குறள் 269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
கூற்றம் - பகுதி; கொடும்பகைவன், யமன்; அழிவுண்டாக்குவது; நாட்டின்பகுதி; சொல்.
குதித்தலும் - குதி-த்தல் - kuti- 11 v. [K. gudi, M. kuti.]intr. 1. To jump, leap, spring, bound; பாய்தல் (திவா.) 2. To splash, as water; to spurtout; நீர்முதலியன எழும்பிவிழுதல். மலர் தேன்குதிக்க(தஞ்சைவா. 67). 3. To dance with joy, frolic;கூத்தாடுதல். 4. To be haughty, arrogant;செருக்குக்கொள்ளுதல். அதிகமாகக் குதிக்கிறான்.--tr.To leap over; overcome, escape from; கடந்துவிடுதல். கூற்றங் குதித்தலுங் கைகூடும் (குறள், 269).
கைகூடும் - கைகூடுதல் - சித்தியாதல்; கிட்டுதல்
நோற்றலின் - பொறுத்தல்; விரதமிருத்தல்; தவஞ்செய்தல்
ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்
தலைப்பட்டவர்க்கு - தலைப்படு-தல் - talai-p-paṭu- v. id. +.tr. 1. To unite, be in communion with; ஒன்றுகூடுதல் சிவனைத் தலைப்பட்டுச் சென்றொடுங்கும்ஊழியிறுதி (திருக்கோ. 25, உரை). 2. To meet,cross; எதிர்ப்படுதல் ஓர் வேட்டுவன் றலைப்பட்டானே (சீவக. 1230). 3. [T. talapaḍu.] To under-take, enter upon; மேற்கொள்ளுதல் ஏவல் தலைப்படவிரும்பும் (சேதுபு. துரா 2). 4. To obtain, attain;பெறுதல். சிலரதன் செவ்வி தலைப்படுவார் (குறள்,1289).--intr. 1. To advance; to improve incircumstances; முன்னேறுதல் 2. To be noble,exalted; தலைமையாதல். தலைப்படு சால்பினுக்குந்தளரேன் (திருக்கோ. 25). 3. To enter, asa character on the stage; புகுதல் கூரிய பல்லினையுடையாள் தலைப்பட்டாள் (பு. வெ 10, பொதுவி. 5,உரை). 4. To follow; வழிப்படுதல் தம்மிற்றலைப்பட்டார் பாலே தலைப்பட்டு (திருக்களிற்றுப்.2). 5. To commence; தொடங்குதல் அந்தக்காரியத்தைச் செய்யத் தலைப்பட்டான்.
முழுப்பொருள்
தவத்தின் சிறப்பு என்னவென்றால் ஒருவர் தவம் செய்தால் எல்லா உயிர்களின் உயிரை வாங்குவதை தர்மமாக கொண்ட யமனையும் வெல்லும் ஆற்றல் கைகூடும். பிறந்தால் இறப்பது என்பது இயற்கை நியதி. ஆனால் இறப்பையே ஒருவரால் வெல்ல முடியும் என்றால் அவரால் தவத்தினால் பல உயரிய நிலைகளை அடைய முடியும். வீடுபேற்றினை அடையமுடியும். ஆதலால் தவத்தின் சிறப்பறிந்துணர்ந்து தவம் செய்க என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
தவத்தால் யமனை வென்ற புராண கதையே மார்க்கண்டேயன் கதை. அதைக் கீழே காணலாம்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”கூற்றம் குதித்துய்ந்தார்” (நாலடி 6)
“கூற்றம் குதித்துய்ந் தறிவாரோ இல்” (பழமொழி 183)
“கூழைமை பயின்ற கூற்ற வரசனைக் குதிக்கும் சூழ்ச்சி” (சூளா.துறவு 18)
“கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே” (திருமந் 172)
“சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
மூவாதபன் முனிவர்தொழும் முதுகுன் றடைவோமே” (சம்பந்தர்.முதுகுன்றம் 6)
மார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்!
