குறள் 414
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
[பொருட்பால், அரசியல், கேள்வி]
பொருள்
கற்று - கற்றல் - பயிலுதல் , படித்தல்
இலன் - இல்லை என்று, இல்லாதவன்
கற்றிலன் - நூல்களை கற்கவில்லை
ஆயினும் - என்றாலும்; ஆனாலும்; ஆவது உம்மைப் பொருளில் வரும் எண்ணிடைச்சொல்.
கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்
கேட்க - செவி வழியாக சான்றோர்களிடமாவது கேளுக
அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி
அஃது - அத்தகைய கேள்விச் செல்வம்
ஒருவற்கு - ஒருவருக்கு, ஒருவனுக்கு
ஒற்கத்தின் - ஒற்கம் - தளர்ச்சி; வறுமை; குறைவு; அடக்கம்; பொறுமை.
ஊற்று - ஊற்றுத்துளை; நிலத்தடியில்நீர்ஊற்றுள்ளஇடம் - ஊன்றுப் போல்
ஆம் - போன்று, நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.
துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).
துணை - துணையாக இருக்கும்
முழுப்பொருள்
ஒருவர் நல்ல அற/நீதி நூல்களை கல்லாமல் இருக்கலாம். அல்லது நூல்கள் கற்க வாய்ப்பு அமையாமல் போகலாம். ஆனால், அவ்வற நூல்களை நன்கு கற்ற சான்றோர் சொல்லும் சொற்களை கேட்கவாவது வேண்டும். அது நூல்களை கற்பது அடுத்தபடியா சிறந்ததாகும்.
அத்தகைய கேள்விச் செல்வம் ஒருவர் சோர்வாக இருக்கும் பொழுது அவருக்கு ஊன்று கோலாய் துணை நிற்கும் என்கிறார் திருவள்ளுவர்.
ஒருவருக்கு சோர்வு எனப்படுவது கல்லாதனால் வரும் துன்பங்களினால் ஏற்படுவது ஆகும். அத்தளர்ச்சியாவது, வறுமையாலேனும் அறியாமையாலேனும் நோயினாலேனும் இழப்பினாலேனும் நேரும் மனத்தடுமாற்றம் ஆகும்.
அத்தகைய தளர்ச்சியின் பொழுது ஊன்றாய் இருப்பது கேள்விச் செல்வம். இங்கே நாம் மற்றொன்றும் நோக்க வேண்டும். அது, ஊன்று என்ற வார்த்தையின் பயன்பாடு. கேள்விச் செல்வம் ஊன்றாய் மட்டும் தான் துணை நிற்கும். நூல்கள் கற்பதனால் வரும் அறிவை முழுமையாய் கொடுக்காது.
ஒருவர் நல்ல அற/நீதி நூல்களை கல்லாமல் இருக்கலாம். அல்லது நூல்கள் கற்க வாய்ப்பு அமையாமல் போகலாம். ஆனால், அவ்வற நூல்களை நன்கு கற்ற சான்றோர் சொல்லும் சொற்களை கேட்கவாவது வேண்டும். அது நூல்களை கற்பது அடுத்தபடியா சிறந்ததாகும்.
அத்தகைய கேள்விச் செல்வம் ஒருவர் சோர்வாக இருக்கும் பொழுது அவருக்கு ஊன்று கோலாய் துணை நிற்கும் என்கிறார் திருவள்ளுவர்.
ஒருவருக்கு சோர்வு எனப்படுவது கல்லாதனால் வரும் துன்பங்களினால் ஏற்படுவது ஆகும். அத்தளர்ச்சியாவது, வறுமையாலேனும் அறியாமையாலேனும் நோயினாலேனும் இழப்பினாலேனும் நேரும் மனத்தடுமாற்றம் ஆகும்.
அத்தகைய தளர்ச்சியின் பொழுது ஊன்றாய் இருப்பது கேள்விச் செல்வம். இங்கே நாம் மற்றொன்றும் நோக்க வேண்டும். அது, ஊன்று என்ற வார்த்தையின் பயன்பாடு. கேள்விச் செல்வம் ஊன்றாய் மட்டும் தான் துணை நிற்கும். நூல்கள் கற்பதனால் வரும் அறிவை முழுமையாய் கொடுக்காது.
