Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

 

குறள் 750
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்
[பொருட்பால், அரணியல், அரண்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எனை - என்ன; எவ்வளவு; எல்லாம்.

மாட்சித்து - மாட்சி - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு

ஆகியக் -  பண்புருபு
ஆகிய - ஆக்கம் ; உருவாகிய, ākiya   rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு  

கண்ணும் -  கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

கண்ணும் -  கண்ணு-தல் - kaṇṇu-   5 v. tr. 1. To purpose, think, consider; கருதுதல் கண்ணியதுணர்தலும் (மணி. 2, 25). 2. To be attached to,fastened to; பொருந்துதல் புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17).  
கண்ணு-தல்  v. tr. கண்.To see; பார்த்தல். (நாமதீப.)

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

மாட்சி - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு.

இல்லார் - இல்லாதவர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இல்லது - பிரகிருதி; இல்லாதது; கிடைக்காதது; இல்பொருள் மனையிலுள்ளது; மனைவியினுடையது.

அரண்பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்.

முழுப்பொருள் 
எவ்வளவு பெரிய பெருமைகளையும் மாட்சிமைகளையும் கொண்ட கோட்டை / அரண் ஆக இருந்தாலும், தந்திரத்துடன் போர் செய்து பகைவரை வெல்லக்கூடிய திறன் உடைய விரர்கள் இல்லை என்றால் அந்த அரணால் என்ன பயன்? அது வெறும் அலங்காரமே.

குறள் 407 நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று” என்ற குறளுடன் ஒப்பிட்டு பார்த்தால், திறன் இல்லாத விரர்களை கொண்ட கோட்டை ஒரு மண் பொம்மை போன்று வெறும் அலங்காரத்திற்கே பயன்படும். வேறு எதற்கு பயன்படாது. அது ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றாது.

லும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அரண் - அரண்; எனை மாட்சித்து ஆகியக்கண்ணும் - மேற்சொல்லப்பட்ட மாட்சியெல்லாம் உடைத்தாயவிடத்தும்; வினை மாட்சி இல்லார்கண் இல்லது - வினை செய்தற்கண் மாட்சி இல்லாதார் மாட்டு அவையிலதாம். (வாளா இருத்தலும், அளவறியாது செய்தலும், ஏலாதது செய்தலும் எல்லாம் அடங்க, 'வினைமாட்சியில்லார' என்றும், ஏற்ற வினையை அளவறிந்து செய்து காவாக்கால் அம்மாட்சிகளால் பயனின்றி அழியுமென்பார், 'அவையுடைத்தன்று' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் காப்பாரை இன்றியமையாதென்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சொல்லப்பட்ட எல்லா மாட்சிமையும் உடைத்தாயினும் வினையின்கண் மாட்சிமை இல்லாதார்மாட்டு அரணாற் பயனில்லை. இது வினைவல்லாரும் வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை.

சாலமன் பாப்பையா உரை
எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
However formidable it maybe, a fortress is futile/ineffective
for those not formidable in their deeds.

A fort or military defense might have any amount of fame such as numbers, cost, latest technologies etc. However, if the army men don't have the skills and acumen to strategically fight the opponents/enemies then what is the point of such a fort. A futile fort is just a decoration. 

One can recall that, In another kural 407, A person who has understood the concept and has gained knowledge can use the knowledge for something. A person who has a diploma but hasn't learnt it well or forgotten what they learnt is similar to a clay doll and his or her diploma is like doll in a showcase.

Effective Skills in action/execution matters the most and is more important that all the degrees, certifications etc. It doesn't undermine the need of optimal amount of team, technologies, etc because tools are of course necessary. 


Questions that I ask to the kid
Is a formidable fort sufficient? Why or Why not? (Follow up : That means skills in action/execution alone sufficient? All those tools etc. not required?)  Do you recall any other kural that is similar to this on a different context?

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

 

குறள் 749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்
[பொருட்பால், அரணியல், அரண்]

பொருள்
முனை - நுனி; பகை; போர்; போர்க்களம்; பகைப்புலம்; வெறுப்பு; தவம்; துணிவு; திரள்; முன்; முகம்; தலைமை; கடலுள்செல்லும்நீண்டுகூரியதரைப்பாகம்.

முகத்து - முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

மாற்றலர் - பகைவர்

சாய்தல் - மெலிதல்; கவிழ்தல்; வளைதல்; திரண்டுசெல்லுதல்; நடுநிலைமைமாறுதல்; சார்தல்; நடந்தேறுதல்; ஒதுங்குதல்; கோள்முதலியவைசாய்தல்; படுத்தல்; தோற்றோடுதல்.

சாய அழிய, மடிய

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முகத்து - முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

முகத்தல் - மொள்ளுதல்; அளத்தல்; தாங்கியெடுத்தல்; விரும்புதல்; நிரம்பப்பெறுதல்; மணம்பார்த்தல்; காண்க:முகத்தலளவு(வை).

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

வினைமுகத்து – தனது வடிவமைப்பிலும், உருவாக்கத்திலும் (உறுதிபெற்று)

வீறு - தனிப்பட்டசிறப்பு; வெற்றி; வேறொன்றற்கில்லாஅழகு; பொலிவு; பெருமை; மிகுதி; நல்வினை; மருந்துமுதலியவற்றின்ஆற்றல்; செருக்கு; வெறுப்பு; ஒளி; வேறு; தனிமை; அடி.

எய்தி - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

மாண்டது  - மகிமைப்பட்டது
மாண்பு, v. noun. Honor, dignity (நீதி); excellence (El. 17. 152); respectability, virtue (El. 1886. 1933); மாட்சிமை. 2. Beauty, அழகு.

