Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு

குறள் 726
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு
[பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை]

பொருள்
வாளொடு - வாள் - ஒளி; கத்தி; கத்தரிகை; கூர்மை; ஈர்வாள்; விளக்கம்; புகழ்; கொல்லுகை; கலப்பை; உழுபடையின்கொழு; கயிறு; நீர்; கச்சு.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

வன்கண்ணர் - வன்கண் - கொடும்பார்வை, பொறாமை, கொடுமை, வீரத்தன்மை

அல் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) 

அல்லார்க்கு  - அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))


நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை.


நூலோடு - நூல் அறிவோடு

என் என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

நுண் - கூர்மை; நுட்பம்; மிகுதி; வேலைத்திறம்; அறிவுநுட்பம்; பொருள்நுட்பம்; சிற்றுண்டி; கமுக்கம்.

அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.


அஞ்சு - ஐந்து; அச்சம் ஒளி

அஞ்சுபவர்க்கு -  அஞ்சுபவர் / பயப்படுபவர்

முழுப்பொருள் 


எதிரிகளை கொல்லக்கூடிய கூர்மையான வாள் கையில் இருந்தும் மனதில் வீரமில்லையென்றால் போர்க்களத்திற்கு சென்று ஒரு பயனுமில்லை. அதுப்போல நூல்கள் பல கற்றிருந்தாலும் கற்றோர்கூடிய அவையில் பேச நெஞ்சில் தைரியம் இல்லையென்றால் (அதாவது கற்றோர்கூடிய அவையை கண்டு அச்சம்) எவ்வளவு கற்று என்ன பயன் ? ஒரு பயனுமில்லை.

இன்னா நாற்பது (8), வீரமிலார் கை படைக் கருவியைப்பற்றி, “ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா” என்று சொல்கிறது. 

திரிகடுகம் (7) இதேபோன்று, 
“பல்லவையுள் அஞ்சுவான் கற்ற அரு நூலும், இம்மூன்றும் 
துஞ்சூமன் கண்ட கனா” என்கிறது


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என் - வன்கண்மையுடையார் அல்லார்க்கு வாளொடு என்ன இயைபு உண்டு; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலோடு என் - அது போல் நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு? (இருந்தாரது நுண்மை அவைமேல் ஏற்றப்பட்டது. நூற்கு உரியர் அல்லர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை? அதுபோல, நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற் பயனென்னை? இது பிறர்க்குப் பயன்படாமையேயன்றித் தமக்கும் பயன்படாரென்றது.

மு.வரதராசனார் உரை
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?.

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை

குறள் 704
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு
[பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்]

பொருள் 
குறித்தது - குறித்தல் - கருதுதல்; தியானித்தல்; வரையறுத்தல்; கோடுவரைதல்; குறித்துக்கொள்ளுதல்; சுட்டுதல்; பற்றுதல்; இலக்குவைத்தல்; அடைதல்:பாவித்தல்; சொல்லுதல்; முன்னறிவித்தல்; ஊதியொலித்தல்.

கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்.

கூறாமை - சொல்லாமல் இருத்தல்; விளக்கு சொல்லாமல் குறிப்பால் உணர்த்துவது

கொள் - கற்றுக்கொள்ளுதல்

கொள்வாரொடு - கொள்வார் - அறிந்து கொள்ளுவார்

ஏனை - ஒழிபு, மற்றையெனும்இடைச்சொல்; ஒழிந்த; மற்று; எத்தன்மைத்து; மலங்குமீன்.

உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு.

ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்.
அனை - அன்னை; அந்த ஒருவகைமீன்.
உறுப்பு ஓரனையர் - பல உறுப்புகள் கொண்ட ஓர் உடல் போன்று ஒத்தவராய் இருத்தல்

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

முழுப்பொருள் 
ஒரு அமைச்சர் என்பவர் (அல்லது ஒரு குடும்பத்தில் கூட) அரசர் என்ன நினைக்கிறார் என்பதை வெளிப்படையாக கூறாமல் இருந்தாலும் அவரை அறியாமலும் அல்லது அறிந்தும் உணர்த்திய குறிப்புகள் மூலம் அதனை விளங்கிக்கொள்ளவேண்டும். அவ்வாறு குறிப்புகளை விளங்கிக்கொள்ளவில்லையென்றால் அவர் அரசருடன் இருப்பது உறுப்புகளால் ஒன்றாக இருந்தும் அறிவு நினைப்பதை அறியாத உறுப்பாகும். மருத்துவம் அறிந்தவர்களுக்கு சில நோய்களை பற்றி தெரியும் - அதாவது மூளை இறந்து இருக்கும் ஆனால் உறுப்புகள் பிணம் போன்று இருக்கும் அல்லது மூளை வேலை செய்யும் ஆனால் உறுப்புகள் உடம்போடு இருந்தும் செயலற்று இருக்கும். அத்தகைய உறுப்புக்கள் உடம்பில் இருந்தும் அதனால் ஒரு பயனுமில்லை. அது உடலுக்கு ஒருவித உபத்திரமாகவே இருக்கும்.

