குறள் 1048
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு
[பொருட்பால், குடியியல், நல்குரவு]
பொருள்
இன்றும் - இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல்.
வருவது - வருதல்
கொல்லோ - கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.
நெருநலும் - நெருநல் - நேற்று
கொன்றது - கொல் - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.
போலும் - pōlum part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.)
நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச் சூழப்போடும் நெல்; மங்கலக்குறியாக நெல்வைத்து நிரப்பிய நாழி.
முழுப்பொருள்
என்னை(என்னையும் என் குடும்பத்தையும்) கொன்றதுப் போன்ற துன்பத்தை நேற்று (அதாவது கடந்த சில நாட்களாக சில மாதங்களாக சில வருடங்களாக) தந்த இந்த வறுமை இன்றும் வந்து என்னை கொல்லுமா? துன்புறுத்துமா? வறுமையில் உழலுவோர் அதனை விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை. வறுமை எத்தனை கொடியது என்றும் அதனை அஞ்சியே தினம் தினம் இருக்கின்றனர் என்றும் கூறுகிறார் திருவள்ளுவர்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
நெருதலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன்? (அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள்.1045)துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.).
மணக்குடவர் உரை
இன்றும் வரும்போலும்; நெருநற்றும் என்னைக் கொன்றது போலுற்ற நிரப்பிடும்பை. இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று.
மு.வரதராசனார் உரை
நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).
சாலமன் பாப்பையா உரை
நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?.
No comments:
Post a Comment