குறள் 1098
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]
பொருள்
அசையியல் - acai-y-iyal n. அசை¹- +.Slender woman; நுடங்கிய இயல்புடைய பெண் அசையியற் குண்டாண்டோ ரேஎர் (குறள், 1098).
அசையியற்கு - நுடங்கிய இயல்புடைய பெண்ணிற்கு
உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்
ஆண்டு - அகவை; அவ்விடம், Year; வருஷம்
ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்; (வி)ஆராய்; தெளி.
ஏஎர் - அழகு
யான் - தன்மையொருமைப்பெயர்
நோக்க - ஓர்உவமவுருபு.
நோக்க - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.
பசை - ஒட்டும்பசை; பிசின்; சாரம்; ஈரம்; பக்தி; அன்பு; பற்று; இரக்கம்; பயன்; செல்வம்; கொழுப்பு; முழவின்மார்ச்சனைப்பண்டம்; உசவு.
பசையினள் - அன்பு உள்ள அவள்
பைய - மெல்ல
நகும் - நகு-தல் - naku- 6 v. [T. K. nagu.] intr.1. To laugh, smile; சிரித்தல் நகுதற்பொருட்டன்று நட்டல் (குறள், 784). 2. To rejoice;மகிழ்தல். மெய்வேல் பறியா நகும் (குறள், 774). 3. Tobloom, as a flower; மலர்தல் நக்க கண்போ னெய்தல் (ஐங்குறு. 151). 4. To open or expand;கட்டவிழ்தல். நக்கலர் துழாய் நாறிணர்க் கண்ணியை(பரிபா. 4, 58). 5. To shine, glitter; பிரகாசித்தல் பொன்னக்கன்ன சடை (தேவா. 644, 1). 6.To hoot, as an owl; to sing, as a bird; புள்ளிசைத்தல். நட்பகலுங் கூகை நகும் (பு. வெ 3, 4).--tr.1. To despise; அவமதித்தல் ஈகென்பவனை நகுவானும் (திரிகடு. 74). 2. To surpass, overcome,defeat; தாழ்த்துதல் மானக்க நோக்கின் மடவார்(சீவக. 1866).
முழுப்பொருள்
மெல்லிய இயல்புடைய அப்பெண்ணிடம் அழகிய ஒன்று இருக்கிறது. எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? தலைவன் நான் அவளைப் பார்க்கும் பொழுது அவள் அன்பினால் மெல்ல உள்ளூர சிரித்துக்கொள்கிறாள். சரி, இதில் என்ன அழகானது என்று எதனை குறிப்புணர்ந்தாய்? நான் அழகிய ஒன்று உள்ளது என்று சொன்னது அவள் மனதில் உள்ள காதலை. அச்சிரிப்பே அதற்கான குறிப்பு.
எனக்கு ரன் படத்தில் வரும் பேருந்து காட்சி தான் நினைவிற்கு வருகிறது.
ரன் திரைப்படத்தில் வரும் பேருந்து காட்சி - மாதவன் பேருந்தில் ஏறியப்பின்பு மீரா ஜாஸ்மீன் மாதவனை பார்த்து சிரிக்கும் காட்சி
ரன் திரைப்படத்தில் வரும் பேருந்து காட்சி - மாதவன் மீரா ஜாஸ்மீன் உடன் உரையாடும் காட்சிமேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.) யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்; அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - அதனால் நுடங்கியஇயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு . (ஏர்: ஆகுபெயர். 'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.).
மணக்குடவர் உரை
அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு; யான் நோக்க நெகிழ்ந்து மெல்ல நகாநின்றாள் அவ்விடமென்றது தானே நெகிழ்ந்து நக்க இடம்: அழகு- தன்வடிவினுள் மிக்க குணம்: பைய நகுதல்- ஓசைப்படாமல் நகுதல்.
மு.வரதராசனார் உரை
யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.
சாலமன் பாப்பையா உரை
யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.
No comments:
Post a Comment