குறள் 623 இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர் [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை] பொருள் இடுக்கண் - இடுங்கு. + கண் - மலர்ந்த நோக்கமின்றி மையனோக்கம்படவரும்இரக்கம்; துன்பம், வறுமை அழியாமை - அழிவின்மை; மனம்கலங்காமை. இடுக்கணழியாமை (அதிகாரம்) - துன்பக்காலத்து மனங்கலங்காமை பொருள் இடும்பை - துன்பம்; தீமை; நோய்; வறுமை; அச்சம். இடும்பைக்கு - துன்பத்திற்கு இடும்பை - துன்பம் படு - 4. paTu (paTa, paTTu) படு (பட, பட்டு) suffer; experience, feel, endure; formative of verbs of feeling from nouns படுப்பர் - அச்சச்சோ தேவையில்லாமல் துன்பம் கொடுத்துவிட்டோமே என்று கவலை பெறும் அளவிற்கு துன்பம் கொடுப்பார்கள். துன்பம் கொடுக்க புதிய வழிகளில் அற்று இடும்பைக்கு - துன்பம் நேரும் போது இடும்பை படாஅதவர் – அளபெடை இலக்கணம் கூறினால் மட்டும் போதாது. சிலர் இடும்பையை அரைவாசி, முக்கால்வாசி எதிர்த்து நிற்பர். முழுவதும் கடைசி வரை எதிர்த்து நில்லார். இவ்வாறு சிறு இடைவெளி விட்டாலும் இடும்பை வந்து தாக்கி விடும் என்பதற்காக இட...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.