ஆதலால் அமைச்சர் அரசரின் மனதை அறியாதவராக இருப்பின் அவ்வமைச்சர் ஒருவித நோய் என்றே கூறலாம். ஏனெனில் அத்தகைய அமைச்சர் இருந்தால் அரசர் ஒவ்வொன்றையும் எடுத்துரைத்து கூறவேண்டியிருக்கும். நேரம் விரையமாகும். செயல் மிக மெல்ல நடக்கும். ஆக்கம் குறையும். மேலும், பல நேரங்களில் ஆபத்தாகக்கூட முடியும்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குறித்தது கூறாமைக் கொள்வாரொடு - ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு; ஏனை உறுப்பு ஓரனையர் -மற்றை மாட்டாதார் உறுப்பால் ஒரு தன்மையராக ஒப்பாராயினும்; வேறு - அறிவான் வேறு. ('கொள்ளாதார்' என்பதூஉம், 'அறிவான்' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் 'வேறு' என்றார்.).

மணக்குடவர் உரை
நினைந்ததனைச் சொல்லாமைக் கொள்ளவல்லாரோடு மற்றையர் உறுப்பால் ஒருதன்மையர் அல்லது அறிவினான் வேற்றுமை யுடையார். இது குறிப்பறியாதார் அறிவில்லாதார் என்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் மனத்துள் நினைப்பதை அவன் சொல்லாமலேயே அறியம் ஆற்றல் உடையவரோடு அந்த ஆற்றல் இல்லாதவர் உறுப்பால் ஒத்தவர்; அறிவால் வேறுபட்டவர் ஆவார்.

Thirukkural - Management - Leadership
People skill is the ability to read others' feelings, emotions and thoughts without their expressing them openly. The difference between one who is knowledgeable and one who is not knowledgeable is not in their physical appearance or body build, but it is in their mental power, shows Kural 704. 

Only in their limbs do other men resemble
A thought  reader.

A leader has to be sensitive to the needs of others. That is why the stock advice on communication is, “Communication is to understand what is not said.” People may not openly express their views, beliefs, emotions, and expectations. It is the responsibility of a leader to understand what other people expect and act accordingly. Though two people look similar in their physical appearance, they are different in their assessment of others and their approach toward others. Certainly, the difference in assessment and approach is a diferentiating factor in leading people. 

The qualities and skills of a leader, though vast, can be summed up as being impartial, courageous, charity minded, knowledgeable, approachable, just, and soft spoken. A leader, with all these qualities, can motivate others, make judicious decisions, take timely actions, seek counsel from others, and create wealth for his people.

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்

குறள் 713
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]

பொருள்
அவை மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறியார்  அறிய மாட்டார்கள்.

சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

சொல்லல்சொல்வது; கூறுவது

மேற்கொள்பவர்  - மேற்கொள்வது - மேற்கொள்ளுதல் -மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல்.

சொல்லின்கூறுபவற்றின் , கூறினால்

வகை கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

அறியார்அறிய மாட்டார்கள்.

வல்லதூஉம் - வல்ல - வலிமையுள்ள; திறமையுள்ள

இல் - இல்லை 

முழுப்பொருள்
ஒரு சபையின் இயல்பை அறியாமல் அச்சபையின் முக்கியத்துவமும் பலர் ஒன்றுகூடியுள்ள கூட்டு நேரத்தின் மதிப்பையும் அறியாமல் தொடர்ந்து அளவுக்கு அதிகமா பேசிக்கொண்டு இருப்பவருக்கு சொற்களின் மதிப்பும் வலிமையையும் அதனை அவையில் பயன்படுத்தவேண்டிய முறையும் தெரியாது. அவ்வாறு அவையின் இயல்பு அறியாதவரும் சொல்லின் வலிமை அறியாதவரும் சொல்ல தக்க வலிமையான ஆக்கப்பூர்வமானது என ஏதுமில்லை. 

