Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இணருழ்த்தும் நாறா மலரனையர்

குறள் 650
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்
[பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை ]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இணர் - பூங்கொத்து [மெல்லிணர்க்கண்ணி], தொடர்ச்சி, குலை (bunch of fruit), ஒழுங்கு(arrangement), சுவாலை(flame), கிச்சிலிமரம், மாமரம்.

இணர்தல் - To pervade;வியாபித்தல்;
pervade: (especially of a smell) spread through and be perceived in every part of.
pervade: (of an influence, feeling, or quality) be present and apparent throughout.

ஊழ் - நியதி, பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை

ஊழ்த்தும் - குணமுடைய; மலர்ந்தும்

நாறு - மணத்தல், தோன்றுதல், மோத்தல் (to smell), 
நாறா - மணக்காத

மலர் - பூ 

அனையர் - They are like. அன்னர்--அன்னார். Such persons

கற்றது - அறிவு, வித்தை, நூல் ஆகியவற்றை பயின்று

உணர - மற்றவர்களும் (தனக்குமே கூட) உணர படியாக, புரிந்துக்கொள்ளும் படியாக, கற்கும் படியாக
விரித்து -> விரித்துரை - அகலவுரை - விரிவாக எடுத்து

உரையாதார் - உரைக்க தெரியாதவர்கள்

Image result for bouquet 
(நாற்றம் இல்லாத காகித பூங்கொத்து)
முழுப்பொருள்
ஒரு பூ மலர்ந்தால் அதனுடைய நாற்றம் சுற்றி இருக்கும் இடங்களுக்கும் வியாபிக்கும். ஆனால் அப்படி நாற்றம் இல்லாத பூக்களும் உலகில் உண்டு. அவை  பூங்கொத்துக்களாக பூத்தாலும் அல்லது பூங்கொத்தாக நாம் மாற்றினாலும் அவை மணம் தராது. அவை பார்க்க அழகாக இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட மலர்களால் மணம் என்கிற பயன் இல்லை. ஆதலால் நாம் அவற்றை நம் அருகில் வைத்துக்கொள்ள மாட்டோம்.  பெண்கள் அவற்றை பொதுவாக சூடிக்கொள்ள மாட்டார்கள். அவை காகித பூக்கள். வெறும் அலங்கார பூக்கள்.

அதேப்போல் ஒருவன் தான் கற்றவற்றை (பல நூல்கள், வித்தைகள், கல்வி) மற்றவர்களுக்கு தெளிவாக (மனம்) உணரும் படியாக விவரிக்க முடியவில்லை என்றால் அந்த கல்வியால் பயனில்லை. அவர்களை நாம் அருகில் வைத்துக்கொள்ள மாட்டோம். அவர்களின் படிப்பு வெறும் அலங்காரம் மட்டுமே. அத்தகையவர்கள் பெற்ற கல்வி காகித பூக்களை போன்றதாகும்.
 
"நீங்கள் நல்ல வாசகன் எனின் இன்னொருவனை வாசிக்க சொல்லாதீர்கள். வாசித்ததை சொல்லுங்கள் போதும் (வாசிப்பது எப்படி - செல்வேந்திரன்)" என்பதே அதற்காக தான்.

மேலும் அசோக் உரை (நன்றி)


பரிமேலழகர் உரை
கற்றது உணர விரித்து உரையாதார் - கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்கமாட்டாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் - கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவையொப்பர். (செவ்வி பெற மலர்ந்து வைத்தும் நாற்றம் இல்லாத பூச் சூடப்படாதவாறு போல, நூலைக் கற்றுவைத்தும் சொல்ல மாட்டாதார் நன்கு மதிக்கப்படார் என்றமையின், இது தொழில் உவமம் ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் அது மாட்டாதாரது இழிபு கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
இணராய் மலர்ந்து நாற்ற மில்லாத பூவை யொப்பர், கற்றதனைப் பிறரறிய விரித்துச் சொல்ல மாட்டாதார்.

இது சுருங்கச் சொல்லுதலே யன்றி வேண்டுமிடத்து விரித்துஞ்சொல்லல் வேண்டு மென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கற்றது உணர விரித்து உரையாதார் - தாம் கற்று வைத்த நூற்பொருளைப் பிறர் தெளிவாக அறியும் வண்ணம் விளக்கிச் சொல்லும் ஆற்றல் இல்லாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் - கொத்தாக மலர்ந்திருந்தும் மணந்தராத பூவையொப்பர்.

நன்றாக விரிந்திருந்தும் மணமில்லாத பூப் பயன்படாததுபோல் விரிவாகக் கற்றிருந்தும் விளக்கிச் சொல்லும் திறமையில்லார் பிறர்க்குப் பயன்படார் என்பதாம். இணரூழ்த்தல் என்ற உவம அடை பல்துறைக்கல்வி யாகிய பொருளியல்பை யுணர்த்தும். மணமில்லா மலர்க்கு முருக்கம் (முள்முருங்கைப்) பூவை எடுத்துக்காட்டினர் பரிதியார். நாறுதல் என்னும் பொதுப்பொருள் வினைச்சொல், செய்யுள் வழக்கில் நறுநாற்றத்தையும் உலக வழக்கில் தீநாற்றத்தையும் உணர்த்தும். உம்மை எச்சம்.

"எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந்
துய்த்துணர் வில்லெனி னில்லாகும் - உய்த்துணர்ந்துஞ்
சொல்வன்மை யின்றெனின் என்னாம் அஃதுண்டேல்
பொன்மலர் நாற்ற முடைத்து. (நீதிநெறி. 5)

என்பது சொல்வன்மையின் சிறப்பை எடுத்துக் காட்டும்.

மு.வ உரை
தாம் கற்ற நூற் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை
தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.

எவன் ஒருவனுக்கு தான் கற்றதை சொல்ல தெரிகிறிதோ அவன் கற்றதே படிப்பு. அப்படி இல்லையெனில் அவை காகித பூப்போன்றது - மனம் இல்லாதவை. பின்பு படித்து என்ன பயன்.


Thirukkural - Management - Public Speaking - Lack of Expression
Kural, 650, uses a simile. A simile is a direct comparison. Though educated and well read, if a person cannot pass on to others what he has read is similar to the flower vaudeville. Even if the flower is in full bloom, it is of no use to others because it does not have fragrance. 

The learned lacking expression 
Are flowers without scent. 

Every speaker must have the ability to read a complicated writing and interpret that to help his listeners understand the profound meaning. I call that intelligent communication. Moreover, one of the objectives of education is to read, understand what one reads, and communicate that to others so that they can understand and act. 

