Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்

குறள் 126
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் 
எழுமையும் ஏமாப் புடைத்து
[அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒருமை orumai   n. ஒன்று [T. orima, M.oruma.] 1. Oneness, union; ஒற்றுமை (பிங்.) 2.Singleness, loneliness; தனிமை என்னொருமையுங்கண்டுவத்தி (கம்பரா. கிளை 30). 3. Unchangeableness; ஒரேதன்மை. ஒருமைமகளிரே போல (குறள்,974). 4. Peerlessness, uniqueness; ஒப்பற்றதன்மை. உண்மைபிறர்க் கறிவரிய வொருமையானும்(சிவப்பிர. முதற்சூ. 3, பக். 91). 5. (Gram.) Singularnumber; ஏகவசனம் (தொல். சொல் 44.) 6.Concentration of mind; மனமொன்றுகை. ஒருமையா லுன்ணையுள்கி. (தேவா. 478, 4). 7. Knowledgeof God; இறையுணர்வு (பிங்.) 8. Decision, determination; ஆலோசனைமுடிவு. கொடுத்துநம்முயிரென வொருமைகூறினான் (கம்பரா. மூலபல. 179). 9.Final emancipation; மோக்ஷம். எம்மொடா மொருமையெய்துவான் (தணிகைப்பு. நந்தியு. 17). 10. Truthfulness, veracity; மெய்ம்மை ஒருமையே மொழியுநீரார் (கம்பரா. அயோத். மந்திர. 9). 11. One birthin the round of births; ஒருபிறப்பு. ஒருமைக்கட் டான்கற்ற கல்வி (குறள், 398).  
ஒருமையுள் - மனமொன்றுகை யுள்

ஆமை - āmai   n. ஆம்¹ also யாமை [K. M.āma, Tu. ēme.] Turtle, any member of cheloniaor testidinata; கூர்மம் (திவ். பெரியாழ். 4, 9, 5.) , கூர்மம்; ஓர்உயிரினம்; ஒருநோய்; மணம்
ஆமைபோல் - ஆமையை போன்று

ஐந்து - ஐம்புலன், ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள்; ஐந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள்:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

அடக்கல் - மறைத்தல்; கீழ்ப்படுத்துதல்; உட்படுத்துதல்; ஒடுக்கல்; பணியச்செய்தல்.

ஆற்றின் - ஆற்று-தல் - āṟṟu-   5 v. intr. 1. To become strong, powerful; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள், 493). 2. To be possible; கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி. 75). 3. To be sufficient; போதியதாதல். தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு. 225). 4. To escape, obtain deliverance, survive; உய்தல் (பிங்.) 5. To be equalto, to compare with; உவமையாதல். வையகமும்வானகமு மாற்ற லரிது (குறள், 101).--v. tr. 1. To  

எழுமை - n. எழு-. [M. eḻuma.]Height; உயர்ச்சி (திவா.)  ; ஏழ்வகை; ஏழுவகைப்பிறப்பு; ஏழுமுறைபிறக்கும்பிறப்பு.
எழுமையும் 

ஏமாப்பு - n. ஏமா-. 1. Security,safeguard; அரணாகை. எழுமையு மேமாப்புடைத்து(குறள், 126). 2. Support, stay; வலியாகை. எச்சத்திற் கேமாப்புடைத்து (குறள், 112). 3. Hauteur,pride; இறுமாப்பு ஏமாப் பிரலை விலங்கலை (ஞானா.43, 25). 4. Object, intention, purpose; கருத்து (திவா.)  

உடைத்து - உடைதல் - இருக்கும்

முழுப்பொருள்
ஒரு ஆமையானது தன் உறுப்புகளை பயன்படுத்தி இடர் புகுதாமல் தன்னை தற்காத்துக்கொள்ளும். ஒரு ஐந்தறிவு ஆமையாலே தன் உறுப்புகளை பயன்படுத்தி தற்காத்துக்கொள்ள முடிகிறது. மனிதனால் முடியுமா? முடியும். எளிது! அதனால் தான் ஆமையோடு ஒப்பிட்டு சொல்கிறார் திருவள்ளுவர்.

மனிதர்களுக்கு மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் உண்டு; இவ்வைந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள் ஊறு, சுவை, ஒளி,  நாற்றம், ஓசை எனவாகும். தீமை மனிதனுள் புக இவ்வைந்து பொறிகளே வழிகள். இப்பொறிகளை மனிதன் அடக்கினால் அவனுள் தீமை புகவே புகாது. ஒருவனுள் தீமை இல்லை என்றால் அவனுக்கு அதுவே சிறந்த அரண். அப்படி ஐம்புலன்களையும் அடக்கினால் அது ஒருவனை வலிமையாக்கும், உயர்ச்சி தரும்.

இங்கே வள்ளுவர் எழுமையும் என்று கூறுகிறார். ஏன் எழுமையும் என்கிறார் என்றால்? - ஒருவன் உயர்ச்சிக்கொள்ளும் பொழுதும் அடக்கத்தை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் தான் அது அரணாக அமையும். உதாரணமாக பெரிய ஆளாகிய பின் கண்ட மேனிக்கு உணவு உட்கொள்ளுவது, பார்த்த பொருளையெல்லாம் ஆடம்பரத்துக்காக வாங்குவது என்று இருந்தால் - உடம்பும் வீணாகி பொய்விடும், பணமும் செலவாகும் - இது நம் வீழ்ச்சிக்கு வித்திடும்.  மொத்தத்தில் நம் வருங்காலத்தில் அது நமக்கு கேட்டையே விளைவிக்கும். ஆதலால் சர்வமும் புலன்களை அடக்கி ஆண்டால் உயர்ச்சி நிச்சயம்.

