Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

 

குறள் 1287
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல் சேர்த்தல் நடத்துதல் அமிழ்த்தல் நுகர்தல் கொடுத்தல் அனுப்புதல் குறிப்பித்தல் அறிவித்தல் ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் 
உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

புனல் - ஆறு; நீர்; குளிர்ச்சி; பூராடநாள்; வாலுளுவை; வாய்குறுகியகுப்பிகளில்நீர்மப்பொருளைஊற்றஉதவுங்கருவி.

பாய்தல் - தாவுதல்; நீர்முதலியனவேகமாய்ச்செல்லுதல்; மேல்நின்றுகுதித்தல்; நீருள்மூழ்குதல்; எதிர்செல்லுதல்; பரவுதல்; வரைந்துபடிதல்; விரைந்தோடுதல்; தாக்குதல்; விரைவுபடுதல்; அகங்கரித்தல்; மடிப்புவிரிதல்; கூத்தாடுதல்; ஓடிப்போதல்; தாக்கிப்பேசுதல்; குத்துதல்; வெட்டுதல்; முட்டுதல்.

பாய்பவரேபோல் -  பாய்பவரைப்போல; தாவுபவர் போல

பொய்த்தல் - பொய்யாதல்; தவறுதல்; பின்வாங்குதல்; கெடுதல்; பொய்யாய்ப்பேசுதல்; வஞ்சித்தல்

அறிந்துஅறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் 
உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

புலந்து - புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.


முழுப்பொருள்
ஓடும் ஆற்றில் பாய்ந்தால் அது நம்மை அமிழ்த்தி கொண்டு செல்லும். அதனை அறிந்திருந்தும் ஆற்றில் பாய்பவர்போல் சிலர் உள்ளனர். யார் அது? 

தலைவனின் பிரிவால் வாடும் தலைவி தலைவன் வந்த உடன் பிரிவாற்றாமையை காரணம் காட்டி ஊடல் செய்யவேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால் அப்படியே ஊடினாலும் இறுதியில் ஊடலில் இருந்து பின்வாங்க நேரிடும் என்பதை அறிவாளாம் தலைவி. பொய்யாக ஊடி பின்பு பின்வாங்கி தலைவனுடன் கூடுவாள் தலைவி. 

இதைத் தான் திருவள்ளுவர் இங்கு சுட்டிக்காட்டுகிறார். ஆறு அமிழ்த்துக்கொண்டுச் செல்லும் என அறிந்தும் ஆற்றில் பாய்பவர்ப் போல, பிரிவின் பின் வந்து சேர்ந்த தலைவனுடன் ஊடினாலும் இறுதியில் கூடல் தான் நிகழும் என அறிந்தும் எதற்கு தலைவி பொய்யாக ஊடவேண்டும்?

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? - புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்? ('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் - புரைபடுதல், புலந்தாலும் பயனில்லை என்பதாம். 'பொய்த்தல் அறிந்தேன்' என்பது பாடமாயின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க.).

மணக்குடவர் உரை
தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப் போல நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு?. இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.

மு.வரதராசனார் உரை
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?.

சாலமன் பாப்பையா உரை
தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?.

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

 

குறள் 1280
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

பெண்ணினான் - பெண்ணினால் – பெண்ணவளால் (பெண்மையின் என்பதே பொருந்தும்)

பெண்மை - பெண்தன்மை; காண்க:பெண்பிறப்பு; பெண்ணுக்குரியகுணம்; பெண்இன்பம்; அமைதித்தன்மை; நிறை.

உடைத்து - உடைதல் - இருக்கும், உடையது

என்ப -  எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

கண்ணினான் - தம்முடைய கண்ணசைவாலேயே

காம - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

காமநோய் - s. Love-sickness, மதன நோய்.