English Meaning - As I taught a kid - Rajesh
When you cannot explain/lecture with clarity on the subject you learnt then it is like an artificial flower without any fragrances. It can be used only for decorative purposes without any other use. Whereas if one has learnt the subject properly, he or she would be able to explain/lecture it with clarity to others. That knowledge can be transmitted/transferred from one person to other. 

Questions that I ask to the kid
How you describe with an example about communication with ease/clarity?

அவாவினை ஆற்ற அறுப்பின்

குறள் 367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்
[அறத்துப்பால்,  துறவறவியல், அவாவறுத்தல்]

பொருள்
அவா - அது ; ஆசை, அவாவு, இச்சி, விரும்புதல், பற்றுச்செய்தல், ஒன்றைவேண்டிநிற்றல்,  இறங்குதல்

அவாவினை  - ஆசை தனை

ஆற்ற - ஆற்று,  மிகவும், முற்றும், Greatly,exceedingly, entirely
ஆற்றல் - வலிமை, முயற்சி, மிகுதி, ஞானம், நிலையுடைமை(stability),

அறு - அரிதல், ஊடறுத்தல், நீக்குதல், இல்லாமற்செய்தல், வெல்லுதல்,
அறுப்பின் - இல்லாமல் செய்தால், வென்றால்,

தவாநிலை - வழு வாநிலை, a firm condition
தவா வினை - மீண்டும் பிறவாத நிலை அல்லது துன்பம் அல்லாத இன்பம் மட்டும் பயக்கும் நிலை

தான்  வேண்டும்  - தான் வேண்டியது; தான் விரும்பிய

ஆற்றான்  - வலியில்லாதவன்
வரும் - வந்து சேரும்

முழுப்பொருள்
ஒருவன் தன் வாழ்வில் ஆசைகளை, இச்சைகளை, விருப்பங்களை, பற்றுகளை முற்றிலுமாக நீக்கி வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் அவனுக்கு தவ நிலை எனப்படும் மறுபிறவி அல்லாத நிலை வாய்க்கும். இந்நிலை என்பது ஒரு நிலையான நிலை (வழுவாநிலை). இந்நிலை அவன் வேண்டிய அவன் விரும்பிய துன்பம் இல்லாதவனாக அவனை ஆக்கும். அவனை வலிமையாக்கும். அத்தகைய நிலை (ஆசையில்லாமல் இருந்தால்) அவனை வந்து சேரும்.

மேலும்: அஷோக் உரை (நன்றி)


“எதையும் மிச்சமில்லாமல் விட்டுச்செல்வதற்கு பெயர் தவம். அது முனிவராலேயே இயலும்” என்றார் இளைய யாதவர். “பிறர் தங்கள் விழைவுகளையும் கனவுகளையும் விட்டுச்செல்கிறார்கள். ஏக்கங்களையும் வஞ்சங்களையும் நிலைநாட்டிச் செல்கிறார்கள்.” யுதிஷ்டிரர் “நான் எதிலிருந்தும் விடுபட்டவனல்ல. என் துயரெல்லாம் என் பற்றுகளால் உருவாவதே. பற்றறுக்க என்னிடம் சொல்லவேண்டியதில்லை. என் குடிகளை, நிலத்தை, இளையோரை, அரசியரை, மைந்தரை உளம்துறந்துவிட்டு நான் அடைவதொன்றுமில்லை” என்றார். “எங்கு பற்றிருக்கிறதோ அங்கே துயருள்ளது. எதில் பற்று மிகுகிறதோ அதிலேயே மிகுதுயரும் எழுகிறது. துயரென்பது பற்றின் மறுவடிவம் மட்டுமே” என்றார் இளைய யாதவர்.

பரிமேலழகர் உரை
அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவினை அஞ்சித் துவரக் கெடுக்க வல்லன் ஆயின், தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும் - அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம். (கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை. 'வினை' சாதி யொருமை. தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறுஅறஞ்செய்ய வேண்டா, செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவிற்கு அஞ்சி அதை முற்றுங் கெடுக்க வல்லனாயின்; தவா வினைதான் வேண்டும் ஆற்றான் வரும் - அவன் கெடாமைக் கேதுவாகிய வினை அவன் விரும்பியவாறே உண்டாகும்.


கெடாமை பிறவித்துன்பங்களால் அழியாமை. அதற்கேதுவாகிய வினை மேற்கூறிய துறவறங்கள். 'வினை' வகுப்பொருமை. விரும்பியவாறாவது துன்பமில்லாதவகை.

மணக்குடவர் உரை
ஆசையை மிகவும் போக்குவானாயின், கேடில்லாத வினைதான் வேண்டின நெறியாலே வரும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: அவாவினை ஆற்ற அறுப்பின்-(ஒருவன்) ஆசையை முற்ற ஒழிப்பின், தவா(த)வினைதான் வேண்டும் ஆற்றான் வரும் - கெடாத வினைகள் தான் விரும்பிய நெறியால் வரும்.

அகலம்: கெடாத வினைகள் - அறங்கள்

கருத்து: அவாவினை விட்டார் அறங்களைப் புரிவர்.

மு.வ உரை
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

சாலமன் பாப்பையா உரை
ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.

முடிவும் இடையூறும் முற்றியாங்கு

குறள் 676
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
முடிவும் - இறுதி; எல்லை; அந்தம்; தர்மானம்; முடிவான உட்கோள்; நிறைவு; பயன்; இசைப்பாகுபாடு; சாவு

இடையூறும் இடர், இடர்ப்பாடு, துன்பம், தடங்கல், வருத்தம், வறுமை, ஆபத்து

முற்றி - முற்று, முடித்தல்

ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி; ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை

முற்றியாங்கு - அச்செயலை முடித்தல்

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

எய்தும் நூற்பயன், அடையும், அணுகும், சேரும், நிகழும், உண்டாகும்

படு - நன்மை, மகா, மிகுதியைக்காட்டுமோரடை சொல்

படு - கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்

படுபயனும் - மகா பயன்

பார்-த்தல் - pār-   11 v. tr. [K. pāru, M.pārkka.] 1. To see, look at, view, notice,observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித்.65). 2. To examine, inspect, search into,scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல்(குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To lookfor, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6.To search for, seek; தேடுதல். ஆட்பார்த் துழலுமருளில் கூற்று (நாலடி, 20). 7. To worship;வணங்குதல். (சூடா.) 8. To estimate, value;மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன்.Colloq. 9. To heed, pay attention to; கவனித்தல். 10. To look after, take care of, manage,superintend; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான்.11. To peruse, look through, revise; பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 12. Totreat, administer medicine; மருந்து முதலியனகொடுத்தல். யார் வைத்தியம் பார்த்

பார்த்துக்கொள்ள - pārttukkoḷḷa   paattukkoo பாத்துக்கோ take care of, watch over  

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

பார்த்துச் செயல் - அதற்கு ஏற்றார்ப்போல் ஆராய்ந்து ஒர் திட்டதின் அடிப்படையில் வியூகத்தின் அடிப்படையில் செயல்படுக!