அரண்- பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

முழுப்பொருள் 
போர் தொடங்கிய உடன் பகைவர் அழியும் வண்ணம் வீரர்களையும் ஆயுதங்களையும் படைகளையும் கொண்டுப் போர் செய்ய தந்திரம் கொள்ளுதலும் மன உறுதிக்கொண்டு போர் செய்து வீரமரணம் எய்த தயாராக இருக்கும் வீரர்களை உடையதே அரணாகும். கோட்டை அரணின் வலிமை பகைவரை உறுதி குலைய வைக்கும் பெருமையுடையதாக இருக்க வேண்டுமென்பதை அடிக்கோடிடும் குறளிது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறு எய்தி - போர் தொடங்கின அளவிலே பகைவர் கெடும் வண்ணம் அகத்தோர் செய்யும் வினை வேறுபாடுகளான் வீறு பெற்று; மாண்டது அரண் - மற்றும் வேண்டும் மாட்சியையுடையதே அரணாவது. (தொடக்கத்திற் கெட்டார் பின்னுங் கூடிப்பொருதல் கூடாமையின், 'முனைமுகத்துச் சாய' என்றார். வினை வேறுபாடுகளாவன: பகைவர் தொடங்கிய போரினை அறிந்து எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல், என்றிவை முதலாய வினைகளுள், அதனைச் சாய்ப்பன செய்தல். 'மற்றும் வேண்டும் மாட்சி' யென்றது, புறத்தோர் அறியாமற் புகுதல் போதல் செய்தற்குக் கண்ட சுருங்கை வழி முதலாயின உடைமை.).

மணக்குடவர் உரை
முந்துற்ற முகத்தினையுடைய பகைவர் கெடும்படியாக, வினை செய்யும் இடத்து வெற்றியெய்தி மாட்சிமைப்பட்டது அரணாவது. அஃதாவது அட்டாலகமும் மதிற்பொறியும் முதலாயின மதிற்றலையில் அமைத்தல்.

மு.வரதராசனார் உரை
போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்

 

குறள் 748
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
[பொருட்பால், அரணியல், அரண்]

பொருள்
முற்று - முற்றுதல் - முதிர்தல்; முழுவளர்ச்சிபெறுதல்; முதுமையாதல்; பெருகுதல்; வைரங்கொள்ளுதல்; தங்குதல்; நிறைவேறுதல்; முடிதல்; இறத்தல்; போலுதல்; செய்துமுடித்தல்; அழித்தல்; சூழ்தல்; வளைத்தல்; அடைதல்; மேற்கொள்ளுதல்; தேர்தல்.

ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

முற்றுதல் - முதிர்தல்; முழுவளர்ச்சிபெறுதல்; முதுமையாதல்; பெருகுதல்; வைரங்கொள்ளுதல்; தங்குதல்; நிறைவேறுதல்; முடிதல்; இறத்தல்; போலுதல்; செய்துமுடித்தல்; அழித்தல்; சூழ்தல்; வளைத்தல்; அடைதல்; மேற்கொள்ளுதல்; தேர்தல்.

முற்றியார் - முற்றுகைசெய்தவர், முற்று-. [T.muttadīnstuvāru.] Besiegers; முற்றுமை செய்தவர். முற்றியார் முற்றுவிட (பு. வெ. 6, 25).

முற்றுகை - கோட்டைமுதலியவற்றைவளைக்கை; சூழுகை; நிறைவேற்றுகை; நெருக்கடி
முற்றியவரையும் - -  முற்றுகையிட்டு வெல்ல நினைக்கும் பகைவரையும்

பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை

ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

பற்றியெரி-தல் - paṟṟi-y-eri-   v. intr. id.+. 1. To catch fire; தீமூண்டெரிதல். 2. To getenraged; to become angry; சினம் மூளுதல்.

பற்றியார் - அரணுக்குள் வசிக்கும் வீரர்கள்

வெல்வது - வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.

அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

முழுப்பொருள் 
ஒரு நாட்டை பகைவர்களிடம் இருந்து முதலில் காப்பாற்றுவது அந்நாட்டின் அரண் ஆகும். ஏனெனில் அதுவே நாட்டின் எல்லைகளில் இருக்கிறது. அரண் வலிமையாக இருப்பது இன்றியமையாததாகும். ஆனால் புறச்சுவரோ நீர் நிலைகள் மட்டும் அரணாகிவிடுமா? ஆகாது.  ஏனெனில் அவற்றையும் பகைவர்களால் தகர்த்தெரிந்து வெல்ல முடியும்.

ஆதலால், நாட்டை காப்பாற்ற வேண்டும், அரசனை காப்பாற்ற வேண்டும், மக்களை காப்பற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் (மன உறுதியுடன்) அரணில் இருந்து பாதுக்காக்க கூடியுள்ள வீரர்கள், படைமிகுதியால் அரனை சூழ்ந்து கொண்ட பகைவரையும், இடத்தை/அரணை விட்டுவிடாமல் காக்கும் கடமையாற்றி அங்கு நின்று பகைவரை வெல்வதே அரண். அவ்வீரர்களும் அந்நாட்டிற்கு அரண். மேலும் கடமையாற்றும் வீரர்கள் வெல்லுதற்கு ஏற்ப உள்ளதே நல்ல அரணாகும். வீரர்களுக்கு தேவையான ஆயுதங்களையும் கொண்டுள்ளதும் அரணிற்கு அவசியமாகும்.






மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முற்று ஆற்றி முற்றியவரையும் - தானைப் பெருமையால் சூழ்தல் வல்லராய் வந்து சூழ்ந்த புறத்தோரையும்; பற்றி யார் பற்று ஆற்றி வெல்வது அரண் - தன்னைப்பற்றிய அகத்தோர் தாம் பற்றிய இடம் விடாதே நின்று பொருது வெல்வதே அரணாவது. (உம்மை, சிறப்பும்மை. பற்றின் கண்ணே ஆற்றி என விரியும். பற்று - ஆகுபெயர். 'வெல்வது' என, உடையார் தொழில் அரண்மேல் நின்றது. பெரும்படையானைச் சிறுபடையான் பொறுத்து நிற்கும் துணையேயன்றி, வெல்லும் இயல்பினது என்பதாம். இதற்குப் பிறிது உரைப்பாரும் உளர். இவை ஏழு பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சூழவல்லாரைச் சூழ்ந்து நலிந்தவரையும் தன்னகத்து நின்று காக்கவல்லவராய்க் காப்பவர் வெல்வது அரணாவது. பற்றாற்றுதல் -தாம் பற்றின இடம் விடாது வெல்லுதல்.

