Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்


குறள் 707
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்
[பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
முகத்தின் -  முகம் -  தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

முதுக்குறைவு - பேதைமை; பேரறிவு; பெண்தெருளுகை (Pubescenceof girls;)

முதுக்குறைந்தது - mutukkuṟai-   v. intr. id. + உறை-. To become ripe in wisdom;அறிவு மிகுதல். முகத்தின் முதுக்குறைந்த துண்டோ(குறள், 707).

உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

உண்டோ - இருக்கிறதா ?

உவப்பினும் - உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல்

காயினும் - காய்தல் - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல்; வெறுத்தல்; வெகுளுதல்; கடிந்துகூறுதல்; வெட்டுதல்.

தான் -  படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

முந்து  - muntu   III. v. i. be or go before the rest, precede, come in front, முன்போ; முந்த, v. a. To take precedence, precede, to pass before, take the lead, go to the head, முற் பட

உறும் - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.

முந்துறும் - முன்வந்து உய்யும் வகை செய்யும்

முழுப்பொருள் 
ஒருவருடைய முகத்தைப்போல் அறிவுடையது (அல்லது மடமையானது) ஏதேனும் உண்டோ? ஏனெனில் ஒருவர் மகிழ்ந்தாலும் (அல்லது விரும்பினாலும் / அன்பு செலுத்தினாலும்) சரி அல்லது வருந்தினாலும் (அல்லது வெறுத்தாலும் / மனதால் விலக்கம்கொண்டாலும் / கடிந்தாலும்) அதனை முகமே முன் வந்து பிறர் உய்கின்ற அளவிற்கு குறிப்புணர்த்தும். 

ஏன் முகத்தை அறிவானது என்று கொள்ளவேண்டும்? ஏனெனில் முகம் அகத்தின் மொழியை அப்படியே அறிந்துக்கொண்டு பிரதிபலிக்கிறது.

ஏன் முகத்தை மடமையானது என்று கொள்ளவேண்டும்? அது எவ்வளவு முயன்றாலும் (நடித்தாலும்) அகத்தின் மொழியை மாற்றிக்கூற முடியாது. ஏதோ ஒரு இடத்தில் ஒரு மெல்லிய நூல் அளவில் உண்மையை குறிப்புணர்த்திவிடும்.

பிறரின் முகக்குறிப்புகளை ஒருவர் அறிந்துக்கொண்டு அதற்கு ஏற்றவாரு நடந்துக்கொள்ளவேண்டும். ஒரு அமைச்சர் அரசர் முகத்தின் குறிப்பறிந்து நடந்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் ஒருவர் மற்றவர்களின் குறிப்பறிந்து நடந்துக்கொள்ள வேண்டும்.

அகமும் முகமும் நெருங்கிய தொடர்புள்ளவை. ஒற்றுத் தொழிலில் இருப்பவர்களுக்கே தங்கள் உள்ளத்தை ஒளிக்கக்கூடிய தேவையுண்டு. சில நேரங்களில் அவர்களாலும் உள்ளத்து ஓட்டத்திற்கேற்ப முகம் மாறுதலை தவிர்க்கமுடியாது.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உவப்பினும் காயினும் தான் முந்துறும் - உயிர் ஒருவனை உவத்தலானும் காய்தலானும் உறின், தான் அறிந்த அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும் ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ - முகம் போல அறிவுமிக்கது பிறிது உண்டோ? இல்லை. ('உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான இயன்ற முகத்திற்கு இல்லை' என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும், காய்வுறின் கருகியும் வரலான், 'உண்டு' என மறுப்பார் போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு.).

மணக்குடவர் உரை
முகம்போல முதிர்ந்த அறிவுடையது பிறிதுண்டோ? ஒருவனை உவப்பினும் வெறுப்பினும் தான் முற்பட்டுக் காட்டும். குறிப்பறியுமாறு என்னை யென்றார்க்கு, இது முகம் அறிவிக்குமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ?.

English Meaning - As I taught a kid - Rajesh
Is there anything smarter than the face of a person? Because, it is very swift in expressing if the heart is pleased or displeased/annoyed. We consider face has smart because it reflects the inner feelings explicitly. In a way it is stupid too because it is very difficult for it to act completely or fake completely. By a fine thread of difference, it will indicate the true feeling. 

