க உதவுபவை.” விதுரர் “அந்நஞ்சு கீழ்நிலையினருக்குரிய தளையா?” என்றார். இளைய யாதவர் “கீழ்நிலையினருக்கு தாழ்வுணர்ச்சியின் நஞ்சு. அதைவிடக் கொடிய நஞ்சு உயர்நிலையினருக்கு, மேட்டிமையின் நஞ்சு” என்றார்.

“கீழ்நிலையினர் வஞ்சம் பெருக்கிக்கொள்கிறார்கள். அது வஞ்சமென அவர்களுக்கு தெரியுமென்பதனால் அதை கடக்கலுமாகும். மேல்நிலையினர் அளியை பெருக்கிக்கொள்கிறார்கள். அந்த ஆணவம் அழுகி நாறும்போதும் நறுமணமென்றே அவர்களுக்கு தெரியும்” என்றார் இளைய யாதவர். “பிறவிநோயென உடனிருக்கும் இந்நஞ்சைக் கொல்லாமல் எவருக்கும் விடுதலை இல்லை, விதுரரே.” விதுரர் “ஆம்” என பெருமூச்சுவிட்டார்.

“ஓராயிரம் முறை ஒளிக்கப்பட்ட ஒன்று பெருவல்லமைகொண்ட படைக்கலமாகிறது” என்றார் இளைய யாதவர்.



சினத்தைப் பொருள் எனக்கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கை பிழையாதற்று
‘சினத்தை தன் வலிமை என்று எண்ணுபவன் நிலத்தில் கையால் அறைந்துகொள்பவன் போன்றவன்’ பாறையின் முட்டிக்கொள்பவன் என்று நம் நாட்டார் வாய்மொழி. எளிமையால் ஒரு பழமொழியின் கவித்துவத்தை அடையும் இக்குறளுக்கு மேலதிக நுண்பொருள் ஒன்றும் உண்டு. நிலம் என்பது பொறுமையின் அடையாளமாகச் சொல்லப்படுவது. அகழ்வாரையும் தாங்குவது, தன்னை அறைபவனையும் கூடத்தான்! சினத்தின் பொறுமையின்மைக்கு எதிராக பொறுமையின் அலகிலா வல்லமையை நிறுத்துகிறது இக்குறள்.
நயம்பட உரைத்தலின் அழகை குறளில் கண்டபடியே செல்லலாம்.

பரிமேலழகர் உரை
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு - சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை பிழையா தற்று - நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது. (வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பவற்றை 'அறுவகைப் பொருள்' என்றாற்போல, ஈண்டுக்குணம் 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும், இது பொருட்கேடு வருமென்றது.

மு.வரதராசனார் உரை
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும்

குறள் 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய 
பிறத்தல் அதனான் வரும்.
[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]

பொருள்
வெகுளாமை - கோபியாமை, சினவாமை

மறத்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல்.
வெகுளியை - வெகுளி - சினம்; வெறுப்பு; கபடமற்றவர்.
யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்)
தீய -  தீமை 1. Evil, wicked,sinful; தீமையான. 2. Fallacious; போலியான.
பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல்.
அதனான் - அதனால்
வரும் - வரும்

முழுப்பொருள்
ஒருவர் நமக்கு தவறே செய்தாலும், சினம் ஊட்டும் படி செயல்கள் செய்தாலும் அதனை மறத்தலே சிறந்தது என்கிறார் திருவள்ளுவர். அதனை விட்டுவிட்டு, வலியார் ஒப்பார் எளியோர் என்று யாரானாலும் பிறரிடத்தில் கோபம் கொண்டால் அது நமக்கு தீய விளைவுகளையே விளைவிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

உதாரணமாக நாம் சினம் கொண்டால் நம் மனது ஒரு பதபதட்டுடன் இருக்கும். ஒரு தடவை கோபமாக வண்டி ஓட்டியதால் ஏதிரே சூரிய ஒளியை காண முடியாமல் கீழே பல்லத்தை கவனிக்காமல் கீழ விழுந்து அடிப்பட்டுக்கொண்டேன். இதே போல, பலர் சினத்தை மனதில் வைத்துக்கொண்டு உறவுகளை பேணாமல் அழித்துக்கொள்வர். அது ஒரு விதத்தில் தன்னுடைய நேரத்தையும் எடுக்கும், மனதில் மாசாக தங்கும்.

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு’வில் பன்னிரு படைக்களத்தில் (அத்தியாதம் 50) அசிசுபாலனின் நிலையைப் பற்றி இப்படி கூறுகிறார்

”அந்த ஒருகணம் மயங்கி பிறிதொரு கணம் எழும் எனில் இறப்பே என உணர்ந்த உச்சப் புள்ளியில் விழித்தெழுந்து கொடுங்கனவில் இருந்து என தன்னைக் கிழித்தெடுத்து தன்னிலையை திரட்டிக் கொண்டான். அதை சினமென வஞ்சமென ஆக்கி மேலும்மேலும் வெறி கொள்ளச்செய்து உருவடையச்செய்தான். சினம் போல் திரட்டிக்கொள்ள எளிதானது பிறிதொன்றுமில்லை. நெடுநேரம் அச்சினமாகவே தன் அனைத்திருப்பையும் மாற்றினான். சினம் ஓர் எண்ணமாக, பின்பு ஒரு பொருண்மையாக, பின்பு பற்றி எரியும் வலியாக, பின்பு எரிதலின் பேருவகையாக மாறி எரிந்து எரிந்து அணைந்து சாம்பலாகிப் பறந்து ஒழிந்து மீண்டும் அதே வெறுமை.”

பழி ஒரு விதை, அதன் தருணம் வரை தவம் மேற்கொள்வது

பரிமேலழகர் உரை
யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர்மாட்டும் வெகுளியை 'ஒழிக', தீய பிறத்தல் 'அதனான் வரும்' - ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான். (வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்', என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க; தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வருமாதலான். இது வெகுளாமை வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்

குறள் 301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்
[அறத்துப்பால்,  துறவறவியல், வெகுளாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
செல் -  To be effective; to have influence;பயனுறுதல். செல்வர்வாய்ச் சொற்செல்லும் (நாலடி,115).  
- போகை; வாங்கியகடனுக்குச்செலுத்தியதொகை; கடன்; கடன்செலுத்தியதற்குபத்திரமெழுதுங்குறிப்பு; கையொப்பம்; சென்றகாலவளவு; மேகம்; வானம்; குடி; வேல்; கறையான்.

செல் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

செல் - செலாவணி - செலாமணி - celāmaṇi   n. U. calāoṇi.1. That which can be passed, as coin; thatwhich is a legal tender; செல்லக்கூடியது. 2.Influence; செல்வாக்கு இப்போது அவருக்கு அவ்வளவு செலாமணியில்லை. Loc. ; புழக்கம்; செல்லக்கூடியது; செல்வாக்கு.

இடத்துக் - இடம்தானம்; Context; சந்தர்ப்பம், வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

செல் இடத்துக் - தனக்கு மற்றொருவர் மீது அதிகாரம் (ஆளுமை) உள்ள ஒரு இடத்தில். அதாவது மெலியார்களிடம்

காத்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.

காப்பான் - கட்டுப்படுத்துவான்

சினம் - கோபம்; நெருப்பு; போர்; வெம்மை.

காப்பான் கட்டுப்படுத்துவான்

அல் - al   part. id. 1. Neg. verb-ending:(a) imp. sing.; எதிர்மறையேவல் ஒருமை விகுதி
 
இடத்து - இடம் - தானம்; Context; சந்தர்ப்பம், வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

அல் இடத்து - மற்ற / பிற இடத்தில் ; அதாவது வலியார்களிடம் (தனக்கு ஆளுமை இல்லாதவர்களிடத்தில்)

காத்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.