முழுப்பொருள்
ஒரு செயலை (குறிக்கொள்) செய்யும் பொழுது அதனை பாதியில் விடாமல் செய்து முடிக்க முயற்சி மேற்கொண்டு செய்ய வேண்டும். எடுத்த செயலில் என்ன என்ன தடங்கல்கள் வரும் என்று முன்னரே அனுமானித்து அதனை கடந்து செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு செயலை செய்தால் அதனால்  விளையும் (ஏற்படும்) பெரும் பயனை அறிந்து அச்செயலை வெற்றிக்கரமாக நிறைவேற்ற வேண்டும். அப்பெரும் பயனின் வீரியம் அறிந்து அதனை அடைய வியூகம் அமைத்து அயராது செயல்பட வேண்டும்!

பி.கு: இக்குறளில் நான் காணும் முக்கியமான ஒன்று படுபயன். ஏனென்றால் பெரிய பலன் தரும் செயல்களை மட்டுமே செய்யவேண்டும். சிறிய செயல்களை செய்யக்கூடாது!

மேலும்: அஷோக் உரையை காண்க (நன்றி)

ஒப்புமை
”தற்றூக்கித் தந்துணையும் தூக்கிப் பயன்தூக்கி
மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி
யாதானும் ஏன்றுகொண் டியாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி விடும்” (பழமொழி 321)

“நல்லவும் தீயவும் நாடி நாயகற்
கெல்லையின் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்
ஒல்லைவந் துறுவன உற்ற பெற்றியின்
தொல்லைநல் வினையென உதவும் சூழ்ச்சியார்” (கம்ப.மந்திரப்.10)

பரிமேலழகர் உரை
முடிவும் - வினை செய்யுங்கால் அது முடிவதற்குளதாம் முயற்சியும்; இடையூறும் - அதற்கு வரும் இடையூறும்; முற்றியாங்கு எய்தும் படுபயனும் - அது நீங்கி முடிந்தால் தான் எய்தும் பெரும்பயனும்; பார்த்துச் செயல் - சீர்தூக்கிச் செய்க. (முடிவு, ஆகுபெயர், 'முயற்சி இடையூறுகளது அளவின் பயனது அளவு பெரிதாயின் செய்க' என்பதாம்.)

மணக்குடவர் உரை
வினை தொடங்கினால் அது முடியும் வண்ணமும் அதற்குவரும் இடையூறும் முடிந்தா லுண்டாகும் பெரும் பயனும் முன்பே கண்டு பின்பு வினைசெய்க.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
முடிவும்-வினை முடிதற்கு வேண்டிய முயற்சியும்; இடையூறும்-அதற்குத் தடையாக இடையில் வரும் துன்பங்களும்; முற்றிய ஆங்கு எய்தும் படுபயனும்-தடை நீங்கி வினை வெற்றியாக முடிந்தால் தான் அடையும் பெரும் பயனும்; பார்த்துச் செயல்-ஆராய்ந்து பார்த்து வினைசெய்க.

பெரும்பயன் எனவே சிறுபயன்வினை விலக்கப் பட்டதாம். 'படு' என்னும் சொல் பெருமை அல்லது மிகுதிப்பொருள் தருவதைப் படுகுழி, படுதண்டம், படுபொய், படுமோசம் என்னும் வழக்கு நோக்கி யுணர்க. 'முடிவு' ஆகுபெயர். முற்றியாங்கு (முற்றிய ஆங்கு) - முற்றியபோது.

மு.வ உரை
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க.

Thirukkural - Management - Decision Making
Before one gets into action, one has to assess thoroughly three things, according to Kural 676. One is to identify the methods to complete the task; two is to understand the challenges or hardships faced in the process of doing that task and three is to anticipate the benefits one will get by executing that task.

Weigh well before you plunge
The inputs, impediments  and gain.

Stephen Covey's one of the qualities of highly effective people is to ‘Begin with the end in the 
mind’ in his book The Seven Habits of Highly Effective People.

Therefore, effective decision making, according to Valluvar, is possible if we consciously and clearly consider five factors. They are: 1) Resources that include people, 2) Tools and techniques, 3) Availability of time, 4) Complexity of the task, and 5) Place of execution. Decision-making is a process and that process needs a lot of patience. The process of learning to have patience takes a lot of time and energy. Therefore, elective decision-making facilitates effective execution. Look before you leap is still a sage and safe advice.


English Meaning - As I taught a kid - Rajesh
"Whenever you do a task, you should have a goal and should never drop the task. One should predict the hurdles as much as possible and have a contingency plans to mitigate the situation. Having contingency plan is essential because looking back is shame(துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு). 
Hence, having a goal, having a plan that includes contingency plan for hurdles, persevering to achieve the goal at any cost will yield huge results. This kural talks about huge results which is in sync with பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும், அரும்பயன் ஆயும் Thirukkural. Also remember, நுனிகொம்பேறினார் No goal is worth the life or the huge amount of money. Hence, we should keep right plans and also include plans that defines the situations for quitting for a genuine reason.

==========
Another version
Before doing a work or getting into action, one has to thoroughly assess 3 things 1) Have the clarity of destination/goal and identify best way by exploring multiple options to complete the task 2) understand the challenges that are possible 3) understand the benefits of doing this tasks. 
One of the main thing we need to note is ""படுபயன்” which means huge benefits. Do works that yields larger benefits not smaller or futile benefits.

Effective decision making, according to Valluvar, is possible if we consciously and clearly consider five factors. They are: 1) Resources that include people, 2) Tools and techniques, 3) Availability of time, 4) Complexity of the task, and 5) Place of execution. Decision-making is a process and that process needs a lot of patience. The process of learning to have patience takes a lot of time and energy. Therefore, elective decision-making facilitates effective execution. Look before you leap is still a sage and safe advice."

Questions that I ask to the kid
"Whenever you do a task, what are 4 things you should have in mind?

Look before you leap. Explain more. 

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர்

குறள் 580
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
[பொருட்பால், அரசியல், கண்ணோட்டம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பெயக்கும்  - நன்மை/தீமை பெயக்கும் என்று சொல்வோம். ஒரு செயலினால் நன்மையோ தீமையோ பலனாக உண்டாகும்/பெயக்கும்

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

பெயக்கண்டும் - பெயக்கும் + கண்டு  - இச்செயலினால் வரும் பலன் என்னெவென்று அறிந்த பிறகும்

நஞ்சு - விடம்; தீயது; குழந்தை பிறந்தபின் வெளிப்படும் தசைமுதலியன.