So, when in an organisation, one has to read the face and understand the feelings of his boss, peers, colleagues and act accordingly. Thereby one can avoid any negative consequences or build upon positive situations.  

Similarly, in a house, one has to read the face and understand the feelings of his mother, father, siblings, relatives etc. There by one can build and keep the harmony.

Questions that I ask to the kid
Is face smart? Why?

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

 

குறள் 700
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்
[பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
பழையம் - பழைமை - பழமை -  தொன்மை; தொன்மையானது; வழங்காதொழிந்தது; சாரமின்மை; முதுமொழி; வெகுநாட்பழக்கம்; நாட்பட்டதால்ஏற்படும்சிதைவு; பழங்கதை; மரபு.

எனக் - என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

கருதி - கருதுதல் - ண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல்

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை

அல்ல - இல்லை

செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

கெழுதகைமை - Intimacy, உரிமை, நட்பு

கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

தரும் - கொடுக்கும் , உண்டாக்கும்

முழுப்பொருள் 
அரசருடன் எனக்கு வெகுநாட்பழக்கம் இருக்கிறது அவர் நன்மதிப்பை பெற்றவன் நான் என்று எண்ணி பண்பல்லாத இயல்பற்ற முறையற்ற தீய செயல்களை ஒருவர் (வெகுநாட்பழக்கத்தினால் கொண்ட) மன உரிமையினால் செய்தால் அவ்வுறவு முறிந்துவிடும். மேலும் தீய செயல்களை அல்லது ஒவ்வாதவற்றை செய்வதாலும் தீமை வறுமை அழிவு உண்டாகும். 

"Do not take it for granted. Do not take things or relationships for granted". எதையும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாதே.

இது அமைச்சருக்கு மட்டும் பொருந்தாது. இன்றைய காலக்கட்டங்களில் எல்லா உறவுகளுக்கும் குறிப்பாக நண்பர்களுக்கு பொருந்தும். வெகுநாள் நண்பர்தானே என்று செய்யவேண்டிய முக்கியகடமைகளை ஆற்றவில்லையென்றால் எதிரே உள்ள நண்பரின் நன்மதிப்பை இழந்து கடினமான கேள்விகளை எதிர்க்கொள்ளநேரிடும். அதற்கு தக்க பதில்சொல்வதும் கஷ்டம். நம் வெகுநாள் நண்பன் நம்மை ஒன்றும் கேட்கமாட்டான் என்ற அலட்சியம் கூடாது. அப்படி அலட்சியம் செய்து செயலில் முக்கியமானவற்றில் அலட்சியமாக இருந்தால் அது தீமையை தரும்.

இக்குறளின் கருத்தையொட்டிய கம்பராமாயணப் பாடல் (சுந்தர காண்டம், ஊர்த் தேடு படலம்) இதோ கூறுகிறது.

‘விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும், 
கீழ்மையர் வெகுள்வுற்றால்,
பிழைகொல் நன்மைகொல் பெறுவது?’என்று ஐயுறு 
பீழையால்,பெருந்தென்றல்,
உழையர் கூவ, புக்கு, ‘ஏகு’ என, பெயர்வது ஓர் 
ஊசலின் உளதாகும்-
‘பழையம் யாம்’ என, பண்பில செய்வரோ 
பருணிதர், பயன் ஓர்வார்? (கம்ப.ஊர்தேடு 198)

இது கம்பனின் கற்பனை நயத்தைக் காட்டுவதாகவும் உள்ளது. மண்டோதரி அரண்மனையில் அனுமன் சீதையை தேடுகையில், அங்கு வீசும் தென்றலைப்பற்றி வர்ணனையாக, “தம் வேலையால் தமக்கு வரும் பயனை ஆராய்ந்து அறிந்த அறிவாளிகள், நாம் நெடுநாள் பழக்கம் உடையேம் என்று பண்புக்குப் பொருந்தாதவற்றைச் செய்வார்களோ?. அதே போலே பெருமை மிக்கத் தென்றல் காற்று, தூங்கும் மங்கையரின் தோழியர் அழைக்கச் சென்று, கட்டளை யாது? என்று கேட்டு அதற்கேற்ப மீள்வதாகி, ஒரு ஊஞ்சல் போல வருவதும் போவதுமாக இருக்கிறது” என்கிறார் கம்பர்.