பக்த மார்க்கண்டேயன் என்றதும் நம் நினைவுக்கு வருவது திருக்கடவூர் திருத்தலம்தான். காலனை உதைத்த கோலத்தில், கால சம்ஹாரமூர்த்தியாக ஈஸ்வரன் அருளும் இந்தத் தலத்தில்தான், மார்க்கண்டேயனுக்கு சிரஞ்ஜீவி வரமும் கிடைத்தது என்பதை அறிவோம்.
ஆனால், பக்த மார்க்கண்டேயனுக்கு அபயமளித்து, அவன் சிவனருளைப் பெற வழிகாட்டிய திருத்தலங்கள் குறித்து நம்மில் பலருக்கும் தெரியாது. மகத்தான அந்த க்ஷேத்திரங்களைப் பற்றி தெரிந்துகொள்வோமா?!
மார்க்கண்டேயன் ஆலயம்
சிவபக்தரான மிருகண்டு மகரிஷி தம்பதியினர் நீண்ட காலமாகக் குழந்தையில்லாமல் ஏங்கி, குழந்தைப்பேறு வேண்டி இறைவனைத் தினமும் மனமுருகி வணங்கி வந்தனர்.
மார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்!
பல நாள்கள் அவர்கள் மனம் உருக பிரார்த்தித்து வந்ததைத் தொடர்ந்து ஒரு நாள் நேரில் தோன்றிய இறைவன், ‘‘உங்களுக்கு 16 ஆண்டுகள் மட்டுமே ஆயுளுடன் இருக்கும் அழகும் அறிவும் நிறைந்த குழந்தை வேண்டுமா, தீய பண்புகளுடன் தீர்க்காயுள் உள்ள குழந்தை வேண்டுமா?’’ என்று கேட்க...
‘கொஞ்சநாள் இருந்தாலும், கொஞ்சி மகிழ அழகும் அறிவும் கொண்ட குழந்தையே வேண்டும்’ என்று கூறினர். இறைவனும் அங்ஙனமே அருள்பாலித்து மறைந்தார். அதன் பலனாக அந்தத் தம்பதிக்குக் குழந்தையாக மார்க்கண்டேயன் பிறந்தான்.
மார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்!
மார்க்கண்டேயன் பிறந்து வளர்ந்தது திருக்கடையூர் அருகேயுள்ள தி.மணல்மேடு பகுதியில். இன்றைக்கும் இந்தக் கிராமத்தில் மார்க்கண்டேயனுக்கு தனிக்கோயில் உள்ளது. திருக்கடையூரில் ஆயுஷ் ஹோம பூஜைகள் செய்பவர்கள் இந்தக் கோயிலுக்கும் தவறாமல் வந்து செல்கின்றனர்.
கதிராமங்கலம் ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி கோயில்
மார்க்கண்டேயனுக்கு 16 வயது பூர்த்தியானவுடன் பாசக்கயிற்றுடன் யமன் நெருங்க, மார்க்கண்டேயன் உயிர்பிழைக்க முதலில் சென்றது மயிலாடுதுறை அருகேயுள்ள கதிராமங்கலம் ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி கோயிலுக்குத்தான்.
மார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்!
இந்த அம்பிகையைத் தன் தாயாகவே எண்ணி அனுதினமும் வழிபடுவானாம் மார்க்கண்டேயன். பதினாறு வயது பூர்த்தியடைந்ததும் காலன் அவனைத் தேடிவந்தபோது மார்க்கண்டேயன் இந்த அம்பிகையின் சந்நிதிக்கு ஓடினான்.
‘‘அம்மா நான் இன்று காலனிடம் சிக்கி உயிரை விடவேண்டியதுதானா? உயிர் பிழைக்க வழியேயில்லையா?” என்று மன்றாடினான்.அவனுக்குக் கதிராமங்கலம் அம்பிகை ஒரு வழிகாட்டினாள்... ‘‘அபயம் என்று வருவோருக்கு அடைக்கலம் தருபவள், மயிலாடுதுறை மயூரநாதருடன் அருளும் அபயாம்பிகை. அவளிடம் செல். உனக்கு நல்வழியைச் சொல்வாள்” என்று அருள்பாலித்தாள் ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி. அதன்படியே மயூரநாதர் ஆலயத்துக்குச் சென்றான் மார்க்கண்டேயன். நாமும் அவனுடன் சேர்ந்து பயணிப்போம்.
மார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்!