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

நஞ்சுண்டு - நஞ்சினை உண்டு. விஷம் உண்டு

அமைவர் - அமைவு - 1. Beingacceptable, suitable, fitting; ஏற்றதாகை. (குறள்,956, உரை.)  ஆறுதல். அவர்க் காணா தமைவில கண் (குறள், 1178). நிறைவு. ஆங்கமை வெய்தியக் கண்ணும் (குறள், 740) ; அமைதி; ஒப்பு; அமைவு; அமர்)

நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக்கண்டதலைவிதனதுஆசைப்பாடுகூறும்புறத்துறை.

நயம் - நயன், (poetic) மலிவு; லாபம்; மேன்மை; இன்பம்; உப சாரம்; இதம்;  மிகுதி.இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை.நயம்

நாகரீகம் - nākarīkam   n. nāgarika. 1. Seeநாகரிகம். 2. Something new; curiosity; புதுமை அந்த நாகரீக வேடிக்கை நான் சொல்லக்கூடுமோ(இராமநா. உயுத். 124). நாகரீகம்பண்ணு-தல் nākarīkam-paṇ-ṇu-, v. intr. id. +. (W.) 1. To behave politely; மரியாதையாக நடத்தல் 2. To be foppish;ஆடம்பரமா யிருத்தல்.  

நாகரிகம் - நகரவொழுக்கம்; காண்க:தேவநாகரி; செப்பம்; கண்ணோட்டம்; மரியாதை; பிலுக்கு.

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டுபவர் - விரும்புவர்

வேண்டு பவர் - விருப்பபடுவர்

முழுப்பொருள்
தன் நண்பர் தன்னையறியாமல் விஷம் தனை உணவாய் அல்லது தான் உண்ணாத தனக்கு அல்லது தனக்கு பிடிக்காத உணவை உபசரித்தாலும் விஷம் உயிரை மாய்க்கும் அல்லது தனக்கு பிடிக்காத உணவு தனக்கு உண்ணும் பொழுது அச்சோர்வர்யம் அளிக்கும் என தெரிந்தும் நண்பனின் மனம் நோகக்கூடாது என்று நினைத்து அன்பும் நட்பும் மற்றும் அவ்விடத்தில் இன்பம் நீடிக்க விரும்பி அவரித்தில் அன்புக்கொண்டு நஞ்சையும் உண்டு முகஞ்சுளிக்காமல் அமைதியாக உண்டு உணவினால் மன நிறைவு அடைந்த வாரு (அதனால் நண்பனும் மகிழ்ச்சியடைவான்) அமர்வார்கள் நட்பை வேண்டுபவர். அதுவே மேன்மையாகும்.

சில சமயங்களில் பிறர் (நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள், சகோதரர்கள், சகோதரிகள்) நம்மிடம் கடுஞ்சொற்களை பயன்படுத்தக்கூடும். கடுஞ்சொல் தீதெனினும் அவற்றை நஞ்சுப்போல் உண்டு உறவை பேணலாம்.

மேலும்: அஷோக்
கலித்தொகைப் (74:8) பாடலொன்று பரத்தையைப் பிரிந்துவரும் தலைவனைக் கண்டு, அவனிடம் காமக்கிழத்தி கூறுவதாக இவ்வாறு கூறுகிறது - “நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை கண்டும், நின்மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்”. நஞ்சானது தன்னை உண்டோருடைய உயிரைப் போக்கும் என்று அறிந்து வைத்தும் அதனை உண்டாற் போல, நீ இரக்கமற்றவன், உன்னுடைய மனக்கருத்து சிறிது அருள் இன்றி வருத்துதல் என்றறிந்தும் உன்னுடைய பொய்யான பேச்சினை உண்மையென்று கொள்ளும் பரத்தையரும் பித்து ஏறினர், என்கிறது இவ்வரிகள்.

நற்றிணைப் பாடலொன்றும் இக்குறள் கருத்துக்கு இயைந்து, “முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்” என்னும்.

பாரதியார் ‘அச்சமில்லை’ தலைப்பில் அமைந்த ‘பண்டாரப் பாட்டில்’,
நச்சைவாயி லேகொணர்ந்து நண்ப சூட்டுபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
என்று கூறியிருப்பார் 

நயத்தக்கோர் (நன்றி : எழுத்தாளர் ஜெயமோகன்)
(நயத்தக்கோர் - சுட்டியில் இருந்து நேரடியாக படிக்கலாம்)
இரவுணவில் மூக்கால் மணிநேரம் பிள்ளைகளுடன் அரட்டையடிப்பதென்பது ஒரு பழக்கமாக வைத்திருக்கிறேன். அப்போது படிப்பு விஷயங்கள் பேசப்பட மாட்டாது. அனுபவங்கள், வேடிக்கைகள், நினைவுகள், நக்கல்கள், கிண்டல்கள் மட்டுமே. சிரித்து உருண்டு, புரைக்கேறி, கண்ணீர் மல்கி எழுந்தால் ஒருநாள் முழுக்க மனதில் நிறைந்த சலிப்புகளை வெல்லமுடியும்.

அபூர்வமாக பேச்சு உணர்ச்சிகரமாக ஆவதுண்டு. இன்று அப்படி ஒரு சந்தர்ப்பம். சைதன்யா அவள் அம்மாவின் உறவினர் வீட்டுக்குப் போன அனுபவத்தைச் சொன்னாள். அங்கே ரேஷன் அரிசியில் சாப்பாடு போட்டார்கள். ஒரே வீச்சம். சாப்பிடவே முடியவில்லை. ” ஆனால் நீ சொல்லியிருக்கியே அதெல்லாம் பாக்கக்கூடாதுன்னு…அதான் அப்டியே சாப்பிட்டுட்டேன்.  அதைப்பாத்துட்டு அந்த மாமி நெறையச் சாப்பிடு கண்ணு என்று ஏகப்பட்ட சோறு போட்டுவிட்டங்க. அப்புறம் என்னாலே நடக்கவே முடியவில்லை. பஸ்சிலே ஏறினதுமே தூங்கிட்டேன்..தஞ்சாவூரையே பாக்க முடியலை” என்றாள்

”அதான் பாப்பா நாகரீகம்ங்கிறது… ” என்றேன் ”நம்ம வீட்டுலே நமக்குப் பிடிச்சதைச் சாப்பிடலாம். ஆனா அவங்க வீட்டிலே நாம அவங்க குடுக்கிறதைத்தானே சாப்பிட்டாகணும். நமக்கு ஒருத்தர் உபசரிச்சுட்டு குடுக்கிறதை வேண்டாம்னு சொல்றது மாதிரி கேவலம் ஒண்ணுமே கெடையாது. அவங்களுக்கு கொஞ்சம்கூட மனசு கோணக்கூடாது… நம்ம முகத்திலே நமக்கு அதுபிடிக்கலைன்னு ஒரு சின்ன தடம்கூட தெரியப்பிடாது”

