Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label 08 இயல் - அரசியல். Show all posts
Showing posts with label 08 இயல் - அரசியல். Show all posts

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது


குறள் 538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்
[பொருட்பால், அரசியல், பொச்சாவாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.
புகழ்தல் - உயர்த்திக்கூறுதல்; துதித்தல்; பாராட்டுதல்.
புகழ்ந்தவை - சான்றோர் இன்னவை உயர்ந்தவை என்று போற்றுபவையை

போற்றிச் - போற்றுதல் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல்

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

வேண்டும் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

செய்யாது - செய்யாமல்

இகழ்-தல் - ikaḻ-   4 v.intr. To be careless,negligent; அசாக்கிரதையாதல். பிரியாரென விகழ்ந்தேன் (திருக்கோ. 340).--tr. 1. To slight, despise;opp. to புகழ்-;அவமதித்தல். (குறள், 698.) 2. Toforget; மறத்தல் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில்(குறள், 538).  
இகழ்ந்தார்க்கு  - மறந்தவருக்கு

எழுமையும் - எழுமை - உயர்ச்சி; ஏழ்வகை; ஏழுவகைப்பிறப்பு; ஏழுமுறைபிறக்கும்பிறப்பு.

இல் - இல்லை

முழுப்பொருள்
நான் அடைந்த உயரங்கள் போதும். நான் கற்றவை போதும். இதுவே எனக்கு சந்தோஷம். எனக்கு இதைவிட உயரங்கள் வேண்டாம். மறவாமை ஏன் அவசியம்?

உயரங்கள் அடைந்துவிட்டு. இது போடும் என்று நின்றுவிடாதே. நீ இதுவரை புகழ்ந்தவற்றை மறவாதே. ஏனெனில் தேங்கிவிடுவாய். அது அழிவின் துவக்கம். 

சான்றோர் பெருமக்கள் புகழ்ந்த உயர்வானவற்றை போற்றி விரும்பி கடைப்பிடிக்க வேண்டும். சான்றோர் என இல்லை தான் புகழ்ந்த உயர்வானவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும். 

போற்றியதையெல்லாம் செய்யுங்கள். அவ்வண்ணம் ஒருவர் எல்லா செயல்களையும் மறவாது செய்தால் அவருக்கு உயர்ச்சி கிடைக்கும். அதுவே ஒருவர் தான் செய்யவேண்டியவற்றை மறந்தால் அவருக்கு உயர்ச்சி இல்லை. அவர் தேங்கி விடுவார். தேங்கிய நீர் சிறிது காலத்தில் துர்நாற்றம் அடிக்கும். 

ஒருவர் ஒரு செயலை விரும்பிச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் மறவாமல் செய்ய முடியும். விரும்பாமல் செய்தால் அவர் சிறு சிறு விஷயங்களை மறக்கக்கூடும்.

உயர்ந்தனவனவற்றை வெறுமென அறிவதாலும் கேட்பதாலும் உணர்வதாலும் போற்றுவதாலும் ஒரு பயனும் இல்லை. அவற்றைச் செயல்படுத்தினாலே பயன்கிட்டும். செய்யமாட்டேன் வெறும் புகழுவேன் என்றால் அதற்கு நீ புகழ்வதை விட்டுவிடு. புகழவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இது திருக்குறளைப் போற்றுவோருக்கு பொருத்தமானது. உன் புகழ்ச்சியை வைத்து திருக்குறள் என்ன அடையப்போகிறது? திருக்குறளைப் புகழ்வதை விட, அதில் கூறப்பட்டுள்ளதை செயல்படுத்தினால் அதுவே திருக்குறளுக்கு செலுத்தப்படும் மரியாதை எனலாம். 

ஆதலால் ஒரு விஷயத்தை புகழ்ந்ததுடன் அதனை மறந்துவிடாதே (அல்லது புகழ் வாய்ந்த ஒன்றை கற்ற உடன் மறந்துவிடாதே). புகழ்ந்தவற்றை போற்றி செயலாற்று என்கிறார் திருவள்ளுவர்.

உதாரணத்திற்கு இந்த திருக்குறள் தளத்தை வலைப்பூவாக பதிவேற்றம் செய்து இருக்கிறேன். அதனால் இந்த வலைப்பூவிற்கு திருக்குறள் புரிந்துவிட்டது என்று அர்த்தமா? திருக்குறளை படிப்பதால் என்ன இலாபம்? வெறுமென திருக்குறளைக் குறிப்பெடுத்து மனப்பாடம் செய்வதால் என்ன இலாபம்? ஒன்றும் இல்லை.  யார் ஒருவர் தான் கற்றவற்றை செயலில் காண்பிக்கிறாரோ அவரே அதனால் பயனடைகிறார்.

தொடர்புடைய மற்ற குறள்கள்
உதாரணம்: காந்தி, சச்சின், ரஜினிகாந்த், ஆண்ட்ரி அகாசி
காந்தி, சச்சின், ரஜினிகாந்த், ஆண்ட்ரி அகாசி போன்றோரை எல்லோரும் வானளாவ புகழுவர். ஆனால் புகழ்ந்துவிட்டு அவர்களது விழுமியங்களை மறந்தால் அது தவறு. அவர்களது விழுமியங்களை பின்பற்றினால் நாமும் வாழ்வில் பல படிகள் ஏறி முன்னேறலாம். அதனால் தான் ”பெரியோரை வியத்தல் இலமே” என்று கூறினார்கள் போலும். 

சில வாக்கியங்கள்


மகிழ்ச்சி என்பது நீ நினைப்பது, நீ சொல்வதும் நீ செய்வதும் ஒன்றாக இருக்கும் பொழுது - மஹாத்மா காந்தி 
Happiness is when what you think, what you say, and what you do are in harmony. - Mahatma Gandhi




இவை எல்லாம் நம்பிக்கை சார்ந்தது. என்னால் முடியும் இது நிகழும் என்னும் நம்பிக்கை. ஆனால் எது முக்கியம் என்றால் எதனையும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் கடுமையாக எப்பவும் போல் உழைத்தல் ஆகும். ரன்கள் எடுப்பது எடுக்காமல் இருப்பதும் ஆட்டத்தின் பகுதிகள் என்பதை ஆட்டத்தை நெடுநாட்கள் விளையாடுவோருக்கு தெரியும். - சச்சின் டெண்டுல்கர் (க்ரிக்கேட் வீரர்)
”It is all about belief. I knew it will come but it was important that you don't take things for granted and keep working the way you usually do. Scoring runs and not scoring runs will always come across and it is part of a career and you can experience that when you have played long enough" - Sachin Tendulkar  

 


கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைக்குறது என்னிக்குமே நிலைக்காது - ரஜினிகாந்த் (படையப்பா வசனம்) (திரைப்பட நடிகர்)
"You won't get anything without hard work. What you get without hardwork will never fructify" - Rajinikanth



எனது தந்தை சொல்வார் ஒருவர் ஒவ்வொரு நாளும் 2500 பந்துகளை விகிதம் அடித்தால் அவர் ஒரு வாரத்தில்  17500 பந்துகள் அடிப்பார். இப்படி அவர் ஒருவருடம் முழுவதும் அடித்தால் பத்து லட்சம் பந்துகளை அடிக்கப்பார். எனது தந்தை கணிதத்தில் நம்பிக்கைக் கொண்டவர். அவர் சொல்லுவார் எண்கள் (தரவுகள்) பொய் சொல்லாது.  எந்த ஒரு குழந்தை (பால்ய பையன்) ஒரு வருடத்தில் ஒரு பத்து லட்சம் பந்துகளை அடிக்கிறானோ அவனை வெல்ல முடியாதவனாக ஆவான் என்று - ஆண்ட்ரி அகாசி (டென்னிஸ் வீரர்)”
“My father says that if I hit 2,500 balls each day, I’ll hit 17,500 balls each week, and at the end of one year I’ll have hit nearly one million balls. He believes in math. Numbers, he says, don’t lie. A child who hits one million balls each year will be unbeatable.” ― Andre Agassi, Open: An Autobiography

மேலும்: அஷோக் உரை

நோயின்றி வாழமுடியாதா? - மூ.இராமகிருட்டிணன். தமிழ்நாட்டின் முதல் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி. உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம்
மூளையின் செரியாமை
நமது உடலால் அல்லது செரிமான உறுப்புகளால் எவ்வளவு செரிக்க முடியுமோ அவ்வளவு நாம் உண்பதில்லை. ஒருநாளும் அளவறிந்து உண்பதில்லை. நமக்கு அளவு தெரியவும் தெரியாது. 

அளவறியாமல் உண்பதினாலே நாம் பிணிகளால் பின்னப்படுவது போல நாம் அளவறிந்து படிப்பதும், கேட்பதும், சிந்திப்பதும் இல்லை. நம்முடைய மூளையாலும், மனதாலும் எவ்வளவு வாங்கி செரிக்க முடியுமோ அந்த அளவுக்கு மூளைக்கு வேலை, செய்தி கொடுப்பதில்லை.

வயிற்றுக்கு எப்படி செரிக்க முடியாத அளவுக்கு உணவு கொடுத்து வயிற்றையும், உடலையும் கெடுக்கிறோமே அது போல மனதிற்கும் செரிக்க முடியாத அளவிற்கு செய்திகளை கொண்டு போய்க் கொட்டிக் கொண்டே இருக்கிறோம். எவ்வளவுதான் செரிக்க முடியும் நம் மனதால். அளவு நமக்குத் தெரியாது. வயிற்றுக்கே தெரியவில்லை என்றால் மனதிற்கு எப்படித் தெரியும்?

எப்படி வயிற்றில் செரிக்கா விட்டால் பேதி ஆகிறதோ, வாந்தி ஆகிறதோ அது போல மூளை செரிக்காவிட்டால் அவன் பேசிக் கொண்ஏ இருப்பான். எதையாவது எழுதிக் கொண்டே இருப்பான். அப்புறம் பைத்தியமாகத் திரிவான். பைத்தியம் என்பது வேறொன்றும் இல்லை. மூளையின் செரியாமையினால் ஏற்பட்ட ஒரு எதிர் விளைவு. 

மனதின் உள்வாங்கும் சக்திக்கேற்ப சரியான அளவு செய்திகளை, சிந்தனைகளை அளிக்க வேண்டும். வள்ளுவரும் கசடற கற்க, அதை அளவோடு கற்க, கற்றபின் எவ்வளவு உண்ணால் நிற்க முடியுமோ அதற்கேற்ப கற்க. கற்றலிலும் எந்த அளவிற்கு நம்மால் பின்பற்ற முடியுமோ அந்த அளவிற்குக் கற்க என்று வைத்துவிட்டால் படிக்க வேண்டிய நூல்கள் எவ்வளவு இருக்கும்? தெளிவான சிந்தனை ஒன்று இருந்தது என்றால் அவன் படிக்க வேண்டிய வேலையே இருக்காது. நாமே நூலாக மாறுகிறோம். ஆசிரியராக மாறுகிறோம். செயலாக மாறுகிறோம்.


எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு சொல்வளர்காடு-42 இல் வளர்ச்சி உயிர் வாழ்தலை இனைத்து ஒரு தத்துவத்தை கூறியிருப்பார். அதில் ஒரு மரத்தின் இலைகள் தளிர்பதால் தான் அம்மரம் உயிர்வாழ்கிறது. அத்தளிர்களால் தான் அவ்வேரும் கிளைகளும் உயிர்ப்போடு இருக்கின்றன என்று வரும். கீழே முழுதும் வாசித்து அறிந்துக்கொள்ளவும்

“இளையோரே, அந்த அழகிய மரம் தன் கிளைகளை மண்ணில் விரித்துள்ளது. வேரை விண்ணில் பரப்பியிருக்கிறது” என்று அவர் சொன்னார். “விண்ணகம் தூயநீர் ஒன்றால் நிறைந்துள்ளது என்கின்றன நூல்கள். அப்பாற்கடலின் திவலையையே நாம் மழை என்கிறோம். விசும்பின் துளி இங்கு பசும்புல் தலையாகிறது. பருப்பொருள் அன்னமாகிறது. அன்னம் அன்னத்தை வளர்க்கிறது. அன்னத்தின் ஆடலையே இங்கு இயல்வாழ்வு என்கிறோம். ஆயிரம் கிளைகள். பல்லாயிரம் சிறுகிளைகள். பற்பலப் பல்லாயிரம் சில்லைகள், முடிவிலா இலைகள்.”

“அனைத்திலும் பெருகும் சாறு ஒன்றே. அது விண்ணில் ஊறுவது. இளையோரே, வேர் அங்கிருக்கிறதென்றால் அதன் விதை எங்கிருந்தது? விண்ணகத்தில் நுண்வடிவாக இருந்தது அவ்விதை. முளைத்த பின்னரே தன்னை கண்டுகொண்டது அது. இலைகளின் காரணமென சில்லைகளும் சில்லைகளின் காரணம் என கிளைகளும் கிளைகளின் காரணமென மரமும் மரத்தின் காரணமென வேர்களும் வேர்களின் காரணமென விதையும் என்றால் அவ்விதையின் காரணமென அமைவது எது? அதுவே இங்குள அனைத்தும். அதை வணங்குக!”

முடிவற்றுத் தளிர்ப்பதே அதன் விழைவென்பதனால்தான் அது இங்கு இவ்வண்ணம் உருக்கொண்டது. இங்கிருந்து வளர்ந்தெழுகிறது. அவ்வண்ணமென்றால் அதன் அழியாச்சொல் உயிர்த்திருப்பது தடியிலா, கிளையிலா, சில்லையிலா, இலையிலா? இல்லை எழுந்து ஒளிகொள்ளும் புதுத்தளிரில் மட்டுமே. உறுதியும் வண்ணமும் கொண்டவை மரமும் கிளைகளும். ஆனால் தளிருக்கு மட்டுமே பொன் அளிக்கப்பட்டுள்ளது” என்று அவர் சொன்னார். தனக்குள் என அவர் சொல்லிக்கொண்டே சென்றபோது அவரும் அங்கின்றி அச்சொற்கள் முழங்குவதுபோல் தோன்றியது.

“தளிரென எழுந்த ஒவ்வொன்றுக்கும் நிகராக அறியாத வானத்து ஆழங்களில் அதன் வேர்நுனி முளைகொள்கிறது என்றறிக! இங்கு ஒரு தளிரை கிள்ளுபவன் அங்கு ஒரு வேர்முளையின் பழிகொள்கிறான். இளையோரே, தடியால் இலையால் முள்ளால் தளிரை காத்துக்கொள்கிறது மரம். ஏனென்றால் தளிரிலேயே அது வாழ்கிறதென அது அறிந்துள்ளது.” அவர் விழிகள் பாதி மூடியிருந்தன. இதழ்கள் அசைகின்றனவா என்னும் உளமயக்கு ஏற்பட்டது. “இலைகளின் அலைகளாக ஒரு பெருவெள்ளம். புவிமூழ்கடித்து அது எழுகிறது இன்று. அதன் நுரைகள் அறைகின்றன இமயமலைமுடியை. அதன் ஆழிப்பேரோசை சுமந்த சங்குகள் ஆகின்றன நாம் உரைக்கும் ஒவ்வொரு சொல்லும்.”

பரிமேலழகர் உரை
புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் - நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க, செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மை இல்லை ஆகலான்.
(அச்செயல்களாவன: மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள். சாதி தருமமாகிய இவற்றின் வழீஇயோர்க்கும் உள்ளது நிரயத் துன்பமே ஆகலின், 'எழுமையும் இல்' என்றார். 'எழுமை' ஆகு பெயர், இதனான் பொச்சாவாது செய்ய வேண்டுவன கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
உயர்ந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைப்பிடித்துச் செய்தல்வேண்டும். இவையிற்றைச் செய்யாது இகழ்ந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லையாமாதலான். இஃது அறத்தின்கண் இகழாமற் செய்வது கூறிற்று.

மு.வரதராசனார் உரை
சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.

சாலமன் பாப்பையா உரை
உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.

English Meaning - As I taught a kid - Rajesh
Whatever you praise, whatever you consider worthy, whatever you respect you should do it. If you do not do it then there will not be any growth.

Questions that I ask to the kid
For growth what should you do?
What you should not forget?
Is knowing worthy stuffs sufficient?

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை


குறள் 536
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்
[பொருட்பால், அரசியல், பொச்சாவாமை]

பொருள்
இழுக்காமை - மறவாமை

யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்)

என்றும் - என்றைக்கும், எந்நாளும், எப்போதும்.

வழுக்குதல் - சறுக்குதல்; தவறுசெய்தல்; தப்புதல்; மறத்தல்; அசைதல்; ஒழிதல்; அடித்தல்; மோதுதல்.
வழுக்கல் - சறுக்குகை; 

சறுக்கு-தல் - caṟukku-   5 v. intr. cf. sṛ. [T.tjāru, K. jaraku.] 1. To slip or slide;வழுக்குதல். ஆனைக்கும் அடிசறுக்கும். 2. To goastray; வழுவுதல் (W.) 3. To slip out of hand,as an affair; காரியம் நழுவுதல் 4. To skim,graze; உராய்ந்து செல்லுதல் (W.)  

வழுக்காமை - தவறாமை, சீர்குலைவு

வாயின் - வாய்க்குமாயின்

அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

ஒப்பது - ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை.

இல் - இல்லை

முழுப்பொருள்
மறத்தல் என்றால் அயர்த்தல். அயர்ச்சி என்றால் சோர்வு. மறத்தல் என்பது ஒருவித தளர்வு. மறத்தல் தீது. ஆதலால் மறவாமை என்னும் தளர்வின்மை யாரிடத்தில் என்றும் சறுக்காமல் (விடாமல்) இருக்கிறதோ அவருக்கு அதைப்போல் நன்மை வேறு ஏதுமில்லை. 

மறவாமை ஏன் நன்மை பயக்கும்? ஏனெனில் மறதி இருந்தால் நாம் செய்யவேண்டியவற்றை செய்ய மாட்டோம். சோர்வில் மறந்து செய்யாமல் விடும் சிறு சிறு காரியங்கள் பல. ஒருகட்டத்தில் பல சிறு காரியங்கள் மலைப்போல் குவிந்துவிடும். அப்பொழுது அவற்றை செய்வதையே விட்டுவிடுவொம். இது ஒருகட்டத்தில் சிறு சிறு காரியங்களை என்றும் செய்யாது இருக்கும் பழக்கத்தை மனநிலையை உருவாக்கிவிடும். அதனால் நாம் இழப்பது மிக மிக அதிகமாக இருக்கும். 

உதாரணமாக பார்த்தால்
1. ஒருவர் மின்சார கட்டணத்தை குறித்த நேரத்தில் கட்ட மறந்துவிடுவார். அது அவருக்கு நஷ்டமே ஏனெனில் அதற்கு அபராத தொகை விதிக்கப்படும். ஒருதடவை மறந்தால் பரவாயில்லை. ஆனால் இது பல நேரங்களில் நடந்தால் அந்த அபராத தொகையே மிக மிக அதிகமாக இருக்கும்.
2. ஒருவர் வேலைக்கு குறித்த நேரத்தில் சாப்பிட மறந்துவிடுகிறார் என்றால் அவருக்கு நாளடைவியில் குடல்புண் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் நெஞ்சு எரிச்சலும் ஏற்படும். 
3. தேவையான அளவு செல்வம் செமிக்கவில்லை என்றால் இடர் காலங்களில்  குடும்பத்தை சமாளிக்க மிக கடினமாக இருக்கும் 

மேற்சொன்னவை யாவும் சின்ன சின்ன விஷயங்கள். சற்றுப் பெரிதாக பார்ப்போம்
1. நமது அலுவகத்தில் முக்கியமான ஒரு சந்திப்பை மறந்தால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.
2. நமது தொழிலில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம் அடைய யோசிக்க மறந்தால் நாம் தேங்கி நிற்போம். 
3. நமது தொழிலில் ஆண்டு (அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு தடவை) கணக்கு பார்க்க மறந்தால் நாம் பெரிய அளவில் நஷ்டமடைய வாய்ப்புண்டு.
4. நமது உடலை பேண மறந்தால் அதன் விளைவுகள் மிக கடுமையாக இருக்கும். பெரும்பாலான நேரங்களில் அவற்றை பழைய சகஜ நிலைமைக்கு எடுத்து வரமுடியாது
5. நமது குடும்பத்தாருடன் கலந்து பேசி உறவை பேண மறந்தால் உறவுகள் முறியும்
6. தேவையான அளவு (6-8 மணி நேரம்) உறங்க மறந்தால் உடல் சோர்வடைந்து கெடும். 

இவை எல்லாவற்றிற்கும் அடி நாதம் ஒழுக்கம் என்பதை உணரவேண்டும். ஒழுக்கத்தை உயிரைவிட பேண வேண்டும். 


அதனால் தான் 

“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று” மறத்தலை நன்றிலாது ஒருவர் செய்த செயலை நாம் உடனே மறக்கவேண்டியதையும் விலக்காகவும் வள்ளுவரே சொல்லியிருப்பதைக் காண்க.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர்மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின், அஃது ஒப்பது இல் - அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை.
(வினை செய்வார் சுற்றத்தார் என்னும் தம்பாலார் கண்ணும் ஒப்ப வேண்டுதலின், 'யார் மாட்டும்' என்றும் , தாம் பெருகியஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்ப வேண்டுதலின் வழுக்காமை 'என்றும்' கூறினார். வாயின் என்பது முதனிலைத் தொழிற் பெயராக வந்த வினை எச்சம். வாய்த்தல்: நேர்படுதல்.).

மணக்குடவர் உரை
யாவர்மாட்டும் எல்லாநாளும் தப்புச்செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின் அதனையொக்க நன்மை பயப்பது பிறிதொன்று இல்லை. இது முறைமை செய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்யவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.

Thirukkural - Management - Memory
If a person has acquired superior memory, he possesses one of the greatest assets in him, as there is nothing greater than superior memory, convinces Kural 536.

Nothing can equal never being tax
With anyone at any time.

So, every time and all the time, we must consciously work and deliberately develop superior memory. Superior memory must become an unconscious competence.