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை - அரசனுக்கு யாம் பழையம் எனக் கருதித் தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை; கேடு தரும் - அமைச்சர்க்குக் கேட்டினைப் பயக்கும். (அவன் பொறாது செறும் பொழுதின், அப்பழைமை நோக்கிக் கண்ணோடாது உயிரை வெளவுதலான், அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய கெழுதகைமை கேடு தரும் என்றார். இவை மூன்று பாட்டானும், பொறுப்பர் என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
யாம் பழைமையுடையோ மென்று கருதி இயல்பல்லாதனவற்றைச் செய்யும் நட்பின்தகைமை தமக்குக் கேட்டைத்தரும் இது பின் பகையானவற்றைத் தவிரல் வேண்டும்மென்றது.

மு.வரதராசனார் உரை
யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்.

சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்.

Thirukkural - Management - Relationships
There is a connection between a person’s level of knowledge and the quality of his relationships with others. Knowledge of the importance and methods of relationships leads to relationships that last longer. 

Though a person has a long association, strong and bonding or respectable relationship  with a long  lasting King, he should not take undue advantage of that relationship. If he takes advantage and resorts to wrongdoing, he will spoil the long lasting relationship and create further problems, warns Kural 700. The reference to the word King must not be taken literally. King can mean any superior. 

To presume on an old friendship and do wrong
Is to court disaster.

So, taking undue advantage of familiarity or close relationship  with a superior will lead to the breaking of the same bonding and long lasting relationship. It is wise to separate task and relationship. Any wrongdoing  will lead to parting of ways even if people are related to each other closely. 

English Meaning - As I taught a kid - Rajesh
A minister/employee/friend might have a long relationship with his king/superior/friend. That relationship might be a strong long lasting one. But one should not take undue advantage of the relationship, should not take a task for granted and should not resort to any wrong doing. Because it will spoil the long lasting relationship, create problems and disastrous results. Remember, It is hard to earn trust but easy to loose trust. So, it is wise to separate task and relationship

Questions that I ask to the kid
In a longtime relationship with a friend/boss/king, can we take a task for granted or take undue advantage? Why? 

How should one keep task and relationship? Why?

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்

 

குறள் 699
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்
[பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்]

பொருள் 
'கொளப்பட்டேம்' - நம்மை அரசன் நம்பி ஏற்றுக் கொண்டுவிட்டான்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

எண்ணி - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்

கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை

கொள்ளாது - எடுத்துக்கொள்ளாது, உரிமைக்கொள்ளாது, அங்கீகரிக்காது

கொள்ளாத - ஒவ்வாத; பொருந்தாத

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

செய்யார் - செய்யமாட்டார்கள்

துளக்கு - அசைவு (சலனம், தளர்வு, சோம்பல்); வருத்தம்.

அற்ற - அல்லாத

காட்சி -பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.

அவர் - அவருக்கு.

முழுப்பொருள் 
ஒரு அரசர் பல கட்ட சோதனைகளுக்கு ஆராய்ச்சிக்கு தேர்ச்சிக்குப்பின் ஒரு அமைச்சரை  தேர்ந்தெடுக்கிறார். அவ்வமைச்சரும் அரசரின் நன்மதிப்பை தனது செயல்களால் பெற்றிருக்க கூடும். 

அத்தகைய அமைச்சர் தான் ஒரு மிகப்பெரிய தேர்ச்சி முறையை கடந்து வந்து இருக்கிறோம் அல்லது தான் அரசரின் நன்மதிப்பை பெற்றுவிட்டோம் என்று (மமதையில்) எண்ணி அரசர் விரும்பாதவற்றை அரசுக்கு ஒவ்வாதவற்றை பயனற்றவற்றை செய்யக்கூடாது. ஏனெனில் பணியில் அமர்த்திய அரசருக்கு அமைச்சரை எப்பொழுது வேண்டுமானாலும் பதவியில் இருந்து நீக்கவும் முடியும். அதுமட்டுமின்றி அமைச்சர் தன் பொறுப்பை ஆற்றவில்லையென்றால் அது பல நஷ்டங்களை கொடுக்கும். 