மு.வரதராசனார் உரை
முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண்.

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

 

குறள் 740
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
[பொருட்பால், அரணியல், நாடு] 

பொருள் 
ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை

அமைவு - அமைதி; ஒப்பு; amaivu   n. id. 1. Beingacceptable, suitable, fitting; ஏற்றதாகை; அமை-. Modesty;respectful behaviour; அடக்கம்.

எய்தியக் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

கண்ணும் -  கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

கண்ணும் -  கண்ணு-தல் - kaṇṇu-   5 v. tr. 1. To purpose, think, consider; கருதுதல் கண்ணியதுணர்தலும் (மணி. 2, 25). 2. To be attached to,fastened to; பொருந்துதல் புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17).  

கண்ணு-தல்  v. tr. கண்.To see; பார்த்தல். (நாமதீப.)

பயம் - அச்சம்; அச்சச்சுவை; வாவி; அமுதம்; பால்; நீர்; பலன்; வினைப்பயன்; பழம்; இன்பம்; அரசிறை; தன்மை

இன்றே - இல்லை 

வேந்து - அரசபதவி; ஆட்சி; மன்னன்; இந்திரன்.

அமைவு -  அமைதி; ஒப்பு; amaivu   n. id. 1. Beingacceptable, suitable, fitting; ஏற்றதாகை; அமை-. Modesty;respectful behaviour; அடக்கம்.

அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

இல்லாத - இல்லை

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

முழுப்பொருள் 
ஒரு நாட்டிற்கு எல்லா இயற்கை வளங்களும் (ஆறுகள், மலைகள், குளங்கள், ஏரிகள், விளை நிலங்கள், காடுகள்)  உழைக்கும் மக்களும் அமைந்திருந்தாலும் நன்றாக உற்பத்தியை உருவாக்கிக் குன்றாத செல்வத்தைப் பெருக்கினாலும் குற்றங்கள் இன்றி பசி இன்றி பிணி இன்றி உட்பகை இன்றி இருந்தாலும் ஒரு நல்ல வேந்தன் இல்லாத நாடு மேற்சொன்ன எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் பயனில்லை. ஏனெனில் ஒரு வேந்தனே ஒரு நாட்டை வழிநடத்துபவன். ஒரு வேந்தே நாட்டை முன்னேற்றுபவன். ஒரு வேந்தே ஒரு நாட்டிற்கு ஒளிவிளக்காய் நம்பிக்கையாய் விளங்குபவன். ஒரு வேந்தன் சரியாக அமையாவிட்டால் மக்கள் நம்பிக்கையின்றி மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு அவதிப்படுவதுப்போல் நிம்மதியின்றி அவதிப்படுவர். 

“வேந்து அமைவு” என்பதால் அரசின் மேல் மக்களுக்கு உள்ள அன்பும், அரசுக்கு மக்கள்மேல் உள்ள பரிவும், கனிவும் உணர்த்தப்படுகிறது.

இது நாட்டிற்கு மட்டும் அல்ல ஒரு வீட்டிற்கு பொருந்தும். ஒரு வீட்டில் ஒரு தலைவன் நன்றாக அமையாவிட்டால் அவ்வீட்டில் எல்லா செல்வங்களும் இருந்தும் என்ன பயன்?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வேந்து அமைவு இல்லாத நாடு - வேந்தனோடு மேவுதல் இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று. (வேந்து அமைவு எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும்,அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவைஇல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவைஇரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மேற்கூறியவற்றால் எல்லாம் அமைந்ததாயினும் பயனில்லையாம்; வேந்தனது அமைதியை உடைத்தல்லாத நாடு. இதுநாட்டுக்கு அரசனும் பண்புடையனாகல் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை
மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை.

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

 

குறள் 739
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு
[பொருட்பால், அரணியல், நாடு] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.


நாடா - நாடாமல் - தேடிச்செல்லாமல் வரும்

வளம் - செல்வம்; செழுமை; மிகுதி; பயன்; வருவாய்; நன்மை; மாட்சிமை; தகுதி; அழகு; பதவி; புனல்; உணவு; வாணிகப்பண்டம்; வெற்றி; வழி; பக்கம்.

வளத்தன -  எல்லா வளத்தையும் தன்னகத்தே கொண்டதாம்

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

அல்ல - இல்லை

நாட நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

வளம் - செல்வம்; செழுமை; மிகுதி; பயன்; வருவாய்; நன்மை; மாட்சிமை; தகுதி; அழகு; பதவி; புனல்; உணவு; வாணிகப்பண்டம்; வெற்றி; வழி; பக்கம்.

தரும் - தருதல் - கொடுக்கும் 

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

முழுப்பொருள் 
பிற நாடுகளை நாடாமல் தன்னகத்தே உற்பத்தியின் மூலமும் வணிகத்தின் மூலமும் வளங்களை பெருக்கி மக்களின் தேவைகளை பூர்த்தி(நிறைவு) செய்து சீரும் சிறப்புமாய் இருப்பதே நாட்டுக்கு சிறப்பாகும். அதுவே நாடாகும். அதேப்போல் தன் நாட்டை ஆள மக்களின் தேவைகளை பிற நாடுகளின் உதவியையும் செல்வத்தையும் வளங்களையும் நாடி நம்பி இருப்பது நாடாகாது. அது அந்நாட்டிற்கு சிறப்பாகாது. 

இது நாட்டிற்கு மட்டும் அல்ல. வீட்டிற்கும் பொருந்தும். ஒரு வீட்டின் (வீட்டு மக்களின்) தேவைக்கு வருமானம் ஈட்டு வாழ்வதே சிறந்ததாகும். வீட்டின் தேவைக்கு மற்றவர்களையும் கடன்களையும் நம்பி இருப்பது வீடாகாது. வருமானத்திற்கு மேல் செலவு செய்தால் அது வீட்டில் சமநிலையை விரைவில் கெடுத்து அழிவை கொடுக்கும். துன்பம் ஏற்படும்.

