Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

 

குறள் 1100
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள் 
கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணொடு - கண்ணுடன் 

கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இணை - இசைவு; ஒப்பு இரட்டை உதவி கூந்தல் எல்லை இணைத்தொடை; (வி)சேர்; கூட்டு

நோக்கு - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

ஒக்கின் - ஒக்குதல் - ஒத்திருக்கை; கொப்புளித்தல்; பிற்படவிடல்.

வாய்ச் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

சொற்கள் - சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

என்ன - யாது; என்னபயன்; ஓர்உவமவுருபு.

பயனும் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

இல - இல்லை - illai   1. ille இல்லெ 2-3. ille, -(1)le இல்லெ, (-ல்)லெ 1. no (int.) 2. not (neg. v.) 3. isn't it? (with rising intonation); you know! (with falling intonation) tag marker  

முழுப்பொருள்
காதலர் ஒருவர் கண்ணின் பார்வைக்கு ஏற்றவாரு மற்றொருவரின் (அப்பார்வைக்கான) இசைவுக் கொண்ட கண் நோக்க ஒத்திருந்தால் அவர்கள் கண்களின் மூலம் பேச துவங்கிவிட்டார்கள் என்று அர்த்தம். அவர்களின் அகம் கண்களின் மூலமாக பேசுகிறது. அதன் பிறகு அவர்கள் வாய் மூலம் பேசினால் என்ன பேசாவிட்டால் என்ன? ஏனெனில் அவர்கள் வாய் சொற்களால் பேசி ஒரு பயனுமில்லை. 

கம்பன் இதையொட்டியே மிதிலைப்படலத்தில் (25) வரும், “கண்ணொடு கண்ணினை கௌவி ஒன்றை ஒன்றுண்ணவும்” வரிகளைச் சொன்னான் போலும்.

அதனால் தான் ”கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்” என்று எழுதினானோ?

”சொல்லும் ஆடுப கண்ணி னாளே” (தொல்.களவு.23.ந.மேற்)
“தூதுசெய் கண்கள்கொண் டொன்று பேசித்
தூமொழி இசைகள் கொண்டொன்று நோக்கி” (திருவாய் 9,9,9)

“கூற்றம் போலுங் கொலைக்கண்ணி னாலன்றி
மாற்றம் பேசுகி லாளை” (கம்ப.எழுத்திப் 36)


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது) கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் - காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின்; வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல. (நோக்கால் ஒத்தல்: காதல் நோக்கினவாதல். வாய்ச் சொற்கள்: மனத்தின்கண் இன்றி வாயளவில் தோன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன: அவள் புனங்காவல் மேலும், அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில் சொற்களாகலின்,இவை கொள்ளப்படா என்பதாம். இவை புணர்தல் நிமித்தம்.).

மணக்குடவர் உரை
கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின் வாயினாற் சொல்லுஞ் சொற்கள் ஒரு பயனுடையவல்ல. இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.

சாலமன் பாப்பையா உரை
காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.

Thirukkural - Management - Public Speaking - Body Language
Though Valluvar wrote this kural 1100, to refer to the body languagae of lovers, the message is applicable to body language of everyone. Establshing eye contact is important for all on all occasions. Lovers communicate through their eyes. When the eyes of lovers connect, the words they speak do not have any meaning,

When eyes with eyes commingle
What do words avail?

A person's eye are so powerful that they communicate a lot. When there is a connection of the eyes, the words spoken by the mouth do not have any value over the connection of the eyes.

In common practice, if we understand the language of eyes, we will get many clues to the thoughts of the other person. Eyes communicate passionately. Look people in the eyes. Practice the art of establishing eye contact with your audience. Your eyes are magnetic. They command attention and convince your listeners.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

 

குறள் 1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள் 
ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர்.

போலப் - ஓர்உவமவுருபு, போன்று

பொதுநோக்கு - சமநோக்கு; எல்லோரையும்ஒப்பநோக்குகை; விருப்புவெறுப்பற்றபார்வை; இயற்கையாகஅமைந்தஅறிவு.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

காதலார் - காதலர் 

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணே - இடத்தே

உள - உள்ள, உள்ளல், உள்கல், உள்குதல், நினை, எண்ணு, மதி

உள- உள்ளது, யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால்

முழுப்பொருள்
காதல் வயப்பட்ட பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் காதலித்தாலும் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் பொழுது அயலாரைப் பார்ப்பது போல் பார்த்துக்கொள்கின்றனர். அத்தகைய பார்வை காதலர் கண்களுக்கு உண்டுப் போல.

