குறள் 126
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
[அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
ஒருமை - orumai n. ஒன்று [T. orima, M.oruma.] 1. Oneness, union; ஒற்றுமை (பிங்.) 2.Singleness, loneliness; தனிமை என்னொருமையுங்கண்டுவத்தி (கம்பரா. கிளை 30). 3. Unchangeableness; ஒரேதன்மை. ஒருமைமகளிரே போல (குறள்,974). 4. Peerlessness, uniqueness; ஒப்பற்றதன்மை. உண்மைபிறர்க் கறிவரிய வொருமையானும்(சிவப்பிர. முதற்சூ. 3, பக். 91). 5. (Gram.) Singularnumber; ஏகவசனம் (தொல். சொல் 44.) 6.Concentration of mind; மனமொன்றுகை. ஒருமையா லுன்ணையுள்கி. (தேவா. 478, 4). 7. Knowledgeof God; இறையுணர்வு (பிங்.) 8. Decision, determination; ஆலோசனைமுடிவு. கொடுத்துநம்முயிரென வொருமைகூறினான் (கம்பரா. மூலபல. 179). 9.Final emancipation; மோக்ஷம். எம்மொடா மொருமையெய்துவான் (தணிகைப்பு. நந்தியு. 17). 10. Truthfulness, veracity; மெய்ம்மை ஒருமையே மொழியுநீரார் (கம்பரா. அயோத். மந்திர. 9). 11. One birthin the round of births; ஒருபிறப்பு. ஒருமைக்கட் டான்கற்ற கல்வி (குறள், 398).
ஒருமையுள் - மனமொன்றுகை யுள்
ஆமை - āmai n. ஆம்¹ also யாமை [K. M.āma, Tu. ēme.] Turtle, any member of cheloniaor testidinata; கூர்மம் (திவ். பெரியாழ். 4, 9, 5.) , கூர்மம்; ஓர்உயிரினம்; ஒருநோய்; மணம்
ஆமைபோல் - ஆமையை போன்று
ஆமை - āmai n. ஆம்¹ also யாமை [K. M.āma, Tu. ēme.] Turtle, any member of cheloniaor testidinata; கூர்மம் (திவ். பெரியாழ். 4, 9, 5.) , கூர்மம்; ஓர்உயிரினம்; ஒருநோய்; மணம்
ஆமைபோல் - ஆமையை போன்று
ஐந்து - ஐம்புலன், ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள்; ஐந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள்:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.
அடக்கல் - மறைத்தல்; கீழ்ப்படுத்துதல்; உட்படுத்துதல்; ஒடுக்கல்; பணியச்செய்தல்.
ஆற்றின் - ஆற்று-தல் - āṟṟu- 5 v. intr. 1. To become strong, powerful; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள், 493). 2. To be possible; கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி. 75). 3. To be sufficient; போதியதாதல். தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு. 225). 4. To escape, obtain deliverance, survive; உய்தல் (பிங்.) 5. To be equalto, to compare with; உவமையாதல். வையகமும்வானகமு மாற்ற லரிது (குறள், 101).--v. tr. 1. To
எழுமை - n. எழு-. [M. eḻuma.]Height; உயர்ச்சி (திவா.) ; ஏழ்வகை; ஏழுவகைப்பிறப்பு; ஏழுமுறைபிறக்கும்பிறப்பு.
எழுமையும்
ஏமாப்பு - n. ஏமா-. 1. Security,safeguard; அரணாகை. எழுமையு மேமாப்புடைத்து(குறள், 126). 2. Support, stay; வலியாகை. எச்சத்திற் கேமாப்புடைத்து (குறள், 112). 3. Hauteur,pride; இறுமாப்பு ஏமாப் பிரலை விலங்கலை (ஞானா.43, 25). 4. Object, intention, purpose; கருத்து (திவா.)
உடைத்து - உடைதல் - இருக்கும்
முழுப்பொருள்
ஒரு ஆமையானது தன் உறுப்புகளை பயன்படுத்தி இடர் புகுதாமல் தன்னை தற்காத்துக்கொள்ளும். ஒரு ஐந்தறிவு ஆமையாலே தன் உறுப்புகளை பயன்படுத்தி தற்காத்துக்கொள்ள முடிகிறது. மனிதனால் முடியுமா? முடியும். எளிது! அதனால் தான் ஆமையோடு ஒப்பிட்டு சொல்கிறார் திருவள்ளுவர்.
மனிதர்களுக்கு மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் உண்டு; இவ்வைந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை எனவாகும். தீமை மனிதனுள் புக இவ்வைந்து பொறிகளே வழிகள். இப்பொறிகளை மனிதன் அடக்கினால் அவனுள் தீமை புகவே புகாது. ஒருவனுள் தீமை இல்லை என்றால் அவனுக்கு அதுவே சிறந்த அரண். அப்படி ஐம்புலன்களையும் அடக்கினால் அது ஒருவனை வலிமையாக்கும், உயர்ச்சி தரும்.
மனிதர்களுக்கு மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் உண்டு; இவ்வைந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை எனவாகும். தீமை மனிதனுள் புக இவ்வைந்து பொறிகளே வழிகள். இப்பொறிகளை மனிதன் அடக்கினால் அவனுள் தீமை புகவே புகாது. ஒருவனுள் தீமை இல்லை என்றால் அவனுக்கு அதுவே சிறந்த அரண். அப்படி ஐம்புலன்களையும் அடக்கினால் அது ஒருவனை வலிமையாக்கும், உயர்ச்சி தரும்.