மேலோட்டமாக பார்த்தால் ஒரு நாடு பிற நாடுகளை சார்ந்து இருக்கக்கூடாது என்று மட்டும் தான் தோன்றும். ஆனால் பல நூற்றாண்டுகள் முன்பே தன் தேவைகளுக்காக பிற நாடுகளை நாடாத தன்னிறைவு நாடே நாடு என்னும் கோட்பாடே சிறந்த கோட்பாடு என்று (வள்ளுவராலும், தமிழர்களாலும்) நெறியாய் வகுக்கபட்டுள்ளது. இன்று வணிகத்திற்காக, வேலைவாய்ப்பை பெருக்கவதற்காக, நாட்டின் செல்வத்தை பெருக்குவதற்காக பல நாடுகளை நாடி பல நாடுகள் உள்ளன. இதற்கு உலகமயமாக்கல் (Globalization) என்று வசதியாக பெயர் வைத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் இதற்கெல்லாம் இரையாவது இயற்கை வளங்களே. இயற்கை வளங்களையை உலகிற்கே பங்கிட்டு தந்துக்கொண்டு இருப்பதால் எல்லா வளங்களும் குன்றுகிறது. மேலும் உலகமே வெட்பமயமாக்கலால் தவிக்கிறது. பல உயிரினங்கள் வாழ்விடம் உணவு முதலியவை குறைந்து அழிகின்றன. மேலும் வேலைவாய்ப்புகளுக்காக ஒரு நாடு மற்ற நாடுகளை சார்ந்து இருக்கின்றன. ஒருவிதத்தில் அவர்கள் சுயமாக ஆளமுடியாது. மற்ற நாடுகளை மகிழ்வித்து அவர்கள் மனம் நோகாமல் பாசாங்கு செய்தே காலம் தள்ள வேண்டும். மேலும் இதற்கெல்லாம் அடி நாதம் பேராசை. தமிழ் நாட்டில் வாழும் ஒருவர் ஏன் ராஜஸ்தான் சலவை கல்லையோ அல்லது இத்தாலியன் டைல்ஸையோ தன் வீட்டு தரையிற்கு பயன்படுத்த வேண்டும்? ஆடம்பரம் தானே? 

மஹாத்மா காந்தி இந்த தொழிற்சாலை புரட்சியின் பின்விளைவுகளை நன்கு உணர்ந்தே சிலவற்றை கூறியுள்ளார். அவை
உலகம் முழுவதிலும் இயற்கை வளங்கள் பாதிக்குமேல் நம் சுயநலத்தால் அழிக்கப்பட்டுவிட்டன. சுரங்கம் அமைத்தல், தொழிற்சாலை அமைத்தல். கட்டடங்கள் கட்டுதல் என, பல காரணங்களுக்காக வளங்களை அழித்து வருகிறோம். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, இயற்கை வளங்களை அழிப்பதுதான் தீர்வு என, பலரும் நினைக்கிறோம்.
இந்தியாவில் பிரிட்டிஷார் பெருவாரியான வளங்களைச் சுரண்டிக் கொண்டிருந்தனர். இதுபற்றிக் காந்தி மிகவும் வேதனைப்பட்டார். இதுபற்றிக் காந்தியிடம் கேட்டபோது, “பூமியின் பாதியளவு இயற்கை வளங்களை அழித்து, பிரிட்டன் நாடு செழிப்பாக மாறிவருகிறது. இந்தியா போல் இன்னும் எத்தனை நாடுகள் தேவைப்படும்?” என்றார்.
காந்தி, சமூக மாற்றத்தை விரும்பியவர் தான். ஆனால், அது மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
தொழிற்புரட்சிக்கு முன்னோடியாக இருந்த ஐரோப்பிய நாடுகளே, இன்று உண்மையைப் புரிந்துகொண்டுவிட்டன. இயற்கையை அழிக்கக்கூடாது என்று கருதுகின்றன. வாழ்க்கையை வேறு மாதிரி பார்க்கப் பழகி வருகின்றன.
அதாவது, தேவையான பொருட்களை மட்டுமே வாங்குவது, விவசாயம் செய்வது, சுற்றுச்சூழலுக்குப் பாதகம் வராத வேலைகள் செய்வது என, மாற்றுப் பாதைகளைத் தேர்வு செய்கின்றனர்.
இதையே தான் காந்தியும் சொல்லி இருக்கிறார். “மக்கள் மீண்டும் அமைதியைக் கொடுக்கும் வாழ்க்கைக்குத் திரும்பும் நிலை வரும்”, "இயற்கையைவிட உத்வேகம் கொடுக்கும் விஷயங்கள் பூமியில் இல்லை. என்னுடைய மனத்தை மென்மையாக்க, இயற்கை ஒருபோதும் தவறியதில்லை” என்றார்.
அவர் சொன்னது இன்று நிஜமாகிறது. இந்தியாவில், பலரும் இயற்கை விவசாயம், தேவையான பொருட்களோடு மட்டுமே வாழ்வது என, காந்திய வழியில் வாழ்கின்றனர்.

"இயற்கையால் மனிதர்களின் தேவையினை மட்டுமே நிறைவு செய்ய இயலும்,பேராசையினை அல்ல" என்றார் காந்தி.



காந்தி: மகிழ்ச்சி பொருளியர்!
காந்தியின் கொள்கைகளைப் பற்றிப் பேசும்போது பலரும், “காந்தியின் மற்ற கொள்கைகளைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவருடைய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது” என்று கூறுவது ஒரு க்ளிஷே. ஏதோ எல்லோருக்கும் கார் கிடைக்கப் பொருளாதார வல்லுநர்கள் திட்டமிடுவதுபோலவும், காந்திதான் அதைத் தடுத்துவிட்டார் என்பதுபோலவும் பேசுவார்கள். நம்மிடம் இருக்கும் இயற்கை வளங்களைக் கொண்டு அனைவருக்கும் கார் கொடுப்பது சாத்தியமா என்று யாரும் யோசிப்பதில்லை.

இயற்கை வளங்கள்
அளவான இயற்கை வளங்களை வைத்துக்கொண்டு, அளவற்ற வளர்ச்சி என்று திட்டமிடுவது சாத்தியமில்லை என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். இதுதான் காந்தியப் பொருளாதாரம். இது எவ்வாறு நடைமுறைக்குச் சாத்தியமில்லாதுபோகும்?

