Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

கெடாஅ வழிவந்த கேண்மையார்

குறள் 809 அதிகாரம்: பழைமை.
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை 
விடாஅர் விழையும் உலகு.

கெடாஅ - கெடாமல்,சீர் குலையாமல்

கேண்மை -நட்பு ,உறவு
விடாஅர் - விடாமல்
விழையும் - விரும்பும்
உலகு- உலகம்

முழுப்பொருள் :
உரிமை சிறிதும் குறையாமல் ,நட்பு கெடாமல், தொன்று தொட்டு தொடர்ந்து வரும் பழைய நட்பை, என்றும் விடாமல் விரும்பி போற்றும் இந்த உலகம்.

உதாரணமாக ,எத்தனையோ நட்புகள் நம் அன்றாட வாழ்க்கையில் தோன்றினாலும் , பள்ளி பருவத்திலிருந்து வரும் உரிமையான நட்பு(உரிமையுடன் கோபம் கொள்வது, உரிமையுடன் சண்டை இடுவது உட்பட ) நமக்கு என்றும் தனி சிறப்பிற்கு உரியதாக இருக்கும்.


மணக்குடவர் உரை: 
குற்றம் உண்டாயின் அவ்விடத்து நட்பினிற் கெடாராய்க் குலத்தின்வழி வந்த நட்புடையாராது நட்பை விடுதலின்றி உலகத்தார் விரும்புவர். இது பழைமையைக் கொண்டாடுவாரை உலகத்தார் தாமும் நட்பு ஆகுதற்கு விரும்புவர் என்றது.



No comments:

Post a Comment