நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்

thirukkural meaning விளக்கம் குறள் 1278 நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்
குறள் 1278
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
நெருநற்றுச் - நேற்று.

சென்றார் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

காதலர் - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.;

யாமும் - யாம் - தன்மைப்பன்மைப்பெயர்

எழு - eẕu   s. pillar, post, கம்பம்; 2. a kind of weapon; 3. see ஏழு.
ஏழு - ஓர்எண், seven  
எழு - eẕu   II. v. i. get up, rise, எழும்பு; 2. appear, originate, தோன்று; 3. awake, துயிலெழு; 4. spread as fame or rumour பரவு; v. t. commence, தொடங்கு.

நாளேம் - நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின் ஈற்றடியிறுதியில் வரும் ஒரசைச் சீர் வாய்பாடு

மேனி - நிறம்; வடிவம்; உடல்; அழகு; நன்னிலைமை; நிலத்தின்சராசரிவிளைச்சல்; காண்க:குப்பைமேனி

பசந்து - - pacantu   n. U. pasand. 1.Elegance; beauty; attractiveness; fineness;நேர்த்தி. பசந்தெனவே சென்று (கவிகுஞ். 2). 2.A superior kind of Mango fruit; உயர்ந்த மாம்பழம் உன்னிடத்தில் என்ன பசந்திருக்கிறது.

பசத்தல் - பசுமையாதல்; காமத்தால்மேனிபசலைநிறமாதல்; ஒளிமங்குதல்; மங்கிப்போதல்; பொன்னிறங்கொள்ளுதல்.

முழுப்பொருள்
நெற்றுத் தான் என் தலைவர் என்னை பிரிந்துச் சென்றார். ஆனால் என் மேனி மீது இந்த பசலைநோய் ஏழு நாட்களாய் இருப்பதுப்போன்று தோற்றம் அளிக்கிறது என்று தலைவி கூறுகிறாள். அதாவது ஒருநாள் பிரிவு ஏழு நாட்கள் போன்று பெரிதாக தோன்றுகிறதாம். அது தலைவன் பிரிந்து சென்றதால் அவள் வருத்தத்தில் இருப்பதை ஊராருக்கு அறிவுணர்த்தும் குறிப்பு. அல்லது, தலைவர் பிரியப்போகிறார் என்பதை முன்னமே கூடி இருக்கும்பொழுது அவள் உள்ளம் உய்த்தறிந்து பசலையை நோயை இவள் மேல் படரவிட்டிருக்க வேண்டும். அது அவள் உள்ளம் அவளுக்கு அறிவுணர்த்த கொடுக்கபட்ட குறிப்பு.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

”கூற்றம் குதித்துய்ந்தார்” (நாலடி 6)
“கூற்றம் குதித்துய்ந் தறிவாரோ இல்” (பழமொழி 183)
“கூழைமை பயின்ற கூற்ற வரசனைக் குதிக்கும் சூழ்ச்சி” (சூளா.துறவு 18)
“கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே” (திருமந் 172)

“சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
மூவாதபன் முனிவர்தொழும் முதுகுன் றடைவோமே” (சம்பந்தர்.முதுகுன்றம் 6)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) எம் காதலர் சென்றார் நெருநற்று - எம்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனி பசந்து எழுநாளேம் - அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம். ('நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழுநாளுண்டாகலின்,அன்றே மேனி பசந்தது என்பாள். 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.).

மணக்குடவர் உரை
எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம். இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.

சாலமன் பாப்பையா உரை
என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain