Skip to main content

Posts

Showing posts with the label நல்குரவு

துப்புர வில்லார் துவரத் துறவாமை

குறள் 1050 துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் துப்புரவு - தூய்மை; நுகர்ச்சிப்பொருள்; ஐம்பொறிநுகர்ச்சி; அனுபவம்; திறமை; முறைமை; மேன்மை; வேண்டற்பாடு; அழகு இல்லார் - இல்லாதவர் துவரத் - துவர - மிக; முழுதும். துறவு - விடுதல்; இரகசியம்; வாய்ப்பானநிலை; வெளியிடம்; சன்னியாசம்; துறவியருக்குவிதித்துள்ளஅறம். துறத்தல்  -  கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல். துறவாமை -  எல்லாவாற்றையும் துறக்காமல் இருத்தல் (மானத்தை மட்டும் துறந்து) உப்பிற்கும் - உப்பு - உவர்ப்பு; உவர்ப்புள்ளபொருள்; உவர்க்கடல் இனிமை பெண்கள்விளையாட்டு; மணற்குவியல்; அன்பு காடிக்கும் - காடி - புளித்தகஞ்சி; புளித்தகள்; சோறு; கஞ்சி; புளித்தபழரசம்; ஊறுகாய்; ஒருவகைவண்டி; ஒருமருந்து; கழுத்து; நெய்; அகழி; கோட்டையடுப்பு; மாட்டுக்கொட்டில்; மரவேலையின்பொளிவாய். கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன். முழுப்பொருள் அன்றாடம் ஒருவர் அடிப்படையாக நுகரும் பொருட்களான உணவு உடை ஆகியவைக்கூட இல்லாமல் வறியவராக இருப்பவர்கள் இல்லறத்தை முழுவது...

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

குறள் 1048 இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் இன்றும் - இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல். வருவது - வருதல்  கொல்லோ - கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை. நெருநலும் - நெருநல் - நேற்று கொன்றது - கொல் -  கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல். போலும் - pōlum   part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.) நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச் சூழப்போடும் நெல்; மங்கலக்குறியாக நெல்வைத்து நிரப்பிய நாழி. முழுப்பொருள் என்னை(என்னையும் என் குடும்பத்தையும்) கொன்றதுப் போன்ற துன்பத்தை நேற்று (அதாவது கடந்த சில நாட்களாக சில மாதங்களாக சில வருடங்களாக) தந்த இந்த வறுமை இன்றும் வந்து என்னை கொல்லுமா? துன்புறுத்துமா? வறுமையில் உழலுவோர் அதனை விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை. வறுமை எத்தனை கொடியது என்றும் அதனை...

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

குறள் 1046 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்  [பொருட்பால், குடியியல், நல்குரவு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நற் - நல்ல- நன்மையான; மிக்க; கடுமையான பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. நன்கு - அழகு; மிகுதி; நல்லது; நலம்; நிலைபேறு; நன்னிமித்தம்; மகிழ்ச்சி; மிகவும்; இதம். உணர்ந்து - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல் சொல்லினும் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல். நல்கூர்-தல் - nalkūr-   4 v. intr. prob.நல்கு- + ஊர் 1. To be poor, indigent, destitute;வறுமைப்படுதல். நல்கூர்ந்த மக்கட்கு (நாலடி, 242).2. ...

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

குறள் 1045 நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும் [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் நல்குரவு - வறுமை என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும் இடும்பையுள் - துன்பம்; தீமை; நோய்; வறுமை; அச்சம். பல் - எயிறு; ஒன்றுக்குமேற்பட்டவை; யானை, பன்றிமுதலியவற்றின்கொம்பு; நங்கூரநாக்கு; சக்கரம்; வாள்முதலியவற்றின்பல்போன்றகூர்; சீப்புப்பல்; வெள்ளைப்பூண்டுமுதலியவற்றின்தனித்தனிஉள்ளீடு; தேங்காய்உள்ளீட்டின்சிறுதுண்டு. குரைத் - ஒலி; பெருமை; பரப்பு; அசைநிலை; இசைநிறை; குதிரை துன்பங்கள் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை. சென்று - செல்லும்  ; செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரி...

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

குறள் 1044 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும் [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் இற்பிறப்பு - நல்லகுடியிற்பிறத்தல்; உயர்குடிப்பிறப்பு இற்பிறந்தார் - நல்ல குடியில் ; உயர்குடியில் பிறந்தவர்கள்  கண்ணேயும் - இடத்தே கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. இளிவந்த - இளிவு - இழிவு; இகழ்ச்சி இழிதகவு அருவருப்பு அவலச்சுவைநான்கனுள்ஒன்று; நிந்தை சொற் - சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல். பிறக்கும் - பிறத்தல் - தோற்ற...

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக

குறள் 1043 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் தொல் -  பழைய; இயற்கையான வரவும் - வரவு - வருவாய்; வருகை; வரலாறு; விளைவு; வழி; வணங்குகை தோலும் - சருமம்; உடம்பின்; மேலுள்ளதோல்'புறணி; விதையின்மேற்றோல்; கேடகம்; துருத்தி; மெல்லென்றசொல்லால்விழுமியபொருள்பயப்பச்செய்யும்நூல்; புகழ் ; அழகு; சொல்; யானை; தோல்வி; நற்பேறின்மை; உடம்பு; பக்கரை; மூங்கில். கெடுக்கும் - கெடுத்தல் - அழித்தல்; பழுதாக்குதல்; ஒழுக்கங்கெடுத்தல்; அவமாக்குதல்; செயலைத்தடைசெய்தல்; இழத்தல்; நீக்குதல்; நஞ்சுமுதலியவற்றைமுறியச்செய்தல்; முறியடித்தல்; காணாமற்போகுதல் தொகையாக - கூட்டம்; சேர்க்கை; கொத்து; மொத்தம்; பணம்; எண்; கணக்கு; தொக்குநிற்றல்; திரட்டுநூல்; விலங்குமுதலியவற்றின்திரள்; கூட்டல்; தொகுத்துக்கூறுகை; வேற்றுமைத்தொகைமுதலியதொடர்சொற்கள் நல்குரவு - வறுமை என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும் நசை - ஆசை; அன்பு; நம்பிக்கை; எள்ளல்; குற்றம்; ஈரம். முழுப்பொருள் வறுமையினை ஆசையாக ஒருவ...