ஆதலால் அரசரின் நன்மதிப்பை பெற்றிருந்தாலும் பல சோதனைகளை கடந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் (மமதை கொள்ளாமல்) ஒவ்வாதவற்றை செய்யமாட்டார்கள் சலனம் அற்ற சோம்பல் அற்ற தளர்வு அற்ற அறிவினை உடைய அமைச்சர்கள்.

எவ்வளவுதான் நெருக்கம் இருந்தாலும், ஒரு கை அளவு தூரத்தையாவது பதவியிலுள்ளவர்களுடன் ஒருவர் காக்கவேண்டும் என்பதையும் கூறுகிறது இக்குறள். பணியில் எத்தனை நாட்கள் ஆனாலும் ஒவ்வொரு நாளும் முதல் நாளே என்று வேலை செய்யவேண்டும்.

Talent is overrated என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு (புத்தகத்தின் பெயர்). அதாவது திறமை என்பது மிகைப்படுத்தபட்டுள்ளது. ஒருவர் திறமை இருக்கிறது என்பதற்கு அவர் வெற்றிபெற்றவர் ஆகிவிடமாட்டார். எனக்கு திறமை இருக்கிறது என்று கர்வம் கொண்டு உழைக்காமல் இருந்தால் ஒருவர் தேங்கிவிடுவார். வளரமாட்டார். ஆதலால் தொடர்ந்து சலனமில்லாமல் தளராமல் செயலாற்ற வேண்டும்.

இக்குறள் உறவுகளிலும் பொருந்தும். நம்மை ஒருவர் ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பதற்காக அவர் ஏற்காதவற்றை செய்யக்கூடாது. அப்படி மீறி செய்தால் உறவு முறியக்கூடும்.

இக்குறள் இன்று வேலையில் அமர்த்தப்படும் பலர் நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது. குறிப்பாக அரசாங்க வேலைகளில் அமர்த்தப்படுபவர்களில் பலர் நான் பல தேர்ச்சிகளை தாண்டி வந்துவிட்டேன். என்னை நீங்கள் வேலையில் இருந்து தூக்கமுடியாது என்று கர்வம் கொண்டு வேலை செய்யாமல் இருக்கையை தேய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுவே தனியாரில் இப்படி இருந்தால் அவர்களை வேலையில் இருந்தே தூக்கி இருப்பர் பலர். அரசு அலுவலர்கள் இப்படி அறிவிலும் செயலிலும் தளர்ந்து இருப்பதால் நாட்டிற்கு எவ்வளவு நஷ்டம். 


மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம்நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர் - நிலைபெற்ற அறிவினையுடையார். (கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், முன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.).

மணக்குடவர் உரை
யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற தௌ¤வுடையார். இஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்

 

குறள் 697
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்
[பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்]

பொருள் 
வேட்பன -  வேட்பு - விருப்பம்
வேட்கை - பற்றுள்ளம்; காமவிருப்பம்

சொல்லி-  சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

இல - இல்லை
எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

கேட்பினும் - கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்

சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்

சொல்லா - சொல்லாமல் 

விடல்விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

முழுப்பொருள் 
பயன் உள்ளவற்றையும் அரசர் கேட்கவில்லையென்றாலும் அரசரிடம் சொல்வது அமைச்சரின் கடமை. அதேப்போல எப்பொழுதானாலும் பயனல்லாதவற்றை அரசர் வலிந்து கேட்டாலும் அதனை கூறாமல் தவிர்ப்பது அமைச்சரின் கடமையாகும்.

பயன் உள்ளவற்றை கேட்கவில்லையென்றாலும் ஏன் கூறவேண்டும்?
அரசர் பல அலுவல்களில் இருப்பவர். அதனால் எல்லா செயல்களுக்கும் முதன்மை அளிக்க முடியாமல் அவை பின்னுக்கு செல்லக்கூடும். ஆதலால் அமைச்சர் தான் அவற்றின் முக்கியத்துவம் உணர்ந்து அரசரிடம் கூறவேண்டும். அரசரும் மனிதர் தானே. அவர் சோர்வுடையக்கூடும். அப்பொழுது செயலின்கண் நாட்டமில்லாமல் இருக்கலாம்.  ஆதலால் பயனுள்ள செயல்களை எடுத்துரைப்பது அவசியமாகும்.