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்


குறள் 530
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]

பொருள்
உழைப் - இடம்; பக்கம்; யாழின்ஒருநரம்பு; மான்; பசு; பூவிதழ்; ஏழனுருபு; உவர்மண்; விடியற்காலம்; கதிரவன்மனைவியருள்ஒருத்தி; வாணாசுரன்மகள்; இடைச்சுரம்.

உழைப் - (வி)உழைஎன்னும்ஏவல், பாடுபடு.

உழைப் – சுரத்தில் மத்தியமம் (நடு சுரம்), கார்காலம் (நடுவிலே அல்லது துன்பம் வந்த காலத்து)

உழைதல் - துன்பமுறல்; இரைதல்.

பிரிந்து - பிரிதல் - விட்டுவிலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; முறுக்கவிழ்தல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.

காரணத்தின் - காரணம் - மூலம்; ஏது; கருவி; நோக்கம்; வழிவகை; சிவாகமங்கள்இருபத்தெட்டனுள்ஒன்று

வந்தானை - வந்தான் - வருதல்

வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

இழைத்து - நுட்பமாக
இழைத்தல் - செய்தல்; குழைத்தல் தூற்றல் செதுக்குதல் வரைதல் மூச்சிரைத்தல்; கூறுதல் நுண்ணிதாகஆராய்தல்; பூசுதல் வஞ்சினங்கூறுதல்; கலப்பித்தல்; அமைத்தல் இழையாக்குதல்; மாத்திரைமுதலியனஉரைத்தல்; பதித்தல்

இருந்து - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

எண்ணிக் - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்

முழுப்பொருள்
உழை என்பது ஏழு சுரங்களில் மத்திய சுரத்தைக் குறிப்பது. அதாவது நடுவிலே இருப்பது.இச்சொல் கார்காலத்தையும் குறிக்கும். ஒரு வேந்தனுக்கு கார்காலம் போல முடங்கிய காலத்தில் அவனை விட்டுப் பிரிந்து சென்றவர் என்று பொருள் கொள்ளலாம். அல்லது, நடுவிலேயே தன் சுற்றமாகிய வேந்தனைப் பிரிந்து சென்றவர் என்றும் பொருள் கொள்ளலாம். 

இக்குறள் மன்னராட்சியில் இருக்கும் மன்னர்களுக்கு, இன்றைய மக்களாட்சியில் இருக்கும் கட்சிகளுக்கு, வீட்டில் உள்ள குடும்பத்தாருக்கு, அலுவகத்தில் உள்ளோருக்கு என எல்லோருக்கும் பொருந்தும் குறள்.

ஒருவரின் (அரசரின்) துன்பகாலத்தில் அல்லது முக்கியமான தருணங்களில் அல்லது அன்றாட தருணங்களில் நடுவே தன் சுயநலத்திற்காக ஒருவர் பிரிந்து சென்றுவிடுவார். அப்படி பிரிந்து சென்ற ஒருவர் மறுபடியும் ஏதோ ஒரு காரணத்தை பொருட்டு மீண்டும் (அரசனிடம்) வந்து சேரக்கூடும். அப்படி மறுபடியும் வந்தவரை பொறுமையாக கையாள வேண்டும். அவரை நுட்பமாக ஆராய்ந்து அவருடைய எண்ணங்களை நுண்ணிதாக ஆராய்ந்து பின்பு தேவையெனில் பிறருடன் நன்கு ஆலோசித்து எண்ணி முடிவு செய்தல் வேண்டும். காரணமும் நபரும் நன்றாக இருப்பின் சேர்த்துக்கொள்ளலாம்.

நமது வீடுகளில் நமக்கு ஒரு துன்பக்காலம் அல்லது உதவி என்றால் நம்மைவிட்டு பிரிந்துவிடுவர் சொந்தங்கள். ஆனால் நமது நிலைமை முன்னேறினால் மீண்டும் வருவர். அப்படி வந்தார் என்றால் அவருடைய எண்ணம் என்னவென்று நன்கு கருத வேண்டும். நாம் சுயேட்சையாக முடிவு செய்யாமல், நமது வீட்டில் உள்ள பெரியோர்கள் (பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா, அண்ணா, அக்கா) உடன் ஆலோசிப்பது நன்று. நமக்கு தெரிய யதார்த்தம் அவர்களுக்கு அனுபவம் மூலம் இருக்கும். அவர்கள் குறைந்தது ஒரு எச்சரிக்கைகளை எல்லைகளை கூறுவர். ஆங்கிலத்தில் binary என்று கூறுவார்கள். 0 (பூஜ்ஜியம்) அல்லது 1 (ஒன்று) என்று இல்லாமல். நடுவில் கூட இருக்கலாம் என்று எல்லைகளை வகுப்பர். மீண்டும் சில காலம் பழகியப்பின்பு, அவர்களின் நடவடிக்கைகளை நன்கு ஆராய்ந்த பிறகு, அவர்களின் எண்ணம் நமக்கு நன்கு தெளிவாகும். எண்ணங்கள் நன்றாக இருப்பின் அவர்களை 1 (ஒன்று) என்ற சகஜ நிலைக்கு சேர்த்துக்கொள்ளலாம். இது அலுவலகம், வணிகம், வணிக உறவுகள், கட்சி என்று எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை - காரணம் இன்றித் தன்னிடத்து நின்றும் பிரிந்துபோய்ப் பின் காரணத்தான் வந்த சுற்றத்தானை, வேந்தன் இழைத்து இருந்து எண்ணிக் கொளல் - அரசன், அக்காரணத்தைச் செய்து வைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க.
(வாளா உழைப்பிரிந்து என்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றாம். வருதற் காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்து போய்ப் பகையோடு கூடும் ஆகலின், இழைத்திருந்து என்றும், அன்பின்றிப் போய்ப் பின்னும் காரணத்தான் வந்தமையின், எண்ணிக் கொளல் என்றும் கூறினார். பிரிந்து போய சுற்றத்தாருள் தீமை செய்யப்போய் அதனை ஒழிய வருவானும், அது செய்யாமற் போய்ப் பின் நன்மைசெய்ய வருவானும் தழுவப்படும் ஆகலின், தழுவுமாறு முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னிடத்தினின்று நீங்கி ஒரு காரணத்தால் வந்தவனை அரசன் அக்காரணத்தைச் செய்துவைத்துப் பின்பு காரியமானபடி யெண்ணி அதற்குத் தக்கபடி கூட்டிக் கொள்ளுக.

மு.வரதராசனார் உரை
தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க.

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்


குறள் 529
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]

பொருள்
தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.

ஆகித் - ஆகுதல் - ஆதல், ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

தன் - தான்என்னும்சொல்வேற்றுமையுருபைஏற்குமிடத்துப்பெறும்திரிபு.

துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.; உலகியல் பற்றுகளைத் துறந்து அறநெறி வாழ்பவர்

துறந்தார் - பற்றுவிட்டமுனிவர்.

சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரியதுணையில்ஒன்று; கூட்டம்; ஆயத்தார்.

அமர்தல் - உட்காருதல்; இளைப்பாறல்; அடங்குதல் பொருந்தல் விரும்புதல்

அமராமைக் -  நீங்கிய ; விரும்பாத; பொருந்தாத

காரணம் - மூலம்; ஏது; கருவி; நோக்கம்; வழிவகை; சிவாகமங்கள்இருபத்தெட்டனுள்ஒன்று

இன்றி - இல்லாமல்

வரும் - வந்து சேரும் 

முழுப்பொருள்
நம்முடன் உற்ற உறவாக இருந்த நமது சுற்றம் (சான்றோர்கள், நண்பர்கள், உற்றார்கள், வேண்டியவர்கள்) நம்முடைய ஒரு குற்றத்திற்காக அல்லது ஒரு தவறுக்காக அல்லது ஒரு கேடான பழக்கத்திற்காக நம்மை விரும்பாமல் நம்மை துறந்தது நீங்குவர். அப்படி அவர்கள் நீங்கியதற்கான காரணத்தை (அதாவது அமராமைக் காரணம்) கண்டறிந்து அவற்றை நம்மிடம் இல்லாத வண்ணம் (காரணம் இன்றி) நம்மை மாற்றிக்கொண்டால், விலகிச்சென்ற அச்சுற்றம் நம்மிடம் மறுபடியும் வரும். 

நண்பர் தவறு செய்யும் பொழுது அவரை விட்டு விலகுவது சரியா? என்றால். ஒரு விதத்தில் சரியே. நமது விலகல் அவரை சிந்திக்க வைக்கக்கூடும். அது ஒரு மனோத்தத்துவ சிகிழ்ச்சையாகவே எனக்குப் படுகிறது. ஆனால் தவறு செய்த நண்பர் அதைத் திருத்திக்கொண்டால் அவரை மன்னித்து எற்றுக்கொள்வதும் நமது கடமையாகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் - முன் தமராய்வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒரு காரணத்தால் தன்னைப் பிரிந்து போயவர் பின்னும் வந்து சுற்றமாதல், அமராமைக் காரணம் இன்றி வரும்-அவ்வமராமைக் காரணம் தன் மாட்டு இல்லையாகத் தானே உளதாம்.
('அமராமைக் காரணம் இன்றி' என்றதனான் முன் அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம்'. அஃதாவது, அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல் என்றிவை முதலியவற்றான் வருவது. 'ஆக்கம்' வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய சுற்றத்தார்க்குச் செய்கையான் வந்த நீக்கம் அதனையொழிய ஒழியும், ஒழிந்தால் அவர்க்கு அன்பு செய்துகொள்ளவேண்டா, பழைய இயல்பாய் நிற்கும் என்பார் 'வரும்' என்றார்.).

மணக்குடவர் உரை
முன்பு தனக்குத் தமராகி வைத்துத் தன்னை விட்டுப் போனவர் பின்பு வந்து சுற்றமாதல் அவர்மாட்டு அமராமைக்குக் காரணம் இன்றி யொழுக வரும். இது தன்னை விட்டுப்போன இராஜபுத்திரரைக் கூட்டிக் கொள்ளுமாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை
முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்


குறள் 528
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]

பொருள்
பொது - பொதுமையானது; சிறப்பின்மை; சாதாரணம்; வழக்கமானது; நடுவுநிலை; ஒப்பு; குறிப்பானபொருளின்மை; வெளிப்படையானது; சபை; தில்லையம்பலம்.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்கான் - நோக்காமல் இருப்பவர்

வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

வரிசைசெய்தல் - மரியாதைசெய்தல்;

வரிசையா - வரிசை - ஒழுங்கு; நிரையொழுங்கு; வேலைமுறை; அரசர்முதலியோரால்பெறுஞ்சிறப்பு; அரசசின்னம்; மரியாதை; மேம்பாடு; தகுதி; பாராட்டு; நல்லொழுக்கம்; நன்னிலை; சீராகச்செய்யும்நன்கொடை; வீதம்; ஊர்வரிவகை; பயிர்விளைவில்உழவனுக்குரியபங்கு.

நோக்கின் நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

நோக்கி  - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாழ்வார் - வாழ்கிறார்

பலர் - அநேகர்; சபை.