காந்தியின் பொருளாதாரச் சிந்தனை என்பது மக்கள் சார்ந்ததே தவிர, இயந்திரத்தையோ பெரும் தொழில்நுட்பத்தையோ சார்ந்தது அல்ல. காந்தி ‘அதிகமானோரால் உற்பத்தி’ என்னும் கருத்தை முன்வைத்தார். 

அதிகமானோர் உற்பத்தியில் ஈடுபடும்போது, உற்பத்தி பெருகுவதோடு, மக்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும். உற்பத்திசெய்யும் பொருட்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கையும் கூடும்.

உயரிய தொழில்நுட்பம்
உயரிய தொழில்நுட்பம் மிகவும் தேவையான சில துறைகளுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்ள காந்தி ஆதரவு தெரிவித்தார். ஆனால், அதுபோன்ற நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமேயொழிய தனியாரிடம் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினார் காந்தி. 

உற்பத்தியும் விநியோகமும் உற்பத்திசெய்யும் பகுதியிலேயே அதற்கான சந்தையை ஏற்படுத்துவதன் மூலம், போக்குவரத்துச் செலவு, சந்தைப்படுத்தல் செலவு போன்றவற்றைக் குறைக்கலாம் என்றார் காந்தி. ஓர் உதாரணத்துக்கு, உருளைக்கிழங்கு சிப்ஸை எடுத்துக்கொள்ளலாம். 

அதனுடைய மையப்படுத்தப்பட்ட உற்பத்தித் தொழிற்சாலை ஏதோ ஒரு மாநிலத்தில் உள்ளது. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தயாரிப்புகள்தான் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கிடைக்கின்றன. 52 கிராம் ரூ.20. அதாவது, 1 கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ் சுமார் ரூ.400. ஆனால், நம்முடைய கடைவீதியிலேயே தயாரிக்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ் கிலோ ரூ.250-க்குக் கிடைக்கிறது. விளம்பர மோகத்தால் 52 கிராம் சிப்ஸை ரூ.20 கொடுத்து வாங்குவதுதான் பொருளாதார முன்னேற்றம் என்று எண்ணுகிறோம்.

காந்தியப் பொருளாதாரம்
ஆனால், காந்தியப் பொருளாதாரத்திலோ அதிகாரத்தையும் உற்பத்தியையும் மையப்படுத்தாது பரவலாக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இன்றைய வன்முறையான போக்குக்கும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஆடம்பரமான வாழ்க்கை, வறுமை, பயங்கரவாதம் என்ற பல நோய்களுக்கும் அடிப்படையான காரணம், அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிவதுதான். அது உடைய வேண்டும் என்றால் பொருளாதாரத்திலும் உடைய வேண்டும்.

நிலைத்த வளர்ச்சியைப் பற்றியும், அதேசமயம் வளமான வாழ்வையும் அடைய ஏற்ற தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்து, சுற்றுச்சூழலைப் பாதிக்காத முன்னேற்றத்தைக் காண வழிவகை செய்வதுதான் காந்தியப் பொருளாதாரம். 

சாதாரண மனிதர்களுக்காக இயற்கையோடு இயைந்த, ஆரோக்கியமான வாழ்வுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதுதான் காந்தியப் பொருளாதாரம். நீங்கள் மகிழ்ச்சியுடன் பொருளாதாரத்தை இணைப்பது என்றால், காந்தியுடன்தான் பொருளாதாரத்தை இணைக்க வேண்டும்.

லாரி பேக்கரும் காந்தியும் (Laurie Baker and Gandhi)
லாரி பேக்கர் (முழுகட்டுரையை வாசிக்க எழுத்தாளர் ஜெயமோகனின் சுட்டியை இங்கு தட்டவும்)





1944ல் பர்மாவில் இருந்து லண்டனுக்குச் செல்ல கப்பலுக்காக கல்கத்தாவில் காத்திருக்கும்போது அவர் அங்கிருந்த குவாக்கர்களின் சந்திப்புக்குச் சென்றார். அப்போதுதான் அவருக்கு காந்தியைப்பற்றிய தகவல் கிடைத்தது. காந்தி அப்போது கல்கத்தாவில் இருந்தார்.சிரித்தபடி பேக்கர் சொன்னார் ”காந்தியின் காது விபரீதமாக இருக்கும் என்றார்கள். எனக்குச் சொன்ன நண்பர் ‘கெட்டில்பிடிக்காதுள்ள மனிதர்’ என்று சொல்லி கேலிச்சித்திரம் வரைவதற்கென்றே உருவாக்கப்பட்டவை அவை என்றார். அதுதான் என்னை அவரிடம் செல்லவைத்தது…”

பேக்கருக்கு கேலிச்சித்திரங்கள் ஒரு பொழுதுபோக்கு. அவை நூலாக வந்துள்ளன. கேலிச்சித்திரம் வரைவதற்காக அவர் காந்தியைப் பார்க்கச்சென்றார். காந்தியைச் சந்திக்கும்வரை அது ஒரு முக்கியமான சந்திப்பாக இருக்கும் என்ற ஐயமே அவருக்கு இருக்கவில்லை. ஒரு சிறிய அறையில் தன் செயலாளருடன் காந்தி இருந்தார். யார் யாரோ அவரைச் சந்தித்துப் பேசிச்சென்றார்கள். குவாக்கர் குழுவைச்சேர்ந்த ஒரு நண்பர் காந்தியின் செயலாளரிடம் பேக்கரை அறிமுகம் செய்தார். காந்தியைச் சந்திக்க பேக்கர் உள்ளே சென்றார்

