Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

மிகினும் குறையினும் நோய்செய்யும்

குறள் 941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று
[பொருட்பால், நட்பியல், மருந்து]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மிகினும் - மிகுதல் - அதிகமாதல்; பெருகுதல்; மிஞ்சுதல்; பொங்குதல்; எழுத்துஅதிகரித்தல்; நெருங்குதல்; சிறத்தல்; ஒன்றின்மேம்படுதல்; செருக்கடைதல்; எஞ்சுதல்; தீமையாதல்.

குறையினும் - குறைதல் - சிறுகுதல்; இடம்பொருள்ஏவல்முதலியவற்றால்தாழ்தல்; பற்றாமற்போதல்; அரைகுறையாதல்; விலையேறும்படிபண்டம்அருகுதல்; எழுத்துக்கெடுதல்; வருந்திஉயிரொடுங்குதல்; குறைவுற்றுவருந்துதல்; ஊக்கங்குன்றுதல்; தோல்வியுறுதல்; அழிதல்.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

நூலோர் - நூலாசிரியர்; கற்றோர்; அமைச்சர்; பார்ப்பனர்.

வளி - காற்று; சுழல்காற்று; உடல்வாதம்; அண்டவாதநோய் குடலிறக்கம், விரைவாதம்) (cf. balin. Hernia); சிறியகாலவளவுவகை; வாதமாகிய வாயு முதலாகிய
முதலா - முதல்

எண்ணிய - எண்ணிக்கை

மூன்று - மூன்று மூலக்கூறுகளாம் வாதம், பித்தம், கபம் போன்றவை

வாதம் - உடலில் வாயு மிகுதலாகிய பிணிக்கூறு; காண்க:வாதநோய்; வாதநாடி; பத்துவகைவாயு; காற்று; சொல்; வாதம்முதலியவற்றால்ஒருபக்கத்தைஎடுத்துக்கூறுகை; தருக்கம்; உரையாடல்இரசவாதவித்தை; வில்வமரம்.

பித்தம் - ஈரலிலிருந்து தோன்றும் நீர்வகை; பித்தம் என்னும் பிணிக்கூறு; மயக்கம்; பைத்தியம்; கூத்தின்வகை; மிளகு; மண்வெட்டிக்கழுத்து.

சிலேட்டுமம் - உடலிலுள்ள கபக்கூறு

முழுப்பொருள்
நம் உடலில் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்ற மூன்றும் இருக்க வேண்டிய அளவில் சீராக இருக்க வேண்டும். அப்படி அல்லாது ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது மிகுதியானாலோ அது நோயாக நமது உடலில் தோன்றிவிடும் என்று மருத்துவ உலக நூலோர் கூறுவதாக ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்.  மருத்துவத்தில், நோயைத் தடுப்பதே முதல் மருந்து. அதற்கு ஒருவர் உடம்பில் இருக்கும் இம்மூன்று மூலக்கூறுகளும் ஒரு நுண்ணிய சம நிலையில் இருக்கவேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா? நோயைத் தடுப்பதற்கான அறிவே முதல் மருந்து. அதையே வள்ளுவரும் உணர்த்துகிறார்.

ஆயூர்வேத டாக்டர் இல்.மகாதேவன்/இல்.மஹாதேவன் (Ayurveda Dr. L.Mahadevan) அவர்கள் “முதற்கால்” என்றொரு நேர்காணல் நூலில் இவ்வாறு கூறுகிறார்.
பொதுவாக நோய்களுக்குத் தான் பத்தியம். சேராங்கொட்டை போன்ற மருந்துகள் பயன்படுத்தும்போது அரிதாக மருந்திற்கும் பத்தியங்கள் உண்டு. நோய்களுக்குப் பத்தியம் மிக மிக முக்கியம். தொடக்க காலத்தில் நான் பத்தியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை என சொல்லிக்கொண்டு இருந்ததுண்டு. ஆனால் இப்போது பத்தியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறேன். ஆட்டோ இம்யூன் நோய்கள், அதாவது முடக்குவாதம் (rheumatoid) போன்ற, நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலின் சில திசுக்களுக்கு எதிராகச் செயல்படும் நோய்களுக்கெல்லாம் பத்தியம் கடைபிடித்துத்தான் ஆக வேண்டும். பத்தியம் என்ற வார்த்தைக்கு சிகிச்சை என்று பொருள். ஸ்ரோதஸ்களுக்கு உகந்தது பத்தியம். இப்பொழுது ஆங்கில மருந்துகளிலுமே பத்தியம் பின்பற்றுகிறார்கள். சிறுநீரக நோயில் பொட்டாசியம், உப்பு சேர்க்கக் கூடாது, புரதத்தைக் குறைக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள், சர்க்கரை நோயில் பிரக்டோஸ், மாவுச்சத்து உட்கொள்ளக் கூடாது என்கிறார்கள். தைராய்டு சுரபி குறைவாகச் சுரக்கும் நிலையில் முட்டைக்கோஸைச் சாப்பிடக் கூடாது. நன்மை பயக்கின்ற உணவுகளை சாப்பிட வேண்டும், தீமை பயக்கின்ற உணவுகளை நிறுத்த வேண்டும். இதுவே பத்தியம். ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்று அன்றே சொல்லிவிட்டார் திருவள்ளுவர். அது மட்டுமல்ல; ’மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு’ எனும் குறள் பத்தியத்தைத்தானே உணர்த்துகிறது. பத்தியம் என்பது மறுத்து உண்ணல்தானே?