முழுப்பொருள்
எல்லோரையும் சமமாக காணவேண்டும், எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதே விதி. அது சரியானதும் கூட. ஆதலால் சுற்றத்தார் எல்லோரையும் ஒன்றுப்போல் கருதாமல், தகுதியும், திறமையும் (அதற்கு ஏற்ற பணிவும்) உடையோரை மரியாதை செய்யும் அரசனின் அருகில் தகுதியும் திறமையும் உடைய பல சான்றோர்கள் மன உவந்து விரும்பி மொய்ப்பர். அப்படி தகுதியும் திறமையும் அனுபவமும் உடையோர் அரசனின் அருகில் இருக்கும் பொழுது அவரால் மிக திறமையாக ஆட்சி/நிர்வாகம் செலுத்த முடியும். ஆட்சி சரிவர நிர்வகிக்கபட்டால் நாடும் முன்னேறும், மக்களும் வளம்படுவர். அதனால் அம்மன்னனை மக்களும் மிக விரும்புவர். கல்விக்கும் தகுதிக்கும் எற்ற மதிப்பை கொடுப்பது அவசியம்.

அதுவே திறமை உடையோரை மற்ற எல்லோரையும் போல் சமமாக நடத்தினால் பின்பு அவர்கள் திறமைக்கு என்னதான் மதிப்பு? அவர்களும் மற்றவர்கள் (/கல்லாதவர்கள் / திறமையில்லாதவர்) போல் அரசனுக்கு ஒன்றும் சொல்லாமல் இருப்பர். அது அரசனுக்குப் பின்னடைவே. அரசனால் தனிமனிதனாக ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு நிபுணத்துவம் வாய்ந்தோரின் துணை மிக அவசியம். அதற்கு அவர்களை மரியாதை செய்தல் அவசியம். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்” (சிறுபாண்.217)
“பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி” (புறநா.6:16)
“வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை” (புறநா.47:6)
“தத்தம் வரிசையான் இன்புறூஉம் மேல்” (நான்மணி 66)

“ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்
அதுநற் கறிந்தனை யாயின்
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே” (புறநா.121)

பரிமேலழகர் உரை
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் - எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின், அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.
(உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப்பொது நோக்கை விலக்கி,எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார்.இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின் அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர். இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

குறள் 520
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு
[பொருட்பால், அரசியல், தெரிந்துவினையாடல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

நாள் தோறும் - ஒவ்வொரு நாளும் 

நாடுகநாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

மன்னன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

செய்வான் - செய்தல்  - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

கோடாமைக் - நடுவுநிலைமை; நீதி; மத்தியநிலைமை; நியாயம்; சைவத்திற்குயோகபூசைவகை

கோடல் - கொள்ளுகை; பாடம்கேட்கை; மனத்துக்கொள்ளுகை; வளைவு; முறித்தல்; வெண்காந்தள்.
கோடாது - வளையாது 

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
நாள் தோறும் தன் கடமைகளை ஆராய்ந்து தன் செயல்களை நடுவுநிலைமை/ நீதி தவறாது ஒரு அரசன் செய்ய வேண்டும். அவ்வாறு ஒரு அரசன் செய்வான் ஆயின் அந்நாட்டு மக்களும் அவர்கள் பணிகளை சரியாக செய்வர். அரசன் தனது நீதியில் இருந்து தனது கடமையில் வளையவில்லையென்றால்/தவறவில்லை என்றால், மக்களும் அவர்களது கடமையில் இருந்து வளையமாட்டார்கள்/ தவறமாட்டார்கள். ஒரு அரசன் அவன் நாட்டிற்கு  தன் செயல்களில் நேர்மையாக முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ”அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்”, ”அரசன் எப்படியோ அப்படியே குடிகள்” ஆகிய பழமொழிகளையும் நினைவில் கொள்க.

”நாடோறும் நாடுக” - ஒரு மன்னன் நாள்தோறும் மக்களை நாடி மக்களுக்கான செயல்களை செய்யவேண்டும். பிறர் சொல்லவேண்டும் என்றில்லாது தன்முனைப்புடன் செய்பவனே தலைவன் அவனே அரசனாவன்.  எல்லாவற்றையும் தனது பொறுப்பு என்று எடுத்து செயல்களைப் புரிபவன். அத்தகையவன் கீழ் பணிப்புரியும் அமைச்சர்களும் அத்தகைய தலைவனின் கீழ் இருக்கும் மக்களும் வினைசெய்வார்கள் நடுநிலைதவறமாட்டார்கள்.

ஏன் தலைவர்கள் தன்முனைப்புடன் இருக்கவேண்டும். ஏனெனில் அறிவுடையார் ஆவது அறிவார். “குறள் 382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” என்று முன்னரும் பார்த்தோம்.

ஏன் நாள்தோறும் செய்யவேண்டும்? ஏனெனில் ”குறள் 36 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை” என்பதே வள்ளுவன் வாக்கும். ஒரு மன்னவன்/தலைவன் தினம் தன் கடமையை ஆற்றினால் அவனை அது தேவையான காலத்தில் காக்கும்.

“குடி உயரக் கோன் உயரும்” என்ற வாக்கினை இங்கு, கீழே இருக்கும் பணிபுரிவர்களின் நேர்மையிலே பொருத்திப் பார்க்கலாம்.

“அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்ற முதுமொழியின் படி, அரசின் செங்கோல் கோணாதிருந்தால் குடிகளும் நேர்வழியில் இருப்பர். அரசனும் காக்கும் தொழிலாகிய வினையைச் செய்கிறவன்தானே!  அவனே நேர்மையாயிருந்தால், அவனுடைய குடிமக்களும் அவரவர் ஆற்றும் வினைகளிலே நேர்மையாகத்தான் இருப்பர்.

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
வினை செய்வான் கோடாமை உலகு கோடாது - வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது, மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் அரசன் அவன் செயலை நாள்தோறும் ஆராய்க.
(அஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய உலகம் எல்லாம் ஆராய்ந்தானாம், அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வினை செய்வான் கோடாதொழிய உலகம் கோடாது செவ்வையிலே நிற்கும், ஆதலான் அவன் செயலை மன்னவன் நாடோறும் ஆராய வேண்டும். இது வினைசெய்வார் செயலை நாடோறும் ஆராய வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

English Meaning - As I taught a kid - Rajesh
A king or a leader should be the one who goes and does work everyday on his own without any instructions from others. Under a king/leader who has such a self-leadership in doing things ministers/sub-ordinates under him as well as the people under him will do things prompty and effectively. That country will flourish and prosper. People in that country will not do things against truth.

Questions that I ask to the kid
What should a king do every day? What is the result?


வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

குறள் 519
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு
[பொருட்பால், அரசியல், தெரிந்துவினையாடல்]

பொருள்
வினைக் - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

உடையான் -   உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்

வேறாக - பிறிதொன்றாக, தீங்காக, மற்றொன்றாக, மாறாக

நினைப்பானை - நினைத்தல் -  கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.

நீங்கும் - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்.

முழுப்பொருள்
ஒரு தொழிலில் / செயலில் அனுபவமும் திறமையும் உடைய ஒருவர் அச்செயலிலை / அத்தொழிலை முன்னேற்ற முயன்றாலோ, ஆலோசனைகளைக்கூறினாலோ , பரிகாரச்செயல்களைக் கூறினாலோ, தவறுகளை சீர்செய்ய கேள்விகள் கேட்டாலோ அவரை உறவாக எண்ணி அவர் சொற்களில் சரியானவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். (அதுவே அறிவுடையோர் (அல்லது விவேகம் உடையோர்) செய்வது.) 

மாறாக தனக்கு எதிராக கேள்விகேட்டவரை, அல்லது தனது வியூகங்களை விமர்சித்தவரை தனக்கு எதிரி என நினைத்தாலோ அல்லது அவர் நமது செல்வத்தை வஞ்சகமாக அபகரிக்க நினைக்கிறார் என்று நினைத்தாலோ நஷ்டம் நமக்கு தான். ஏனெனில் இங்கு அவர் பகைவர் அல்ல. அவர் வினை உடையவர். தொழில் தெரிந்தவர் என்று தான் திருவள்ளுவர் கூறுகிறார். (வினைத்தெரிந்தவர் வேடம் போட்டு வந்த பகைவர் என்றால் அது வேறு. அதற்கு நாமும் முன் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஆனால் அது வேறு). இங்கு கூறப்பட்டுள்ளது வினை உடையவர்கள் தொழில் தெரிந்தவர்களை மட்டும் தான். 

விஷயம் தெரிந்த ஒருவர் ஒன்று கூறினால் அதை அவர் ஏன் கூறினார் என்று பார்க்கவேண்டும். இதனால் நமக்கு நன்மை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதனால் நமது போதாமைகள் தவறுகள் குறைக்கப்படுமா என்று பார்க்க வேண்டும். அதை விடுத்து நமக்கு அறிவுரை ஆலோசனை கூறுபவர் சொல்படி கேட்டால் அதனால் அவருக்கு இலாபம் அதனால் தான் அவர் அதை சொல்கிறார் என்று குறுகிய கண்ணோட்டத்துடன் பார்த்து முட்டுக்கட்டை போட்டால் நமது செல்வம் தான் வீணாகும்.

இங்கே திருவள்ளுவர் உனக்கு உதவுபவனை வேறாக நினைத்தாலே  (ஐயம் கொண்டாலே) உனது வளர்ச்சி நின்றுவிடும். உனது செல்வம் உன்னைவிட்டு போய்விடும் என்கிறார்.

தொழில் தெரிந்தவர்களை நட்பாக உறவாக எண்ணி பேணவில்லை என்றால் பின்பு தொழில் தெரிந்தவர்கள் நம்முடன் வேலை செய்ய மாட்டார்கள். அல்லது தொழில் புரிய மாட்டார்கள். இதனால் நமது தொழிலை செவ்வென செய்தல் முடியாது. நமது தொழிலும் வளராமல் நாளடைவில் நலிவடைந்து நசுங்கும். அதனால் செல்வம் குன்றிவிடும். அதனால் தான் நீங்கும் திரு என்று திருவள்ளுவர் கூறினார்.

நல்ல உறவுகளை பேண வேண்டும். அந்த உறவு நம்மிடம் கடுஞ்சொல் பயன்படுத்தி நம்மை விமர்சித்தாலும் அவற்றில் உள்ள நல்லவற்றை எடுத்துக்கொண்டு குறைகளை திருத்திக்கொள்ள வேண்டும். கடுஞ்சொல் தவறு என்றாலும் “பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்” என்று எண்ணி நல்ல உறவை (அல்ல தொழில் அறிவு உள்ளவரை) தக்கவைத்துக்கொள்ள வேண்டும். 

நமது ஆணவத்தாலும், அனுபவம் இல்லாததாலும், பாதுக்காப்பின்மையாலும் (insecurity), பிறரின் புறச்சொல்லாலும் (கோள் மூட்டுதலாலும்), நமது சோம்பலாலும், பிறரின் சோம்பலாலும், பிறரின் பாதுக்காப்பின்மையாலும், பிறரின் காழ்ப்பாலும், (ஏனெனில் அவர்கள் பதவி பறிக்கப்படும் அல்லது வேறு ஒருவர் வேகமாக வளர்வதில் காழ்ப்பு), பிறரின் ஆணவத்தாலும், பிறரின் விதண்டாவாதத்தாலும், உட்பூசல்களலும், தவறுகளை மறுக்கும் / பூசிமழுப்பும் மனங்களாலும்/ஆணவத்தாலும் நல்ல உறவுகளை இழக்க நேரிடும். ஆதலால் அவற்றைப்பற்றி கவனமாக இரு.

