Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

 

குறள் 730
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்
[பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை]

பொருள்
உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர்

எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும்

இல்லாரொடு - இல்லார் - இல்லாதவர்

ஒப்பர்- ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை.

களன் - மருதநிலம்; இடம்; பொய்கை; ஒலி; கழுத்து; தொடர்பு; மயக்கம்.

அஞ்சிக் - அஞ்சுதல் - பயப்படுதல்

கற்ற - கற்கை - பயிலுதல்

செலச் - செறிவாக, மனம் உணரும் அளவிற்கு
சொல்லுவார் - உரைப்பவர், சொல்லுபவர், விளுக்குபவர்

சொல்லாதார் - சொல்லாதவகள்; உரைக்காதவர்கள்

முழுப்பொருள்
உளர் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்களை எடுத்துக்கொள்ளாலாம். அப்படி எடுத்தால் பொருள் என்னவென்ற பார்க்கலாம்

1. உளர் - உடையது/(கல்விச்)செல்வம்; நூல்கள் பல கற்று/வாசித்து கல்விச்செல்வத்தை பெற்றிருந்தாலும் சான்றோர்கள் அறிஞர்கள் கூடியுள்ள அவையில் செறிவாக தெளிவாக நன்றாக பேச அஞ்சுபவர் கல்வி அறிவில்லாதவர் (கல்வியில் வறுமையானவர்க்கு) ஒப்பானவர்கள். ஏனெனில் கல்லாதவரும் கற்றவர் அவையில் பேச அஞ்சுவர். 

2. உளர் - உயிருடன் வாழ்தல்; நூல்கள் பல கற்று/வாசித்தும் சான்றோர்கள் அறிஞர்கள் கூடியுள்ள அவையில் செறிவாக தெளிவாக நன்றாக பேச அஞ்சுபவர் உயிர் இருந்தும் (உயிரோடு வாழ்ந்தாலும்) உயிரில்லாத பிணத்திற்கு சமம் என்று கடுமையாக கூறுகிறார் திருவள்ளுவர். பிணங்கள் எதற்கும் பயனற்றது. துர்நாற்றம் வீசுவது. பிறருக்கு தீமைக்கொடுப்பது. அதுப்போலவே அரைகுறை கல்வியால் இவர்களும் தீமையைக்கொடுப்பார்கள் என்பதனால் கூட திருவள்ளுவர் கூறியிருப்பார். 

முன்பு கல்லாமை அதிகாரத்திலும் இதே கருத்தை ஓட்டி குறியிருந்தார் திருவள்ளுவர். “குறள் 406 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர் (கல்லாமை அதிகாரம்)” . அதாவது கல்வி கல்லாதோர் உயிர் உடமில் ஒட்டிக்கொண்டுள்ள ஒரு மிக சாதாரணமான/ கேவலமான உடம்பு என்கிறார் திருவள்ளுவர். இவர்கள் எதற்கு ஒப்பாவர்கள் என்றால் பயனே தராத விளைச்சலே தராத களர் நிலத்திற்கு. கல்வி இல்லாதவர்கள் மற்றவர் யாருக்கும் எவ்வித பயனையும் தர மாட்டார்கள். [அத்தகைய நிலம் இவ்வுலகத்திற்கு பாரம் போன்றே இந்த மனிதர்களும் உலகிற்கு பாரம்]. அதனையே திருவள்ளுவர் கூறுகிறார். 

முன்பு, சொல்வன்மை அதிகாரத்தில், இக்குறள் போல் அதிகாரமாக(order) இல்லாது, சிறிது உறைப்புக் குறைவாகவே, தாம் கற்றதை நன்கு விரிவாக உரைக்கத் தெரியாதவர், மணமில்லா பூங்கொத்துக்குச் சமம் என்றார் வள்ளுவர் கீழ்வரும் குறளால்.
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார் - அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் - உயிர் வாழ்கின்றாராயினும் உலகத்தாரால் எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர். (ஈண்டுக் 'களன'¢ என்றது ஆண்டிருந்தாரை. இவை ஐந்து பாட்டானும் அவைஅஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உளராயினும் செத்தாரோடு ஒப்பார்: அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றதனை அதற்கு இசையச் சொல்லமாட்டாதார். இது செத்தாரோடு ஒப்பரென்றது. இவை ஐந்தும் அவையஞ்சுதலான் வருங்குற்றம்கூறின.

மு.வரதராசனார் உரை
அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.

சாலமன் பாப்பையா உரை
அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.

Thirukkural - Management - Public Speaking - Fear of speaking 
Valluvar uses a simile in Kural 730 to stress the importance of fearless speaking. If a person possesses supreme knowledge and possesses fear to present his knowledge to the learned audience, he is similar to a person who is dead. 

Those who thorough stage-fright keep 
their learning to themselves 

Though living, are dead. A dead person’s knowledge is of no use to anyone. Similarly, a fearful person’s knowledge is not useful to anyone. A person who does not speak confidently and convincingly in public is in no way different from a person who cannot speak. Though the person who cannot speak is physically alive, he is mentally dead.

No comments:

Post a Comment