யோக ஆசிரியர் G.சௌந்தர் ராஜன் அவர்கள் “ஒரு மனிதன் வெளியுலகத்தை விட்டு கொஞ்சம் நேரம் கூட தன்னை விலக்கிக்கொள்ளாவிட்டால் அவனுக்கு துன்பம் மட்டுமே எஞ்சும்” என்று கூறுகிறார். (உதாரணமாக எந்நேரமும் mobile, cinema, breaking news, cricket, gossip etc)

யோக ஆசிரியர்  G.சௌந்தர் ராஜன் அவர்கள், புலன்களை உள்ளுக்குள் ஒடுக்குவது, ப்ரத்யாகாரம் என்று அஷ்டாங்க யோக மரபில் 5ஆவது நிலையாக குறபடுகிறது என்று கூறுகிறார். ஒருவர் ப்ரத்யாகாரத்தை  தொடர்ந்து செய்துவந்தால் அவர் அடுத்த 6ஆவது நிலையான தாரணா நிலைய அடைய முடியும். தாரணா நிலை என்பது ஒழுகுதல் என்று பொருள் கொள்ளப்படுகிறது. ஒருவர் தொடர்ந்து தாரண நிலையில் இருந்தால் அந்நேரத்தில் தனது உயிர் ஆற்றலை குவித்து அதனை சேமித்துவைத்துக்கொள்ளலாம். பின்பு அதனை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். 

அதனால் தான் வள்ளுவரும் புலன்களை அடக்காவிட்டால் வளர்ச்சி கிடையாது என்கிறார்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”அடங்கலால் ஆமை போன்றும்” (சீவக.1895)
“ஐவகைப் பொறியும் வாட்டி ஆமையின் அடங்கி” (சீவக.2824)

“ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி” (திருமந் 133)

“அடக்கும்ஐம் பொறியொடு கரணத்தப்புறம்
கடக்கும்வா லுணர்வினுக் கணுகும் காட்சியான்” (கம்ப.தைலமாட்டு 27)

”குறள் 398”

“தாமரைக் கண்ணொடேர் தவத்தின் மாலையன்
ஆமையின் இருக்கையன்” (கம்ப.சடாயு உயிர்நீத்த 23)

உடல்மேல் உள்ளம் கொண்ட வெற்றியே ஆற்றல். பொருள்மேல் ஆற்றல் கொண்ட வெற்றியே செல்வம். செல்வத்தின்மேல் கனவு கொண்ட வெற்றியே அழகு. அழகின்மேல் மானுடன் கொள்ளும் வெற்றியே கலை. முழுமைகொண்ட கலை  மெய்மையின் பருவடிவு.  மெய்மையே மானுடனை தெய்வமாக்குகிறது.

பரிமேலழகர் உரை
ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து. (ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் 'ஆமை போல்' என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.

மு.வரதராசனார் உரை
ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

சாலமன் பாப்பையா உரை
ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.

பொருள்: ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஒரு பிறப்பின்கண் (ஒருவன்) ஆமை போல ஐம் பொறிகளையும் அடக்குதலைச் செய்யின், எழுமையும் ஏமாப்பு உடைத்து - (அவன் அடையும்) ஏழு பிறப்பின்கண்ணும் (அவனுக்கு அது) காவலாதலை யுடைத்து.

கருத்து: அடக்கம் மேல் வரும் ஏழு பிறப்பிலும் பெருமை பயக்கும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Just like a turtle hides its head in its shell when there is a danger, a person should learn to control his five senses. This discipline of controlling senses will act as a fort from danger

If you are able to control your five senses, your productivity will increase. Controlling senses helps in discipline which in turn helps to improve focus on work thereby leading to growth

Questions that I ask to the kid
What should you do for growth?
(like what or which animal/) How should you control your senses and what is the outcome of it?

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

குறள் 112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி 
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
[அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை]

பொருள்
செப்பம் - செவ்வை; நடுநிலை; சீர்திருத்தம்; பாதுகாப்பு; செவ்வியவழி; தெரு; நெஞ்சு; மனநிறைவு; ஆயத்தம்.

உடையவன் - கொண்டவன், உரியவன்; பொருளையுடையவன்; கடவுள் செல்வன் தலைவன்

ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை (ஆகு-. 1. Achievement, accomplishing), உண்டுபண்ணுகை; படைப்பு, செல்வம், பொன், பெருக்கம், இலாபம், ஈட்டம், கொடிப்படை, திருமகள், மங்களகரம், வாழ்த்து, Increase, development; விருத்தி, 

சிதைவு - குற்றம்; கேடு.

இன்றி - இன்-மை. Without;இல்லாமல், 

எச்சத்திற்கு - எச்சம் - எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலேவரும்குறை:குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில்பிண்டம்என்னும்எட்டுவகைஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபுமுற்றுஎச்சங்கள்கொண்டுமுடியும்பெயர்வினைகள்; பெயரெச்சவினையெச்சங்கள்,  Work;காரியம்

ஏமாப்பு - பாதுகாப்பு; அரணாதல், வலியாகுதல்; செருக்கு; கருத்து.

உடைத்து - உடைதல் - இருக்கும்

முழுப்பொருள்
இக்குறளுக்கு பல உரைகள் “நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்” என்று எழுதப்பட்டு உள்ளது. ஆனால் எனக்கு சற்று அதிகமாகவும் தோன்றுகிறது.

