Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்


குறள் 1046
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும் 
[பொருட்பால், குடியியல், நல்குரவு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நற் - நல்ல- நன்மையான; மிக்க; கடுமையான

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

நன்கு - அழகு; மிகுதி; நல்லது; நலம்; நிலைபேறு; நன்னிமித்தம்; மகிழ்ச்சி; மிகவும்; இதம்.

உணர்ந்து - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

சொல்லினும் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

நல்கூர்-தல் - nalkūr-   4 v. intr. prob.நல்கு- + ஊர் 1. To be poor, indigent, destitute;வறுமைப்படுதல். நல்கூர்ந்த மக்கட்கு (நாலடி, 242).2. To be wearied; களைப்படைதல். நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் (மணி. 13, 72). 3. To suffer;துன்புறுதல். மாலைநீ யாயின் மணந்தா ரவராயின்ஞாலமோ நல்கூர்ந்தது வாழிமாலை (சிலப். 7, 50).  

நல்கூர்ந்தார் - வறியோன்

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

பொருட்பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
நூல்கள் பல கற்று நன்கு உணர்ந்து அல்லது அனுபவத்தின் மூலமும்  பலருடன் கேட்டும் தர்க்கம் செய்தும் நன்கு உணர்ந்து மற்றவர்களுக்கு அதனை எடுத்து கூறினாலும் அதனை கூறுபவர் செல்வம் இல்லாத வறியவராக இருப்பின் அதனை கேட்பவர் அதனை தளர்ச்சியுடனே கேட்கக்கூடும். அதாவது வறியவர் கூறியதன் பொருளை முழுவதுமாக எடுத்துக்கொள்ளாமல் அல்லது கேட்ட உடன் சிறிது காலத்தில் மறந்துவிடுவார் அல்லது பொருட்படுத்தாமல் மதிக்காமல் அலட்சியம் செய்துவிடுவார். 

மேலும் தாம் சொல்வதை கேட்க ஆட்கள் இல்லை என்றாலும் அல்லது சொல்வதை மனதார கேட்டுணராதவர்கள் இல்லை என்றால் அதுவும் மன அழுத்தம் தரும். ஊக்கத்தை குறைக்க கூடும். 

ஆதலால் நல்லவை கூறினாலும் சொல்பவரிடம் செல்வம் இருந்தால் அதனை காது கொடுத்தும் மனம் கொடுத்தும் கேட்போர் விகிதம் அதிகமாக இருக்கும். அதுமட்டும் இன்றி, செல்வம் என்பது ஒரு செயல் செய்தலோ அல்லது வேலை செய்தாலோ அல்லது கடமையை ஆற்றினால் தான் கிடைக்கும். சும்மா வந்துவிடாது செல்வம். ஆதலால் சொல்பவர் செயலாற்றி செல்வம் ஈட்டுபவராக இருத்தல் வேண்டும். வறியவராக இருக்க கூடாது.

“ஏழை சொல் அம்பலம் ஏறாது” என்ற சொலவடையைக் கூறுவதே இக்குறள். 

இதையே ஒரு நாலடியார்(115) பாடல் இவ்வாறு கூறுகிறது. “உயர் இனத்து ஆவின் கன்றாயின் இளங்கன்றும் மிக்க விலைபெறும், ஆதலின் படியாதவரேயாயினும் செல்வரது வாய்ச்சொல் மதிக்கப்படும். வறிஞரது வாய்மொழி, அவர் கற்றவரே யாயினும், சிறிது ஈரமுள்ள காலத்தில் உழுகின்ற உழவுபோல மேலளவாய்ச் சென்று உள்ளே மதிக்கப்படாதொழியும்”. அப்பாடலானது:

நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
கல்லாரே யாயினும் செல்வர்வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். (நாலடி 115)

ஒரு இன்னா நாற்பது (29) பாடல்வரியும் இக்குறள் கருத்தை அடியொட்டியதே. “இல்லாதார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா”

மேலும் கீழ்க்காணும் குறளை நினைவில் கொள்க, ஒருவர் நற்பொருளை நன்கு உணர் சொல்கிறார் என்றார் அவர் முதலில் அதனை பின்பற்றி இருக்கவேண்டும். அப்படி பின்பற்றினால் அவர் வாழ்வில் நல்ல இடத்தில் இருப்பார். வறுமையில் வாடமாட்டார். ஆதலால் வறுமையில் இருப்போரை தோல்வியடைந்தவராக, பேதையாக, வாய்ச்சொல் வீரராக கருதி அவர் கூறுபவற்றை காதுக்கொடுத்து கேட்கமாட்டார்கள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - நல்கூர்ந்தார் சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும். (பொருளின்மையைத் தலைப்படுதலாவது 'யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும் என்று அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
நல்ல பொருளினை மிகவும் ஆராய்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும். ஏற்றுக்கொள்வாரில்லை என்றவாறாயிற்று. இது கல்வி கெடும்: சுற்றத்தாரும் கைவிடுவ ரென்றது.

மு.வரதராசனார் உரை
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.

English Meaning - As I taught a kid - Rajesh
A person can say noblest things, most valuable advise for business/work/life etc, highest wisdom etc in the most efficient manner with clarity. It might look agreeable to the listener too. However, if the person is poverty or doesn't have sufficient money then his words would be most taken for granted (because people would think that the person is only preaching and he didn't practise his words). Two important things 1) Poverty is not respected 2) Money is essential for life. One should not neglect money.

Questions that I ask to the kid
When does wise thoughts lose attention or value? Why?

No comments:

Post a Comment