நான் MBA படிக்கையில் எனது பேராசிரியர் ஒரு கேள்வி கேட்டார், Business (வணிக) என்ற சொல்லுக்கு அருகில் (முன்னோ பின்னோ) ஒரு வார்த்தை போடுவீர்கள் என்றால், அது என்ன? பலர் Profit (லாபம்), Revenue (வருவாய்), transactions (பரிவர்தனை), employment (வேலை வாய்ப்பு) என்று பலவற்றைக் கூறினர். அவர் எங்களுக்கு சொன்ன வார்த்தை Relationship (உறவு). That is Business Relationship. In Business, relationship is the most important thing. வணிகத்தில் உறவுகளே மிக மிக முக்கியம். வேலை செய்யும் இடத்தில் ஊழியர்களுக்கு நடுவே நல்ல உறவு இருந்தால் தான் வேலை நன்றாக நடக்கும். ஊழியர்களுக்கும் மேலார்களுக்கும் நடுவே நல்ல உறவு இருக்கும். இரண்டு மேலாலர்களுக்கு அல்லது இரண்டு தலைவர்களுக்கு நடுவே உறவு நன்றாக இருந்தால் தான் அவர்கள் கூட்டாக சேர்ந்து நல்ல ஒரு வணிகத்தை உருவாக்க முடியும் அல்லது ஒரு கூட்டுச்செயலை செய்ய முடியும். வணிகத்தில் ஒரு நிர்வாகத்திற்கும் அவர்களுக்கு மூலப்பொருள் கொடுக்கும் நிர்வாகத்திற்கும் நல்ல உறவு இருந்தால் அந்த வணிகம் சிறக்கும் இல்லையில் கூடாநட்பாய் ஒரு கட்டத்தில் உறவு உடைந்து வணிகம் உடையும். இருவருக்கும் நஷ்டம். அதேப்போல, அந்த நிர்வாகத்திற்கும் அதனை விநியோகிக்கும் விநியோகஸ்தர்களுக்கும் உறவு நன்றாக இருக்க வேண்டும். அவர்களே பொருளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்கின்றனர். எல்லா கட்டங்களில் எல்லா நிலையிலும் எல்லா தளங்களிலும் உறவுகளே முக்கியம். ஆதலால் நல்ல உறவுகளை பேண வேண்டும்.

மேலும்: அஷோக் உரை 

ஒப்புமை
”போயின மனிசரைக் குரங்கைப் பூமியில்
தேயுமின் கைகளால் தின்மின் என்றெமை
ஏயினை இருக்குவ தன்றி என்னினி
ஆயும தெம்வயின் அயிர்ப்புண் டாங்கொலோ” (கம்ப.இராவணன் மந்திரப்.29)

பரிமேலழகர் உரை
வினைக்கண் வினை உடையான் கேண்மை - எப்பொழுதும் தன் வினையின்கண்ணே முயறலை உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை, வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - அது பொறாதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு நீங்கும்.
(கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாய் நில்லாது கேளிர்செய்தொழுகும் அவனை அவமதிப்பாகக் கொண்டு செறக்கருதுமாயின், பின் ஒருவரும்உட்பட்டு முயல்வார் இல்லையாம் . ஆகவே, தன் செல்வம்கெடும் என்பது கருத்து. இந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானைஆளும் திறம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வினையிடத்து வினை செய்ய வல்லவனது நட்பை வேறுபாடாக நினைக்குமவனைத் திருமகள் நீங்குவள்.

மு.வரதராசனார் உரை
மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

சாலமன் பாப்பையா உரை
தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

குறள் 518
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்
[பொருட்பால், அரசியல், தெரிந்துவினையாடல்]

பொருள்
வினைக்கு - வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

உரிமை - உரியதன்மை; ஒருவனுடையபொருளைஅவனுக்குப்பின்அடைதற்காகுந்தன்மை; மனைவி நட்புப்பற்றியசுதந்தரம்; அடிமை கடமை பாத்தியதை பிரியம் சொத்து

நாடிய - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

பின்றை - பின்னைநாள்; பின்பு.

அவனை - அவன் - ஆண்பால்சுட்டுப்பெயர்.

அதற்கு  - அதற்கு 

உரியன் - உரியவன், இனத்தான்; கணவன் உரிமையுள்ளவன்; அதிகாரி

ஆகச் -  மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல்.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
ஒரு வேலைக்கு/செயலுக்கு ஒருவரை ஆராய்ந்து தேர்ந்தெடுத்தப் பிறகு அச்செயலை தேர்ந்தெடுத்த அந்த நபரை நம்பி முழுவதுமாய் செய்ய விடுதல் வேண்டும். ஏனெனில் அந்நம்பிக்கை இருந்தால் தான் அந்த நபராலும் நம்பிக்கையாக செயலை செய்ய முடியும். பிறருக்கு (தன்)நம்பிக்கை கொடுத்தால் அவர் தன்னம்பிக்கையுடன் வேலை செய்ய முடியும். 

ஒருவருடைய செயலில் அன்றாடம் குறுகிட்டுகொண்டு இருந்தால் அவருக்கு தான் செய்வதில் ஐயபாடு இருந்துக்கொண்டே இருக்கும். அதனால் காலம் தாழ்ந்து வேலை நடக்கும் அல்லது வேலை செவ்வென்ன நடக்காமல் அரைகுறையாக நடக்கும். செயலில் உற்பத்தியாகும் பொருளில் அல்லது சேவையில் தரம் இருக்காது.

ஆலோசனைகள் வழங்குவது வாரத்திற்கு ஒருதரம் ஆய்வு (review, audit) செய்வது கண்காணிப்பது (status updates, stock) எல்லாம் அவசியம் செய்ய வேண்டிய செயல். ஆனால் சிறு சிறு விஷயங்களில் எல்லாம் கைப்பிடித்து கொண்டு வேலை வாங்குவது சரியல்ல. அதற்குப் பெயர் Micro-management. அது ஆக்கப்பூர்வமான ஒன்றும் அல்ல. (சில வேலைகளில் சிலரிடம் குறிப்பாக திறன் இல்லாதவர்களிடம் Micro-management உம் செய்ய வேண்டியது இருக்கும். அது அச்செயலுக்கு பொருந்தும், மேலும் அங்கு அவர்களை தேர்ந்து எடுப்பத்தில்லை) .

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
வினைக்கு உரிமை நாடிய பின்றை - ஒருவனை அரசன் தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால், அவனை அதற்கு உரியனாகச் செயல் பின் அவனை அதற்குரியனாமாறு உயரச்செய்க.
(உயரச்செய்தலாவது : அதனைத் தானேசெய்து முடிக்கும் ஆற்றலுடையனாக்குதல். அது செய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
இவ்வினைக்கு இவன் உரியவனென்று ஆராய்ந்த பின்பு, அவனை அவ்வினை செய்தற்கு உரியவனாகப் பண்ணுக. இஃது ஒழிந்த காரியங்களின் வினை செய்வாரை ஆக்குமது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.

Thirukkural - Management - Empowerment
The concept of empowerment  was popular in management education and practices during the 1990s.

“Empowerment is the art of providing authority, knowledge, and resources to individuals so they can achieve work objectives,” (Stoner, 1995). Empowerment  was an often-used word and much thought out practice. Managers were frequently referring to ‘ownership,' 'shouldering responsibility’ and ‘being proactive.' Many workshops and seminars were conducted to educate managers and leaders to empower their workforces to achieve organization excellence.

The practice could not sustain since superiors did not want to give their ownership to others. Though many talk of taking ownership, they do not allow their direct reports to take ownership. It is sort of a vicious circle and people cannot get out of that. Casually ask any employee what motivates him to contribute more, he will definitely say: 1) Responsibility, 2) Recognition and 3) Challenging tasks. Valluvar was right when he emphasized the importance of empowerment  for personal productivity and organizational excellence. The entire practice of empowerment  is presented very succinctly in Kural 518.

Having found the man for the task
Matte him responsible.

Identify the person who can take responsibility to execute a task, that is., someone who is the right person to carry out the task. After assigning the task, make that person the owner of the task. He should be the sole responsible person for the outcome of the task. When a person has responsibility but not authority, he cannot be the owner of the process and the outcome. He should have authority to command and carry out orders. That will empower him and he will take ownership.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

குறள் 510
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
[பொருட்பால், அரசியல், தெரிந்துதெளிதல்]

பொருள்
தேர்-தல் - tēr-   4 v. tr. 1. [M. tēruka.]To examine, investigate, inquire into; ஆராய்தல் (பிங்.) தேர்ந்து செய்வஃதே முறை (குறள், 541). 2.To understand, know; அறிதல் தேர்ந்தனன்முருகன் வாய்மை (கந்தபு. மூவாயிர. 81). 3. Toconsider, deliberate, ponder well; சிந்தித்தல் 4. To elect; தெரிந்தெடுத்தல். Mod. 5. To seek;தேடுதல். சிறுவெண்காக்கை நீத்து நீரிருங்கழி யிரைதேர்ந்துண்டு (ஐங்குறு. 162). 6. To ascertain,form a conclusion; நிச்சயித்தல் பேதைபாகனேபரமெனத் தேர்ந்துணர் பெரிய (திருவிளை. புராணவர.8). 7. To acquire, obtain; கொள்ளுதல் (பிங்.)8. To doubt, question; ஐயுறுதல் (குறள், 144,உரை.)--intr. To be well versed, proficient in;பயிற்சியடைதல். நூல்களிற் றேர்ந்த மதி  

தேரான்- தேரார், s. (plu.) Foes, as தேரலா. 2. The low, the base, the vulgar, கீழ்மக்கள். 3. The illiterate, கல்லாதார். (p.)

தேரான்- தேராதவன்; ஆராயாதவன், அறியாதவன், சிந்திக்காதவன்; தேர்ந்துணராதவன்

தெளிவும் - தெளிவு - விளக்கம், துலக்கம்; உடற்செழிப்பு; பதநீர்; நினைவு; மனஅமைவு; அறிவு; நற்காட்சி; உளக்குறிப்பு; நீக்கம்; சான்று; ஆராய்வு; நம்பிக்கை; சாறு; கஞ்சித்தெளிவு; இலாபம்; பொருள்புலப்படஅமையும்செய்யுளின்குணம்; பாடற்பயன்வகை.

தெளிந்தான்- தெளிந்தவன் - தெளிதல் - தெளிவாதல்; அமைதியுறுதல்; ஒளிர்தல்; வெண்மையாதல்; குணப்படுதல்; செழித்தல்; ஒழிதல்; துளைத்தல்; அறிதல்; முடிவுக்குவருதல்; ஆராய்தல்; தேறுதல்; நம்புதல்; இலாபம்காணுதல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

ஐயுறவும் - ஐயுறவு - ஐயப்பாடு, சந்தேகம்.

தீர்தல் - உள்ளதுஒழிதல்; முற்றுப்பெறுதல்; உரிமையாதல்; இல்லையாதல்; அழிதல்; கழிதல்; செலவாய்ப்போதல்.