நடுவுநிலையை பாதுகாக்கும் ஒருவன் அறத்தை பின்பற்றுவதால் அவன் தலைவன் எனலாம். நடுவுநிலை என்பது ஒரு செல்வமுமாகும். அத்தகைய செல்வம் குறையாமல் (/சிதைவின்றி) உயர்ந்துக்கொண்டே (/ஆக்கம்) இருக்கும்  - எப்போது என்றால் அவன் வரும் காலங்களிலும் நடுவுநிலையை தொடர்ந்து பாதுகாத்தால். அப்படி நடுவுநிலையை பாதுக்காத்தால் இந்த செல்வம் (புகழ், மனநிறைவு) அவர்காலத்திலும் அழியாது வருங்காலத்திலும் அழியாது. செல்வம் (புகழ், மனநிறைவு) உயர்ந்துக்கொண்டே இருக்கும். அது அவருடைய அடுத்த சந்ததியினருக்கும் ஒரு வாழ்க்கைக்கான வழிதடமாய் இருக்கும்.

ஒரு நீதியரசர் ஒரே ஒரு வழக்கிற்கு தவறான தீர்ப்பு அளித்தால் என்னவாகும்? ஒரு குண்டா பாலில் ஒரு துளி விஷம் கலந்ததுப்போல அவர் புகழ் குன்றி விடும்.

கலிதொகை இவ்வாறு கூறுகிறது
“செம்மையின் இகந்தொரீ இப் பொருள்செய்வார்க் கப்பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவ தறியாயோ” (கலி. 14:14-5)

இக்குறளுக்குத் தொடர்பில்லாவிட்டாலும், ஒரு கூடுதல் தகவல்: வள்ளுவர், “கற்றலைப்” பற்றியும், சிற்றினம் சேராமை பற்றியும் உள்ள குறள்களிலும் “எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்ற  சொற்றொடரையே சொல்லியிருப்பார். சங்க இலக்கியமான ஐந்திணை எழுபதிலும் இச்சொற்றொடர் பயன்பட்டிருக்கிறது.  புலவர்களுக்கு பிடித்த வெண்பா ஈற்றுச் சீர்களாயிருந்திருக்க வேண்டும்.  கீழ் கண்ட பாடலைப் படிக்கவும்.

பெருங் கை இருங் களிறு ஐவனம் மாந்தி,
கருங் கால் மராம் பொழில் பாசடைத் துஞ்சும்,
சுரும்பு இமிர் சோலை, மலை நாடன் கேண்மை
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து.

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவு நிலைமையை உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. (விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செப்பம் உடையவன் ஆக்கம்-நடுவுநிலைமை யுடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து-பிறர் செல்வம் போல் அழியாது அவன் வழியினர்க்கும் வலிமையாதலை யுடையது. வலிமை-பாதுகாப்பு.

எச்சவும்மை தொக்கது. ஒருவனுக்குப் பின் எஞ்சி நிற்பதாகலின் வழிமரபு எச்சமெனப்பட்டது.

மணக்குடவர் உரை
நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னளவிலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து. நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றவாறு.

மு.வரதராசனார் உரை
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

பொருள்: செப்பம் உடையவன் ஆக்கம் ‡ நடுவு நிலைமையைப் பொருந்தியவனது செல்வம், சிதைவு இன்றி எச்சத்திற்கும் ஏமாப்பு உடைத்து - அழிவு இல்லாமல் (அவனுக்கேயன்றி அவன்) மக்கட்கும் காப்பாதலை யுடைத்து.

அகலம்: எச்சத்திற்கும் என்பதன் உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. செப்பம் - நேர்மை-நடுவு நிலைமை.

கருத்து: நடுவு நிலைமை யுடையவன் செல்வம் அழியாது.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]

பொருள்
காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில் நிகழ்ச்சியைக் குறிக்கும் முக்காலம்; இசைக்குரிய மூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.
காலத்தினால் - தக்கசமயத்திற்கு

செய்த - செய்யப்பட்ட
நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.
சிறிது - சிறு-மை, அற்பமானது
எனினும் - என்றாலும்
ஞாலத்தின் - ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை.
மாணப் - மாண்-. Greatness;glory; splendour; excellence; dignity; மாட்சிமை., மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.
பெரிது - பெரிது, மிகவும்

முழுப்பொருள்
உலகில் பலர் பல உதவிகளை செய்கிறார்கள். நாம் அதில் பல உதவிகளை பெற்றுக்கொள்கிறோம். எல்லா உதவிகளும் பெரிது என்று சொல்ல முடியாது. அதுப்போல சில உதவிகள் சிறிதாய் இருந்தாலும் அது சிறிதாகாது. 

ஒரு முக்கியமான நேரத்தில் ஒரு உதவி சிறிதாக இருந்தாலும் அந்த உதவி அந்த இடத்தில் இவ்வுலகை விட மிக மிக பெரியது என்கிறார் திருவள்ளுவர். இங்கு நாம் காண வேண்டிய மற்றொன்று, அவ்வுதவியால் நன்மை கண்டிப்பாக அடைந்தோமா என்று பார்க்கவேண்டும் என்று திருவள்ளுவர் கூறவில்லை என்பதனை. 

உதாரணமாக ஒருவர் மருத்துவத்திற்கு இரத்தம் தானம் செய்து உதவுகிறார். மேலிருந்து பார்க்கையில் அது சிறிய உதவியாக இருக்கலாம். செய்யப்பட்ட மருத்துவம் தோல்வியடைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தக்க நேரத்தில் செய்யப்பட உதவியினை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அதுவே சிறப்பு. அதுவே அறமும் கூட. 