இதை பற்றி விரிவாக ஆயுர்வேத மருத்துவர் சிவராமன் விகடனில் எழுதியதை கண்டிப்பாக கீழ் காணுங்கள்
வாதம், பித்தம், கபம்... மந்திரக் கூட்டணி!  - நலம் நல்லது - டாக்டர் சிவராமன் (நன்றி: விகடன்)
`எதைத் தின்றால் `பித்தம்’ தெளியும்?’, `ஒருவேளை `வாத’க் குடைசலாய் இருக்குமோ’, `நெஞ்சில் `கபம்’ கட்டியிருக்கு...’ என்கிற உரையாடல்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இந்த மூன்றும் மிக முக்கியமானவை. `வாதம், பித்தம், கபம்’ அல்லது `வளி, அழல், ஐயம்’ எனும் மூன்று விஷயங்களும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொர் அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. இவற்றைக் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

வாதம் பித்தம் கபம்

`முத்தாது’ என்று தமிழ்ச் சித்த மருத்துவத்திலும், `த்ரீதோஷா’ என்று ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயங்களைத்தான்

`மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று’

- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையைச் சொல்லியிருக்கிறார்.

பழங்குடிகள் நோய் வந்து சிகிச்சை பெறுவதைவிட நோய் வராமலேயே தடுப்பதற்கு முன்னுரிமை தருகிறவர்கள். எனவே, அவர்களுடைய சாப்பாட்டிலேயே மூலிகைகளின் பயன்பாடு இருக்கிறது. 

வாதம், பித்தம், கபம் 
வாதம், நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும்.

பித்தம், தன் வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும்.

கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.

வாத சம்பந்த பிணிகள்
வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.

பித்த சம்பந்த பிணிகள்:
பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட்காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும்.

சிலேத்தும சம்பந்த பிணிகள்
சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.

கீரை
தவிர்க்கவேண்டிய, சாப்பிடவேண்டிய உணவுகள்!

* வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணிபுரிந்தால்தான், உடல் இயக்கம் சீராக நடக்கும். அதற்கு உணவு மிகவும் முக்கியம். ஒருவருக்கு மூட்டுவலி உள்ளது, கழுத்து வலி எனும் ஸ்பாண்டிலைசிஸ் உள்ளது என்றால், வாதம் சீர்கெட்டிருக்கிறது என்று அர்த்தம். அவர், வாதத்தைக் குறைக்கும் உணவைச் சாப்பிட வேண்டும்.

* புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்துக்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கனைத் தவிர்க்க வேண்டும். இவை, வாயுவைத் தரும்; வாதத்தைக் கூட்டும். மூட்டுவலி, மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுகளைக் கூடிய வரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் லவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தைக் குறைக்க உதவும்.


மிளகு
* பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும். அல்சர், உயர் ரத்த அழுத்தம் என பித்த நோய்ப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்றைய வாழ்வியல் சூழலில் பல நோய்கள் பெருகுவதற்கு பித்தம் மிக முக்கியக் காரணம். பித்தத்தைக் குறைக்க உணவில் காரத்தை, எண்ணெயைக் குறைக்க வேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது.

* அதிகமாக கோதுமையைச் சேர்ப்பதுகூட பித்தத்தைக் கூட்டும். அரிசி நல்லது... ஆனால் கைக்குத்தல் அரிசியாகப் பார்த்துச் சாப்பிடுவது நல்லது. கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி... இவையெல்லாம் பித்தம் தணிக்கும். மனத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம்.

எலுமிச்சை

* சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு... என கபத்தால் வரும் நோய்கள் பல. பால், இனிப்பு, தர்பூசணி, மஞ்சள் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானங்கள், மில்க் ஸ்வீட், சாக்லேட் இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். இவற்றை மழைக்காலத்திலும், கோடைகாலத்தில் அதிகாலை மற்றும் இரவு வேளையிலும் தவிர்க்கலாம். மிளகு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவையெல்லாம் கபம் போக்க உதவும். அலுவலகத்திலிருந்து தும்மல் போட்டுக்கொண்டே வரும் வாழ்க்கைத்துணைக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல், அன்றிரவு தூக்கத்தைக் கெடுக்காது.

வாதம், பித்தம், கபம் - இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியைக் காப்பதில், சமையல்கூடத்துக்கு பங்கு உண்டு. நம் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம். அது, நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்.

