Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்


குறள் 707
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்
[பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
முகத்தின் -  முகம் -  தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

முதுக்குறைவு - பேதைமை; பேரறிவு; பெண்தெருளுகை (Pubescenceof girls;)

முதுக்குறைந்தது - mutukkuṟai-   v. intr. id. + உறை-. To become ripe in wisdom;அறிவு மிகுதல். முகத்தின் முதுக்குறைந்த துண்டோ(குறள், 707).

உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

உண்டோ - இருக்கிறதா ?

உவப்பினும் - உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல்

காயினும் - காய்தல் - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல்; வெறுத்தல்; வெகுளுதல்; கடிந்துகூறுதல்; வெட்டுதல்.

தான் -  படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

முந்து  - muntu   III. v. i. be or go before the rest, precede, come in front, முன்போ; முந்த, v. a. To take precedence, precede, to pass before, take the lead, go to the head, முற் பட

உறும் - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.

முந்துறும் - முன்வந்து உய்யும் வகை செய்யும்

முழுப்பொருள் 
ஒருவருடைய முகத்தைப்போல் அறிவுடையது (அல்லது மடமையானது) ஏதேனும் உண்டோ? ஏனெனில் ஒருவர் மகிழ்ந்தாலும் (அல்லது விரும்பினாலும் / அன்பு செலுத்தினாலும்) சரி அல்லது வருந்தினாலும் (அல்லது வெறுத்தாலும் / மனதால் விலக்கம்கொண்டாலும் / கடிந்தாலும்) அதனை முகமே முன் வந்து பிறர் உய்கின்ற அளவிற்கு குறிப்புணர்த்தும். 

ஏன் முகத்தை அறிவானது என்று கொள்ளவேண்டும்? ஏனெனில் முகம் அகத்தின் மொழியை அப்படியே அறிந்துக்கொண்டு பிரதிபலிக்கிறது.

ஏன் முகத்தை மடமையானது என்று கொள்ளவேண்டும்? அது எவ்வளவு முயன்றாலும் (நடித்தாலும்) அகத்தின் மொழியை மாற்றிக்கூற முடியாது. ஏதோ ஒரு இடத்தில் ஒரு மெல்லிய நூல் அளவில் உண்மையை குறிப்புணர்த்திவிடும்.

பிறரின் முகக்குறிப்புகளை ஒருவர் அறிந்துக்கொண்டு அதற்கு ஏற்றவாரு நடந்துக்கொள்ளவேண்டும். ஒரு அமைச்சர் அரசர் முகத்தின் குறிப்பறிந்து நடந்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் ஒருவர் மற்றவர்களின் குறிப்பறிந்து நடந்துக்கொள்ள வேண்டும்.

அகமும் முகமும் நெருங்கிய தொடர்புள்ளவை. ஒற்றுத் தொழிலில் இருப்பவர்களுக்கே தங்கள் உள்ளத்தை ஒளிக்கக்கூடிய தேவையுண்டு. சில நேரங்களில் அவர்களாலும் உள்ளத்து ஓட்டத்திற்கேற்ப முகம் மாறுதலை தவிர்க்கமுடியாது.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உவப்பினும் காயினும் தான் முந்துறும் - உயிர் ஒருவனை உவத்தலானும் காய்தலானும் உறின், தான் அறிந்த அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும் ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ - முகம் போல அறிவுமிக்கது பிறிது உண்டோ? இல்லை. ('உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான இயன்ற முகத்திற்கு இல்லை' என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும், காய்வுறின் கருகியும் வரலான், 'உண்டு' என மறுப்பார் போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு.).

மணக்குடவர் உரை
முகம்போல முதிர்ந்த அறிவுடையது பிறிதுண்டோ? ஒருவனை உவப்பினும் வெறுப்பினும் தான் முற்பட்டுக் காட்டும். குறிப்பறியுமாறு என்னை யென்றார்க்கு, இது முகம் அறிவிக்குமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ?.

English Meaning - As I taught a kid - Rajesh
Is there anything smarter than the face of a person? Because, it is very swift in expressing if the heart is pleased or displeased/annoyed. We consider face has smart because it reflects the inner feelings explicitly. In a way it is stupid too because it is very difficult for it to act completely or fake completely. By a fine thread of difference, it will indicate the true feeling. 

So, when in an organisation, one has to read the face and understand the feelings of his boss, peers, colleagues and act accordingly. Thereby one can avoid any negative consequences or build upon positive situations.  

Similarly, in a house, one has to read the face and understand the feelings of his mother, father, siblings, relatives etc. There by one can build and keep the harmony.

Questions that I ask to the kid
Is face smart? Why?

No comments:

Post a Comment