தீரா - முற்றுப்பெறாமல்

இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
1) ஆராயாமல், ஐயம் கொண்டு ஆராய்ந்து ஐயங்களை நிக்கி தெளிவு பெறாமல், அறிந்துக்கொள்ளாமல், தேர்ச்சிப்பெறாமல், தெளிவு இல்லாமல் ஒருவன் ஒரு செயலை செய்தால் அல்லது 2) ஆராய்ந்து தெளிவுப் பெற்ற பின்பு செயலை செய்யும் பொழுது ஐயங்கள் கொண்டால் அவனுக்கு அச்செயல் தீராத துன்பத்தை தரும். ஏனெனில் தெளிவு இல்லாமல் செய்யப்படும் காரியத்தில் பிழைகள் தவறுகள் நடக்க வாய்ப்புகள் மிக அதிகம். தெளிவு இல்லாதவர் அதனை சமாளிப்பது மிக கடினம். தெளிந்த பின்பு ஐயம் கொண்டால் ஒருவித குழப்பதை உருவாக்கிவிடும் அது எல்லோர் மனதில் சலனத்தை ஏற்படுத்தி ஊக்கத்தை குறைத்து விடும். அத்தகைய பிழைகளின் விளைவுகள் பெரும் செல்வத்தை நேரத்தை உழைப்பை ஊக்கத்தை வலிமையை அழித்துவிடும். ஆதலால் தீராத துன்பம் ஏற்படும்.

இது ஒருவரை பணியில் அமர்த்துவதற்கும் பொருந்தும். பணியில் ஒருவரைப் ஆராயாமல் அமர்த்த கூடாது முக்கியமாக உயர்பதவிகளில் முக்கிய பதவிகளில் ஆராயாமல் அமர்த்த கூடாது. ஆராய்ந்த அமர்த்தியப்பின் அவரை பற்றி ஐயங்கள் இருக்க கூடாது ஏனெனில் அது செயல் செய்வோரின் மன உறுதியை பாதிக்கும். அதுவே தவறு நடக்க வழி வகுக்கும். 

ஆராயாமல் தேர்வு செய்தல் கூடாது என்பது தெளிவே! 
“அளிந்தார்கண் ஆயினும் ஆராயானாகித் 
தெளிந்தான் விரைந்து கெடும்” என்பது பழமொழி (42). 

தன்னிடத்தில் அன்பு கொண்டவராக இருந்தாலும், ஒருவரை ஆராயமல் தேர்வு செய்தால் அது அழிதலுக்கான வழியே. 

ஒருவரைத் தேர்ந்தபின் அவரிடம் ஐயம் கொண்டால், அவர் அதை அறிந்தால், செய்யும் திறனிருந்தாலும், வினையில் ஈடுபாடும் ஆர்வமும் குறையலாம், சிதையலாம். இதைப் பழமொழிப் பாடல் வரிகள் அழகாகக் கூறுகின்றன. “தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால் 
இற்றே அவரைத் தெளியற்க”. (பழமொழி 114)
தெளிவாக நண்பு பூண்ட ஒருவரையே பொல்லாங்குரைக்கும் உரையைக் கேட்டால், நம்மையும் இவ்வாறே உரைப்பார் என்று கருதி, அவரை நம்பக்கூடாது என்கின்றன இவ்வரிகள். தவிரவும் பகைவர்கள் இதை அறியும்போது, பிரித்தாளுக்கைக்கும் இது ஏதுவாக அமைந்துவிடும். தொடங்கிய வினை துவளும், துன்பமே வந்துறும்.

”உறுமக்க ளாக ஒருவரை நாட்டிப்
பெறுமாற்றம் இன்றிப் பெயர்த்தே யொழிதல்
சிறுமைக் கமைந்ததோர் செய்கை” (பழமொழி 172)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தேரான் தெளிவும் - அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும், தெளிந்தான்கண் ஐயுறவும் - ஆராய்ந்து தெளிந்தவன் மாட்டு ஐயப்படுதலும், இவ்விரண்டும், தீராஇடும்பை தரும் - அவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
(வினை வைத்த பின் ஒரு தவறு காணாது வைத்து ஐயுறுமாயின், அதனை அவன் அறிந்து, 'இனி இது நில்லாது' என்னும் கருத்தான் அவ்வினையை நெகிழ்த்துவிடும், அதுவேயன்றிப் பகைவரால் எளிதில் பிரிக்கவும் படும். ஆதலால் தெளிந்தான்கண் ஐயுறவும் ஆகாதாயிற்று. தெளிவிற்கு எல்லை கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும், தெளியப்படாதார் இவர் என்பதூஉம், அவரைத் தெளிந்தால் படும் இழுக்கும், தெளிவிற்கு எல்லையும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒருவனை ஆராயாது தெளிதலும் தெளிந்து கொள்ளப்பட்டவன் மாட்டுத் தான் ஐயப்படுதலுமாகிய இவ்விரண்டும் நீங்காத துன்பத்தைத் தரும்.

மு.வரதராசனார் உரை
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.

Thirukkural - Management - Decision Making
On the contrary, if you have reservations or apprehensions to assign a task or position to a 
person, despite a thorough analysis, assessment, and understanding of that person, that sort of 
reservation or apprehension will bring you more troubles, warns Kural 510.

Trust without trial and distress of the tried
Lead to endless trouble.

So, assess before you decide, decide, and act based on your decision. The greatest challenge in making decisions is when to decide and when not to decide. At times indecision is itself a decision. Decide judiciously. When it comes to tasks, before doing an activity, do a lot of thinking of the consequences  of that activity. That is called to have forethought.  that is an example for proactive approach. 

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

குறள் 509
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்
[பொருட்பால், அரசியல், தெரிந்துதெளிதல்]

பொருள்
தேற்றம் - தெளிவு; மனங்கலங்காமை; உறுதி; ஆறுதல்; செழிப்பு; சூளுறவு.

தேறற்க  - தெளிவு பெற வேண்டாம் 

யாரையும் - எவராயினும், யாராக இருந்தாலும், யாவர்

தேர்-தல் - tēr-   4 v. tr. 1. [M. tēruka.]To examine, investigate, inquire into; ஆராய்தல் (பிங்.) தேர்ந்து செய்வஃதே முறை (குறள், 541). 2.To understand, know; அறிதல் தேர்ந்தனன்முருகன் வாய்மை (கந்தபு. மூவாயிர. 81). 3. Toconsider, deliberate, ponder well; சிந்தித்தல் 4. To elect; தெரிந்தெடுத்தல். Mod. 5. To seek;தேடுதல். சிறுவெண்காக்கை நீத்து நீரிருங்கழி யிரைதேர்ந்துண்டு (ஐங்குறு. 162). 6. To ascertain,form a conclusion; நிச்சயித்தல் பேதைபாகனேபரமெனத் தேர்ந்துணர் பெரிய (திருவிளை. புராணவர.8). 7. To acquire, obtain; கொள்ளுதல் (பிங்.)8. To doubt, question; ஐயுறுதல் (குறள், 144,உரை.)--intr. To be well versed, proficient in;பயிற்சியடைதல். நூல்களிற் றேர்ந்த மதி  

தேராது - தேராமல்; ஆராயாமல்; அறியாமல்; தேடாமல் ; சிந்திக்காமல்; 

தேர்ந்த - தேர்ந்து எடுத்த; முடிவு செய்த

பின்- பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு

தேறுக - தேறுதல் - தெளிதல்; நீர்தெளிதல்; துணிதல்; ஆறுதல்; பலித்தல்; மனத்திண்மையுறுதல்; முதிர்தல்; செழித்தல்; தேர்ச்சியடைதல்; தங்கல்; கூடுதல்; சோறுமுதலியனவிறைத்தல்; நம்புதல்; மயக்கம்தெளிதல்.

தேறும் - தேறுதல் - தெளிதல்; நீர்தெளிதல்; துணிதல்; ஆறுதல்; பலித்தல்; மனத்திண்மையுறுதல்; முதிர்தல்; செழித்தல்; தேர்ச்சியடைதல்; தங்கல்; கூடுதல்; சோறுமுதலியனவிறைத்தல்; நம்புதல்; மயக்கம்தெளிதல்.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

முழுப்பொருள்
ஆராயாமல் ஒருவரையும் நம்பாதே. ஒருவர் ஒரு செயலை செய்து முடிப்பார்கள் அல்லது அவர்கள் ஆலோசனை சரியாக இருக்கும் என்று அவரைப் பற்றி ஆராயாமல் தெளிவுப்பெறாமல் நம்பாதே. அவர்களை நன்கு ஆராய்ந்து அவர்கள் திறனை எண்ணங்களை மன உறுதியை சோதனை செய். அவர்கள் தேர்ச்சி அடைகிறார்களா என்று பார். அப்படிச் செய்து தெளிவு பெற்ற உடன் அவர்களை நம்பு. அல்லது அவர்கள் ஒரு சில நல்ல செயல்களை செவ்வென செய்து முடித்த பின்பு அவர்களை நம்பு. 

அப்படி ஒருவரைப் பற்றி ஆராய்ந்து தெளிவு /நம்பிக்கை பெற்ற பின்பு துணிந்து எந்த ஒரு செயலையும் செய்து அதன் பயனை (பொருளாக) பெறலாம். 

"எண்ணித் துணிக கருமம்" என்ற மற்றொரு குறளின் வாக்கியம்/அடிப்படை ஒரு செயலுக்கு ஒரு நபரை எப்படித் தேர்வு செய்யவேண்டும் என்பற்கு இங்கு விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
யாரையும் தேராது தேறற்க - யாவரையும் ஆராயாது தெளியா தொழிக, தேர்ந்த பின்தேறும் பொருள் தேறுக - ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை ஐயுறாது ஒழிக.
('தேறற்க' என்ற பொதுமையான் ஒருவினைக் கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம். ஈண்டு, 'தேறுக' என்றது தாற்பரியத்தால் ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை. 'பொருள்' :ஆகுபெயர்.).

மணக்குடவர் உரை
யாவரையும் ஆராயாது தெளியாதொழிக; ஆராய்ந்த பின்பு அவராற் றேறப்படும் பொருளைத் தேறுக. இஃது ஒருபொருளிற் றேற்றமுடையாரை எல்லாப் பொருளினும் தெளிக வென்றது.

மு.வரதராசனார் உரை
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம்
தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

குறள் 508
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்
[பொருட்பால், அரசியல், தெரிந்துதெளிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தேர்-தல் - tēr-   4 v. tr. 1. [M. tēruka.]To examine, investigate, inquire into; ஆராய்தல் (பிங்.) தேர்ந்து செய்வஃதே முறை (குறள், 541). 2.To understand, know; அறிதல் தேர்ந்தனன்முருகன் வாய்மை (கந்தபு. மூவாயிர. 81). 3. Toconsider, deliberate, ponder well; சிந்தித்தல் 4. To elect; தெரிந்தெடுத்தல். Mod. 5. To seek;தேடுதல். சிறுவெண்காக்கை நீத்து நீரிருங்கழி யிரைதேர்ந்துண்டு (ஐங்குறு. 162). 6. To ascertain,form a conclusion; நிச்சயித்தல் பேதைபாகனேபரமெனத் தேர்ந்துணர் பெரிய (திருவிளை. புராணவர.8). 7. To acquire, obtain; கொள்ளுதல் (பிங்.)8. To doubt, question; ஐயுறுதல் (குறள், 144,உரை.)--intr. To be well versed, proficient in;பயிற்சியடைதல். நூல்களிற் றேர்ந்த மதி  

தேரான்- தேரார், s. (plu.) Foes, as தேரலா. 2. The low, the base, the vulgar, கீழ்மக்கள். 3. The illiterate, கல்லாதார். (p.)