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் வகை அறியார் - அவையினது அளவையறியாது ஒன்று சொல்லுதலைத் தம் மேற்கொள்வார் அச்சொல்லுதலின் கூறுபாடும் அறியார்; வல்லதூஉம் இல் - கற்றுவல்ல கலையும் அவர்க்கு இல்லை. (அம் மூவகைச் சொற்களால் வரும் சொல்லுதல் வகைமை, கேட்பாரது உணர்வு வகைமை பற்றி வருதலால், 'சொல்லின் வகையறியார்' என்றும், அஃது அறியார் என்று எல்லாரானும் இகழப்படுதலின் 'வல்லதூஉம்இல்' என்றும் கூறினார். இதனான் அவையறியாக்கால் வரும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அவையினது அளவை அறியாது ஒன்றைச் சொல்லுதலை மேற்கொள்பவர், சொல்லின் வகையும் அறியார்; அவ்வாறன்றி வேறு வல்லதூஉம் இலராவார்.

மு.வரதராசனார் உரை
அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.

Management - Public Speaking - Audience Analysis
An important factor that decides the outcome of a speech is the audience. A speaker, according to Kural 713, must have a thorough knowledge of his audience before he speaks to them. 
Those are poor orators, unavailing, 
Who speak without knowing their audience. 

An audience is similar to the road on which we drive our vehicles. The condition of the road decides the speed of a vehicle and the comfort of driving. Similarly, the level of the audience influences the flow of a presentation and the accomplishment of objectives. The profile of the audience influences our speeches. Profile includes their age, gender, number, experience, education, exposure, and expertise.

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை

குறள் 695
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை
[பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்]

பொருள் 
எப்பொருளும் - எந்த ஒரு பொருளையும் , கருத்தையும், தத்துவத்தையும், செயலையும், அறிவையும், கொள்கையையும் , பயனையும், தலைமையும்

ஓர்-த்தல் - ōr-   11 v. tr. [M. ōr.] 1. To consider; ஆராய்தல் 2. To select, choose; தெரிந்தெடுத்தல். ஆயிரத் தோர்த்தவிப்பத்தே (திவ். திருவாய்.1, 2, 1). 3. To think, regard; நினைத்தல் வேள்வியோர்க்கும்மே யொருமுகம் (திருமுரு. 96). 4. Tolisten attentively; கூர்ந்து கேட்டல் புலிப்புகர்ப்போத்தோர்க்கும் (புறநா. 157, 12).

ஓரார் - கூர்ந்து கேட்காது இருத்தல் 

தொடரார் - தொடர்ந்து கேட்காமலும், கேட்பவனவற்றில் தெளிவு பெற கேள்விகள் கேட்காமல் இருத்தல்

மற்று -  ஓர்அசைநிலை

அப்பொருளை -  அந்த பொருளை  (செயலை, தத்துவத்தை ... )

விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

விட்டக்கால் - நீங்கும் பொழுது

கேட்க - செவி வழியாக சான்றோர்களிடமாவது கேளுக

மறை மறைக்கை; இரகசியம்; மந்திராலோசனை; வேதம்; உபநிடதம்; ஆகமம்; மந்திரம்; உபதேசப்பொருள்; சிவப்புப்புள்ளிகளையுடையமாடுமுதலியன; களவுப்புணர்ச்சி; பெண்குறி; உருக்கரந்தவேடம்; திருகுவகை; விளக்கின்திரியைஏற்றவும்இறக்கவும்உதவும்திருகுள்ளகாய்; புகலிடம்; சிறைக்கூடம்; மறைவிடம்; வஞ்சனை; இரண்டாம்உழவு; கேடகம்; எதிர்மறை; விலக்குகை; புள்ளி; சங்கின்முறுக்கு.

முழுப்பொருள் 
அரசர் நம் (அமைச்சர்) முன்னே ஒன்று பேச வில்லையென்றால் அது ரகசியமாக இருக்கலாம். ஆதலால் நம் முன்னே பேசாத ஒன்றை கூர்ந்து கேட்கவோ அல்லது பின்பு அதனை பற்றி கேள்விகள் வினவக்கூடாது. மன்னரே அதனை பற்றி கூறும் பொழுது மட்டும் அதனை கேட்டுக்கொள்க.

ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு உள்ள இரகசியக் காப்பு உறுதி மொழியை உடனிருப்பவர்களே உணரவில்லையெனில், மதிக்கவில்லையெனில், அது ஆட்சிக்கே ஆபத்தாகிவிடும், அவர்களுக்குமே அரசரின் நம்பிக்கையை இழக்க நேரிடும்.