இவ்வுதவி பொருள் உதவியாக இருக்கவேண்டியது என்று கூட இல்லை. இக்கட்டான நிலைமையில், தேவையான நிலைமையில் ஆறுதலுக்கு ஒரு தூணும், மனதிற்கு ஊக்கம் தரும் ஒரு வார்த்தையும் மிக மிக பெரிய உதவியே.  [நான் ஆறு வயதாய் இருந்தப்பொழுது எனது தந்தையை இழந்தேன். ஆனால் அன்று ஒரு வார்த்தை ஆறுதலுக்காக கூட எனது உறவினர்கள் நாங்கள் கஷ்டப்பட்டு வளரும் படிக்கும் காலங்களில் வரவில்லை. குறிப்பாக இருவரை தவிர வேறு யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆனால் வளர்ந்த பிறகு நல்ல வேலைக்கு சென்ற பிறகு வந்தார்கள். உறவு கொண்டாடினார்கள். ச்சீ என்றே அன்று நினைத்தேன்]

என் வாழ்வில் மற்றொரு உதாரணம்: எனது தம்பி மேற்ப்படிப்பு படிக்க தேவையான நிதி இருப்பதாக வங்கியில் காண்பிக்க வேண்டும். எங்களிடம் அப்போழுது தேவையான வற்றில் பாதி நிதிக் கூட இல்லை. ஆனால் ஒரு பத்து நண்பர்கள் சேர்ந்து வங்கியில் தங்களால் முடிந்த பணத்தை சேர்த்தார்கள். வங்கியில் நிதி இருப்பதாக சான்றிதழ் வாங்கிவிட்டு அப்பணத்தை ஒரே வாரத்தில் மறுபடியும் தந்துவிட்டொம். இவ்விடத்தில் அவர்கள் எனக்கு பணமாய் ஒன்றும் தரவில்லை. வங்கியில் காண்பிக்க ஒரு வாரம் கடனாய் தந்தார்கள். இது பார்க்கையில் சிறிதானாலும் அந்த நேரத்தில் இவ்வுலகை போன்று பெரியது எனக்கு.  [மற்றொரு உதாரணம்: இதே போல எனக்கு ஒரு நிலை வந்த பொழுது எனது தூரத்து சொந்தம் என்று சொல்ல கூடிய சித்தி சித்தப்பா அவர்கள் எனக்கு படிக்க நிதி தருவதாக சான்றிதழ் கொடுத்தார்கள். அதனால் அப்பொழுது நான் படிக்க விண்ணப்பிக்க முடிந்தது]

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் “நன்னெறிப்” பாடலொன்று சொல்கிறது. இதை அறஞ்செய்வதை வலியுறுத்தி, வருமுன் காத்தல் என்கிற எடுத்துக்காட்டோடு சொல்லுகிறார்.
“கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளங் கனிந்தறஞ்செய துய்கவே – வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு”
குறளின் கருத்து, சொல்வழக்கிலே, “உன்னைப்போல் இந்திரன் இல்லை” என்னும் உபசார வழக்கு போல சொல்லப்படுகிறது.  காலத்திலே செய்த உதவியின் சிறப்பை உயர்த்திக் காட்டவே, அதை “ஞாலத்தை விட” பெரியது என்றது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“நிலத்தினும் பெரிதே” (குறுந் 3:1)

“மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும்
எண்ணினும் பெரியதோர் இடர்’ (கம்ப.அயோமுகி 99)

“முன்னொருவன் செய்த உபகாரம் மூவுலகம்
தன்னைக் கொடுத்தாலும் சாலுமே” (பாரத வெண்பா)

பரிமேலழகர் உரை
காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது - தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.).

மணக்குடவர் உரை
உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும், உலகத்தினும் மிகப் பெரிது. இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
காலத்தினால் செய்த நன்றி- ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் நெருக்கடி வேளையில் அதை நீக்க இன்னொருவன் செய்த வுதவி; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது- பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாயிருந்தாலும், அக்கால நிலைநோக்க நிலவுலகத்தினும் பெரிதாம்.

ஒருவர் செய்த நன்றியை அது செய்யப்பட்ட காலநிலைக்கேற்ப மதிக்க வேண்டுமென்பது கருத்து. 'காலத்தினால்' என்பது காலத்தாலே வந்தான் என்னும், மேலைவடார்க்காட்டு வழக்குப் போன்ற வேற்றுமை மயக்கம்.

மு.வரதராசனார் உரை
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

பொருள்: காலத்தினால் செய்த நன்றி - (ஒருவன் இடருற்ற) காலத்தில் (பிறன்) செய்த உதவி, சிறிது எனினும் ஞாலத்தின் மாண பெரிது - (செயலால்) சிறியது என்றாலும் (பயனால்) உலகத்தினும் மிகப் பெரியது.

அகலம்: காலத்தினால் என்பது வேற்றுமை மயக்கம், மூன்றாம் வேற்றுமை யுருபு ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையால். ‘என்னினும்’ என்பது ‘ன’கர வொற்றுக் கெட்டு நின்றது.

கருத்து : சமயத்திற் செய்த உதவியும் ஒப்பற்றது

Management - 3 big questions of a king
A legend is that a King told one of his Ministers to find answers to three of his pressing questions. They were: 1) What is bigger than the earth? 2) What is deeper than an ocean? 3) What is taller than a mountain? The Minister explored all the possibilities to find answers to the King’s questions.