ஒப்புமை
”உணற்கினிய இன்னீர் பிறிதுழி இல்லென்னும்
கிணற்றகத்துத்தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப்பகலும் முனியா தினிதோதிக்
கற்றலிற் கேட்டலேநன்று” (பழமொழி 61)
ஆத்திச்சூடி
கேள்வி முயல்.
பேதைமை அகற்று.
ஆத்திச்சூடி
கேள்வி முயல்.
பேதைமை அகற்று.
பரிமேலழகர் உரை
கற்றிலன் ஆயினும் கேட்க - உறுதி நூல்களைத் தான் கற்றிலன் ஆயினும், அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க; அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை - அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக் கோடாம் துணை ஆகலான்.
விளக்கம்
('உம்மை' கற்க வேண்டும் என்பது பட நின்றது. தளர்ச்சி - வறுமையானாதல் அறிவின்மையானாதல் இடுக்கண்பட்டுழி மனம் தளர்தல். அதனைக் கேள்வியினானாய அறிவு நீக்கும் ஆகலின், 'ஊற்றாம் துணை' என்றார். 'ஊன்று' என்னும் ஆகுபெயரின் னகரம் திரிந்து நின்றது.)
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கற்றிலன் ஆயினும் கேட்க -- ஒருவன் பொருள் நூல்களையும் உறுதிநூல்களையும் கற்றிராவிடினும், அவற்றைக்கற்றுத்தேர்ந்த பேரறிஞரிடம் கேட்டறிக; அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை - அக்கேள்வியறிவு ஒருவனுக்கு உலகியல் துறையிலேனும் ஆதனியல் (Spiritual) துறையிலேனும் தளர்ச்சி நேர்ந்த விடத்து ஊன்று கோலாந் துணையாகும்.
இழிவு சிறப்பின் பாற்பட்ட ஒத்துக்கொள்வு (Concessive ) உம்மை, கற்றிருத்தல் வேண்டுமென்னுங் குறிப்பினது.
"கல்லாரே யாயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர்-தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு" (நாலடி, 139).
தளர்ச்சியாவது, வறுமையாலேனும் அறியாமையாலேனும் நோயினாலேனும் இழப்பினாலேனும் நேரும் மனத்தடுமாற்றம். 'ஊற்று' முதனிலை திரிந்த தொழிலாகுபெயர். 'அஃதொருவற்கு' என்பது 'அதுவொருவற்கு' என்றிருந்திருத்தல் வேண்டும்.
"அன்பீனு மார்வ முடைமை யதுவீனும் "(74),
"ஈத லிசைபட வாழ்த லதுவல்ல(து)"(231),
"பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்(து)"(533)
"கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல"(து)(570),
"கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேல்"(1144)
என்னும் அடிகளை நோக்குக.
மு.வரதராசனார் உரை
நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.
சாலமன் பாப்பையா உரை
கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.
நன்றி ரிஷ்வன்
நூல்களைக் கற்றவனிடம்
கேள்வி ஞானத்தோடு
கல்லாதவன் கேட்டறிதல்
தள்ளாடும் வயதில்
ஊன்றுகோலாய் துணையாகும்.
நன்றி ரிஷ்வன்
நூல்களைக் கற்றவனிடம்
கேள்வி ஞானத்தோடு
கல்லாதவன் கேட்டறிதல்
தள்ளாடும் வயதில்
ஊன்றுகோலாய் துணையாகும்.
Thirukkural - Management - Listening
Among all the wealth, the greatest wealth is listening. Listening is a supreme wealth. What has convinced Valluvar to confirm that listening is the best wealth among all the other wealth? There are many benefits of effective listening. They are presented in Kural 414.
Though unfettered, listen; you will find this
A great help in distress.
Even if one has not learned, or got the chance to get educated, one has to cultivate the habit of listening to learned and wise people so that that learning will act as a prop, support, or assistance when one is in a crisis. The advantage of attentive listening is that that type of listening gets into your subconscious mind. When a thought, idea, or concept is registered in your subconscious mind, that thought, idea, or concept stays there for long. And the same thing can be retrieved whenever needed. Two things influence the development of an individual. They are intuition and tuition. Tuition that is learning through listening can add to one's intuition.
No comments:
Post a Comment