காக்கின் என்? - சினம் தனை கட்டுப்படுத்தினால் என்ன ?

காவாக்கால் என்?. - சினம் தனை கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ?

முழுப்பொருள்
ஒருவர் மீது நாம் சினம் கொள்ள நேரிடும் பொழுது விளைவுகள் இரு வகைப்படும். 1) எதிரே உள்ளவர் அதனால் மனம் வாடி எதுவும் பேசாமல் உள்ளே புகைந்துக்கொண்டு சகித்துக்கொண்டு சென்று விடுவார். அதாவது மெலியார்கள். 2) எதிரே உள்ளவர் இவருடைய சினத்தை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், இவரையே மதிக்காமல் அலட்சியம் செய்து சென்றுவிடுவார். இவர்கள் வலியார்கள்.

ஆகவே மெலியாரிடத்தில் சினம் தன்னை கட்டுப்படுத்த வேண்டும். அப்படி கட்டுப்படுத்தினால் சிறப்பு. ஏனேனில் இங்கு பொதுவாக மெலியார் என்று இல்லாமல் இவர்களுடன் உள்ள நண்பர்கள், உறவுகள், பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் ஆகியோரிடம் சினம் காண்பிக்காமல் இருந்தால் உறவு மேம்படும். நம்மைச் சுற்றி மக்கள் இருப்பர். நன்மை விளைவிக்கும். 

தன்னை சட்டை செய்யாதவரிடம், வலியார்களிடம் கோவம் கொண்டால் என்ன, கொள்ளாவிட்டால் நமக்கு என்னப் பயன் ? ஒரு பயனும் கிடையாது.\

அதுமட்டும் இன்றி நமது நெருங்கிய உறவுகள் குறிப்பாக நமது குழந்தைகளிடம், பெற்றோர்களிடம், உறவுகளிடம் சினம் நெடுங்காலத்திற்கு குழந்தைகளின் மனதிலும் குணாதிசயத்திலும் தாக்கத்தை ஏற்ப்படுத்தும். பெற்றோர்களிடமும், உறவுகளிடமும், சுற்றத்தாருடனும் காண்பிக்கும் சினத்தை குழந்தைகள் பார்த்து வளருவர். அவர்கள் முன்னே கோபப்படவில்லை, தனியே இன்னொரு அறையில் அல்லது  அவர்கள் இல்லாத பொழுது கோபித்துகொள்கிறேன் என்பதும் தவறு. ஏனெனில் நாம் கோபப்பட்டத்தை பிள்ளைகள் வேறு ஒரு தருணத்தில் தானாகவோ அல்லது வேறு யாரோ சொல்லி செவி வழி அறிந்துக்கொள்வர். 

சரி, அது எப்படி நாம் காண்பிக்கும் சினம் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். நம்மிடம் இருந்து கண்டோ அல்லது செவி வழியாக அறிந்தோ நமது சினத்தை அறிந்தால், பிற்காலத்தில் குழந்தைகளும் சினம் கொள்ள யோசிக்கமாட்டார்கள். நாம் சினம் கொண்டால் சினம் தவறு அல்ல நீயும் (நமது குழந்தையும்) பிற்காலத்தில் சினம் கொள்ளலாம் என்று உரிமம் கொடுப்பதுப்போல் ஆகும். அது குழந்தைகளின் மனநிலையை அவர்களிடன் உறவுகளை வெகுவாக பாதிக்கும். ஒருவித பயத்தை குழந்தைகள் மனதில் சின்ன வயதிலேயே உண்டுப்பண்ணும். அப்பயம் அவர்களின் வாழ்வில் வேறு ஒரு தளத்தில் ஆழ்மனத்தடையாக மாறிவிடும். சினம் ஆழ்மனத்தடையை உருவாக்குவதால் அதனை நமது உறவுகளிடம் காண்பிக்க கூடாது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைப் போகும். ஆதலால் குழந்தைகள் இருக்கும் வீட்டில் கவனம் மிக மிக தேவை. (பி.கு. Hellinger Family Constellations என்ற ஒரு குடும்ப ஆலோசனை மனோத்தத்துவ முறை உண்டு. அதில் எப்படி குடும்ப உறவுகள் ஒரு குழந்தையை பாதித்துள்ளது / பாதிக்கும் என்பதை உணரலாம். ஒரு குழந்தையின் மனதில் முடிச்சு (knot) / ஆக்கசக்தியில் தடை energy blockage எப்படி உருவாகி அக்குழந்தையின் வளர்ச்சியைத் நெடுங்காலத்திற்கு தடை செய்கிறது என்பதை உணரலாம்). 

முக்கிய செய்தி. நமது உறவுகளை, (நமது கோபம் செல்லுபடியாகும் உறவுகளை) அலட்சியம் செய்யாதீர் (The main point is. Don't take our relationships for granted. Don't show your anger upon them). 

பிள்ளைகள் நம்மிடமா எல்லா நேரமும் இருக்கிறார்கள்? அவர்கள் பள்ளிக்கூடங்களில் நண்பர்களுடன் தானே பெரும்பாலான நேரம் வளர்கிறார்கள். உண்மைதான். ஆனால் ஒரு வகுப்பில் எல்லா பிள்ளைகளும் கோபப்படுவத்தில்லை. கோபப்படும் பிள்ளையும் வெகு சில சந்தர்ப்பங்களில் கோபப்படும். அக்கோபத்தை நெடுங்காலத்திற்குக் கொள்ளாது. மேலும் அக்கோபத்தை ஆசிரியர்கள் அடக்கிவிடுவார்கள். மிக மோசமான பிள்ளைகளைக்கொண்ட பள்ளியில் அல்லது ஒழுக்கத்தைப் பேணாத பள்ளியில் ஒரு குழந்தை வளர்ந்தால் அதுவும் குழந்தையை பாதிக்கும். பிள்ளைகள் ஒரு தனி நபரிடம் அதிக நேரம் செலவிடுகிறது என்றால் அதுப் பெற்றோர்கள் தான். யோசித்துப்பாருங்கள், குழந்தைகள் பள்ளியில் இருந்து வெளியே வந்தப்பின்பு தனது நண்பர்களைப் பற்றி வெகுவாக நினைக்காது. ஆனால் பெற்றோர்பற்றியும், வீட்டில் நடந்ததைப் பற்றியும் பள்ளியிலும் நினைத்துப் பார்க்கும். ஆதலால் நாம் பிள்ளையுடன் நடந்துக்கொள்ளும் விதம் பிள்ளைகளை வெகுவாக பாதிக்கும். (மேலும், வீட்டில் நாம் வசைச் சொற்களைப் பேசாது இருந்தால் வெளியே பிள்ளைகள் பலர் பேச கேட்டாலும், அதனை பிள்ளைகள் பேச கூசுவர் ஏனெனில் பெற்றோர்கள் பயன்படுத்தாத அவ்வார்தைகளை தான் பேசுவது அவர்கள் மனதில் நெருடலாகவே இருக்கும்)

ஒரு பள்ளியில் வளர்ந்த எல்லா குழந்தைகளும் கோபப்படுவதில்லை. சிலப் பிள்ளைகள் கோபப்படவே படாது. சில பிள்ளைகள் கோப்படும். அது பெரும்பாலான சமயங்களில் பெற்றோரின் குணாதிசயமாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். பெற்றோர்களே பிள்ளைகளுக்கு முன்னுதாரணம். ”குறள் 63 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்.” என்பதை நினைவில் கொள்க. 