”தெரியும்” என்று கையை நக்கி ”அன்னைக்குச் சொல்றப்ப என்னமோ திருக்குறள்கூட சொன்னே” என்றாள். நான் ”பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர்” என்றேன். ” சோத்துலே நஞ்சை ஊத்தறத கண்ணால பாத்தாக்கூட நாகரீகமானவங்க அதை சாப்பிட்டுட்டுதான் வருவாங்க”

சட்டென்று ஒரு நினைவு. சுந்தர ராமசாமியும் நானும் கேரளத்தில் ஓர் ஊருக்கு ஓர் இலக்கியக் கூட்டத்துக்குச் சென்றிருந்தோம். சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. வெளிவந்திருந்த காலகட்டம் அது. திடீரென்று ஏகப்பட்ட கிறிஸ்தவ வாசகர்கள்.  ஒருவர் கூட்டம் முடிந்தபின் மாலை அவரது வீட்டில் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்றார். சுந்தர ராமசாமி வழக்கமாக ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனால் ஒத்துக்கொண்டுவிட்டார்.

அந்த வாசகர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். அவரைப்பற்றி எங்கோ எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். நானும் அவரும் அவாரது ஆட்டோவில் அவரது வீட்டுக்குப் போனோம். சிறிய வீடு. ஒரு கூடம், சிறிய படுக்கையறை, சமையலறை. நேரமாகிவிட்டிருந்ததனால் போனதுமே கூடத்திலேமேயே மேஜை போட்டு சாப்பாடு பரிமாறினார்கள். அகலமான பீங்கான் தட்டில் செக்கச்சிவந்த பெரிய அரிசி சோறு. இன்னொரு கிண்ணத்தில் சிவப்பான மீன் கறி. அவ்வளவுதான், வேறு எதுவுமே இல்லை.

எனக்குப் பகீரென்றது. சுந்தர ராமசாமி அய்யரென்ற தகவல் வாசகருக்கு தெரியும், அய்யர்கள் மீன் சாப்பிடமாட்டார்கள் என்றுதான் தெரியாது. நெய்மீன் [வஞ்சிரம்?] என்ற விலை அதிகமான மீன். பெரிய துண்டுகளாக போட்டு குழம்பு வைத்திருந்தார்கள். ஆனால் தொட்டுக்கொள்ள ஏதுமில்லை. அப்படி ஒரு வழக்கமே அவர்கள் வீட்டில் இல்லை போலும். அந்த மீனையே பொரிக்கும் எண்ணம்கூட அவர்களுக்கு இருக்கவில்லை.

ராமசாமி எம்.கோவிந்தனைப்பற்றிய ஏதோ கேள்விக்கு பதில் சொன்னபடி சாதாரணமாக வந்து அமர்ந்தார். அரைக்கணம் கூட முகம் மாறுபடவில்லை. ஆனால் அரைக்கணத்திற்கும் குறைவான நேரத்தில் என் கண்களை அவர் கண்கள் வந்து சந்தித்து தடுத்துச் சென்றன. நான் திக்பிரமை பிடித்து மேஜை முன் அமர்ந்தேன்.

அருமையான குழம்பு. சோறும் நல்ல சுவை. ஆனால் எனக்கு மரத்தூள் தொண்டையில் சிக்கியதுபோல இருந்தது. பிறந்த மறுநாளே  மீன் சாப்பிடுவது போல ராமசாமி  குழம்பை சோற்றில் பிசைந்து சாப்பிட்டார். நெய்மீனுக்கு நல்ல வேளையாக முள் கிடையாது. ராமசாமி சாப்பாட்டுப்பிரியர். சுவைத்து மெதுவாக ‘ஸ்டைலாக’ சாப்பிடுவார். அப்படித்தான் இதையும் சாப்பிட்டார்.

அந்த வீட்டுக்கு விருந்தாளிகளே வருவதில்லை போலும். அவர்களுக்கு உபசரிக்கவே தெரியவில்லை. ஏழெட்டுபேர் சாப்பிடும் சோற்றையும் கறியையும் அந்த அம்மாள் மேஜையிலேயே வைத்துவிட்டாள். மேஜைக்கு சுற்றும் அவர்களின் இரு பெண்களும் ஒரு பையனும் நின்று நாங்கள் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்தார்கள். ராமசாமி அந்தப்பிள்ளைகளிடம் அவர்கள் எங்கே பகலில் விளையாடுவார்கள் என்று கேட்டார். கூடத்தில் மாட்டியிருந்த கோணலான யானை எம்பிராய்டரி அந்த மூத்த பெண் பின்னியதா என்று கேட்டு ‘நன்றாக இருக்கிறது’ என்றார்.

அந்த அம்மாளிடம் அந்தப்பக்கமெல்லாம் ஏதோ காய் போட்டு மீன் சமைப்பார்களே என்றார். அந்த அம்மாள் பரவசத்துடன் ”கொடம்புளி கொடம்புளி ”என்று சொல்லி அதை எப்படி போடுவதென சொன்னாள். ”அருமையாக இருக்கிறது” என்றார் ராமசாமி. அவளுக்கு பதற்றத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் கதவு நிலையைப் பற்றிக்கொண்டாள். ”எங்க ஊரிலே கொடம்புளி உண்டு” என்று  அபத்தமாக உரக்கச் சொன்னாள். ”உங்க ஊர் எது?” ”பாலா” ”அப்படியா? பாலாவிலே எனக்கு ஜோர்ஜ் என்று ஒரு கூட்டுகாரன் உண்டு” பாலாவில் அந்த அம்மையாரின் குடும்பத்தைப்பற்றி நான்கு கேள்விகள் கேட்டு தெரிந்துகொண்டார். அவரது மலையாளம் தமிழ் நெடியடித்தாலும் பிழையில்லாமலிருக்கும்.

அவர்கள்  அத்தனை பேருக்கும் அந்த நாள் ஒரு மாபெரும் நிகழ்வாக இருந்திருக்கும் என தோன்றுகிறது. அவர் அருகிலேயே மொத்தக் குடும்பமும் நின்று வாயைப்பிளந்து வேடிக்கை பார்த்தது. பதினைந்து நிமிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம். ராமசாமி அந்த வாசகரிடமிருந்து நாற்றமான ஒரு சிகரெட்டை வாங்கி புகை விட்டார்.