பயன் அல்லாதவற்றை கேட்டாலும் ஏன் கூறக்கூடாது?
நேரத்தை விரயம் ஆக்கக்கூடாது. அரசர் என்பவர் பல செயல்களை செய்பவர். அவருடைய நேரம் விலைமதிப்பில்லாதது. பொதுவாகவும் நேரமும் விலைமதிப்பில்லாதது. ஆக்கமற்ற செயல்களில் நேரத்தையும் ஆற்றலும் ஊக்கத்தையும் செலவழிக்கக்கூடாது. ஆதலால் அரசரிடம் அவர் கேட்டாலும் அவற்றை கூறக்கூடாது.

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
வேட்பன சொல்லி - பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி; எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல் - எஞ்ஞான்றும் பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக. ('வினையில' எனவும், 'கேட்பினும்' எனவும் வந்த சொற்களான், அவற்றின் மறுதலைச் சொற்கள் வருவிக்கப்பட்டன. வினையான் வருதலின் 'வினை' என்றும் வறுமைக்காலமும் அடங்க 'எஞ்ஞான்றும்' என்றும் கூறினார். சொல்லுவனவும் சொல்லாதனவும் வகுத்துக் கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எப்போதும் வேந்தனால் விரும்பப்படுவனவற்றைச் சொல்லித் தமக்குப் பயன்படாதவற்றைக் கேட்டாலும் சொல்லாது விடுக. சொல்லாது விடலாவது தூதனை அரசர்க்குப் படை எவ்வளவு உண்டென்று பகையரசன் வினவினால் நீ அறியாததொன்றோ வென்று அளவு கூறாமை.

மு.வரதராசனார் உரை
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு

 

குறள் 690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது
[பொருட்பால், அமைச்சியல், தூது]

பொருள் 
இறுதி - முடிவு; சாவு வரையறை

பயப்பினும் பயத்தல் -  paya-   12 v. cf. பயம்¹. intr. 1.To yield, produce, put forth fruit; விளைதல் பயவாக் களரனையர் (குறள், 406). 2. To come intoexistence; to be made; உண்டாதல் (திவா.) 3.To take place; to be productive of good orevil; பலித்தல் நல்வினை பயந்த தென்னா (கம்பரா.கார்முக. 36). 4. To be obtained; கிடைத்தல் (சூடா.)--tr. 1. To produce, create; படைத்தல் தேவதேவன் செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும்(திருவாச. 5, 30). 2. To beget, generate, givebirth to; பெறுதல் (திவா.) பராவரும் புதல்வரைப்பயக்க (கம்பரா. மந்தரை 47). 3. To give; கொடுத்தல் இன்னருள் பயந்து (தேவா. 775, 4). 4. Toblossom; பூத்தல் தாமரை பயந்த வொண்கேழ்நூற்றித ழலரின் (புறநா. 27). 5. To compose;இயற்றுதல். சிங்கடி தந்தை பயந்த . . . தமிழ்(தேவா. 201, 12).  

எஞ்சாது - எஞ்சாமை - குறையாமை, ஒழியாமை, முழுமை

இறைவற்கு - அரசர்க்கு / ஆட்சிக்கு 

இறை  - உயரம்; தலை கடவுள் தலைவன் அரசன் உயர்ந்தோன்; மூத்தோன் பெருமையிற்சிறந்தோன்; கணவன் பறவையிறகு; கடன் வீட்டிறப்பு மறுமொழி மணிக்கட்டு குடியிறை சிறுமை அற்பம் காலவிரைவு; சிவன் பிரமன் மாமரம்

உறுதி - திடம்; திரம்; வலிமை; நன்மை; இலாபம்; கல்வி; மேன்மை; சன்மார்க்கஉபதேசம்; உறுதி; தளராமை; ஆட்சிப்பத்திரம்; பிடிவாதம்; விடாப்பிடி; பற்றுக்கோடு; நல்லறிவு; வழக்கின்திடம்; பயன்.