மேலும், அலட்சியம் செய்வோரிடம் சினம் கொண்டால் பொதுவாக, வாக்குவாதம் வராது, அல்லது அவரை நாம் அன்றாடம் காணமாட்டோம். ஆதலால் கோபம் கொண்ட தருணத்தை நாம் மறந்துவிடவே வாய்ப்புகள் அதிகம். ஆனால் நெருங்கிய ஒருவரிடம் கோபம் கொண்டால் நம்மிடம் காழ்ப்பு / மனக்கசப்பு (resentment) வளரும். அவர்களை காணும் பொழுது எல்லாம் நமக்கு கோபம் வரும். இதயத்துடிப்பு எகிறுவதை உணரலாம். இது நமது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும். அதுமட்டும் இன்றி, உறவிலும் மனம் விலக்கம் கொண்டு சிக்கலாகவே இருக்கும். அது ஒருவித எதிர்மறை சக்தியை அவ்வீட்டில் உள்ளோரிடம் எப்பொழுதும் பரப்பிவிடும். (வீடே சூனியமயமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்). 

கோபத்தை கற்றுக்கொள்ள ஆயிரம் சந்தர்ப்பங்கள் நம் அன்றாட வாழ்வில் உள்ளன. பெரியவன் ஆகியப் பின்பு அலுவகத்தில் இருப்போரிடம் இருந்து கோபத்தை கற்றுக்கொள்ளலாம். அப்படி எல்லாம் கோபத்தை பார்க்காமல் பொத்தி பொத்தி ஒருவர் வாழமுடியாது. அப்படியேனில், ஏன் அக்கோபங்களையெல்லாம் கற்றுக்கொள்ளக்கூடாது என்பதற்கு இக்குறளை மறுபடியும் படிக்கலாம். மேலும் இவ்வதிகாரத்தை நன்கு உணரும் வரை படிக்கலாம். கீழ்க்காணும் குறள்களையும் படிக்கலாம்



அதுமட்டும் இன்றி, நாம் நமது உறவுகளிடம் சினத்தை காண்பிக்கவில்லையென்றால்

பரிமேலழகர் உரை
சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான் - தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளாள் தடுப்பானாவான்; அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? நடாது ஒழிந்தார் என்? 

விளக்கம்
('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது. தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். 'வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சினம் செல்லிடத்துக் காப்பான் காப்பான் - சினம் தாக்கக் கூடிய எளிய இடத்தில் அது எழாதவாறு அருளால் அல்லது அன்பால் தடுப்பவனே உண்மையில் அதைத் தடுப்பவனாவான்; அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - அல்லாத வலிய இடத்தில் அது தானே எழாது அடங்குதலால் அதைத் தடுத்தாலென், தடுக்காவிட்டாலென்? இரண்டும் ஒன்றுதானே!

'செல்லிடம்' தவத்தில் தாழ்ந்தவரும் வறியவரும் அதிகாரமில்லாதவருமாம். 'அல்லிடம்' தவத்தில் உயர்ந்தவரும் செல்வரும் அதிகாரத்திற் சிறந்தவருமாம். வலிய இடத்திற் சினங்கொள்வதால் தனக்கே கேடாதலாலும், அதையடக்குவது அறமன்மையானும், 'காக்கினென் காவாக்காலென்' என்றார்.

மணக்குடவர் உரை
தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்; இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் பயனில்லை, தவிராததனாலும் பயனில்லை; இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது.

மு.வரதராசனார் உரை
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?.

சாலமன் பாப்பையா உரை
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?.

பொருள்: செல் இடத்து காப்பான் சினம் காப்பான் - (வெகுளி) செல்லும் இடத்து (செல்ல விடாது) காப்பவன் வெகுளியைக் காப்பவன் (ஆவான்) ; அல் இடத்து காக்கில் என் காவா(த) கால் என்- (வெகுளி) செல்லாத விடத்து (வெகுளியைக்) காத்தால் யாது பயன்? காவாத பொழுது யாது பயன்? (ஒரு பயனும் இல்லை).

அகலம்: செல்லிடமாவது, வெகுளி செல்லக் கூடிய இடம். அஃதாவது, தம்மின் மெலியாரிடம். செல்லாத விடத்து வெகுளியைக் காத்ததாகச் சொல்லல் முடியாது, அவ் விடத்து வெகுளியைச் செலுத்தின் அது தடுக்கப்பட்டுப் போ மாகலான். செல்லாத இடம்‡ தம்மின் வலியாரிடம். தருமர் பாடம் ‘செல்லிடத்திற்’, ‘அல்லிடத்திற்’. மற்றை நால்வர் பாடம் ‘காக்கினென்’. மணக்குடவர் பாடம் ‘காக்கி லென்’. ‘காவாக்கா லென்’ என்று பின்னர்க் கூறியிருத்தலான், ‘காக்கிலென்’ என்னும் மணக்குடவர் பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது.

கருத்து: மெலியாரிடத்து வெகுளியைக் காக்கக் கடவர்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
தந்தையே எனது உறவினர் ஒருவர். வயதால் மூத்தவர். நிறையக் கற்றிருக்கின்றார். இல்லை தந்தையே படித்திருக்கின்றார்.
எல்லோருக்கும் வழி சொல்வது. எல்லோருக்கும் உதவுவது என்று நல்லதெல்லாம் செய்கின்றார். ஒரே ஒரு தீய குணம்.
எல்லா நன்மைகளையும் யாருக்குச் செய்கின்றாரோ அவர்களிடம் கோபம் கொள்கின்ற போது அவர் நடந்து கொள்கின்ற முறைகள் தாங்க முடியவில்லை. வார்த்தைகளை அள்ளி வீசுகின்றார். பாவம் அவர்கள் அவர் உதவியிலே வாழ்பவர்கள்.
எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லாமல் மனதுக்குள்ளேயே மறுகுகின்றனர். அவரை எப்படிச் சரி செய்வது.


மனிதர்கள் பலர் மனைவியிடம் கூட இப்படித்தான் நடந்து கொள்கின்றனர். அவள் எதிர்க்க மாட்டாள் என்கின்ற ஒரே நம்பிக்கை. தந்தையின் பதில்.

அவரிடம் சொல்லு அவர்கள் உங்களையே நம்பி வாழ்கின்றவர்கள்.அவர்களிடம் கோபம் கொள்வது பண்பாடற்ற செயல்
என்று.கோபத்தை கட்டுப் படுத்தப் பழகிக் கொள்ளவே அவர் இந்த உறவுகளைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அது அவருக்கு அவர் உயிரையும் உடைமைகளையும் காக்கின்ற மிகப் பெரிய உதவியினைச் செய்யும்.

ஆமாம் இப்படி நல்லவர்களிடம் தன்னை நம்பி வாழுகின்ற ஏழை எளியவர்களிடம் இந்தப் பயிற்சியினை எடுத்துக் கொண்டாரெனில் அவரால் கோபம் கொள்ள முடியாத உயரத்தில் இருப்பவர்களிடம் எத்தகைய சூழலிலும் கோபம் வராது. 
புரிகின்றதா?அதனால் அவருக்குப் பெரிய நன்மையல்லவா ஏற்படும்.இல்லையெனில் அவர் நிலை என்னவாகும்.


ஏழைகள் அவருக்குக் கீழே இருப்பவர்கள் பொறுத்துக் கொள்வார்கள். மிகப் பெரிய இடத்தில் இருப்பவர்கள் இவருடைய குணம் கொண்டவர்களாக இருப்பின் இவர் கதி அதோ கதிதானே.


இவர்கள் இப்படியே இருப்பின் நீயும் நானும் என்ன செய்ய முடியும். இதே பழக்கத்தில் இவர்கள் விபரமில்லாமல் கோபப் படக் கூடாத இடங்க்ளில் கோபப் பட்டு ஒரு அனுபவம் பெறுவார்கள் பார். அப்போது அவர்களாகவே தெரிந்து கொள்வர்.

கோபப் படாமல் இருக்க நம்மைக் காப்பாற்றிக் கொள்ள தந்தை சொன்ன வழியை எண்ணிஎண்ணி அவரை வணங்கி நின்றேன்.

