Skip to main content

Posts

062 ஆள்வினையுடைமை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - ஆள்வினையுடைமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 611 அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் குறள் 612 வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு குறள் 613 தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு குறள் 614 தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும் குறள் 615 இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண் குறள் 616 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் குறள் 617 மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்  தாளுளான் தாமரையி னாள் குறள் 618 பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி குறள் 619 தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் குறள் 620 ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் பதிவு வரிசை

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

குறள் 611 அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் [பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அருமை - அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை உடைத்து -   உடைதல் - இருக்கும், செல்வமாக கொண்டது என்று - என்று  அசாவாமை - தளராமை வேண்டும் - vēṇṭum   imp. v. + dat. veeNum வேணும் want; should, need வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை. முயற்சி - ஊக்கம்; இடைவிடாதஉழைப்பு; வேலை தரும் - கொடுக்கும் முழுப்பொருள் ஒரு செயலை செய்வதற்கு முக்கியமான தேவை அச்செயல் நமக்கு நல்ல பலனை தரும் பெருமையை என்ற நம்பிக்கை. மேலும் அச்செயலை செய்வதற்கான தேவை (purpose). அப்படி அச்செயலின் மீது நம்பிக்கை (நம்பிக்கையும், அச்செயலின் தேவையின் மீது நம்பிக்கையும்) குன்றாமல் எப்பேர்ப்பட்ட இடர்கள் வந்தாலும் தளர்வடையாமால் சோம்பல்கொள்ளாமல் அச்செயலை செய்...

061 மடியின்மை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - மடியின்மை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 601 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்  மாசூர மாய்ந்து கெடும் குறள் 602 மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர் குறள் 603 மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து குறள் 604 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு குறள் 605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்  கெடுநீரார் காமக் கலன் குறள் 606 படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது குறள் 607 இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர் குறள் 608 மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும் குறள் 609 குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும் குறள் 610 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு பதிவு வரிசை

மடியை மடியா ஒழுகல்

குறள் 602 மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர் [பொருட்பால், அரசியல், மடியின்மை] பொருள் மடி - வயிறு, வஸ்திரம், கேடு, சோம்பல், தரம், நோய், பொய், ஓர்விதவலை மடியின்மை - சோம்பல் / கேடு / நோய் / பொய் இல்லாமை; மடியை - சோம்பலினை மடியா - பற்றாது ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல் குடியைக் - குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிட குடியாக - குடியினை போன்று வேண்டுபவர் - வேண்டுகின்றவர் / விரும்புபவர் முழுப்பொருள் ஒருவர் வாழ்வில் சோம்பல் என்னும் குணம் மிக தீய விளைவுகளை விளைவிக்கும் ஒரு நோய். அத்தகைய சோம்பல் எப்போதெல்லாம் நம்மை பற்றுமோ அதனை மடித்து ஊக்கத்துடன் வாழ்வில் ஒழுகினால் உயர்ச்சி நிச்சயம்.  ஒழுகல் என்றால் உயர்ச்சி என்றும் அர்த்தம். உயர்ச்சி வேண்டும் என்றால் சோம்பலை மடித்து அல்லது தவிர்த்து ஊக்கத்துடன் செயல்பட்டால் உயர்வான குடியினை ஒருவர் அடைவார்கள். உயர்வான குடி நிலையை அடைய வி...

உள்ளம் இலாதவர் எய்தார்

குறள் 598 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு [பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை] பொருள் ஊக்கம் - மனத்திடம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும் உள்ளம் - ஊக்கம், மனத்திடம்; அறிவு, நினைவு, உணர்ச்சி, மனத்திடம், கற்பனை, சிந்தனை, ஊக்கம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. இலாதவர் - இல்லாதவர் எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். எய்தார் - அடையமாட்டார்கள். உலகத்து - உலகத்தினுடைய உலகத்தும் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம் வள்ளியம் - வள் - வளம்; பெருமை; நெருக்கம்; கூர்மை; வாள்; வார்; வாளுறை; கடிவாளம்; காது; படுக்கை; வலிமை; வலிப்பற்றிரும்பு என்னும் - என்கிற செருக்கு -  cerukku   s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, ...

060 ஊக்கமுடைமை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - ஊக்கமுடைமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 591 உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று குறள் 592 உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை  நில்லாது நீங்கி விடும் குறள் 593 ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார் குறள் 594 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை குறள் 595 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு குறள் 596 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது  தள்ளினுந் தள்ளாமை நீர்த்து குறள் 597 சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு குறள் 598 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு குறள் 599 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின் குறள் 600 உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு பதிவு வரிசை

உடையர் எனப்படுவது ஊக்கம்

குறள் 591 உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று [பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் உடையர் - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள் எனப்படுவது - என்று என்பது ஊக்கம் - மனத்திடம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும் அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி இல்லார் - இல்லாதவர்கள் உடையது - செல்வமாக கொண்டது உடையரோ - ஊக்க கொண்டவர்கள் உடையதாக நினைக்காத மற்று - மற்ற எல்லா செல்வங்களும் முழுப்பொருள் எவரிடம் செல்வம் உண்டு என்று பொருள் கொள்ள வேண்டும்? எவரிடம் ஊக்கம் என்னும் செல்வம் இருக்கிறதோ  அவரே செல்வந்தர். அவரே செல்வம் உடையர். அப்படி ஊக்கம் இல்லாதவர்கள் செல்வமாக கருதுவது ஊக்கம் உள்ளவர்கள் செல்வமாக கருதாத நிலையில்லா பொருட்ச்செல்வம். ஏனெனில் பொருட்ச்செல்வம் எப்பொழுது வேண்டுமானாலும் நம்மை விட்டு போகும்...