குறள் 690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது
[பொருட்பால், அமைச்சியல், தூது]
பொருள்
இறுதி - முடிவு; சாவு வரையறை
பயப்பினும் - பயத்தல் - paya- 12 v. cf. பயம்¹. intr. 1.To yield, produce, put forth fruit; விளைதல் பயவாக் களரனையர் (குறள், 406). 2. To come intoexistence; to be made; உண்டாதல் (திவா.) 3.To take place; to be productive of good orevil; பலித்தல் நல்வினை பயந்த தென்னா (கம்பரா.கார்முக. 36). 4. To be obtained; கிடைத்தல் (சூடா.)--tr. 1. To produce, create; படைத்தல் தேவதேவன் செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும்(திருவாச. 5, 30). 2. To beget, generate, givebirth to; பெறுதல் (திவா.) பராவரும் புதல்வரைப்பயக்க (கம்பரா. மந்தரை 47). 3. To give; கொடுத்தல் இன்னருள் பயந்து (தேவா. 775, 4). 4. Toblossom; பூத்தல் தாமரை பயந்த வொண்கேழ்நூற்றித ழலரின் (புறநா. 27). 5. To compose;இயற்றுதல். சிங்கடி தந்தை பயந்த . . . தமிழ்(தேவா. 201, 12).
எஞ்சாது - எஞ்சாமை - குறையாமை, ஒழியாமை, முழுமை
இறைவற்கு - அரசர்க்கு / ஆட்சிக்கு
இறை - உயரம்; தலை கடவுள் தலைவன் அரசன் உயர்ந்தோன்; மூத்தோன் பெருமையிற்சிறந்தோன்; கணவன் பறவையிறகு; கடன் வீட்டிறப்பு மறுமொழி மணிக்கட்டு குடியிறை சிறுமை அற்பம் காலவிரைவு; சிவன் பிரமன் மாமரம்
உறுதி - திடம்; திரம்; வலிமை; நன்மை; இலாபம்; கல்வி; மேன்மை; சன்மார்க்கஉபதேசம்; உறுதி; தளராமை; ஆட்சிப்பத்திரம்; பிடிவாதம்; விடாப்பிடி; பற்றுக்கோடு; நல்லறிவு; வழக்கின்திடம்; பயன்.
பயப்பது - பயத்தல் - paya- 12 v. cf. பயம்¹. intr. 1.To yield, produce, put forth fruit; விளைதல் பயவாக் களரனையர் (குறள், 406). 2. To come intoexistence; to be made; உண்டாதல் (திவா.) 3.To take place; to be productive of good orevil; பலித்தல் நல்வினை பயந்த தென்னா (கம்பரா.கார்முக. 36). 4. To be obtained; கிடைத்தல் (சூடா.)--tr. 1. To produce, create; படைத்தல் தேவதேவன் செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும்(திருவாச. 5, 30). 2. To beget, generate, givebirth to; பெறுதல் (திவா.) பராவரும் புதல்வரைப்பயக்க (கம்பரா. மந்தரை 47). 3. To give; கொடுத்தல் இன்னருள் பயந்து (தேவா. 775, 4). 4. Toblossom; பூத்தல் தாமரை பயந்த வொண்கேழ்நூற்றித ழலரின் (புறநா. 27). 5. To compose;இயற்றுதல். சிங்கடி தந்தை பயந்த . . . தமிழ்(தேவா. 201, 12).
ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.
தூது - இருவரிடையேபேச்சுநிகழ்தற்குஉதவியாகநிற்கும்ஆள்; இராசதூதர்தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூதுமொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக்காதலரைஇணக்கும்செயல்; செய்தி.
முழுப்பொருள்
தூதாக செல்லுபொழுது உயிருக்கு ஆபத்து வந்தாலும், பகை அரசர்கள் கொலை செய்ய மிரட்டினாலும் அதற்கெல்லாம் அஞ்சாது மன உறுதியில் குன்றாது தன் அரசருக்கு வலிமையும் திடமும் சேர்ப்பவரும் அரசருக்கு நன்மை தரச் செய்ய தூதுமொழிவதற்கும் உறுதியுள்ளவனாவான் ஒரு நல்ல தூதர்.
தூதாக வந்தவரைக் கொல்லுதல் அரசர்க்கு அழகல்ல எனினும் சொல்லப்பட்ட செய்தி பிடிக்கவில்லையாயின் தூதனையே கொல்லுமளவுக்கு பகையரசர்கள் துணியக்கூடும். இராமாயணத்தில் அனுமனைக் கொல்லவே இராவணன் விழைந்தாலும், அதைத் தடுத்து, குரங்குக்கு வாலை எரித்தல் என்பது அதை கொல்வதற்குச் சமம் என்று கூறி மாற்று வழியை விபீடணன் கூறி, அவனை தூதனைக் கொல்லும் பாவத்திலிருந்து தடுத்துவிடுகிறான்.
மகாபாரதத்திலும் இத்தீய எண்ணம் துரியோதனனுக்கு உதித்தது; அதை அவன் தந்தை திருதராட்டினனும் அதற்கு உடன்பட்டு, விதுரன் வீட்டிலிருக்கும் கண்ணன், வேடன் வலையில் அகப்பட்ட புலி போன்றவன், அவனைக் கொல்வது தவறில்லை என்கிறான்; கௌரவர்களில் இருந்த ஒரே நல்லவனாம் துரியோதனின் தம்பியர்களில் ஒருவனான விகர்ணன் (விபீடணன் போன்றவன்) கொதித்து, அது தர்மமல்ல கூறுகிறான்.
இதுபோன்ற தருணங்களிலும் தூதர்கள் உறுதியுடன் தம்மை ஆள்பவர்க்கு நன்மை செய்யவேண்டும் என்று இக்குறள் கூறுகிறது.
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
இறுதி பயப்பினும் எஞ்சாது - அவ்வார்த்தை தன் உயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சியொழியாது; இறைவற்கு உறுதி பயப்பது தூதாம் - தன் அரசன் சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதனாவான். ('இறுதி பயப்பினும்' என்றதனால், ஏனைய பயத்தல் சொல்ல வேண்டாவாயிற்று. இவை மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
தனக்கு இறுதி வருமாயினும், ஒழியாது தன்னிறைவற்கு நன்மையைத் தருவது தூதாவது.
மு.வரதராசனார் உரை
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
சாலமன் பாப்பையா உரை
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.
No comments:
Post a Comment