மயிலாடுதுறை மயூரநாதர் சுவாமி கோயில்
மயிலாடுதுறை மயூரநாதர் சுவாமி கோயில் குருக்களான பாலாமணி குருக்களிடம், மார்க்கண்டேயன் இத்திருக்கோயிலுக்கு வருகை புரிந்தது குறித்து விவரம் கேட்டோம்.
“அபயாம்பாளிடம் அபயம் கேட்டுவந்த மார்க்கண்டேயனுக்கு, ‘நீ உடனே ஆக்கூர் சென்று அங்கு அருளும் தான்தோன்றீஸ்வரரிடம் சரணடைந்து விடு. நீ ஈசனைச் சென்றடையும் வரை, வழியெங்கும் உனக்குப் பாதுகாப்பு இருக்கும் கவலைப்படாதே’ என்று அம்பாள் சொல்கிறாள். மார்க்கண்டேயனுக்கு, இந்தச் செய்தி பெரும் ஆறுதலாக இருந்தது.
‘‘கிழக்கு வாசலில் யமதர்மன் நிற்கிறாரே அம்மா! நான் என்ன செய்வது? எப்படிச் செல்வது?’’ என்று அவன் கேட்க, ‘‘நீ வடக்கு வாசல் வழியாகச் செல்வாயாக என்று உத்தரவிட்டாள் அபயாம்பாள்’’ என்றார் பாலாமணி குருக்கள்.
அதன்படியே அங்கிருந்து வெளியேறி ஆக்கூர் சென்றான் மார்க்கண்டேயன். வழியில் காளஹஸ்தினாபுரம், மாத்தூர் தலங்களிலும் சிவானுக்ரஹத்தால் காலதேவனிடம் இருந்து தப்பித்தான் மார்க்கண்டேயன்.
காளஹஸ்தினாபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோயில்
இவ்வூரில் சிவனார் அருள்புரிந்த அற்புதத்தை நிகழ்ந்த அற்புதச் சம்பவங்களை மாத்தூர் மகாலிங்க குருக்கள் விவரித்தார்:
‘‘காளை கத்திய புரம்தான், தற்போது காளஹஸ்தினாபுரம் என்று அழைக்கப்படுகிறது. மார்க்கண்டேயனை யமதர்மன் விரட்டிவரும் பாதையின் குறுக்கே, ஆயிரக்கணக்கான காளை மாடுகளை அனுப்பிவைத்தார் ஈசன். இதனால், காலதேவனின் வேகம் தடைப்பட்டது. அதற்குள் மார்க்கண்டேயன் மாத்தூரைத் தாண்டிச் சென்றுவிட்டான்’’ - இவ்வூருக்கு அடுத்தபடியாக மாத்தூரை அடைந்தான் மார்க்கண்டேயன்.
மாத்தூர் ஸ்ரீசத்யவாசகர் கோயில்
‘சத்யவாசகர் பெயரே விசேஷமாக உள்ளதே’ என்ற கேள்வியோடு இக்கோயிலின் மகாலிங்க குருக்களைச் சந்தித்தோம். அவர் கூறிய விவரம் நம்மைச் சிலிர்க்க வைத்தது.
“மார்க்கண்டேயனுக்கு ‘சத்ய வாசகம்’ கூறி அனுப்பிய ஸ்ரீ சத்ய வாசகர், ‘இந்தப் பக்கம் வந்த சிறுவன் எவ்வழி சென்றான்?’ என்று கேட்ட யமனுக்கு, வழியை மாற்றிச் சொன்னார். அதனால், இவ்வூருக்கு மாற்று ஊர் என்று பெயர் ஏற்பட்டு, பின்னர் அதுவே தற்போது ‘மாத்தூர்’ என்றாகி விட்டது’’ என்று புன்னகைத்தார் மகாலிங்க குருக்கள். அடுத்ததாக மார்க்கண்டேயனின் வழியில் ஆக்கூருக்குப் புறப்பட்டோம்.
மார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்!
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில்
ஆக்கூர், தான்தோன்றீஸ்வரர் கோயில் குருக்களான வைத்தியநாத குருக்கள், தான்தோன்றீஸ்வரர் காலனை சம்ஹாரம் செய்த நிகழ்வை விவரித்தார்.