குறட் கருத்து  2 (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
உந்தனது  கீழிருக்கும்  ஏழையர்கள்
     உறவினர்கள்  நண்பரொடு  அன்பு கொண்டோர்
வந்தமைந்த மனைவி  அவள்  வழியாய் வந்த
     வாரிசுகள்  என்றிவர்கள்  இடத்திலெல்லாம்
நொந்தழிக்கும்  கோபமதைக்  கொள்ளல்  தீது
     நொய்ந்தவர் மேல்  கோபமது  தீதோ தீது
வந்த சினம்  தானாக மறைந்து விடும்
     வாழும் வழி சொல்லுகின்றார்  வள்ளுவரும்

இந்த  விதம் சொல்லி விட்டு வள்ளுவரும்
     இடக்காகச் சொல்லுகின்றார் அதனைப் பார்ப்போம்
மைந்தர்களே உம்மை விடப்  பெரியோர்  ஆளும்
     மாட்சிமையின் அதிகாரப் பொறுப்பில்  உள்ளோர்
எந்த விதத் தவறுகட்கும்  அஞ்சா நெஞ்சர்
     இவரிடத்தில் சினம் கொள்ளும்  தடுக்க மாட்டேன்
சந்தடியில்  அடி  வாங்கித்தான்  திருந்த
     சரியான  வழி  சொன்னார்  வள்ளுவரும்

‘கோபம்’ மனிதனிடமிருக்கும் எதிர்மறைக் குணங்களில் மிகவும் மோசமானது; அழிவுத் தன்மைமிக்கது. அரண்மனைக் கோபங்களால் சாம்ராஜ்ஜியப் போர்கள் நடைபெற்றதாகச் சரித்திரம் கூறுகிறது. கட்டுக்கடங்காத கோபங்களால் வன்முறைகளும், கொலைவெறிகளும் தாண்டவமாடுகின்றன. பெற்றோர் கோபங்களில் பிள்ளைகள் நலம் கெடுகிறது; உறவு சிதைகிறது. ஆசிரியர்களின் கோபங்களில் மாணவ நெஞ்சங்கள் கருகிப் போகின்றன. அர்த்தமற்ற அநாகரீகமான காட்டுமிராண்டித்தனமான கோபத்தின் உக்கிரமும் உஷ்ணமும் தாங்காமல் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்! பிரிந்த உயிர்கள் ஏராளம்!


10 வயது மாணவன் சென்னையில் ஆசிரியர் கோபத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டான். அவன் தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதத்தில், “நான் மறுபிறவியில் இதே குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன். ஆனால் இதே பள்ளியில் படிக்க விரும்பவில்லை” என்ற செய்தி சிந்திக்கத்தக்கது.

2007 ஜனவரி மாதம் ஒரு நாளில் திருநெல்வேலியில் ‘சுடலி’ என்ற 9 வயது சிறுமி வகுப்பில் கவனமாக இல்லை என்று ‘மிஸ்’ அவளை நோக்கி சினங்கொண்டு எறிந்த டம்ளர் ‘மிஸ்’ ஆகாமல் சிறுமியின் கண்களைப் பதம் பார்த்தது. பார்வை நிரந்தரமாகப் பறிபோனது. 2007 அக்டோபரில் அகமதாபாத்தில் 10 நிமிடம் தாமதமாக வந்தான் 11 வயது மாணவன் மிலான் தாணா. அவனுக்கு ஐந்து முறை பள்ளி மைதானத்தைச் சுற்றி வருமாறு அவமானகரமான தண்டனை வழங்கப்பட்டது. இரண்டாவது சுற்றிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்து போனான்.

2009 மார்ச் 24ஆம் தேதி மணப்பாறையிலுள்ள ஒரு தனியார் பள்ளி அருகிலுள்ள குளத்தில் 5 வயது மாணவி ஸ்ரீரோகிணி உடல் மிதந்தது. காவல்துறை புலனாய்வு செய்தது. வகுப்பறையில் மூன்று நாட்களுக்கு முன்பு ஸ்ரீரோகிணி தலையில் பிரம்பால் ஓங்கி வன்மத்துடன் ஆசிரியை அடித்திருக்கிறார். அடித்ததும் சிறுமி அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறாள். ஆசிரியைக்கு அச்சம் ஏற்பட்டு மயங்கிக் கிடந்த சிறுமியை பீரோவில் திணித்து வைத்துப் பூட்டி வைத்திருக்கிறார். அதன் பின் ஊழியர்கள் உதவியுடன் இறந்துவிட்ட குழந்தையைக் கொண்டுபோய் குளத்தில் போட்டுவிட்டு ஒன்றும் நடக்காதது போல் இருந்திருக்கிறார்.

2009 ஏப்ரல் 17ல் டில்லி மாநகராட்சியில் பள்ளி ஒன்றில் 11 வயதுச் சிறுமி ஷானுகான் ஆங்கில வார்த்தை ஒன்றைச் சரியாக வாசிக்கவில்லை என்பதற்காக ஆசிரியையால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறாள். அவளது முதுகில் செங்கற்களைச் சுமக்க வைத்து கடும் வெயிலில் நிற்க வைத்துள்ளனர். சில நிமிடங்களில் ஷானு மயங்கிச் சரிந்துவிட்டாள். அதன்பின் அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது அவளது மூக்கிலிருந்து இரத்தம் கொட்டத் துவங்கியுள்ளது. மருத்துவமனையில் சேர்த்த மறுநாளில் ஷானுவின் உயிர் பிரிந்துவிட்டது.


சமீபத்தில் 13 வயது கிராமப்புற மாணவனை அவனது தந்தை சிகிச்சைக்கு அழைத்து வந்தார். “வகுப்பு நேரங்களில் அடிக்கடி இவனுக்கு வலிப்பு வந்துவிடுகிறது” என்றும் அதன்பிறகு ஓரிருநாள் உடல் வலியும், கடும் தலைவலியும் நீடிப்பதாகக் கூறினார். ஆங்கில மருத்துவ நரம்பியல் நிபுணரின் ஆலோசனைப்படி மூளையை ஸ்கேன் செய்து பார்த்து, தொடர்ச்சியாக அவரது பரிந்துரைப்படி மருந்து மாத்திரைகள் கொடுத்து வருவதாகவும் கூறினார். ஆயினும் எந்த முன்னேற்றமும் இல்லாமல்…. மீண்டும் மீண்டும் வகுப்பறையில் வலிப்பு வந்துவிடுகிறது என்று வருத்தத்துடன் கூறினார்.

அப்பாவை சிறிது நேரம் வரவேற்பறையில் அமரச் சொல்லிவிட்டு, பையனிடம் நட்போடும் கனிவோடும் வகுப்புச் சூழ்நிலைகள் குறித்து விசாரித்து அறிந்தோம். முதன் முறையாக வலிப்பு வந்த நாளை நினைவு படுத்துமாறு கேட்டோம். அன்று கிராமத்திலிருந்து நகர்நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து இடைவழியில் ஒரு பிரச்சனை காரணமாக 15 நிமிடம் நிற்க நேர்ந்துவிட்டது. அதனால் அவன் சற்று தாமதமாக பள்ளியை அடைந்தான். வாசலில் உடற்கல்வி ஆசிரியர் கோபம் கொப்பளிக்க கையில் பிரம்போடு அவனைக் கடுமையாக உபசரித்திருக்கிறார். 