”நான் கண்டது மிக விசித்திரமான ஒரு கலவையை” என்றார் பேக்கர் ”மேற்கையும் கிழக்கையும் அற்புதமாக கலந்ததுபோல. அவரது தோற்றம் ஒரு மேற்கத்தியனுக்கு அதிர்ச்சியையும் ஒவ்வாமையையும் அளிக்கக் கூடியது. சட்டை போடாமல் பஞ்சக்கச்ச வேட்டி கட்டி மெலிந்த வெற்று மார்பைக் காட்டி  அமர்ந்திருந்தார். சட்டென்று அவர் குளியலறையில் இருக்கிறார் என்றே தோன்றும். ஆனால் அவரது புன்னகையும், மென்மையான நாகரீகமான குரலும் அவரை ஒரு நவீனகாலகட்டக் கனவான் என்றே சொல்லின. உங்களுக்குத் தெரியுமா, நான் நேருவையும் படேலையும் கூட சந்தித்திருக்கிறேன். ஒரு மேலைநாட்டானுக்கு மிக நெருக்கமாக ஆகக்கூடிய நுண்ணிய பழக்கங்கள் கொண்டவர் காந்திதான்…”

பேக்கர் சிரித்துக்கொண்டே சொன்னார். ”நான் அவரிடம் அதிகம் பேசவில்லை. முதலில் அவரது தோற்றமே என்னை அவரிடம் முழுக்க ஈடுபடுத்திவிட்டது. இப்போது அதைப்பற்றி என்ன சொன்னாலும் கற்பனையாகவும் மிகையுணர்ச்சியாகவும் தோன்றும். ஆனால் ஒருவர் தன் கொள்கைகளை தன் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால் அவரது உடலே அவரது கொள்கை ஆக ஆகிவிடுகிறது. காந்தியின் உடல் அவர் சொல்லிவந்த எல்லாவற்றையும் எனக்கு உணர்த்தியது.”

பேக்கரிடம் காந்தி அவரது துறையைப் பற்றிக் கேட்டார். பேக்கர் அவர் எளிமையான வீடுகளை உருவாகக் விரும்புவதாகச் சொன்னார்.காந்தி சொன்ன இரு விஷயங்கள் பேக்கரை பின்னர் ஐம்பது வருடம் பின் தொடர்ந்து வந்தன. ஒன்று,  உணவு உடை வீடு ஆகிய மூன்றுமே மனிதனுக்கு எளிமையாகக் கிடைக்கவேண்டும். அவற்றுக்காக அவன் வாழ்நாள்முழுக்க போராடக்கூடாது. இரண்டு, நவீன வீடுகளின் மிகப்பெரிய சிக்கல் அவற்றில் பெரும்பகுதிச் செலவு போக்குவரத்துக்கு ஆகிறது என்பதே.

லண்டன் திரும்பிய பேக்கர் காந்தியின் வரிகளில் இருந்து மீண்டும் மீண்டும் முளைத்துக்கொண்டே இருந்தார். காந்தி சொன்னதன்படி ‘இந்தியாவின் கிராமங்களை தரிசிக்க’ அவர் கிளம்பி இந்தியா வந்தார். 

பேக்கர் வீடுகளைப் பற்றிய தன் சிந்தனைகளைச் சொன்னார். உலகமெங்குமே ஒரு நடுத்தர வற்கத்து மனிதனின் வாழ்க்கை சேமிப்பில் பெரும்பகுதியை வீடுகள் பிடுங்கிக் கொள்கின்றன. நாற்பது ஐம்பது வருடம் ஒருமனிதன் ஒரு வீட்டுக்காக உழைக்கிறான் என்பதே அதற்குப் பொருள். அதைவிட அபத்தமான ஏதும் இல்லை. ஏன் என்றால் அந்த வீட்டின் ஆயுட்காலம் அந்த அளவுக்கு நீளமானதல்ல. கடனைக் கட்டிமுடிக்க வீடு பழையதாகிவிடுகிறது. இடிக்க வேண்டியதுதான். புதிய நாகரீகத்தில் வீடு போல ஒரு மாபெரும் வீண் வேறு எதுவுமே இல்லை.

இதற்குக் காரணம் வீடுகட்டுவதில் உள்ள வணிகம். நம் வீடுகளின் பெரும்பகுதி தொழில்துறையால் உருவாக்கப்பட்ட பொருட்கள். தொழில்துறை அவற்றை நமக்கு தேவையானதாக ஆக்குகிறது. எளிய கடன் வசதிகள் மூலம் நம்மை அவற்றை வாங்கச்செய்கிறது. நமது வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் உண்மையில் நமக்குத் தேவைதானா என்பதையே நாம் அறிவதில்லை. தொழில்துறை உற்பத்தியாக வீடு இருக்கும்போது அதற்கு ஒரு பொதுத்தன்மை தேவையாகிறது. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒரே பொருட்கள். ஒரே வடிவமைப்பு.

இந்தக் காரணத்தால் வீட்டின் கட்டுமானப் பொருட்களின் விலையில் அறுபதுசதவீதம் வரை அந்தபொருட்களை கொண்டுவந்து சேர்க்கும் செலவாக இருக்கிறது. திருவனந்தபுரத்தில் ஒரு வீடு கட்ட ராஜஸ்தான் சலவைக்கல், மலேசிய மரம், பிகாரின் இரும்பு,  ஆந்திராவின் சிமெண்ட்,  தமிழ்நாட்டு மணல் என பொருட்கள் வருகின்றன. இந்தச்செலவைத்தான் நாம் வாழ்நாளெல்லாம் சுமக்கிறோம்!

‘ஒருபிராந்தியத்தில் கிடைக்கும் பொருட்களையும் திறமையையும் மட்டுமே பயன்படுத்தி அங்கே வீடுகளைக் கட்டுவது’ — ஒற்றை வரியில் இதுதான் லாரி பேக்கரின் கட்டுமானக் கொள்கை. கேரளம் உயர்தரமான களிமண் கிடைக்கும் இடம். நல்ல கிளிஞ்சல்சுண்ணாம்பும் கிடைக்கிறது. மரம் தேவைக்கு உள்ளது. இவையே தரமான கட்டுமானத்துக்குப் போதும். சிமெண்ட், இரும்பு ஆகியவை கேரளத்துக்கு வெளியே இருந்து வருகின்றன. அவற்றை கூடுமானவரை தவிர்க்கலாம்.