He could not get convincing answers to convince the King. He was much concerned that he would fail in fulfilling his responsibility. His daughter, on reading the disturbances on his face, asked him what was bothering him. The Minister explained to her the King’s expectations and his inability to find convincing answers to his questions. His daughter said, “My teacher told us, ‘You can find answers to all your questions in Thirukkural.’ My teacher is right as he always refers to Thirukkural to answer our questions. You too can refer to Thirukkural to find answers to your questions.” The Minister started to refer to Thirukkural to find answers to the King’s questions. He, like a detective with a magnifying glass, was meticulously reading the Kurals as he had a purpose. When he reached the Chapter 11, he found answer to the first two questions. 

Kural 102 provided the answer to the King’s first question ‘What is bigger than the earth?’

குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

Given in time, even a trifling help Exceeds the earth. A timely help, even though small, is considered and will be treated by the person helped as bigger than the earth. Remember the old saying, ‘A friend in need is a friend indeed.’ The size of the help does not matter, but the time of the help matters the most.

Kural 103 provided the answer to the King’s second question ‘What is deeper than an ocean?’ 
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது (103). 

Help given regardless of return Is wider than the sea. An unconditional help, like a mother’s love, that is helping someone without expecting any favor in turn, is considered deeper than an ocean. Somehow, we have become selfish and
we, before rendering any help, calculate the return on investment. When we expect something in return to the help provided to others that is not true help. Altruism is helping someone just for the sake of helping. An often told story is that a sadhu was bathing in the river Cauvery in Tamilnadu. He noticed a scorpion being carried away in the river. He wanted to save the scorpion, touched that to put that on the bank of the river. The scorpion stung his hand when he touched that. The sadhu dropped that. He attempted again, it stung again and he dropped the scorpion again. He kept on doing that to save the scorpion. An onlooker irritatingly commented, “Swami, you know a scorpion stings. In spite of that you are trying to save that.” The sadhu replied, “The nature of a scorpion is to sting. The nature of a sadhu is to help others despite difficulties.” 

When the Minister continued reading further, he found the answer to the King’s third question ‘What is taller than a mountain?’ in Kural 124. 
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையினும் மாணப் பெரிது (124). 
The steadfast self-controlled towers aloft Taller than a mountain. If a person can remain polite and humble when he gets power, positions, personal gains, authority, and wealth, the ability to remain polite is considered taller than a mountain.

The Minister, while reading further, found answers to many of his pressing personal and professional problems. 

Thirukkural - Management - Helping Others
Help rendered to someone must be timely. If you help a person when he does not need your help, that act is not helping. That is rather interfering. On the contrary, if you help a person when he requests you to help, that act is not help. That is rather sympathy or obligation. A timely help, that is., helping when someone needs your help desperately, though very small, is greater than the world, Kural 102.

Given in time, even a trifling help
Exceeds the earth.

Be sensitive to people and their needs and help them when they need your help. 

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி

குறள் 93
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் 
இன்சொ லினதே அறம்
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
முகத்தான் - முகத்து + ஆன்
முகம் - தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம், வாயில், நோக்கு, வதனம்
ஆன் - அவ்விடம், இக்கணம்

அமர்ந்து - அமர் - விருப்பம்; கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம்

இனிது - இனி-மை, இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

அகத்தான் - அகம் + ஆன்
அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு, உள் மனம், அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

இன் - இனிமை

சொலினதே - சொல் + இனிதே

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல், சுகம்

முழுப்பொருள்
ஒருவரை வாசலில் (வாயிலில்) கண்ட உடன் (அல்லது முதல் முதலில் கண்ட உடன்), அவர் மீது, அன்புக்கொண்டு (விருப்பத்துடன்), இன்பம் தரும் மலர்ச்சியோடு அவரை காண வேண்டும். அதுப்போல உள் மனதில் இருந்து மகிழ்ந்து அவரிடம் இனிமையான நற்சொற்களை கூற வேண்டும். அதாவது அடுத்தவர் முகம் சுளிக்காத சோற்வூட்டாத சொற்கள். அதுவே அறம் என்கிறார் திருவள்ளுவர்.

இங்கே திருவள்ளுவர் ஒருவருக்கு பணம் காசு நகை கொடுக்க சொல்லவில்லை. இங்கே சொல்வது எல்லாம் பணம் கொடுத்து வாங்க தேவையில்லாத இனிய சொற்களை மட்டும் தான். ஆனால் அதற்கு தேவை மனது மட்டுமே.

இங்கே ஏன் திருவள்ளுவர் வாயிலில் (முதன் முதலில்) கண்ட உடன் இன்முகத்துடன் நோக்க வேண்டும் என்கிறார் ? எனக்கு என்ன தோன்றுவது என்றால் - ஒருவரை வரவேற்கும்/சந்திக்கும் பொழுது விருப்பம் இல்லாத மகிழ்ச்சியில்லாத முகத்தோடு இருந்தால், நாம் சந்திக்கும் நபருக்கு நம்மிடம் பேச ஒரு மனத்தடை உருவாகும். நாம் பல தடவை வீட்டில் பார்த்திருப்போம் - யாராவது ஒருவர் வீட்டில் முகம் கொடுத்து பேசவில்லை என்றால் ஏதோ தவறு இருக்கிறது என்று. இவ்வீட்டில் நாம் இங்கு வருவது இவருக்கு (ஒருவருக்கு) பிடிக்கவில்லை என்று நமக்கு புலப்படும். அதன் பிறகு நாம் அங்கு செல்வதை பொதுவாக தவிர்ப்போம். அதனை தவிற்கவே சந்திக்கும் பொழுதே இன்முகத்துடன் சந்திக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”விருந்துகண் டுள்ளம்
களிக்கு மங்கையர் முகமெனப் பொலிந்தன கமலம்’ (கம்ப.கார் 37)

பரிமேலழகர் உரை
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். ('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
முகத்தா னமர்ந்தினிது நோக்கி-ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ச்சியோடு விரும்பி இனிதாக நோக்கி அகத்தான் ஆம் இன்சொலினதே அறம்-பின்பு நெருங்கியவிடத்து அக மலர்ச்சியோடு கூடிய இனிய சொற்களைச் சொல்லுதலை யுடையதே அறமாவது.