இதில் மூன்று உள்ளது.
1. ஒருவர் மற்றொருவரை பார்ப்பதுப் போல் பார்க்கிறார்கள். ஆனால் அது காதலர் கண்களில் உள்ளது என்பதனால் அது எவ்வளவு இயல்பாக இருப்பினும் அது சாதாரணப்பார்வைகளில் இருந்து தனித்து தெரிவதால் அது காதலின் குறிப்பு என்று அவர்களுக்கே தெரிந்துவிடுகிறது. அதனால் மற்றொருவர் அதனை உணர்ந்துக்கொள்கிறார்.

2. ஒருவரை ஒருவர் காதலிப்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதனால் அவர்கள் பொதுவாக பார்ப்பதுப்போல் நோக்கினாலும் அது மற்ற பார்வைகளில் இருந்து தனித்து தெரிவதால் இவர்கள் காதலர்கள் என்ற குறிப்பு மற்றவர்களுக்கு தெரிந்துவிடுகிறது. அதனால் காதலர்கள் காதலை வெளிக்காண்பிக்கூடாது என்று நினைத்தாலும் குறிப்புணர முடியும் இச்சமூகத்தால் என்று நாம் உணரலாம். 

3. காதலர்கள் சராரசியாக நடந்துக்கொண்டதால் சமூகத்தால் உணரமுடியவில்லை என்றும் உணரலாம். ஏனெனில் பின்பு மடலேர்தல் எல்லாம் வருகிறது.  உதாரணமாக எனது கல்லூரி காலங்களில் சில காதல் ஜோடிகள் காதலித்தது பல வருடம் கழித்துத்தான் எங்களுக்கு தெரியும். அவர்கள் காதலித்தப்பொழுது எங்களுக்கு தெரியவே தெரியாது. அதற்கான எவ்வித குறிப்பும் அவர்கள் பொதுவில் வழங்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் எங்கள் உடன் குழுவாக படிப்பார்கள் (group study), பேருந்துகளில் பயணிப்பார்கள். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது) ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்; காதலார் கண்ணே உள - இக்காதலையுடையர் கண்ணே உளவாகாநின்றன. (பொது நோக்கு : யாவர் மாட்டும் ஒரு தன்மைத்தாய நோக்குதல் தொழில் ஒன்றேயாயினும், இருவர்கண்ணும் நிகழ்தலானும், ஒருவர்கண்தானும் குறிப்பு வேறுபாட்டால் பலவாம் ஆகலானும், 'உள' எனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் 'மது மறைந்துண்டார் மகிழ்ச்சிபோல உள்ளத்துள்ளே மகிழ்தலின்' (இறையனார்-8) அதுபற்றிக் 'காதலார்' என்றும், அது புறத்து வெளிப்படாமையின் 'ஏதிலார் போல' என்றும் கூறினாள்.).

மணக்குடவர் உரை
அயலார்போலப் பொது நோக்கத்தால் நோக்குதல் காதலித்தார் மாட்டே யுளதாம். இது குறித்து நோக்காமையும் உடன்படுதலென்றது.

மு.வரதராசனார் உரை
புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

சாலமன் பாப்பையா உரை
முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

 

குறள் 1098
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள் 
அசையியல் - acai-y-iyal   n. அசை¹- +.Slender woman; நுடங்கிய இயல்புடைய பெண் அசையியற் குண்டாண்டோ ரேஎர் (குறள், 1098).  

அசையியற்கு - நுடங்கிய இயல்புடைய பெண்ணிற்கு

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

ஆண்டு  - அகவை; அவ்விடம், Year; வருஷம்

ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்; (வி)ஆராய்; தெளி.

ஏஎர் - அழகு

யான் - தன்மையொருமைப்பெயர்

நோக்க - ஓர்உவமவுருபு.