திரும்பி எங்கள் விடுதி அறைக்கு வந்தபின் கதவைச் சாத்தியதுமே நான்கேட்டேன் ”இதுக்கு முன்னாடி மீன் சாப்பிட்டிருக்கீங்களா சார்?” ”இல்லே…நல்லாவே இல்லியே..ரப்பர் மாதிரி இருக்கே” ”குமட்டிச்சா?” என்றேன். ராமசாமி பதில் சொல்லவில்லை. அவரது இங்கிதங்களை நான் பொருட்படுத்துவதில்லை. ”குமட்டிச்சுதானே?” என்றேன். ”லுங்கியா கொண்டு வந்திருக்கேள்? சாயவேட்டி கட்டமாட்டேளா?”

தூங்குவதற்காக படுத்தவர் உடனே எழுந்து விட்டார் ”ஒருமாதிரி இருக்கு…” என்றார். ஏதோ மாத்திரை போட்டுக்கொண்டார். ”நீங்க அவங்ககிட்டே சொல்லியிருக்கலாம்” என்றேன். ”அந்த வீட்டிலே வேறே ·புட்டே இல்லை. பாத்தேன். நான் சாப்பிடலைன்னா ஏமாற்றத்திலே அவர் அந்தம்மாவை போட்டு அடிச்சாலும் அடிப்பார்..பரவாயில்லை.நாளைக்குச் சரியாயிடும்” நள்ளிரவு வரை ராமசாமி விழித்து அவஸ்தைப்பட்டார். மூக்கிலிருந்து தண்ணீர் வந்து கொண்டே இருந்தது. எனக்கு பயமாக இருந்தது. ஏதாவது ஆகிவிடுமா என்று. ”கொஞ்சம் மூச்சு தெணறறது…பரவால்லை” என்றார்.

நானும் விழித்திருந்தேன். விஜயகிருஷ்ணன் என்ற சினிமா விமரிசகர் பற்றி சுந்தர ராமசாமி சொன்னார்.  எல்லா படங்களையும் கிழி கிழி என்று கிழிக்கும் அவர் கடைசியில் ‘நிதியுடெ கத’ என்று ஒரு படம் எடுத்தார். கேவலமான படம். ஆனால் அது ஒரு பெரிய கிளாசிக் என்று சொன்னார் ”உண்மையிலேயே நம்பிண்டிருந்தார், அதான் பிரச்சினையே” என்றார் ராமசாமி ”இந்தப்படத்தை மனசுக்குள்ள அளவுகோலா வைச்சுண்டுதான் அவர் பரதனுக்கும் பத்மராஜனுக்கும் படம் எடுக்க தெரியலேன்னு சொல்லிண்டிருந்திருக்கார்” மூக்கு குழாய் போல ஒழுகியது. வாயில் எச்சில் வந்து துப்பிக்கொண்டே இருந்தார்.

மறுநாள் கிளம்பும்போது முகம் சற்று உப்பியபடி காணப்பட்டதை தவிர்த்தால் ஒன்றுமில்லை. ”இதை நீங்க எங்கயும் சொல்ல வேண்டாம்” என்றார். நான் தலையசைத்தேன்.

நான் சொல்லி முடித்தேன். அஜிதன் பயங்கரமாக மனம் நெகிழ்ந்துவிட்டான். முகம் கலங்கி கண்கள் பளபளத்தன. ” நீ இப்பல்லாம் அவரை பத்தி பேசினா அவர் எழுதியதைப்பத்தியே பேசறதில்லை” என்றாள் அருண்மொழி.

”உண்மைதான். இப்ப யோசிக்கிறப்ப எழுதினது பேசினது சர்ச்சை பண்ணினது எல்லாமே பின்னாலே போயிட்டுது…மனுஷங்க முழுமையா வாழற சில தருணங்கள் இருக்கு…அது மட்டும்தான் மிச்சம்னு தோணுது” என்றேன்.

[மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2009 டிசம்பர்]

மேலும்: அஷோக்

பரிமேலழகர் உரை
நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர் - பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவர்; நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர். (நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல் 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்' (நற் 355 ) என்பதனானும் அறிக. அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம் செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
நஞ்சு பெயக்கண்டும் அதனை மாற்றாது உண்டு அமைவர், எல்லாரானும் விரும்பத் தக்க நாகரிகத்தை விரும்புவார். நாகரிகம்- அறம் பொருள் இன்பத்திற்கண் நற்குணங்கள் பலவும் உடைமை.

மு. வரதராசன் உரை
யாவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.

சாலமன் பாப்பையா உரை
எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - எல்லாராலும் விரும்பப்படத்தக்க நாகரிகப் பண்பாகிய கண்ணோட்டத்தை வேண்டுபவர்; நஞ்சு பெயக்கண்டும் உண்டு அமைவர் - தம் நண்பர் தமக்குத் தம் கண்முன் நஞ்சிடக் கண்டும் அதை மறுக்காது உண்டு பின்னும் அவரொடு அன்பாகப் பொருந்துவர்.

'நயத்தக்க நாகரிகம் 'என்றதனாலும் , 'அமைவர் ' என்றதனாலும் , நஞ்சிட்டவர் நண்பர் என்பது உய்த்துணரப்படும். திருவள்ளுவர் தம் நூலை எல்லார்க்கும் பொதுவாக இயற்றியதனால் , இப்பொருட்பாலில் அரசர்க்குரியவற்றோடே ஏனையர்க் குரியவற்றையுஞ் சேர்த்தே கூறியுள்ளாரென்றும், இவ்வதிகாரத்தின் இவ்விறுதிக் குறள் தனிப்பட்ட சான்றோர் ஒழுக்கம் பற்றிய தென்றும் , அறிந்து கொள்க. நண்பரிட்ட வுணவாதலால் அது அவர் அறியாதிட்ட நஞ்சென்றும் ,நட்புப் பற்றிய கண்ணோட்டத்தாலேயே அது உண்ணப் பெறுமென்றும் , அதுவும் இயற்கைக்கு மிஞ்சியதாதலால் 'நயத்தக்க ' என்னும் அடைபெற்றதென்றும் , அறியப்படும் . அறிந்திட்ட நஞ்சாயின் அது நண்பர் செயலாகாமை அறிக. நயத்தகுதல் பகைவராலும் பாராட்டப் பெறுதல்.

நாகரிகம் என்பது இங்கு அகநாகரிகமான பண்பாட்டை , கண்ணோட்டம் பண்பாட்டுக் குணமாதலின் நாகரிகமெனப் பட்டது.

"முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சு முண்பர் நனிநா கரிகர்"

என்பது நற்றிணை(355).பெய்தும் என்னாது 'கண்டும் 'என்றதனால் , உம்மை உயர்வு கலந்த எச்சமாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
Even if you know the result of eating a spoiled or poisonous food would cause you trouble, still eat it without expressing any discomfort, if you want that friendship. That is, when our friend gives us something that we don't like unknowingly, we should still eat it happily to show our love and affection towards them.