மேலும்: 
ஜீரணத்தை சீராக்கும் வழிமுறைகள்! நலம் நல்லது-10! மருத்துவர் கு.சிவராமன் #DailyHealthDose

மேலும்
”உடல் வலு மருந்து” (புயலிலே ஒரு தோனி / ப.சிங்காரம்)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[பழவினையானும் காரணங்களானும் மக்கட்கு வாதம் முதலிய பிணிகள் வரும் ; அவற்றுள் பழவினையான் வருவன அதன் கழிவின்கண் அல்லது தீராமையின் அவை ஒழித்து , ஏனைக்காரணங்களான் வருவனவற்றைத் தீர்க்கும் மருந்தின் திறம் கூறுகின்றார் . காரணங்களாவன உணவு செயல்களது ஒவ்வாமையாகலின் , பிணிகளும் காரணத்தான் வருவனவாயின.]

மிகினும் குறையினும் - உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கு ஒத்த அளவின் அன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும்; நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்றும் நோய் செய்யும் - ஆயுள்வேத முடையரால் வாதமுதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் அவருக்குத் துன்பஞ் செய்யும் ('நூலோர் எண்ணிய' எனவே, அவர் அவ்வாற்றான் வகுத்த வாதப்பகுதி பித்தப்பகுதி ஐயப்பகுதி என்னும் பகுதிப்பாடும் பெற்றாம். அவற்றிற்கு உணவு ஒத்தலாவது சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். செயல்கள் ஒத்தலாவது மனமொழி மெய்களாற் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே ஒழிதல். இவை இரண்டும் இங்ஙனமின்றி மிகுதல் குறைதல் செய்யின். அவை தத்தம் நிலையின் நில்லாவாய் வருத்தும் என்பதாம். காரணம் இரண்டும் அவாய்நிலையான் வந்தன. முற்றுஉம்மை விகாரத்தால் தொக்கது. இதனால் யாக்கைகட்கு இயல்பாகிய நோய் மூவகைத்து என்பதூஉம், அவை துன்பஞ்செய்தற்காரணம் இருவகைத்து என்பதூஉம் கூறப்பட்டன. இன்பம் செய்தற்காரணம் முன்னர்க் கூறுப.) .

மணக்குடவர் உரை 
உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும்.

மு.வரதராசனார் உரை
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.

Thirukkural - Management - Health
The old wise adage is 'Health is wealth.’ I prefer, based on my personal experience, observations, and the experiences shared by others, ‘Health is better than wealth,' to ‘Health is wealth.' That thought is indisputably true in the present day context. One of the major challenges for individuals, organizations  and nations 
is the challenge of health. Health care spending is not only a concern but also a major expense for a family, a company, and a nation.

There are complaints, especially in today's context, that there are more diagnoses, costlier treatments, and breakthrough medicines but there is less health. Though medical breakthroughs are taking place, new diseases are being diagnosed every day. Life expectancy, for sure, has increased and so is disability. People live long with disability. In olden days, people lived long and died short. But today people live short and die long. Here are Valluvar's counsels for the challenges of better health.

Let us get an understanding  of health. “Health is the state of being well and free from illness in body or mind. It is the condition of a person's body or mind,” (Oxford ñdvnnced Learner's Dictionary, 1996).

Valluvar has provided his prescription for a healthy living. His prescriptionis affordable; it is without side effects and within our control.

Thirukkural - Management - Health - Counsel for Individuals
Valluvar advices individuals to have knowledge of human body through Kural 941. This Kural gives a reference to Ayurvedha. Ayurvedha has studied the importance of balance of Vata, Pita, and Kapha for better health. Valluvar says that there will be disease in the body, if there is any change in the levels of these three. An increase or decrease of any one of these three causes disease. Therefore, disease is an outcome of an imbalance. So is the case with PH 7 factor, that is., alcoholic and acidic balance in the body. Similarly, when LDL (Low Density Lipoproteins) is high and HDL (High Density Lipoproteins) is low, there will be complications in the body. 

Three things beginning with wind, say the experts,
In excess or lacking cause disease.

Therefore, it is an individual's responsibility to maintain the balance of the above-mentioned things to lead disease free life. Knowledge of the requirements and the current condition of health will help us monitor our health.

English Meaning - As I taught a kid - Rajesh
Health is wealth. But one becomes unhealthy when one lets disease develop in this body. In Ayurveda, it is mentioned that three elements Vata, Pita, Kapa are primary indicators of one's health. If any of these three indicators reduce or increase in the body, it results in an imbalance in the body leading to disease. Depending on the intensity and time period of imbalance, the disease can onset immediately or build over a period of time. Therefore, it is an individual's responsibility to maintain the balance of the above-mentioned things to lead disease free life. Knowledge of the requirements and the current condition of health will help us monitor our health. Medicine world suggest that health has multiple components such as body, mind, soul, environment (house, locality, workplace) etc.  This prescription for a healthy living is affordable; it is without side effects and within our control.

Questions that I ask to the kid
What is essential to maintain the health disease free?
When disease develops in body?

No comments:

Post a Comment