சொல்லி - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்

இரவு - இராத்திரி; மஞ்சள் இருள்மரம் இரத்தல் இரக்கம் பன்றிவாகை

முழுப்பொருள்
ஒரு பெண்ணாலே தனக்கு பெண்மை இருக்கிறது என்பதை உணர்த்த முடியும். எப்படி? தலைவன் பிரிந்து சென்றுள்ள பொழுது தலைவியின் கண்களை பார்த்தாலே அவள் காமநோயாம் பசலைநோயை கொண்டு இருக்கிறாள் என்பதை மற்றவர்களால் அறிந்துணர முடியும். மேலும், என்னைவிட்டு பிரிந்து செல்லாதீர் என்று தலைவனுக்கு கண்களாலேயே குறிப்பறிவுறுத்த முடியும் எனில் அதுவே எப்பெண்ணிற்கு பெண்மை இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக்கு அறிவுறுத்தது.) காமநோய் கண்ணினால் சொல்லி இரவு - மகளிர் தம் காம நோயினைத் தோழியர்க்கும் வாயாற்சொல்லாது கண்ணினாற் சொல்லி அது தீர்க்கவேண்டும் என்று அவரை இரவாது உடன்போதல் குறித்துத் தம் அடியினை இரத்தல்; பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப - தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் அறிந்தோர். (தலைமகளது உடன் போதல் துணிபு தோழியால் தெளிந்தானாகலின், தன் பிரிவின்மைக் குறிப்பினை அறிவுறுப்பான், அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியந்து கூறியவாறு.).

மணக்குடவர் உரை
வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக்கோடல், தமது இயல்பாகிய பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்தென்று சொல்லுவர் அறிவோர். இது பிரிவுணர்த்திய தலைமகள் குறிப்புக்கண்டு தலைமகற்குத் தோழி சொல்லியது.

மு.வரதராசனார் உரை
கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

 

குறள் 1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண்.

நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

மென் - - மெல்லிய - மென்மையான

தோளும்தோள் - புயம்; கை; தொளை.

நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

அடி - பாதம்; காற்சுவடு முதல் கடவுள் பாட்டின்அடி; அடிப்பீடம்; அண்மை மரபுவழி; அளவு கீழ் மகடூஉமுன்னிலை

நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி
ஆண்டு - அகவை; அவ்விடம்
ஆண்டு - ஆள்(ளு)-தல் - āḷ-   2 v. tr. [T. ēlu, K.M. āl.] 1. To rule, reign over, govern;அரசுசெய்தல். (திவ். பெரியதி. 6, 2, 5.) 2. Toreceive or accept, as a protégé; ஆட்கொள்ளுதல் ஆள்கின்றா னாழியான் (திவ். திருவாய். 10, 4, 3).3. To control, manage, as a household; அடக்கியாளுதல். 4. To use a word in a particularsense and so give currency to it; வழங்குதல் சான்றோரா லாளப்பட்ட சொல் 5. To cherish,maintain; கைக்கொள்ளுதல் நாணாள்பவர் (குறள்,1017). 6. To keep or maintain in use; கையாளுதல் எடுத்தாளாத பொருள் உதவாது.  

அவள் - பெண்பால்சுட்டுப்பெயர்

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

செய்தது - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

முழுப்பொருள்
தலைவி தலைவனின் பிரிவால் வாடுகிறாள். பசலை நோய் அவளை வாட்டுகிறது. அப்பொழுது, அவள் கைகளில் இருந்து நழுவும் கைவளையல்களை பார்த்தாள். அதாவது அவருடன் முயங்க காரணமானது இந்தக் கைகள் தானே. நீ தானே அவர் மீது அன்பும் இப்பசலைநோய்க்கும் காரணம். பின்பு மெலிந்த அவள் தோள்களை பார்த்தாள். அதாவது அவரை தழுவிய தோள்கள் தான் இப்பசலைநோய்க்கு காரணம் போன்று பார்த்தாள். பின்பு அவளுடைய கால்களை பார்த்தாள். அதாவது தலைவனை தேடிச்சென்று தழுவ இக்கால்களே நடந்தது. இதுவே இப்பசலைநோய்க்கு காரணம் போன்று பார்த்தாள். தலைவன் பிரிந்தாலும் இவ்வுறுப்புகள் எல்லாம் தலைவனை நோக்கிச் செல்லும் என்பதை குறிப்பறிவுருத்துவதுபோல் இருப்பதாக தலைவி சொல்கிறாள். அதனால் தானும் தலைவனை நோக்கிச் செல்லப்போவதை உறுப்புகளின் ஊடாக குறிப்பாக உணர்த்துகிறாள்.