இதற்காக பேக்கர் உருவாக்கிய கட்டிட மாதிரிலென்பது சுவருக்குச் செங்கற்களை நடுவே கொஞ்சம் சிமிண்ட் சேர்த்த காரை [சுண்ணாம்பு மணல் கலவை] வைத்து கட்டி மேலே சிமிண்ட் பூச்சு இல்லாமல் அப்படியே விட்டுவிடுவதாகும். கூரைப்பரப்பை கொஞ்சமாக கம்பி வைத்து அவற்றின் மீது ஓடுகளை பரப்பி அவற்றுக்கு மேலே கொஞ்சம் சிமிண்ட் சேர்த்த காரை பூசி உருவாக்குவார்கள். செங்கல்லால் சாத்தியமான எல்லா இடங்களிலும் வளைவுகளை அமைத்தால் அவை கூரையின் எடையை அற்புதமாக தாங்கும். ஆகவே அதிகமான இரும்பின் உபயோகம் இல்லை.

மரபார்ந்த வீடுகளில் இருந்து உத்திகளைக் கற்றுக்கொள்வது பேக்கர் வீடுகளின் பாணி. உதாரணமாக கேரளம் அதிக மழையுள்ள பகுதி. ஆகவே கூரைகளை மிகச்சரிவாக அமைப்பது அங்குள்ள வழக்கம். பேக்கர் கூரைகளில் நிறைய கூம்புகளை பயன்படுத்தினார். வெக்கை கொண்ட கேரளச் சூழலுக்கு அதிக காற்று வரும்படி திறந்த பகுதிகள் அமைந்த வீடுகளை அவர் வடிவமைத்தார். பேக்கரின் கொள்கைப்படி வீட்டுக்கு பகலில் எந்தவிதமான  ஆற்றலும் தேவையாகக் கூடாது. காற்றும் ஒளியும் இயல்பாகவே இருக்க வேண்டும்.

பேக்கர் வீடுகளின் மிக முக்கியமான சிறப்பம்சம் அவை உட்கார்வதற்கான பலவகையான திண்ணைகளைக் கொண்டவை என்பதே. பேக்கரைப் பொறுத்தவரை இந்தியச் சூழலில் அமர்வதற்கு திண்ணைகளே மிகவும் ஏற்றவை.  குளிர்நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட சோ·பாக்கள் இங்கே மிக மிக வசதிக்குறைவானவை. சில்லென்ற திண்ணைகள் பல கோணங்களில் அமைந்த பேக்கர் வீடுகள் சட்டென்று பிரபலம் அடைந்தன.

இந்தியா சுதந்திரம்பெற்றபின் பேக்கர் கேரள அரசியல்வாதியான டாக்டர் பி.ஜெ.சாண்டியின் ஆதரவுடன் கேரளா வந்தார். 1948ல் சாண்டியின் சகோதரியான மருத்துவர் எலிஸபெத் ஜேக்கப்பை மணம் புரிந்துகொண்டார். அவர்கள் இருவரும் உத்தரபிரதேசத்தில் உள்ள பிதோராகர் என்ற ஊருக்குச் சென்று குடியேறினார்கள். பதினாறு  ஆண்டுகள் அங்கே வாழ்ந்த பேக்கர் அப்பகுதியில் தன் செலவுகுறைவான சுதேசி வீடுகளை பலவகையிலும் பரிசோதனை செய்து பார்த்தார். குறிப்பாக சிமிண்ட் கூரைப்பரப்பை [டெரஸ்] போடுவதற்கு இரும்புக்கம்பிகளுக்குப் பதில் மூங்கில்களை பயன்படுத்த முடியும் என்று அவர் கண்டுபிடித்தார்.

1966ல் பேக்கர் பீர்மேட்டுக்கு வந்து தங்கி அங்கே பழங்குடிகளுக்கான வீடுகளை வடிவமைத்தார். 1970ல் அவர் திருவனந்தபுரத்துக்கு குடியேறினார். பேக்கரின் வீடுகள் மேல்  மக்களுக்கு ஓர் ஐயம் இருந்துகொண்டே இருந்தது, அவை உறுதியானவைதானா என்று. அதைப்போக்கும் வகையில் பேக்கர் பெரிய கட்டிடங்களை உருவாக்க ஆரம்பித்தார். 1971ல் அவர் திருவனந்தபுரத்தில் அமைத்த வளர்ச்சி ஆய்வுகளுக்கான மையம் [  Central for Development Studies ] அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது.
திருவனந்தபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் கா·பி ஹவுஸ் பேக்கர் பாணி கட்டிடத்துக்குச் சிறந்த உதாரணமாகும்.

லாரி பேக்கரின் கட்டிடங்கள் சடென்று பலவகையிலும் புகழ்பெற்றன. ஒன்று அவை மாறுபட்ட காட்சியழகை உருவாக்கின. தேவன் போன்ற ஓவியக்கலைஞர்கள் அவரிடம் பயிற்சி பெற்றபின் உயர்தர விடுதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவநிலையங்கள் போன்றவை அவரது பாணியில் கட்டிடங்களை அமைக்க ஆரம்பித்தன. குறிப்பாக  மருத்துவர்கள் அவரது கட்டிடங்கள் நோயாளிகளுக்கு ஆறுதலானவையாக இருப்பதாக உணர்ந்தார்கள். லாரி பேக்கரின் கட்டிடங்கள்  மரங்கள் அடர்ந்த கேரளசூழலுடன் இணைந்து கண்ணுக்குத் தெரிபவை. ஆடம்பரம் இல்லாமல் அழகுடன் திகழ்பவை.

பேக்கர் கட்டிடக்கலையின் பல சிறப்பம்சங்களை சொல்லலாம். அவற்றில் ஒன்று கட்டிடங்களுக்காக தரையை சமப்படுத்தாமல் இருப்பது. தரை எப்படி இருக்கிறதோ அதற்கேற்ப கட்டிடத்தை வடிவமைத்துக்கொள்வது. பெரிய மரங்களை வெட்டாமல் அவற்றையும் தக்கவைத்துக்கொண்டு கட்டிடங்களை உருவாக்குவது. குளிரூட்டும் வசதிக்காக பேக்கர் உருவாக்கிய உத்தியும் புகழ்பெற்றது. வீட்டுக்குள் சிறிய குளம் ஒன்றை உருவாக்குவதுதான் அது. அதனருகே நீரில் தொட்டுக்கொண்டு சுட்டசெங்கல்லால் ஆன சுவர் இருக்கும். அது நீரை உறிஞ்சி குளிர்ந்து வெளிவிட்டு குளிரூட்டும் பணியைச் செய்யும்!