நோக்க - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

பசை - ஒட்டும்பசை; பிசின்; சாரம்; ஈரம்; பக்தி; அன்பு; பற்று; இரக்கம்; பயன்; செல்வம்; கொழுப்பு; முழவின்மார்ச்சனைப்பண்டம்; உசவு.

பசையினள் - அன்பு உள்ள அவள்

பைய - மெல்ல

நகும் - நகு-தல் - naku-   6 v. [T. K. nagu.] intr.1. To laugh, smile; சிரித்தல் நகுதற்பொருட்டன்று நட்டல் (குறள், 784). 2. To rejoice;மகிழ்தல். மெய்வேல் பறியா நகும் (குறள், 774). 3. Tobloom, as a flower; மலர்தல் நக்க கண்போ னெய்தல் (ஐங்குறு. 151). 4. To open or expand;கட்டவிழ்தல். நக்கலர் துழாய் நாறிணர்க் கண்ணியை(பரிபா. 4, 58). 5. To shine, glitter; பிரகாசித்தல் பொன்னக்கன்ன சடை (தேவா. 644, 1). 6.To hoot, as an owl; to sing, as a bird; புள்ளிசைத்தல். நட்பகலுங் கூகை நகும் (பு. வெ 3, 4).--tr.1. To despise; அவமதித்தல் ஈகென்பவனை நகுவானும் (திரிகடு. 74). 2. To surpass, overcome,defeat; தாழ்த்துதல் மானக்க நோக்கின் மடவார்(சீவக. 1866).  


முழுப்பொருள்
மெல்லிய இயல்புடைய அப்பெண்ணிடம் அழகிய ஒன்று இருக்கிறது. எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? தலைவன் நான் அவளைப் பார்க்கும் பொழுது அவள் அன்பினால் மெல்ல உள்ளூர சிரித்துக்கொள்கிறாள். சரி, இதில் என்ன அழகானது என்று எதனை குறிப்புணர்ந்தாய்? நான் அழகிய ஒன்று உள்ளது என்று சொன்னது அவள் மனதில் உள்ள காதலை. அச்சிரிப்பே அதற்கான குறிப்பு.

எனக்கு ரன் படத்தில் வரும் பேருந்து காட்சி தான் நினைவிற்கு வருகிறது.

ரன் திரைப்படத்தில் வரும் பேருந்து காட்சி - மாதவன் பேருந்தில் ஏறியப்பின்பு மீரா ஜாஸ்மீன் மாதவனை பார்த்து சிரிக்கும் காட்சி
ரன் திரைப்படத்தில் வரும் பேருந்து காட்சி - மாதவன் மீரா ஜாஸ்மீன் உடன் உரையாடும் காட்சி

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.) யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்; அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - அதனால் நுடங்கியஇயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு . (ஏர்: ஆகுபெயர். 'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு; யான் நோக்க நெகிழ்ந்து மெல்ல நகாநின்றாள் அவ்விடமென்றது தானே நெகிழ்ந்து நக்க இடம்: அழகு- தன்வடிவினுள் மிக்க குணம்: பைய நகுதல்- ஓசைப்படாமல் நகுதல்.

மு.வரதராசனார் உரை
யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

சாலமன் பாப்பையா உரை
யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

 

குறள் 1090
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள்
உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

உண்டார் - உண்டவர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அல்லது - தீவினை; தவிர

அடு - (வி)சமை, தீயிற்பாகமாக்கு; சேர்

நறா - கள்; தேன்:மணம்.

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
கண்டார் - கண்டவர், உணர்ந்தவர் / அறிந்துக்கொண்டவர்

கண்டார் - தோற்றுவித்தவர்; தொடர்பில்லாதவர்; kaṇṭār   n. காண்-. Lit., personswhom one sees (for the first time), hence,persons not related; persons not concerned;strangers; சம்பந்தமில்லாதவர். கண்டார்கள் பின்சென்று கையேற்கு மாறே (பிரபோத. 27, 44).

மகிழ் - இன்பம்; குடிவெறி; மது; மரவகை.

செய்தல்  -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல்.