இன்மை எனவொரு பாவி

குறள் 1042 இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும் [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் நல்குரவு-  வறுமை இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு. ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில். பாவி - தீமையாளன்; சாது; வரக்கூடியது; பேதை. பாவி  - (வி)மதி; பாவனைசெய். மறுமை யும் - மறுபிறவி; மறுவுலகம். இம்மையும் - இப்பிறப்பு; இவ்வுலகவாழ்வு. இன்றி - இல்லாமல் வரும் -  வரும் ; வந்து சேரும்  முழுப்பொருள் வறுமை என்னும் ஒரு தீமை ஒருவன் வாழ்விலே வந்துவிட்டால் அது இந்த பிறவியாக இருந்தாலும் மறுபிறவியாக இருந்தாலும் இனிமை இல்லாமல் தான்  வரும். அதாவது எந்த ஒரு பிறப்பிலும் வறுமை வந்துவிட்டால் அது இன்பம் இல்லாமல் தான் வரும். இன்பம் இல்லாத நிலையே வறுமை என்றும் நாம் உணரலாம். வறுமையில் பிறருக்கு கொடுத்து உதவவும் முடியாதவற்றவராகிவிடுவோம். மனதில் இன்பம் இல்லை என்றால் நமக்கு மோட்சமும் இல்லை. ஆதலால் ஒருவன் அவனுடைய அறத்தை செய்த...

இன்மையின் இன்னாதது யாதெனின்

குறள் 1041 இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் நல்குரவு -  nalkuravu   n. நல்கூர்-. Poverty,indigence, destitution; வறுமை நல்குரவென்னுநசை (குறள், 1043). இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. 'இன்மையின் -  இல்லாமையில், வறுமையுள் இன்னாது - iṉṉātu   n. இன்னா-மை. 1.Evil; தீது பிறப்பின்னா தென்றுணரும் (நாலடி. 173).2. Pain; துன்பு (ஈடு.) இன்னாதது - துன்பம் தருவது யாது? - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு. எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால். இன்மையின் - இல்லாமையில், வறுமையுள் இன்மையே - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; இன்னாதது -   துன்பம் தருவது முழுப்பொருள் இல்லாமை/வறுமையானவற்றுள் வறுமை என்னவென்றால்? வறுமையே என்கிறார் திருவள்ளுவர். வறுமையை போல் துன்பம் தருவது வேறேதும் இல்லை. ஆதலால் வறுமையை போல் கொடிது வேறேதும் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.  பி.கு: ஆதலால் வறுமையை தடுப்பது மேன்மையான செயலாகும். இதனால்...

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்

குறள் 1049 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் நெருப்பினுள் - நெருப்பு - அக்கினி; இடி; உடற்சூடு; கோபம் முதலியவற்றின் கடுமை; ஒழுக்கத்தில் ஒருபோதும் தவறாதவர். துஞ்சலும் - துஞ்சல், v. n. sleep, death. ஆகும் - நடக்கும் நிரப்பினுள் - நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச்சூழப்போடும்நெல்; மங்கலக் குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி. யாது - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு ஒன்றும் - ஒன்றும் கண்பாடு - கண் இமை பொருந்துதல், உறக்கம், நித்திரை அரிது - அரியது, அருமை; பசுமை நல்குரவு - வறுமை முழுப்பொருள் நெருப்பு என்னும் அக்கினி உடலினை சுட்டெரித்து மனிதனை சாம்பலாக்கிவிடும். அத்தகைய நெருப்பினில் ஒருவர் அமர்ந்து கூட உறங்கவிட முடியும் [புராணங்களில் நாம் தவ ஆற்றலால் யோக வலிமையால் அது முடியும் என்று நாம் அறிவோம்], ஆனால் வறுமையின் நினைவால் (கவலையால்) கண் சோர்வடைந்து  உறக்கம் இல்லாமல் இருப்பது மிக மிக அரிதாகும் என்கிறார் திருவள்ளுவர். வறுமை அவ்வளவு கொடியது...

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா

குறள் 1047 அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் அறம் -  தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல் சார்தல் -  சென்றடைதல்; புகலடைதல்; அடுத்தல்; பொருந்தியிருத்தல்; கலத்தல்; உறவுகொள்ளுதல்; ஒத்தல்; சாய்தல். அறஞ்சாரா - அறம் சாராமல் - அறத்தோடு பொருந்தாத நல்குரவு -நல்கூர் - வறுமை; வறுமையை ஒருவன் உடைவான் என்றால் ஈனுதல் -  கருவுயிர்த்தல்; உண்டாக்குதல் குலைவிடுதல்; தருதல் ஈட்டுதல் -  கூட்டுதல்; சம்பாதித்தல் ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப் பொருளில் வரும் எண்ணிடைச் சொல். ஈன்றதா யானும் - தன்னை வயிற்றில் ஈன்ற தாயாக ஆனாலும் பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன். போல - போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள். பிறன்போல - பிறர்களை / அன்னியர் / அயலார் / மற்றவர்கள் / உறவு அல்லாத முன் பின் தெரியாத மூன்றாம் மனிதர்களை போல நோக்குதல் -  பார்த்தல்; கருதுதல்...