மனதிலும் உடம்பிலும் பட்ட காயங்களின் ரணத்தோடு வகுப்பறையில் இருந்த போது மற்றொரு தாக்குதலை அவன் எதிர்கொள்ள நேர்ந்தது. மாதாந்திர தேர்வுத்தாள் திருத்தப்பட்டு அவற்றை வழங்கிய ஓர் ஆசிரியர் மதிப்பெண் குறைவுக்காக அவனை விசேஷமாகக் கவனித்திருக்கிறார். அந்தப் பாடவேளையில் அடுத்த சில நிமிடங்களில் உடல் நடுங்கி, கண்கள் இருண்டுபோய், தன்னிலை இழந்து முதன் முறையாக வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவன் பள்ளியில் கண்டிக்கப்படும் போதும் தண்டிக்கப்படும் போதும் வலிப்பு வருவது வாடிக்கையாகி விட்டது. அந்தச் சிறுவனுக்கு உரிய மனநல ஆலோசனையும் மலர் மருந்துகள் மற்றும் ஹோமியோபதி சிகிச்சையும் அளிக்கப்பட்டபின் சில மாத காலத்தில் வலிப்பிலிருந்து நலமடைந்தான்.

ஐ.நா. சபையின் குழந்தை உரிமை உடன்படிக்கையில் இந்திய அரசும் கையொப்பம் இட்டுள்ளது. குழந்தைகளைக் கடும் சொற்களாலும் உடல் ரீதியிலும் தண்டிக்க யாருக்கும் உரிமை கிடையாது. இத்தகைய குழந்தை உரிமை மீறல் அனுமதிக்க முடியாத வன்முறை. 1989 ஐ.நா, குழந்தை உரிமை உடன்படிக்கையின் முக்கிய அம்சம், “குழந்தைகளை முறைப்படுத்துவதில் உடல்ரீதியான தண்டனை உபயோகிக்கக்கூடாது…” என்பதுதான். ஆனால் பெரும்பாலான வகுப்பறைகளைக் கோபமும் எரிச்சலும் கோலோச்சுகிறது.

வாழ்க்கையை வாழும் கலையை, வாழ்வியல் பண்புகளைக் கற்றுத்தர வேண்டிய வகுப்பறைகள் சித்ரவதை முகாம்களாய் மாறிவிட்டன. அன்பையும் பண்பையும் அறிவையும் ஊட்ட வேண்டிய ஆசிரியர்களில் ஒரு பகுதியினர்களிடம் கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் காவல் துறையினர் போல மாறிவிட்டனர்.

விவேகானந்தர் மனிதனை உருவாக்கும் கல்வியை வலியுறுத்தினார் (Man Making Education). மகாத்மா காந்தி அவர்கள் உடல், உள்ளம், ஆன்மா மலர்ச்சிக்கு உறுதுணையாகக் கல்வி அமைய வேண்டும் என்று விரும்பினார். மாற்றுக் கல்விக்கான குரல்கள் வலிமையடைந்துவரும் நேரம் இது. மனப்பாட முறை தேர்வுகளை மையப்படுத்திய, வாழ்க்கைக்கு உதவாத கல்வித்திட்டம் இந்தியாவைத் தவிர உலகில் வேறெங்குமில்லை. ‘மதிப்பெண்களை’ வைத்து மாணவனை மதிப்பிடுகிற அபத்தமான, ஆபத்தான கல்வித் திட்டத்தால் கோடிக்கணக்கான இளம் உள்ளங்களின் இயற்கையான பரிணாம மலர்ச்சியும், சுயதிறன்களின் வளர்ச்சியும் மறுக்கப்படுகிறது.



ஒரு பக்கம் பாடத்திட்டமும் மறுபக்கம் பெற்றோர் ஆசிரியரின் அணுகுமுறையும் நம் குழந்தைகளின் நிகழ்காலத்தை பேரச்சம்மிக்கதாய் மாற்றியுள்ளது. பள்ளிப் பிள்ளைகள் இயல்பான மனநிலையோடும் உற்சாகத்தோடும் கல்விகற்க இயலவில்லை. மாறாக எண்ணற்ற பயந்தாங்கொள்ளிகளும், தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களும் தற்கொலை எண்ணம் கொண்டவர்களுமாக மாறுகிறார்கள்; அல்லது வன்முறையாளர்களாய், அராஜகப் பேர்வழிகளாய் பரிணமிக்கின்றனர். இது இன்றைய நமது குடும்ப, சமூக, கல்விச் சூழலின் எதிர்மறை விளைவு.

கோபத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் கொட்டித் தீர்க்கும் இயல்புக்கு ‘CHERRY PLUM’, மாணவர்களை எப்போதும் கடுமையாக விமர்சித்துக்கொண்டும், குறை கூறிக் கொண்டும் வகுப்பறைறை வசையறையாக மாற்றும் இயல்புக்கு ‘HOLLY’ ‘WILLOW’, பொறுமையற்ற தன்மையும், பரபரப்பும், மாணவர்களை வேகப்படுத்தும் மனநிலைக்கு ‘IMPATIENCE’ , நல்லதோ கெட்டதோ தான் சொல்வதைக் கேட்டுத்தான் தீரவேண்டும் என்று வகுப்பறையை தனது அதிகாரக்கூடமாக மாற்றும் ஹிட்லர் மனநிலைக்கு ‘VINE’ போன்ற பாச் மலர் மருந்துகள் பயன்படும். இத்தகைய குணங்கள் ஆசிரியப் பணிபுரிவோரின் ஆளுமையில் படிந்த கறைகள்.


இன்றைய காலத்தில் மிகைச் செயல்பாடு (Hyperactive) கொண்ட சிறுவர்களின் எண்ணிக்கை பெருகி வருவது கவலைக்குரியது. இவர்களால் மனம் ஒன்றிக் கல்வியில் ஈடுபடமுடியாது. இப் பிரச்சனையை Attention Deficit Hyperactive Disorder (ADHD) என்று மருத்துவத் துறையில் குறிப்பிடுகிறார்கள்.

சில குழந்தைகளுக்கு Dyslexia என்ற கற்றல் குறைபாடு பிரச்சனை உள்ளது. இவர்களுக்கு கரும்பலகையில் வரையப்படும் நேர்கோடுகள் வளைந்து நெளிந்து தெரியும். எழுத்துக்களும், எண்களும் தலைகீழாகத் தெரியும். கண்ணாடியில் பார்ப்பது போல் எழுத்தின் அமைப்பு மாறுபட்டுத் தெரியும். சமீபத்தில் மும்பையில் ஒரு டிஸ்லெக்ஷியா குழந்தையை ஆசிரியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதால் மரணமடைந்து விட்டதாக செய்தி வெளிவந்தது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் இத்தகைய குழந்தைகளை அடையாளம் கண்டு மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவது அவசியம். 

ஆங்கில மருத்துவத்தில் மன வளர்ச்சிக் குறைபாடுகளுக்கோ (Mental Retardation) ADHD, AUTISM, DYSLEXIA போன்ற நவீனகால குழந்தை உளவியல் சிக்கல்களுக்கோ சிறப்பான சிகிச்சைகள் உருவாகவில்லை. இதனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் இத்தகைய பிரச்சனைக் குழந்தைகளின் எண்ணிக்கை பெருகியுள்ளன. மாற்று மருத்துவங்களில் குறிப்பாக ஹோமியோபதி மற்றும் மலர் மருத்துவத்தில் இப்பிரச்சனைகளுக்கு சிறப்பான பலனளிக்கும் பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் உள்ளன. இத்தகைய குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும், சமூகமும் ஆதரவோடும் அரவணைப்போடும் கையாள்வது அவசியம். இத்தகைய குழந்தைகளிடம்கூட ஆசிரியர் கோபத்துடன் வழக்கமான அணுகுமுறைகளுடன் நடந்து கொள்வது ஆபத்தில் முடியும்.

இன்றைய கல்வித் திட்டத்தில் உடனடியாக பெரும் மாற்றம் ஏற்படப் போவதில்லை என்றாலும் கற்பிக்கும் அணுகுமுறையில் வகுப்பறைச் சூழ்நிலையில் அன்பும் நட்பும் கலந்த நேரிய (Positive) அணுகுமுறையை ஆசிரியப் பெருமக்கள் கடைப்பிடித்தால் மாணவர்களின் மனநலமும் உடல் நலமும் சிதையாமல் ஆரோக்கியமாக அமையும்.

Thirukkural - Management - Managing Anger
“Anger,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 39), “is a strong feeling of annoyance and hostility.”

“Anger can lead to heartbreak. A person's risk of having a heart attack increased nearly fivefold within two hours of having an angry outburst, Harvard University review of more than 6000 people. Anger ups heart rate and blood pressure and makes blood vessels stiffen, straining the cardiovascular system” (Source: Reader's Digest, August 2014, p 117).

The Practice on ‘Anger' contains six Kurals to educate us on the negative consequences  of the most destructive emotion: anger. 

A common and inexcusable excuse by most of us is that we are not able to manage our anger consciously. We say that we are not conscious of our anger, certain incidents trigger them, and that we find it difficult to control anger consciously. At times, our anger goes out of control. On the contrary, besides all these flimsy excuses, we are conscious of our anger and we can consciously control anger. We manage or control our anger depending upon the situations and based on the consequences of expressing our anger. Kural 301 supports that possibility.

The real curb is curbing elective wrath;
What matters other wrath, curbed  or uncurbed!

True and conscious control of anger is controlling  anger that can harm or damage the receiver. Can you control your anger when expressing that out can hurt or injure someone? Controlling  your anger where your anger is impotent or powerless is not true control. When your anger can have negative consequences for you and if you control that, that is not control of anger. Anyone can control one's anger in that sort of situation, as there is no alternative. He is forced to accept the reality.

If  we say we cannot control anger consciously, how is that we can control that in the presence of an employer, a police officer, a street thug, a robber at gun point, or anyone who is more powerful than us? We consciously become submissive and we surrender ourselves when someone encounters us with a gun. Whereas, we unleash our anger at a dependent employee because we are sure that he will not be able to fight back for fearing consequences.

English Meaning - As I taught a kid - Rajesh
When we show anger two things can happen 1) The opposite person will suffer, get sad, tolerate it and not oppose 2) The opposite person does not give a damn and ignores it.

Hence, a person should control himself and not show his anger because his/her anger is tolerate by the person in his/her circle such as mom, father, spouse, children, friends etc. Remember, it has both short term impact (harmony is lost) and long term impact (relationships are broken). And it doesn't mattter whether you control or you dont control against a person who doesn't give a damn. Hence, don't get anger because anger distracts you.

Questions that I ask to the kid
1) At whom should we control the anger?
2) At whom controlling anger doesn't matter? and why? So, should we still get angry with them?

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

குறள் 306
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 
ஏமப் புணையைச் சுடும்.
[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]

பொருள்
சினம் - கோபம்; நெருப்பு; போர்; வெம்மை.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

சினமென்னும் - சினம், வெகுளியாகிய விலக்கத்தக்கவை

சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

சேர்ந்தார் - அடைக்கலமடைந்தவர்; நண்பர்; உறவினர்.

சேர்ந்தாரைக் – யார் அவற்றைக் கொள்கிறார்களோ

கொல்லுதல் -  வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்

கொல்லி - கொல்லும்தன்மையது; சேலம்மாவட்டத்திலுள்ளமலை; மருதயாழ்த்திறவகை, பண்வகையுள்ஒன்று; கொல்லிப்பாவை.

கொல்லி – அவர்களையே அழிக்கும் தன்மையது (முந்தைய குறள்களைப் பார்க்க)

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

இனமென்னும் – (அத்தகைய சினமானது), தம்மைச் சார்ந்தவர்களாகி, தவத்துக்கு உறுதுணையானவர்களை

ஏமம் - இன்பம்; களிப்பு; மயக்கம்; காவல்; இரவு; பொன்; திருநீறு; இடுதிரை; பாதுகாவல்; வலிமை; சேமநிதி.

ஏமப் – தன்னுடைய சேமத்துக்கு, நலத்துக்கு

புணை - தெப்பம்; மரக்கலம்; உதவி; மூங்கில்; விலங்கு; ஈடு; ஆள்பொறுப்பு; ஒப்பு.

புணையைச் – கட்டுக்காவலாக, உறுதியாக, உதவியாக, கரையேற்றும் தோணியாக இருப்பவர்களைச்

சுடும் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

சுடும் – தீங்கென்னும் தீயினால் சுட்டெரித்து, அவர்களை விலக்கிவிடும்

மேலும்: அஷோக்

ஒப்புமை
“சினக்கொ டுந்திறர் சீற்றவெந் தீயினான்” (கம்ப.கிளைகண்டு 3)

“மூங்கிலிற் பிறந்து முழங்குதீ மூங்கில்
முதலற முருக்குமா போலத்
தாங்கருஞ் சினத்தீத் தன்னுளே பிறந்து
தன்னுறு கிளையெலாம் தகிக்கும்
ஆங்கதன் வெம்மை அறிந்தவர் கமையால்
அதனையுள் ளடக்கவும் அடங்கா
தோங்கிய கோபத் தீயினை ஒக்கும்
உட்பகை உலகில்வே றுண்டோ” (உத்தர.இலவணன் 29)

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
சினம் என்பது யாரிடம் இருக்கிறதோ அவர்களை அழித்து விடுவதோடு அவருக்கு வாழ்வில் பேருதவியாக இருக்கும் அருநட்பையும் கெடுத்து விடும் என்று எடுத்துக் கூறுகிறது இக்குறள். எவ்வாறு என ஆராய்வோம். பரு உடலில் விண் துகள் தொடரியக்கமான நுண் உடல் எனும் சூக்கும ஆற்றல் எங்கும் விரைவாக உடல் முழுவதும் நிரம்பி ஓடிக் கொண்டிருக்கிறது. விண் துகள் விரைவான தற்சுழற்சி இயக்கம் உடையது. அதனால், அச்சுழற்சி விரைவிலிருந்து தொடர்ந்து ஒரு அலை தோன்றி, உடல் முழுவதும் இறைவெளியோடு கலந்து சீவகாந்தமாக இயங்குகிறது. மனத்தால் ஆகும் உடற் கருவி இயக்கங்களும், செயல்களால் ஆகும் உடற் கருவி இயக்கங்களும், சீவ காந்த அலையில் திரள்களை உண்டு பண்ணுகின்றன. ஒவ்வொரு திரளும் குறிப்பிட்ட குணநலன்களை உடையது (Characteristic Magnetic Domain) ஆகும். இவற்றைக் கருமையத்திலுள்ள சீவகாந்தச் சுழல் ஈர்த்துச் சுருக்கி நிழலில் நிழல் போன்று இருப்பு வைத்துக் கொள்ளுகிறது. இதுவே வினைப்பதிவு ஆகும். பிறகு அவ்வப்போதைய சூழ்நிலைகளுக்கும் மன அலைச்சுழல் விரைவுக்கும் ஏற்ப கருமையத்தில் சுருங்கியுள்ள பதிவுகள் மூளையின் செல்களால் விரித்துக் காட்டப்பட்டு எண்ணங்களாகின்றன. அதற்கேற்றவாறு உடல் கருவிகள் தூண்டப்பட்டு செயல்களாக மலர்கின்றன. மனிதனுடைய கருமையத்தில் அளவற்ற செயல்திறமைகளும், அறிவின் ஆற்றல்களும் அமைந்துள்ளன. அவற்றின் முழுமையும் நோக்கமும் அவன் தோற்றத்துக்கும் மூலமான இறைநிலையை அறியவும் அடையவும்தான் ஆகும். 

