Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை

குறள் 1056
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி.

இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

இல்லாரைக் - இல்லார் - இல்லாதவர்

காணின் -  காணுதல் - காணும் பொழுது ; அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச்சூழப்போடும்நெல்; மங்கலக் குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி.

இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.

ஒருங்கு - முழுமை; முழுதும்; எல்லாம்; எல்லாங்கூடிநிற்கை; அடக்கம்; ஒருகாலத்தில்; ஒருசேர; ஒருதன்மை; அழிவு

கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்
கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

முழுப்பொருள்
யாசிக்க வருவோர் ஒன்றும் இல்லாத வறுமையில் இருப்பவர்கள். அப்படி
யாசிக்க வருவோரிடம் தன்னிடம் இருப்பதை மறைக்க முயற்சி செய்தால், யாசித்தவரிடன் வறுமை துன்பம் எல்லாம் அழிந்து போய்விடும். ஏனெனில் எல்லாம் இருந்தும் யாசிக்க வந்தவனிடம் கொடுக்க முடியாத மனம் உடையவனே உண்மையில் வறுமையில் இருப்பவன். அது ஒரு நோய் என்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் - உள்ளது கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் - மானம்விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும். ('கரத்தல்', ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின், அதனை 'நோய்' என்றும், அஃது இல்லாத இரக்கத்தக்காரைக் கண்டபொழுதே அவர் கழியுவகையராவர் ஆகலின், 'எல்லாம் ஒருங்கு கெடும்' என்றும் கூறினார். இடும்பை - ஆகுபெயர். 'முழுதும் கெடும்' என்று பாடம் ஓதி 'எஞ்சாமற் கெடும்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
கரப்பிடும்பை இல்லாதரைக் காண்பாராயின், நிரப்பினான் ஆகிய இடும்பை யெல்லாம் ஒருங்கு கெடும். கரப்பிடும்பை யில்லார் என்றமையால் இது செல்வராயினார் மாட்டு இரக்க லாகா தென்றது.

மு.வரதராசனார் உரை
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

சாலமன் பாப்பையா உரை
இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

குறள் 1044
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
இற்பிறப்பு - நல்லகுடியிற்பிறத்தல்; உயர்குடிப்பிறப்பு

இற்பிறந்தார் - நல்ல குடியில் ; உயர்குடியில் பிறந்தவர்கள் 

கண்ணேயும் - இடத்தே

கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

இளிவந்த - இளிவு - இழிவு; இகழ்ச்சி இழிதகவு அருவருப்பு அவலச்சுவைநான்கனுள்ஒன்று; நிந்தை

சொற் - சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

பிறக்கும் - பிறத்தல் - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம்

தரும் - கொடுக்கும் 

தருதல் - கொடை,  v. noun. Giving, &c. See தா, v.

முழுப்பொருள்
நற்குடியில் பிறந்தவர்கள் அல்லது தன்குடியை மேன்மையாக்கிக் கொண்டோர் இழிவான சொற்களையும் தீய சொற்களையும் பிற வாடக்கூடிய சொற்களையும் பேச மாட்டார்கள். ஆனால் அப்படிப்பட்ட நற்குடியில் இருந்தாலும் வறுமை என்னும் நோய் /துன்பம் வந்துவிட்டால் அவர்களுக்கு சோர்வு/ தளர்ச்சி வந்துவிடும். அந்த தளர்ச்சி அவர்களை இழிவான சொற்களை பேசச்செய்யும்.

ஆதலால் சோர்வின் இயல்பையும் வறுமையின் கேடுகளையும் உள்ளுணர்ந்து வறுமை வரவிடாமல் ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேப்போல் நம் நண்பர் அல்லது உற்றார் வறுமையில் இழிவான சொற்களை கூறிவிட்டால் அதனை பெரிதாக பொருட்படுத்தாது அவரை மன்னித்து அவருக்கு உதவ வேண்டும். 

வறுமை ஒரு கொடிய வியாதி. அது, உடம்பையும், மனதையும், ஆத்மாவையும் நலிந்து போகச் செய்துவிடுகிறது” என்று வைக்கம் முகம்மது பஷீர் கூறுகிறார்.