தேரான்- தேராதவன்; ஆராயாதவன், அறியாதவன், சிந்திக்காதவன்; தேர்ந்துணராதவன்

பிறனைத் - பிறன் - piṟaṉ   s. (pl. பிறர்) another person; மற்றையன்; 2. a neighbour, அயலான், 3. a stranger, அன்னியன்.

தெளிந்தான் - தெளிந்தவன் - தெளிதல் - தெளிவாதல்; அமைதியுறுதல்; ஒளிர்தல்; வெண்மையாதல்; குணப்படுதல்; செழித்தல்; ஒழிதல்; துளைத்தல்; அறிதல்; முடிவுக்குவருதல்; ஆராய்தல்; தேறுதல்; நம்புதல்; இலாபம்காணுதல்.

வழிமுறை - தலைமுறை; பின்பு (Afterwards, subsequently) வழிமுறைக் காயாமை வேண்டுவல்யான்(கலித். 82)..

தீர்தல் - உள்ளதுஒழிதல்; முற்றுப்பெறுதல்; உரிமையாதல்; இல்லையாதல்; அழிதல்; கழிதல்; செலவாய்ப்போதல்.

தீரா - முற்றுப்பெறாமல்

இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
ஒருவன் ஒரு செயலை செய்யும் பொழுது மிக ஆராய்ந்து தெளிவுடன் செய்தல் வேண்டும்.  முதலில் சற்று ஆராயும் பொழுது ஒருவித தெளிவு பிறக்கும். இருந்தும் ஐயங்கள் இருக்கும். பிறரிடம் கேட்டு விவாதித்து சிந்தித்து தெளிவு அடைய வேண்டும். அப்படி ஒருவன் தெளிவுப் பெறாமல் மற்றொருவனிடம் ஒரு செயலைக்கொடுத்தால் அல்லது அந்த செயலை செய்யும் மற்றொருவர் (பிறர்) தெளிவில்லாதவராகவே இருப்பார் ஏனெனில் தெளிவு இல்லாதவர் தெளிவு இல்லாதவரை பணியில் அமர்த்துவதற்கே வாய்ப்புகள் அதிகம். [தெளிவு உள்ளவர் தெளிவு உள்ளவரையே பணியில் அமர்த்துவார். தெளிவான தேர்வு பிரச்சனைகள் தராது. துன்பங்கள் வந்தாலும் அதில் இருந்து மீண்டு வரும்].

ஒருவர் தெளிவு இல்லாமல் இருக்க இரண்டு காரணங்கள் இருக்கலாம் 1) தான் (அல்லது தான் அரசன்) என்னும் அகங்காரம் பிறரிடம் கலந்து ஆலோசிக்காமல் தனக்கு தெரிந்தவற்றை மட்டும் வைத்துக்கொண்டு அரைகுறை தெளிவு அடைவது 2) எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் அல்லது தெளிவு அடைய முயலாமல் அல்லது பிறரிடம் கலந்து ஆலோசிக்காமல் இருப்பது. 

இப்படித் தெளிவு இல்லாத ஒருவர் தெளிவு இல்லாத பிறரைப் பணியில் அமர்த்துகையில் அந்த பிறர் தெளிவில்லாமல் செயல்களை செய்யவே வாய்ப்புகள் அதிகம். அதன் பின் அவர் செய்யும் செயல்கள் முடிவில்லாத துன்பத்தையே தரும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு, வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
(இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன்கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக்கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.).

மணக்குடவர் உரை
பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும்.  இது தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத் தேறலா மென்றது.

மு.வரதராசனார் உரை
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.

Thirukkural - Management - Decision Making
If  you take a decision to use someone's services without  a thorough assessment of his skills, knowledge, qualities, and required experience, that decision will trouble not only you but also your following generations,  warns Kural 508. Decision lacking proper assessment will 
give a long lasting trouble to you and the people related to you.

To choose a stranger untried
Will trouble one's life without end.

English Meaning - As I taught a kid - Rajesh
The one accepts a task or delegates a task to another person without assessing the task or evaluating the person (irrespective of the person is known or a stranger w.r.t the capabilities that are required do the task) who would do the task then he/she would invite endless harm that would last for generations.  

1) It is important to analyze a task before accepting it and executing it because results does matter, tasks when wrongly done can have negative consequences, and execution takes lots of resources and time which cannot be got back 
2) If we don't assess the person who does the task then the chances are the person might not have clarity and that person may not evaluate his sub-ordinate properly. This would in turn weaken the work force that executes the task leading to failure of the task. 

A person might lack clarity because of 1) Not having the knowledge or not having the zest or taking steps to gather the knowledge 2)  Ego 3) Not discussing with others to eliminate any misunderstandings and gain better clarity 4) not researching, analyzing, gathering data and deep diving to gain clarity. 

A person who lacks clarity will fail to inspire others in doing the task, will take wrong decisions, will not have the zest, will burnout soon, will slowly build inertia i.e inaction.

Questions that I ask to the kid
What happens when we don't have clarity? Explain why a person might have clarity. Explain what happens if you lack clarity. How can you gain clarity. 

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

குறள் 500
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]

பொருள்
கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

ஆழ் - ஆழம், āẕ   ஆழு, II. v. i. be deep, profound, ஆழமாயிரு; 2. sink down, be drowned, அமிழ்.

களரில்  - களர் - உவர்நிலம், களர்நிலம்; சேற்றுநிலம்; கூட்டம்; கறுப்பு; கழுத்து

நரி - ஒருவிலங்குவகை; புலி; வைக்கோற்புரிக்கருவி

அடும் - அடு-தல் - aṭu-   6 v. tr. [K. aḍu, M. aṭuka.]1. To cook, dress, as food, roast, fry; சமைத்தல் அமுதமடு மடைப்பள்ளி (கல்லா. 13). 2. To boil;காய்ச்சுதல். அட்டாலும் பால்சுவையிற் குன்றாது (மூதுரை, 4). 3. To melt; உருக்குதல் அட்டொளி யரத்தவாய்க் கணிகை (சீவக. 98). 4. To pound, as rice;குற்றுதல். வித்தட் டுண்டனை (புறநா. 227). 5. Toconquer, subdue, as the senses, paṣsions;வெல்லுதல். ஐம்பொறியு மட்டுயர்ந்தார் (சீவக. 1468).6. To trouble, afflict; வருத்துதல் கழிபசி நோயடக் கவலும் பூதரும் (கந்தபு. சூரனமை. 59). 7. Todestroy, consume; அழித்தல் எல்லாப் புவனமும். . . அடுபவர் (கந்தபு. ஏமகூ. 18). 8. To kill;கொல்லுதல். அடுநை யாயினும் (புறநா. 36).  

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அஞ்சுதல் - பயப்படுதல்

அஞ்சா - அஞ்சாமல்; பயப்படாமல்

வேல் - நுனிக்கூர்மையுடையஆயுதவகை; திரிசூலம்; ஆயுதப்பொது; ஆயுதவகை; முருகன்வேல்; வெல்லுகை; பகை; மரவகை; வெள்வேல்; உடை; மூங்கில்.

ஆள் - ஆண்மகன்; திறமையுடையோன்; வீரன் காலாள் கணவன் தொண்டன் ஆட்செய்கை; வளர்ந்தஆள்; ஆள்மட்டம் அரசு தொட்டால்வாடி பெண்பாற்பெயர்விகுதி; பெண்பால்வினைமுற்றுவிகுதி.

முகத்த - முகத்தல் - மொள்ளுதல்; அளத்தல்; தாங்கியெடுத்தல்; விரும்புதல்; நிரம்பப்பெறுதல்; மணம்பார்த்தல்; காண்க:முகத்தலளவு(வை).

முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்

களிறு - ஆண்யானை; ஆண்பன்றி; ஆண்சுறா; அத்தநாள்.

முழுப்பொருள்
வலிமை வாய்ந்த ஒரு யானை உடல் அளவிலும் எடையிலும் மிக பெரிது. அதன் உருவத்தை கண்டாலே எல்லோரும் அஞ்சுவர். யானையை கண்டால் அதன் பாகனும் அஞ்சுவான். அங்குசம் வைத்திருக்கும் பாகனையும் தூக்கி எறியும் யானை. வேல் படைத்த வீரர்களும் யானையிடம் தோற்றுப்போவார்கள். 

அத்தகைய வலிமை வாய்ந்த யானை அதன் கால் ஆழமாக செற்றுள்ள களரிலே அமிழுமாயின் அந்த யானையைவிட பல மடங்கு உடலாலும் வலிமையாலும் சிறிய நரி வென்றுவிடக் கூடும். குறைந்தபட்சம் அந்த யானையை நரி (அல்லது நரிகள்) ஒன்றுக்கூடி வருத்தும். [அடுத்தல் என்ற சொல்லுக்கு வருத்துதல் என்ற பொருள் உண்டு]. ஏனெனில் செற்றில் அமிழ்ந்துள்ள யானையின் கால் நடக்கவே சிரமப்படும். அது எப்படி நரியை விரட்ட முடியும்? அல்லது துதிக்கையால் தூக்கி எறியமுடியும். 

ஆதலால் பெரியோர் ஆயினும் (பெரிய படையை பெற்றவர் ஆயினும்) தனக்கு ஒவ்வாத இடத்தில் தனக்கு அச்சௌகரியமான இடத்தில் தோற்றுப்போவர். சிறியோர் தரும் வருத்தமே அவர்களை மனதளவில் நிலைகுலைய செய்யும். ஆதலால் இடத்தின் தன்மை அறிந்து செயல்படுக.

கால் புதைந்து போகும் அளவுக்கு உள்ள சேற்றில் கால் வைத்தால், பாகனுக்கும் அஞ்சாத, வேல்வீரர்களை மாலையாகக் தம் தந்தங்களால் குத்திக்கோர்க்கின்ற யானையும், நரிகளால் கொல்லப்படும். இடனறிதல் அதிகாரத்தில் மீண்டுமொரு குறள் வலிமையும் சிறுமைபட்டு சிதையும், இடம் தெரியாமல் செயல்பட்டால் என்பதை வலியுறுத்தி. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கண் அஞ்சா வேலாள் முகத்த களிறு - பாகர்க்கு அடங்காவுமாய், வேலாள்களைக் கோத்த கோட்டவுமாய களிறுகளை, கால்ஆழ் களரின் நரி அடும் - அவை கால் ஆழும் இயல்பிற்றாய சேற்றுநிலத்துப் பட்டுழி நரி கொல்லும் என்றவாறு.
('முகம் ஆகுபெயர்'. 'ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயன் இன்றி மிகவும் எளியரால் அழிவர்' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் அவ்வலங்காரம். 'வேலாழ் முகத்த என்று பாடம் ஓதுவாரும் உளர்: வேற்படை குளித்த முகத்தவாயின் அதுவும் நரி அடுதற்கு ஏதுவாய் முடிதலின், அது பாடம் அன்மை அறிக. இவை மூன்று பாட்டானும் பகைவரைச் சார்தலாகா இடனும் சார்ந்துழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
கண்ணஞ்சாத வேலழுத்தப்பட்ட முகத்தினையுடைய களிற்றைக் கால் விழப்பட்ட களரின்கண் நரி கொல்லவற்றாம். இது மேலதற்குக் காரணங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.

