குறள் 404 கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார் [பொருட்பால், அரசியல், கல்லாமை] பொருள் கல்லாதான் - கல்வி கற்காதவன் ஒட்பம் - அறிவு; அழகு; நன்மை; மேன்மை. கழிய - மிகவும் கழிதல் - மிகுதல்; கடந்துபோதல்; நடத்தல்; குறைபடுதல்; அழிதல்; ஒழிதல்; சாதல்; முடிவடைதல்; வருந்துதல்; மலம்முதலியனவெளிப்படுதல்; அச்சங்கொள்ளுதல். நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல். கொள்ளார் - மனம்பொறாதவர்; பகைவர். அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா உடையார் - உடையவர்கள் முழுப்பொருள் பல உரைகள் ஒட்பம் என்ற சொல்லுக்கு அறிவு என்ற அர்த்தத்திலேயே பொருள் கூறுகின்றன. ஆனால் ஒட்பம் என்ற சொல்லுக்கு அழகு என்ற சொல்லும் பொருந்தும். ஆதலால் கல்விகற்காதவர்கள் எவ்வளவு மிகுதியாக அலங்காரம் / ஒப்பனை / பாவனை/ ஆடம்பரம் செய்தாலும் அது நன்றாக இருந்தாலும் அவர்களை கற்றோர் சான்றோர் ஏற்கமாட்டார்கள்....
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.