குறள் 740
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
[பொருட்பால், அரணியல், நாடு]
பொருள்
பொருள்
ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை
அமைவு - அமைதி; ஒப்பு; amaivu n. id. 1. Beingacceptable, suitable, fitting; ஏற்றதாகை; அமை-. Modesty;respectful behaviour; அடக்கம்.
எய்தியக் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.
கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்
கண்ணும் - கண்ணு-தல் - kaṇṇu- 5 v. tr. 1. To purpose, think, consider; கருதுதல் கண்ணியதுணர்தலும் (மணி. 2, 25). 2. To be attached to,fastened to; பொருந்துதல் புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17).
கண்ணு-தல் v. tr. கண்.To see; பார்த்தல். (நாமதீப.)
பயம் - அச்சம்; அச்சச்சுவை; வாவி; அமுதம்; பால்; நீர்; பலன்; வினைப்பயன்; பழம்; இன்பம்; அரசிறை; தன்மை
இன்றே - இல்லை
வேந்து - அரசபதவி; ஆட்சி; மன்னன்; இந்திரன்.
அமைவு - அமைதி; ஒப்பு; amaivu n. id. 1. Beingacceptable, suitable, fitting; ஏற்றதாகை; அமை-. Modesty;respectful behaviour; அடக்கம்.
அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்
இல்லாத - இல்லை
நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.
முழுப்பொருள்
ஒரு நாட்டிற்கு எல்லா இயற்கை வளங்களும் (ஆறுகள், மலைகள், குளங்கள், ஏரிகள், விளை நிலங்கள், காடுகள்) உழைக்கும் மக்களும் அமைந்திருந்தாலும் நன்றாக உற்பத்தியை உருவாக்கிக் குன்றாத செல்வத்தைப் பெருக்கினாலும் குற்றங்கள் இன்றி பசி இன்றி பிணி இன்றி உட்பகை இன்றி இருந்தாலும் ஒரு நல்ல வேந்தன் இல்லாத நாடு மேற்சொன்ன எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் பயனில்லை. ஏனெனில் ஒரு வேந்தனே ஒரு நாட்டை வழிநடத்துபவன். ஒரு வேந்தே நாட்டை முன்னேற்றுபவன். ஒரு வேந்தே ஒரு நாட்டிற்கு ஒளிவிளக்காய் நம்பிக்கையாய் விளங்குபவன். ஒரு வேந்தன் சரியாக அமையாவிட்டால் மக்கள் நம்பிக்கையின்றி மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு அவதிப்படுவதுப்போல் நிம்மதியின்றி அவதிப்படுவர்.
“வேந்து அமைவு” என்பதால் அரசின் மேல் மக்களுக்கு உள்ள அன்பும், அரசுக்கு மக்கள்மேல் உள்ள பரிவும், கனிவும் உணர்த்தப்படுகிறது.
இது நாட்டிற்கு மட்டும் அல்ல ஒரு வீட்டிற்கு பொருந்தும். ஒரு வீட்டில் ஒரு தலைவன் நன்றாக அமையாவிட்டால் அவ்வீட்டில் எல்லா செல்வங்களும் இருந்தும் என்ன பயன்?
பரிமேலழகர் உரை
வேந்து அமைவு இல்லாத நாடு - வேந்தனோடு மேவுதல் இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று. (வேந்து அமைவு எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும்,அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவைஇல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவைஇரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
மேற்கூறியவற்றால் எல்லாம் அமைந்ததாயினும் பயனில்லையாம்; வேந்தனது அமைதியை உடைத்தல்லாத நாடு. இதுநாட்டுக்கு அரசனும் பண்புடையனாகல் வேண்டுமென்றது.
மு.வரதராசனார் உரை
நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை
மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை.
No comments:
Post a Comment