ஒருவரைக் கண்டபொழுதே ஒரு பொருளை யீதல் பொதுவாக இயையாமையின், முதற்கண் இன்முகங் காட்டலும் உடனும் அடுத்தும் இன்சொற் சொல்லுதலும் மக்களைப் பிணித்து மகிழ்விக்குந் தன்மையனவாதலின், விருந்தினரிடத்தும் இம்முறையைக் கையாள்வதே சிறந்ததென்றார்.

மணக்குடவர் உரை
கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.

மு.வரதராசனார் உரை
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

பொருள்: முகம் மலர்ந்து இனிது நோக்கி அகம் ஆம் இன் சொல்லினது அறம்‡ முகம் மகிழ்ந்து இனிமையாகப் பார்த்து அகத்தின் கண் (உவகையால்) உண்டாகும் இனிய சொல்லையுடைய செயல் அறம்.

அகலம்: அத்து இரண்டும் ஆனும் சாரியைகள். ‘ஆல்’ அசை. ‘அது’ என்னும் சுட்டுப் பெயர் அறத்திற்கு முதலாகிய செயலைச் சுட்டி நின்றது. ‘ஏகாரம்’ அசை. இன் சொல்லின் என்பது செய்யுள் விகாரத்தால் லகர வொற்றுக் கெட்டு நின்றது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘முகத்தா னமர்ந்து’. மணக்குடவர், பரிமேலழகர் பாடம் ‘இன்சொலினதே’. தாமத்தர் பாடம் ‘இன்சொலஃதே’. தருமர், நச்சர் பாடம் ‘இன்சொலி னஃதே’.

கருத்து: மலர்ந்த முகத்தோடும் இனிய சொல்லோடும் உவந்த உளத்தோடும் செய்யப்படும் வினைகள் அறமாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
Whenever we meet or come across someone we should greet them with smile in our faces. Also, it is our duty to say heartfelt positive and kind words. i.e., we should not hurt others. Our face reflects our heart. Hence, smile in our face is mentioned first. Similarly our words reflects our heart. 

Questions that I ask to the kid
When we speak to others how should our words be?
How should we treat others when we meet them? How would you relate it to words?

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்

குறள் 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இருந்து -  இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

ஓம்பி - ஓம்புதல் - ōmpu-   5 v. [T. ōmu, K. ōvū,M. ōmbu.] tr. 1. To protect, guard, defend,save; பாதுகாத்தல் குடிபுறங் காத்தோம்பி (குறள்,549). 2. To preserve; to keep in mind; tocherish, nourish; பேணுதல் ஈற்றியாமை தன்பார்ப்போம்பவும் (பொருந. 186). 3. To remove, separate; to keep off; to ward off; தீதுவாராமற்காத்தல். 4. To dispel; பரிகரித்தல் எனைத்துங்குறுகுத லோம்பல் (குறள், 820). 5. To maintain,support; to cause to increase; to bring up;வளர்த்தல். கற்றாங் கெரியோம்பி (தேவா. 1, 1). 6.To consider, discriminate; சீர்தூக்குதல் ஓம்பாவீகையும் (பு. வெ 9, 1). 7. To concentrate themind; மனத்தையொருக்குதல். தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை (குறள், 132). 8. To clutch orgrasp tightly, as a miser; இவறுதல் பெற்றேமென் றோம்புத றேற்றாதவர் (குறள், 626)

இல் வாழ்வது - இல்வாழ்க்கை வாழ்வது

எல்லாம் - எல்லாமே, அனைத்தும்

விருந்து - புதியராய் வருபவரை உணவளித்துப் போற்றுதல்;

ஓம்பி ஓம்புதல் 

வேளாண்மை - vēḷ-āṇmai   n. வேள் +ஆள்-. 1. Gift, bounty, liberality; கொடை. (பிங்.)2. Beneficence, help; உபகாரம். விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு (குறள், 81). 3.Cultivation of the soil, agriculture, husbandry;பயிர்செய்யுந் தொழில். 4. Truth; சத்தியம். (பிங்.)வேளாண்மைதானும் விளைந்திட (கொண்டல்விடு. 84); 2. gift, bounty, liberality, ஈகை; 3. truth, மெய்.

செய்தற்பொருட்டு - செய்வதற்காக

முழுப்பொருள்
இல்வாழ்க்கையில் கணவன் மனைவியாக வாழ்கிறவர்களுக்கு பல கடமைகள் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று விருந்தோம்பல். கணவன் மனைவியாக வாழ்வது அவர்கள் இருவர் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ற சுயநலத்திற்கு அன்று. அவர்கள் இல்வாழ்க்கை வாழ்வது என்பது ஈகை செய்வதற்காக. வந்த விருந்தினருக்கு இருக்க இடம் கொடுத்து உபசரித்து நன்கு வயிராற உணவளித்து அவர்களை பேணுவதே விருந்தோம்பல். இல்வாழ்க்கையே வாழ்வது என்பதே வரும் விருந்தினரை உபசரிக்கவே என்கிறார் திருவள்ளுவர்.

