குறள் 293 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தன் நெஞ்சு - தன்னுடைய மனம்/ நெஞ்சம் (பிறர் அறியாதது) அறிவது - அறிந்துக்கொள்வது / அறிவது / தெளிந்துக்கொள்வது / உண்மையானது பொய்யற்க - (அதனை) பிறர் அறியவில்லையே என்று எண்ணி பொய்யினை கூறாதே பொய்த்தபின் - மீறி பொய் சொன்னால், அதன் பின் தன் நெஞ்சே - தன்னுடைய நெஞ்சமே தன்னைச் சுடும் - குற்ற உணர்ச்சியால் தன்னை சுட்டெரிக்கும் நெருப்பாக ஆகிவிடும் முழுப்பொருள் பல உண்மைகள் எல்லோருக்குமே தெரிந்து இருக்கும். ஆதலால் பொய் சொன்னாலும் மற்றவர்கள் சுட்டிக்காட்டி தகுந்த தண்டனை கொடுத்து ஒருவனை அழித்து விடுவர். ஆனால் பிறருக்கு தெரியாத சில உண்மைகள் தனக்கு மட்டும் தெரிந்த சில உண்மைகள் பல நேரம் அமையும். குறிப்பாக குடும்பங்களில், அலுவலங்களில், நட்பு வட்டாரத்தில். அத்தகைய நேரங்களில் பிறருக்கு தெரியாதே எனக்கு மட்டுமே தெரிந்த உண்மையாயிற்றே என்று எண்ணாமல் உண்மையை சொல்லுக. பொய்யை சொல்லாதே, உண்மையை மறைக்காதே. மீ...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.