Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை

குறள் 344
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.

ஆகும் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

நோன்பிற்கு - நோன்பு - தவம்; விரதம்.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

மயல் - மயக்கம்; பைத்தியம்; ஆசை; காமவிருப்பு; மாயை; ஐயம்; அச்சம்; செத்தை; நெருப்பு; மந்தம்; பிசாசம்.

ஆகும் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

மற்றும் - மேலும்; மீண்டும்.

பெயர்த்து - Again,in return; பின்னும்.

முழுப்பொருள்
ஒருவர் வாழ்க்கையில் ஒன்றை துறந்தார் என்றால் அந்த இன்மையே இயல்பாக மாறிவிடும். அதாவது இது வேண்டாம் என்று இருந்து விட்டால் அது நமக்கு தேவைப்படாது. அது இல்லாமலே நம்மால் வாழ முடியும். (பொதுவாக இது இல்லாமல் வாழ்வில் வாழ முடியாது என்று ஏதும் இல்லை). மேலும் அச்செயல் நமக்கு கட்டுப்பாட்டில் இருக்கும். முதலில் கடினமாக தான் இருக்கும்.  ஆனால் ஒன்றை உதறியப் பிறகு இன்னொன்று எளிது என்று நமக்கே தோன்றும். முதல் தடவை வேண்டாம் என்று சொல்வது கடினம், இரண்டாம் தடவை கடினம். இப்படி ஒரு 10-15 நாட்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால் அதன் பிறகு வேண்டாம் என்று சொல்வது எளிதாக மாறுவதை நாம் உணர முடியும். பிறகு அது இயல்பாகிவிடும். அதனால் பலர் ஒரு மண்டலம் (42 நாட்கள்) ஒரு பழக்கத்தை கடைப்பிடிக்க சொல்வர். ஏனெனில் நமது மூலையிலும் அந்த மாற்றம் நிகழ வேண்டும்.

ஆனால் ஒன்றின் மேல் பற்றுக்கொண்டால் அது மேல் கொண்ட மயக்கத்தினால் அது நம்மிடம் மறுபடியும் மறுபடியும் வரும். அதுவே பற்றின் வலிமையும் தன்மையும் ஆகும். அதுமட்டும் இன்றி அந்த செயல்/பொருள்/பழக்கத்தின் கட்டுப்பாட்டில் நாம் இருப்போம்.

ஆதலால் வேண்டாம் என்று ஒரு பொருளை/செயலை/பழக்கத்தை விட்டுவிட்டு அதனை நோன்பாக கடைப்பிடித்தால் நமக்கு அந்த இன்மை  இயல்பாக மாறிவிடும். இயல்பு என்றால் ஒழுக்கம் என்ற அர்த்தமும் அடங்கும். அந்த நற்குணம் நமக்கு இன்பத்தை தரும்.

துறவு நிகழவேண்டிய ஒன்று. கனி பழுப்பது போல. நிகழாது ஏற்கப்படும் துறவு ஒரு வேடம். அது அவ்வேடதாரியை அற்பனாகவோ கோமாளியாகவோ அயோக்கியனாகவோ ஆக்கிவிடுகிறது என்பதை நினைவில் கொள்க.

எல்லோரும் அறிந்த குட்டிக்கதையொன்றை இங்கே நினவுகூறுவது நல்லது, துறந்த ஒருவருக்கு ஒருவர் தங்க இடம் கொடுத்தார். அவ்விடத்தில் எலித்தொல்லைத் தாங்கமுடியாமல் போக, அதற்காகப் பூனை வளர்த்தாராம் துறவி. அப்பூனையின் பால் தேவைக்காக, ஒரு மாட்டையும், அதை பராமரிக்க ஒரு கோனாரையும், அவன் காரணமாக, அவனுடைய குடும்பமும் குழந்தைகளும் வந்து சேர, இவ்வாறு தனித்திருந்த துறவிக்கு, ஒன்றன் பின் ஒன்றாக தேவைகளும், உறவுகளும் ஏற்பட்டதாகக் கதை. அதனுடைய சுருக்கமே இக்குறள்.

மேலும்: அஷோக் உரை

விதுரர் “ஆம், நான் துறக்க விரும்புவது இதைத்தான்” என்றார். இளைய யாதவர் “வெறுத்தலும் விரும்புதலும் இல்லாதவன் எங்கிருந்தாலும் துறவியே. அகம் அசையா நிலையே யோகம். உலகியலையும் யோகத்தையும் வெவ்வேறெனக் கருதுபவர்கள் அறியாதவர்களே. உலகியலில் யோகத்திலமைபவன் இரண்டின் பயனையும் அடைகிறான். செயல்களில் ஒட்டாதவன் செயல்களின் பயனால் சிறப்புறுகிறான். மெய்யறிந்தவன் நான் எதையும் செய்யவில்லை என்று உணர்ந்தவன்” என்றார்.

எழுத்தாளர் கமலதேவியின் ‘நிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று’ சிறுகதை’யில் இவ்வரி வருகிறது. இதைப்படித்த பின்பு இக்குறளுக்கு எனக்கு ஞாபகம் வருகிறது. 
"ஒன்றை உதறியப் பிறகு இன்னொன்று எளிது போல."

பரிமேலழகர் உரை
ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பு ஆகும் - பற்றப்படுவதொரு பொருளும் இல்லாமை தவம் செய்வார்க்கு இயல்பாம், உடைமை பெயர்த்து மற்றும் மயல் ஆகும் - அஃதன்றி, ஒன்றாயினும் உடைமை அத்தவத்தைப் போக்குதலான், மீண்டும் மயங்குவதற்கு ஏதுவாம். (இழிவுசிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'நோன்பு' என்பதூஉம், 'மயல்' என்பதூஉம் ஆகுபெயர். பெயர்த்தலான் என்பது திரிந்து நின்றது. 'நோன்பைப்பெயர்த்தலான்' என வேற்றுமைப்படுத்துக் கூட்டுக. எல்லாப்பொருள்களையும் விட்டு ஒரு பொருளை விடாதவழியும், அது சார்பாகவிட்டன எல்லாம் மீண்டும் வந்து தவத்திற்குஇடையீடாய் மனக்கலக்கம் செய்யும் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் 'எனது'என்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
யாதொரு பொருளும் இலதாதல் தவத்திற்கியல்பாகும்: பொருளுடைமை மீண்டும் பிறத்தற்குக் காரணமான மயக்கத்தைத் தரும்

மு.வரதராசனார் உரை
தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.

சாலமன் பாப்பையா உரை
உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Normally, if one gives up something in life, it is initially difficult and gives pain. However, if one is determined and says NO to it (i.e. I don't want this and gives up something), over next few days, the absence of it becomes natural to him/her. One realizes that he/she is in control not the one to which he/she said NO. Discipline becomes a nature to him. We know that discipline yields only good results and helps us to attain moksha/our goals. 

However, if one is a slave to his/her desires, anger, distractions(kama, krodha, moga), then those things comes to us repeatedly. That's power of desires/anger/distractions. Those control us.

Questions that I ask to the kid
What happens when you persistently say NO to one thing? (Follow up: What do you realize about the power of the thing to which you said NO)

No comments:

Post a Comment