மேலும் அஷோக் உரை

சிலப்பதிகாரத்தில் கோவலனை பிரிந்துள்ள கண்ணகி, அவன் (அவள் தலைவன் கோவலன்) இல்லாமல் தன்னால் விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறாள். அப்பாடல் கீழே
‘அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்,
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும், இழந்த என்னை, நும்
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர்த் தலைத் தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதிக் கிழவன் 75
முந்தை நில்லா முனிவு இகந்தனனா,
அற்பு உளம் சிறந்து ஆங்கு, அருள் மொழி அளைஇ,
என் பாராட்ட, யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள் அகம் வருந்த, 80
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்,
ஏற்று எழுந்தனன், யான்’என்று அவள் கூற
-- இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ( / 2. மதுரைக் காண்டம் / 6. கொலைக்களக் காதை)

பொருள்
அறநெறியாளர்களுக்கு  அளித்தல், செந்தண்மைப் பூண்டொழுகும் அந்தணர்களைப் பாதுகாத்தல், துறவிகளை வழிபடுதல் - இந்த மூன்றும்  இல்லறம் பூண்டோர் கடமை. இந்த மூன்றையும் துறந்து நான் வாழ்ந்துகொண்டிருந்தேன்.  

இப்படி வாழ்ந்த என்னை உன் தாயும், தந்தையும் உன்மீது எப்போதும் இல்லாத சினத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, என்மீது அன்பு உள்ளம் கொண்டு, அருள் தரும் மொழிகளைப் பேசி, என்னைப் பாராட்ட, நான் வீட்டில் ஒளிந்துகொண்டு, என் நோவையும் துன்பத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், வாயால் புன்னகை பூத்துக் காட்ட, அந்த புன்னகையைப் பார்த்து  அவர்கள் மனம் வருந்தும்படிப் போற்றப்படாத ஒழுக்க நெறியில் வாழ்ந்தீர். 

அதனை நான் மாற்றாத உள்ளத்தோடு வாழ்ந்தேன் ஆகையால், நீ எழுக என்றவுடன் எழுந்தேன்.  - என்று கண்ணகி கோவலனிடம் கூறினாள்.  
(எழுக என எழுந்தாய். என் செய்தனை - என்று கோவலன் வினவியதற்கு இப்பபடி விளக்கம் அளித்தாள்) 

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் குறிப்பாக (main-ஆக) அவரது துணைவியார் கணவதி அம்மாள் பற்றி கி.ரா.இணைநலம் (எஸ்.பி.சாந்தி எழுதியது) நூலில் இருந்து சில பகுதிகள்
கணவதி அம்மாள் (கி.ராவின் மணைவி): கவிஞர் நாவன்னா காமராஜ்னு ஒருத்தர். அய்யாவுக்கு வேண்டியவர். காதி போர்டு இருந்தவர். அவர் ஒரு தடவை கன்னியாகுமரியிலிருந்து ஒரு முப்பது பேருடன் பாதயாத்திரை சென்று திரும்பி வந்துகிட்டிருப்பதாவும், இடைசெவல் வழியா வாரதாகவும், இரவு சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்யும்படியும் சேதி சொல்லி அனுப்பிவிட்டார். கேப்பைக்களியும், கருவாட்டுக் குழம்பும் போதும் என்று செய்ய வேண்டிய சமையல் அயிட்டத்தையும் அவரே சொல்லிவிட்டார். 
“முப்பது பேர்னா சும்மாவ. இரண்டு நாள் முன்னாடிதான், மத்தளம்பாறை வீட்டில் இருந்து வெள்ளைக் கேழ்வரகு ஒரு பத்து கிலோ போல கொடுத்து விட்டிருந்தாங்க.அதை அரைச்சி வெச்சிருந்தேன். எங்க ஊர்ல “பெத்த பூச்சி”ன்னு ஒரு பெரிய அம்மா கேப்பக் களி கிண்டுவதில் ரொம்ப திறமைசாலி. அவங்கள கூப்பிட்டு கேப்பைக்களி பண்ணி, கருவாட்டுக் குழம்பு தயார் பண்ணோம், தோசை ஊற்றி, அதையும் தயாரா வைச்சிருந்தோம். பிறகு பத்துமோ, பத்தாதோன்று உப்புமாவும் கிண்டி எல்லாருக்கும் வயிறார பசியாற்றினோம்.

வீட்டுக்கும் வர்ரவங்க யாரா இருந்தாலும், சாப்பிடற நேரத்துக்கு வந்துட்டாங்கன்னா, அவங்களுக்கும் பசியாத்தினாத்தான் எங்களுக்கு நிம்மதியா சோறு இறங்கும்.

அவர்கள் பேசி முடித்தவுடன் நானும்(எஸ்.பி.சாந்தி) நினைத்துப் பார்க்கிறேன். அய்யா பாண்டிச்சேரியில் மாறிய அத்தனை வீடுகளுக்கும் போயிருக்கிறேன். நான் அவர்கள் வீட்டில் ஒரு வேளையாவது உண்ணாமல் வந்ததில்லை. அதோடு, பல சமயங்களில் யாராவது கூடுதல் நண்பர்கள் வந்திருப்பார்கள்.

நான் ஒரு முறை சென்றபோது, திரு மாசிலாமணி, Ex.MLA, ஜெயங்கொண்டம் அவர்கள் குழந்தைகளுடன் பெண்ணின் திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். நல்ல வெய்யில் நேரம்.