புலன் கவர்ச்சியால் மனம் சிறு சிறு பொருளையும் இன்பங்களையும் துய்த்தலால் அறிவுத் திறமையும், ஆற்றலும் தடைபட்டு, தேக்கமுற்று, அதன் இயக்க விரைவு தன்முனைப்பு என ஆகிறது. இந்த தன்முனைப்பு, பொருட்கள் மீதும் மக்கள் மீதும் தொடர்பு கொண்டு, பேராசை, சினம், கடும்பற்று முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு உணர்ச்சிவயமான  குணங்களாவும் மாறுகின்றன. இந்த உணர்ச்சிவயமான ஆறு குணங்களோடு மனிதன் செயல்புரியும்போதுதான், பொய், சூது, கற்பு நெறி பிறழ்தல், கொலை, களவு எனும் ஐந்து பெரும் பழிச் செயல்களைப் புரிகிறான். மனித குல வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும் பிணக்குகளும் போர்களும் உண்டாகின்றன.

இத்தகைய கேடுகளை விளைவிக்கும் உணர்ச்சி வயமான குணங்களில் சினமும் ஒன்று. சினம் ஒருவரிடம் எழும்போது உடலிலும் மனதிலும், சுற்றத்தாருக்கும் சில சில கேடுகள் ஏற்படும். அக்கேடுகள் வினைப்பதிவுகளாகி, அடிக்கடி அதே எண்ணம், அதே செயல், எழுந்து வாழ்வைத் துயர் அடையச் செய்யும்.

சீவகாந்த அலையே மனம். புலன்களை விழிப்பு நிலையில் இயக்கும்போது மன அலைச்சுழல் வினாடிக்கு 14 முதல் 40 வரையில் இருப்பதாகக் கணக்கெடுத்துள்ளார்கள். விஞ்ஞானிகள் அதற்குரிய கருவியான (E.E.G) எலக்ட்ரோ என்செப்லோகிராம் கொண்டு இந்த நிலையில் இயங்கும் மன அலைக்கு பீட்டா அலையென்றும் பெயர் கொடுத்திருக்கிறார்கள். சினம் எழும்போது பீட்டா அலை மிகவும் விரைவு கொள்ளும். அதனால், சீவகாந்த ஆற்றலை மிகுதியாகச் செலவாக்கி விடும். இந்த விரைவான உணர்ச்சிவயப்பட்ட அலையால் காந்த ஆற்றல் குறைவுபடுகிறது. இயற்கை அதை உடனே சமன் செய்யத் தொடங்குகிறது. ஒவ்வொரு உயிர்த்துகளிலும் தற்சுழல் விரைவு அதிகமாகிறது. இதனால் காந்த ஆற்றல் கூடி அதன் இருப்பில் சமநிலைக்கு வருமேயானாலும், தொடர் விளைவுகளை சிந்திப்போம். விரைவான தற்சுழற்சி உயிர்த்துகள் அடையும்போது, அவன் ஒவ்வொன்றுக்கும் இடையில் இயல்பாக அமைந்துள்ள இடைவெளி அதிகமாகிறது. இதனால் சூக்கும உடலின் பருமன் பெருகுகின்றது. உதாரணம்: தண்ணீரை சூடேற்றினால் நீர் ஆவியாகி அதன் பருமன் விரிவடைந்து, ஒன்றுக்கு நூறாக விரிவடைவது போல, தூல உடலுக்குள் இருக்கும் சூக்கும உடல் (உயிர் ஆற்றல்) விரிவு பெற்றால், உடலை விட்டும் அது வெளியே பிதுக்கம் (Extension) பெறும். அப்படி வெளியே போகும் உயிராற்றல் மீண்டும் உடலுக்குத் திரும்பாது. இதனால் உயிரின் திணிவு குறைந்து வலுவு குறையும். மேலும் உயிராற்றல் விரிவு மூளை செல்களில் மோதும். என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சிந்திக்கும் நிலையே மாறி ஒரு வித போதை நிலையுண்டாகும். பொருளை அழிக்கவோ, மக்களின் உடலுக்கும் மனதுக்கும் துன்புறுத்தவோ தக்க செயல்கள், முரட்டுச் செயல்கள் உருவாகும். 

மேலும் அதன் தீயவிளைவுகளைக் கணிப்போம். சூக்கும ஆற்றலின் விரிவு இரத்தத்தை விரைவாக ஓடச் செய்து, இரத்த அழுத்தத்தை விரைவாக ஓடச் செய்து, இரத்த அழுத்தத்தை (Blood Pressure) அதிகரிக்கும். இதனால், இருதயத் துடிப்பும், நரம்புகள் இயக்கமும் பாதிக்கப்பட்டு கை, கால்கள் நடுக்கமும் உண்டாகும்.

இவ்வளவு விளைவுகளும் ஒரு தடவை சினம் கொள்ளும்போது சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ தவிர்க்க முடியாதபடி ஒரு மனிதனுக்கு ஏற்படுகிறது. அடிக்கடி சினம் கொள்பவர்கள் உடல்நலமும், மனவளமும் என்ன ஆகும் ? இந்த விளக்கங்களை உள்ளடக்கியே, சினம் சேர்ந்தாரைக் கொல்லி எனப்படுகிறது. சினம் கொள்ளும் மனிதன், வளத்தையே அழிக்கிறது என்பதுதான் பொருள். 

மேலும் ஒரு எச்சரிக்கை கொடுக்கிறார். "இனம் எனும் ஏமப் புணையச் சுடும்" என்று. மிகவும் மதிப்புடைய இன்றியமையாத நட்பையும் சுற்றத்தையும் வெறுப்பு கொண்டோடச் செய்யும் என்பதே இதன் கருத்து. இது எவ்வாறு என்று சிந்திப்போம். 

மனிதனுக்குப் பொதுவாக யாரிடம் சினம் எழுகிறது ? யார் மீது சினம் உண்டாகிறது ? யார் ஒருவர் அவர் நலனுக்காகவே அன்போடும் பணிவோடும் அக்கரையோடும் உதவி செய்கிறார்களோ அல்லது தொண்டு செய்கிறார்களோ அவர்கள் மீதுதான் அடிக்கடி சினம் எழுகிறது. நலம் செய்பவர்களைப் பாராட்ட வேண்டும். நன்றி செலுத்த வேண்டும். இதுதான் மனிதப் பண்பு. மாறாக அவர்மீது சினம் கொண்டால், அந்த இழிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் வருந்துவார். அவர் வருத்த அலை சினம் கொண்டவர்களுக்குச் சாப அலையாகப் பதிவாகும். விளைவு உறவிலே உள்ள அன்பும் பிடிப்பும் குறையும் அல்லது முறிந்து போகும். சாப அலைப் பதிவினால் மனதின் அமைதி நிலை பாதிக்கப்படும். இவையெல்லாம் உணர்ந்த பேரறிஞர் திருவள்ளுவர் சினம் என்பது அது யாரைச் சேருகிறதோ அவர் நலம் அழிப்பதோடு அவருக்கு உள்ள அன்புள்ள நட்பையும், உறவையும் கெடுத்துவிடும் என்று கூறுகிறார், உலக மக்கள் உய்ய வேண்டுமென்ற கருணை உள்ளத்தோடு.

“கறந்த பால் முலைபுகா, கடைந்த வெண்ணெய் மோர்புகா, 
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா, 
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும்போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே”
- சிவவாக்கிய

ஆத்திச்சூடி
ஆறுவது சினம்
கடிவது மற
சுளிக்கச் சொல்லேல்
வெட்டெனப் பேசேல்.
முனைமுகத்து நில்லேல்.
வாது முற்கூறேல்
தீவினை அகற்று
நைவினை நணுகேல்
நொய்ய உரையேல்
நோய்க்கு இடம் கொடேல்.
மனம் தடுமாறேல்

நன்றி: அம்மன் தரிசனம்


ற்றங்கள் படகு போன்றவர்கள். கோபம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி, ஒரு கொள்ளிக் கட்டையாகி அப்படகிலே ஓட்டை போடுகிறது. விளைவு? எல்லாரும்தானே மூழ்க வேண்டும்?