‘‘இக்கோயிலுக்கு விரைந்து வந்த மார்க்கண்டேயன் தல விருட்ச மான கொன்றை மலரைப் பறித்துச் சமர்ப்பித்து, ‘இறைவா! என்னை யமனிடமிருந்து காப்பாற்று’ என்ற விண்ணதிர அபயக்குரல் எழுப்பினான். உடன், லிங்க மூர்த்தத்தின் பாணம் பிளந்து கொன்றைப்பூவின் உருவம்கொள்ள, அதேநேரத்தில் யமன் மார்க்கண்டேயனை நோக்கிப் பாசக்கயிற்றை வீசினான். அந்தக் கயிறு, மார்க்கண்டேயன்மீது மட்டுமின்றி சிவனாரின்மீதும் சேர்ந்து விழுந்தது. இதனால் கடும்கோபம் கொண்ட ஈசன், காலனைக் காலால் உதைத்து வைத்தார். இன்றைக்கும் இக்கோயிலில் லிங்க பாணம் பிளந்த நிலையில் இருப்பதைக் காணலாம். இதற்குச் சான்றாகத் திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில், ‘காலனைக் காலால் கடந்தார் போலும்’ என்றும், திருஞானசம்பந்தர் ‘கொங்குசேர் தன் கொன்றை மாலையினான் கூடற்றடரப் பொங்கினான்’ என்றும் பாடியுள்ளனர். யமனின் தலைவிழுந்த இடம் அருகிலுள்ள ‘தலைச்சங்காடு’ என்பது செவிவழிச் செய்தி’’ என்றார்.
மார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்!
திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
நிறைவாக திருக்கடவூர் சென்றோம். அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் கணேச குருக்கள் அற்புதமான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
‘‘யமனைச் சம்ஹாரம் செய்ததால் பூவுலகில் மரணங்கள் சம்பவிக்கவில்லை. உயிர்கள் பெருகின. பாரம் தாங்கமுடியாத பூமாதேவி சிவனாரைச் சரணடைந்தாள். அவளின் வேண்டுகோளை ஏற்று காலனை உயிர்ப்பித்தார் சிவனார். யமனை உயிர்ப்பித்து எழுப்பியதால் ‘எழுப்பிவிட்டான் சேரி’ என்று அழைக்கப்பட்ட ஊர், தற்போது ‘எருக்கட்டாஞ்சேரி’ என்ற பெயரில் (திருக்கடவூர் அருகிலுள்ளது) திகழ்கிறது.
மார்க்கண்டேயனுக்கு ‘என்றும் பதினாறு’ என சிரஞ்ஜீவி வரம் அளித்து, கால சம்ஹார மூர்த்தியாக சிவனார் அருளும் தலமாதலால், ஆயுளை நீடிக்கும் ஆயுஷ் ஹோமத் திருமணங்கள் இக்கோயிலில் தினந்தோறும் நடைபெறுகின்றன’’ என்றார் கணேச குருக்கள்.
மிக அற்புதமான பயணம் இனிதே நிறை வடைந்தது. திருக்கடவூர் அபிராமியம்மையையும் அமிர்தகடேஸ்வரரையும் தரிசிக்கச் செல்லும் அன்பர்கள், இந்தத் திருத்தலங்களையும் அவசியம் தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்விலும் யம பயம் நீங்கும்; ஆரோக்கியம் செழிக்கும்!
பரிமேலழகர் உரை
கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம், நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு. ( சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைகூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்; தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு. இது மார்க்கண்டேயன் தப்பினாற்போல வென்றது.
மு.வரதராசனார் உரை
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்.
சாலமன் பாப்பையா உரை
தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.
English Meaning - As I taught a kid - Rajesh
Death is an inevitable thing. Lord Yama carries out death execution for all living organisms. Yet, by penance/tapas to Lord Shiva, there are people like Marakendeyan who have crossed over death. So, by understanding the power of Tapas/penance, if one does penance towards his goal or moksha, then one can attain his goal / moksha. Sincerity, consistency, perseverance is the key.
Questions that I ask to the kid
What do you know about the power of Tapas?
No comments:
Post a Comment