சாலமன் பாப்பையா உரை
பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.


Thirukkural - Management - Decision Making
Another simile is used by Valluvar to highlight the importance of location. Kural 500 means that a huge tusker that can fearlessly charge and attack the archers and spearmen in a battlefield will not and cannot fight against even jackals when it is stuck in quicksand, quagmire or slush. That is indeed an amazing observation by Valluvar. 

A tusker which defies spearmen 
Is filled in a bog by jackals.

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

குறள் 499
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]

பொருள்
சிறை - காவல்; காவலில்அடைக்கை; சிறைச்சாலை; அடிமைத்தனம்; அடிமையாள்; பெண்டாகச்சிறைபிடிக்கப்பட்டஇளம்பெண்; அழகுள்ளவள்; அணை; நீர்நிலை; இடம்; பக்கம்; கரை; மதில்; வரம்பு; இறகு; யாழ்நரம்புக்குற்றவகையுள்ஒன்று.

நலனும் - நலன் - nalaṉ   s. poetical change of நலம்.; நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

சீரும் - சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு.

இலர் - இல்லை ;  who are not

எனினும் -  என்றுசொல்லினும்; ஆனாலும்.

மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்

உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை.

நிலத்தொடு - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

ஒட்டல் - ஒட்டுதல்; ஒன்றுசேர்த்தல்; உடன்பாடு; தாக்குதல்; கிடைத்தல்; வைத்தல்; குறுகல்; வற்றல்; பந்தயம்; உள்ளொடுங்குகை.

அரிது -  அருமை; பசுமை; aritu   n. அரு-மை. [T. arudu, K.aridu, M. arutu.] That which is difficult, unattainable, rare, precious; அருமையானது.  

முழுப்பொருள்
நமது பகைவர்களுக்கு தன்னை காத்துக்கொள்கின்ற அளவுக்குப் பெரிய படையும் வலிமையும் ஆயுதங்களும் முன்பு போர்களில் வென்ற பெருமையும் இல்லை என்றாலும் அப்பகைவரை அவருடைய சொந்த நிலத்தில் வெல்லுதல் மிக மிக கடினம். ஏனெனில் அப்பகைவர் அவ்விடத்திலேயே பலகாலமாக இருந்தவர். அவருக்கு அவ்விடத்தை பற்றி அணு அணுவாக தெரியும். ஒவ்வொரு புல்லின் இலையின் தன்மையும் அவர்களுக்கு தெரியும். ஆதலால் அவர்களை வெல்லுதல் மிக கடினம். அவர்களுக்கு தட்ப வெட்பம், இடத்தின் சூழல் ஆகியவை கைக்கொடுக்கும். மேலும் சொந்த ஊரில் கிடைக்கும் உற்சாகமும் கைக்கூடுக்கும். ஆதலால் இவற்றை கருத்தில் கொண்டு செயல்புரிக.

இதற்கு மிக சிறந்த உதாரணம் கிரிக்கேட்டில் அடத்தப்படும் ஐந்து நாள் டெஸ்ட்/சோதனை ஆட்டம் (Test Match). பெரிய பெரிய ஜாம்பாவான்களும் உலக சாம்பியன்களும் அனுபவத்தில் சிறிய நாடுகளிடம் வெற்றிபெற திணரியுள்ளன. உதாரணமாக இந்திய போன்ற நாடுகளில் இந்திய அணி மிக வலுவற்ற நிலையிலும் ஆஸ்திரேலியா போன்ற பெரிய நாடுகள் வலுவான அணியைக்கொண்டும் பெரும் தோல்விகளை சந்தித்துள்ளன. வெற்றிகளை அரிதாகவே சுவைத்துள்ளன.

புகைப்படம் - 2001ஆம் ஆண்டு கல்கத்தா ஈடன் கார்டன் டெஸ்ட் ஆட்டம் - இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றது

புகைப்படம் - 2001ஆம் ஆண்டு கல்கத்தா ஈடன் கார்டன் டெஸ்ட் ஆட்டம் -  இந்திய வீரர்கள் வி.வி.எஸ்.லக்‌ஷ்மனன், திராவிட்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சிறை நலனும் சீரும் இலர் எனினும் - அரண் அழித்தற்கு அருமையும் பெருமையுமாகிய ஆற்றல் உடையர் அல்லராயினும், மாந்தர் உறை நிலத்தொடு ஒட்டல் அரிது - வினைக்கு உரிய மாந்தரை அவர் உறைகின்ற நிலத்தின்கண் சென்று தாக்குதல் அரிது.
('நிலத்தொடு' என்பது வேற்றுமை மயக்கம். ஆண்மை உடையாரைச் சிறுமைநோக்கி இருப்பின்கண்சென்று தாக்கின், அவர் அது விட்டுப்போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினராவர். ஆகவே, அவர்க்குப் பெரும்படை உடையும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
அரசன் பதியும் பெருமையும் இலராயினும் மாந்தர் உறைநிலத்தின்கண் பொருந்துத லரிது. இது மாந்தர் உறைவிடத்தின்கண் செல்லுங்கால் அறிந்து செல்ல வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

சாலமன் பாப்பையா உரை
மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

குறள் 498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]

பொருள்
சிறு - ciṟu   VI. v. i. same as சிறுகு; 2. v. t. make small, contract, குறை VI.
(an adjective of சிறுமை.) Little, small, inferior, diminutive. 2. Imperfect, deficient, immature.--Note. Followed by a word beginning with a vowel, சிறு be comes சிற்று.

படை -  சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.

படையான் - படை உடையவன்

செல் - போகை; வாங்கியகடனுக்குச்செலுத்தியதொகை; கடன்; கடன்செலுத்தியதற்குபத்திரமெழுதுங்குறிப்பு; கையொப்பம்; சென்றகாலவளவு; மேகம்; வானம்; குடி; வேல்; கறையான்.

செல் - cel   1. 1-2. poo 2. naTa 1-2. போ 2. நட 1. [arrive at (a destination)]; be current (of money) 2. have an effect  

இடம்  - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

சேரின்- சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

உறு  - மிகுதி; மிக்க; பகை; போர்.
படை -  சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.

படையான் - படை உடையவன்

ஊக்கம் - உள்ளக்கிளர்ச்சி, மனவெழுச்சி; உள்ளத்தின்மிகுதி; முயற்சி; வலிமை; உயர்ச்சி; மேற்கொண்டஎண்ணம்; உண்மை.

அழிந்து - அழிதல் - நாசமாதல்; சிதைவுறுதல்; தவறுதல் நிலைகெடுதல் தோற்றல் மனம்உருகுதல்; வருந்துதல் மனம்உடைதல்; பெருகுதல் பரிவுகூர்தல்; செலவாதல்
 
விடும் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

முழுப்பொருள்
இக்குறளுக்கு இரண்டு அர்த்தங்கள் எனக்கு தோன்றுகின்றன. அவற்றை இங்கு தொகுக்கிறேன்

1. எதிரியின் படை அளவில் சிறியதுத்தானே என்று சற்று அலட்சியமாக எண்ணி எதிரியிடம் போருக்கு சென்றால் பெரியபடையும் வலிமையும் படைத்தவன் ஆயினும் அவனுடைய ஊக்கம் அதாவது முயற்சி வலிமை மனவெழுச்சி ஆகியவை குறைந்து அழிந்து அப்போரிலே கெடுவான் அவ்வரசன். அதனால் அவன் பெருமையும் கெட்டு அழியும். ஆதலால் யாரையும் சிறியோர் என எண்ணி உனது முயற்சியை குறைக்காதே. சிறியபடை ஆயினும் அவர்களின் களம்/இடம் அறிந்து செயல்புரிக.

2. அளவில் பெரிய படையும் வலிமையும் வைத்துக்கொண்டு, ஒரு அரசன் சிறிய படைகளை நோக்கி போருக்கு சென்றுக்கொண்டு இருப்பானாயின் அவனுடைய படையுடைய முயற்சி வலிமை ஆகியவை குன்றும். நாளடைவியில் அவர்கள் பெரிய படைகளையும் அவர்களைவிட வலிமை வாய்ந்தவர்களிடம் போராடும் தன்மையை/வீரத்தை/ஊக்கத்தை இழப்பர். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறிவிடும். மேலும் வலிமை வாய்ந்தோர் வலிமையில்லாத சிறியோரிடம் போருக்கு செல்வது அவர்களின் பெருமையை அழித்துவிடும். சிறியோரிடம் காரணம் இன்றி போருக்கு செல்வது நாணத்தக்க செயலாகும்.

இதற்கு பல உதாரணங்களை விளையாட்டுப் போட்டிகளில் இருந்து கூறலாம். பல ஜாம்பவான்கள் சிறிய அணிகளிடம் பெரிய விளையாட்டுகளில் மிக மிக மோசமாக தோற்று இருக்கின்றன. அதற்கு காரணம் சிறிய அணியை குறைத்து மதிப்பிட்டு அவர்கள் முயற்சியை குறைத்துக்கொண்டது தான் காரணம்.

புகைப்படம்::: 1983 ஆம் ஆண்டு கிரிக்கேட் உலக கோப்பை இறுதிப்போட்டியில் சிறிய அணியான இந்திய அணி ஜாம்பவானான மேற்கு இந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது


மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உறுபடை மன்னர் தம்மை உடற்றிஒன் றானும் இன்றிச்
சிறுபடை யவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா
செறிஎயிற் றாளிவேழப் பேரினம் செகுத்த தன்றே
உறுபுலி ஒன்று தானே கலையினம் உடற்றிற் றன்றே” (சீவக.814)

பரிமேலழகர் உரை
உறுபடையான் - பெரும்படையுடைய அரசன், சிறுபடையான் செல் இடம் சேரின் - ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின், ஊக்கம் அழிந்து விடும் - அவனால் தன் பெருமை அழியும்.
('செல் இடம்' அவனுக்குச் செல்லும் இடம். 'அழிந்துவிடும்' என்பது 'எழுந்திருக்கும் என்றாற்போல் ஒரு சொல் ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப்பெருமை நோக்கி , இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்குசென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாக,அப்பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே பெரும்படையை யுடையவன் பொருந்துவனாயின் மன மிகுதி கெடும். இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.

மு.வரதராசனார் உரை
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.

சாலமன் பாப்பையா உரை
பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.


Thirukkural - Management - Decision Making
Even a small army has a greater advantage over a bigger and more powerful army when the small army 
is in the right location, locates Valluvar in Kural 498.

A large army in a small place 
Is demoralized and ruined.

The location influences the minds of soldiers of the big army and they will lose their motivation to fight and withdraw their efforts to fight out the small army. Though more powerful in size, the bigger army will have a disadvantage, if the location does not give it an advantage.