Posts

Showing posts with the label W - டாக்டர் L.மகாதேவன்

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

  குறள் 950 உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற்கூற்றே மருந்து [பொருட்பால், நட்பியல், மருந்து] பொருள் உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண். உற்றவன் - சுற்றத்தான்; நண்பன்; நோயாளி. தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல். தீர்ப்பான் - மருத்துவன் மருந்து  - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை. உழை - இடம்; பக்கம்; யாழின்ஒருநரம்பு; மான்; பசு; பூவிதழ்; ஏழனுருபு; உவர்மண்; விடியற்காலம்; கதிரவன்மனைவியருள்ஒருத்தி; வாணாசுரன்மகள்; இடைச்சுரம். உழைச்செல்வான் - நோயாளியின் பக்கத்திலிருந்து மருந்து முதலியன கொடுப்போன்; மருத்துவனோடு உதவிக்குச் செல்பவன். என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். அப்பால் - அதன்மேல்; அப்பக்கம். நாற்  - நான்கு கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன். கூற்றே மருந்து - அமுதம்; ...

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

குறள் 945 மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு [பொருட்பால், நட்பியல், மருந்து] பொருள் மாறுபாடு - பகைமை; வேறுபடுதல்; ஒவ்வாமை ; புரட்டு இல்லாத - இல்லை, வறுமை உண்டி - உணவு; சோறு இரை பறவை விலங்கு இவற்றின்உணவு; உண்டிச்சீட்டு; கருவூலம் மாற்றுச்சீட்டு; காணிக்கைப்பெட்டி; கோயிலுக்குக்கொடுக்கும்பணம்; நுகர்ச்சி கொட்டைக்கரந்தை மறுத்து - மறுபடியும்; மேலும். மறுத்தல் - தடுத்தல்; திருப்புதல்; இல்லையென்னுதல்; நீக்குதல்; வெட்குதல்; திரும்பச்செய்தல்; இல்லாமற்போதல். உண்ணின் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். ஊறுபாடு - துன்பம்; தீமை; புண்படுகை; காயம்; சேதம். இல்லை - இல்லை உயிர்க்கு - இந்த உயிருக்கு, இந்த பிறவியிற்கு உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் முழுப்பொருள் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒவ்வாமையல்லாத உணவினை உண்ணும் அளவிற்கு மேல் செல்ல மறுத்து அளவாக உண்டால் உணவினால் எவ்வித துன்பமும...

மிகினும் குறையினும் நோய்செய்யும்

Image
குறள் 941 மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்  வளிமுதலா எண்ணிய மூன்று [பொருட்பால், நட்பியல், மருந்து] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மிகினும் - மிகுதல் - அதிகமாதல்; பெருகுதல்; மிஞ்சுதல்; பொங்குதல்; எழுத்துஅதிகரித்தல்; நெருங்குதல்; சிறத்தல்; ஒன்றின்மேம்படுதல்; செருக்கடைதல்; எஞ்சுதல்; தீமையாதல். குறையினும் - குறைதல் - சிறுகுதல்; இடம்பொருள்ஏவல்முதலியவற்றால்தாழ்தல்; பற்றாமற்போதல்; அரைகுறையாதல்; விலையேறும்படிபண்டம்அருகுதல்; எழுத்துக்கெடுதல்; வருந்திஉயிரொடுங்குதல்; குறைவுற்றுவருந்துதல்; ஊக்கங்குன்றுதல்; தோல்வியுறுதல்; அழிதல். நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். நூலோர் - நூலாசிரியர்; கற்றோர்; அமைச்சர்; பார்ப்பனர். வளி - காற்று; சுழல்காற்று; உடல்வாதம்; அண்டவாதநோய் குடலிறக்கம், விரைவாதம்) (cf. balin. Hernia); சிறியகாலவளவுவகை; வாதமாகிய வாயு முதலாகிய முதலா - முதல் எண்ணிய - எண்ணிக்கை மூன்று -...