தோணியை எரித்துவிட்டுக் கடலைத் தாண்ட முடியுமா? சுற்றங்களைத் தொலைத்துவிட்டு அமைதி காணமுடியுமா? ஆனால் கோபம் தோணியை எரிக்கிறது. பாதி வழியில்...

ஆனாலும் பாருங்கள். இந்தக் கோபத்தைப் பலரால் விட முடியவில்லை. கோபத்தின் விளைவாக எல்லாம் இழந்து பிச்சைக்காரன் ஆனான் ஒருவன். ஆனாலும் சக பிச்சைக் காரனிடத்தில் தன் கோபத்தைக் காட்டிக் கொண்டுதானிருந்தான்.

சிலர் கோபத்தில் தன்னைத் தானே வதைத்துக் கொள்வதும் உண்டு. தனக்குத்தானே சூடும் போட்டுக் கொள்ளுதல், தன்னைத் தானே பட்டினி போட்டுக் கொள்ளுதல்... இப்படி சுயதண்டனை அளிப்பதும் உண்டு. இதுவும் கூடாது.

இதுவரை யாரும் கோபத்தால் யாரையும் திருத்த முடிந்ததில்லை. கோபத்தால், தான் எதிர்பார்த்த பலனை அடைந்ததுமில்லை.

யாராவது தவறு செய்தால் அதைப் பக்குவமாக எடுத்துச் சொல்லவேண்டும். தவறுகளைத் திருத்த அதுதான் வழி.

ஒரு குழந்தை சிலேட்டில் ஓர் எழுத்தைத் தவறாக எழுதிவந்து காட்டுகிறது. தலையில் குட்டுவைக்கிறோம். அது நல்ல பலனைத் தருமா?

குழந்தை அழ ஆரம்பிக்கும். குட்டுப்பட்டது மறக்கும் வரை எழுதுவதில் கவனம் செலுத்த முடியாமல் போகும் அதற்கு. அதே போலத்தான் பெரியவர்களின் நிலையும் இருக்கிறது.

எப்போதோ, இராமன் எறிந்த மண் உருண்டை கூனியின் மீது பட்டுவிட்டதாம். அது பட்டாபிஷேகத்தைச் சிதறடித்துவிட்டது. அறியாமல் செய்த சிறு தவறுக்குக் கூட, பழிவாங்கத் துடிக்கும் உலகம் இது.

நாம் “திருத்துகிறேன் பார்” என்று செய்யும் தவறுகளை எப்படி பாவிக்குமோ? என்ன பலனைத் திருப்பித் தருமோ யார் கண்டார்? ஆகவே கோபம் கொள்வது தனக்குத்தானே தீமை தேடுவதாகவே முடிகிறது.

பரிமேலழகர் உரை
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - சினம் என்னும் நெருப்பு; இனம் என்னும் ஏமப் புனையைச் சுடும் - தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புனையையும் சுடும். 

விளக்கம்
(சேர்ந்தாரைக் கொல்லி' என்பது ஏதுப் பெயர்; 'தான் சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது' என்றவாறு. 'சேர்ந்தாரை' என உயர்திணைப் பன்மைமேல் வைத்து, ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின், 'சினமென்னும் நெருப்பு' என்ற விதப்பு, 'உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே; 'இந் நெருப்புச் சேராத இடத்தையும் சுடும்,' என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு 'இனம்' என்றது, முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியயராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை. உருவகம் நோக்கிச் 'சுடும்' என்னும் தொழில் கொடுத்தாராயினும், 'அகற்றும்' என்பது பொருளாகக் கொள்க. ஏமப்புணை - ஏமத்தை உபதேசிக்கும் புணை. 'இனம் என்னும் ஏமப்புணை' என்ற ஏகதேச உருவகத்தால், 'பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற' என வருவித்து உரைக்க. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து, எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி- சினம் என்னும் நெருப்பு; இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்- தன்னைச் சேர்ந்தவரை மட்டுமின்றி, அவருக்குத் துன்பக்காலத்தில் ஏமப் புணைபோல் உதவும் இனத்தாராகிய தன்னைச் சேராத வரையுஞ் சுடும்.

சேர்ந்தாரைக்கொல்லி என்னும் பெயரிலுள்ள பலர்பா லீறு ஏனை நான்கு பாலையுந் தழுவும். இத்துறவறவியலிற் கூறப்பட்டுள்ள அறங்களுட் சில இருவகை யறத்திற்கும் பொதுவென்பது முன்னரே கூறப்பட்டது. அவற்றுள் வெகுளாமை என்பது ஒன்று. இருவகை யறத்தார்க்கும் இனமாக உள்ளவர் துன்பக் காலத்தில் உதவித் தூக்கியெடுத்தலால், அவரை ஏமப்புணையாக உருவகித்தார். ஏமப் புணையாவது, நடுக்கடலிற் கப்பல் மூழ்கும்போது கலவர் ஏறித்தப்பும் ஏமப் படகு. (life-boat) வாழ்க்கைக் கடலைக்கடக்கும் இல்லறத்தார்க்கு இடுக்கட் காலத்தில் உதவிக்காக்கும் இனத்தார் ஏமப்புணையார்; பிறவிக் கடலைக் கடக்கும் துறவு பயில்வார்க்குத் தவவோகங்களில் தவறு நேர்ந்து அவர் கெடும் நிலையில் அவரைத்திருத்தி ஆற்றுப்படுத்தும் முழுத்துறவியர் ஏமப்புணையார். 'சேர்ந்தாரைக்கொல்லி' தீக்கு ஒரு பெயர்.

சுடுதல் சேர்ந்தவரை வருத்துதலும் சேர்ந்தவரைச் சேர்ந்தாரைத் தாக்குதலும். கனல்தீ உடல் தொடர்பு கொண்டாரை மட்டும் வருத்த, சினத்தீ உடல் தொடர்பு கொண்டாரொடு உளத்தொடர்பு கொண்டாரையும் வருத்தும் என்பதாம். புணையையும் என்னும் எச்ச உம்மை தொக்கது. வெகுளி என்னுஞ் சொல்லின் வேர்ப்பொருளே எரிவது என்பதாம். வேகு-வெகுள்-வெகுளி.

மணக்குடவர் உரை
சினமென்று சொல்லப் படுகின்ற நெருப்பு தான் துன்பக்கடலிலழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும். 
சேர்ந்தாரைக் கொல்லி- நெருப்பு: இது காரணக்குறி. இது சினம் தன்னை யடுத்தாரைக் கொல்லு மென்றது.

மு.வரதராசனார் உரை
சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

சாலமன் பாப்பையா உரை
சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - வெகுளி என்று சொல்லப் படும் தீ, இனம் என்னும் ஏம புணையை சுடும் - சுற்றம் என்று சொல்லப்படும் காப்புத் தோணியை எரிக்கும்.

அகலம்: தான் சேர்ந்த பொருளை அழித்தலால் ‘தீ சேர்ந்தாரைக் கொல்லி’ என்ற பெயர் பெற்றது. கொல்லி என்பது வினையாலணையும் பெயர். இத் தீ ஏனைய தீப் போலல்லாமல் தன்னைச் சேர்ந்தாரையும் தன்னைச் சேராதாரையும் ஒருங்கு அழிக்கும் என்றார்.

Thirukkural - Management - Managing Anger
The danger of anger is twofold. Anger not only kills the possessor of it, but also all the other people related to the possessor, confirms Kural 306. One's anger destroys one's name, fame, wealth, position, and relatives. Many people have lost so many things in their lives just because they could not contain their anger. There are many incidents of people, reputed and respectable, losing their respect in the society because of their inability to contain their anger. Losing your anger is not a loss. But losing your anger is a gain for you.

Wrath is a fire which hills near and far 
Burning both kinsmen and life's boat.

Guard yourself, your family, and your society by guarding yourself against the most destructive negative emotion, anger. Anger leads to emotional derailment and prevents you from coming back to the main track.