இங்கே வள்ளுவர் எழுமையும் என்று கூறுகிறார். ஏன் எழுமையும் என்கிறார் என்றால்? - ஒருவன் உயர்ச்சிக்கொள்ளும் பொழுதும் அடக்கத்தை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் தான் அது அரணாக அமையும். உதாரணமாக பெரிய ஆளாகிய பின் கண்ட மேனிக்கு உணவு உட்கொள்ளுவது, பார்த்த பொருளையெல்லாம் ஆடம்பரத்துக்காக வாங்குவது என்று இருந்தால் - உடம்பும் வீணாகி பொய்விடும், பணமும் செலவாகும் - இது நம் வீழ்ச்சிக்கு வித்திடும். மொத்தத்தில் நம் வருங்காலத்தில் அது நமக்கு கேட்டையே விளைவிக்கும். ஆதலால் சர்வமும் புலன்களை அடக்கி ஆண்டால் உயர்ச்சி நிச்சயம்.
யோக ஆசிரியர் G.சௌந்தர் ராஜன் அவர்கள் “ஒரு மனிதன் வெளியுலகத்தை விட்டு கொஞ்சம் நேரம் கூட தன்னை விலக்கிக்கொள்ளாவிட்டால் அவனுக்கு துன்பம் மட்டுமே எஞ்சும்” என்று கூறுகிறார். (உதாரணமாக எந்நேரமும் mobile, cinema, breaking news, cricket, gossip etc)
யோக ஆசிரியர் G.சௌந்தர் ராஜன் அவர்கள் “ஒரு மனிதன் வெளியுலகத்தை விட்டு கொஞ்சம் நேரம் கூட தன்னை விலக்கிக்கொள்ளாவிட்டால் அவனுக்கு துன்பம் மட்டுமே எஞ்சும்” என்று கூறுகிறார். (உதாரணமாக எந்நேரமும் mobile, cinema, breaking news, cricket, gossip etc)
யோக ஆசிரியர் G.சௌந்தர் ராஜன் அவர்கள், புலன்களை உள்ளுக்குள் ஒடுக்குவது, ப்ரத்யாகாரம் என்று அஷ்டாங்க யோக மரபில் 5ஆவது நிலையாக குறபடுகிறது என்று கூறுகிறார். ஒருவர் ப்ரத்யாகாரத்தை தொடர்ந்து செய்துவந்தால் அவர் அடுத்த 6ஆவது நிலையான தாரணா நிலைய அடைய முடியும். தாரணா நிலை என்பது ஒழுகுதல் என்று பொருள் கொள்ளப்படுகிறது. ஒருவர் தொடர்ந்து தாரண நிலையில் இருந்தால் அந்நேரத்தில் தனது உயிர் ஆற்றலை குவித்து அதனை சேமித்துவைத்துக்கொள்ளலாம். பின்பு அதனை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒப்புமை
”அடங்கலால் ஆமை போன்றும்” (சீவக.1895)
“ஐவகைப் பொறியும் வாட்டி ஆமையின் அடங்கி” (சீவக.2824)
“ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி” (திருமந் 133)
“அடக்கும்ஐம் பொறியொடு கரணத்தப்புறம்
கடக்கும்வா லுணர்வினுக் கணுகும் காட்சியான்” (கம்ப.தைலமாட்டு 27)
”குறள் 398”
“தாமரைக் கண்ணொடேர் தவத்தின் மாலையன்
ஆமையின் இருக்கையன்” (கம்ப.சடாயு உயிர்நீத்த 23)
உடல்மேல் உள்ளம் கொண்ட வெற்றியே ஆற்றல். பொருள்மேல் ஆற்றல் கொண்ட வெற்றியே செல்வம். செல்வத்தின்மேல் கனவு கொண்ட வெற்றியே அழகு. அழகின்மேல் மானுடன் கொள்ளும் வெற்றியே கலை. முழுமைகொண்ட கலை மெய்மையின் பருவடிவு. மெய்மையே மானுடனை தெய்வமாக்குகிறது.
பரிமேலழகர் உரை
ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து. (ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் 'ஆமை போல்' என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.
மு.வரதராசனார் உரை
ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.
சாலமன் பாப்பையா உரை
ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.
பொருள்: ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஒரு பிறப்பின்கண் (ஒருவன்) ஆமை போல ஐம் பொறிகளையும் அடக்குதலைச் செய்யின், எழுமையும் ஏமாப்பு உடைத்து - (அவன் அடையும்) ஏழு பிறப்பின்கண்ணும் (அவனுக்கு அது) காவலாதலை யுடைத்து.
கருத்து: அடக்கம் மேல் வரும் ஏழு பிறப்பிலும் பெருமை பயக்கும்.
English Meaning - As I taught a kid - Rajesh
Just like a turtle hides its head in its shell when there is a danger, a person should learn to control his five senses. This discipline of controlling senses will act as a fort from danger
If you are able to control your five senses, your productivity will increase. Controlling senses helps in discipline which in turn helps to improve focus on work thereby leading to growth
Questions that I ask to the kid
What should you do for growth?
(like what or which animal/) How should you control your senses and what is the outcome of it?
No comments:
Post a Comment