இது தலைவனுக்கு சொல்லப்பட்டதாகக் கூட இருக்கலாம். தலைவனே!நீர்(நீங்கள்) என்னைப் பிரிந்து சென்றால், என் கைகளும், தோள்களும், கால்களும் உங்களுடன் வரும். அதன்மூலம் நானும் வருவேன். ஆதலால் அது நடவாமல் பார்த்துக்கொள்ளவும். அதவாது நீர் எம்மை பிரிந்து செல்லாமல் இரும் என்பதை குறிப்பாக உணர்த்துகிறாள். 

இதுவும் பொருத்தமான பொருள் தான். ஏனெனில் என் சொந்தவாழ்விலும் சரி, எனது நண்பர்கள் சிலர் கூறியுள்ள தங்கள் அனுபவங்களிலும் சரி, மனைவிமார்கள் தலைவனை நோக்கி குறிப்பாக வெளியூர்களுக்கு செல்ல ஆயுத்தமாகும் வேலையில், நீங்கள் இன்னும் ஆறு மாதத்தில் வந்து என்னை அழைத்துசெல்லவில்லை என்றால், நான் அங்கு வந்துவிடுவேன். திருவள்ளுவர் காலத்தில் பூடகமாக சொல்லப்பட்டது, இன்றைய காலக்கட்டங்களில் பகிரங்கமாக சொல்லப்படுகிறது. ஆனால், அன்பு ஒன்றுத்தான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி - அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது - அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது. (செய்த குறிப்பு-செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், 'செறிதொடி செய்திறந்த கள்ளம்' (குறள். 1275)என்றானாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.).

மணக்குடவர் உரை
தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது. அது - உடன்போக்கு.

மு.வரதராசனார் உரை
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.

சாலமன் பாப்பையா உரை
நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்

குறள் 1278
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
நெருநற்றுச் - நேற்று.

சென்றார் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

காதலர் - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.;

யாமும் - யாம் - தன்மைப்பன்மைப்பெயர்

எழு - eẕu   s. pillar, post, கம்பம்; 2. a kind of weapon; 3. see ஏழு.
ஏழு - ஓர்எண், seven  
எழு - eẕu   II. v. i. get up, rise, எழும்பு; 2. appear, originate, தோன்று; 3. awake, துயிலெழு; 4. spread as fame or rumour பரவு; v. t. commence, தொடங்கு.

நாளேம் - நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின் ஈற்றடியிறுதியில் வரும் ஒரசைச் சீர் வாய்பாடு

மேனி - நிறம்; வடிவம்; உடல்; அழகு; நன்னிலைமை; நிலத்தின்சராசரிவிளைச்சல்; காண்க:குப்பைமேனி

பசந்து - - pacantu   n. U. pasand. 1.Elegance; beauty; attractiveness; fineness;நேர்த்தி. பசந்தெனவே சென்று (கவிகுஞ். 2). 2.A superior kind of Mango fruit; உயர்ந்த மாம்பழம் உன்னிடத்தில் என்ன பசந்திருக்கிறது.

பசத்தல் - பசுமையாதல்; காமத்தால்மேனிபசலைநிறமாதல்; ஒளிமங்குதல்; மங்கிப்போதல்; பொன்னிறங்கொள்ளுதல்.

முழுப்பொருள்
நெற்றுத் தான் என் தலைவர் என்னை பிரிந்துச் சென்றார். ஆனால் என் மேனி மீது இந்த பசலைநோய் ஏழு நாட்களாய் இருப்பதுப்போன்று தோற்றம் அளிக்கிறது என்று தலைவி கூறுகிறாள். அதாவது ஒருநாள் பிரிவு ஏழு நாட்கள் போன்று பெரிதாக தோன்றுகிறதாம். அது தலைவன் பிரிந்து சென்றதால் அவள் வருத்தத்தில் இருப்பதை ஊராருக்கு அறிவுணர்த்தும் குறிப்பு. அல்லது, தலைவர் பிரியப்போகிறார் என்பதை முன்னமே கூடி இருக்கும்பொழுது அவள் உள்ளம் உய்த்தறிந்து பசலையை நோயை இவள் மேல் படரவிட்டிருக்க வேண்டும். அது அவள் உள்ளம் அவளுக்கு அறிவுணர்த்த கொடுக்கபட்ட குறிப்பு.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

