குறள் 1049
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது
[பொருட்பால், குடியியல், நல்குரவு]
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது
[பொருட்பால், குடியியல், நல்குரவு]
பொருள்
நெருப்பினுள் - நெருப்பு - அக்கினி; இடி; உடற்சூடு; கோபம் முதலியவற்றின் கடுமை; ஒழுக்கத்தில் ஒருபோதும் தவறாதவர்.
துஞ்சலும் - துஞ்சல், v. n. sleep, death.
ஆகும் - நடக்கும்
நிரப்பினுள் - நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச்சூழப்போடும்நெல்; மங்கலக் குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி.
யாது - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு
ஒன்றும் - ஒன்றும்
கண்பாடு - கண் இமை பொருந்துதல், உறக்கம், நித்திரை
அரிது - அரியது, அருமை; பசுமை
நல்குரவு - வறுமை
முழுப்பொருள்
நெருப்பு என்னும் அக்கினி உடலினை சுட்டெரித்து மனிதனை சாம்பலாக்கிவிடும். அத்தகைய நெருப்பினில் ஒருவர் அமர்ந்து கூட உறங்கவிட முடியும் [புராணங்களில் நாம் தவ ஆற்றலால் யோக வலிமையால் அது முடியும் என்று நாம் அறிவோம்], ஆனால் வறுமையின் நினைவால் (கவலையால்) கண் சோர்வடைந்து உறக்கம் இல்லாமல் இருப்பது மிக மிக அரிதாகும் என்கிறார் திருவள்ளுவர். வறுமை அவ்வளவு கொடியது!!
மேலும் அஷோக் உரை
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை. ('நெருப்பினும் நிரப்புக் கொடிது', என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.).
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்-ஒருவன் மந்திர மருந்துகளால் நெருப்பினுள் கிடந்து உறங்குதலும் கூடும்; நிரப்பினுள் யாது ஒன்றும் கண்பாடு அரிது-ஆயின், வறுமையிலிருந்து கொண்டு எவ்வகையிலுங் கண்மூடித் தூங்கவே முடியாது.
நெருப்பினும் வறுமை கொடிது என்றவாறு. இதுவும் அவன் துயரக் கூற்று. உம்மை யிரண்டனுள் முன்னது அருமை; பின்னது முற்று. இனி, ’யாதொன்றும்’ என்பது ஒரு சிறிதும் எனினுமாம். இவ்வும்மை இழிவு சிறப்பு. இத்தொண் (ஒன்பது) குறளாலும், வறுமையின் கொடுமை கூறப்பட்டது. ’நிரப்பு’ மேற் கூறியதே.
நெருப்பினும் வறுமை கொடிது என்றவாறு. இதுவும் அவன் துயரக் கூற்று. உம்மை யிரண்டனுள் முன்னது அருமை; பின்னது முற்று. இனி, ’யாதொன்றும்’ என்பது ஒரு சிறிதும் எனினுமாம். இவ்வும்மை இழிவு சிறப்பு. இத்தொண் (ஒன்பது) குறளாலும், வறுமையின் கொடுமை கூறப்பட்டது. ’நிரப்பு’ மேற் கூறியதே.
மணக்குடவர் உரை
நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் ஆகும்; நிரப்பிடும்பையுள் உறங்குதல் யாதொரு முகத்தினாலும் அரிது. இஃது உறங்கவொட்டா தென்றது
மு.வரதராசனார் உரை
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
சாலமன் பாப்பையா உரை
யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.
No comments:
Post a Comment