முழுப்பொருள்
காய்ச்சியக் கள் ஆனது அதனை உண்டவர்க்கு மட்டும் இன்பத்தை தரும். அதுவும் கள் உள்ளே இருக்கும் பொழுது மட்டும் இன்பத்தை தரும். கள்ளை கண்டாலோ அல்லது கள்ளை நினைத்தாலோ அல்லது கள்ளைப் பற்றிக் கேட்டாலோ இன்பம் தராது. ஆனால் என் காதலியை கண்டாலேப் போதும் எனக்கு இன்பம் வருகிறது. ஆதலால் இக்காதலைப்போல் இன்பம் தருவது வேறு இல்லை.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகள் குறிப்பறிதல் உற்றான் சொல்லியது.) அடுநறா - அடப்படும் நறா; உண்டார்கண் அல்லது - தன்னை உண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது; காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று - காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்தல் உடைத்தன்று. (அடுநறா: வெளிப்படை. 'காமம்' என்றது ஈண்டு அது நுகர்தற்கு இடனாகியாரை. 'கண்டார்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. மகிழ் செய்தற்கண் காமம் நறவினும் சிறந்ததே எனினும், இவள் குறிப்பு ஆராய்ந்து அறியாமையின், 'யான் அதுபெற்றிலேன்' எனக் குறிப்பெச்சம் வருவித்துரைக்க. 'அரிமயிர்த் திரள் முன்கை'(புறநா.11)என்னும் புறப்பாட்டிற் குறிப்புப் போல.).

மணக்குடவர் உரை
அடப்பட்ட நறவு, உண்டார்மாட்டல்லது காமம் போலக் கண்டார் மாட்டு மகிழ்வு செய்தலின்று. இது தலைமகள் தலைமகனைக் கண்டுழி வருத்தமுற்றுக் கருதியது.

மு.வரதராசனார் உரை
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

சாலமன் பாப்பையா உரை
காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

 

குறள் 1089
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள்
பிணை - இணைக்கப்படுகை; உடன்பாடு; பொருத்து; கட்டு; உத்தரவாதம்; விலங்குகளின்பெண்; பெண்மான்; பூமாலை; புறந்தருகை; விருப்பம்; தெப்பம்.

ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு.

மருளுதல் - மயங்குதல்; வெருவுதல்; வியத்தல்; ஒப்பாதல்.
வெருவுதல் - அஞ்சுதல்.
மடநோக்கும் - Bashful, timid look;  மருண்டபார்வை

நோக்கும் - நோக்குதல் -  பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நாணும் - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

உடையாட்கு – உடைய பெண்ணவளுக்கு

அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.

எவனோ  - வேறு ஏது 

ஏதில - பிறமாது; மாற்றாள்; சக்களத்தி.

தந்து - தரும்?

முழுப்பொருள்
பெண்மான்கள் அழகுடன் கூடிய அச்சப்பார்வையைக் கொண்டு இருக்கின்றன. அதுப்போல் என் காதலியும் புறத்தே அழகுடன் கூடிய அச்சப்பார்வையையும் ஆனால் உள்ளத்தே நாணமும் கொண்டு இருக்கிறாள். இவை அவளை எவ்வளவு அழகாக காட்டுகின்றன. அப்படி இருக்கையில் அவள் அணிந்துள்ள அணிகலன்கள் / நகைகள் அவளுக்கு பிற எந்த அழகை தந்துவிடும்? அவள் அவற்றை ஏன் அணிந்துக்கொண்டு இருக்கிறாள்?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(அணிகலத்தானாய வருத்தம் கூறியது.) பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு - புறத்து மான் பிணை ஒத்த மடநோக்கினையும் அகத்து நாணினையும் உடையாளாய இவட்கு; ஏதில தந்து அணி எவன்? - ஒற்றுமை உடைய இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன பயனுடைத்து? (மடநோக்கு - வெருவுதல்உடைய நோக்கு. 'இவட்குப் பாரமாதலும் எனக்கு அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர்' என்பதாம்.).

மணக்குடவர் உரை
பிணையையொத்த மடப்பத்தினையுடைய நோக்கினையும் நாணினையும் உடைய
வட்குப் பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துவதற்கு இவைதாமே அமையும். இது, தான் அவளைக் கொடுமை கூறுவான் போல நலம் பாராட்டியது.

மு.வரதராசனார் உரை
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?.

சாலமன் பாப்பையா உரை
பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?.