சிறிது நேர உரையாடலுக்குப் பின் விருந்து உபச்சாரம் ஆரம்பித்து விடுகிறது. என்ன, பருப்பும் நெய்யும், வடையும், பாயாசமும் இல்லை. புளிக்குழம்பு,கீரைக்கூட்டு, வெண்டைக்காய் வறுவல், முட்டை என சாதாரண சாப்பாடுதான். ரொம்ப திருப்தியான சாப்பாடும்மா என்கிறார் விருந்தினர்.

அய்யா உடனே, “இங்கு வர்ரவங்க எல்லாருமே சாப்பாடு ருசியா இருக்குன்னு சொல்றாங்க. இது சாதாரண சாப்பாடுதானே” என்கிறார். சாப்படு என்பதின் ருசி சாப்பாட்டில் மட்டும் இல்லை. கூட இருக்கும் மனிதர்களின் கபடமில்லாத மனம், அவர்களின் இனிய உபசரிப்பு, பரிமாறும் விதம், உறுத்தல் இல்லாத, கலப்படமில்லாத எளிய பேச்சு,  இப்படி நிறைய்ய.

(19 செப் 2006 அன்று எடுத்த ‘அவள் விகடன்’ பேட்டியில் இருந்து ஒரு கேள்வி): இன்றும் உங்கள் மனைவியிடம் நீங்கள் வியந்து ரசிக்கும் விஷயம் எது?
கி.ரா: கவிஞர் நா.காமராசன் அவர்கள் தனது “படை பட்டாள”த்துடன் ஒரு நடைப்பயணம் வந்தார் (சுமார் 30 பேர் இருக்கலாம்). “ராத்திரி நாங்கள் இடைசேவல் தங்கல். எங்களுக்கு கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும் போதும் வேற எந்த விருந்தும் வேண்டாம் என்று துண்டுச்சீட்டு கொடுத்தனுப்பி இருந்தார்.

என் நண்பர் மத்தளம் பாறை ராமசாமி அவர்கள் அவருடைய தோட்டத்தில் விளைந்த வெள்ளைக் கேப்பை (ராகி) கொடுத்துனுப்பியிருந்தார். அன்றுதான் அதை மாவு அரைத்து வைத்திருந்தோம். ராமேஸ்வரம் பால் நெத்திலிக் கருவாடு வீட்டில் இருப்பு இருந்தது. ஒரு சிரமும் இல்லை; முப்பது பேருக்கு அளவில் களி கிண்டுவது தான் சிரமம். சொந்தக்காரப் பெண்கள் வந்து உதவினார்கள். காணுமோ காணாதோ என்று அரிசியைக் கொஞ்சம் நனைய வைத்து ஆட்டி ஒரு திடீர் உப்புமா செய்தாள். பிறகுதான் தெரிந்தது இதும் சரிதான் என்று. நடந்து வந்த பசி அவர்களுக்கு. கேப்பைக் களியும் கருவாட்டுக் கொழம்புக்கும் ஒரே கொண்டாட்டம்; உப்புமாவும் போன மூலை தெரியவில்லை. ஒரு தார் கதலிப்பழமும் சேர்ந்து கைகொடுத்தது.




பரிமேலழகர் உரை
[அஃதாவது, இரு வகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் கட்புலனாகாதாரை நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கு ஈதல் அன்மையானும், இடைநின்ற விருந்து ஓம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்கு முதல் ஆயிற்று. வேறாகாத அன்புடை இருவர் கூடியல்லது செய்யப்படாமையின், இஃது அன்புடைமையின்பின் வைக்கப்பட்டது.)

இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. (எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - கணவனும் மனைவிபும் தம் இல்லத்தின்கண் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் பேணிக்காத்து வாழ்வதெல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு - விருந்தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் நன்றி (உபகாரம்) செய்தற் பொருட்டே.

இக் காலத்திற்போல் உண்டிச் சாலைகளும் தங்கல் விடுதிகளுமில்லாத பண்டைக் காலத்தில், பணம் பெற்றேனும், இல்லறத்தாரையன்றி விருந்தினரைப் பேண ஒருவரு மின்மையின், இல் வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் விருந்தோம்பலே என்றார். ' விருந்து ' பண்பாகு பெயர்.

மணக்குடவர் உரை
இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.

மு.வரதராசனார் உரை
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.

பொருள்: இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - (ஒருவன்) இல்லின்கண் தங்கி (பொருளைக்) காத்து வாழ்த லெல்லாம், விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு- விருந்தினரைப் பேணி (அவருக்கு) உதவி செய்தற் பொருட்டு.

அகலம்: எல்லாம் என்பது ஈண்டு எஞ்சாப் பொருட்டாயதோர் உரிச்சொல். பொருள்+து = பொருட்டு. பொருட்டு ‡ பொருளையுடையது. ‘விருந்து’ ஆகுபெயர், அதனை உடையார்க்கு ஆயினமையால்.

கருத்து: இல்லின்கண் வாழ்வது விருந்தினரைப் பேணுதற்கே.

English Meaning - As I taught a kid - Rajesh
For the married couple, who "live" their lives, one of their duties is hospitality. They have to warmly receive guests (mainly sages, saints, elders, friends and whoever coming hungry) and serve them with food. The couple is engaged to themselves. But they shouldn't be selfish. They have to serve the needy with their hospitality.

Questions that I ask to the kid
What is the main duty of married couple? 
Is marriage meant to be a selfish, taking care of themselves?