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
மறை - அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; எப்பொருளும் ஓரார் - யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கொள்ளாது; தொடரார் - அவனை முடுகி வினவுவதும் செய்யாது; அப்பொருளை விட்டக்கால் கேட்க - அம்மறைப் பொருளை அவன் தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க. ('ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார், 'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது.).

மணக்குடவர் உரை
யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது, அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க. இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.

மு.வரதராசனார் உரை
(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க.

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

குறள் 686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது
[பொருட்பால், அமைச்சியல், தூது]

பொருள் 
கற்று - கற்கை - படித்தல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அஞ்சுதல் - பயப்படுதல்

அஞ்சான் - அஞ்சாதவன் ; அச்சம் இல்லாதவன் ; பயம் இல்லாதவன்

செலச்சொல்லித் - செலுத்தல்
செலுத்தல் - செல்¹(லு)-தல்
-> To be effective; to have influence;பயனுறுதல். செல்வர்வாய்ச் சொற்செல்லும் (நாலடி,115).
-> To last, endure, exist; நிலைத்திருத்தல்.செல்லாதவ் விலங்கை வேந்தர்க் கரசென (கம்பரா.இந்திரசித். 56)
எண்பொருளவாகச் செலச்சொல்லி -> Communicating your thoughts in language easy to be understood; சொல்ல வேண்டிய சிந்தனைகளை / கற்றவற்றை எளிமையாக மனதில் புரிந்துக்கொள்ளும் வகையில் சொல்லுதல் -

காலத்தால் - காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

அறிவதாம் - அறிதல் -  உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

தூது -  இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராச தூதர் தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூது மொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி.

முழுப்பொருள் 
கண் என்றால் அறிவு என்றும் பொருள் உண்டு என்பதை நினைவில் கொள்க. தூதருக்கு தேவையான தகுதிகள் என்ன?
1. நூல்கள் பல கற்று ஆராய்ந்து அறிவை பெற்று இருப்பது
2. பகைவரை கண்டு அஞ்சாது இருப்பது. தன் மன்னர் அல்லது அரசு கூறியதை பகைவரிடத்தில் எவ்வித அச்சமில்லாமல் கூறுவது.
3. பகைவருக்கு (பிறருக்கு) எளிதாக விளங்கும் வண்ணம் தெளிவான சொற்களை தேர்ந்தெடுத்து பிறருக்கு ஐயமற கூறுவது.
4. காலத்திற்கு சூழ்நிலைக்கு ஏற்றவற்றை அறிந்துகொள்ளுதல், வியூகங்களை அமைத்துக்கொள்ளுதல் இன்றியமையாததாகும். இது சில சமயம் பகைவரிடம் அகப்பட்டால் தப்பிக்க உதவும். மேலும் பகைவரிடத்தில் இருந்து அவர்கள் அறியாமல் அவர்களின் குறிப்பு சொற்கள் உடல்மொழி ஆகியவற்றின் மூலமும் மற்றவர்கள் மூலமும் அறிந்துக்கொண்டு அச்செய்தியை அரசிடம் கொண்டு சேர்ப்பது.

மேற்சொன்ன நான்கும் ஒரு தூதருக்கு தேவையான தகுதிகள்.

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
கற்று -நீதி நூல்களைக் கற்று; செலச்சொல்லி - தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்லி; கண் அஞ்சான் - அவர் செயிர்த்து நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது; காலத்தால் தக்கது அறிவது தூதாம் - காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க உபாயம் அறிவானே தூதனாவான். (அவ்வுபாயம் அறிதற் பொருட்டு நீதி நூற்கல்வியும், அதனானன்றிப் பிறிதொன்றான் முடியுங்காலம் வரின் அவ்வாறு முடிக்கவேணடுதலின் காலத்தால் தக்கது அறிதலும், இலக்கணமாயின.).

மணக்குடவர் உரை
தன்னரசன் சொன்ன மாற்றத்தைச் சொல்லுங்கால் பகையரசன் வெகுண்டானாயின் அது மாற்றுதற்காம் உபாயத்தைக் கற்று, எவ்விடத்தினும் அஞ்சுதலின்றி மகிழ்ச்சி வருமாறு இசையச் சொல்லி நாளோடே கூடச் செய்யத் தகுவன அறிந்து சொல்ல

மு.வரதராசனார் உரை
கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.

சாலமன் பாப்பையா உரை
அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.