பேக்கருக்கு களிமண்- சுண்ணாம்பு- கருங்கல் மேல் அபாரமான பிரேமை இருந்தது. அவர் திரும்பத் திரும்ப அதைப்பற்றிப் பேசினார். அவை சுற்றுச்சூழலுக்கு சாதகமானவை. ஒருபோதும் அவை பூமியை மலினப்படுத்தும் குப்பை ஆக ஆவதில்லை. ஒரு வீட்டை இடிக்க நேர்ந்தால் அவற்றை நாம் திரும்ப பயன்படுத்திக் கொள்ளலாம். அவை நம் மண்ணில் இருந்து உருவாகின்றவை ஆதலால் நம் சூழலுடனும் நம் உடலுடனும் மிக மிக ஒத்துப்போகின்றவை. ஒருபோதும் தீங்கு செய்யாதவை.

இத்தனை தரமான களிமண் கிடைக்கும் ஒரு தேசம் அதை மிகக்குறைவாகவே பயன்படுத்துவது ஒரு பெரும் பொருளியல் குற்றம் என்றார் பேக்கர். சிமென்ட் மேலைநாடுகளில்கூட குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்தியா மிக அதிகமாக சிமெண்டை பயன்படுத்துகிறது. அதன்மூலம் இயற்கை வளங்களை, ஆற்றலை, உழைப்பை அது வீணடிக்கிறது. சரியான வகையில் வடிவமைக்கப்பட்ட செங்கல் கட்டிடம் சிமிண்ட் கட்டிடங்களை விட பலமானது. சொல்லப்போனால் சிமெண்ட் இந்தியாவின் வெப்பநிலையில் நீடிக்கக்கூடிய தொழில்நுட்பம் அல்ல என்று அவர் எண்ணினார். கடற்கரைப் பகுதிகளில் சிமெண்ட் மேலும் அழியக்கூடியதாக உள்ளது.

உற்பத்தி நுகர்வு இரண்டும் ஒரே இடத்தில் நிகழ வேண்டும் என்பதே காந்தியின் பொருளியல் கோட்பாட்டின் அடிப்படை. அவற்றுக்கு இடையே தூரம் அதிகமாகும்தோறும் செலவு அதிகரிக்கும். அதைவிட நுகர்வின் தேவைகள் உற்பத்தியை கட்டுப்படுத்தாமல் ஆகும். அடிப்படையில் காந்திய தரிசனம் என்பது ‘மையப்படுத்தலுக்கு நேர் எதிரானது’ எனலாம். அனைத்தையும் அது பரவலாக்க விழைகிறது. அதிகாரம்,  நிர்வாகம், உற்பத்தி எல்லாவற்றையும் . பேக்கரின் கட்டிடக்கலை அந்த சாராம்சத்தை ஏற்றுக்கொண்டது. அவரது வீடு என்பது ஒரு பிராந்திய மக்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப அங்கே கிடைக்கும் பொருட்களால் அவர்களே உருவாக்கிக் கொள்வது மட்டுமே.






மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நாடா வளத்தன நாடு என்ப - தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடையவற்றை நூலோர் நாடு என்று சொல்வர்; நாடவளம் தரும் நாடு நாடு அல்ல - ஆதலால் தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகா. (நாடுதல், இரு வழியும் வருத்தத்தின்மேல் நின்றது. 'பொருள் செய்வார்க்கும் அஃது இடம்' (சிந்.நாம.48) என்றார் பிறரும். நூலோர் விதிபற்றி எதிர்மறை முகத்தான் குற்றம் கூறியவாறு. இவ்வாறன்றி, 'என்ப' என்பதனைப் பின்னும் கூட்டி இருபொருள்பட உரைப்பின், அனுவாதமாம்.).

மணக்குடவர் உரை
தேடவேண்டாத வளத்தினை யுடைய நாட்டை நாடென்று சொல்லுவர்: தேடினால் வளந்தருகின்ற நாட்டை நாடல்ல வென்று சொல்லுவர்.

மு.வரதராசனார் உரை
முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

சாலமன் பாப்பையா உரை
தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.

English Meaning - As I taught a kid - Rajesh
A good state/country is the one which is self-sufficient. It should not be depended on external resources. i.e. a country should not depend on imports and exports. A state has to yield without toil and it should not toil hard to produce yields.  This doesn't mean a country should not import not export at all. A country should not find it difficult if import and export is stopped even for 2-3 years.

We can apply the same principle to an household also. One should be dependent on others or debts for running the household. One has to work and yield.

One of the major advantage of being self sufficient is natural resources will not be exhausted. Humans are greedy. They don't mind exploit resources from other countries. For e.g. Himalayan Salt, Sandalwood, teak wood, oil resources, tea, coffee, marble stones etc. For cultivating tea and coffee, many forests and mountains are deforested and their natural habitat is lost. Nature has everything for humans. But if humans wants everything from nature, then the nature cannot sustain. 

For e.g. Mahatma Gandhi said to architect Laurie Baker that one has to build houses and buildings using the resources available in 50km radius. A person should not use marble stones, sand, wood that has to be sources from a different state 

Also, a country should not depend on debts from foreign countries to carry out infrastructure projects and education projects. A minimal debt for few years is fine. But not regularly. We have seen how shrewd countries and multi national organizations lend loans through IMF (International Monetary Fund), United Nations, World Banks etc. to developing countries. And later, exploit those developing countries by taking ownership of those infrastructure projects (i.e. they enjoy the profits of doing the project as well as enjoy the bank interests from these projects) and making the countries pay interests for a huge number of years.

During the recent pandemic COVID-19 in 2020 and 2021, we saw how many countries were depended on other countries for COVID vaccines. Since 2008, recession has been a common topic every now and then because almost 70% of the world GDP is depended on global trade. 

Questions that I ask to the kid
What is a good state? What is not a good state? Why?