ஔவையார் நல்வழிப் பாடலில் பத்து சிறந்த குணங்களைச் சுட்டி, ஏழ்மையும், அதன் காரணமாகப் பசியும் வந்திட நற்குடிப் பிறப்பாளராயிருப்பினும் அவையெல்லாம் நில்லாமல் பறந்துவிடும் என்கிறார். இப்பத்துப் பண்புகளும் அழிதலாலே ஒருவரிடமிருந்து இழிசொற்களால் இரந்து வேண்டுதலும் பிறக்கின்றன. ஈயென இரத்தல் இழிது என்று முன்பே படித்திருக்கிறோம். இனி, அப்பாடலானது:

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை 
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இற்பிறந்தார்கண்ணேயும் - இளிவந்த சொற்பிறவாத குடிப்பிறந்தார் மாட்டேயும்; இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு இன்மை தரும் - அது பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும். (சிறப்பு உம்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற நின்றது. இளிவந்த சொல் - இளிவருதற்கு ஏதுவாகிய சொல். அஃதாவது, 'எமக்கு ஈய வேண்டும்' என்றல். சோர்வு: தாம் உறுகின்ற துன்பம் மிகுதிபற்றி ஒரோவழித் தம் பிறப்பினை மறந்து அது சொல்வதாக நினைத்தல்.).

மணக்குடவர் உரை
நல்குரவு, குடிப்பிறந்தார்மாட்டேயும் இளிவரவான சொற்கள் பிறக்குஞ் சோர்வினை உண்டாக்கும்.

மு.வரதராசனார் உரை
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

குறள் 1033
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
உழுது - உழுதல் - நிலத்தைக்கிளைத்தல்; கிண்டுதல்; மயிரைக்கோதுதல்.

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

வாழ்வாரே - வாழ்வார் - வாழ்கின்றவர்

வாழ்வார் - வாழ்கிறார்

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

மற்றெல்லாம் - மற்று எல்லாம் - மற்ற கொடுத்தல் எல்லாம்

தொழுது - வணங்கல்

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

செல்பவர் - செல்லுவர்

முழுப்பொருள்
பூமியில் நிலத்தை உழுது பயிர் விளைவித்து அதனை அறுவடை செய்து அவ்வுணவை தானும் உண்டு பிறர்க்கு கொடுக்கும் உழவர்களே இவ்வுலகில் உண்மையாக வாழ்கின்றவர்கள். மற்றவர்கள் எல்லாம் தம் உணவுக்காக உழவர்கள் பின்பு சென்று உழவர்களை வணங்குபவர்கள்.

வாழ்தல் என்றால் மகிழ்தல் என்றும் பொருள். ஆதலால் உழவர்களே மெய்யான மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்றும் கூறலாம். ஏனெனில் பிறரின் பசியை (பசி என்னும் பிணியை) ஆற்றும் உணவை நிலத்தில் கடினமாக உழைத்து அவர்களுக்கு தருகின்றனர். அதனை தன்னுடைய அன்றாட தொழிலாக வைத்துள்ளனர். அது அவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“வீழ்குடி உழவரொடு” (சிலப்.இந்திரவிழவூர் 43)

பரிமேலழகர் உரை
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவரைப் பின்செல்கின்றவர். ['மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
உலகின்கண் வாழ்வாராவார் உழுதுண்டு வாழ்பவரே; மற்று வாழ்கின்றா ரெல்லாரும் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர். இது செல்வமானது உழவினால் வருஞ் செல்வமென்றது.

மு.வரதராசனார் உரை
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

குறள் 1025
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு

இலன் - இல்லை என்று

இலனாய்க் - இல்லாதவனாய்

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாழ்வானை - வாழ்வான் -  வாழ்கின்றவன்

சுற்றமாச் - சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரியதுணையில்ஒன்று; கூட்டம்; ஆயத்தார்.

சுற்றும் - சூழ
சுற்றுதல் - சுற்றிவரல்; சுழன்றுசெல்லுதல்; வளைந்தமைதல்; கிறுகிறுத்தல்; மனங்கலங்குதல்; தழுவுதல்; விடாதுபற்றுதல்; சூழ்ந்திருத்தல்; வளையச்சூடுதல்; வளையக்கட்டுதல்; சுருட்டுதல்; சிந்தித்தல்; அலைதல்; உடுத்துதல்; சுழற்றுதல்; கம்பிகட்டுதல்; வஞ்சித்தல்:கைப்பற்றல்

சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
பிழைகள் செய்யாது பிறர்க்கு துன்பங்கள் தராது குற்றங்கள் புரியாது தன்னுடைய குடியினை (குடும்பம், நாடு) மேம்படுத்தி வாழ்பவனை இவ்வுலக மக்கள் தனது உறவாக நட்பாக சுற்றமாக விரும்பி அவனை சூழ்ந்து இருப்பர். 

