குறள் 1100
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
மேலும்: அஷோக் உரை
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]
பொருள்
முழுப்பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
கண்ணொடு - கண்ணுடன்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
இணை - இசைவு; ஒப்பு இரட்டை உதவி கூந்தல் எல்லை இணைத்தொடை; (வி)சேர்; கூட்டு
நோக்கு - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.
ஒக்கின் - ஒக்குதல் - ஒத்திருக்கை; கொப்புளித்தல்; பிற்படவிடல்.
வாய்ச் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.
சொற்கள் - சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.
என்ன - யாது; என்னபயன்; ஓர்உவமவுருபு.
பயனும் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.
இல - இல்லை - illai 1. ille இல்லெ 2-3. ille, -(1)le இல்லெ, (-ல்)லெ 1. no (int.) 2. not (neg. v.) 3. isn't it? (with rising intonation); you know! (with falling intonation) tag marker
காதலர் ஒருவர் கண்ணின் பார்வைக்கு ஏற்றவாரு மற்றொருவரின் (அப்பார்வைக்கான) இசைவுக் கொண்ட கண் நோக்க ஒத்திருந்தால் அவர்கள் கண்களின் மூலம் பேச துவங்கிவிட்டார்கள் என்று அர்த்தம். அவர்களின் அகம் கண்களின் மூலமாக பேசுகிறது. அதன் பிறகு அவர்கள் வாய் மூலம் பேசினால் என்ன பேசாவிட்டால் என்ன? ஏனெனில் அவர்கள் வாய் சொற்களால் பேசி ஒரு பயனுமில்லை.
கம்பன் இதையொட்டியே மிதிலைப்படலத்தில் (25) வரும், “கண்ணொடு கண்ணினை கௌவி ஒன்றை ஒன்றுண்ணவும்” வரிகளைச் சொன்னான் போலும்.
அதனால் தான் ”கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்” என்று எழுதினானோ?
”சொல்லும் ஆடுப கண்ணி னாளே” (தொல்.களவு.23.ந.மேற்)
“தூதுசெய் கண்கள்கொண் டொன்று பேசித்
தூமொழி இசைகள் கொண்டொன்று நோக்கி” (திருவாய் 9,9,9)
“கூற்றம் போலுங் கொலைக்கண்ணி னாலன்றி
மாற்றம் பேசுகி லாளை” (கம்ப.எழுத்திப் 36)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது) கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் - காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின்; வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல. (நோக்கால் ஒத்தல்: காதல் நோக்கினவாதல். வாய்ச் சொற்கள்: மனத்தின்கண் இன்றி வாயளவில் தோன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன: அவள் புனங்காவல் மேலும், அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில் சொற்களாகலின்,இவை கொள்ளப்படா என்பதாம். இவை புணர்தல் நிமித்தம்.).
மணக்குடவர் உரை
கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின் வாயினாற் சொல்லுஞ் சொற்கள் ஒரு பயனுடையவல்ல. இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
மு.வரதராசனார் உரை
கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.
சாலமன் பாப்பையா உரை
காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.
Thirukkural - Management - Public Speaking - Body Language
Though Valluvar wrote this kural 1100, to refer to the body languagae of lovers, the message is applicable to body language of everyone. Establshing eye contact is important for all on all occasions. Lovers communicate through their eyes. When the eyes of lovers connect, the words they speak do not have any meaning,
When eyes with eyes commingle
What do words avail?
A person's eye are so powerful that they communicate a lot. When there is a connection of the eyes, the words spoken by the mouth do not have any value over the connection of the eyes.
In common practice, if we understand the language of eyes, we will get many clues to the thoughts of the other person. Eyes communicate passionately. Look people in the eyes. Practice the art of establishing eye contact with your audience. Your eyes are magnetic. They command attention and convince your listeners.
No comments:
Post a Comment