பயப்பது - பயத்தல் -  paya-   12 v. cf. பயம்¹. intr. 1.To yield, produce, put forth fruit; விளைதல் பயவாக் களரனையர் (குறள், 406). 2. To come intoexistence; to be made; உண்டாதல் (திவா.) 3.To take place; to be productive of good orevil; பலித்தல் நல்வினை பயந்த தென்னா (கம்பரா.கார்முக. 36). 4. To be obtained; கிடைத்தல் (சூடா.)--tr. 1. To produce, create; படைத்தல் தேவதேவன் செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும்(திருவாச. 5, 30). 2. To beget, generate, givebirth to; பெறுதல் (திவா.) பராவரும் புதல்வரைப்பயக்க (கம்பரா. மந்தரை 47). 3. To give; கொடுத்தல் இன்னருள் பயந்து (தேவா. 775, 4). 4. Toblossom; பூத்தல் தாமரை பயந்த வொண்கேழ்நூற்றித ழலரின் (புறநா. 27). 5. To compose;இயற்றுதல். சிங்கடி தந்தை பயந்த . . . தமிழ்(தேவா. 201, 12).  

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

தூது - இருவரிடையேபேச்சுநிகழ்தற்குஉதவியாகநிற்கும்ஆள்; இராசதூதர்தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூதுமொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக்காதலரைஇணக்கும்செயல்; செய்தி.

முழுப்பொருள் 
தூதாக செல்லுபொழுது உயிருக்கு ஆபத்து வந்தாலும், பகை அரசர்கள் கொலை செய்ய மிரட்டினாலும் அதற்கெல்லாம் அஞ்சாது மன உறுதியில் குன்றாது தன் அரசருக்கு வலிமையும் திடமும் சேர்ப்பவரும் அரசருக்கு நன்மை தரச் செய்ய தூதுமொழிவதற்கும் உறுதியுள்ளவனாவான் ஒரு நல்ல தூதர். 

தூதாக வந்தவரைக் கொல்லுதல் அரசர்க்கு அழகல்ல எனினும் சொல்லப்பட்ட செய்தி பிடிக்கவில்லையாயின் தூதனையே கொல்லுமளவுக்கு பகையரசர்கள் துணியக்கூடும். இராமாயணத்தில் அனுமனைக் கொல்லவே இராவணன் விழைந்தாலும், அதைத் தடுத்து, குரங்குக்கு வாலை எரித்தல் என்பது அதை கொல்வதற்குச் சமம் என்று கூறி மாற்று வழியை விபீடணன் கூறி, அவனை தூதனைக் கொல்லும் பாவத்திலிருந்து தடுத்துவிடுகிறான்.

மகாபாரதத்திலும் இத்தீய எண்ணம் துரியோதனனுக்கு உதித்தது; அதை அவன் தந்தை திருதராட்டினனும் அதற்கு உடன்பட்டு, விதுரன் வீட்டிலிருக்கும் கண்ணன், வேடன் வலையில் அகப்பட்ட புலி போன்றவன், அவனைக் கொல்வது தவறில்லை என்கிறான்; கௌரவர்களில் இருந்த ஒரே நல்லவனாம் துரியோதனின் தம்பியர்களில் ஒருவனான விகர்ணன் (விபீடணன் போன்றவன்) கொதித்து, அது தர்மமல்ல கூறுகிறான்.

இதுபோன்ற தருணங்களிலும் தூதர்கள் உறுதியுடன் தம்மை ஆள்பவர்க்கு நன்மை செய்யவேண்டும் என்று இக்குறள் கூறுகிறது.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இறுதி பயப்பினும் எஞ்சாது - அவ்வார்த்தை தன் உயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சியொழியாது; இறைவற்கு உறுதி பயப்பது தூதாம் - தன் அரசன் சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதனாவான். ('இறுதி பயப்பினும்' என்றதனால், ஏனைய பயத்தல் சொல்ல வேண்டாவாயிற்று. இவை மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தனக்கு இறுதி வருமாயினும், ஒழியாது தன்னிறைவற்கு நன்மையைத் தருவது தூதாவது.

மு.வரதராசனார் உரை
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.

சாலமன் பாப்பையா உரை
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.