Questions that I ask to the kid
What will you do if you know that your friend is giving you poison?

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்

குறள் 266
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ.

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

தவஞ்செய்வார் - தவம் செய்வார்;  பற்று அற்று வாழ்வோர்கள்

கருமம் - செயல்; வினைப்பயன்; தொழில் வேத சம்பந்தமான சடங்கு; தொழில், இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி.

தங்கருமஞ் - தம் கருமம் - தான் செய்ய வேண்டிய செயல்களை

செய்வார் - செய்வார்கள்

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))

மற் றல்லார் - மற்று அல்லார் - மற்றவர்கள்

அவம்  - வீண்; பயனின்மை; கேடு; ஆணை; அழைப்பு; வேள்வி; ஆகாயத்தாமரை

அவஞ்செய்வார் - அவம் செய்வார்- பயன் அல்லாதவற்றை செய்வார்கள்

ஆசை - வேண்டலுறும்பொருட்கண்செல்லும்விருப்பம்; விருப்பம்; பொருளாசை; காமவிச்சை; அன்பு; பேற்றில்நம்பிக்கை; பொன்; திசை; பொன்னூமத்தை, இச்சை, விருப்பம்

உட்படுதல்  - உள்ளாதல்; கீழாதல் அகப்படுதல் உடன்படுதல் சேர்தல்

ஆசையுட் பட்டு - ஆசையுள் பட்டு -  இச்சையின் பால், விருப்பத்தின் பால், தான் வேண்டியவற்றை/கண்ணுக்கு விருப்பபடுவற்றை கண்மூடிதனமாக அடை முற்ப்படுவது

முழுப்பொருள்
பயன் இல்லாத வற்றை செய்பவர்களை அவம் செய்பவர்கள் என்று கூறுவார்கள். இத்தகையவர்கள் ஒரு பொருளின்மீதோ அல்லது ஒரு செயலின் மீதோ இச்சைக்கொண்டுச் செயலின் பயன் பற்றி ஆராயாமல் இச்சையின் விசையால் சிற்றின்பத்தை நாடி செய்வார்கள். ஒரு வலைக்குள் சிக்கிகொள்வார்கள். அது பயன் அற்றவை ஆகும். இவர்கள் தங்கள் வாழ்வு தனை ஒரு சிறிய வட்டத்திற்குள் அடக்கிக்கொண்டு வாழ்வை  ஒரு நெறியில்லாமல் உலகவாழ்வியலில் வீணாக கழிப்பர்

ஆனால் தான் செய்ய வேண்டிய செயல்களை, கடமைகளை அறிந்து அதற்கு ஏற்றார்ப்போல் வாழ்வை நெறியுடன் அமைத்து மற்ற பயன் அல்லாத செயல்/பொருள்களின் மீது பற்று நீக்கி ஒரு வாழ்வை வாழ்பவர்கள் தவம் செய்பவர்கள் போல் ஆவர்.

இக்குறளில் நாம் காண வேண்டியது என்னவென்றால் இங்கே பற்றற்ற பயனுள்ள கர்ம குறிக்கோளுடன் ஒரு இல்லற வாழ்க்கை வாழ்பவன் கூட தவ வாழ்க்கை வாழ்பவனாக கருத படுவர்.

கிட்டதட்ட இதனின் மையப்பொருளில் இல்வாழ்கை அதிகாரத்தில் ஒரு குறளில் கூறியிருப்பார் திருவள்ளுவர்

மேலும்: நன்றி: அஷோக்

ஒப்புமை
“தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்” (முருகு 89)
“தலையாயார் தங்கருமம் செய்வார்” (நாலடி 52)
“வேம்க டங்கள்மெய் மேல்வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்
வேங்க டத்துறை வார்க்கு நமஎன்னல்
ஆம்கடமை அதுசுமந் தார்கட்கே” (திருவாய் 3.3:6)

“என்னுயிர்க் குறுவதும் செய்ய எண்ணினேன்” (கம்ப.மந்திரப் 15)
“ஈட்டுவார் தவம லான்மற் றீட்டினால் இயைவ தின்மை
காட்டினார் விதியார்” (கம்ப.ஊர்தேடு 104)

"தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத்திறம் ஒழிகென் றவன்வயின் உரைத்தபின்” (மணி 7:13-4)

"இழைத்ததீ வினையையும் கடக்க எண்ணுதல்
தழைத்தபே ரருளுடைத் தவத்தி னாகுமேல்
குழைத்ததோ ரமிர்தினைக் கோடல் நீக்கிவே
றழைத்ததீ விடத்தினை அருந்த லாகுமே” (கம்ப.மந்திரப்.25)


“நதியின் விசையை கிளைகளாக, கால்களாக பிரித்து நிறுத்துகிறோம். பசுமையெனப் பொலிகிறது. பொன் என விளைகிறது” என்று இளைய யாதவர் சொன்னார். அவரை வெற்றுவிழிகளால் நோக்கினார் விதுரர். “அனைத்து தொல்விசைகளும் அழகென்றும் அறமென்றும் மெய்மையென்றும் உருமாற்றத் தக்கவையே” என்றார் இளைய யாதவர். விதுரர் தலையசைத்தார்.

சற்று நேரம் கழித்து “ஆனால் அதனினும் மறைவானது என் ஆணவம்” என்றார் விதுரர். “ஆம், நான் அஸ்தினபுரியின்மேல் விழைவுகொண்டிருந்தேன். நானே தகுதியானவன் என்று எண்ணினேன். அந்நகருக்கு நிகராக நான் கொண்டிருந்தது அந்த அருமணி. அதை விழியருகே வைத்து உள்ளே நோக்குகையில் நான் கண்டது அடுக்கடுக்கென ஒளிகொண்டு விரியும் எனக்கான நுண்நகரத்தை. என் கோல்நிற்கும் கோட்டை, என் சொல் ஆளும் நிலம்.” சொற்களுக்காகக் கொந்தளித்து பின் மெல்ல அடங்கி “நீங்கள் சொன்னதுதான் யாதவரே, அளிக்கப்படும் உரிமை உரிமையே அல்ல. கொள்ளப்படுவதும் வெல்லப்படுவதுமே மெய்யான உரிமைகள். நான் அன்பாலும் அளியாலும் பேணப்பட்டவன். இன்சொல்லின் நஞ்சுண்டு வளர்ந்தவன். அன்பெனும் சிறுமையில் திளைத்துக்கொண்டிருப்பவன்” என்றார்.

