குறள் 591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று
[பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
உடையர் - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள்
எனப்படுவது - என்று என்பது
ஊக்கம் - மனத்திடம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும்
அஃது - aḵtu pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி
இல்லார் - இல்லாதவர்கள்
உடையது - செல்வமாக கொண்டது
உடையரோ - ஊக்க கொண்டவர்கள் உடையதாக நினைக்காத
மற்று - மற்ற எல்லா செல்வங்களும்

முழுப்பொருள்
எவரிடம் செல்வம் உண்டு என்று பொருள் கொள்ள வேண்டும்? எவரிடம் ஊக்கம் என்னும் செல்வம் இருக்கிறதோ அவரே செல்வந்தர். அவரே செல்வம் உடையர். அப்படி ஊக்கம் இல்லாதவர்கள் செல்வமாக கருதுவது ஊக்கம் உள்ளவர்கள் செல்வமாக கருதாத நிலையில்லா பொருட்ச்செல்வம். ஏனெனில் பொருட்ச்செல்வம் எப்பொழுது வேண்டுமானாலும் நம்மை விட்டு போகும். ஆனால் ஊக்கம் என்பது நமக்கு உள்ளே உள்ள செல்வம். உள்ளே உள்ள செல்வதை வைத்து வெளியே உள்ள பொருட்ச்செல்வத்தை ஈட்டலாம். ஆனால் வெளியே உள்ள பொருட்ச்செல்வத்தை வைத்து உள்ளே உள்ள ஊக்கத்தையும் ஈட்டமுடியாது பொருளையும் ஈட்டமுடியாது. இவ்வாழ்க்கையில் வாழவேண்டுமென்ற ஊக்கமும் வெல்லவேண்டுமென்ற துடிப்பும் கொண்டவர்களுக்கே செல்வமும் வெற்றியும் அமைகிறது என்று வலியுறுத்திச் செல்கிறது வள்ளுவரின் கூற்று. செல்வமும் வெற்றியும் ஊக்கமுடையவனை நோக்கி வழிகேட்டுச்செல்லும்
உதாரணமாக ஒரு தொழிலை தொடங்கியவர் பல சந்தை காரணங்களால் தொழிலை மூடும் நிலைக்கு தள்ளப்படுவார். அவருக்கு ஊக்கம் இருந்தால் அதே தொழிலை முன்னுக்கு கொண்டுவந்தோ அல்லது புதிய தொழிலை முன்னுக்கு கொண்டுவந்தோ இழந்த செல்வதை ஈட்டிவிடுவார். ஆனால் ஊக்கம் இல்லாதவர் ஒரு தடவை பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்ட பிறகு மறுபடியும் எவ்வித ஆராய்ச்சியும் செய்யாமல் எவ்வித முதலீடும் செய்யாமல் இருப்பார். அவருக்கு தன்னிடம் இருக்கும் செல்வம் மட்டுமே செல்வம். நம்பிக்கை இல்லாதவர். அதற்கு தேவையான ஆக்கம் இல்லாதவர். இது தொழில் என்று இல்லை விளையாட்டு, கலை, மருத்துவம் ஆராய்ச்சி என்று எல்லாவற்றிருக்கும் பொருந்தும்.
ஊக்கம் கொண்டவரே செல்வம் கொண்டவர்கள். ஊக்கம் இல்லாதவர்கள் எவ்வித ஒரு செல்வத்தையும் கொள்ளாதவர்கள் என்று பொருள்.

மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”ஊக்கமது கைவிடேல்” (ஆத்திசூடி)
பரிமேலழகர் உரை
உடையர் எனப்படுவது ஊக்கம் - ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃதில்லார் மற்று உடையது உடையரோ - அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார்.
('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்' மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை: அஃதிலாதார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார்.
மு.வரதராசனார் உரை
மு.வரதராசனார் உரை
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.
சாலமன் பாப்பையா உரை
ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?.
English Meaning - As I taught a kid - Rajesh
A person is considered to own something(wealth) only if he has and owns perseverance, motivation/drive. If one doesn't not possess perseverance and motivation then despite having money and other financial assets one is not considered owning wealth. Because all these financial wealth can leave us anytime and we can earn them back if we have perseverance/motivation. But if we lose motivation and perseverance, we can get the financial wealth and can't protect it too. Also, wealth goes to the person who has motivation and perseverance.
Questions that I ask to the kid
Who is considered as a person who has wealth?
When he is not considered to be not owning wealth despite having money in bank?
No comments:
Post a Comment