”கூற்றம் குதித்துய்ந்தார்” (நாலடி 6)
“கூற்றம் குதித்துய்ந் தறிவாரோ இல்” (பழமொழி 183)
“கூழைமை பயின்ற கூற்ற வரசனைக் குதிக்கும் சூழ்ச்சி” (சூளா.துறவு 18)
“கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே” (திருமந் 172)

“சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
மூவாதபன் முனிவர்தொழும் முதுகுன் றடைவோமே” (சம்பந்தர்.முதுகுன்றம் 6)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) எம் காதலர் சென்றார் நெருநற்று - எம்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனி பசந்து எழுநாளேம் - அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம். ('நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழுநாளுண்டாகலின்,அன்றே மேனி பசந்தது என்பாள். 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.).

மணக்குடவர் உரை
எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம். இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.

சாலமன் பாப்பையா உரை
என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்

 

குறள் 1270
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

ஆம் -  நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

கால் - காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

பெற்றக்கால் - அப்படியே பெற்றுவிட்டாலும்

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

ஆம் -  நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

உறின் - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

ஆம் -  நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

உள்ளம் -  மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

உடைந்து - உடைதல் - தகர்தல்: உலைதல்: கெடுதல்: மலர்தல்: பிளத்தல்: முறுக்கவிழ்தல்: எளிமைப்படுதல்: புண்கட்டியுடைதல்: ஆறுமுதலியனகரையுடைதல்: அவிழ்தல்; தோற்றோடுதல்; வெளிப்படுதல்

உக்கக் - உக்கு-தல் - ukku-   5 v. intr. உட்கு-. [M.ukku.] 1. To rot, decay, moulder; மக்கிப்போதல். உக்கினமரம். 2. To pine away, waste away;மெலிதல். அவள் துக்கத்தால் உக்கிப்போகிறாள். Loc.  

கால் காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

முழுப்பொருள்
தலைவி தலைவனின் பிரிவால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளாள். அவள் நெஞ்சம் மிகவும் வருந்தியுள்ளது. அத்தகைய நிலையில் அவளுக்கு ஒரு ஐயம்? ஒருவேலை இந்த பிரிவின் துன்பம் தாங்காமல் என் உள்ளம் உடைந்து எங்கள் காதலும் மக்கிவிட்டால் பின்பு பிரிந்து சென்ற என் தலைவருடன் இனி சேர்க்கூடும் என்றாலும் என்ன ஆக போகிறது? அல்லது அவர் திரும்பி என்னிடம் வந்தால் தான் என்ன ஆக போகிறது? அல்லது அவர் வந்த உடன் அவருடன் கூடினால் தான் என்ன ஆகப்போகிறது? என்று தலைவி கூறுகிறாள்.

அதாவது எல்லாத் துன்பத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது. அத்துன்பம் எல்லையை கடந்துவிட்டால் நெஞ்சம் உடைந்துவிடும். பின்பு ஒட்டினாலும் அது முன்போல் இருக்காது என்பதே தலைவியின் ஐயம். மிகவும் நியாயமான ஒன்று. இது பிரிவு என்றில்லை. எல்லாவித துன்பத்திற்கும் பொருந்துவதாகவே இருக்கிறது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உள்ளம் உடைந்து உக்கக்கால் - காதலி நம் பிரிவினையாற்றாது உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி; பெறின் என் - நம்மைப் பெறக்கடவளானால் என்? பெற்றக்கால் என் - அதுவன்றியே பெற்றால் என்? உறின் என்? - அதுவன்றியே மெய்யுறக் கலந்தால்தான் என்? இவையொன்றானும் பயன் இல்லை. (இம்மூன்றும் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டன. அதன்மேலும் முன்னை வழக்குண்மையின், அதற்கு முன்னே யான் செல்ல வேண்டும் என்பது கருத்தாகலின், விதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை அறிக.).

மணக்குடவர் உரை
எனது உள்ளம் உடைந்து போயின் பின்பு அவரைப்பெறுவேமென்று இருந்ததனாற் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம்? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம்?. இது வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?.

சாலமன் பாப்பையா உரை
என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.