“நான் அவளுக்கு உள்ளிருந்து பிறிதொன்றை எடுக்க கற்பிக்கப்போகிறேன். அரசியென அவள் இருக்கும்போது ஆடல் அவளுடன் உறையாது. அரசியல்லாதாகி அவளென்று எஞ்சும் தனியறைக்குள் ஆடல் மட்டும் அவளுடன் இருக்கும். அதை தடுக்கும் தன்னுணர்வொன்றும் அவளிடம் எஞ்சாது” என்றாள். அவன் நகைத்து “நன்று. அவைநடுவே அரியணை மேடையில் அவ்வாட்டம் எழாதிருக்கும்வரை அனைத்தும் நலமே” என்றான். அவள் நகைத்து “இரண்டாக பகுத்துக்கொள்வதைப்போல் பெருகும் வழி பிறிதொன்றில்லை. அவ்விரண்டில் ஒன்று பெருகி பிறிதொன்றை உண்ணுமென்றால் அமையும் முழுநிலைபோல் சிறந்த தவமும் இல்லை” என்றாள்.



பரிமேலழகர் உரை
தம் கருமம் செய்வார் தவம் செய்வார் - தம் கருமம் செய்வாராவார் துறந்து தவத்தைச் செய்வார், மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார், அவற்றின்கண் ஆசையாகிய வலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார். (அநித்தமாய் மூவகைத் துன்பத்ததாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத் 'தம் கருமம் செய்வார்' என்றும், கணத்துள் அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை 'அவம் செய்வார்' என்றும் கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.)

மணக்குடவர் உரை
தங்கருமஞ் செய்வார் தவம் செய்வார்; அஃதல்லாதன செய்வாரெல்லாம் ஆசையிலே அகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார்.
இது தவம்பண்ண வேண்டுமென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரைதவம் செய்வார் தம் கருமம் செய்வார் - உலகப் பற்றைத் துறந்து தவஞ் செய்வாரே தம் கருமத்தைச் செய்பவராவர்; அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - அவரல்லாதார் பிறவிக்கேதுவான பொருளின்ப ஆசை வலையுள் அகப்பட்டுத் தமக்குக் கேடு செய்பவரேயாவர்.

'கருமம்' என்றது நன்மையான. கருமத்தை , தொடக்கமிலியாக (அநாதியாக)க் கணக்கற்ற பிறந்திறந்துழன்று வரும் ஆதன் (ஆன்மா) , அப் பிறவித் துன்பத்தினின்று விடுதலை பெற்றுப் பெயராப் பேரின்பந் துய்த்தற்கு , உடலை யொடுக்கி ஆசையை யடக்கி உள்ளத்தை யொருக்கி இறைவனொடு ஒன்றுவிக்கும் தவத்தை மேற்கொள்வதே தகுந்த வழியாதலின் , அதைச் செய்பவரைத் ' தங்கருமஞ் செய்வார்' என்றும் ; நிலையாது திடுமென்று மாய்வதும் பிணி மூப்பால் நலிவதுமாகிய உடம்பில் நின்று , மின்னல் போல் தோன்றி மறையுஞ் சிற்றின்பத்தை நுகர்தற் பொருட்டு, எல்லையில்லாது தொடந்து செல்லும் பிறவித் துன்பத்திற் கேதுவான தீவினைகளைச் செய்து கொள்பவரை ' அவஞ் செய்வார்' என்றுங் கூறினார்.

ஆசைக்கோ ரளவில்லை யாதலால் , தன்பொருட்டும் மனைவி மக்கள் பொருட்டும் ஆசைக் கடலுள் அழுந்தச் செய்யும் இல்லறத்தினும், தன்னந்தனியாயிருந்து தவத்தின் வாயிலாய் ஆசையறுக்கும் துறவறமே , வீடு பேற்றிற்குச் சிறந்த வழி யென்பது கருத்து.

இல்லறத்தானும் தன் கடமையை அற நூற்படி செய்வானாயின் தவஞ் செய்தவனாவான் என்றும் , பகவற் கீதையில் கூறியவாறு பயன் நோக்காது தன் கடமையைச் செய்பவன் கருமவோகி என்றும், இதற்குப் பொருள் கூறுவது பொருந்தாது. தவம் ஈரறத்திற்கும் ஓரளவிற் பொதுவாகுமே யன்றி இல்லறவினை துறவறவினை யாகாது.

பொருள்: தவம் செய்வாரே தம் கருமம் செய்வார் -தவத்தைச் செய்பவரே தமது கருமத்தைச் செய்பவர்; அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - தவஞ் செய்யாதார் ஆசையுட் சிக்கி வீண் கருமம் செய்பவர்.

அகலம்: கருமம் - வினை. செய்வாரே என்பதன் ஏகாரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. ‘மற்று’ அசை. தருமர், நச்சர் பாடம் ‘ஆசையுட் பட்டு’. மற்றை மூவர் பாடம் ‘ஆசையிற் பட்டு’.

கருத்து: தவஞ் செய்வாரே தம் கருமம் செய்தவராவர்.

மு.வ உரை
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.

சாலமன் பாப்பையா உரை
தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.


Thirukkural - Management - Personality Development - Responsibility
Valluvar, in Kural 266, equates a person who acts according to what he is responsible to a person who does meditation. This similarity is because of the importance of execution of responsibilities. A responsible person responsibly carries out his responsibilities. He knows that he is created to fulfill his purpose of creation, confirms Kural 266.

The penance-doer realizes his self, while those
Caught in yearning's net defeat themselves.

If a person does not focus on his responsibility, he will be diverted by so many other unwanted activities. Let us remember the conversation between a student  and Swami Vivekananda to understand the importance of fulfilling one's responsibilities. A student, when he met Swami Vivekananda,  said, “Swami, I want to serve the society. Kindly tell me what I should do?” Swami asked, “What are you?” The boy replied, “I'm a student.” Swami counseled, “Your only service to the society is to study well.” 

If a student studies well, if a cook cooks well, if a driver drives well and if a leader leads well, the society in which these people live will become a prosperous society. Fulfilling one's responsibility sincerely is equivalent to doing meditation. 

Getting diverted from major responsibility and involving in other activities is similar to an insect that is caught in a spider's web. The caught insect tries to get out of the web and in turn gets itself entangled in the web. A person who does not carry out his responsibilities is caught in the web of desires and that destroys him. There is no freedom when a person does not do what he is responsible to do.

English Meaning - As I taught a kid - Rajesh
Those who do penance do their job (towards their goal Moksha, duties of household, work/career etc) whereas others do all stuffs to satisfy their sensory pleasures. Those who do penance with focus make progress and accomplish it. Whereas those who don't do penance don't achieve anything. So, do anything like you do a penance and stay away from distractions and sensory pleasures

Questions that I ask to the kid
What does people who do penance do and others do? (தவஞ்செய்வார்)