குற்றங்கள் செய்யாது தன்னையும் தன் குடும்பத்தையும் மேம்படுத்துபவன் உண்மையாகவே வாழ்பவன் என்பதில் வாழ்தல் என்பதன் அர்த்தம் பொதிந்துள்ளதை நாம் இங்கு கவனிக்கவேண்டும். 

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானை - குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச் செய்தொழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு - அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார். (குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும் சென்று சார்வர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
குற்றப்பட ஒழுகுத லினாய்த் தன்குடியை யோம்பி வாழுமவனை உலகத்தாரெல்லாரும் தமக்குற்ற சுற்றமாக நினைத்துச் சூழ்ந்துவரும்.

மு.வரதராசனார் உரை
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை
தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.

English Meaning - As I taught a kid - Rajesh
When a person does his/her responsibilities without doing any mistakes / crime / injustice and improves his/her family's well being and stature, then the world would embrace him/her as their relation and surround him/her. 
Also note and understand, a person is considered living(வாழ்தல்) only when he doesn't do mistakes, does his responsibilities and improves his family.

Questions that I ask to the kid
Who will the world embrace as their relation? Why?


சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்

குறள் 1024
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சூழ் - ஆலோசனை; ஆராய்ச்சி; சுற்று; தலைமாலை; கடலைப்பருப்பு.

சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

சூழாமல் - சூழாதிருத்தல்

தானேதானே

முடிவு -  இறுதி; எல்லை; தீர்மானம்; முடிவானஉட்கோள்; நிறைவு; பயன்; இசைப்பாகுபாடு; சாவு.

எய்தும் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

தம் -  ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

குடியைத் குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிட

தாழ்தல் - அமிழ்ந்துதல்; சாய்தல்; குறைதல்; சரிதல்; நிலைகெடுதல்; தாமதித்தல்; தங்குதல்; தொங்குதல்; ஈடுபடுதல்; விரும்புதல்; ஆசைப்பெருக்கம்; வணங்குதல்.

தாழாது -  குறையாது ; சாயாது - சரியாது ; தாமதிக்காது ; விரும்பாது; ஒரு குறைவுமின்றீ, மனம்தளராமல், தாளாது, தாமதிக்காமல், மந்தமாக இல்லாமல்

உஞற்று - ஊக்கம்; முயற்சி; இழுக்கு; வழக்கு.
உஞற்று பவர் - ஊக்கத்துடன் முயற்சிசெய்பவர்

முழுப்பொருள்
தன்னுடைய குடும்பத்திற்கு (அல்லது தனது நாட்டிற்கு) தேவையானவற்றை காலம் தாழ்த்தாமல் விரைந்து ஊக்கத்தோடு செயலாற்றிக்கொண்டு இருப்பவருக்கு அச்செயலை செய்து முடிக்கும் திறனும் அதற்கு தேவையான ஆட்களும் அவருக்கு தானாக கிடைக்கும்.

ஆதலால் ஒருவர் ஒரு செயலை செய்து முடிக்க அடிப்படையான தேவை எண்ணம், முயற்சி, ஊக்கம், சோம்பலின்மை, செயலாற்றுதல் மற்றவையெல்லாம் தானாக அமையும் என்பதை நாம் இங்கு அறிந்துக்கொள்ளலாம்.

When you want something all the universe conspires in helping you to achieve it - Paulo Coelho (The Alchemist) என்கிற வரிகள் நினைவுக்கு வருகின்றன.



மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் - அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழவேண்டாமல் தானே முடிவெய்தும். (குடி ஆகுபெயர். தெய்வம் முந்துறுதலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தங்குடியைத் தாழச் செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவுபெறும்.

மு.வரதராசனார் உரை
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

சாலமன் பாப்பையா உரை
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.

English Meaning - As I taught a kid - Rajesh
When a person tirelessly works without wasting anytime, without delaying any task, and leaving no stone unturned in order to lift his/her family would be automatically receive help from various resources and people. Hence, for a person to attain a thing all that is needed are 1) thoughts/goals 2) efforts 3) perseverance 4) bias for action 5) no lethargy. Also remember "When you want something all the universe conspires in helping you to achieve it - Paulo Coelho (The Alchemist)" 

Questions that I ask to the kid
When will the society help you?
Whom does a society help?
When you tirelessly work to lift your family, will you receive help from others?